Advertisement

“முரளி!!!…. எப்படி இருக்க…. உன்ன பாத்து கிட்டத்தட்ட ஒரு வாரமாச்சு”, என்று கூறிச் சென்று அவனிடம் பேச்சு கொடுத்தாள் பூஜா.

“வா பூஜா…, நீ வேலை செய்ற வீடு வழியா தான் போறேன்” என்று ட்ரைவர் சீட்டில் அமர்ந்து, பதிலளித்தான் முரளி.

அவன் கூறியதும், உரிமையாய் அவன் அருகில், முன் சீட்டில் அமர்ந்தாள்… முதல் முறையாக காரில் செல்லும் உற்சாகம் தொற்றிக்கொள்ள… காரை சற்றி முற்றி பார்த்தாள்….

அவனும், ஓரக்கண்ணால் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, காரை ஓட்ட தொடங்கினான்.

“எப்படி இருக்கு உன் வேலை”, என்று அவன் வினவ,

“நல்லா இருக்கு முரளி, அனுமா ரொம்ப அன்பானவங்க, எனக்கு தினமும் ரோஜா பூ தராங்க தெரியுமா….”, என்றாள் குதூகலமாக.

“அப்படியா … சரி, நானும் உனக்கு ரோஜாமலர் தரேன். என்னையும் இப்படி பாராட்டுவாயா”, என்று அவன் குறும்பாய் வினவ, 

‘இவன் என்ன சொல்றான்’, என்று எண்ணியவள், 

“வேண்டாம் …  உனக்கு எதுக்கு சிரமம், நீ பூ தரலைனாலும், நல்லவன் தான்”, என்றவள்,

மீண்டும் அனுவை பற்றி பாராட்டிக் கொண்டே வந்தாள்,…

தம்மால் முடிந்தவரை வாகனத்தை மெதுவாக  ஓட்டிக்கொண்டு, பூஜாவின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தான் முரளி.

அனுவின் வீடு வர, அவளை இறக்கி விட்டு, அவன் தன் ட்ரைவர் உத்தியோகத்தை தொடரச் சென்றான். 

‘இன்று, எந்த வண்ண ரோஜாவை சூடிக் கொள்ளலாம்’, என்ற சிந்தனையோடு வீட்டினுள் நுழைந்தாள்  பூஜா.

“வா பூஜா”, என்றாள் சௌபாக்கியவதி, அனுவின் தாய். 

‘இவங்க ஏன் இங்க வந்திருக்காங்க’, என்ற சிந்தனையுடன், 

“வணக்கம் மா”, என்று அணைவரின்  நலம் பற்றியும் விசாரித்தாள் பூஜா… 

“எல்லாரும் நலம் பூஜா, ஆனால்… அனு இங்க தனியே முடங்கிக் கிடப்பது தான், கவலையா இருக்கு. அவளோட அண்ணனும், அண்ணியும், வந்திருக்காங்க. கொஞ்சம் சீக்கிரமா சமச்சிடுமா”, என்று கூறிவிட்டு, பூந்தோட்டம் சென்றுவிட்டார் அனுவின் தாய்.

உள்ளே சென்ற பூஜா.., சோபாவில் அமர்ந்து கொண்டு ரஞ்சினியிடம் உரையாடிக் கொண்டிருந்த, அனுவின் அண்ணி பிரியாவை பார்த்தாள்… 

பூஜாவை பார்த்தவுடன்…  “இவ தான் அனுவின் புதிய சினேகமா, இவள் சமையல்காரி தான”, என்று நக்கலாய் வினவினாள் பிரியா. 

பூஜா ஏதும் கூறாமல், அமைதியாய் பார்க்க…. 

“அனு ரூம் எது”, என்று சிடுசிடுத்தாள் பிரியா.

பூஜா, அனுவின் அறையை சுட்டிக்காட்டி,  “இதுதான் மா, ஆனால்…” என்று தயங்கினாள். 

“ஆனால் என்ன”, என்று பிரியா முறைக்க…

“மணி ஆறு தான் ஆகிறது, அனுமா ஏழு மணிக்கு தான் எழுவாங்க”, என்றாள் பூஜா. 

