Advertisement

காலை எழுந்தவுடன் ஒரு காப்பியை மட்டும் குடித்துவிட்டு, வேகமாக ஒரு குர்தாவை அணிந்துகொண்டு, ஹாஸ்பிட்டல் புறப்பட்டாள். 

இப்போது அனுவிற்கு பூஜாவை காணவேண்டும் என்ற ஆர்வத்தை விட, கிருஷை காண வேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக இருந்தது. 

சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மீது, அவளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான்.

“நானும் வரேன் மேடம், உங்க அம்மா… உங்கள தனியா அனுப்ப கூடாதுன்னு சொல்லிருக்காங்க”, என்று ரஞ்சினி கூற, 

“தேவையில்லை… நான் மறுத்ததாய், சொல்லிடுங்க” என்று கிளம்பினாள் அனு.

சரஸ்வதி,.. ” டாக்டர்…… டாக்டர்”….. என கூச்சலிட்டுக் கொண்டு, பூஜாவின் அறையிலிருந்து வெளிவர,

என்னாச்சோ, என வேகமாக உள்ளே சென்றாள் அனு.

பூஜா வேகமாக மூச்சு வாங்கிக்கொண்டு இருப்பதையும், முரளி அவளருகே “பூஜா… பூஜா …”, என்று பதறிக் கொண்டிருப்பதையும், சிலர் பூஜாவை சுற்றி நிற்பதையும் கண்டவள்,

நிலைமையை உணர்ந்து, “வழிவிடுங்க, தயவுசெய்து நகருங்க” என்று, அனைவரையும் தூர நிறுத்தி,

ஆக்சிஜன் மாஸ்க் எடுத்து, அவள் முகத்தில் வைத்தாள். தனது கைப்பையில் இருந்த, ஸ்டெதாஸ்கோப்பை எடுத்து அவளின் நெஞ்சில் வைத்து கேட்டவள், அருகிலிருந்த மருந்தை எடுத்து, ஒரு ஊசியும் போட்டாள்.

அதற்குள்ளாக அந்த மருத்துவமனையிலிருந்த டாக்டரும் வந்து விட்டார்.

“is everything ok doctor”, என அனுவிடம் அவர் வினவ,

அனுவும்… அவள் அளித்த சிகிச்சையை பற்றி கூறி முடிக்க,

“பைன்…. அதான் டாக்டர் அனு இருக்காங்கள, கவலை வேண்டாம் அவங்க பாத்துபாங்க, பயப்பட ஒண்ணுமில்ல”, என்று மற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார், அந்த வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த டாக்டர்.

பூஜாவின் மூச்சு திணறலும் குறைந்தது….

“நீங்க டாக்டரா…., பூஜா சொல்லவே இல்லை”, என்றாள் சரஸ்வதி ஆச்சரியமாக…

“அது அவளுக்கே தெரியாது”, என்று கூறியவள், 

முரளியின் அருகே சென்று, “ஒண்ணுமில்லை முரளி, பயம் வேண்டாம். பனி காலத்துல ஆஸ்துமா உள்ளவங்களுக்கு இதுபோல வரது சகஜம் தான். அதுக்கான மருந்து சாப்பிட்டா சரியாகிடும்”, என்று கலக்கத்துடன் காணப்பட்ட முரளியிடம் தெளிவாய் கூறினாள்…

“தேங்க்ஸ் மேடம்”, என்று கூறியவன், அப்படியே பூஜாவின் அருகில் அமர்ந்து விட்டான்.

“ஒன்றுமில்ல முரளி”, என்று பூஜாவும், ஓய்ந்து போன குரலில் கூறி, அவனது கைகளை பற்றிக்கொண்டாள். 

“சரி… பூஜா உறங்கட்டு நம்ம வெளிய இருப்போம்” என சரஸ்வதி கூற,

அங்கு முரளியும், அனுவும் தவற வேறு யாருமில்லை… 

முரளி…, பூஜாவின் கையை இருக்கமாக பிடித்திருப்பதை பார்த்த அனு. சிறு புன்முறுவலுடன், வெளியே செல்ல எண்ணமிட்டு, கதவை திறக்க தனது கரங்களை நீட்டினாள் ..

கதவு தானாகவே திறந்தது, மறுபுறம் ஒரு வாலிபன் நின்றிருந்தான்…

சுருட்டை முடியும், அழுத்தமான பார்வையும், சாந்தமான முகபாவனையுமாக, நல்ல உயரத்தில்  ஜீன்ஸ் டீ-ஷர்ட என, ஸ்டைலாக அந்த இளைஞன் காட்சியளிக்க… யார் இவர் என்ற சிந்தனையோடு அனு பார்த்து நின்றாள்.

