Advertisement

“யாரது!!!!!!!…. நம்ம அனுமாவா இது!!”, என்று வாயை பிளந்தாள் பூஜா… கிருஷ் வாயடைத்துப் போய் நின்றான்…

 

இதுவரை சுடி, சல்வார், சாரி என்பது போன்ற உடைகளையே அணியும் வழக்கம் கொண்ட அனு, அன்று டீ ஷர்ட், ஜீன்ஸ், கூலர்ஸ், என மார்டனாக வந்தாள்.

 

“மேடம் …உங்களுக்கு நாலு வயசு குறைந்திருச்சு, பஸ்ட் இயர் மாணவி போல இருக்கீங்க”, என்று முரளி கூற,

 

“தேங்க்ஸ் முரளி!!” என்றவள், ஸ்டைலாக கூலர்சை கலட்டி “போலாமா கிருஷ்” என,

 

அவளையே பார்த்திருந்தவன், “இதுவும் அழகுதான்” என்றான்.

 

அனுவை தனியே அழைத்துச் செல்ல விரும்பாதவன், இளம் தம்பதியினரான பூஜா மற்றும் முரளியையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டான்.

 

நால்வருமாய் கேரளத்தை நோக்கி பயணிக்க, பெற்றோரின் அனுமதியுடன் கிளம்பிய அனுவிற்கு, இன்னமும் அதை நம்ப இயலவில்லை…

 

தனது வாழ்க்கை திடீரென பிரகாசமானதன் பொருள் யாது என சிந்தித்தவளுக்கு, விடை கிடைக்காமல் போக, அதைவிடுத்து பயணத்தை என்ஜாய் செய்ய துவங்கினாள்…

 

அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியாக பயணிக்க, ஒருவன் மட்டும் உள்ளுக்குள் மருகிக்கொண்டிருந்தான்.

 

‘பல மாசம் கழிச்சு, ராதா கிட்ட திருமணத்தை பற்றி பேச போறேன். ஒருவேளை அவள் மறுத்துட்டா, அத தாங்கும் சக்தி நம்மிடம் இருக்கா’, என்ற சிந்தனையில், மனம் கனக்க பயணித்துக் கொண்டிருந்தான் கிருஷ்.

 

செல்லும் வழி முழுவதும் அவளது அழகிய மையிட்ட விழிகளே நினைவில் இருக்க, அதில் தொலைந்து, தன்னை மறந்து காதல் செய்த நாட்களை… பசுமையான நினைவுகளை… மனதினுள் பலமுறை ஓட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான்…

 

அனுவை தவிர வேறு எவருடனும் அதிகம் பேசி பழகிறாத, கிருஷின் அமைதியை பூஜாவும் முரளியும் கண்டு பிடிக்கவில்லை… ஆனால் அனு அவனது தவிப்பை உணர்ந்துதான் இருந்தாள்…

 

மாலை கேரளத்தை அடைந்தவர்கள் கிருஷின் நண்பன் சந்துருவின் ரிசார்ட்டில் தங்கிக் கொண்டனர்…

 

பயணக்களைப்பில் அனைவரும் அவரவரது அறைக்கு சென்றுவிட, கிருஷ் மட்டும் தனது நண்பன் சந்துருவோடு அளவளாவிக் கொண்டிருந்தான்.

 

சில மணித்துளிகள் சென்றபின் கிருஷை தேடிக்கொண்டு அனு அங்கே வர, 

 

“இவங்க டாக்டர் அனு…நா சொல்லிருக்கேன்ல”, என்று அனுவை சந்துருவிற்கு அறிமுகப்படுத்தினான் கிருஷ்…

 

“ஹாய்… நான் சந்துரு”, என அவன் புன்னகைக்க…. அவனது பார்வையில் எதையோ உணர்ந்தவள்,

 

என்னவென்று தெரியாத போதும், பதிலுக்கு புன்னகைத்தாள்…

 

“என்ன பத்தி என்ன சொன்னார் உங்க பிரண்ட்”, என அவள் வினவ…

 

சந்துரு சற்று தடுமாற…

 

“உள்ளதைச் சொன்னேன்” என்றான் கிருஷ்.

