Advertisement

அத்தியாயம் 5
LIVE
பிரைவசி- நம்முடைய அறையில் தனிமையில் இருக்கும் நாம் அது நம்முடைய உரிமை என்று கூக்குரலிடுகிறோம். யாராவது கதவை தட்டினால் “என்ன?” என்ற நம்முடைய கோபமான குரல் அனல் பறக்கும். கெட்ட கோபம் என்பது இதுதான் என்பதை நமக்கே உணர்த்தும்.
அப்படி பூட்டிய அறையில் தனியாக என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? அது அவரவர் விருப்பம். அதில் தலையிட மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. என்னவேனாலும் செய்யலாம் அது அவரவர் அந்தரங்கம். டோன்ட் டிஸ்டர்ப் மீ.
இதுதான் இன்றைய இளஞ்சர்கள் தங்களது குடும்பத்தாருக்கு காட்டும் ஒரு முகம்.
குடும்பத்தாரோடு இருப்பவர்களே இப்படி என்றால் தனியாக இருப்பவர்களை சொல்லவா வேண்டும்?
ஆனால் இன்றைய உலகத்தில் இன்டர்நெட் என்ற ஒன்று வந்த பின் பிரைவசி என்ற ஒன்றுக்கு இடமே இல்லை என்பதுதான் உண்மை.
தன்னுடைய யூ டியூப் சேனலில் தினமும் லைவில் வந்து எதையாவது பேசும் புனிதாவுக்கு இந்த கொஞ்ச நாட்களாக இரவு தூக்கம் பறிபோனது.
புனிதா ஒரு மார்டன் பெண். டிஃடாக்கில் வீடியோக்களை பதிவேற்று மக்கள் மத்தியில் புகழை சம்பாதித்து வைத்திருந்தாள்.
டிஃடாக் செயலியை அரசு ரத்து செய்ததை தொடர்ந்து புனிதாவால் வீடியோக்கள் பதிவிட முடியவில்லை. பைத்தியம் பிடித்தவள் போல் ஆனாள்.
அவள் அறை தோழி சுபத்திராதான் யூ டியூபில் வீடியோக்களை பதிவிடும்படி கூற, புனிதா ஆரம்பித்த யூ டியூப் சேனலுக்கு அமோக வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் அவள் லைவில் வந்து எதையாவது பேசி ஒரு மணித்தியாலத்தை நிமிடங்களாக கரைத்து விடுவது மட்டுமல்லாது, இன்றைய இளஞ்சர்களின் டிப்ரஷனுக்கு மருந்தாகவும் இருக்கின்றாள்.
இப்படி இருந்த புனிதாவின் வாழ்க்கை தூக்கம் இன்றி போனது சுபத்திராவின் மரணத்தால்தான். அதுவும் புனிதாவின் லைவ் மோகத்தால் தான் சுபத்ரா இறந்து போனாள்.
சுபத்ராவும் புனிதாவும் ஒரு ஐடி கம்பனியில் வேலை செய்யும் இளம் பெண்கள். வாடகைக்கு வீடெடுத்து இருவரும் தங்கி இருக்க, புனிதாவின் பெற்றோர் அவள் அக்காவோடு லண்டனில் வசிக்கின்றனர்.
சுபத்திராவின் குடும்பம் சென்னையில் வாசிக்க, இவர்கள் இருவரும் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு அறையோடு கூடிய ஒரு வீட்டில்தான் இருவரும் வசிக்கின்றனர். ஐடி கம்பனியில் வேலை செய்பவர்களுக்காக வேண்டியே கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இதுதான்.
அந்த வீட்டின் சிறப்பே அறைக்கும் கூடத்துக்கும் சுவர் இல்லை. சமையலறை என்று தனியாக எதுவும் இல்ல. ஒரு மேடை சமைப்பதற்காக  அதில் ஒரு சில மின்சாதன பொருட்கள். ஆனால் சமைப்பதுதான் இல்லை. பெரிய குளியலறை. வீட்டில் எங்கு இருந்தாலும், எல்லாவற்றையும் பார்க்கலாம். அதுவே சிறப்பு.
சுபத்திரா ஒரு நேரத்தில் வேலை பார்த்தால், புனிதா ஒரு நேரத்தில் வேலை பார்க்கின்றாள். எந்த நேரத்தில் இருவரும் வீட்டில் இருப்பார்கள் என்றே இருவருக்கும் தெரியாது.