“வாங்க ஐயா”, என முரளி எழுந்து வர,

‘இவர் தான் கிருஷாக இருக்குமோ’, என அனு எண்ண, 

அவன் “வணக்கம்” என புன்னகைத்தான்…

“வணக்கம் … நான்”… என அனு துவங்க,

“அனு…”, என்றவன்,” நான் கிருஷ்… உள்ள வாங்க”, என்று அவளையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் கிருஷ்.

முரளியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பூஜாவை கண்டவன், “இப்போ பரவாயில்லையா பூஜா?” என வினவினான்.

அவள்… “நல்லா இருக்கேன் ஐயா”, என அந்நிலையிலும் கூற,

புன்னகையுடன், “தட்ஸ் குட்” என அவளிடம் கூறி, முரளியின் தோளை தட்டிக் கொடுத்தான். 

எவ்வளவுதான் அசதியாக இருப்பினும், “இவங்க அனு, என் முதலாளியம்மா”, என்று அனுவை, கிருஷ்ணருக்கு அறிமுகம் செய்தாள் பூஜா.

“எல்லாம் தெரியும், நீ புகழ்ந்ததை வைத்தே.. இவங்க தான் அனு னு பார்த்ததுமே தெரிஞ்சுக்கிட்டேன். உன் அனு மாவை, நாங்க பாத்துக்குறோம். நீ ஓய்வேடு”, என்று கிருஷ், அனுவுடன் வெளியேறினான்.

“உங்க காலை உணவு மேடம்”, என்று, ஒரு டிபன் பாக்சை நீட்டினாள் சரஸ்வதி.

“பரவால சரஸ்வதி… நா பாத்துக்கிறேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்”, என்று அனு மறுக்க,

“ஒரு சிரமமும் இல்ல. பூஜா வரும் வரை எங்க குடும்பத்திலிருந்து,  யாராச்சும் வந்து உங்க வீட்டு வேலைகளை பாத்துக்குவாங்க”, என்றான் கிருஷ்.

‘குடும்பமா’ என்று அனு சிந்திக்க,

“எங்கள் ஆசிரமத்தை, குடும்பம் னு தான் ஐயா சொல்வார்” என்றாள் சரஸ்வதி. 

“ஓஓஓ…. நன்றி”, என்று டிபன் பாக்ஸ்செய் பெற்றுக்கொண்டாள் அனு.

பூஜா மருத்துவமனையிலிருந்து ஆசர்மம் திரும்ப…

சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி பணித்த அனு, அவளை காண தினந்தோறும் ஆசிரமம் சென்று, அங்கிரிந்தோரிடம் சிநேகம் பாராட்ட துவங்கினாள்.

நடந்தவை அனைத்தையும், தனது தமையனிடம் தவறாமல் உரைத்தாள் அனு….

“இவங்க கூடலாம் பழகுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா. பழைச எல்லாம் மறக்க செய்யுது”, என்று அவள் உற்சாகமாக கூற, 

அதில் மகிழ்ந்த ரகு, “சரிடா… இது தான், எனக்கு வேணும். சின்ன வேலையா வெளியூர் போறேன், திரும்பி வர ஒரு மாசமாகும். அது வரை கவனமா இரு”, என்று சொல்லிவிட்டு கிளம்பினான். 

இந்த ஒருமாதத்தில், அனுவின் வாழ்வு வேறுதிசையில் செல்ல துவங்குமென, இருவருக்குமே தெரியாது. 

°°°°°°°°°°°°°°°

எப்போதும் போல ஆனந்தமாக பூங்காவில் பாடல் கேட்டுக் கொண்டு காலை பொழுதை வீணாக கலித்துக் கொண்டிருந்த ரஞ்சினி, ஏதோ ஒரு வாலிபர் வீட்டினுள் செல்வதை கவனித்து வேகமாக சென்றாள்.

“நான் கிருஷ், டாக்டர் அனுவை பாக்க வந்தேன்”, என்றான்.

“டாக்டர் அனுவா … இந்த வார்த்தைய கேட்டு எவ்வளோ நாளாச்சு”,என்று எண்ணியவள், அனுவை அழைக்க நகர்ந்தாள்.

