Advertisement

அனு, ராதாவைப் பற்றி கிருஷிடம் வாரம் ஒருமுறையாவது கேட்பாள், எவ்வளவு வேலை இருந்தாலும் இதை மட்டும் மறக்கவே மாட்டாள்.

பிறகு பிறகு, என எதையும் கூற மருத்தவன், அவளிடமும் அவளது கதையை பற்றி வினவவே இல்லை.

அவனது கவனம் முழுவதும் ராதாகிருஷ்ணன் மருத்துவமனை மற்றும் ஆசரமத்தினை முன்னேற்றுவத்திலேயே இருந்தது.

இப்போது தான் அவனாகவே அவனது ராதையை பற்றி பேச துவங்கினான்.

“நீங்களா கிருஷ்ணா இது!!!” என அவளது மையிட்ட விழிகளை அழகாய் விரித்து வினவியவள்… 

“வாங்க, நாளைக்கே ராதாவ பாக்க போவோம்”, என குதூகலமாய், சிறுப்பிள்ளையாய் துள்ளினாள்.

“ஆனா உன்னோட மனவருத்தம் பத்தி தெரிஞ்சிக்காம, நான் எவரையும் பார்ப்பதா இல்லை” என்றான் கிருஷ், தீர்மானமாய்

பிறகு இனி அனு ஹாஸ்பிடலுக்கு வரப் போவதில்லை என்பதால் அதுவரை இருந்த வேலைகளையும், கணக்கு வழக்குகளையும் இருவருமாக இணைந்து சரிவர முடித்தனர்.

“ஏன் கிருஷ்ணா திடீர்னு ராதைய பாக்க போலாமானு கேட்டீங்க, என்ன விஷயம்”, என்று அனு வினவ,

“பல மாசமாவே சூழ்நிலை காரணமா, இரண்டு பேரும் பிரிஞ்சு இருந்தோம்… ஒருவரையொருவர் சந்திச்சுக்க கூட இல்லை… ஏன் மோபைல கூட டச் இல்ல. இனி சேரவே முடியாதுன்னு நினச்சேன், ஆனா நீ வந்த நேரம்… எல்லாமே மாறிடுச்சு… ராதா என்கிட்ட பேச துவங்கிட்டா”, என்றான் கிருஷ்.

“நா வந்த நேரமா”, என்றாள் வியப்பாக.

“ஆமா அனு…  நீ தான் என் அதிர்ஷ்ட தேவதை”, என்றான் புன்னகையுடன்.

“எல்லா ஓக்கே கிருஷ்ணா… நீங்களே இவ்வளோ நாள் கழிச்சு மீட் பன்ன போறீங்க. நா எதுக்கு நடுவுல”, என்று தயங்கினாள் அனு. 

சிறு புன்னகையுடனே… “ராதாக்கு உன்ன பத்தி நல்லா தெரியும் அனு. அதுவுமில்லாம ராதா இப்போ தான் என்கிட்ட பேச ஆரம்பிச்சிருகா… அவள கல்யாணத்துக்கு நீ தான் ஒத்துக்க வைக்கனும்…பிலீஸ் அனு”, என்றான் கெஞ்சலாக.

இவ்வளவு கூறியபின் சரி என்று கூறுவதைத் தவிர வேறு வழி இல்லையே… அனுவும் ஒப்புக்கொண்டாள்.

“சரி அனு… இப்போ உன் கதைய சொல்லு…”, என்று மருத்துவமனையிலிருந்து வெளியேறி காரில் அமர்ந்தபின் சிருஷ் கேட்க,

மறுக்காமல் தனது கதையை சொல்லத் தொடங்கினாள் அனு, அந்த குரலிலேயே வருத்தம் நிரம்பி இருந்தது.

“கனந்தன் என் சொந்த அத்தை மகன்,…. தீடீர்னு என் அத்தை என்ன பொண் கேட்டு வர, ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேட்காம அப்பா சம்மதிச்சுட்டார்”…

“நா அப்போ தான் மருத்துவ படிப்பு முடிச்சிருந்தேன், அப்பா ஒடம்பு சரியில்லாம இருந்ததாலும், வாக்கு கொடுத்ததாலும், கனந்தன கல்யாணம் பண்ணிகிட்டேன்”….

“என்ன பொறுத்தவர கனந்தன் அன்பானவர், என்மேல அவருக்கு சின்ன வயசுல இருந்தே அதிக பிரியம். அதனால அந்த திருமணமனத்துல எனக்கு மறுப்பு கூற காரணமே தோனல, சந்தோஷமாவே கல்யாணம் பண்ணிகிட்டேன்”….

