Advertisement

“வணக்கம் மேடம்!!.. நீங்க தான் அனுவா?, நான் முரளி,” என்று சற்று கலக்கமான முகத்துடன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் அந்த புதிய வாலிபன்.

“ஆம்… என்ன விஷயம்?”, என்று வினவினாள் அனு..

“பூஜாவ காணோம் மேடம், அவள் மொபைலும் சுவிட்ச் ஆஃ,..  பூஜா எப்போ இங்கிருந்து கிளம்பினா னு விசாரிக்க வந்தேன்”, என்று அவன் கவலையோடு கூற.

“பூஜா மாலை ஏழரை மணிக்கெல்லாம் கிளம்பிட்டா”, என்ற அனுவின் குரலில்ழும் சிறு பதட்டம் தொற்றிக்கொண்டது.

அனுவின் பதிலைக் கேட்க முரளி, ‘பிறகு ஏன் இன்னும் திரும்பல, எங்க இருப்பா, எதாச்சும் பிரச்சினையா இருக்குமோ’, என மனம் கனக்க நின்றிருந்தான். 

“பூஜாவுக்கு, நீங்க என்ன வேணும்”, என்று ரஞ்சினி வினவ,

“பூஜாக்கு நான் யாருன்னு எனக்கு தெரியாது மேடம், ஆனால் எனக்கு, அவள் தான் எல்லாம்”, என்றவனின் குரல் தடுமாறியது.

முரளியின் சொற்களில் பொதிந்திருந்த உண்மையை புரிந்து கொண்ட அனு, 

“கவலைவேண்டாம் முரளி,  பூஜாக்கு ஒண்ணும் ஆகாது” என ஆறுதல் கூற,

சரி என்பது போல தலையை அசைத்து விட்டு, “நான் போய் தேடுறேன் மேடம்”, என கிளம்பினான். 

“ஒரு நிமிஷம்,…. உங்க மொபைல் நம்பரை கொடுத்துட்டு போங்க”, என்று அனு கூற, அவசர அவசரமாய் நம்பரை உலறிவிட்டு ஓடினான்.

“ரஞ்சினி…. போய் செக்யூரிட்டிய கூட்டீட்டு வாங்க”, என்று அனு கூற,

“எதுக்கு அவர்”, என்று ரஞ்சினி, ஏதோ எஜமானி போல வினவினாள்,

“do what i say”,  என்று அதட்டிவிட்டு, சோபாவில் சிந்தனையாக அமர்ந்தாள் அனு.

ரஞ்சினி தயங்கியவாறே கூறினாள், “அவர் இன்று லீவ் மேடம்”, என.

“இன்று மட்டுமா,” என்றாள் அனு, சற்று எரிச்சலுற்ற குரலிலேயே.

ரஞ்சினி தலை குனிந்து மௌனமாக நிற்க,…

“உங்கள கண்காணிப்பாளரா சேர்த்தது, என்ன வேவு பார்ப்பதுக்கு மட்டும் அல்ல, இங்க வேலை செய்ரவங்ககிட்ட சரிவர வேலை வாங்கவும் தான்”….

“நைட் டூட்டி செக்யூரிட்டி வரதே இல்ல. பகல்ல வரவர்கிட்ட உங்க சொந்த வேலைய சொல்லி அனுப்பிடறது, அப்படித்தானே”..  என்றாள் அனு, கடுப்பாய்.

“அப்படி இல்லை மேடம்”, என அவள் சமாளிக்க, 

“இன்று இரவு வரவேண்டிய செக்யூரிட்டியை அழைத்து, முரளிக்கு உதவியா… பூஜாவை தேட சொல்லுங்க”, என்று அனு ஆணையிட்டாள்.

“அந்த பொண்ணு எங்காவது சுத்தீட்டிருப்பாள், இதுக்கு போய் நம்ம செக்யூரிட்டிய எதுக்கு அனுப்பனும் மேடம், எதையும் யோசிச்சு செய்யுங்க”, என்று ரஞ்சினி திமிராய் பதிலளிக்க…

திரும்பி ஓர் ஆழமான பார்வையை, அவள் மீது பதித்த அனு,

“எனக்கு அறிவுரை கூற நினைத்தால், உங்க வேலை பறிபோயிடும்… பரவாயில்லையா???”, என்று அதட்டலாக கேட்டாள்.