“கிருஷ் நீங்களா!!! …. என்ன அதிசயம், வீடு தேடி வந்திருக்கீங்க”, என்று கேட்டுக்கொண்டே, மாடியிலிருந்து அனு இறங்கி வர,

அவளது நடையிலிருந்த வேகத்தையும், முகத்தில் மின்னிய மகிழ்ச்சியையும், ரஞ்சினி கவனிக்க தவறவில்லை. 

பூஜாவை தினமும் காண சென்ற போது, கிருஷுடன்  நல்ல நட்பு உண்டாகியிருந்தது அனுவிற்கு. 

“நம்ம ஹாஸ்பிடல் சீப் டாக்டர், இரண்டு மாத விடுமுறை கேட்டிருக்கிறார் அனு. அவருக்கு வயதும் அறுபதுக்கு மேல். புதுசா ஓரு தலைமை மருத்துவர் நியமிக்கனும். நீங்க அந்த பணிக்கு வந்தா எனக்கு மட்டுமில்ல, நம்ம குடும்பத்துல இருக்கிற எல்லாருக்கும் மகிழ்ச்சியா இருக்கும்”, என்றான் கிருஷ்.

“இது என் பாக்கியம் கிருஷ். நாளையிலிருந்து பொறுப்பேற்கட்டுமா”, என்று அனு ஆர்வமாய் வினவ,

“நன்றி அனு”, என்று புன்னகைத்தான்.

“அத நான் தான் சொல்லனும்… என்ன செய்றது னு யோசிச்சே பல நாட்கள் வீணாகிடுச்சு. உங்களால் இப்டி ஒரு நல்ல வாய்ப்பு கிடச்சிருக்கு, மிக்க நன்றி”, என்றாள் மனமாற…. 

சிறு புன்னகையுடனே சம்பலம் என துவங்கினான் கிருஷ்,

“அதையெல்லாம் பிறகு பேசிக்கலாம்… ஆனால் கிருஷ்…  மருத்துவ பணியை சிறப்பா செய்வேன். ஆனால் இந்த தலைமை மருத்துவர் பதவிய ஏற்கும் அளவுக்கு வயதும், அனுபவமும், என்கிட்ட இல்லையே”, என்றாள் குழப்பமாக.

“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். நா கொஞ்ச நாள் ஹெல்ப் பன்றேன்.  அப்புரம் இரண்டே வாரத்துல நீங்களே தனியா ஹாஸ்பிடல்ல பாத்துக்குவீங்க”, என்று கிருஷ் நம்பிக்கை கொடுத்தான்..

இப்படி வேலையை பற்றிய பேச்சில் நிமிடங்கள் ஓடிவிட…

“சரி… நாளைக்கு பாக்கலாம் அனு”, என்று அவன் எழ,

“இல்லை…  இல்லை… கொஞ்சம் பொருங்க.. உங்ககிட்ட திருமணம் பற்றி பேசணும்”, என்றாள் அனு.

“திருமணமா”, என்று அவன் ஆச்சரியமாய் பார்க்க…

“ஆம்… நம்ம முரளி மற்றும் பூஜாவின் திருமணம் பற்றி”, என்று அனு துவங்க…

கிருஷ் ஏதும் கூறாமல் மௌனமாய் யோசித்தான்.

“என்ன யோசனை”, என்றாள் அனு…

“முரளி பூஜாவ நேசிக்கறது நல்லாவே தெரியுது…  ஆனா பூஜா…”, என்று இழுத்தான் கிருஷ்.

“பூஜாகும் முரளிய பிடிக்கும் கிருஷ். இருத்தாளும், அவகிட்ட கன்பார்ம் பன்னிட்டு சொல்றேன்”, என்றாள் அனு. 

இவர்கள் பேசுவதை எவ்வளவு முயன்றும் கேட்க இயலவில்லை ரஞ்சினியால். ஏனென்றால் கிருஷ் வந்தவுடன் வேறு வேலை சொல்லி, ரஞ்சினியை வெளியே அனுப்பினாள் அனு. ஏனோ அவள் அங்கு இருப்பதை அனு விரும்பவில்லை.

மறுநாள் காலை… கருநீல வண்ண புடவையில்,  கழுத்தில் ஸ்டெட்துடனும், கையில் கோட்டுடனும், கெத்தாய் கிளம்பினாள் அனு.

