Advertisement

“இதே இடத்துல, இதே நாளுல, இதே நேரத்துல, இரண்டு வருடத்துக்கு முன்ன என் கிட்ட உன் காதல சொன்ன அனு”,… என கிருஷ் கூற, 

 

“என்ன கிருஷ்… நடக்காத ஒண்ண நடந்தது னு ஏன் பொய் சொல்றீங்க…”, என அனு கலவரமாக வினவினாள்.

 

“எல்லாம் உண்மை தான் ராதா… நீ அந்த ஆறுமாதம் நடந்த அனைத்தையும் மறந்துட்ட”, என்றான் கிருஷ்.

 

“போதும் பிலீஸ்”,… என அவள் அங்கிருந்த ஒரு நாற்காலியில் சரிய,

 

அவள் முன் ஒரு டைரியை வைத்தான் கிருஷ், “இது உன்னுடையது… அந்த ஆறு மாத நினைவுகளை உன் கைபட, நீ எழுதியது” என்றான் அவன்.

 

அதை வேகமாக எழுத்து புரட்டியவள், அது அவளது கையெழுத்து தான் என்பதை தெளிவு செய்தாள். அவள் சிறு வயது முதலே டைரி எழுதும் பழக்கத்தை கொண்டவள்… எழுதியதை ஒரு பொக்கிஷம் போல் பத்திரமாக வைத்துக் கொள்வாள்… ஆனால் அந்த வருடம் எழுதியதை எங்கு வைத்தாள் என்று தெரியாமல் தேடியது அவளது நினைவில் வர, அது அவளுடையதே என்பதை உறுதி செய்தாள்.

 

அவள் ஒவ்வொரு டைரியின் கடைசி பக்கங்களிலும், அந்த வருடம் எடுக்கப்பட்ட… அவளுக்கு பிடித்த புகைப்படங்களை ஒட்டி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

 

அதனால் அந்த தைரியிம் கடைசி பக்கத்தை முதலில் எடுத்துப் பார்த்தாள்.. அதில் அவள் எண்ணியது போலவே நிறைய புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

 

அத்தனையிலும் இருந்தது இரு உருவங்களே, அந்த இரு உருவங்களும் இணைந்தே காட்சியளித்தது… அது ராதை மற்றும் கிருஷ்ணனின் படங்கள். இரு வருடம் முன்பு எடுக்கப்பட்ட படங்கள்…

 

ஒன்றும் புரியாமல் அந்த டைரியை மூடிவைத்துவிட்டு கிருஷ்ணனை பார்த்தாள் அனு (அனுராதா)… அவளது முகத்தில் நடந்ததை அறிந்து கொள்ளும் தவிப்பும், குழப்பமும் நிறைந்து இருந்தது.

 

“இந்த…  இந்த… போட்டோஸ் எப்போ எடுத்தது, இது உண்மைதானா”, என அவள் வார்த்தைகளை உதிர்க்க…

 

“எல்லாமே உண்மை அனு… இரண்டு வருஷத்துக்கு முன் நாம சந்தித்தது… பின் ஒருவரையொருவர் நேசித்தது…என எல்லாமே உண்மை தான்”…

 

“எப்படி சாத்தியம்…  எனக்கு எதுவும்…” எனக் கூறியவாறு, தனது மண்டையில் கைவைத்தாள் அனு.

 

“உனக்கு தெரியாததில்ல ராதா”,…..

 

“போதும் கிருஷ்… என்ன ராதா னு சொல்லாதீங்க”, என கத்தியவள்

“அந்த ஆறு மாதம் நான் கோமாவுல  இருந்தேன், இதெல்லா எப்டி நடந்திருக்கும்”,…

 

“பொய் ராதா… கோமாவுல இருந்தது நீ இல்ல நான் தான், ஒருவருடம் முழுசா கோமாவுல இருந்தேன்… இல்லன்னா நீ வேற ஒருவர கல்யாணம் பண்ணிக்க விட்டிருப்பேனா”, என்றான்.

 

அனு புரியாமல் பார்க்க,…

 

“நீ கோமாவுல இருந்ததா சொன்ன அந்த ஆறு மாசம் நீ இங்க தான் இருந்த, பின் நடந்த ஒரு பெரிய கார் விபத்தால.. நான் தான் கோமாவுல இருந்தேன்… நீ பயங்கர காயத்தோட சில மாசம் முன்னாடி நடந்தத எல்லாம் மறந்துட்ட…

நம்ம காதலையும்”, என்றான் கிருஷ்.