சமையல் எல்லாம் வீட்டில் செய்வதும் கிடையாது. பாலும், பழமும் மட்டும்தான் காலை இரவு உணவாக உட்கொள்ள தினமும் வரும் பொழுது வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியை நிரப்பி விடுவார்கள். மதிய உணவு வெளியே ஆடர் செய்து சாப்பிடுவார்கள்.
வாரம் ஒருநாள் பார்ட்டி. ப்ரெண்ட்ஸ். பப் என்று ஜாலியான லைப் ஸ்டைல்தான். இதில் புதினாவுக்கு டிஃடாக் மோகமும் சேர்ந்திருந்தது. ஆனால் அவள் சுபத்ராவோடு எந்த வீடியோவையும் பதிவிடுவதில்லை. சுபத்ராவின் தோல் நிறம் சிவப்பு. தன்னை விட அழகாக இருப்பவளோடு வீடியோ பதிவு செய்தால் தன்னை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று கருதியே சுபத்திராவை திரையில் வரவிடாது பார்த்துக் கொண்டாள் புனிதா.
சுபத்திராவுக்கு இதில் எல்லாம் இன்டரஸ்ட் கிடையாது. அதனாலயே தோழியோடு சேர்ந்து அவள் எந்த வீடியோவில் அவள் முகத்தை காட்டவில்லை. அதுவே புனிதாவை சுபத்ராவோடு ஒட்ட வைத்திருந்தது.
தன்னுடைய தோழி யூ டியூப் சேனல் வைத்திருப்பது சுபத்திரா தொல்லையாக நினைக்கவில்லை. சிலநேரம் அவள் அறைக்கு வரும் பொழுது புனிதா லைவில் இருப்பாள் அவளை தொல்லை செய்யாது சுபத்தரா ஒரு ஓரமாக கட்டிலில் சாய்வாள் அல்லது தனது வேலைகளை பார்ப்பாள்.
இப்படி இருந்த இவர்களது வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான் சுபத்ராவின் மரணம். 
அன்று புனிதாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியவில்லை. ஆனாலும் அவளுடைய ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்று லைவில் வந்து பேசிக் கொண்டிருந்தாள். தனது ஐபேடை ட்ரெஸ்ஸிங் டேபிளில் மீது வைத்தவள் முகத்துக்கு எதையோ தடவியவாறே பேசிக் கொண்டிருக்க, அதை பற்றி அனைவரும் கமன்ட் செய்து விசாரித்தனர்.
உடம்பு முடியாமல் இருப்பதால் முகம் பொலிவிழிந்திருப்பதாகவும், அதனால் அந்த க்ரீமை முகத்துக்கு போடுவதாக கூறியவளுக்கு மயக்கம் வருவது போல் இருக்க பால்கனி கதவை திறந்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவள் மயங்கி சரிந்திருந்தாள்.
அந்த நேரத்தில் கதவை மாற்று சாவி கொண்டு வீட்டுக்குள் வந்த சுபத்ரா வீடு அமைதியாக இருப்பதைக் கண்டு புனிதா வெளியே சென்றிருப்பாள் என்று நினைத்து விட்டு கட்டிலில் சரிந்தாள்.
கண்ணாடி மேசையின் மீதிருந்த ஐபேடின் வழியே புனிதாவின் ரசிகர்கள் அவளை பார்த்து கருத்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்திருக்க, சுபத்ராவுக்கு அது தெரியவில்லை.
பத்து நிமிடங்கள் கட்டிலில் படுத்திருந்த சுபத்ரா கட்டிலை விட்டு இறங்கி ஆடைகளை களைய ஆரம்பித்தாள்.
அவளை பொறுத்தவரையில் அந்த வீட்டில் அவள் மட்டும்தான் இருக்கிறாள். பத்தடி வலது புறம் சென்றிருந்தால் புனிதா பால்கனியில் மயங்கி இருப்பதை பாத்திருப்பாள். அது தெரியாமல் முழு நிர்வாணமான பின்தான் குளிக்க செல்ல துண்டை எடுக்க பால்கனியின் பக்கம் அடியெடுத்து வைத்தாள்.
காலையில் முகம் துடைத்து வீசி விட்டு சென்ற துண்டு சோபாவில் இருக்க, அதை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றாள்.
