Advertisement

“ராதாவோட நான் பழக ஆரம்பிச்சு நாலு மாசம் ஓடிடுச்சு,… காதலும், புரிதலும் நன்கு வளர்ந்தது… ஆனா அவ மட்டும் என்கிட்ட காதல் சொல்லவே இல்ல”, என பெருமூச்சுவிட்டான் கிருஷ்.

 

“அவளுக்கும் தான் உங்க மேல லவ் வர தொடங்குச்சு, காதல் மட்டுமல்ல… மதிப்பும்,  மரியாதையும் கூட”, என அனு கூற,

 

“ஆனா ராதா ஏன் இத என்கிட்ட சொல்லல… இது தெரியாம நான் தவித்த தவிப்பு எனக்கு தானே தெரியும்”, என கிருஷ் குறைபட்டான்.

 

“அத பற்றி அவ எழுதலையே”, என அனு முனுமுனுத்தாள்…

 

“என் பிரண்ட்ஸ், ராதா பிரண்ட்ஸ் னு நாங்க எல்லாருமே ஒரே கேங் ஆகிட, எங்க நட்பு வட்டாரம் நல்லா வளர்ந்துச்சு. எல்லாருமே இணைந்து மகிழ்ச்சியா இருக்க, கல்லூரி கால சுமையற்ற வாழ்வுக்கே திரும்பிய எண்ணம் தான்”,….

 

“அடிக்கடி கேம்ப்…. ஏழைகளுக்கு, குப்பத்துக்கு, சாதாரண பள்ளிகளுக்கு, முதியோர் இல்லத்துக்கு, என மருத்துவ சேவையில் நாங்க ஈடுபட…. அதிலும் கேலியும், கும்மாளமுமா தான் கழிந்தது”,….

 

“மொத்தத்துல இப்படி எல்லாம் செஞ்சு அவள உங்க வலையில சிக்க வெச்சிருக்கீங்க”, என ஓரக்கண்ணால் தலையசைத்து பார்த்தாள்…

 

பார்வையில் இருந்த குரும்பை ரசித்தவன், “இந்த பார்வை… இதை பார்க்க… எவ்வளவு நாள் ஆச்சு ராதா”, என்றான் கிருஷ்.

 

“கிருஷ்”… என அவள் முறைக்க.

 

“என்ன முறைப்பு… நீதான் என்ன, ‘பிரண்ட், பிரண்ட்’, னு சொல்லிட்டே இருப்ப. நா எப்பவாச்சும், உன்ன பிரண்ட் னு சொல்லிருக்கேனா”, என்றான் கடுப்பாக.

 

“சொல்லல தான். ஆனா நா அப்டி சொல்லும்போது, நீங்க தடுக்கலையே”, என்றாள் கோபமாக.

 

“இப்போ சொன்னதுக்கே, திரும்பவு தனிமைய தேடி, படிப்பு.. வேலை.. னு எல்லாத்தையும் விட்டுட்ட. முன்பே சொல்லியிருந்தா, அவ்வளவு தான்”, என்றான்.

 

‘அவன் கூறுவது உண்மை’, என தோன்ற…

 

“எல்லாம் சரிதான், ஆனா இப்போ கஷ்டப்படுறது, நான் தானே”, என அவள் சலிப்பாக கூறினாள்.

 

“அத நீ எடுத்துக் கொள்ளும் விதத்துல தான் இருக்கு ராதா”…

 

“ராதா இல்ல….அனு”, என அவள் மீண்டும் திருத்த…

 

“இந்த விளையாட்டு போதும் அனுராதா, நீதான் என் அனுவும், என் ராதாவும்… புரிஞ்சிக்கோ. உன்ன நீயே எவ்வளவு காலம் தான் ஏமாற்ற போற. நானு எவ்வளவு நாள் தான் இந்த வேதனைய அனுபவிக்கறது”, என்று அவன் சங்கடபட்டான்.