“ஆனா, நான் செய்த பெரிய தப்பே, அவரு என்ன முழு விருப்பத்தோட தான் கல்யாணம் பண்ணிகிட்டாருனு நம்பியது தான்”…..

“கனந்தன் என் அண்ணி ப்ரியாவுடைய பிரதர். என் அத்தையு, அப்பாவு, சிபிலிங்ஸ்… என் அப்பாக்கு அத்தைனா உயிருக்கு மேல, அவ்வளவு பாசம்”,…

“அதனால தான் அவர் கேட்டதும், எதையு யோசிக்காம ரொம்பவும் நம்பிக்கையா என்ன கனந்தனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க முடிவு பண்ணீடாங்க”….

“திருமணம் சிறப்பா நடந்துச்ச, கனந்தன் அத்தையோட கட்டாயத்தால என்ன கல்யாணம் பண்ணிகிட்டாலும், அத எந்த வகையிலும் எனக்கு தெரியாம பாத்துக்கிட்டாரு”…..

ஆனா, இந்த நாடகம் ரொம்ப நாள் நீடிக்கல, அவர் என்ன தான் நடிச்சாலும், ஏதோ ஒண்ணு தப்பா இருக்குன்னு கல்யாணமாகி ஒரு சில வாரங்கள தெரிஞ்சுகிட்டேன்.

”என்னை விட எட்டு வயது பெரியவர், அதனாலேயே நேரா அவர்கிட்ட கேட்க முடியல. என்ன னு கேட்கறதுன்னும் புரியல”….

“சென்னையில இருந்தோம், சனி ஞாயறு என் மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்காக கோச்சிங் கிளாஸ் போவேன்”.

“மத்த ஐந்து நாளும், வீட்டிலிருந்து படிச்சேன். ஏனோ தனிமைய ரொப்வு உணர…ஒரு நாள் பொறுக்க முடியாம கேட்டுட்டேன்”…. 

“என்ன பிடிக்கவில்லையா???…. ன்னு”,

“சேச்சே…. ஏன், இப்டி பேசற” என்று அவர் சமாதானம் கூற,

“என்கிட்ட நீங்க முன்னாடி மாறி பேசறதே இல்ல” என்று தயங்கினேன்.

“அப்படியெல்லாம் இல்ல அனு, நீ படிக்கிறல, தொந்தரவு செய்ய வேண்டாம், ன்னு நினச்சேன்” என்று கூறினார்.

“அதன் பின் வாரம் ஒரு முறை சினிமா, ஹோட்டல் ன்னு கூட்டீட்டு போவார், அவ்வப்போது புடவை, நகை ன்னு வாங்கி தருவார், ஆனா எல்லாமே பொய்யா தோன, முதன் முறையாய் வாழ்க்கைல விரக்திய உணர்ந்தேன்”, என்றாள் அனு.

அதன் பின் மௌனமானாள்….., அவளது கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம் போல் பெருகியது.

ஆதரவாய் அவளது கைகளை பற்றினான் கிருஷ்ணன், “நீ அவர காதலிச்சியா அனு” என்று வினவினான்.

“இல்லை”….என்றாள்.

“அப்புறம் எதுக்காக இப்டு அழுகிற?”…..

“என்னதான் இருந்தாலும், அவர் என் கணவர், அதிலும் நா சின்ன வயசிலிருந்து பாசமா பலகி இருக்கேன், அவரால எப்டி என்ன ஏமாத்த முடிஞ்சது”, என்றாள்…

“என்ன ஏமாத்தினான்”,…. என கிருஷ் வினவ,

“ஏமாற்றம் மட்டுமில்ல, நம்பிக்கை துரோகமும்” என்றாள், கோபமும் துக்கமுமாக.

கிருஷ் ஆறுதலாய் அவளின் கைகளை இறுக பிடித்தான்.

“கொஞ்ச வாரத்துக்கப்புரம், காலையில சீக்கிரமே கிளம்பி போய்ட்டு ராத்தரி ரொம்ப நேரம் களித்து தான் வருவார்”….

“சில இரவுகள், அந்த பெரிய வீட்டுல் மனித இனமே இல்லாம தனிமைல போகும், ஏன் வரலை னு கேட்டா”,

“வேலை அதிகம்” னு சுருக்கமா சொல்லிட்டு போயிடுவார்.

