Advertisement

“அன்னிக்கு இவனிங் அவ பிரண்ட்ஸ் எல்லாரும் கோவிலுக்கு போக, இவ மட்டும் போகல”,…

 

“வெளியூருக்கு போயிருப்பா னு நினைச்சேன்,… ஆனா அவ வீடு பூட்டாம தான் இருந்துச்சு”,…

 

“இதுக்கு மேல பொறுக்க முடுயாது னு, அவ கிட்ட பேச, அவ வீட்டுக்கே போய் கதவை தட்டினேன்”,…

 

“உள்ளிருந்து, ஜன்னல் வழியா உங்கள பாத்த ராதா திகைப்புல கதவ திறக்கல”, என அனு கூற,

 

”நானும் இடத்தைவிட்டு நகரவே இல்ல”, என கிருஷ் கூறினான்.

 

“வேற வழியில்லாம, ராதா அவ வீட்டுக்கடவ திறக்க”, என கூற வந்த அனுவை இடைமறித்து,

 

“நான் என் மன கதவ திறக்க தயாரானேன்”, என கூறினான் கிருஷ்.

 

அதுவரை சாலையில் கிரிஷுடன் நடந்து கொண்டு அவ்விரு வீடுகளை பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்த அனு, சட்டென்று நின்று அவனை கூர்மையாக பார்த்த வண்ணம் வினவினாள் “எப்படி ஓரிரு வாரத்துல காதல் வந்துச்சு”.

 

“சொல்கிறேன்”, என்றவன் மீண்டும் கதைக்கு சென்றான்.

 

“வீட்டுல யாரும் இல்ல கார்டன்ல பேசலாம் னு, அவ சொல்ல, நானும் போனேன்”.

 

“வீட்டுக்கு பர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க, என கூறியவள், தண்ணி, ஸ்வீட், ஜுஸ், னு எல்லாத்தையும் என் முன்ன இருந்த டேபிளில் வெச்சிட்டு, எதிர்ப்புறம் இருந்த சேரில் அமர்ந்தாள்”,…

 

“என் விழி முழுவதும் அவள் விழி மட்டுமே… என் விழிகளை சந்திக்க மறுத்த, அவளது மையிட்ட விழிகள், என் பொறுமையை சோதிக்க”,

 

“ஐ லவ் யூ னு சொல்லிட்டேன்”, என்றான் கிருஷ்.

 

“விழிகளை விரித்து அவ என்ன பாக்க, அப்போ தான் கொஞ்சம் பயம் வந்துச்சு… எங்க மறுத்துடுவாளோ… இனி அவள சந்திக்கு வாய்ப்பு கூட இல்லாம போய்டுமோ னு”,

 

“அப்புரம் நீ கேட்ட கேள்வியையே அவளு கேட்க”,

 

“உன் மேல காதல் வர ஒரு நொடி தான் ஆச்சு, அத சொல்ல தான் இவ்வளவு நாள், என நான் சொல்ல”,

 

“ஒரு நொடியில வந்த காதல் ஒரு நொடியில போய்டுச்சு னா னு ராதா கேட்டா”, என்றாள் அனு.

 

“உனக்கு ஒண்ணு தெரியுமா அனு, என் ராதா வினவிய கேல்வியில இருந்த சந்தேகம், அவள் கண்களில் இல்ல”.

 

“உண்ம தான்… அவ மனசுலையும் நீங்க இருந்தீங்க… ஆனா அவளுக்கு இப்படி சட்டுன்னு காதல்ல விழ மனசில்ல”, என்றாள் அனு.

 

“அதனால தான் இனி சந்திக்க வேண்டாம் னு சொன்னாளா”, என கிருஷ் ஆச்சரியத்துடன் வினவ,

 

ஆம் என தலையசைத்தாள் அனு.

 

“அவளை சந்திக்க, அவள் விழிகளிலிடம் காதல் பாஷை பேச, எவ்வளவோ ட்ரை பண்ணேன்”, என கிருஷ் கூற,

 

“அவளு தான் உங்ள பாக்காம, உங்கள நினைக்காம இருக்க எவ்வளவோ ட்ரை பண்ணா… ஆனா அது முடியாம போக மனம் எப்போதும் உங்களையே நாட, படிப்பிலும் கவனம் சிதர”,…பீஜி கோச்சிங் கிளாசுல சேந்து, அங்கேயே ஒரு ஹாஸ்டலில் சேர்ந்து படிக்க முயற்சித்தா”, என அனு கூறினாள்.