“உங்கள இப்படி பாத்து எவ்வளோ நாளாச்சு மேடம்!!, எனக்கு இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு,” என்று ரஞ்சினி, ஆனந்தமாக கூற,

“உண்மையாவா?” என ரஞ்சினி, சந்தேக பார்வை வீசினாள்…

“ஆமா மேடம், நிஜமா” என ரஞ்சினி கூற,

“அப்படினா, இத என்னோட அண்ணிட்ட சொல்ல கூடாது, என் அண்ணாட்ட நான் சொல்லிக்குவேன், ரகுக்கு மட்டும் தெரிஞ்சா போதும்” என்றாள் அனு.

‘இது பிரியாவுக்கு தெரிஞ்சா தேவையில்லாத பிரச்சனை வரும், அதுவும் ரகு சார் வேர ஊரில் இல்லை,’ என்று சிந்தித்த ரஞ்சினி!!, 

“உங்க கிட்ட பொய் சொல்ல விருப்பல மேடம், அதனால உண்மையவே சொல்றேன், ரகு சார்,  வெளியூரில்ல இருந்து வரும் வர, நான் எதையும் அவங்ககிட்ட சொல்லல”, என்றாள் தயக்கத்துடன்.

அவள் கூறியதன் பொருளுணர்ந்து, சிறு புன்னகையுடன், “சரி.. வீட்ட பத்திரமா பாத்துக்கோங்க”, என்று கூறி வெளியேறினாள் அனு.

ஸ்டெத்தையும், கோட்தையும், அருகிலிருந்த சீட்டில் வைத்துவிட்டு… அனு லாவகமாக கார் ஓட்டி செல்வதை கண்ணிமைக்காமல் மனம்குளிர பார்த்திருந்தாள் ரஞ்சினி.

‘இறைவா!!, இதாவது நிலைக்க வேண்டும்’, என மனதிற்குள் பிராத்தனையும் செய்து கொண்டாள் ரஞ்சினி.

“நான் இப்போ நல்லா தான் இருக்கேன்,… என்ன வேலைக்கு அனுப்புங்க… ப்ளீஸ்!!” என்று பூஜா கெஞ்சிக் கொண்டிருக்க,

“பரவால்ல, இன்னு ஒரு நாள் ரெஸ்ட் எடு,” என அதட்டினான் முரளி.

“முடியாது முரளி… இன்று அனு மா ஹாஸ்பிடல் சீப் டாக்டரா பணி ஏற்கப் போகிறாங்க. நான் அத பாக்கனும். ஹாஸ்பிடலுக்காவது கூட்டிட்டு போ”, என்று பிடிவாதமாக அவள் கேட்கவும்,

“சரி வா, அங்க வந்து ரெஸ்ட் எடுத்துக்கோ”,… என்று தனது சைக்கிளை அவன் எடுக்க… 

“நீ திருந்தவே மாட்ட முரளி”, … என்றவள், சிறு புன்னகையுடன் அவனுடன் உற்சாகமாக நகர்ந்தாள்.

ஒருபுறம் அனு.. வீட்டிலிருந்து கிளம்ப, பூஜாவும் முரளியும் மறுபுறம் கிளம்பி வந்து கொண்டிருக்க, அவர்களுடன் வேறு சில ஆசிர்மவாசிகளும் கலந்துகொள்ள,

அந்த மருத்துவமனையின் உரிமையாளனான கிருஷ், தன் அன்னையிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தான்….

மருத்துவமனைக்கு செல்வதாக கூறியதும், “நானும் வரேன் கிருஷ், எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது”, என அவனுடன் கிளம்பி விட்டார் கிருஷின் அன்னை மேகலா.

வலி என கிளம்பிய போதும், அவரது எண்ணம் முழுவதும் டாக்டர் அனுவை காண வேண்டும் என்பதுதான்… 

அதிகம் பேசாத தன் மகன், இந்த அனுவை பற்றி தினமும் அரைமணி நேரம் பேச… மேகலாமாவுக்கு இந்த ஆசை வந்துவிட்டது…

இதில் அந்த முரளி வேறு, “அனு மேடம் இன்னைக்கு இத சொன்னாங்க, இத செய்தாங்க, என மெச்சிக் கொண்டிருக்க”… அவளை காண மிகவும் ஆர்வமாக கிளம்பினார்… 

இப்படியாக பலரும் அன்று மருத்துவமனையை வந்தடைய….

அன்று மருத்துவமனையே கோலாகலமாக காட்சியளித்தது. அனைவரும் அனுவின் வருகைக்காக காத்திருந்தனர்….

தொடரும்……

Advertisement