Advertisement

அனுவின் கைகளை பிடித்த கிருஷ், பிடியை இருக்கி… ” மனசுல இருக்கறது எல்லாத்தையும் அப்படியே  கொட்டிடு அனு… இதுக்கப்புரம் இத நினச்சு நீ கலங்வே கூடாது”, என்றான்.

லேசாக தலையசைத்துவிட்டு, “எவ்வளவோ உயிர காக்க முடிந்ததும், என் குழந்தைய என்னால காப்பாத்த முடியல… ஜாக்கிரதையா இருந்திருக்கனும் நான்… அண்ணன் வர வரைக்கும் கனந்தன பத்தி யார் கிட்டயும் சொல்லாம அவனோட வீட்டுல இருந்தது தப்புன்னு அப்ப தான் எனக்கு புரிஞ்சது”, …

“என்னாலேயே என்னை மன்னிக்க முடியாது கிருஷ்”, என்று தேம்பி தேம்பி அழுத அனுவை வார்த்தையால் தேற்ற முடியாது என்று அறிந்த கிருஷ், தனது தோழோடு அவளை அணைத்துக்கொண்டான்… அவளும் ஆறுதலாய் சாய்ந்துகொண்டாள்… இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக்கின….

அனுவின் இந்த வேதனையை கிருஷால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை…

“நான் நடந்தது எல்லாத்தையும் ஒண்ணுவிடாம இரு குடும்பத்தினரிடமும் சொன்னேன் அத்தையும், அண்ணியும், கனந்தன் பத்திய உண்மை தெரிந்ததால நீயே கருவ கலச்சுட்ட னு மோசமா பேசினாங்க”,..

“என் அம்மா… மனசலவுல நொந்தாலும்… கரு தானா கலஞ்சிருக்கு னு டாக்டர் சொன்னாங்க மா…. கனந்தன் இனி திருந்தி வாழ்றேன் னு என் கால்ல விழுந்து அழறார்… சேர்ந்து வாழ முயற்சி டா… “, என்றார்

“என்கிட்ட  நான்தான் அழிச்சேன், உன் நன்மைக்காகத்தான்… என கதை விட்டவன், மத்தவிங்க கிட்ட நான் இல்லை னு சாதித்தான்… அனு சம்மதித்தா அவளுடன் சேர்த்து வாழ சம்மதம் னு சொன்னான்”,…

“இத்தனையும் நடந்த போது, அண்ணன் முக்கியமான வேலையா வெளிநாட்டுல இருந்ததால என்னால அவன தொடர்பு கொள்ள முடியல, அவன் மட்டும் இருந்திருந்தா”,…. என கலங்கியவள்… மேலும் பேச துவங்கினாள்…

“வீட்டுல இருந்ததா எதையாவது சொல்லி என்ன எல்லாரும் காயப்படுத்துவாங்க னு அண்ணன் தான் அங்க அனுப்பி வைத்தான்”,…

“அப்புரம் தான் உங்கள சந்திச்சேன்”, என்று முடித்துவிட்டாள்.

கிருஷினால் எதையுமே பேச இயலவில்லை…. அனுவின் சோகத்தில் ஊமையாகிப் போனான்…

“என் கதை முடிந்தது கிருஷ்…. கேரளா வந்து ஒரு நாளே போய்டுச்சு, நாம எப்போ ராதைய பாக்க போறோம்”, என அனு அவளாகவே பேச்சை மாற்ற,

 

“நாளைக்கு மார்னிங்….. ராதா என்கிட்ட காதல் சொன்ன இடத்துல அவள சந்திக்கலாம்”, என்றான்….

 

கிருஷின் மனம் அனுவின் கதையில் ஒருபுறம் கணக்க, மறுநாளை குறித்த கவலை அவனை வெகுவாக வருத்தத் துவங்கியது.

 

அதற்குமேல் பேச இயலாமல் இருவரும்  மௌனமாகினர்.

 

வாடிய இருவரின் மனமும் அந்த மௌனத்தில் அமைதி அடைய… இருவரின் அருகாமையில் லேசானது…

 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

 

“அனு… நாம இன்னிக்கு ட்ரெக்கிங் போக போறோம்… மலையில ஏற போறோம்… அதுக்கு தயாரா இருங்க”, என்றான் சந்துரு.

