Advertisement

அனுவின் கார் வந்து நின்றதும், முரளி ஓடிச்சென்று கார் கதவை திறக்க, அதிலிருந்து இறங்கிய அனுவை அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர்.

எப்போதும்… குர்தா, லெக்கின்ஸ் டாப்ஸ், என வரும் அனு… அன்று சாரியில், ஸ்டெத் கோட், என  இறங்க… அனைவரும் அவளின் புதிய பரிமாணத்தை ரசித்து பார்த்திருந்தனர்.

“அனுமா … செம கெத்தா இருக்கீங்க”, என பூஜா மகிழ்ச்சியாய் கூற,

அனு, “தேங்க்ஸ்”, என கூறி முடிக்கும் முன்,

“நேத்து வரை, காலேஜ் படிக்கும் பொண்ணு மாதிரி இருப்பீங்க. ஆனால் இன்று….”, என வாயை பிளந்தாள் சரஸ்வதி.

அனு,  இப்போது டாக்டர் அனுவாக, ஹாஸ்பிடலுள் நுழைய, கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் கிருஷ்.

‘ஏதோ ஒன்று, அவளிடம் உள்ளது’, என எண்ணியவன். 

அவள் அருகில் வந்து புன்னகைக்கவும், “இவங்க என் அம்மா”, என்றும்… “இவங்க டாக்டர் அனு”, என்றும்… இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான்.

“நீதான் அனுவாமா!!…  பூஜா, முரளி, என் மகன் கிருஷ், என, என்ன சுத்தி இருக்கவங்க எல்லாம் உன் புகழ் தான் பாடுராங்க”…

“அதனால தான்,  உடம்பு வலி னு பொய் சொல்லிட்டு, உன்ன பாக்க வந்தேன்”, என்றார் மேகலாமா.

“தெரியும் பொய்யின்னு”, என செல்லமாய் கிருஷ் முறைக்க,

“இல்லேன்னா, என்ன கூட்டிட்டு வந்திருப்பயா”, என்று அவரும் முறைத்தார்…

“நீங்க கிரிஷ்கிட்ட என்ன பாக்கனும் னு சொன்னா, நானே வந்திருப்பேனே மா” என்று அனு கூற,

சிறு புன்னகையுடன்,.. “இனி அப்படியே செஞ்சிடலாம் அனுமா…, உன் பிரச்சனை எல்லாம் முடிஞ்சதா… இப்போ சந்தோஷமா தான இருக்க??”, என்று வினவினார் கிருஷின் அன்னை.

‘இவங்க எத கேட்கறாங்க’ என்று அனு சிந்திக்க….

அவளுக்கு தெரியுமா என்ன…. இவளின் சோகங்களை, தனது சோகமாக எண்ணி… பூஜா அவரிடம் தினமும் புலம்புவதை பற்றி.

அவள் பதில் கூறும் முன், “நல்ல நேரம் முடிய போகுது..  சீக்கிரமா உங்க வேலைய ஸ்டார்ட் பன்னிட்டு பேசலாம் வாங்க”, என்று அவளை கிருஷ் அலைக்க,

மேகலாமாவை பார்த்து சிறு புன்னகையை வீசியவள், கிருஷுடன் நடந்தாள்.

“அம்மா எதை பற்றி கேட்கறாங்க கிருஷ்”, என்று, அவள் வினவியதை அலட்சியப்படுத்திவிட்டு… அவளது நாற்காலியில், அவளை அமர்த்தியவன்…

“உன்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்ப கொடுத்திருக்கிறேன். என்னுடைய ராதாகிருஷ்ணன் குடும்பம்… இனி நம்முடையது… இத பத்திரமா பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு. இதத்தவிர வேறு எந்த சிந்தனையும் தம்ம மனசுல எழக்கூடாது”, என்றான் சீரியசான குரலில்.

அவள் தலையை அசைக்க…

அதற்குள்ளாக அங்கு வந்த அனைவரும், அவளுக்கு  கங்கிராட்ஸ் செய்தனர்.

ஹாஸ்பிட்டலில் உள்ளவர்களை, அனு ஓரளவுக்கு முன்பே அறிந்திருந்தாலும்,.. கிருஷ் ஒவ்வொருவராய் அறிமுகம் செய்து வைத்தான்.

ராதாகிருஷ்ணன் ஆசிரமத்தில் உள்ளோருக்கு இலவச மருத்துவமும், மற்றொரிடம் ஞாயமான பீஸும் வாங்கப்பட்டது.