“ஆமா….. எங்க எல்லாரோட  நிம்மதியையும் கெடுத்துட்டு, அப்படி என்ன உறக்கமாம்  அவளுக்கு. போ… போய் எனக்கு ஒரு காப்பி போட்டு, அவ ரூமுக்கு எடுத்துட்டு வா”, என்று குரலை உயர்த்திப் பேசி, அனுவின்  அறைக்கு வேகமாக நடந்தாள் பிரியா….

“எதுக்கு இப்படி செஞ்ச, வெறும் இரண்டே மாதத்துல நாங்க வெளிநாடு போய் வரதுக்குள்ள, இப்படிப்பட்ட காரியத்தை செஞ்சு குடும்ப மானத்தை  நடுத் தெருவுக்கு கொண்டு வந்து விட்டுட்ட”, என்று கத்திக்கொண்டு இருந்தாள் பிரியா. 

இந்த வார்த்தைகள்  செவியில் விழுந்த வண்ணம், கதவைத்திறந்து காப்பியை கொடுக்க உள்ளே வந்தாள் பூஜா.

பூஜா வருகையை கூட கருத்தில் கொள்ளாது, தொடர்ந்து வசை பாடிக்  கொண்டிருந்தாள் பிரியா. 

“இப்படிபட்ட குடும்பத்தில் பிறந்துட்டு, எப்படி உன்னால இவ்வளோ கீழ்த்தனமா நடந்துக்க முடிஞ்சுது. நீயெல்லாம் ஒரு பொண்ணா” என்ற  கொடிய வார்த்தைகளை அவள் கூற,  

“போதும் அண்ணி… உண்மையை அப்படியே எல்லோரிடமும் சொல்லிட்டேன். அதை யாரும் கேட்பதாய் இல்ல” என்று உணர்ச்சியற்ற முகத்துடன்,  விழியில் நீர் பெருக கூறினாள் அனு.

 இதைக் காண இயலாமல், பூஜா விரைவாக வெளியேறிவிட்டாள்….

“என்ன சொன்ன…. உண்மையா…. அத நம்ப, நான் ஒண்ணும் முட்டாளல்ல. செய்றதையும் செஞ்சிட்டு, சந்தோஷமா இங்க வந்து உல்லாசமா இருக்க”, என்று பிரியா நஞ்சை வெளிப்படுத்த, 

“போதும் நிறுத்து, வாய் இருக்குன்னு என்ன வேணாலும் பேசலாம் னு எண்ணமா”, என்று கூறியபடி, தன் தங்கையின் அருகில் வந்தவன்… ரகு.

ரகுவை பார்த்த அனுவின் உணர்ச்சியற்ற முகம் மாறியது, மிகுந்த வேதனையை பூட்டி வைத்திருந்த மனம்,  தனது தமையனை கண்டவுடன் திறந்தது,

வேதனை அனைத்தும், கண்ணீரும், குமரளுமாய் வெளிவர… 

தனது தமையனின் தோளில் சாய்ந்து அழுதாள் அனு…. 

தனது அன்பு தங்கை கலங்கியவுடன், தன் மனமும் கலங்க… அவளை அனைத்து…, 

“நான்தான் வந்துட்டேனே அனு, இனி நீ அழவே கூடாது. பிரச்சினையை நான் பார்த்துக்றேன்”, என்று ரகு ஆறுதல் கூறினான். 

“இவ செய்த களங்கத்தை, எப்படி துடைப்பீங்க”, என்று கோபத்துடன் கேட்டாலும், கொஞ்சம் பயத்துடனே வினவினாள் பிரியா.

“வாய மூடு, தவறு செஞ்சதெல்லாம் நாம தான்…  நம்ம குடும்பத்தோட அவசர முடிவு தான்”… 

“அதுக்காக” என்று கூற வந்தவளை….

“தயவுசெஞ்சு, வெளிய போ” என்று கோபத்துடன்  சீறினான் ரகு.

பிரியா, முகத்தை திருப்பிக் கொண்டு வெளியேற…

“நீயாவது என்ன நம்புவியா ரகு”, என்று வினவினாள் அனு. 

“உன் அண்ணன பத்தி உனக்கு தெரியாதா. உனக்காக கடவுளை கூட எதிர்ப்பேன், இவங்களாம் எம்மாத்திரம். நீதான் எனக்கு என்றும் முதல் குழந்தை, தயவுசெஞ்சு  கவலைப்படாட” என்றான்.  

