Advertisement

அன்று முரளி மற்றும் பூஜாவின் திருமணம். அவள் வருவாளா, வரமாட்டாளா, என்ற சிந்தனையோடு வாசலை அடிக்கடி பார்திருந்தான் கிருஷ்.

அதை கவனித்த மேகலாமா, “அனு வருவா கண்ணு, இன்னிக்கு காலையில தான் அவகிட்ட பேசினேன், எப்போ வருவானு தெரிஞ்சிக்க”, என்றார்.

சட்டென்று, “எப்போ வருவாள்” என்றான் கிருஷ்.

“இதோ” என்று தூரத்தில் வந்த அவளின் காரை காட்டினார் மணிமேகலை.

“நான் போய் அழச்சு வரேன் மா”, என்று செல்லி வேகமாய் நடந்த கிருஷை ஆச்சரியமாய் பார்த்து, புன்னகையுடன் இதன் பொருள் யாது என்று மனதிற்குள் வினவினார் மேகலாமா.

‘கழுத்தில் தாளியில்லை, காலில் மேட்டியில்லை, நெற்றியில் குங்குமமும் இல்லை, பிறகெப்படி திருமணமானவள்

என்று நான் அறிய முடியும்’, என்று எண்ணியபடி அவள் முன் சென்றான்.

பட்டு புடவை, ஒரு சிறிய வைர நெக்லஸ், என்று அழகு தேவதை போல் ஜொலித்தாள் அனு.

கிருஷ் அமைதியாய் கையை கட்டிக்கொண்டு அவள் எதிரிலேயே நின்றான்.

என்ன என்பது போல் பார்த்தாள் அனு.

“என்கிட்ட ஏன் சொல்லல”,… என்றான் இயன்றவரை கனிவான குரலிலேயே.

“எதை”… என்றாள் அவள்.

அவன் முறைக்கவும்…

சிறு புன்னகையோடு, “செல்லாத என் திருமணம் பற்றியா, இல்லை அந்த திருமண வாழ்க்கை தந்த வேதனை பற்றியா” என்றாள் அனு.

“இரண்டும் இல்ல…..  உன்ன பற்றி”, என்றான்.

அதற்குள் அனுவை வரவேற்க ஆசர்மத்தில் உள்ள சிலர் வெளியே வர, ஆசர்மத்திலேயே அமைக்க பெற்றிருந்த திருமண மேடைக்கு சென்று முரளிக்கும், பூஜாவிற்கும் வாழ்த்து தெரிவித்தாள் அனு, பின்னர் மேகலாமாவிடம் பேச சென்றுவிட்டாள்.

மனமாற அனைவரின் வாழ்த்துக்களோடும், ஐய்யர் மந்திரம் கூற, மணிமேகலை அம்மா தாழி எடுத்து தர, அக்னி சாட்சியாய், ஆனந்த வெள்ளத்தோடு, இரு மனங்களும் திருமணம் என்ற பந்தத்தில் ஒன்றிணைந்தது.

இதுவே அந்த ஆசர்மத்தில் நடக்கும் முதல் திருமணம், என்பதால் அனைவரும் குதூகலமாய் இருந்தனர்.

“நல்லா பாத்துக்கோங்க கிருஷ்ணா, இப்டி தான் என் பிரண்ட் கிருஷ்ணன் தன் காதலி ராதையை கல்யாணம் பன்னிக்குவார்” என அனு கிரிஷின் காதில் மெல்ல கூறினாள்.

“அதெல்லாம்…. நடந்தா பாப்போம்” என்று அவன் நம்பிக்கையற்று கூற,

“எல்லாம் நல்லபடியா நடக்கும், எண்ணம் போல வாழ்க்கை” என்றாள் நம்பிக்கையாக.

கிருஷ் மௌனமாகவே நிற்க,

“என்ன ராதாகிட்ட கூட்டிட்டு போங்க கிருஷ்ணா”, என்றாள் அனு.

“கண்டிப்பா…..ஆனால் ஒரு நிபந்தனை!!… உன்ன பற்றி என்கிட்ட சொல்லனும், என்னக்கு மட்டும் உன்மேல அக்கறை இருக்காதா”, என்றான் முடிவாக.

