Advertisement

அத்தியாயம் 24
அடுத்த நாள் உங்க பையனோட பிரெண்டு ஒருத்தன் சுபத்ரா என்ற பொண்ணுகிட்ட தன்னோட லவ்வ சொல்லி இருக்கான். அந்த பொண்ணும் சுதா உங்க பையன அறைஞ்சத சொல்லி “என்ன உனக்கும் ரெண்டு வேணுமா” என்று கேட்டு நக்கல் பண்ணி இருக்கா. அதுக்கு அவ ப்ரெண்ட்ஸ் ஸ்ரீகலா, நேத்ரா, இந்த்ரஜா மூணு பேரும் சிரிச்சி இருக்காங்க. அத வேற உங்க பையன் பார்த்துட்டானா. இன்ஸ்டடியூட் பசங்க முன்னாடி தன்னை அசிங்கப்படுத்தியதால, பெருத்த அவமானமா நினச்சவன், இந்த பொண்ணுங்கள ஏதாவது பண்ணனும்னு முடிவு பண்ணான்.
அவன் நினச்சா மாதிரியே இந்த பொண்ணுகளும் லேசுப்பட்ட பொண்ணுங்க இல்ல. சுதந்திரமா இருக்கணும்னு ஹாஸ்டலை விட்டு வெளிய வீடெடுத்து தங்கி நைட் கிளப், பார்ட்டி, பசங்க என்று ஜாலியா ஜல்சா பண்ணிக்கிட்டுதான் இருந்திருக்காளுங்க. அதனாலதான் அவளுங்களுக்கும் இந்த காதல் கசந்திருக்கு. இந்த ஒரு பையன், ஒரு பொண்ணு கான்சப்ட் இருக்கே சார்… இந்த காலத்து பசங்களுக்கு பைத்தியாரத்தனமா தெரியுது. லவ்வுக்கும், லஸ்ட்டுக்கும் வித்தியாசம் தெரியல. இத பத்தி நாம அப்பொறமா பேசலாம்” என்றவன் வாயில் விரலை வைத்து கடித்து ஒருவித மேனரிசம் செய்தவாறே “ஐயோ அப்பொறம் டிஸ்கஸ் பண்ண நீங்க உசுரோட இருக்க மாட்டீங்களே. சரி விடுங்க நாம மேட்டருக்கு வருவோம்” என்று சொல்ல டி.ஐ.ஜி மிரண்டார்.
“கொஞ்சம் ட்ரிங்க்ஸ், அளவா ட்ராக்ஸ் என்று இருந்தவளுங்கள பழிவாங்க உங்க பையனுக்கு சொல்லிக் கொடுக்கவா வேணும்?
அவளுங்க போன ஹக் பண்ணவன். தனக்காக பேசின பிரபாவ விட்டுட்டான். லேகாவை ஏன் விட்டான்? அது ஒரு அம்மாஞ்சி என்று பார்த்தாலே தெரியும் பொழச்சி போகட்டும்னு விட்டுட்டான்.
சுதா, நந்தினி, சுபத்ரா, ஸ்ரீகலா, நேத்ரா, இந்த்ரஜா இந்த பொண்ணுக்கல்ல சுதாதான் அவன் மெயின் டார்கட். அவ திமிர அடக்கணும்னு அவளுக்கு விதவிதமா ட்ரக்ஸ பழக்கி  அவளுக்கு தெரியாமலே அவளை அபியூஷ் பண்ணிக்கிட்டு வந்திருக்கான். அவளை மட்டுமா? அவளுக்கு சப்போர்ட் பண்ணின நந்தினியும், சம்பந்தமே இல்லாம தன்னை அவமானப்படுத்திய சுபத்ரா, ஸ்ரீகலா, நேத்ரா, இந்த்ரஜா என்று எல்லா பெண்களையும் நாசம் பண்ணிவனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்ல.
அப்படி என்ன வெறி? ஆம்பள எங்குற திமிரு இல்ல சார். அது மட்டும் இல்ல. அப்பா அதிகாரத்துல இருக்கிறார் எங்குற ஆணவம். என்ன நடந்தாலும் பாத்துப்பார் எங்குற தைரியம்.