“சாரி மேடம், இதுவே கடைசி… மன்னிச்சிருங்க”, என்று ரஞ்சினி கெஞ்சுதலாக கூறிவிட்டு, அவள் கூறியதை செய்ய சென்றாள்.

அனுவின் இந்த திடீர் மிரட்டல், சற்று நடுக்கத்தை உருவாக்கியது ரஞ்சினிக்கு. 

கடந்த இரண்டு வருடமாக, அனுவின் வீட்டில் தான் பணிபுரிந்து வந்தாள் ரஞ்சினி. இதுவரை, அனு கோபமாக பேசியதில்லை. ஆனால் இன்று நடந்த செயல், ரஞ்சினியை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும், தள்ளியது. 

பூஜாவை பற்றிய தகவல் அறியாது, அனுவால் நிம்மதியாக கண்ணுறங்க இயலவில்லை…

இரண்டு மணி வரை பொறுத்திருந்தவள்… பிறகு முரளிக்கு கால் செய்தாள்…

“பூஜா கிடச்சிட்டா மேடம். ஒண்ணும் பிரச்சனை இல்லை”, என்று அவசர அவசரமாக கூறி, தொடர்பை துண்டித்து விட்டான் முரளி.

‘பூஜா கிடைத்துவிட்டாள், ஒன்றும் பிரச்சனை இல்லை’, என்ற இரண்டு வார்த்தைகளும், அவனது குரலின் தெளிவும், அனுவுக்கு நிம்மதியை கொடுக்க, நிம்மதியாக உறங்கினாள்.

காலை எழுந்தவுடன் அவள் செய்த முதல் வேலை, பூஜாவின் மொபைலுக்கு தொடர்பு கொண்டது தான். அது ஸ்விட்ச் ஆஃப் என வரவும், முரளிக்கு மீண்டும் அழைத்து விசாரித்தாள்.

“பூஜாவுக்கு உடம்பு சரியில்லை மேடம், ராதாகிருஷ்ணன் ஹாஸ்பிடலில் இருக்கிறோம்”, என்றான்.

என்னாயிற்று… என்று பதறிய அனுவை “கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை மேடம்”, என்று சமாதானம் செய்ய முற்பட்டான் முரளி…

“சரி நான் அங்க வரேன்”, என்று அவனிடம் கூறி, வேகமாக கிளம்பினாள்.

பல நாட்கள் களித்து, வீட்டை விட்டு வெளியே சென்றாள்… 

மருத்துவமனைக்கு வெளியே அனுவிற்காக காத்திருந்த முரளி, அவள் வந்ததும் வணக்கம் மேடம் என கார் கதவை திறக்க,

“பூஜாக்கு என்ன ஆச்சு”, என்று காரிலிருந்த இறங்கியும், இறங்காமலும், அனு வினவ….

“பூஜாக்கு ஆஸ்துமா தொந்தரவு இருக்கு மேடம். நேத்து வேலை முடிஞ்சு வரும்போது கடும் பணியால அது அதிகரிச்சிருக்கு. அப்படியே பயந்து மயங்கிட்டா போல”….. 

இதைக் கூறும்போது முரளியின் குரலிலும், முகத்திலும், அப்படி ஒரு வேதனை…. 

நல்ல உயரத்தில், வாட்ட சாட்டமாக, கரிய நிறத்தில், லட்சணமாய் இருந்த அந்த இளைஞன் பூஜாவின் மீது வைத்துள்ள அதீத அன்பையும், அதனால் எழுந்த வேதனையையும், கவனித்த அனு,

அதற்குமேல்  எதையும் கேட்க விரும்பாமல், “கவலை வேண்டாம் முரளி, இனி இப்படி நடக்காம நாம கவனமா பாத்துக்கலாம்”, என்றாள்.