 

அதற்குள்ளாக சந்துருவிற்கு வேலை வந்துவிட… வேறுவழியின்றி சென்று விட்டான்.

 

செல்பவனையே பார்த்திருந்த கிருஷ், “இவன் என் பெஸ்ட் பிரண்ட் அனு, எப்பயாச்சும் தான் மீட் பண்ணுவோம், ஆன எங்களுக்குள்ள எந்த சீக்ரட்ஸும் இல்ல, எல்லாத்தையும் ஷார் பண்ணிக்குவோம்… அவ்வளோ குலோஸ்”, என்றான் கிருஷ்.

 

“அதெல்லாம் சரி, நீங்க இன்னும் ராதைய பத்தி உங்க காதல பத்தி என்கிட்ட எதையும் சொல்லல, நானும் எத்தனை முறை தான் கேட்கறது”, என்று சலித்துக் கொண்டாள் அனு.

 

“சொல்லலாம் சொல்லலாம் … ராதைய உனக்கு காட்டிட்டு, அவளோட சேந்து எங்க கதைய சொல்றேன்”, என்றான்.

 

பின் இருவருமாக டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், என விளையாடி பொழுதை கழித்தனர்…

 

இரவு உணவின்போது, “மிக்க நன்றி ஐயா, கனவுல கூட இப்படிப்பட்ட இடத்துக்கு நாங்க வருவது கஷ்டம்”, என்றான் முரளி.

 

“ஆம மா … ஒருவேளை சோறுக்கே வழியில்லாம இருந்த எங்களுக்கு, இப்டி ஒரு வாழ்வ கொடுத்திருக்கீங்க… வாழ்நாள் முழுவதும், நன்றியோடு இருப்போம்”, என்றாள் பூஜா.

 

“ரொம்ப ஓவரா தான் பேசுறீங்க… பேசாம சாப்பிடுங்க”, என்று ஓர் சிக்கன் பீஸை பூஜாவின் தட்டில் வைத்தாள் அனு…

 

சிறு புன்னகையுடன்… “முரளி, நா ஊருல இல்லாத நேரத்தில், மேகலாமாவை கவனிச்சுகிட்ட, இப்போ பூஜாவோட சேர்ந்து, அனுவ நல்லா கவனிச்சுகுற. இதுக்கெல்லாம்

ஒரு சின்ன காம்ப்ளிமென்ட் தான்”, என்றான் கிருஷ்.

 

அடுத்த நாள் கேரளத்தை சுற்றி பார்த்தவர்கள், இறுதியாக ஒரு பூங்காவிற்கு செல்ல… அங்கு பூஜாவை தனது தோளோடு அணைத்தபடியே முரளி ஏதோ பேசிக் கொண்டிருக்க… கலகலவென நகைத்தாள் பூஜா.

 

இதை தூரத்திலிருந்து எதேச்சையாய் கவனித்த அனு, “ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி… இல்லையா கிருஷ்”, என்றாள்.

 

“உண்மைதான்… ஆனா அனைவரின் வாழ்விலும் ரொம்ப முக்கியமானது குடும்ப வாழ்க்கை”, என்றான்.

 

அனு மௌனம் சாதித்தாள்….

 

“செல்வம், புகழ், வெற்றி, தோல்வி, இவை எல்லா நிரந்தரமானது இல்ல அனு… ஆனா உறவுகள்”, என்று கூற வந்தவனை இடைமறுத்து,

“என்ன பொறுத்தவர, அதுவும் நிரந்தரமல்ல”, என்றாள்.

“நா அதுல கண்டதெல்லா”, என்று ஏதோ கூற வந்தவள், “அத விடுங்க… அன்னிக்கு என் கதைய பாதியிலேயே விட்டுட்டேன் ல, இப்போ முடிச்சிடுறேன்”, என்றாள்.