இதுக்கு மேல கொலைதான் பண்ணனும்னு இருந்தவனுக்குத்தான் மூர்த்திக்கிட்ட இருந்து இவளுங்க குளிக்கிற வீடியோ கிடைச்சது. அத அவளுங்களுக்கே அனுப்பி மிரட்டி அவன் காலடிக்கு வர வைக்கணும்னு நினச்சான்.
என்னதான் பொண்ணுகளுக்கு தெரியாம பண்ணாலும், தெரிஞ்சி பண்ணுறது ஒரு கிக்கு இல்லையா சார்.
ஒருவேளை வெளிய சொல்லிடுவாளுங்களோ என்ற பயம் வேற. என்ன பண்ணிடப்போறாளுங்க பாத்துக்கலாம்னு அவனுக்குள்ள இருக்குற மிருகம் சொல்லி இருக்கணும் அதான் அனுப்பிட்டான். தவறுதலாத்தான் பிரபாக்கு அனுப்பி இருக்கான். ஏன்னா அவன் குடிச்சா நிதானத்துலயே இல்லையே.
இது தெரியாம பிரபா மூர்த்தியை போலீஸ்ல பிடிச்சு கொடுத்துட்டா. புத்திசாலி பொண்ணு யார் வீடியோ எடுத்திருப்பான்னு கண்டு பிடிச்சிட்டா. ஆனா ஆதாரம் சிக்கல. இங்கதான் கரிகாலன் சொன்னதை கவனிக்கணும்.
கரிகாலன் பார்ல குடிக்கிறப்போ மூர்த்தி வீடியோ பார்த்ததாகவும், அவன் யார் மேலையோ மோதினதால மெமரி கார்ட் விழுந்ததாகவும், அத அவன் எடுத்ததாகவும் ஒரு கத சொன்னான். அது சுத்தப் பொய்.
உண்மை என்னன்னா. கரிகாலனோட அக்கா பையன் உங்க அக்கா பொண்ணோட ஹெல்ப் லைன் கம்பனி பக்கத்துலதான் மொபைல் ரிப்பேர் ஷாப் வச்சிருக்கான். இன்ஸ்டடியூட்ல இருந்து வரும் போது கடைக்கு போறவன் சில நேரம் கடைல இருப்பான்.
ஒரு நாள் மூர்த்தியும் வந்து… போன ரிப்பயாருக்கு கொடுத்திருக்கான். அவனுக்கு டெக்னோலஜியை பத்தி தெரியல போல. அதான் மெமரி கார்ட்ட கழட்டாம கொடுத்துட்டான். போன்ல இருந்த வீடியோஸ் எல்லாத்தையும் கரிகாலன் பார்த்துட்டான். அவனுக்கு நந்தினி மேல காண்டு. ஏன்னா அவ கொஞ்சம் அவன் பொண்டாட்டி சாயல். அந்த வீடியோ எல்லாத்தையும் கரிகாலன் தன்னோட போன்ல ஏத்திட்டான்.
இப்போ உங்க பையனுக்கும், கரிகாலனுக்கு என்ன தொடர்புன்னு சொல்லுறேன் கேளுங்க” என்ற வெற்றிமாறனை கோபமாக முறைத்தார் டி.ஐ.ஜி.
“போதும் நிறுத்துடா… என்ன கத, கதையா சொல்லிக்கிட்டு இருக்க? என் பையன உன்னால ஒன்னும் பண்ண முடியாதுடா…” என்று டி.ஐ.ஜி விஸ்வநாதன் கத்த  
“என்ன சார் கோபத்துல கொழந்த மாதிரி பேசுறீங்க. அதிகாரத்துல இருக்குற உங்களையே தூக்கி என் முன்னாடி உக்கார வச்சிருக்கேன். உங்க பையன் பொடியன் சார். அவன தூக்குறது ஒன்னும் பெரிய விஷயமே இல்ல” என்றான் வெற்றிமாறன்.
அவன் அப்படி சொன்னதும் ஒரு நொடி துணுக்குற்றவர் கேலியாக சிரித்தார். அவர்தான் தன் பையனை லண்டனுக்கு அனுப்பி அங்கு பாதுகாப்பு ஏற்பாட்டையும் மேற்கொண்டு இருக்காரே. வெற்றியால் அவனை எதுவும் செய்ய முடியாது என்றே எண்ணினார்.
