Advertisement

அத்தியாயம் 18

மதியம் நெருங்கி இருந்ததால் சர்ச் அமைதியாகத்தான் காணப்பட்டது. காவலாளி வாயிலிலையே இவர்களை வழிமறித்து கேள்வி கேட்க போலீஸ் என்றதும் இவர்களுடன் உள்ளே வந்தான். மாறன் கௌதமை பார்க்க அவன் கண்ணசைவை புரிந்துக் கொண்டவன் காவலாளியோடு உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் பார்தர் லூயிஸ் கையில் ஜெப மாலையோடு வெளிப்பட மாறன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“சொல்லுங்க சார் நான் என்ன உதவி செய்யணும்” பாதர் லூயிஸ் கேட்க

“பாதர் உங்க கூட ஒரு கேஸ் விஷயமா பேச வேண்டி இருக்கு. நீங்க ப்ரீயா?”

மாறன் கேட்ட விதத்திலையே விஷயம் கொஞ்சம் தீவிரமானது என்று புரிந்துக் கொண்ட பாதரும் “வாங்க ஆபீஸ் ரூமுக்கு போய் பேசலாம்” என்று மூவரையும் அழைத்து சென்றார்.

மாறன் சுருக்கமாக தான் பார்த்துக் கொண்டிருக்கும் கேஸை பற்றியும் மூர்த்தியை பற்றியும் கூறியவன். மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை தவறாது சர்ச்சுக்கு வருவதாகவும். அவனை தெரியுமா என்றும் பாதரிடம் அவனது புகைப்படத்தைக் காட்டிக் கேட்க,

“நல்லாவே தெரியும். அவனுக்கு ஒரு வீக்கனஸ் இருக்கு. அதற்காக ஒவ்வொரு வாரமும் பாவமன்னிப்பு கேட்கிறான். ஆனா என்ன பாவம்னு சொல்ல தயங்குறான். என்ன பாவம் செய்கின்றான் என்று தெரியாம? எப்படி பாவமன்னிப்பு கொடுப்பது? பாவம் செய்பவன் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முயல வேண்டும். விடுபடாமல் பாவமன்னிப்பு கேட்டு விட்டு அந்த பாவத்தையே செய்வதில் என்ன பயன்? உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும். தீய எண்ணங்களை முதலில் உள்ளத்தில் இருந்துதான் அகற்ற வேண்டும்” என்றார் பாதர் லூயிஸ்.

“பாதர் எனக்கு தெரிஞ்சிக்க வேண்டியது மூர்த்தி சர்ச்சுக்கு வந்தா யாரையாச்சும் மீட் பண்ணுறானா? யார் கூடையாவது பேசுறானா? இல்ல சர்ச்ல மொபைல் உள்ள கொண்டு வரக் கூடாது என்று ஏதாவது ரூல்ஸ் இருக்கா?” மாறன் பொறுமையாக ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டான்.

“மொபைல் உள்ள கொண்டு வர வேண்டாம் என்று ரூல்ஸ் இல்ல. சைலன்ட் மூட்ல போட்டுக்க சொல்லி இருக்கேன். பூஜை நேரத்துல டிஸ்டர்ப் ஆகுமே. அவன் யாரையாச்சும் சந்திக்கிறானா? பேசுறானா? தெரியலையே” என்ற பாதர் “நீங்க சீசீடிவி புட்டேஜ் செக் பண்ணிக்கோங்க” என்று மாறனுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தார்.

கௌதமும் மஞ்சுளாவும் சீசீடிவியை உன்னிப்பாக பார்க்க ஆரம்பிக்கும் பொழுது “கௌதம் டார்ட்டூ மேன் சிக்குவானானு பாரு” என்ற மாறன் சர்ச் வளாகத்தை சுற்றிப் பார்க்க சென்றான்.

சீசீடிவியை மறைக்கும் பிளைண்ட் ஸ்பொட்ஸ் எங்கேயும் மாறனின் கண்களுக்கு தெரியவில்லை. மூர்த்தியோடு யார் பேசி இருந்தாலும் ஏதாவது ஒரு சீசீடிவியில் நிச்சயமாக சிக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் பாதரின் காரியாலய அறைக்குள் நுழைந்தான்.