 

“ட்ரெக்கிங் கா!!! அது எதுக்கு சந்துரு… இன்னிக்கு ராதைய பாக்க போவதா கிருஷ் சொன்னாரே”, என அவள் வினவ,

 

“அட… ராதாவ பாக்க தான்”, என்றான் சந்துரு.

 

“ராதா மலையிலையா இருக்காங்க”, என குழப்பமாக வினவினாள் அனு…

 

“ஆம அனு, மலையில ஸ்டே பண்ண சில இடங்கள் இருக்கு அங்கதான், ராதா இருக்காங்க”, என்றான் சந்துரு இறுக்கமான குரலில்.

 

“எதுக்காக அங்க இருக்காங்க, அங்க என்ன செய்றாங்க”, என்று அனு குழப்பமாக வினவ,

 

“அதுதான் நான் நேத்தே சொன்னன்ல அனு, ராதா அவ காதல் ல என்கிட்ட சொன்ன இடத்துல அவள சந்திக்க போறேன் னு… அதுக்காக தான், அவள் அங்க போயிருக்கா”, என்றான் கிருஷ்.

 

“ஓ … சரி சரி…”, என அனு வேகமாக கிழம்பி வர,

 

மூவருமாய் ட்ரெக்கிங் செல்ல துவங்கினர்… சந்துருவும், கிரிஷும் ஈசியாக மலையில் ஏற, தட்டுத்தடுமாறி மிகுந்த சிரமத்துடனே மலையில் ஏறினாள் அனு…

 

அன்று நாள் துவங்கியதிலிருந்து கிருஷ் அதிகம் பேசவில்லை, மிகவும் இறுக்கமான முகத்துடனேயே இருந்தான்…

 

சந்துரு எளிதாக ஏறி விரைந்து செல்ல… அனுவுக்கு உதவிகொண்டு அவளுடனே மெதுவாய் அடிகளை எடுத்து வைத்தான் கிருஷ்.

 

“ஏன் கிருஷ், இவ்வளோ டென்ஷன்…”, என்றாள் அனு, அவனை உணர்ந்தவளாய்….

 

“ராதா என்ன கல்யாணம் பண்ணிக்க மறுத்துட்டா என்னால அத ஏத்துக்கவே முடியாது அனு. அவள் இல்லாத வாழ்க்க என்ன பொறுத்தவரை நரகமே”…என்றான் 

 

“ஏன் இப்டி நெகட்டிவா பேசுறீங்க… சரி நான் கேட்கறதுக்கு பதில் சொல்லுங்க”,….

 

“உங்களுக்கு ராதா மேல இருக்க காதல் உண்மைதானா”, என்றாள் அனு…

 

“நிச்சயமா”,…என்றான் கிருஷ்.

 

“ராதாக்கு”… என்று கேட்க வந்தவளை இடைமறுத்து,

 

“அவ என் மேல வெச்சிருக்க காதலுக்கு அளவே இல்ல அனு”, என்றான் கிருஷ் உறுதியாக.

 

ஒரு நிமிடம் அவனது உறுதியான பதிலில் வியந்து தெழிந்த அனு, “பிறகெதுக்கு உங்களுக்கு இந்த சந்தேகம் கிருஷ்…. நிச்சயம் ராதா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்க”, என்றாள் அழகிய சிரிப்புடன்.

 

“நிச்சயமா வா”, என்றான்….

 

“சத்தியமா…. அது என் பொருப்பு”, என்றாள் அனு…

 

அந்த இறுக்கமான முகத்திலும், சிறு புன்னகையை புரிந்தவன், மேலே நடந்தான்…

 

 “நாம பக்கத்துல வந்துட்டோம், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்காலாம்”, என ஒரு மரத்தின் அருகில் அமர்ந்த சந்துரு, வேகமாக தனது பையை திறந்து தண்ணீரையும் ஜூஸ்சையும் பருக….