“உங்க பையன் கதைக்கு அப்பொறமா வருவோம். இப்போ கரிகாலனுக்கு, உங்க பையனுக்கும் என்ன சம்பந்தம்னு பார்க்கலாமா? என்றவன் தொடர்ந்தான்.
கரிகாலன் வீடியோஸ் எல்லாம் பத்திரமா இருக்கணும்னு தன்னோட கம்பியூட்டர்ல சேவ் பண்ணி வச்சிருந்திருக்காரு. எக்ஸாம் பேப்பர்ஸை திருட உங்க பையன் அவனோட கம்பியூட்டரை ஹேக் பண்ணிட்டான். அந்த நேரம் இந்த வீடியோ அவன் கண்ணுல பட்டிருச்சு.
அடடே நம்ம பொண்ணுங்க வீடியோ சார் கிட்ட எப்படி வந்திருச்சு என்று யோசிச்சவன் கரிகாலனோட போன ஹேக் பண்ணி இருக்கான். அவன பத்தி விசாரிக்க ஆரம்பிச்சான். அப்போதான் அவனுக்கு ஒரு பெரிய விஷயம் கிடைச்சது. அது டார்டு சனிக்கும் கரிகாலனோட மனைவி சுகந்திக்கும் இருக்குற கள்ளத் தொடர்பு.
உங்க பையன் கிரிமினல் லா இல்ல படிக்கிறான். அவன் ஒரு திட்டம் போட்டான். அது இந்த பொண்ணுங்கள பழிவாங்கி அத கரிகாலன் மேல போடணும் என்கிறதுதான்.
அதுக்காக அவன் குறுக்கு வழிய சூஸ் பண்ணல. ஸ்ரைட்டா கரிகாலனுக்கு போன் பண்ணி “உன் பொண்டாட்டிக்கும் சனிக்கும் கள்ளத் தொடர்பு இருக்குறது எனக்கு தெரியும். நீ அவங்கள பழிவாங்க துடிக்கிறதும் எனக்கு தெரியும். நான் சொல்லுறபடி செஞ்சா நீ அவங்கள பழிவாங்கலாம் உனக்கு அந்த நந்தினி மேல வேற காண்டு இல்ல. அவளையும் சேர்த்து பழிவாங்க வேணும்னா சொல்லு செய்யிறேன்” என்று சொல்ல தன் மனைவியையும், சனியையும் பழிவாங்க துடிச்சிகிட்டு இருந்த கரிகாலன் சம்மதிச்சு இருக்கான்.
நான் முதல்லயே சொன்னது போல கொலை பண்ண அவனுக்கு இஷ்டமில்லை.
ப்ரைவட் கால் எங்குறதால பேசினது யார் என்றும் கரிகாலனுக்கு தெரியல. உங்க பையன் வாய்ஸும்  தெரியல. மேபி வாய்ஸ் மாத்தி பேசி இருப்பான்னு நினைக்கிறான்” யோசிப்பது போல் பாவனை செய்த வெற்றி தலையசைத்து நடப்புக்கு வந்தான்.
அதற்கு பிறகு கரிகாலன் சொந்த வீட்டுலையே கேமரா வச்சி தன் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட இருக்குறத வீடியோ எடுத்து, அத அவங்களுக்கே அனுப்பி உங்க பையன் சொல்லுறபடி அவங்கள ஆட்டி வச்சான்.
ஆனா கரிகாலனுக்கே தெரியாம உங்க பையன் அவனுக்கு தேவையான பொண்ணுங்கள பழிவாங்க சனியை உபயோகிச்சான். இது அந்த பொண்ணுங்களுக்கே தெரியல. வெல் பிளான்ட்.
அது போக அவளுங்கள மிரட்டி ஒவ்வொரு நாளா ஒவ்வொருத்திய பீச் ஹவுஸுக்கு வரவழைச்சி அபியூஷ் பண்ணி அந்த வீடியோவ போட்டுக் காட்டி டாச்சர் பண்ணி இருக்கான்.