கண்சிமிட்டாமல் கௌதமும், மஞ்சுளாவும் சீசீடிவியை பார்வையிட்டுக் கொண்டிருக்க, மாறன் அவர்களின் பின்னால் வந்து நின்று  பார்வையிடலானான்.

நந்தகோபால் அழைத்து தான் டாட்டூ ஆசாமியை பார்த்து விட்டதாகவும் அவனைத்தான் பின் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூற, கௌதமையும், மஞ்சுளாவையும் சர்ச் சீசீடிவியை பார்வையிடும்படி உத்தரவிட்டவன் உடனடியாக நந்தகோபால் இருக்குமிடம் கிளம்பினான்.

ஆட்டோ பிடித்து நந்தகோபால் இருக்கும் இடம் வந்து சேர்ந்த மாறனுக்கு சலியூட் வைத்தான் கோபால்.

“சார் சாலிகிராமம் வரைக்கும் வண்டியிலையே வந்தான். அப்பொறம் வண்டிய இந்த வீட்டு முன்னாடி நிறுத்திட்டு அந்த வீட்டுக்குள்ள போய்ட்டான்” கோபால் கொஞ்சம் குழப்பாமாகத்தான் கூறினார்.

அந்த வீட்டு வாசலில் வண்டி நிறுத்த இடம் இருக்க இந்த வீட்டு வாசலில் ஏன் அவன் வண்டியை நிறுத்தினான்? ஒருவேளை இது அவன் வீடாக இருக்குமோ? அல்லது கடன்காரன் பின்தொடர்வதால் வண்டியை இங்கேயே நிறுத்தி விட்டு தன் சொந்த வீட்டுக்குள் சென்றானோ? இந்த மாதிரியான கேள்விகள் தான் நந்தகோபாலுக்கு தோன்றியதே தவிர ஞாயிற்றுக்கிழமை மாலை டார்ட்டூ மேன் அவன் காதலியை பார்க்க வந்திருப்பான் என்று எண்ணியிருக்கவில்லை. அதுவும் கள்ளக் காதலியை.

கோபால் சொன்னதை உள்வாங்கிய மாறன் வீட்டை நோட்டம் விட்டவாறே “ஆமா அவன எப்படி கண்டு பிடிச்சீங்க? அத சொல்லவே இல்லையே”

“சார் அவன் ஹெல்ப் லைன் கம்பனி எம்ப்ளாயி தான் சார். நந்தனியோட வீடியோல தாடியும், விக்கும் இருந்ததால இவன எனக்கு அடையாளம் தெரியல. மீட்டிங் முடிஞ்சி எல்லாரும் சாப்பிட்ட போய்ட்டாங்க. கொஞ்சம் பேர் டீ சாப்பிட்டு கிட்டு இருந்தாங்க. இவனும் டீ சாப்பிட்டு கிட்டு இருந்தான். திரும்பும் போது யாரோ மோதினத்துல டீ சட்டைல கொட்டியிருக்கும் போல வாஷ்ரூம் போய் கழுவ போனவனை எதேச்சையா நான் பார்த்துட்டேன். அப்போ அவனோட ஷோல்டர்ல இருந்த டார்ட்டூவும் என் கண்ணுல பட்டது. இவனா அவன்? எங்குற சந்தேகம் இருந்ததுனால இவன் போட்டோ எடுத்து நம்ம டீமுக்கு அனுப்பி மேட்ச் பண்ணி பார்க்க சொன்னேன். வாய்ப்பிருக்குனு சொல்லுறாங்களே தவிர இவந்தான்னு சொல்ல மாட்டேங்குறாங்க. சோ இவன் பத்தின டீடைல்ஸ், போன் ரெகார்ட் எல்லாம் கலெக்ட் பண்ண பழனியை அனுப்பிட்டு நான் இவன பின் தொடர்ந்தேன். சந்தேகப்படும்படியா எதுவும் இல்ல சார்” என்றான் நந்தகோபால்.

சர்ச் சீசீடிவியில் மூர்த்தி யாருடனும் பேசவில்லை என்றும், சந்தேகிக்கும்படி யாரும் மூர்த்தியை நெருங்கவில்லையென்றும், எதற்கும் தேவைப்படலாம் என்று பாதரிடம் கேட்டு சீசீடிவி புட்டேஜின் காப்பியை வாங்கிக் கொண்டதாக கௌதம் மாறனுக்கு அழைப்பு விடுக்க, பாருக்கு நாளை சென்று விசாரிக்கலாம் என்று கௌதமை மஞ்சுளாவோடு தான் இருக்கும் இடத்துக்கு வர சொன்ன மாறன்.