சரி என தலையசைப்பதை தவிர வேறு வழியில்லை அனுவிற்கு.

ஒருவாரம் ஹாஸ்பிடலுக்கு வராததால் அங்கு என்னென்ன நடந்தது என்பதனை தெளிவுபடுத்திக் கொண்டு தனது பணியில் மூழ்கினாள் அனு.

விரைவிலேயே ரஞ்சினியை வேலையை விட்டு தூக்கினாள், பூஜாவையும் முரளியையும் தனது வீட்டு அவுட் டோர்சில் தங்க வைத்துக் கொண்டாள்.

மருத்துவமனையில் அளவு கடந்த வேலைகளை செய்பவள், வீட்டில் பூஜா மற்றும் முரளியோடு கலகலப்பாக இருந்தாள்.

இப்படியாக பழைய நிகழ்வுகளை மறந்து வாழ துவங்கினாள்…

இதற்கிடையில் கிருஷின் நட்பில் மகிழ்ந்தவள், அவனது அருகாமையில் பாதுகாப்பை உணர்ந்தாள். அடிக்கடி மணிமேகலை அம்மாவின் அன்பும் கிடைக்க, இப்படி அனைத்தும் சேர்ந்து… மன அமைதியோடு வாழத்தாள்.

அனுவை பொறுத்தவரை கிருஷ் என்பவன் தனது வாழ்வை இனிமையாக மாற்ற வந்த, தனக்கு வரமாக கிடைத்த தோழன். அவனை, அவனின் வாழ்வை, இன்பகரமாக மாற்ற வேண்டியது தமது கடமையாக கருதினாள்.

அதற்கு அவனது கடந்த காலத்தை பற்றி அவனிடமே கேட்டு தெரிந்து கொண்டு செயல்பட வேண்டுமென்று முடிவு செய்தாள்.

அதே போல் கிருஷ்ணனுக்கு, எப்படி தனது காதலியான ராதை, தனது வாழ்விலும், மனதிலும், அவனது ஒவ்வொரு மூச்சிளும் கலந்துள்ளாலோ, அதேபோல் அனுவும், இனி தன் வாழ்வில் ஒரு முக்கியமான இடம் வகிக்க வந்தவள் என்றே கருதினான்.

அவள் ஆனந்தமாக வாழ, எப்படியாவது அவளது கடந்த கால வாழ்வை அறிந்து கொண்டு, அதை சரி செய்ய வேண்டுமென முடிவு செய்தான்.

இருப்பினும், ஒரு வாரம் அனு இல்லாததாலும், முரளி மற்றும் பூஜாவின் திருமணத்தாளும், மருத்துவமனை நிர்வாக பணிகள் கவனியாது இருந்ததால், அதை முதலில் சீர் செய்யலாம் என்று தங்களது முடிவுகளை தள்ளி வைத்து, இருவறும் மறுத்துவமனையை கவனிக்க துவங்கினர்.

அனுவின் வருகைக்கு பின் மருத்துவமனையின் வருமானம் அதிகரித்ததால், அதை கொண்டு புதிதாக ஓர் கட்டிடம் கட்டினர், அது இலவச சிகிச்சைக்கான பிரிவு, அதில் நிரந்தரமாக ஓர் டாக்டரையும் நியமித்தனர்.

பழைய மருத்துவமனையை இன்னும் விசாலப்படுத்தினர். நிறைய 

பேஷண்ட் வருவதால், இப்படி பிரித்து கொண்டாள் வசதியாக இருக்கும் என்று முடிவு செய்தனர். 

இலவச சிகிச்சைக்கானது…  முன்பு செய்தது போலவே, ஆசரமத்தில் உள்ளவர்களுக்கு, கிரிஷின் எஸ்டேட்டில், தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே. அவர் அவர்களது ஐ.டி கார்டை காட்டி சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

மற்றவர்கள் பழைய இடத்தில் நியாயமான பீஸ் கொடுத்து மருத்துவம் பெற்று கொள்ளலாம் என்றானது.

இரு இடத்திலும் அனேக மக்கள் வந்தனர், அதன் பின் மாதங்கள் ஓட ஓட, அறுவை சிகிச்சை, குழந்தைகள் பிரிவு என ஒவ்வொன்றாய் நிறுவி, அதற்கான சேவை மனப்பான்மை மிக்க மருத்துவர்களை வரவளைத்தனர்.