 

அனுவிற்கு, என்ன சொல்வதென்றே தெரியவில்லை…

 

அன்றிரவு சந்திருவின் ரிசார்ட்டில் தனிமையில் தனது பால்கனியில் நின்று கொண்டு, அவளைப் போலவே தூரத்தில் தனிமையில் அமர்ந்திருந்த கிருஷை நோக்கினாள் அனு…

 

அவன் ராதைக்காக ஏங்கிய நாட்கள் அவள் நினைவில் வர, மனச்சோர்வுடன்… ‘உனக்காக நான் செய்தே யாக வேண்டுமென தீர்மானம் எடுத்த செயல், இப்போ என்னாலேயே தடைபடுகிறது கிருஷ்’, என தனக்குள் பேசத் துவங்கினாள்…

 

‘உங்க காதல் உண்மையானது, உன்னதமானது, அதிலும் நான் வேற  ஒருத்தருக்கு மனைவியா வாழ்ந்தவ னு தெரிந்தும்…அத ஏத்துக்கிட்டு, எல்லாத்தையும் விட புனிதமானது என் காதலே னு எனக்காக வந்திருக்கீங்க, இதை என்னால எப்படி மறுக்க முடியும் கிருஷ்’,

 

‘ஆனாலும் என் கேள்வி எல்லாம் ஒண்ணுதான்… வானை விட உயரமானது உங்க காதல், ஆன நம்ம காதலையே மறந்தவ நான்,… நா உங்களுக்கு தகுதியானவ தானா… உங்களுக்கு நான் நல்ல பிரண்டா இருக்க முடியும், ஆனா நல்ல மனைவியா இருக்க முடியுமா னு தெரியல’,…

 

நட்பு, காதலா மாறுவது என்றும் தவறில்லை… ஆனா தூய்மையான நட்பை காதல் னு பறைசாற்றுவது தான் தவறு… அப்படி பிறர் செஞ்ச போது அத கண்டுகொள்ளாம நட்பென்னும் வேலியை போட்டு எந்த சஞ்சலமும் வரவிடாமல் அனு பார்த்துக் கொள்ள… அவனும் ஏதோ ராதை என்னும் பெண்ணை விரும்புவதாக கூற… இப்படி ஒரு எண்ணம் எட்டி பார்க்கவே அனு அனுமதிக்கவில்லை.

 

ஆனால் உண்மை அறிந்தபின், அவனை தான் பிரிந்திருந்த அந்த ஒரு மாத கால பிரிவில் மலர்ந்த அன்போடு, நட்பென்னும் வேலி சிறிது சிறிதாக தகர்க்கப்பட்டது…

 

இன்று நாள் முழுவதும்… அவன் கண்களில் மின்னிய தன் மீதான காதலை கண்டவளின் மனிதில், உண்மையில் நட்பென்னும் வேலி முழுவதுமாக தகர்க்கப்பட்டது… அனு தான் அதனை இன்னும் உணரவில்லை.

 

இப்படியாக சிந்தனைகளின் பிடியில் அகப்பட்டு சிக்கிய அனு, தனது பழைய டைரியை எடுத்து கிருஷூடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை புரட்ட துவங்கினாள்…

 

மறுநாள் தங்களது காதல் கதையை ரிசார்ட்டில் கூற துவங்கிய கிருஷ், காரில் ஏறி ட்ரெக்கிங் ஏரியாவுக்கு சொல்லும்வரை அந்த கதையை ரசித்து அனுபவித்து கூறினான்…

 

‘நாமா இப்படியெல்லாமா இருந்தோம்’ என நினைத்துக்கொண்டே அக்கதையில் அனுவும் மூழ்கினாள்…

 

இறுதியில் ட்ரெக்கிங் முடித்து, மர வீட்டை இருவரும் அடைத்துவிட… அந்த மரவீட்டின் பால்கனிக்கு சென்று, மௌனம் கலந்த சோகத்தோடு நின்ற கிருஷின் தோளை ஆறுதலாய் பற்றினாள் அனு.