அவன் டாச்சர் தாங்க முடியாம நந்தினி தற்கொலை பண்ணிக்கிட்டா. சுதா பைத்தியமானா. சுபத்ரா, ஸ்ரீகலா, இந்த பொண்ணுங்களும் தற்கொலை பண்ணிகிட்டாங்க.
இந்த்ரஜா என்ன ஆனானே தெரியல” வெற்றி யோசிப்பதை போல் கேட்க, விஷ்வதான் பல்லைக் கடித்து அமர்ந்திருந்தார்.
“ஆமா உங்க பையன் கூட நீங்க எப்போ கூட்டு சேர்ந்தீங்க? இந்த்ரஜா காணாம போகல உங்க பீச் ஹவுஸ்ல செத்து போய்ட்டா. என்னன்னா உங்க பையன் பொண்ணுங்களை டாச்சர் பண்ணினாலும் கொலை செய்ய நினைக்கல. கிரேட் இல்ல. மை புட்” கெட்ட வார்த்தைகளால் அபிஷேகம் செய்தவன்
அவன் டாச்சர் தங்கமா இந்த்ரஜா செத்ததும் அவனுக்கு அப்பா உங்க நியாபகம்தான் வந்தது. உங்கள போன் பண்ணி வர சொன்னவன் என்ன பண்ணுறதுனு அழுதான்.
ஒரே பையன். பொண்டாட்டி வேற இல்ல. அவன அப்படியே விட்டுட முடியுமா? அவன உடனே லண்டனுக்கு அனுப்ப ஏற்பாடு செஞ்சீங்க. இந்த்ரஜா உங்க பீச் ஹவுஸ்ல நிரந்தரமா தூங்கிட்டா. உலகத்துக்கு காணாமல் போன லிஸ்ட்டுல வந்துட்டா. 
“ஆமாடா எல்லாம் சரியாதான் பண்ணேன். அப்போதான் நீ போன் பண்ணி என் பையன் தப்பான வழில போறதா என்கிட்டே சொன்ன. ஒரே பையன்டா… அவன காவுகொடுக்க மாட்டேன்” கத்தினார் டி.ஐ.ஜி.
அட இருங்க சார். நான் இன்னும் சொல்லி முடிக்கல. நேத்ரா யார் தெரியுமா? மாலினி ஹெல்ப் கேட்டு வந்த பொண்ணு. தன்னோட ப்ரெண்ட்ஸுக்கு நடந்தத போல தனக்கும் நடக்கும்னு பயந்து அண்ணிகிட்ட சொல்ல, அவங்க மாலினிகிட்ட ஹெல்ப் கேட்டிருக்காங்க. மாலினி தொடர்பு கொண்டது என்ன.
அதே நேரம் நான் உங்க பையன கண்டு பிடிச்சி உங்க கிட்ட சொன்னா, நீங்க என் கிட்டயே உண்மைய வாங்கி மாலினி, பூங்குழலி நேத்ரா, அவ அண்ணி என்று எல்லாரையும் கொன்னு என்னையும் போட்டுத்தள்ள பிளான் பண்ணிடீங்க.
ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் டெத் எங்குறது மாதிரி. எங்கப்பா ஒரு வேலைய பார்த்து என்ன உசுரோட கொண்டு வந்து மணிமாறனா உங்க முன்னாடி நிக்க வச்சிட்டாரு. நீங்களும் என்ன வச்சே கரிகாலனை தூக்கி உள்ள வைக்க, வேல பார்த்து இருக்கீங்க.
 நீங்க ரொம்ப புத்திசாலி சார். கரிகாலன் கிட்ட பேசி ஹேக்கர் நீ என்று ஒத்துக்க இல்லனா கொலை பழியையும் உன் மேல போடுவேன்னு மிரட்டி இருக்கீங்க, அதனால அவன்தான் ஹேக்கர்னு ஒத்துக்கிட்டான். எல்லாத்தையும் பண்ணதா சொன்னவன், மாலினி பூங்குழலிய கொன்னதா ஒத்துக்கவுமில்லை. மாலினியை அவனுக்கு உண்மையிலயே தெரிஞ்சிருக்கவுமில்லை.