குளித்து விட்டு வந்தவள் துண்டோடு கப்போர்டை திறந்து கையில் கிடைத்த டீஷர்ட்டையும், ஷர்ட்டையும் அணியலானாள்.
அவள் வீட்டுக்குள் வந்ததிலிருந்து குளிக்க சென்று ஆடை அணியும் வரை கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களுக்கு மேலாக செலவளித்திருப்பாள். அதுவரை லைவ் ஓடிக் கொண்டிருந்தது.
அவளை பார்த்து ரசித்தனர் ஒரு கூட்டம். இது புனிதா மற்றும் சுபத்ராவின் திட்டம் என்றனர் ஒரு சிலர். சுபத்ராவை இதுவரைக்கும் புனிதாவோடு பார்த்தே இராததனால் அவளுக்கு இதை பற்றி தெரியாது என்றனர் சிலர். இவ்வாறான கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் ஐபேட் சார்ஜ் இல்லாமல் அணைந்து போனது.
சுபத்திரா குட்டித்த தூக்கம் போட, மழை பொழியவே மயக்கம் தெளிந்து கண் விழித்தாள் புனிதா.
தான் எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்தோம் என்று அறியாத புனிதா ஐபாடை தேடித்தான் ஓடினாள்.
அது அணைந்து போய் இருப்பதையும் சுபத்ரா தூங்குவதையும் பார்த்தவள் இவள் எப்பொழுது வந்தாள் என்று யோசித்தவாறே ஐபேடை சார்ஜில் போட்டாள்.
அடுத்து அவள் யூ டியூபை திறக்கும் முன்பாகவே அவளும் வேலை பார்க்கும் சில தோழிகளை அவளை அழைத்து பேச, சுபத்ராவுக்கும் அலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.
லைவில் அவள் ஆடை மாற்றியது வைரல் வீடியோவாக நாடெங்கும் ஒளிபரப்பட சுபத்ரா ஒரே இரவில் பிரபலமானாள்.  
அவளுடன் வேலை பார்த்த அனைவருமே அந்த வீடியோவை பார்த்திருக்க, வேலைக்கு போனால் அங்கிருந்த ஆடவர்களின் பார்வை மாற்றத்தை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறினாள்.
வீட்டார் வேறு அலைபேசி வழியாக என்ன நடந்தது என்று விசாரிக்க ஆரம்பித்திருந்தனர்.
என்ன நடந்தது என்று புனிதா தெளிவாக கூறி இருந்த இன்னும் சுபத்ராவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏற்கனவே ஐடி கம்பனியில் வேலை பார்க்கும் பெண்களுக்கென்று ஒரு விம்பத்தை இந்த சமூகம் உருவாக்கி வைத்திருக்க, என்னதான் மாடானார்க, சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டாலும் எங்களுக்கும் குடும்பம் இருக்கு மானம் மரியாதை இருக்கு என்ற கெட்டகாரியை சேர்ந்தவள் சுபத்திரா.
அவளுக்கு அமெரிக்காவில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்திருக்க, இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் என்ற நிலையில் இந்த வீடியோ அவள் வருங்கால கணவனான ஆதித்யாவுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது.
“நீ என்னவேனாலும் ஆட்டம் போடு. அதை பப்ளிக்காதான் செய்யணுமா?” என்று கேட்டு அவளை அசிங்கப்படுத்தி இருந்தான்.
தான் எந்த தப்பும் செய்யவில்லை என்று நம்ப வேண்டியவனே தப்பு செய்தாலும் பரவாயில்லை. கண்டுகொள்ளாதே என்று கூறியது சுபத்ராவின் மனதை உடைத்திருந்தது.
ஆதிக்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. தன்னை அவன் அறிந்து வைத்திருக்கின்றான். புரிந்துகொள்வான் என்று இவள் எதிர்பார்க்க, அவன் தன்னை கேவலமான பிறவியாக நிலைத்திருப்பது கசந்தது.