இது அனைத்தும் அனுவின் யோசனைகளே, செலவு அதிகமாக இருந்தபோதும், அனுவின் முடிவுகளுக்கு மறு பேச்சு கூறாமல் அனைத்தையும் செய்து கொடுத்தான் கிருஷ்.

சாதாரண மருத்துவமனையாக இருந்த ராதாகிருஷ்ணன் மருத்துவமனை வெறும் ஆறே மாதத்தில் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடளாக மாறியது, மாபெரும் அதிசயமே…

மருத்துவத்தில் உள்ள அனைத்து பிரிவுகளும் உள்ளன, அதேசமயம் கிருஷின் முடிவு படி இலவச சிகிச்சையை, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கும் வழங்க துவங்கினர்.

அனுவும், கிருஷ்ணனும், அந்த ஊரில் புகழின் உச்சத்தை அடைந்தனர். கிருஷ் அவனின் சேவை மனப்பான்மைக் காகவும், அனு அவளின் மருத்துவ பணிக்காகவும் புகழ் பெற்றனர்.

மேகலாமா இருவரின் வளர்ச்சியிணையும் கண்டு பெருமிதம் அடைந்தார். ரகுவிற்கோ சொல்ல முடியாத ஆனந்தம், அனுவின் குடும்பத்தினர் அவளது வளர்ச்சியை கண்டு பூரித்தனர், அதற்கு இடையூறாக இருக்க கூடாது என அவளிடம், அவளது திருமண வாழ்வை பிறகு பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

ரகு தனது கடும் முயற்சியினால், அவனது குடும்பத்தினரை இந்த முடிவுக்கு வரச் செய்திருந்தான்.

கனந்தனை, அனைவருமாய் சேர்ந்து என்ன என்னவோ கூறி அமைதி படுத்தினர்.

மெலிந்து பொலிவிழந்து இருந்த அனு, இப்போது மன நிறைவால் அழகு தேவதையாய் இருந்தாள். 

அவள் முகத்தில் குடிகொண்டிருந்த வாட்டமானது, காணாமல் போயிருந்தது… பொறுப்புணர்ச்சியும், நிமிர்வும் தலைதூக்கியது.

ராதையின் நினைவில், ராதைக்காக, அவளது ஆசைக்காக, சமூக சேவையில் இறங்கினான் கிருஷ்ணன். ஆனால் இப்போது அனுவின் வருகையில், அவனது பெயரும் புகழும் வளர்ந்தது. அதன் பிரதிபலிப்பாக, ஆசிரமத்தினை பற்றி அனைவரும் அறியவர, அங்கு நிறைய அனாதை குழந்தைகள், பிள்ளைகளால் துரத்தப்பட்ட பெற்றோர்கள், ஊனமுற்றவர்கள், என நிறைய மக்கள் அடையாளம் தேடி வர, டொனேஷனும் கூட அதிகமாக தான் வந்தது.

மருத்துவமனையின் வளர்ச்சியினால் வரும் வருமானம் கொண்டு ஆசரமத்தையும், மறுத்துவமனையும், மேலும் மேலும் வளர்ச் செய்தான் கிருஷ், அதில் அனுவிற்கும் முக்க்கிய பங்கு உண்டு.

அன்று காலை வழக்கம் போல் அனு மருத்துவமனைக்கு வந்தாள். 

அவளது அறையின் வெளிய சிலர் பார்மல்ஸ் ட்ரெஸ்ஸில், பைலோடு அமர்ந்திருந்தனர். அனுவை பார்த்தவுடன் எழுந்து தங்களது வணக்கத்தை தெரிவித்தனர்.

இவர்களெல்லாம் யார் என்று சிந்தித்தபடியே ஒரு சிறு புன்னகையை புரிந்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.

“வாங்க டாக்டர்” என்றான் கிருஷ் கைகளை கட்டிக் கொண்டு மேஜையில் சாய்ந்து அவளை பார்த்தவாறு.