டாக்டரின் அறையை பார்த்த அனு, ‘நான் டாக்டர்கிட்ட பூஜாவ பத்தி விசாரிச்சிட்டு வரேன். நீங்க பூஜாவோட இருங்க”, என்று கூறிவிட்டு சென்றாள்.

ஒரு கால் மணி நேரம் கழித்து வந்தவள், பூஜாவின் அறைக்கு சென்று பார்க்க…

அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமையால், தொந்தரவு செய்ய வேண்டாமென வெளியே வந்துவிட்டாள். 

அவள் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த வயதான தம்பதியினர் மற்றும் நடுத்தர வயது பெண்கள் இருவர், மற்றும் கால் ஊனமுற்ற ஒரு குழந்தை, என அனைவரையும் பார்த்தாள்.

அவர்கள் முரளியுடன் பேசிக் கொண்டிருக்க, பூஜாவின் உறவாக இருக்கமென எண்ணியவள், சிறு புன்னகையுடன் தனது வணக்கத்தை தெரிவித்தாள்…

அவர்களும் சினேகமாக வந்து நலம் விசாரித்தனர்… 

“பயப்பட வேண்டாம், நான் டாக்டரிடம் பேசினேன்… ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று ஆறுதலாக அனு பேச, அனைவரின் முகத்திலும் ஒரு நிம்மதி.

“பூஜா கொஞ்ச நேரத்துல எழுந்திடுவா மேடம். அதுவரை ஏதேனும் காபி, டீ சாப்பிடுங்க”, என கேன்டீனிற்கு அழைத்துச்சென்றான் முரளி.

“பூஜாக்கு  இதுபோல சீரியசா முன்பு நேர்ந்திருக்கா”, என்று அனு காப்பி கப்பை முரளியிடமிருந்து பெற்றுக் கொண்டவாரே விசாரிக்க,

“இல்லை மேடம், இது தான் முதல் தடவை” என்றான்.

“அங்க இருந்தவிங்க, பூஜாவின் சொந்தமா” என்று, அனு வினவ,

“ரத்த சொந்தம் இல்லைனாலும், மனதளவில் உறவுகளே மேடம்”, என்றான்.

“புரியவில்லையே முரளி”….

“நாங்க எல்லாரும், ராதாகிருஷ்ணன் ஆசரமத்துல வசிக்கிறோம் மேடம். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு அடிகள். மீள முடியாத அடிகள். வாழ்க்கையே முடிந்தது என்று எண்ணி, உறங்கிக் கிடந்தோம்”….. 

“பிறகு எப்படியோ, இங்கு வந்தோம்… சிலர் தாமாகவே வந்தனர், சிலர் எங்கள் கிருஷ் ஐயாவால் அழைத்து வரப்பட்டனர், சிலர் அவர்களின் நண்பர்கள் மூலம் வந்தனர்” என்றான்.

“யார் கிருஷ்”…. 

“எங்களை எல்லாம் வாழ வைத்த தெய்வம். வாழ்க்கையே முடிந்தது என்றிருந்த எங்களுக்கு, வாழ்வின் பொருளை உணர்த்தி, ஆனந்தமான வாழ்வளித்த தெய்வம்” …. 

“இப்போது எங்களுக்கு அனைத்து உறவுகளும் உள்ளன. அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, பாட்டி, தாத்தா, என… அனைத்தும் உள்ளன. இதற்கெல்லாம் காரணம் எங்களது கிருஷ் ஐயா தான்”, என்று அவன் புகழ் பாட, 

அவன் கூறியவற்றை, ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தாள் அனு.

“பூஜா என்கிட்ட இதெல்லாம் சொன்னதே இல்ல” என்று அனு கூற,

“ஆனா எங்ககிட்ட உங்கள பற்றி நிறையவே சொல்லியிருக்கிறாள். உங்களைப் பற்றி பேசாத நாட்களே கிடையாது மேடம்” என புன்னகைத்தான்.

“ஆம் மேடம், உண்மை என்னன்னா… பூஜாவால், நாங்கள் அனைவரும் உங்கள் பான்ஸ் ஆகிட்டோம்”, என்று கூறிய வண்ணம், பூஜாவின் வயதை ஒட்டிய பெண், ஒருத்தி அங்கு வந்து அமர்ந்தாள். 