பணத்துக்காகத்தான் இந்த திருமணம் என்று நொடியில் புரிந்து போனது. பேபி, டார்லிங் என்று பேசி கொஞ்சல் மொழிகள் எல்லாம் வாய் வார்த்தைகள் மட்டும் தான் என்றதில் இந்த திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
ஆனால் வீட்டார் விடவில்லை. “அறிவிருக்கா உனக்கு? ஆதித்யா போல் ஒரு சம்பந்தம் கிடைக்குமா? உன் வீடியோ வெளி வந்த பிறகும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்கின்றான். அவனை போல் உத்தமன் உண்டா?” என்று பேச கடுப்பானாள் சுபத்ரா.
  
இவ்வளவு நடந்தும் புனிதா லைவில் வருவதை நிறுத்தவில்லை. தினமும் வந்து எதையாவது பேசிக் கொண்டே இருந்தாள். அதை பார்த்து மேலும் மனம் வெம்பினாள்.
புனிதாவின் லைவில் வருபவர்கள் சுபத்ராவை பற்றி கேட்க புனிதாவுக்கு கோபம் வர ஆரம்பித்தது. சுத்ராவோடு தான் எதற்கு வீடியோ போனால் இருந்தாலோ அது சுபத்ராவின் ஆடை மாற்றும் வீடியோ மூலம் நிகழ்ந்திருந்ததை ஒட்டி, தான் மயங்கி விழுந்ததையும் கண்டுகொள்ளாமல் சுபத்ரா தன்னுடைய லைவில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக பொய்யுரைத்தாள் புனிதா.
அது வேறு சுபத்ராவின் நண்பர்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்கள் என்று அறிய நேர்ந்து “கூட இருப்பவளே சொல்கின்றாள் என்றால் பொய்யாகவா இருக்கும்” என்று சுபத்ராவின் காது பட பேசியது மட்டுமல்லாது சில ஆடவர்கள் தப்பாகவும் பேசி படுக்கைக்கு அழைக்க வாழ்க்கையே வெறுத்த சுபத்ரா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தாள்.
அதுவும் புனிதா வீட்டில் இல்லாத நேரத்தில் அவள் ஐபேட் மூலமாக லைவில் சென்று அன்று நடந்ததை விலக்கியவள் கட்டில் மீது ஏறி பேனில் தூக்கு மாட்டிக் கொண்டாள்.
அதை எத்தனை லட்சம் பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. சிலர் சுபத்ராவின் மரணத்துக்கு புனிதா தான் காரணம் என்றனர். சிலர் முட்டாள் பெண் தப்பான முடிவை எடுத்து விட்டாள் என்றனர்.
சுபத்ராவின் முடிவு தப்பானதாகவே இருந்தாலும் மனஉளைச்சலுக்கு ஆளான அவளுக்கு தேவையானதை தோழியும் கொடுக்க வில்லை. திருமணம் செய்ய இருந்தவனும் கொடுக்கவில்லை. குடும்பத்தாரும் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
சுபத்ராவின் மரணத்தால் புனிதா தூக்கத்தை இழந்தாள். அந்த வீட்டில் இருந்தால் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று வேறு வீடெடுத்து சென்று விட்டாள். ஆனாலும் அவளால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எங்கு சென்றாலும் சுபத்ரா அவள் கணமும் வந்து அவளை பய முறுத்திக் கொண்டிருந்தாள்.
சுபத்ராவின் ஆவி அவளை கொல்ல முயற்சி செய்வதாக லைவில் வந்து பினாத்த ஆரம்பித்தாள். ஒருசிலர் “அதோ சுபத்ராவின் ஆவி உன் பின்னாடி தான் கோரமாக இருக்கின்றாள். அவளை கொன்றதற்காக உன் உயிரை கேட்கின்றாள்” என்று கருத்து தெரிவிக்க அலறியடித்துக் கொண்டு மூலையில் பதுங்கினாள் புனிதா.
தெரியாமல் நடந்த நிகழ்வுக்காக சுபத்ரா தற்கொலை செய்துகொள்ளவில்லை. தானுரைத்த பொய்யால் தான் சுபத்ரா தற்கொலை செய்து கொண்டாள் என்ற குற்ற உணர்ச்சி புனிதாவை பிடித்துக் கொண்டிருந்தது.
சுபத்ராவின் ஆவி அவளை துரத்தவில்லை. அவள் மனசாட்ச்சிதான் அவளை விடாது துரத்துவதை அவளிடம் யார் சொல்லுவது? புனிதா பொய்யால் புனிதத்தை இழந்து ஓர் உயிரை காவு வாங்கி விட்டாள்.

Advertisement