“ஹாய்….கிருஷ்ணா, என்ன விஷயம், இந்த பிஸியான நேரத்துல வந்திருக்கீங்க” என அவள் வினவ,

“அமறு சொல்றேன்” என்றவன், வெளியே இருந்தவர்களை  உள்ளே வரச் சொல்லி, இவர்கள் இனி admistrative works எல்லாம் பார்த்து கொள்வர்… என அவர்களை அறிமுகப்படுத்தினான் கிருஷ். 

பின் அனைவரும் அவர்களை பற்றிய விபரங்களை கூறிவிட்டு வெளியே செல்ல, புதிதாய் தான் நியமித்த மருத்துவர்களையும் அறிமுகப்படுத்தினான்.

இன்முகத்தோடு அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தவள், அவர்கள் சென்றவுடன்….”என்ன இது கிருஷ்ணா??” என ஆவேசமாக வினவ,

“நாளையிலிருந்து எல்லாரும் பொறுப்பேற்கிறாங்க”, என்றான் கிருஷ்.

“என் வேலைகளை எல்லாம், இவங்களுக்கு கொடுத்துட்டீங்க, பின் எனக்கென்ன இங்க வேலை” என்றாள் இறுக்கமான முகத்துடனே.

அவளது வினாவை சட்டை செய்யாமல், கிருஷ் ஒரு பெரிய பையை எடுத்து அவளது கையில் குடுத்தான்.

அந்த கனமான பையை தூக்க இயலாமல் கீலே வைத்தவள், ‘நான் என்ன கேட்கறேன், இவர் என்ன செய்றார்’, என்று எரிச்சலுடன், அவனை முறைக்க.

“திறந்து பார்” என்றான், அவளது முறைப்பு சிரிப்பை தர, அதை அடகிக்கொண்டு அவளை பார்த்தான்.

கோவமாகவே பையை திறந்தவள், அதில் இருந்த, அவளது மேற்படிப்பிற்கான, புத்தகங்களை பார்த்து, “இவை”…. என தயங்கினாள்”,

“அனு ….. இந்த சில மாதத்துலேயே, நிறையவே சம்பாதிச்சுட்ட, பணம், பெயர், மட்டுமல்ல, மனங்களையும்!!, மரியாதையையும் சம்பாதிச்சுட்ட. மனநிறைவோடு இருக்க”….

“இனி, உன் மேற்படிப்பு பற்றி யோசிக்கனும், மற்ற MBBS டாக்டர்ஸ் போல உனக்கும் கனவு இருக்கும், இருக்கு தானே” என்றான், அவளை உணர்ந்தவனாய்.

ஆம்…. என அவள் தலையை மட்டும் அசைக்க.

“என்ன கனவு?” என்றான்.

“cardiologist!!”….

“அதற்கான முயற்சிகளை எடு அனு, கனவை நினைவாக்கி காட்டும் தருணம் இது” என்று அவன் பேசிக்கொன்டே போக,

தானே மறந்துபோன, தனது லச்சியத்தை, கிருஷ் நிறைவேற்ற நினைக்க, அனுவின் கண்கள் தானாக கலங்கின.

“அனு….என்ன ஆச்சு… உன்ன கேட்காம முடிவு எடுத்தது தப்பு தான்… சாரி”, என கிருஷ் பதறி அவள் அருகே வர,

“ஏன் கிருஷ்ணா…. ஏன்!! உங்களுக்கு மட்டும் என் மேல இவ்வளவு அக்கறை…. இதெல்லாம், ஏன் கனந்தனிடம் இல்லை”, என அவள் விசும்ப,

“இந்த அன்பை நான் தான் தரணும் னு இறைவன் முடிவா இருக்கும், யார்கிட்ட இருந்து கிடைத்தால் என்ன அனு, அன்பு அன்புதானே” என்றான்.

அவள் கண்களை துடைத்து கொண்டு அமர,

“இனிமேல், ஒல்லுங்கா படிக்கும் வழிய பாரு” என அவளது வாடிய முகத்தை காண இயலாமல் கிருஷ் எழ,

“ஆனா…. அதுக்கு முன் ஒரு மாற்றம் வேண்டும்” என அவள் அவசரமாக கூறினாள்.

“எனக்கும் தான்,… நாம நம்ம ராதாவ பாக்க போவோமா!!!” என்றான் புன்னகையோடே…

தொடரும்….

Advertisement