இதுல நான் பண்ண ஒரே தப்பு உங்கள நம்பி மாலினி பத்தியும், பூங்குழலி பத்தியும் சொன்னதுதான். அவங்க ரெண்டு பேர் சாவுக்கும் நான்தான் காரணம்” என்றவன் ஷாலினியை பார்க்க, கண்ணீரோடு நின்றிருந்தாள் அவள்.
“ஷாலு உன் கைப்பைல ஒரு கன் இருக்கு குற்றவாளி உன் முன்னாடிதான் இருக்கேன். சூட் மீ” என்றான் வெற்றிமாறன்.
ஷாலினி யோசிக்கவே இல்லை. கைப்பையிலிருந்த துப்பாக்கியை எடுத்தவள் விஸ்வநாதனை சுட்டுக் கொன்றாள்.
“ஏய்… என்னடி பண்ணுற? அவர் கிட்ட நான் இன்னும் பேசி முடிக்கல”
“கன் இருக்குறத முதல்லயே சொல்ல வேணாம். சும்மா வளவள கொழகொழன்னு பேசிகிட்டு. போதும் பேசினது. ஆமா என்ன சுட்ட சத்தமே வரல” துப்பாக்கியை திருப்பி திருப்பி பார்த்தாள் ஷாலினி.
“சைலன்சர் பொருத்தி இருக்கு. இங்க கொடு” அதை வாங்கி இடுப்பில் சொருகியவன் “என்ன சுடுவேன்னு நினச்சேன்” என்று சொல்ல
“என் மாமா இங்க இருந்திருந்தா உன்னதான் சுட்டிருப்பாரு”
“அப்போ நீ என்ன லவ் பண்ணுறதால சுடல”
“அவர் நேர்மையானவர் என்று நம்பி உண்மைய சொன்ன. ஆனா பாசம் எங்குற போர்வையில் ஒரு அக்கியூஸ்ட்டுக்கு சப்போர்ட் பண்ணி அப்பாவி பொண்ணுங்கள கொன்னவரு அவரு. உன் மேல தப்பு இல்ல வெற்றி”
“நா என்ன பண்ணாலும் சரினு சொல்லாத ஷாலு”
“நீ சரியாதான் இருக்க. முதல்ல இங்க இருந்து போலாம் வா. இரத்த வாட குடலை பிரட்டுது”
“எனக்கும்தான். இவனுங்க சுத்தம் செய்ய மாட்டாங்க போலயே”
“நல்லா கழுவ சொல்லு” என்றவாறே ஷாலினி முன்னால் நடக்க, வெற்றி கூடவே நடந்தான்.
“ஆமா இந்தாள போட்டு தள்ளிட்டோமே இவரை காணவில்லை என்று போலீஸ் தனிப்படை அமைச்சு தேட மாட்டாங்களா?”
“கண்டிப்பா தேடுவாங்க. அதனால புதைக்கலாமா? இல்ல அவர் வண்டிலையே எங்கயாச்சும் கொண்டு போய் போட்டுடலாமான்னு யோசிக்கிறேன்”
“அப்படி பண்ணாத கடத்தினவங்க கைரேகை, டி.ஏன்.ஏ என்று ஏதாவது ஒன்னு சிக்கி நாம மாட்டிக்க வாய்ப்பு இருக்கு”
“புத்திசாலி பொண்டாட்டிடி நீ. அசால்ட்டா சுட்டுட்ட. கன் எல்லாம் ஹாண்டல் பண்ணுவியா?”
“எங்க மாமா எனக்கு சுட கத்துக் கொடுத்திருக்காரு புருஷா. எதுக்கும் நீ என் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” படிகளில் ஏறி மேலே வந்திருக்க, “ஆமா எதுக்கு இங்க லைட் போடாம இருக்கீங்க?” தன் சந்தேகத்தை இப்பொழுது கேட்டாள் ஷாலினி.
“அதுவா… புதுசா தான் இந்த தோப்பை வாங்கி இருக்கோம். திடிரென்று நைட்டுல ஆள் நடமாட்டம் இருந்து சந்தேகம் வந்து போலிஸுக்கு யாராவது போன் பண்ணிட்டா”
“அப்போ டார்ச் லைட் அடிச்சா சந்தேகம் வராதா?”