“ஆமா அந்த டாட்டூவ யார் வேணும்னாலும் போடலாம். அவன் போட்ட மாதிரி ஷோல்டர்லயே போடலாம். வீடியோல முகம் கிளியர் இல்லாததனால் இவனான்னு தெரியல. வைட் பண்ண வேணாம் உள்ள புகுந்துடலாம்” இடுப்பிலிருந்த துப்பாக்கியை கையில் எடுத்த மாறன் முன்னாடி நடக்க கோபால் பின்தொடர்ந்தார்.

அந்த நேரத்தில் அந்த ஏரியாவில் ஓரிருவரை தவிர ஆள் நடமாட்டம் கூட இல்ல. அந்த வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தாமல் அவன் வேறொருவரின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியது மாறனுக்கு நெருடலை கொடுத்தது மட்டுமல்லாது. கதவு மட்டுமல்லாது ஜன்னல்களும் பூட்டியிருக்கவே கதவை தட்டிக் கொண்டிருக்கவில்லை. உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அதை கோபாலும் எதிர்பார்த்திருக்கவில்லை. மாறனின் பின்னால் வந்தவனும் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்து வாசலிலுள்ள அறையை டாட்டூ ஆசாமியை தேட மாறன் அடுத்த அறைக்குள் நுழைந்தான்.

மாறன் சென்ற அறையில் ஒரு பெண்ணோடு கட்டிலில் இருந்தவன் மாறனைக் கண்டு அடித்துப் பிடித்து எழுந்துகொள்ள, அப்பெண்ணோ அசைவற்று கிடந்தாள்.

மப்டியில் நின்ற மாறனைக் கண்டு அச்சத்தோடு “யார் சார் நீங்க?” என்று கேட்க

மாறன் அவனை ஓங்கி அறைந்து “என்ன பண்ணுற?” என்றதோடு துப்பாக்கி முனையில் நிறுத்த கோபாலும் சத்தம் கேட்டு மாறன் இருந்த அறைக்குள் வந்திருந்தான்.

“அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க” என்ற மாறன் டார்ட்டூ ஆசாமியை விட்டு விழிகளை அகற்றவில்லை.

“சாதாரண மயக்கம் தான் சார்” என்ற கோபால் நிர்வாணமாக இருந்த அப்பெண்ணை ஒரு போர்வையை கொண்டு போர்த்தி விட்டார்.

ஆறடியில் வீடியோவில் இருந்தவனுக்கு பொருந்திய உருவமாகவே இருக்க “உன் பேரென்ன?” என்று கேட்கும் பொழுதே மாறன் அவனை அறைந்திருந்தான்.

“சனி சார்” என்றவனுக்கு அவர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்று புரிய “என்ன காப்பாத்துங்க சார்” என்றவாறே மாறனின் காலில் விழுந்தான்.

“ஒரு பெண் நிர்வாணமாக மயங்கி இருக்கின்றாள். இவனும் அரைநிர்வாணமாக இருக்கின்றான். இவனால் அந்த பெண்ணுக்கு ஆபத்து என்று பார்த்தால் இவனோ காப்பாற்ற கூறுகின்றான். யாரிடமிருந்து? நடிக்கின்றானா?” மாறனின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் மின்னல் போல் வந்து போக “நடிக்காத சொல்லு அந்த பொண்ண என்ன பண்ண பார்த்த சொல்லு” பூட்ஸ் காலால் எட்டி உதைக்க, அவனோ மாறனின் கால்களை கட்டிக் கொண்டான்.

கோபால் அவனை இழுத்து நிறுத்த மாறன் அவனை பக்கத்து அறையில் ஒரு இருக்கையில் கட்டிப் போட்டு விசாரிக்க ஆரம்பித்தான்.

“உண்மைய சொல்லு. ஹெல்ப் லைன் கம்பனில கேபள் கனெக்ஷன் கொடுக்குற செக்ஷனுல வேல பாக்குற. அத வச்சி பார்த்தா ஏராளமான குடும்ப பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடி இருக்க போலயே”

“ஐயோ நான் அப்படிபட்டவன் இல்ல சார்” கதறினான் அவன்.