அனுவைத் தவிர இன்னும் நான்கு இளம் மருத்துவர்கள் இருந்தனர், காலை மற்றும் மாலை இருவர் பார்ப்பர்… மற்ற இருவர் இரவில் அவசர சிகிச்சைக்கு… இதைத்தவிர பிஸியான நாட்களில் உதவிக்கு சில மருத்துவர்கள் அழைக்கப்படுவர்.

ஓரளவுக்கு பெரிய ஹாஸ்பிடல் என்பதால், செவிலியர்கள், செக்யூரிட்டி, சுத்தம் செய்பவர்கள், கேன்டீனில் பணிபுரிபவர்கள், என நிறைய ஆட்கள் அங்கு பணிபுரிந்தனர்.

மருத்துவம் அளிப்பது மட்டுமின்றி, அட்மினிஸ்ட்ரேஷன் வேலைகளையும் மேற்பார்வையிட வேண்டிய பொறுப்பு அனுவினது.

இவை அனைத்தையும் எப்படி கையாள்வது என்பதை கிருஷ் உதவியோடு எளிதில் அறிந்து கொண்டாள் அனு.

தனது வாழ்க்கை வேறு திசையில் நகர, அதை அவள் ஆனந்தமாய் பகிர்ந்துகொள்ள நாடியது தனது அண்ணன் ராகுவை தான்.

“என் வாழ்க்கையே முடிந்தது னு நினச்சேன் அண்ணா. ஆனா இப்போதான் புரியுது எனக்கான வாழ்க்கை ரொம்ப அழகானது உன்னதமானது னு”……

“நான் பலருக்கும் சேவை செய்றேன் அண்ணா. என்னால பலரின் வலி சரியாகுது… இன்னிக்கு கூட ஒரு மாரடைப்பு பேஷன்டுக்கு சரியான நேரத்துல  சிகிச்சை அளித்ததால உயிர்தப்பினார்… உண்மையாவே நா இப்போ தான் ஆனந்தமா இருக்கேன் அண்ணா… இதுதான் நான்…. இதற்காகத்தான் நான்….”, என்று உரைத்தாள்.

இதையெல்லாம் கேட்ட ரகுவிற்கு, இன்னதென்று புரியாத சந்தோஷம்… “இதுக்கெல்லாம் இறைவனுக்கு தான் நன்றி சொல்லனும்”, என அவன் மனமகிழ்ந்து கூற,

“இல்லை ணா, கிருஷுக்கு தான் சொல்லணும். அவர் என்ன நம்பி இவ்வளோ பெரிய பொறுப்ப கொடுக்கலைனா, இத்தகைய நிம்மதி கிடைத்திருக்காது”….

“அதைக்காட்டிலும் ராதாகிருஷ்ணன் ஆசரமம், மருத்துவமனை என பல சேவைகளை துவங்கி… பலர் வாழ்வில் ஒளி ஏற்றியவர், இன்று என் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றியுள்ளார்”, என்றாள்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஸ்விம்மிங் பூல் அருகிலிருந்த புல்வெளியில், மேகலா மா கண்மூடி நாற்காலியில் சாய்ந்திருக்க, அவரருகே அமர்ந்திருந்த கிருஷ்…  the alchimist புத்தகத்தை, அவர் காதல் விழுமாறு பொருமையாக வாசித்துக் கொண்டிருந்தான். 

“அம்மாவும், மகனும், நான் வரத கூட கவனிக்காம அப்படி என்ன படிச்சிட்டிருக்கீங்க”, என்று அங்கு வந்த அனு வினவ,

“the alchimist புக் அனு… அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது படிக்க வேண்டிய புக்”, என கிருஷ் துவங்க,

“ஆரம்பிச்சிட்டான்…..  நீ வாம்மா கண்ணு, இன்னைக்கு நான் உனக்காக கமச்சிருக்கேன், வந்து வயிறார சாப்பிடு. அப்புறம் பேசிக்கலாம்’, என்று சென்றார் மணிமேகலை.

இருவரையும் பார்த்து சிரித்தவாறே அனு செல்ல…

“பாவம் மா அனு, முதன் முறையா நம்ம வீட்டுக்கு வந்துருக்காங்க, இவ்வளவு பெரிய தண்டனை தேவையா”, என நக்கல் அடித்தான் கிருஷ்.

“போடா போ… ஏன் சொல்ல மாட்ட”, என முறுக்கிக்கொண்டு அவர் சென்றார்.