 

அனுவும் மிகுந்த களைப்பில் இருந்ததால், சற்று  இளைப்பாறி கொண்டாள்…. 

 

ஆனால் கிருஷினால் அமரவும் இயலவில்லை, உண்ணவும் இயலவில்லை, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்…

 

அவனது தவிப்பை உணர்ந்த அனுவும், சந்துருவும், வேகமாக ஜூசை குடித்து எழுந்தனர்…

 

“அதோ அங்க பாருங்க… மர வீடு… நான் இத இப்பதான் நேர்ல பாக்குறேன், எவ்வளோ அழகா இருக்கு”, என்று அனு, தூரத்தில் தெரிந்த அந்த வீட்டை சுட்டிக்காட்ட…

 

“அங்க தான் என் ராதா இருக்கா”, என்ற கிருஷ்ணனின் குரல் தழுதழுத்தது…

 

பின் மூவரும் அந்த வீட்டின் அருகில் சென்றனர்…

 

“முதல்ல நீ போ கிருஷ்”, என்றான் சந்துரு.

 

கிருஷ் மர படிகளை ஒவ்வொன்றாய் கடந்தான்… அவனது இதயத்துடிப்பு அதிகரித்தது… அதை ஒருவாராக சமாளித்துக்கொண்டு வீட்டினுள் தான் மட்டும் சென்றவன், அடுத்த பதினைந்து நிமிடத்தில் அனுவை மேலே அழைத்தான்…

 

ராதையை காணும் ஆர்வத்தோடு அனுவும் மேலே சென்றாள்…

 

அங்கு கிருஷ் மட்டும் நிற்க, “எங்கே ராதா”, என்று வினவினாள்…

 

அந்த அறையில் என்று கைகளால் சுட்டி காட்டினான் கிருஷ்…

 

அந்த அறையை நோக்கி வேகமாய் நகர்ந்தவளை, அவளது கையை பிடித்து தடுத்தவன்…. ஒரு ஏக்கமான பார்வையோடு “ராதா என்ன ஏற்பாலா அனு”, என்றான்.

 

“நிச்சயம் கிருஷ், சந்தேகமே வேண்டாம்”, என அவள் சொல்ல.

 

அனுவின் பின் சென்று, தனது கைகளால் அவளது கண்களை மறைத்தவன், அவளை அந்த அறைக்கு அழைத்து சென்றான்.

 

கதவு திறக்கும் ஓசை கேட்டது… இருவரும் அறைக்குள் பிரவேசித்தனர்… கிருஷ் அவனது கைகளை விலக்கினான்…

 

அனு கண்களை திறந்து ராதையை பார்த்தாள்… பார்த்தவள் தன் கண்களையே நம்ப முடியாமல் திகைத்து நின்றாள்…

 

அங்கு மௌனம் என்னும் பாவனை குடிகொண்டது…

 

கிருஷ் தனது கலங்கிய காதல் நிறைந்த கண்களுடன் கூறினான்… “இதோ என் ராதா, என் அனுராதா” என்று…

 

அனு பார்த்தது, ஒரு ஆளுயர கண்ணாடியை… அதில் தெரிந்தது அவளது பிரதிபிம்பம்… கிருஷ் இவ்வளவு நாட்கள் கூறிய ராதா…. அனுராதா … அதாவது நமது அனு…

 

“என்ன இது கிருஷ்… நா அனுராதா தான், ஆனா நா உங்க ராதா இல்ல…. நான்…  நான்… உங்க அனு, உங்க பிரண்ட்…”, என்று தடுமாறினாள்… அவளது முகத்தில் அவ்வளவு குழப்பம், எதையும் நம்ப இயலாமல் அந்த அறையை விட்டு வெளியேறியவள் அந்த அழகிய மர வீட்டின் பால்கனியை அடைந்தாள்…

 

அவளை தொடர்ந்து வந்தவன் அவளது கைகளை பற்றி… “ஐ லவ் யூ, ராதா” என்றான்

 

சட்டென கைகளை உதறி பின் சென்றவள், “என்ன இது கிருஷ்”, என்று ஆத்திரமாக வினவினாள்

 

தொடரும்….

Advertisement