“காவலாளி அடிச்சிருப்பான்னு நினைப்பாங்க”
“அறிவாளிதான். புதுசா வாங்கினதா சொல்லுற, பங்கர் எல்லாம் கட்டி வச்சிருக்க” சிரிக்க,
“புதுசானா வாங்கி ஒரு ஆறு மாசம் இருக்கும்” என்றவனை இருட்டிலும் முறைத்தாள் மனையாள்.
“முதல்ல தோப்பை சுத்தி கம்பி வேலி கட்டணும். நைட்டுல கரண்ட் கனெக்ஷன் போடணும். களவாணிபய நுழைஞ்சாலும் ரிஸ்குதான்”
“பண்ணிடலாம்”
“காவலுக்கு ஒரு தாத்தா வேணும். நீ சொன்னது போல நம்பிக்கையான, நாணயமான, நமக்காக வேல செய்ய”
“டன்” வெற்றி அவளுக்கு பதில் சொன்னாலும் “என்ன இவ நம்மள விட பாஸ்ட்டா இருக்கா என்றுதான் அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
“வேற என்ன? இப்போதைக்கு அவ்வளவுதான் வா போகலாம்” எனும் பொழுதே வண்டி சத்தம் கேட்டது.
“வந்துட்டானுங்க வா போகலாம்” வெளியே வந்தனர் இருவரும்.
“ஆமா வெளிச்சம் பார்த்தா போலிஸுக்கு போன் பண்ணுவாங்கனு சொல்லுற. வண்டி சத்தம் கேட்டா போன் பண்ண மாட்டாங்களா?” ஷாலினிக்கு சந்தேகங்கள் உதித்துக் கொண்டே இருந்தன.
அவளுடைய எல்லா சந்தேகங்களையும் பொறுமையாக தீர்த்து வைக்கலானான் வெற்றி. அவனுக்குத்தான் அவள் மேல் கோபமே வராதே. “பக்கத்துல தானே மெயின் ரோட் சந்தேகம் வராது”
ராபின், பஷீர், செல்வம், நிதிஷ் நால்வருக்கும் “நான் சொன்ன படி” என்ற வார்த்தையை அழுத்தமாக கூறி டி.ஐ.ஜியை புதைக்கும்படி உத்தரவிட்டவன் ஷாலினியோடு வீட்டுக்கு கிளம்ப வண்டியின் அருகே சென்றான்.
வண்டியில் ஏறியவாறே “இந்த புதைக்கிற வேலை கூட ரிஸ்க்தான் ஏதாவது ஒரு காரணத்தினால டெட்பாடி மேல வந்திருச்சுனா மாட்டிக்க வேண்டி வரும். பேசாம எரிக்க மின்சார சுடுகாட்டை கட்டலாம்.
“அடிப்பாவி” முணுமுணுத்தவனின் முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தாலும் “பசங்க பக்காவா பண்ணுவாங்க டோன்ட் ஒர்ரி” என்றான்.
ஆனால் ஷாலினியிடம் கூட சொல்லாத விஷயம் டி.ஐ.ஜியின் உடலை புதைக்கப் போவதில்லை. ஏசிடில் கரைத்து எலும்புக் கூட கிடைக்க முடியாதபடி செய்துவிடப் போகிறார்கள் என்று.
அதை அவளிடம் வெற்றி மறைத்ததற்கான காரணம் பெண்களின் மனதோ பூப் போன்றது சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஷாலினி இதை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்றே மறைத்தான். ஆனால் அவள் அவனுக்கும் மேலாக சிந்தித்தாள். காரணம் வெற்றி செய்வது சரி என்று அவளுக்கு தோன்றியது. அவன் எக்காரணத்தைக் கொண்டும் போலீஸில் சிக்கக் கூடாது என்றுதான் அவள் சிந்தனையாக இருந்தது.
“எனக்கு உன் கிட்ட நிறைய பேசணும், வீட்டுக்கு போய் பேசலாம் என்றவள் அமைதியாகவே வண்டியில் வர, வெற்றியும் அமைதியாக வண்டியை வீட்டுக்கு செலுத்தினான்.

Advertisement