வீட்டின் வெளியிலிருந்த ராதாகிருஷ்ணன் பலகையை பார்த்த அனு,

“ராதாகிருஷ்ணன் என்றாள் யார் கிருஷ்?”, என்று வினவினாள்.

எந்த உணர்வுகளையும் முகத்தில் காட்டிக் கொள்ளாத கிரிஷின் முகம் அவளது வினாவில் வாடக் கண்டவள்,

“ஏன்.. நான் எதையாவது தப்பா கேட்டுட்டேனா  கிருஷ்….”, என்று கலவரமாய் வினவ,

“இல்ல அனு, ஜஸ்ட் ஹெட் ஏக்”,  என அவனது அறைக்கு விரைந்தான் கிருஷ். 

அவனது வாட்டம் அனுவையும் தொற்றிக்கொண்டது…

“வந்தும் வராமல், இப்படி செய்துட்டோமே”, என அவள் நொந்து கொள்ள,

“அவன் கிடக்கிறான் அனு, ராதாகிருஷ்ணன் என் தந்தை… கிருஷை வளர்த்தியவரும் அவரே… அன்பின் இலக்கணம் அவர், ஒரு வருடம் முன் தூக்கத்திலேயே இறந்துட்டார்… அவருக்கு நிம்மதியான முடிவு, ஆனால் எங்களுக்கோ மீள முடியாத அதிர்ச்சி”…

“எப்படியோ நான் தேறிட்டேன், ஆனால் இவன்”..  என பெருமூச்சு விட்டார் மேகலாமா.

“சாரிமா”, என அவள் தயங்க… 

“அதெல்லாம் ஒன்றுமில்லை அனு”, என்று அவளுக்காக புன்னகைத்தவாறு மதிய உணவுகளை டைனிங்கில் அடுக்க துவங்கினார்.

அவர்களுடன் கிரிஷும் கலந்துகொண்டு கலகலப்பாய் பேசி சிரித்து உணவருந்த தொடங்கிய போதுதான், அனுவால் இயல்புக்கு வரமுடிந்தது…

அனைவரும் பேசியவாறே உணவை ருசிக்க மேகலாமா தனது மனவருத்தத்தை பேசத் துவங்கினார்…

“என் மகன ஓரு நல்ல பெண்ணுடன் திருமணம் செஞ்சு வெச்சுட்டா, நிம்மதியா இருப்பேன் மா. ஆனால் இவன் அதைப்பற்றிய பேச்சையே எடுக்கவிட மாட்டான்”…

“இவன் பெயர்தான் கிருஷ்ணன், ஆனால் பெண்கள்… திருமணம்… என்றால், பத்தடி தள்ளியே நிக்கறான்”, என்று அவர் குறைபட,,

“கிருஷ்ணன் னு அழகான பெயர வெச்சிட்டு… கிருஷ், கிருஷ், னு அழைத்தா… எப்படி கிருஷ்ணன் போல நடந்துப்பார்… என்ன கிருஷ், நான் இனி உங்கள கிருஷ்ணா னு தான் கூப்பிடுவேன்… ஓகே தான”, என்று புன்னகைத்தாள் அனு.

சரி, என தலையசைத்த படி, அனுவை கண்ணிமைக்காமல் ஆழமாக பார்த்தான் கிருஷ்….

“அதுவும் சரிதான் மா, சிறுவயதிலிருந்து ஒரு பொண்ணு கிட்ட கூட, இவன் நட்பா பேசியோ, பழகியோ, பார்த்ததே இல்ல. இப்போ தான் பார்க்கிறேன், இவன் உன் கிட்ட மட்டும் தான் நல்லா பழகுறான். அதனால இவனது திருமண பொறுப்ப உன்கிட்ட கொடுத்துடறேன். இவன நீதான் திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கனும் மா. பெண்ணை இவன் பார்த்தாலும் சரி, இல்லை நான் பார்த்தாலும் சரி”, என்றார்  மணிமேகலை சீரியஸாக. 

“அவ்வளவுதானே மா, நான் பார்த்துக்றேன்” என்றவள்,

“அம்மா இவ்வளோ சொல்றாங்கல கிருஷ்ணா… இப்படியே மௌனமா இருந்தா எப்டி”, என்று கூறினாள் அனு.

“இந்தப் பேச்சு சுத்தமா பிடிக்கலை னு அர்த்தம்”, என கிருஷ் கூற,

“இவன திருத்தவே முடியாது” என்று சலித்துக் கொண்டார் மணிமேகலை.

மணிமேகலையை பார்க்க பாவமாகத்தான் இருந்தது அனுவிற்கு…

தொடரும்…

Advertisement