Advertisement

நிமிடங்கள் யுகங்களாய் கடந்தன கிருஷிற்கு… ராதா அதாவது அனுராதாவின் வரவிற்காக தவமாய் கிடந்தான்…

 

அவளிடம் தொடர்புகொள்ளவும் இயலவில்லை… அவனிடம் அடியோடு பேச மறுத்து, அவனை சந்திக்கவும் மறுத்து, அவளது அம்மா வீட்டிற்கு சென்றாள் அனு.

 

அனுவின் தாய், தந்தை, ஏன் அவளது அண்ணி கூட ரகுவுடன் இணைந்து கிருஷ் கூறுவது உண்மையே என்றனர்… 

 

என்ன செய்வதென்று அறியாது பெரும் குழப்பத்தில் மீண்டும் தனிமையை நாடி தனது அறைக்குள் தன்னை பூட்டிக் கொண்டாள் அனு.

 

அந்த ஒரு மாத கால தனிமையில், அனைத்தையும் சிந்தித்தாள்.

 

தனிமை அவளை வாட்டவில்லை, ஆனால் கிருஷின் பிரிவு, அவளை வாட்டியது. 

 

அவன் கூறிய அந்த ஆறு மாத கால காதல் நினைவில் இல்லை, ஆனால் இந்த ஆறு மாத கால நட்பை அவளால் மறக்க இயலவில்லை.

 

எவ்வளவோ முயன்றும், அவளால் கிருஷை வெறுக்க இயலவில்லை.

 

கிருஷை மறந்து படிப்பை பார்க்கலாம் என்றால், அவளால் அதுவும் இயலவில்லை… நினைவு முழுவதும் கிருஷ்ணனே இருந்தான்.

 

ஒரு மாதம் கழிந்தது… பொறுக்கமாட்டாமல் அனுவை நாடி சென்றான் கிருஷ்.

 

அவனைக் கண்டதும் அவனிடம் ஓடி வந்த அனு, “என்ன பாக்க வர இவ்வளோ நாட்கள் ஏன்”, என்றாள்.

 

“ராதா”, என அவன் ஆசையாய் அழைக்க,

 

“வேண்டாம் கிருஷ்… நான் உங்க பிரண்ட் அனுதான்”, என்றாள் உறுதியாக.

 

“இல்லை நீ என் ராதா தான்”, என்றான் அவனும், அதே உறுதியுடன்.

 

அனு முறைக்க,

 

“சரி… என் காதல் கதைய இப்பயாவது கேட்பியா”, என அவன் வினவ,

 

மௌனமே பதிலாய் கிடைத்தது…

 

“எல்லாரும் அவங்க காதல் கதைய பிரண்ட்ஸ் கிட்ட சொல்வாங்க, சிலர் அவங்க உடன் பிறந்தவரிடம் சொல்வாங்க, அனைவரும் காலம் வந்தபின் பெற்றோரிடம் சொல்வாங்க…. ஆனா இங்க முதல்முறையா ஒரு காதலன் தன் காதலி கிட்ட, அவங்க காதல் கதைய சொல்ல போறான்”, என்றான்.

 

“சரிங்க கிருஷ், கதைய சொல்லுங்க… ஆனா நான் அத ஏற்கும் வர என்ன அனு னு தான் கூப்டனும்”, என்றாள்.

 

அவன் சரியென தலையசைக்க…

 

அவள் அதுவரை காணாத அவளது மெடிக்கல் ரேகார்ட்ஸ் அனைத்தும் அவளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை அலசி ஆராய்ந்தவள், உணர்ச்சியற்ற முகத்துடனே அமர்ந்திருந்தாள்.

 

“என்ன அனு, ஏன் இப்டி இருக்க”, என கிருஷ் வினவியபோது தான் வாயை திறந்தாள்…

 

அவன் அவளை அனு என்று அழைக்க, தனது கிருஷ் கிடைத்துவிட்ட நிம்மதியில் மனதில் இருப்பதை உரைத்தாள். 

 

‘நான் உன்ன நம்புறேன் கிருஷ், ஆனா அந்த உண்மைகள ஏற்க தான் முடியல”, என அவள் கூற,

 

“நீ இன்னும் எதையும் முழுசா தெரிஞ்சிக்கல அனு… என் காதல பற்றி, என் ராதைய பற்றி, சொல்றேன்… என் பிரண்ட் அனுவாவே நீ அத கேளு, வேறு எதுவும் யோசிக்காத”, என்றான் கணிவாக.

 

°°°°°°°°°°°°

“என்ன இடம் இது கிருஷ், எல்லா வீடுமே கலையா இருக்கு”, என அனு பார்க்க,

 

அது கேரளம்… அங்கு உள்ள ஒரு அழகிய தெருவில் தான் இருவரும் நின்று கொண்டிருந்தனர்…

 

சிறு புன்னகையுடன், “இதோ இதுதான் என் ராதை தங்கியிருந்த வீடு, இங்கிருந்து தான் தினமும் ஹாஸ்பிடலுக்கும், நூலகத்துக்கும் போவா”, என்றான் கிருஷ், அவளது கண்களையே பார்த்தவாறு..