மன பாரத்துடன்… “வேண்டாம் ணா… முடிஞ்சுபோன என் வாழ்க்கைக்காக, எனக்காக, உன் வாழ்க்கைய கெடுத்துக்காத. யாரையும் எதுக்காகவும் எதிர்க்க வேண்டாம் ணா…எல்லாம்…. போதும்”, என்று கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள் அனு.

“முடிஞ்சுபோன வாழ்க்கையா!!,  என்ன பேச்சு இது”, என்று உள்ளே நுழைந்தார் அனுவின் அன்னை. அவர்களை காலை உணவுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார் 

அனைவரும் உணவு மேஜையில் அமர….

“சரி அனு, நீ எங்களோடவே வீட்டுக்கு வா… இப்படி தனியா இருப்பது நல்லதல்ல”, என்றார் அனுவின் அன்னை. 

“வீண்செலவு வேறு”, என்று பிரியா முணுமுணுக்க… 

கடும் சினத்துடன், “என்ன கூறினாய்….” என்று முறைத்தான் ரகு. 

“வேண்டாம் அண்ணா” என்று அனு தடுக்க, 

“செலவை விடு, என் மகளுக்கு இல்லாமல் யாருக்காக, இத்தனை சொத்தும். நீ வீட்டுக்கு வா அனு, பிரச்சனையை பேசித் தீர்ப்போம்”, என்றார் அவளது தாய். 

“எல்லாம் முடிஞ்சிருச்சு மா, தயவுசெஞ்சு முதலிலிருந்து பிரச்சனைய தொடங்காதீங்க”, என்று, மென்மையான குரலிலேயே கூறினாள் அனு. 

“என்ன முடிந்தது”, என்று பிரியா ஆரம்பிக்க…

“இங்க பாருங்க, அனு விரும்பும் வரை அவள் இங்கயே தான் இருப்பாள். நான் அவ்வப்போது இங்க வந்து அவளை பார்த்துகுறேன்”, என்றான் ரகு.

அவன் அன்னை ஏதோ கூற வர….

“இதுதான் என் முடிவு, இனி எதுவும் யாரும் பேசக்கூடாது” என்று அவன் கடுகடுக்க,

குடும்ப சுமை முழுவதையும், தனி ஒருவனாக சமாளிக்கும் மகனின் பேச்சை எதிர்க்க இயலாமல், சரி என்பது போல் அவர் தலையசைக்க…,

“இன்று மதிய உணவுக்கு வீடு சென்று விடவலாம்”, என்று அழுத்தமாகக் கூறினான்…

“அதற்குள்ளா”, என அவனுடைய அன்னையும் மனைவியும் அதிர்ந்து  வினவ…

‘மிகவும் நல்ல முடிவு அண்ணா’, என மனதிற்குள் மெச்சிக் கொண்டாள் அனு…

கிளம்புங்கள் எனக்கூறிய ரகுவின் மனதில் ஒன்றுதான் இருந்தது…அது தன் தங்கையின் வாழ்க்கை மற்றும் நிம்மதி குறித்த கவலை..

தன் தங்கையுடன் இருக்கவேண்டுமென அவனுக்கும் ஆசைதான்… ஆனால் இந்தப் பிரியா, பேசியே அனுவை கொன்றுவிடுவாள், என தோன்ற அவசரமாக கிளம்பிவிட்டான்.

முன்றைய நாள் ஏதும் நடவாதது போல, காப்பி எடுத்துக்கொண்டு அனுவின் அறைக்கு சென்றாள் பூஜா.

அனுவும் அதை புன்னகையோடு பெற்றுக் கொள்ள,

“அப்பாடா!… எங்கே இந்த சிரிப்பு போயிடுமோன்னு பயந்துட்டேன் மா, நல்லவேளை அப்படி நடக்கல…” என்று கூறியவண்ணம், சிவப்பு நிற ரோஜா மலரை பறித்து … தனது கூந்தலில் சூட்டினாள் பூஜா.

“ஏன் அப்படி நினைச்ச?” என அனு கேள்வியாய் பார்க்க,

“பின்னே!!, உங்க அண்ணி கொஞ்சமா பேசுனாங்க”.