“யாரிகிட்ட சொல்றது!!,…..இதெல்லா சரிதானா!!…. என குழபத்திலேயே, சில மாதங்கள் போய்டுச்சு, கடைசியில என் அண்ணி கனந்தனுடைய தங்க, என் வீட்டுல மூன்னு நாள் தங்கினார், அப்போ அவர்கிட்ட எல்லாத்தையும் சொன்னேன்”,….

“அவர் உலரியதால தான், கனந்தன் ஓரு பெண்ண விரும்பினார் னும், வீட்டுல கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வெச்சாங்கன்னும் தெரிஞ்சிக்கிட்டேன்”,

“அப்பறம் நா வீட்டுல எல்லார்கிட்டயும் ஞாயம் கேட்க”,

“ஒருவழியா எல்லாரும் சேந்து என்ன சமாதானம் செஞ்சு கனந்தனோட வாழ வெச்சாங்க”…..

“அதுக்கப்புறம் என் மீதான கனந்தனின் கவனிப்பு அதீகரித்தது, கவனிப்பு மட்டும் தான், காதல், பாசம் னு எதுவும் இல்ல” என்று வருத்தத்துடன் கூறினாள் அனு.

“பொறுதிருப்போம்… நிச்சயம் மாறிவிடுவார் “னு நம்பிக்கையோட வாழ துவங்கினேன்.

****

“அப்போ நான் இரண்டு மாத கர்ப்பம்… அது தெரிஞ்சவுடனே, கனந்தன தவிற, இரு வீட்டுக்கும் சொன்னேன்”…. 

“கடைசியா கனந்தன், வீட்டுக்கு வந்தவுடனே சந்தோஷமா அவர் கிட்ட சொல்ல”,

“மகிழ்ச்சியில் துள்ளுவார், னு நினச்சா  மாறாக, அவருடைய முகம் வாடிருச்சு, ஏதுவும்  சொல்லாம ரூமுக்கு போயிட்டார்.

என்னன்னு அவர்கிட்ட கேட்க….

“இல்லை அனு,…..இப்போ எதுக்கு!…. இன்னும் ஒரு வருடமாச்சு போகட்டுமே, நீயு மேல படிக்கனும்”, என்று என்னென்னவோ பேசினார்.

“மேல்படிப்ப இரண்டு வருசம் தள்ளி வெச்சுக்கலாம்” ன்னு நான் சொல்ல,

“என் முடிவுக்கு, அவர் தலையசச்சாலும், அதுல அவருக்கு, உடன்பாடில்ல” ன்னு, அவர் முகத்திலேயே தெளிவா தெரிஞ்சது.

“ஒரு நாள், நானும், அத்தையும், கோவிலுக்கு போக, அங்க ஒரு தம்பதியினர்…, பட்டுவேஷ்ட்டி, சட்டையோட ஓர் ஆணும், பட்டுப் புடவையோட ஒரு பொண்ணும் இருந்தாங்க” …

“அன்னிக்கு அந்த தம்பதியினருடைய திருமண நாள் போல, அய்யர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி, காலத்திற்கும் ஒன்றாக இருக்க வேண்டும் ன்னு ஆசிர்வாதம் செய்தார்”…..

“அவங்க முன் சென்று பார்த்தபோது தான் தெரிஞ்சது, அந்த ஆண் கனந்தன் ன்னு” என்றவளின் குரல் தடுமாறியது.

“என்ன சொல்ற அனு!!!, கனந்தனக்கு திருமணமானதா”,…. என்று கிருஷ் அதிர்ச்சியின் உச்சத்துக்கு போக,

“ம்ம்ம்….நானு இப்டி தான் அதிர்ந்தேன், கனந்தனும் தான்”….

“ஆனா, என் அத்தை, ‘எல்லாரும் வீட்டுக்கு போலாம்’ னு சொல்லி, என் கைய பிடிச்சு, இழுத்துட்டு வந்துட்டாங்க, அவர் முகத்துல அதிர்ச்சியுமில்ல, கோபமும் இல்ல.

“என் அத்தைக்கு, இதெல்லா முன்பே தெரியும்னு, அவரின் முகபாவனையே கட்டிக்கொடுக்க, என் வாழ்க்கையே வீணாகியதா உணர்ந்தேன்”….

தாள முடியாத சோகத்தில், அவள் குரலிருக்க,

முகத்தை கைகளால் மூடி அழுதவள், “இன்று இது போதும், கிருஷ்” என முடித்துவிட்டாள்.

அவளது மனவேதனையை புரிந்து கொண்ட கிருஷ், மேலே எதுவும் பேசாமல் மனம் கனக்க காரை ஓட்டினான்….

தொடரும்……

Advertisement