“அப்போ உண்மை என்னனு நீ சொல்லு” என்ற மாறன் அவன் முன்னால் அமர்ந்தான்.

“இங்க மயங்கி இருக்குற பொண்ணு பேர் சுகந்தி சார். நானும் அவளும் அஞ்சி வருஷமா காதலிச்சோம். காதலிக்கிறப்போவே கல்யாணம் பண்ண போற பொண்ணுதானேனு அப்படி இப்படி இருந்துட்டேன். ஆனா அவ வசதியான வீட்டுல இருந்து சம்பந்தம் வரவும் என்ன வேணாம்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டா. வேணாம்னு சொல்லுறவாள கட்டாயப்படுத்தி நான் கல்யாணம் பண்ணா நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் நரகம் எங்குறதால நானும் விட்டுட்டேன்.

ஆனா கல்யாணத்து அப்பொறம் அவ புருஷன் சரியில்லைன்னு அவன் வெளியூர் போறப்ப எல்லாம் என்ன போன் பண்ணி வர சொல்லுவா”

“ஓஹ்… அதான் இன்னக்கி வந்தியா?” கோபால் அவன் மண்டையிலையே அடிக்க

வலியில் முனகிக்கொண்டே “ஆரம்பத்துல இனிச்சாலும் எனக்கு எங்க வீட்டுல பொண்ணு பார்த்தாங்க சார். என்ன நம்பி ஒரு பொண்ணு வரா அவள நல்லா பார்த்துக்கணும். அதனால சுகந்தியை விட்டு விலகிக்கணும்னு முடிவெடுத்தேன். அப்போதான் என் செல்போனுக்கு ஒரு வீடியோ புட்டேஜ் வந்தது. அதுல நானும் சுகந்தியும் ஒண்ணா இருந்தத யாரோ வீடியோ எடுத்திருக்காங்க. யார் எடுத்திருப்பாங்க? சுகந்திதான் எடுத்திருப்பானு அவ கிட்ட சண்டை போட்டேன். ஆனா அவ எடுக்கலைனு சத்தியம் பண்ணா.

அப்பொறம் எங்க ரெண்டு பேருக்கும் போன் வந்தது. மறுபக்கம் பேசினவங்க என்ன சொன்னாங்கன்னா அந்த வீடியோவை எடுத்தது அவன்தான்னும். எங்க உறவை முறிச்சிக்கிட்டா  அந்த வீடியோவை நெட்டுல போடுறதாகவும் சொல்லி போன கட் பண்ணிட்டான்.

சுகந்தி ரொம்ப பயந்தா. நானும் என்ன பண்ணுறதுனு தெரியாம, வீட்டுல பார்த்த பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டேன்”

“ரொம்ப நல்ல முடிவு” என்றான் நந்தகோபால்.

“அது சரி எதுக்கு சுகந்தி மயக்கமா இருக்கா?” மாறன் யோசனையாக கேட்க,

“அவதான் சார் தூக்க மருந்து சாப்டா. அவளுக்கும் இந்த வாழ்க வெறுத்து போச்சு” என்றான் சனி என்கிற சனீஸ்வரன்.

“பாத்தீங்களா சார். இவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குறவரைக்கும் தேனா இனிச்சது மூணாவது மனுசங்க இன்வோல் ஆனா உடனே புளிக்கவும், கசக்கவும் ஆரம்பிச்சிருக்கு” நந்தகோபால் சிரிக்காமல் நக்கலடிக்க,

“கோபால்” என்று இழுத்த மாறன் “போங்க போய் இவன் போன் ஹேக் பண்ண பட்டிருக்கானு பாருங்க” என்று சொல்ல நந்தகோபால் இடத்தை காலி செய்தார்.

“சரி சொல்லு ப்ளாக்மையிலர் சொன்னதால சுகந்திய இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க, நந்தனிய ஏன் ரேப் பண்ண?”

“யாரு சார் நந்தினி” என்றவனின் முகத்தில் அச்சம் மட்டுமே இருந்தது.