 

“இது என்ன புது கதை”, என்று அவள் கடுகடுக்க,

 

“கதையல்ல ராதா…நிஜம்”,

 

எதையும் நம்ப இயலாமல் அனு மனமுடைந்து அமர்ந்திருக்க…

 

கதவு தட்டும் சத்தம் கேட்டு, கிருஷ் கதவைத் திறக்க சென்றான்.

 

‘நடப்பது அனைத்தும் உண்மை தானா… இல்ல  கணவா…விபத்து நடந்தது உண்மைதான்… ஒருவழியா உயிர்தப்பி, என் சுய நினைவ அடைந்தப்புரம், நான் கோமாவுல இருந்ததா சொன்னாங்களே… அவங்க  பொய் சொன்னாங்களா”, என குழம்பினாள் அனு.

 

அதற்குள் திரும்பி வந்த கிருஷ், ரகுவுடன் வர,

 

“ரகு… நீ எப்டி இங்க”, என்று கலங்கிய குரலில் கேட்டாள் அனுராதா.

 

அவள் கையை பிடித்தவன், எதுவும் கூறாமல் அவளையே பார்க்க…

 

“கிருஷ் என்ன சொன்னார் தெரியுமா ரகு”, என அவள் கலங்க…

 

“தெரியும் அனு, அது அனைத்தும் உண்மைதான்”, என்றான் ரகு.

 

“அப்படினா நா கோமாவுல இருந்தது”…

 

“பொய் அனு”…

 

“ஆனா ஏன் னா”,…

 

“உன்னோட வாழ்க்க நல்லாருக்க, அப்ப அப்டி சொல்ல வேண்டியதாய்டுச்சு அனு”…

 

“விபத்து நடந்து கொஞ்ச நாட்கள்ல, நீ சுயநினைவுக்கு வந்துட்ட, ஆனா கிருஷ் கண் திறக்கல. அவன் பிழைப்பதே கஷ்டம் னு சொன்னாங்க”,…

 

“அப்படி னா… நானும் கிருஷும் காதலித்தது உண்மையா!!!!”.

 

“ஆமா டா”, என்றான் ரகு.

 

“உனக்கு ஆச்சிடேன்ட் னு நேர்ந்ததும், நாங்க பதறிட்டு வந்தோம். அப்போதான் தெரிந்தது, அது ஒரு கார் விபத்துனும், அதில் உன்னோட பயணித்தவங்க கிருஷ் னும்”,….

 

“யார் அந்த கிருஷ் னு விசாரிக்கையில தான், உங்க பிரண்ட்ஸ் மூலமா உங்க காதல் பற்றி தெரிஞ்சது”,….

 

“கிருஷ் பிழைக்க மாட்டான் னு தெரிஞ்சதும், அவர வேற பெரிய ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க… நீ கண் முழிச்சதும், உனக்கு ஒரு வருஷம் நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை னு சொன்னதும், கிருஷ் பத்தி ஞாபகப்படுத்தி, உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம் னு நீ கோமாவுல இருந்ததா, உனக்கு பாத்த டாக்டர், அந்த கனந்தன் உன் கிட்ட சொல்லிட்டான். அப்புரம் தான் உன் லவ் விஷயம், மெடிக்கல் பிராபுலம்… இதுக்கெல்லாம் பயந்து, உன்ன அத்தை பொண்ணு கேட்டவுடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம், உன்ன பத்தி எல்லா தெரிஞ்ச கனந்தன் உன்ன நல்லா பாத்துக்குவார் னு நம்புனோம்…. சாரி மா” என்றான் ரகு.

 

மூச்சு முட்டிக் கொண்டு வந்தது அனுவிற்கு… சற்று நேரம் அமைதியாய் அமர்ந்தவள், “உண்மைய சொல் ரகு, இது நாடகம் தான… நான் வேற திருமணம் செஞ்சிக்கனும் னு இப்படி சொல்றீங்க…போதும் உங்க நாடகம்”, என்றாள் ஆத்திரமாக.