 

“அவ எங்க னு தெரியாம, நான் பித்து பிடித்தவன் போல அலைந்தேன்… ஒரு பொண்ண லவ் பண்ணி, வேலைய விட்டுட்டு, பொறுப்பில்லாம தெருத்தெருவா அலைவேன் னு நான் கனவுல கூட நினைக்கல”,

 

“ஆனா என் ராதா எல்லாத்தையும் மாத்தினா, நா என்னவிட அவள அதிகமா நேசிக்க துவங்கிய நாட்கள் அவை”.

 

கிருஷ் தன் மனதில் இருப்பதை கூறிக்கொண்டே காரில் ஏறி வண்டியை எடுக்க, அனுவும் அவனையே பார்த்தவாறு ஏற, கார் பறந்தது.

 

“இதோ இந்த மருத்துவமனையில தான் ராதா வேலை செஞ்சா, இங்க நின்னு தான் நாங்க பேசினோம். அன்னிக்கு ஆரஞ்சு கலர்  சுடிதாருல, பச்சை துப்பட்டா போட்டுட்டு, என்றும் மங்காத புன்னகையுடன் இருந்தா என் ராதா”, என்று கிருஷ் மீண்டும் வண்டியை கிளப்பினான்.

 

அனுவுக்கு எதுவும் நினைவில்லை… ஆனால் காட்சிகளை கற்பனையாக ஓட்டி பார்த்துக்கொண்டிருந்தாள்….

 

“எங்க முதல் அறிமுகத்துக்கு காரணமான அந்த திருடன் மூலமா தான் ராதா விலாசத்தை இரண்டு மாதத்துக்கு பிறகு கண்டு பிடிச்சேன்”… என்றான் கிருஷ்

 

“அவன் மூலமாவா”, என அனு வியந்து பார்க்க.

 

“ம்ம்ம்… அவனேதான்… என் ராதா அவனுக்கு சிகிச்சை அளிக்கதோட நில்லாம, ஒரு சூப்பர் மார்க்கெட்டுல வேலை வாங்கி கொடுத்திருந்தா”, …

 

“அவன அங்க எதர்ச்சியா சந்தித்த நான், அவன் மூலமா அவ அட்ரஸ் தெரிஞ்சிக்கிட்டேன்”.

 

“விதியின் விளையாட்டு”, என அனு புன்னகைக்க,

 

“அப்படித்தான் போல”, என்றவன் வேறொரு இடத்தில் காரை நிறுத்தி, “இதோ இந்த இடம்தான்,…. அவள் அந்த பூச்செடிகளுக்குள் ஒரு பூவாக அமர்ந்திருந்தா… ஏதோ வரைந்துட்டு இருந்தா”,

 

“அடர்ந்த தாடியும், மீசையும், சோர்ந்த முகமுமாக, அவளை நோக்கி நான் நடக்க”,

 

“முதல்ல என்ன அடையாளம் கண்டுகொள்ள முடியாம உற்று பார்த்தா, அவ முகத்துல அடுத்த கணம் நான் கண்டது அதிர்ச்சி”,…

 

“என்னை விழி எடுக்காம பார்த்த படி ராதா அங்க அமர்ந்திருக்க”,

 

“அவ பக்கத்துல போய் மண்டியிட்டு அமர்ந்தேன். அருகிலிருந்த சிவப்பு ரோஜா மலரை பரித்து அவளிடம் நீட்டினேன்”,….

 

“ஆனா அவ அந்த மலரை வாங்கிக்கல, மாறாக அவ கண்களில் இருந்து இரண்டு சொட்டு நீர் அந்த மலரில் விழுந்தது”,

 

“ராதா னு நா அவள அழைத்தபோது தான் பாத்தேன் அவ மடியிலிருந்த, அவளால் வரையப்பட்ட ராதை மற்றும் கிருஷ்ணனின் வரைபடத்தை”,…

 

“அதுல ராதையும், கிருஷ்ணனும், ஊஞ்சலில் அமர்ந்திருக்க…. கிருஷ்ணன் குழல் ஊதிக் கொண்டும், ராதை அந்த இசையில் மயங்கியவளாய் கிருஷ்ணனின் தோளில் சாய்ந்திருந்தாள்… இருவரின் முகத்திலும் மின்னிய காதலை என் ராதையின் முகத்திலும் பாத்தேன்… அதுவே எனக்கு ஒரு நிம்மதியை அளிக்க, அந்த ரோஜாவை வரைபடத்தின் மேல வெச்சிட்டு எழுந்தேன்”,…

 

“தன் சுய நிலைக்கு வந்தவளா ராதாவும் எழ”,

 

“ஏன் இப்டி இருக்கீங்க னு கேட்டா”,…

 

“என்ன என்பது போல நான் பார்க்க”,

 

“ஆள் அடையாளமே தெரியல, னு அவ சொல்ல, உன்னால தான் னு நா சொன்ன விதத்துல அவ முகம் வாடிடுச்சு”,

 

“அவ பக்கத்துல  இருந்த ஒரு நோட்ட எடுத்து, வேகமா என போன் நம்பர கிறுக்கிட்டு நான் போக”,

 

“எதுக்கு வந்தீங்க னு அவசரமா கேட்டா, என் ராதா”.