“நாலு காலேஜ் பொண்ணுங்க அசோக் நகர்ல நான்காம் தெருல வீடெடுத்து தங்கி இருந்தார்களே அதுல ஒரு பொண்ணு தற்கொலை கூட பண்ணிகிட்டாளே அந்த பொண்ணு” என்றதும் முகம் மாறினான்.

“அந்த பொண்ணு யார்னு கூட தெரியல போட்டோவும் அட்ரசும் அனுப்பி அந்த பொண்ண ரேப் பண்ண சொன்னான்” என்றதும்

சனியை சரமாரியாக அறைந்த மாறன் “ஏன்டா எவனோ போன் பண்ணி ரேப் பண்ண சொன்ன செஞ்சிடுவியா? அந்த பொண்ணு போன்ல நீ பண்ணது ரெகார்ட் ஆகியிருக்கு அத வச்சுதான் உன்ன கண்டு பிடிச்சோம்” என்று மாறன் சொல்ல

“அங்க நடந்தத அந்த பொண்ணு லேப்டப் மூலமா அவன் பார்த்துக்கிட்டுதான் இருந்தான் சார். நான் அப்படி பண்ணலைனா அந்த பொண்ண கொன்னு பழிய என் மேல போடுறதா சொன்னான். கொலை பழியை விட ரேப் கேஸ் போதும்னு செஞ்சிட்டேன் சார்” என்று கதறி துடித்த சனி. வாயில் இரத்தம் வடிந்தவாறே “அந்த பொண்ணு மட்டுமல்ல சார் அந்த வீட்டுல இன்னொரு பொண்ணு, அதே மாதிரி ஹாஸ்டல்ல ஒரு பொண்ணு தற்கொலை பண்ணகிட்டாலே அவ குடிக்கிற தண்ணில தூக்க மாத்திரை கலந்ததே நான்தான். பீச் ரோட்டுல ஒரு வீட்டுல மூணு பொண்ணுங்க சார் அந்த பொண்ணுகளை ரேப் பண்ண சொல்லி மிரட்டினான் சார்” தான் செய்த எல்லாவற்றையும் ஒப்பித்தவனுக்கு தன்னை இவன் காப்பாற்ற மாட்டானா என்ற நப்பாசை மற்றும் இருந்தது.         

மாறனின் தலை வின் வின் என்று வலிக்க ஆரம்பித்தது. டார்ட்டூ குத்திய சனிக்கும் ஹெக்கருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று நினைத்தால் இவனையும் அவன் ப்ளாக்மெயில் செய்துதான் எல்லாம் செய்வித்திருக்கின்றான்.

ஹேக்கர் ஒரு சைக்கோ அவனுக்கு வெளியே தங்கி இருக்கும் பெண்கள் மீது மாத்திரம் தான் வெறுப்பு என்று எண்ணி இருந்ததை பொய்யாக்கி விட்டான். மூர்த்தி கூட தப்பானவன்தான் ஆனால் அவனை எதுவும் செய்யவில்லை. இவனை மட்டும் இந்த அளவுக்கு டாச்சர் செய்ய என்ன காரணம்? கண்டிப்பாக அவனுக்கு இவன் மேல் எதோ ஒரு பகை இருக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தான் மாறன்.

கௌதமும் மஞ்சுளாவும் வந்து சேரவே மஞ்சுளாவை சென்று சுகந்தியை பார்க்குமாறு கூறிய மாறன் கௌதமை தன்னோடு நிறுத்திக் கொண்டான்.

“உனக்கு எதிரினு யாராச்சும் இருக்காங்களா?”

“அப்படி யாரும் இல்ல சார்” உடனே பதில் வந்தது.

“நல்லா யோசி. யார்கிட்டயாவது ஏதாவது பிரச்சினை பண்ணி இருப்ப. அவன் உன்ன கொன்னுடுவேன்னு மிரட்டி இருக்கலாம். இல்ல சாதாரணமா உன்ன சும்மா விட மாட்டேன்னு கூட சொல்லி இருக்கலாம்” சைக்கோக்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

இந்த கேஸை பொறுத்தவரையில் மாறனால் எந்த யூகத்துக்கும் வரமுடியாமல் விசாரணையை தொடர்ந்தான்.