ஏனோ கிருஷிடம் அனைத்தையும் கூறி விட வேண்டும் என தோன்றியது அவளுக்கு…

“கனந்தன வேற ஒரு பெண்ணோட பார்த்தப்புரம், என் அத்தையோட பேச்ச கேட்டுட்டு எல்லாரும் வீடு திரும்பினோம்… அந்தப் பொண்ண என் அத்தை வீட்டுக்குள்ள விடல”,…

“கனந்தன என் அத்தை ஓங்கி ஒரு அறை விடுவார் னு நினச்சேன்… ஆனா அவங்க… ‘இவ்வளவு பெரிய படிப்பெல்லாம் படிச்சு என்ன பலன்… உன்னால உன் கணவன கூட உன் கட்டுக்குள்ள வெச்சுக்க முடியல.. இப்போ பாரு, இவன் என்ன காரியம் செஞ்சிருக்கான்’,  என்று என்ன கத்தினார்”,…

“இத சற்றும் எதிர்பாராத நான், அப்படியே உறைந்து போய் வாயடைத்து நின்னேன்”….

“என் அத்தை திரும்பவும் திட்ட வர, கனந்தன் இடை புகுந்து…. ‘இந்த நாடகத்தை எல்லாம் இத்தோட முடிச்சுக்கலாம் மா”, என்றார்…

“எங்கள மன்னிச்சிடு அனு, நான் வர்ஷினிய நாலு வருடமா காதலிச்சிட்டு வந்தேன், அம்மா மறுத்ததால யாருக்கு தெரியாம கல்யாணம் பன்னிட்டோம்”… 

“அப்பவும் விடாம, அதையும் இதையும் சொல்லி, பிளாக்மெயில் செஞ்சு உன்ன கல்யாணம் பன்னி வெச்சாங்க”,…என அவர் ரொம்பவும்  நல்லவராட்டம் சொல்ல, எரிச்சலா வந்தது எனக்கு… 

“என்னால வர்ஷினிய மறக்க முடியல அனு, அவளுக்கும் அப்படித்தான்”…. என்றார்.

“அப்போ என் நிலை, என் குழந்தையின் நிலை, இப்படியெல்லாம் ஏமாற்ற உங்களால எப்படி முடிஞ்சது”,… னு கேட்கும் போதே மயங்கி விழுந்துட்டேன்…

மயக்கம் கலஞ்சு விழிச்சு பார்க்க, “நா அவள விட்டுட்டு உன்னோட ஒழுங்கா வாழுறேன், இத பெருசு பண்ண வேண்டாம்”, என அவர் சொல்ல,

“எல்லா வெரும் நடிப்பு…, அந்தப் பொண்ணு வேணா எல்லாத்துக்கும் ஒத்துக்கலாம், ஆனா என்னால முடியாதுனு சொன்னேன்”…

“அப்போவே முடிவு செய்தேன், இப்படி ஒரு துரோகியோடு என்னால வாழ முடியாது னு”.

“இத என் வீட்டுல சொன்னா அவங்க நிலமை என்னாகும், எப்படி சொல்றது னு சங்கடமா இருந்துச்சு….. ஆனா அதே சமயம் சொல்லாமலும் இருக்க முடியாது… என் குழந்தை தந்தை இல்லாம வளர்வது அற்கும் நல்லதல்ல… ஆனா அதுக்காக இந்த முறைகேட்ட வாழ்வை என்னால வாழவே முடியாது… இப்படி பலதையும் யோசிச்சு, இனி என் வாழ்வு என் குழந்தைக்காக னு முடிவு செஞ்சேன்… கனந்தன நிரந்தரமா பிரிய தயாரானேன்…. அண்ணன் வெளிநாட்டிலிருந்து வந்த பின், அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்லி, இந்த கனந்தனை விட்டு தூர போயிடனும் னு முடிவு பண்ணேன்”…

“ஆனால்”…. என்று கண்ணீர் மல்க விம்மித் தொடங்கினாள் அனு. 

தொடரும்….

Advertisement