 

‘என்ன பார்க்கறீங்க’, என்பது போல அனு பார்க்க,

 

“இப்பல்லாம் ஏன் கண்ணுக்கு மை போடறதில்ல”, என்றான் கேல்வியாய்.

 

“ஏனோ தோனல”, என்றவள் “கதைய சொல்லுங்க”, என்றாள்.

 

“அதோ ராதையின் விட்டுக்கு எதிர்ப்புறம் இருக்கே, அதுதான் என் வீடு. ஒருநாள் காலை ஜாகிங் செய்ய வெளிய வந்தப்ப தான் என் ராதைய பர்ஸ்ட் டைம் பார்த்தேன்… ரெட் சுடிதாரில், ரோஜா போல அழகான தேவதை மாதிரி இருந்தா”, என்றான், பழைய கணவுகளில் மூழ்கியவனாய்.

 

“கண்டதும் காதலா”, என அனு தயங்கியவாரே கேட்க,

 

மலர்ந்த புன்னகையுடன் தலையசைத்தவன், “அவளது மையிட்ட விழிகள் என்னைக் காண, அதில் தொலைத்தேன் என்னை”, என்றான்.

 

ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவள், “இதுக்கு பெயர் அட்ராக்ஷன்”, என கூற,

 

“உண்ம தான்… அந்த அட்ராக்ஷன் தான், தினமு காலை அவளை பாக்க அவள் வெளிவரும் சமயம் பாத்து ஜாக்கிங் செய்ய உந்துதலா இருந்தது”,…

 

கலகலவென்று அனு சிரிப்பதை கண்டவன், “எதுக்கு இந்த சிரிப்பு”, என கேட்க,

 

“நீங்க அவள பாக்கனும் னு வந்தீங்கலா”, என மீண்டும் சிரித்தவள், “ராதா தான் உங்கள பாக்கனும் னு வந்தா”, என்றாள்.

 

“புரியலையே”, என கூறியவன், அனுவிற்கு பழைய நினைவுகள் வந்து விட்டதோ என்று ஆனந்த சிந்தனையில் மூழ்கினான்…

 

“நீங்க ராதா டைரிய படிக்கலையா… உங்ககிட்ட தான இவ்வளோ நாள் இருந்துச்சு”, என சந்தேகமாக பார்த்தாள்.

 

“என் ராதா யாருக்கும் அந்த அதிகாரத்த தர மாட்டா, அவளுக்கு அது பிடிக்காது… அதனால படிக்கல அனு”, என்றான் கிருஷ். 

 

அவளுக்கு பழையது நியாபகம் இல்லை, டைரியை வைத்து தான் பேசுகிறாள் என்பது புரிந்து சற்று ஏமாற்றம் அடைந்தான் கிருஷ்.

 

“ராதா தான் உங்கள பாக்கனும் னு, நீங்க வழக்கமா ஜாகிங் செய்யும் நேரம் பார்த்து வந்தா… அவளோட அந்த வீட்டுல இருந்த பிரண்ட்ஸ், உங்க இலவச மருத்துவ சேவைய பற்றி எப்படியோ தெரிந்து அனுகிட்ட சொல்ல”,

 

“உங்கள பாக்கனும் ங்கற ஆர்வத்துல தான் தினசரி காலை ஆறரை மணிக்கெல்லா நீங்க ஜாகிங் கிளம்புவத பார்த்து, வழக்கம்போல ஏழு மணிக்கு ஹாஸ்பிட்டலுக்கு காருல  கிழம்பாம, அன்று முதல் முறையா சரியா

ஆறரை மணிக்கு நடக்க தொடங்கினா அதையே வழக்கப்படுத்திக்கிட்டா”…

 

“அப்படியா… இத ராதா என்கிட்ட சொல்லவே இல்ல… கல்லி”, என அவன் சொல்லமாய் கடிந்து கொண்டான்.

 

“பாக்கணும் ங்கற ஆசை தான், காதல் எல்லாம் இல்ல”, என குரல் கம்மியவாறு கூறினாள் அனு…

 

“அததான் நான் வர வெச்சன்ல”, என்றான் ஓர பார்வை பார்த்தவாறு,

 

“சரி மேலே சொல்லுங்க”,….

 

“என் ஜாக்கிங்க வாக்கிங்கா மாத்தி, ராதா பின்னாடி போக, அவ ஒர்க் பன்ற ஹாஸ்பிட்டல தெரிஞ்சி கிட்டேன், அவ டாக்டர் னும் தெரிஞ்சி கிட்டேன்”, என்றான்.

 

“ஆனா எப்டி பேசுறது, தானா பேச போய் தப்பா எடுத்துக்கிட்டா என்ன செய்றது னு நினச்சிட்டு இருக்க”,…

 

“இறைவனே ஒரு வழி செய்தார்… வழக்கம்போல அன்னிக்கும் அவள சைட் அடிச்சிட்டே, நான் வாக்கிங் போக, எங்கிருந்தோ வந்த ஒருத்தன், அவளது ஹேண்ட் பேக்கை பிடுங்கிட்டு ஓடத் தொடங்கினான்”, என்றான்.