“நான் எந்த வம்புதும்புக்கும் போக மாட்டேன் சார்”

“நீ எதோ பண்ணி இருக்க. சுகந்தி புருஷனுக்கு நீயும் அவளும் உறவு வச்சிக்கிறது தெரியுமா?”

“அவன் ஒரு முட்டாள் சார். வாத்தியாரா இருக்கான். பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்க தெரியாம ஊரூரா சுத்திக்கு கிட்டு இருக்கான். அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. தெரிஞ்சிருந்தா இந்நேரம் சுகந்திய அடிச்சி வீட்டை விட்டு துரத்தி இருப்பான்”

“வாத்தியாருக்கு இம்புட்டு பெரிய வீடா?” கௌதம் சந்தேகமாக கேட்க

“பரம்பரை சொத்தாம். சுகந்திதான் சொன்னா” என்றான் சனி.

“அந்த வாத்திய பத்தி விசாரி கௌதம். அவன் எங்க இருந்தாலும் நாளை காலைல ஸ்டேஷன்ல இருக்கணும்” என்றான் மாறன்.

சுகந்தியை மஞ்சுளா எழுப்பியதும் அவளை விசாரித்ததில் சனி கூறியதைத்தான் அவளும் கூறினாள்.

விக்டாம்ஸை கற்பழித்த குற்றத்துக்காக சனியை அரெஸ்ட் செய்து வண்டியில் ஏற்றிக்கொண்டு மாறன் அண்ட் டீம் கிளம்பி இருந்தனர்.

சனி மற்றும் சுகந்தியின் அலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டிருக்கவில்லை என்றதும் மாறனுக்கே சற்று குழப்பமாகத்தான் இருந்தது. சுகந்தி மற்றும் சனியின் கால் ரெக்கோர்ட்ஸ், சமூக வலைத்தளங்களை பரிசோதித்ததில் பெரிதாக எதுவும் சிக்கவில்லை.

சுகந்தியின் கணவனை விசாரித்தால்தான் உண்மை என்னவென்று அறிய முடியும்.

ஒரே நாளில் கேஸ் முன்னோக்கி பாய்ந்த வேகத்தை தாக்கு பிடிக்க முடியாத மாறனுக்கு ஷாலினியை பார்த்தால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று தோன்ற அவளை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு டின்னருக்கு வருமாறு அழைத்தான்.

“என்ன சார் திடிரென்று ரொமான்டிக் மூடுக்கு போய்ட்டிங்க” என்று அவள் சிரிக்க,

“நீயே கிளம்பி வந்துடுவியா? இல்ல நான் வந்து பிக்கப் பண்ணிக்கவா?” என்று கேட்டான் மாறன்.

“நானே வரேன்” என்ற ஷாலினி அலைபேசியை துண்டித்திருந்தாள்.

மாறனும் வீட்டுக்கு சென்று குளித்து தயாராகி வர “எங்க கிளம்பிட்ட” வழி மறித்தாள் லதா.

“ஷாலினியோட டின்னருக்கு போறேன்” என்றவனை வினோதமாக பார்த்த லதா கணவனை அலைபேசியில் அழைத்து விஷயத்தை பகிர பூபதியும் யோசனையில் ஆழ்ந்தார்.  

மாறன் ஹோட்டலின் உள்ளே நுழையும் பொழுது “நீங்க ஏ.சி.பி மாறன் தானே” என்றது ஒரு பெண் குரல்.

யாரது என்று பார்வையை வீசிய மாறனின் கண்ணில் விழுந்தாள் யாமினி. “ஓஹ்.. மினிஸ்டர் பொண்ணா” என்ற பார்வையோடு “ஆமாம்” என்றான் மாறன்.

“சார் உங்கள இங்க பார்ப்பேன்னு நான் நினைச்சி கூட பார்க்கல. சுதா கேஸ் எந்த லெவல்ல இருக்கு”

சட்டென்று கேஸை பற்றி பேசவும் மாறனும் “சுதாவை பற்றி உங்களுக்கு பெர்சனலா தெரியுமா?” என்று ஆரம்பித்து அவளோடு அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

எல்லாம் அவனுக்கு தெரிஞ்ச தகவல்கள்தான். புதிதாக எதுவும் இல்லை. ஆனால் மாறனை பார்த்ததில் யாமினியின் கண்கள் மின்னி முகம் வெக்க சாயல் பூசி இருப்பதை தூரத்தே அமர்ந்திருந்த ஷாலினி கவனிக்க, இவள் யார்? என்ன பேசுகிறார்கள் என்று அவர்களின் பக்கத்து மேசையில் வந்தமர்ந்த்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

கேஸை பற்றி பேசவும் ஆசுவாசமானவள் அரைமணித்தியாலம் சென்றும் முடியாமலிருக்க கடுப்பானாள்.