“ஆம், கொஞ்சம் தான்…., இதைவிட மோசமான பேச்சுக்களையும், சூழ்நிலையையும் பாத்தாச்சு!!!” என்று அனு உணர்ச்சியற்றவளாய் கூற,

“நான் எதாச்சும் தப்பா கேட்டிருந்தா!! மணிச்சிடுங்க மா”, என்று பூஜா தயங்கினாள்.

“சேச்சே!!!….  அதெல்லாம் ஒண்ணுமில்ல பூஜா, உன்னோட என் மனசு நல்லா ஒத்துப்போகுது!!, மேலும் என் அண்ணன்!! என் ரகு!! வந்துட்டான், இனி  நான் கவளைபட வேண்டிய அவசியமில்ல!!”… என்றாள் அனு கவலை கலந்த புன்னகையுடன்.

அன்றிலிருந்து அனு, கொஞ்சம் கொஞ்சமாய் பழைய அனுவாய் மாற முயற்சி எடுக்கத் துவங்கினாள்…

ஆனால் அது சாத்தியமில்லாத ஒன்றுதான்…

எப்போதும் ஆனந்தமாய், குதூகலமாய், மனதில் எக்கவலையும், வஞ்சகமுமின்றி, குழந்தைபோல் கள்ளங்கபடமில்லாமல் அனைவரின் அன்பையும் பெற்று மகாராணியாய் வந்தவளாயிற்றே…..

இப்போது அதுபோன்ற வாழ்க திரும்புவது அவ்வளவு  எழிதல்லவே…

நாட்கள் ஓடின… பூஜாவின் துணையாளும், தனது தமையன் ரகுவின் அன்பாழும், அனுவின் மனம் லேசானது.

ரகு வெளிநாட்டிலிருந்து வந்து அனுவை பார்த்தபின், அனுவின் வாழ்வில் நடந்த அனைத்தையும் ஒரு விபரம் விடாது  தெளிவாக அறிந்து கொண்டான்….

வாரம் இரண்டு முறையாவது, கோவையிலிருந்து ஊட்டி வந்து அவளை  பார்த்து விடுவான். தன்னால் முடிந்தவரை அனுவை ஆனந்தமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்தான். 

அவனது கண்டிப்பான வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, அனுவின் உறவினரும் வீட்டாரும் அவள் மனம் புண்படுமாறு எதையும் கேட்கவில்லை, அமைதியாகவே இருந்தனர்.

ரகுவின் கோபம் எவ்வளவு கொடியது என்று அனைவரும் நன்கு அறிந்திருந்ததால், அனுவின் வாழ்வில் அமைதி என்னும் மனோபாவம் பல நாட்களுக்குப் பின் திரும்பியது…

ஆனால் தனது வாழ்வில் நடந்த கொடிய சம்பவங்கள், அவள் மனதை ஒரு ஓரமாய் அழுத்திக் கொண்டே தான் இருந்தது.

பூஜாவுடன் நல்ல நட்பு பாராட்டி வந்தாள் அனு…

இருப்பினும் தனது வாழ்வில், சிலபல நம்பிக்கைத் துரோகங்களை சந்தித்தமையால் மனமார முழுமையாக யாரையும் நம்ப இயலவில்லை அவளால்…

அதனால் அவளை பற்றிய எதையும் பூஜாவிடம் கூறவில்லை…  பூஜாவும் தான் அதை அறிந்துகொள்ள முற்படவில்லை.

‘இன்னும் எவ்வளவு நாள் இப்படியே யாருக்கும் உபயோகமின்றி  வாழ்வது. இப்படி தனியாக வேலையற்று இருப்பதால்தான் பழைய நினைவுகளால் மனம் வருந்துகிறது. ஏதேனும் வேலைக்கு செல்லலாம்’, என்று லேப்டாபில் தமது படிப்பிற்கான வேலையை தேடிக் கொண்டிருந்தாள் அனு,

ஹாலில் ஏதோ அரவம் கேட்க, வெளியே வந்து பார்த்தால்…, அடையாளம் தெரியாத  வாலிபன் ஒருவன் ரஞ்சினியிடம் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தான்.

‘யாரது, இரவு பதினோரு மணிக்கு இங்க வந்திருக்கிறார்”, என்று சிந்தித்தவண்ணம், “யார் இவர் ரஞ்சினி”, என அனு வினவ,……

தொடரும்…

Advertisement