 

அவளை திரும்பி பார்த்தவன், “இங்க தான் என் ராதா, ‘ஐ லவ் யூ’ னு அவ காதல முதலும் கடைசியுமா சொன்னா”, என்றான்… குரலில் அவ்வளவு சோகம்…

 

“அதன் பிறகு என்ன ஆனது கிருஷ்”, என தனது டைரியில் இடம்பெறாத சம்பவங்களை பற்றி அனு வினவ,

 

“என் ராதையின் ஆசையெல்லாம், சீக்கிரமே அவளின் பெற்றோரிடம், அண்ணனிடம், எங்க காதல தெரிவிச்சு திருமணம் செஞ்சுக்கனும்  என்பதுதான். அதனால அன்றே கிளம்பினோம்… என் அம்மாவ சந்தித்து, அவரையும் கூட்டீட்டு, ராதையின் வீட்டுக்கு போகலாம் னு முடிவு பண்ணோம்”,…

 

“இரண்டு பேருக்குமே சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம், ஏனோ நினச்சது அனைத்தும் நிறைவேறிய நிம்மதி. வருங்கால இனிய கனவு வாழ்வு குறித்த குதூகலம்…. ஆனா இது எல்லாமே ஒரே மணி நேரத்துல ஆக்சிடன்டுல முடிஞ்சது”,….

 

“இருண்ட உலகத்திலிருந்து நா ஒரு வருடம் கழித்து விழிக்க, என் ராதா வேற ஒருவரின் மனைவி”,….

 

“அவ நினைவுல என் வாழ்வ நகர்த்த நான் முடிவெடுக்கையில என் ராதா கணவனைப் பிரிந்த ஒரு அபலை பெண்”,.  

 

“விதியின் விளையாட்டால், நா அவள

 சந்தித்த பின்னர்… என் ராதா எனக்கு கிடச்ச பெஸ்ட் பிரண்ட்…. அவகிட்ட என் காதல மறைத்து வாழ நான் செய்த முயற்சிகளில், உண்மையில் நான் உடைந்து தான் போனேன்….ஆனாலும் அவளோட அருகாமை என் வாழ்வை உயிர்ப்பித்தது… என்னை பழைய கிருஷ்ணனாக மாற்ற தொடங்கியது”,…

 

“உடைந்து போயிருந்த என் அனுராதா பழைய அனுராதாவாய் மாறினாள்… அனு னு ஒரு உயிர்  தோழி எனக்கு கிடைக்க, அவளுள் புதைந்திருந்த என் ஆருயிர் காதலியை மீட்டெடுக்க முடிவெடுத்தேன்… அவள இங்க கூட்டிட்டு வந்தேன்… முன்பே என்காதலி ராதையை இழந்திருந்த நான், அன்று என் தோழி அனுவையும் இழந்தேன்”, என்றான். அவனது குரலில் துளிர்த்த துயரம் அனுராதாவை கொன்றது,

 

அவன் விழிகள் தூரத்தில் எதையோ வெறித்தபடி உணர்ச்சியற்று இருக்க… அனுராதாவின் விழிகளிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருகியது…

 

அந்த நிமிடம் அவளது மனதில் என்ன தோன்றியது என அவளுக்கே தெரியவில்லை, ஆனால் அவளை மீறி

வந்த கண்ணீருடன்… அவளை மீறி வந்த உணர்ச்சியுடன்… அவளை மீறி வந்த வார்த்தைகளை உதிர்த்தாள்…

 

“லவ் யூ கிருஷ்…., உன் அனுவும், ராதையும் உன்ன எப்போதுமே பிரிய மாட்டாங்க. இந்த அனுராதாவாள நீ இல்லாம வாழ முடியாது”, என அவனை கட்டிக்கொண்டு அவள் அழுக,

 

நடப்பது கணவா, நனவா என்று குழம்பிய கிருஷ்…. அவளை காட்டிக்கொள்ள, கண்ணீரை அதிகம் பார்த்திராத கிருஷின் கண்களும் கலங்கின…

 

அவர்கள் அன்று நினைத்ததை, இன்று சாதித்தனர்… இருவருமாய் ஆனந்த வெள்ளத்தோடு ஒன்றாக கிளம்பி, கிருஷின் அன்னையை அழைத்துக்கொண்டு, ராதையின் வீட்டிற்கு சென்றனர்.

 

திருமணம், குழந்தை, காதல், நிம்மதி, என அனைத்தையும் இறைவன் அருளால் பெற்றனர்… அனு மேலே படித்தாள். கிருஷ் ஆசர்மம், மருத்துவமனை என பல உதவிகளை இயலாதோருக்கு செய்தான்… தன் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை இருவரும் ஆனந்தமாய் வாழ்ந்தனர்.

 

இதைவிட வேறென்ன வேண்டும்….

 

முற்றும்…..

 

நன்றி…

Advertisement