“என் பெயர் சரஸ்வதி, எங்க பூஜா சொன்ன மாதிரி, உன்மையாவே நீங்க ஒரு தேவதை தான்”, என்று அவள் அனுவை ரசித்தவாறே கூற,

“அப்படியா… சரி… வேறு என்ன சொன்னா உங்க பூஜா”…என அனு புன்முறுவலிக்க,

“மென்மையானவர், நிறைய விஷயம் அறிந்தவர், அமைதியானவர், என… நிறைய, நிறைய, கூறியிருக்கிறாள். எதைச் சொல்ல” என அவள், கேள்வியாய் பார்த்தாள்.

சிறு புன்னகையுடன், “பூஜா எழுந்துட்டாளா”, என வினவினாள் அனு.

“அத சொல்ல தான் வந்தேன், ஆனால் எதைஎதையோ பேசி உங்க நேரத்தை வீணாகிட்டேன்” என அவள் நாக்கை கடித்தாள்.

அனு  தன்னை காண வந்தது, பூஜாவிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அனுவும், பூஜாவின் கலகலப்பான பேச்சை கேட்ட பின் தான் முழுமையான நிம்மதி அடைந்தாள்.

“சரி நான் வரேன் முரளி, இத வாங்கிக்கோங்க…. சிகிச்சைக்கு நிறைய செலவாகிருக்கும்”, என்று ஒரு தொகையை கொடுத்தாள் அனு.

“வேண்டாம் மேடம்”, என்று மறுத்தவன்,

“இந்த ஹாஸ்பிட்டல், எங்க கிருஷ் ஐயாவினது, அனைத்துமே இலவசம் தான்” என்று கூறி, மீண்டும் அவர் புகழ் பாட துவங்கினான் முரளி.

“யார் உங்க கிருஷ் ஐயா”, என்று பெருமூச்சு விட்டாள் அனு.

“நாளைக்கு இங்க வருவார் மா, நீங்க எங்க ஐயாவ நிச்சயம் பாக்கனும்”, என பூஜா கூற,

“சரி” என தலையசைத்து, பூஜாவை ரெஸ்ட் எடுக்கும் படி கூறி, கிளம்பினாள் அனு.

“எனக்கு ஒரு போன் பண்ணிருக்கலாமே பூஜா, எதுக்கு இப்படி செய்த!!. உன்ன காணாம எவ்வளோ பதறிட்டேன் தெரியுமா” என்று முரளி வருத்தப்பட, 

அவனது வாடிய முகத்தை கண்டவள், கனிந்த குரலில்,

“முரளி… எனக்கு ஒண்ணுமில்ல, நேத்து சரியாகிடும்ன்னு நினச்சேன். ஆனா திடீர்ன்னு மயங்கிட்டேன்” என விளக்கமளித்தாள்.

“இனிமேல் எதுனாலும், உடனே எனக்கு தெரிய படுத்தனும்… புரியுதா….” என்று, பூஜாவின் கைகளை பற்றிய முரளி,

“உனக்கு எதாச்சும் ஆனா, என்னால அத தாங்கிக்கவே முடியாது பூஜா” என்று கூறிவிட்டு, அவளது கைகளை தனது நெஞ்சோடு அழுத்தினான்.

இதை எதிர்பாராத பூஜா, “உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா!!.. ” என்று, மனதில் நினைத்ததை கேட்டே விட்டாள்.

ஆம் என்று தலையசைத்தவன், ஏதோ சொல்ல  முற்பட்டான் …..அது இயலாமல் …..எழுந்து சென்றுவிட்டான்.

‘முன்பின் தெரியாதவர்கள் இப்போது ஓரு குடும்பமாக வாழ்கின்றனர். அதுவும் ஒற்றுமையாக’, என மனதில் நினைத்து பூரித்த அனு,

‘இதற்கெல்லாம் காரணமான கிருஷை, நாம் கண்டிப்பாக காண வேண்டுமென’, ஆசையுற்றாள்….

தொடரும்….

Advertisement