 

ரகு வாயடைத்து பார்க்க…

 

கிரிஷிடம் திரும்பினாள்… “என்னோட பிரண்டாகி, எனக்கு ஹெல்ப் பண்ணி, என்னோட அன்பையும், நம்பிக்கையும், சம்பாரிச்சதெல்லாம் இதுக்காகவா… என்ன ஒரு நாடகம்”, என ஆத்திரத்தில் கத்தினாள்.

 

“இல்ல ராதா”, என கிருஷ் அருகில் வர, 

 

“போதும் நிறுத்துங்க… என்ன ராதா னு யாரும் சொன்னதில்ல… ஏன் நீங்க கூட வார்த்தைக்கு வார்த்தை அனு னு தான கூப்டுவிங்க. இப்போ எங்கிருந்து வந்தா இந்த ராதா”, என்று மீண்டும் கத்தினாள்.

 

“என்னம்மா இது, நான் உன்ன ஏமாத்துவேனா”, என்று ரகு வர,

 

“இதுக்கெல்லாம் பேர் என்ன னா”,… என்றாள் வெறுப்பாக.

 

“அனு ப்ளீஸ்… கொஞ்சம் நா சொல்றத கேளு”, என்றான் கிருஷ் கலவரமான முகத்துடன். 

 

“இனி எதையும் கேட்க நான் தயாரா இல்ல கிருஷ்… நீங்க எனக்கு செய்தது ஏமாற்றம் மட்டுமல்ல, நம்பிக்கை துரோகம், என்னால இத ஏற்க முடியாது”, என்று கண்ணீர் மல்க அனு கூறினாள்.

 

‘இவள் இப்படி நினைப்பாள் என நான் சிந்திக்கவே இல்லையே… தவறு செய்து விட்டோமோ”, என கிருஷ் எண்ண…

 

“தயவு செய்து என்ன இங்க இருந்து கூட்டிட்டு போ ரகு”, என சோர்வான குரலில் கூறினாள்.

 

“இல்ல அனு, கொஞ்சம் பொறுமையா யோசி… உன் டைரிய பாரு… புரியும்”, என்று அவள் எழுதியதாக கூறிய டைரியை எடுத்துக் கொடுத்தான் ரகு.

 

“இதுவும் பொய் தான”, என்றாள் அனு.

 

“அனு இது சத்தியம்… உங்க காதல் உண்மை”, என்றான் ரகு விடாமல்.

 

“விடுங்க ரகு, நிச்சயம் என் அனுவுக்கு, என் ராதா, எங்க காதல் எல்லாமே ஞாபகம் வரும்.. அதுவரை நான் காத்திருப்பேன்”, என்றான் கிருஷ் 

 

கலங்கிய கண்களுடன், வாடிய முகத்துடன், அவனருகே சென்ற அனு… “ஏன் கிருஷ்ணா, இப்டி செஞ்சிங்க. உங்கள நான் எவ்வளோ நம்பினேன்… நீங்க தான் மை பர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் பிரின்ட்… இப்போ ஒரே நாலுல எல்லாமே பொய்யாக்கீட்டீங்களே”, என்றாள் வருத்தமான குரலில்.

 

“என்னோட காதலி ராதா வா என்ன பிரிஞ்ச நீ, இரண்டு வருஷம் கழிச்சு, அனுவா திரும்பி வந்த,… எனக்கு எல்லாமே நீதான் அனு… நீ மட்டும் தான்”, என்றான் கிருஷ்.

 

“இல்ல… இதை எல்லாம் என் மனம் ஏற்கல… வா ரகு போகலாம்”, என்று இரண்டு படிகள் எடுத்து வைத்தவள்… ஒரு கணம் திரும்பி கிருஷை பார்த்தாள்… இருவரின் கண்களிலும் கண்ணீர் வெள்ளம் போல் பெருகியது.

 

பின்… ‘ப்ளீஸ் கிருஷ், நீங்க கூறியது பொய் னு சொல்லிடுங்க… இப்போவே உங்க தோழி அனுவா ஓடி வந்திடறேன்”, என்று மனதுக்குள் ஏங்கினாள் அனு.

 

“நீ என் காதலி ராதாவா திரும்பி வரும் வரை உனக்காக காத்திருப்பேன் அனு”, என்று மனதுக்குள் கூறினான் கிருஷ்.

 

தொடரும்….

Advertisement