 

“என்னால உன்ன மறக்க முடியல… நீ நம்பினாலும் சரி, இல்லைனாலும் கவலை இல்ல, நான் உன்ன மட்டும்தான் காதலிப்பேன் னு வேகமா சொல்லிட்டு போய்ட்டேன்”… என்றான் கிருஷ்.

 

“அந்த பதில்தான் ராதாவுக்கு நிம்மதிய கொடுத்தது”, என அனு கூற,

 

“தெரியும்…..அன்னிக்கு மாலையே எனக்கு போன் பண்ணா, அப்பரம் இரவு உணவு ஒரு ரெஸ்டாரண்டுல”, என புன்னகைத்தான் கிருஷ்.

 

“பழைய கிருஷ்ணனா ஸ்மார்டா போனேன். எங்க லவ் எல்லா வேண்டா னு சொல்ல தான் கூப்பிட்டாளோ னு கவலை ஒரு புறம் இருந்தாலும், முடித்தவரை இயல்பா பேசினேன்”…

 

“ஒருவழியா அவளும் பேச தொடங்கினா. ‘காதல் தப்பில்ல, ஆனா பார்த்தவுடன் காதலிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல, இருந்தாலும்’, என அவள் தயங்க”,….

 

“சொல்லுங்க, என்றேன் ஆவலுடன்”,….

 

“நா சட்டுனு யாரையும் நம்பிட மாட்டேன். உங்கள தவிர வேற யாராச்சும் இப்படி சொல்லியிருந்தா, அத பெருசா எடுத்திருக்கவே மாட்டேன்”,…..

 

“ஆனா இத என்னால மறுக்கவும் முடியல, மறக்கவும் முடியல…. அதே சமயம் ஏற்கவும் முடியல, என ராதா உணவை பார்த்தே பேச”,

 

“அவ கையை பிடித்து “ஐ லவ் யூ, ராதா”, னு சொன்னேன்”.

 

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும், எதையும் பாக்காம வருதுதான் காதல், ஆனா அப்படி கண்மூடித்தனமா காதலிச்சு, அதனால வரும் விளைவுகள, நாமு சந்திச்சு, நம்ம பெற்றோரையும் வருத்த எனக்கு விருப்பமில்ல, னு சொன்னா”,…

 

“ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளலாம், விருப்பு வெறுப்புகளை தெரிஞ்சு, அத ஏத்துக்கிட்டு காதலிக்கலாம் னு சொன்னேன்”,….

 

“ராதா தலையசைக்கவும், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லுங்க னு நான் கேட்க”, …

 

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் கிருஷ், ஏன் எப்படி னுலாம் தெரியாது, ஆனா பிடிக்கும்…. னு என் கேல்விய நான் கேட்கும் முன்னரே அறிந்து பதில் கொடுத்தா…. அது தான் என் ராதா”, என புன்முறுவலுடன் கூறினான் கிருஷ்.

 

“அப்புரம் ஏன் சொல்லாம கொள்ளாம போய்டீங்க னு நான் கேட்க”,..

 

“என் மனசுக்கு கடிவாளமிட, உங்க காதல சோதிக்க, இப்படி பல காரணங்கள் னு ராதா சொன்ன”,…

 

“நான் ஜெய்சுட்டேனா, னு கேட்டேன்”,.. 

 

“ம்ம்ம்… ஆனா நான் தான், என் முயற்சியில தோத்துட்டேன் னு சினுங்கினா”..

 

“யார் வென்றாலும், தோற்றாலும், வெல்லப்போவது நம்ம காதல் தான் னு நான் சொன்னேன்”, என்று கிருஷ் கூறி முடிப்பதற்குள்,

 

மலமலவென சிரித்த அனு, “இப்படியெல்லாம் பேச எங்க கத்துக்கிட்டீங்க”, என வினவினாள்.

 

அவளது சிரிப்பை ரசித்து பார்த்திருந்தவன், “லவ் யூ ராதா” என்றான் தன்னை மறந்தவனாய்.

 

சட்டென சிரிப்பை நிறுத்தி, அவனை முறைத்தவள், அவனது கண்கள் இவளை  ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்க… முகத்தை திருப்பி “போகலாமா”… என வினவினாள்.

 

தொடரும்…..

Advertisement