மாறனின் பின்னால் வந்து ஒரு பெண் நிற்கவும் யாமினி “யார் இவள்? என்று பார்க்கும் பொழுதே அவன் முதுகில் ஷாலினி கைப்பையால் மொத்த ஆரம்பிக்க, மாறன் அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான்.

“என்ன பண்ணுற? எல்லாரும் பாக்குறாங்க?” கிசுகிசுப்பாக மாறனின் காதில் ரகசியம் பேசலானாள்.  

“பார்த்தா பார்க்கட்டும். நீ என்ன அடிச்சதையும்தான் பார்த்திருப்பாங்க” என்றான் மாறன்.

“என்ன வர சொன்னதையே மறந்துட்டு, கேஸ பத்தி பேசிகிட்டு இருக்க, நானும் எவ்வளவு நேரமா கத்துக்கிட்டு இருக்கிறதாம்? போன் பண்ணா கட் பண்ணுற. பசி பொறுக்காம அடிச்சிட்டேன்” என்ற ஷாலினிக்கு அவன் மடியை விட்டு எழ எண்ணமே இல்லை.

“சாரி யாமினி நாம வேற ஒருநாள் பேசலாம். என் பொண்டாட்டிக்கு ரொம்ப பசிக்குதாம்” சிரித்தான் மாறன்.

அவன் நினைத்திருந்தால் எப்படி வேண்டுமென்றாலும் அறிமுகப்படுத்தி இருக்கலாம். யாமினியின் பார்வையை போலீஸ்காரனான் மாறனால் புரிந்துகொள்ள முடியாத என்ன? அதை விட ஷாலினியின் மனதை குளிர்விக்கவே இவ்வாறு கூறி இருந்தான். 

“கல்யாணம் ஆகிருச்சா” முனுமுணத்தவள் “ஓகே சார்” என்று விடைபெற

“நமக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?” என்று கேட்டாள் ஷாலினி.

“நான் உன்ன எப்போ மனசுல நெனைச்சேனோ, நீ என்ன எப்போ மனசுல நெனச்சியோ, நாம எப்போ காதலிக்க ஆரம்பிச்சோமோ அப்போவே”

“நல்லா பேசுற” என்றவள் அவன் நெற்றியின் மீது மோத

“எல்லாரும் நம்மளையே பார்த்துகிட்டு இருக்காங்க” என்றதும் சட்டென்று எழுந்தவள் அவன் எதிரே சென்று அமர்ந்து கொண்டாள். 

“நான் ஒரு பொண்ணோட பேசுறத பார்க்கும் போது பொறாமையா இருக்கும்னு நெனச்சேன். ஆனா நீ புத்திசாலிதான்” சிரித்தான் மாறன்.

“பொறாமையா? உனக்கு என்ன தவிர வேற ஆப்ஷன் கிடையாது” ஷாலினியும் சிரிக்க, ஏதேதோ பேசியவாறே உணவுண்டனர் இருவரும்.

“எதுல வந்த உன் ஸ்கூட்டிலையா?” மாறன் கேட்க,

“எதுக்கு தனியா போகவா? ஒழுங்கு மரியாதையா என்ன வீட்டுல விட்டுட்டு போ” மிரட்டும் தொனியில் கூறினாள் ஷாலினி.

மாறன் விசிலடித்தவாறே வண்டியை இயக்க அவனை ஆச்சரியமாக பார்த்த ஷாலினி புன்னகைத்தாள்.

வாசலில் இறங்கியவள் விடை கொடுக்க, “உள்ள எல்லாம் கூப்பிட மாட்டியா?” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள் ஷாலினி.