 

“கிடச்சுது சான்ஸ் னு அவன துரத்திப் பிடிச்சு ஓங்கி ஒரு அரை விட, தூரம் போய் விழுந்தான் அவன். ஹேண்ட் பேக்கை பிடுங்கி ஒருவழியா நா அவகிட்ட சேர்க்க”,…

 

“அவ பஸ்ட் டைம் என்ன பார்த்து சிரிச்சா… சேம பீலிங்கா இருத்துச்சு”, என்றான் கிருஷ்.

 

“சடன்னா தூரத்துல விழுந்து கிடந்த திருடன் கிட்ட ஓடினா”…

 

“அப்போதான் கவனிச்சேன், அவனோட பின் மண்டையிலிருந்து ரத்தம் கசிய, வலியில துடிச்சிட்டு இருந்தான்”…

 

“ராதா அவனுக்கு முதலுதவி செய்ய, நான் என் காரை எடுத்துக்கிட்டு வந்தேன்”,…

 

“எல்லாருமா அவ ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பினோம். என்னோட முகம் சீரியசா இருக்கறத பாத்த ராதா”,

 

“மண்டையில தோல் கிழிஞ்சிருக்கு, தையல் போட்டா சரியாகிடும். பயப்பட வேண்டாம் னு சொன்னா. அவ என்கிட்ட பேசுன பஸ்ட் வரி”, என கிருஷ் புன்னகைத்த வாரே கூறினான்.

 

“என் கிட்டயா பேசினா!!!!”, னு சந்தேகத்துல நான் அவள பாக்க, 

 

“போவோமா னு அவள் வினவிய கணம், என் மனசுல தோன்றிய பதில் ஒன்றாக செல்வோமே வாழ்க்கை முழுவதும் என்பதுதான்”,….

 

“ஆனா வெளிய தலைய மட்டும் ஆட்டிட்டு, அந்தத் திருட்டு மடையன ஹாஸ்பிடல்ல சேர்த்தோம். அங்கிருந்த டாக்டர்ஸ் அவன கவனிக்க”,…

 

“அனு என்ன பாக்க வந்தா… ‘சாரி என்னால தான் உங்களுக்கு வீண் சிரமம்’, னு என்னவோ சொன்னா… ஆனா எனக்கோ அவ பேசுறது எதுவு காதுல விழல… காதல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவனா

அவளது முக பாவனைகளில், பேசும் விழிகளில் என்னை மறந்து நின்றேன்”, என்றான் கிருஷ் கவிஞனாக.

 

“ம்ம்ம்… அவளு தான், சலனமற்ற அவ மனசுல உங்க பார்வ ஏதோ ஒரு மாற்றத்த உருவாக்க, உங்க கிட்ட இருந்து விலக நினச்சா”, என்றாள் அனு.

 

“ஏதோ ஓர் மாற்றம் னா??… தெளிவா சொல்லு”, என்றான், குரலில் குறும்பும், குழப்பமுமாய்.

 

“Infactuation”, என்று, கூறினாள் அனு.

 

“ஓஓ… அதனால தான் அவள் சினிங்கினாளா, ஆனா நான் விடலையே” என்றான் கிருஷ்.

 

“அவ கூட இருக்க நேரத்த அதிகரிக்க, என் பெயர் கிருஷ்… கிருஷ்ணா… னு சொன்னேன்”, என்றான் கிருஷ்.

 

“வேற வழியில்லாம… தனது பெயர் அனு… அனுராதா னு ராதா சொன்னா”, என்றாள் அனு.

 

“அதற்குமேல்!” … என  அவன் வினவ.

 

“உங்கள பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துல உங்க வேலைய பற்றி கேட்டாள்”, என்றாள் அனு. 

 

“ம்ம்ம்… இப்படியே இரண்டு பேரும் அரைமணிநேரம் அந்த ஹாஸ்பிடல் வெளியில நின்னு பேசிட்டு இருந்தோம்”, என்றான் கிருஷ்.

 

“பிறகு டூட்டி டைம் என அவள் சென்றுவிட்டாள்”, என்றாள் அனு.

 

“மறுநாள் விடியலை, நான் எதிர் நோக்கி காத்திருக்க”, என அவன் பெருமூச்சுடன் கூறினான்…

 

“ராதா வரவே இல்லை”, என்று முடித்தாள் அனு.

 

“ஏன்”, என்றான்.

 

“உங்களால மனம் அலைப்பாய, அத விருப்பாம அதுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினா”, என்றாள்.

 

“ஆனா நான் விடவிலையே”, என அவன் கூற,

 

“அதுதான் தெரியுமே… அவ வீட்டுக்கே போய், அவ மனசுல நீங்காத இடம் பிடித்தீங்க”, என அனு சலித்துக் கொண்டாள்.

 

புன்னகைத்தவன்… “ஒருவாரம் அவள பாக்க முடியாம, நான் துடித்த துடிப்பு எனக்கு தானே தெரியும்”, என்றான்.

தொடரும்….

Advertisement