Advertisement

அத்தியாயம் 30-3

“உம்மா கிட்ட பேசிட்டீங்களா?” அறையினுள் நுழைந்த ரஹ்மானிடம் தலையணையில் தலைசாய்த்திருந்தாலும் கண்களை திறவாமலையே கேட்டாள் ஷஹீ.

“ம்ம் பேசிட்டேன் டி. ஷாக் தான் ஆனாலும் சந்தோசபட்டாங்க. பாஷித் கல்யாணத்த பத்தியே யோசிச்சிகிட்டு இருந்தாங்க இல்லையா, பொண்ணு பார்க்க போனாப்போவே! அமீராவ ரொம்ப புடிச்சிருந்ததாம். இன்னொரு பையன் இருந்தா பேசி இருந்திருக்கலாம்னு நெனச்சங்களாம். எல்லாம் நல்லபடியா நடந்தத நெனச்சி, அவங்க துஆ கபூல் ஆகிட்டதா ரொம்ப சந்தோசபட்டாங்க”

புன்னகைத்தவன் “ஆனாலும் உங்க தம்பிக்கு செம தில்லுதான். சட்டுனு பொண்ணு கேட்டு கல்யாணமும் பண்ணி கிட்டாரு.  அது சரி யாரோட தம்பி” என்றவள் கணவனை பார்த்து கண்சிமிட்ட

“ஆனா அமீராவ எங்கயோ பார்த்திருக்கான். அது மட்டும் தெரியுது. லவ் பண்ணி இருந்தா இந்நேரம் கல்யாணம் பண்ணி இருப்பான். அப்படி பொம்பள புள்ளைங்க பின்னாடி அலஞ்சி நான் பார்த்ததும் இல்ல. அவனை புரிஞ்சிக்கவே முடியல” தாடையை தடவினான் ரஹ்மான்.

 “எங்க பார்த்தா என்ன? அதான் எல்லாம் நல்ல படியா நடந்திருச்சே. வாங்க வந்து தூங்குங்க. உம்ராஹ் போனவங்க இன்னும் நாலு நாள்ல வந்துடுவாங்க. வலீமா சாப்பாடு வேற கொடுக்கணும்”

“என் செல்ல மகள் இல்லாம எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது டி” என்றவன் மனைவியை கட்டிக்கொள்ள

“அப்போ போய் கூட்டிட்டு வாங்க. மகள் இருந்தா என் கிட்ட கூட வர மாட்டீங்க. அவ இல்லனதும் கட்டிக்கொண்டு தூங்க நான் தேவைப்படுத்தா?” என்று கணவனை தள்ளி விட்டாள் ஷஹீ.

ஹாஜரா திருமணம் முடித்து மூன்று மாதங்களிலையே கற்பமுற்றிருக்க அந்த அனுபவங்களை ஷஹீயிடம் பகிரலானாள்.

அதை கேட்கும் பொழுதெல்லாம் தானும் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்க ரஹ்மானிடம் தன் ஆசையை வெக்கப்பட்டவாறே கூறி இருக்க

“ஹாஜி ஒரு அவசரகுடுக்க, உன் நாநா விவஸ்த கெட்டவன் படிக்கிறவள போய் படிக்கவிடாம, வரட்டும் அவன். உனக்கென்ன அவசரம்? காலேஜ் முடிய இன்னும் எட்டு  மாசம் இருக்கே முதல்ல ஒழுங்கா படிச்சு முடி” என்றான்.

ஷஹீக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இருந்தாலும் தான் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டுதான் கணவன் இவ்வாறு பேசிச் செல்கிறான் என்ற எண்ணம் தோன்ற அமைதியானவள் அவனுக்கு பல வழிகளில் புரிய வைக்க முயற்சி செய்து தோற்றும் போனாள்.

முர்ஸீதை கையில் ஏந்தி தொட்டுத் தூக்கி அந்த பிஞ்சு விரல்களை பிடித்த பொழுது அழுதே விட்டாள் ஷஹீ. ஏக்கமாக கணவனை ஏறிட

“அதான் உன் படிப்பு முடிஞ்சிருச்சு. இனி எதுக்கு வைட் பண்ணனும்” என்று அவளை சமாதானப் படுத்த அவனை முறைக்க மட்டும்தான் அவளால் முடிந்தது.

அவர்களின் காதல் சின்னமாக பிறந்தவள் தான் ரஹ்மா. காதல் கணவனின் பெயரின் பாதியையே! சூட்டி அழகு பார்த்து மகிழ்ந்தாள் ஷஹீ.

ரஹ்மானின் வாழ்க்கையில் மகள் வந்த பின் அதிக நேரம் வீட்டில் மகளோடுதான் செலவளித்தான். காதல் மனைவி கூட இரண்டாம்பட்சமானாள்.

“இவ பொறந்ததுல இருந்தே நீங்க என்ன கண்டுகிறதே! இல்ல” என்கிற குற்றப்பத்திரிக்கை தினமும் அவர்களின் அறையில் வாசிக்கப்படுவதுதான்.