காலையில் மட்டும்தான் வருகின்றான். வந்தாலும் காவல்நிலையத்திலிருந்து அலைபேசி அழைப்பு வந்த உடன் கிளம்பி விடுகின்றான். இரவில் மறந்தும் அவளை அழைக்க மாட்டான். இவள் அழைத்தாலும், என்ன? ஏது? என்று கேட்டுக் கொள்பவன் காலையில் வந்தால் பேசலாம் என்பானே தவிர எக்காரணத்தைக் கொண்டும் இரவில் அவள் வீட்டுக்கு வருவதை தவிர்த்திருந்தான்.

கண்களாளேயே அழைத்தவள் மாறன் உள்ளே வந்ததும் கதவை பூட்டி விட்டு “ஏதாவது குடிக்க வேணுமா?” என்று கேட்க,

அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் “ஷாலினி ஐ ரியலி லவ் யு. அத எப்படி சொல்லணும் என்று கூட எனக்கு தெரியல. உன்ன விட்டு விலகி இருக்கணும்னு என் புத்தி சொன்னாலும் மனசு கேக்கவே மாட்டேங்குது. நீ  இன்னமும் வெற்றிய லவ் பண்ணுறது எனக்கு தெரியும். ப்ளீஸ் என் லவ்வ புரிஞ்சிக்க. என்ன ஏத்துக்க. நான் வைட் பண்ணுறேன்” என்று அவளை விலகி விட்டு முகம் பார்க்க ஷாலினியோ அவனை முத்தமிட ஆரம்பித்தாள்.

அவளுக்குத்தான் தெரியுமே அவன் அவளோடு இருந்தால் வெற்றியாக மாறிவிடுவான் என்று.

மாறனால் இதை நம்ப முடியவில்லை. அவள் கொடுத்த முத்தத்தில் கரைந்தவன் அடுத்த கணம் வெற்றியாக மாறி அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.

ஷாலினி அவனை தடுக்கவுமில்லை. விட்டு விலகவுமில்லை. இரு கை கொண்டு ஆசையாக அவனை தழுவிக் கொண்டவள் அவனோடு இணைந்தாள்.

காலையில் அலாரம் அடிக்க கண்விழித்த மாறனுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்று ஒரு கணம் புரியவில்லை. எதோ ஒரு பாரம் அழுத்த தன்னை கட்டிக்க கொண்டு தூங்கும் ஷாலினி கண்ணில் விழ, நேற்றிரவு நடந்தவைகள் நியாபகத்துக்கு வரவில்லை.

ஆனாலும் தானும் அவளும் இருக்கும் கோலம் கண்டு என்ன நடந்தது என்று அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்படி ஒரு விஷயத்தை தான் எப்படி மறந்து விட்டேன் என்று யோசித்துப் பார்க்கையில்தான் அவளோடு இருக்கும் நொடிகளை அவன் மறந்து விடுவதையே அவன் நியாபகத்துக்கு வந்தது. பெரிய தப்பு பண்ணியதாக அவன் மனம் குற்ற உணர்ச்சியில் குமுறியது.

வெற்றியின் மூளையின் பகுதியை பொருத்தியதால்தான் அவன் ஷாலினியை காதலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டானா? தெரியவில்லை. அவளை தவிர வேறு பெண்ணை அவனால் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை.

அதனால்தான் தினமும் காலையில் அவளை சந்திக்க வந்தவன் இன்று காதலை ஒப்பித்திருக்க, ஷாலினியும் அவனை ஏற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் வெற்றியாக மாறி அவளையே எடுத்துக் கொண்டிருந்தான்.

தான் ஒருநாளும் இப்படி ஒரு காரியத்தை செய்யப் போவதில்லை. வெற்றி அவளை இழந்து விடக் கூடாது என்று அவ்வாறு செய்தானா? தெரியவில்லை. ஆனால் செய்தது எல்லாம் தன்னுடைய உடம்பு. பொறுப்பு தன்னுடையது. உடனே ஷாலினியை திருமணம் செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் மாறன்.

கண்விழித்த ஷாலினியோ யோசனையாக அமர்ந்திருந்த மாறனைக் கண்டு அதிர்ந்தவள் அடுத்த கணம் “ஐ லவ் யூ” என்றவாறே அவன் மீது பாய்ந்திருக்க,

“ஏய் ஷாலு” என்று அவளை கட்டிக்க கொண்ட மாறனும் வெற்றியாக மாறி அவளை முத்தமிட ஆரம்பித்திருந்தான்.

Advertisement