ஜமீலாவின் மகள் ஜெஸிலா தான் ரஹ்மாவின் இப்போதைய உயிர் தோழி. “மைனி மைனி” என்று அழைத்தவாறு அவள் பின்னால் ஓடுவதும், அவளோடு விளையாடுவதும்தான் ரஹ்மாவின் முழுநாள் வேலை. அவளோடு உண்பதும், உறங்குவதும் என்றிருந்தால் வீட்டாரை கூட மறந்து விடுவாள்.

இன்று ஜமீலாவின் வீட்டில் ஜெசிலாவுடன் உறங்கிக் கொண்டிருக்கும் மகளை எண்ணியே கவலை கொண்டான் ரஹ்மான்.

“எப்பிடி டி அவளை விட முடியும் அன்னைக்கு எனக்கு ஈத் முபாரக் சொன்ன குட்டி தேவதை போலவே இருக்காளே!” என்று ஷஹீயை சந்தித்த நாளை விவரிக்கலானான்.

கணவனின் நெஞ்சில் தலை சாய்த்து ஆர்வமாக கதை கேட்டுக்கொண்டிருந்தவளும் “அப்போவே லவ்வா?” என்று சிரிக்க

“அப்போ அது லவ்வானு தெரியாது. எதோ ஒரு ஈர்ப்பு” என்றவனின் கையோ மனைவியின் வயிற்றின் மேல் இருந்தது.

“பார்த்துப்பா இன்னக்கி என்னமோ செம்ம லவ் மூட்ல இருக்கீங்க. உங்க மகன் வேற வயித்துல இருந்து கிட்டு வாப்பாட லவ் ஸ்டோரி கேக்கட்டு கிட்டு இருக்கான். அவனும் வளர்ந்து உங்கள மாதிரியே பொண்ணு பின்னாடி போயிடாம” மீண்டும் சிரிக்க

ஆம் ஷஹீ இரண்டாவது குழந்தையை சுமந்திருந்தாள். நான்கு மாதம் என்பதால் உம்ராஹ் செல்ல மறுத்த பேகத்தையும், ரஷீனாவையும் பத்து நாட்கள் தானே என்று வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்திருந்தான் ரஹ்மான்.

மகள் ரஹ்மாவின் முழுப்பொறுப்பையும் அவன் தான் பார்த்துக்கொள்கிறேன். ஷஹீயை கூட எந்த வேலையையும் செய்ய விடுவதில்லை. இந்த பத்து நாட்களும் சாப்பாடு கூட அய்நாதான் செய்து அனுப்புவதாக இருந்தது. அய்னாவுக்கு கொஞ்சம் காய்ச்சலாக இருக்க ஷஹீ சமைக்கிறேன் ஏற்று சொல்ல, பெண் பார்க்க வேறு செல்ல வேண்டும் இன்று சமைத்து சாப்பிட போனாள் தாமதமாகும் என்றே கடையில் சாப்பிட்டிருந்தனர்.

{இப்போ புரிஞ்சுதா ஹாஜரா அண்ட் ஷஹீய உக்கார வச்சி குட்டி பசங்களுக்கு இவங்க நாலு பேரும் ஏன் ட்ரெஸ் போட்டு விட்டாங்கனு}

ஷஹீயால் தனியாக வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு ரஹ்மாவையும் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்பதால் கடைக்கு செல்லும் பொழுது குழந்தையை ஜமீலாவின் வீட்டில் விட்டிருந்தான் ரஹ்மான். பாடசாலை விடுமுறை என்பதால் ஜெஷீலாவுக்கும் ரஹ்மா வந்ததில் அதீத கொண்டாட்டம். 

பெண் பார்த்து விட்டு வரும் பொழுது மகளை அழைத்து வரலாம் என்று நினைக்க வீட்டுக்கு வரும் பொழுதே இரவாகி இருந்தது மட்டுமல்லாது, இவர்கள் வர தாமதமாவதற்கு அறிய ஜமீலாவே ரஹ்மானை அழைத்து பாஷீதின் திருமண விஷயத்தையும் அறிந்து கொண்டிருக்க, வஸீமும் வீட்டில் இல்லாததால் கிளம்பி வர முடியாமல் அவள் தடுமாற, தான் பார்த்துக்கொள்வதாக கூறியவன் வஸீமுக்கு தகவல் சொல்லுமாறு கூறி இருந்தான்.

அதன் பின் ஜமீலாவே ரஹ்மானை அழைத்து குழந்தை தூங்கி விட்டாள் என்றும் காலையிலையே அவர்கள் வருவதாகவும் வரும் பொழுது குழந்தையை அழைத்து வருவதாகவும் தெரிவிக்க சரி என்று விட்டான் ரஹ்மான்.

“மகன்னே! முடிவு பண்ணிட்டியா? முர்ஸீத், முனவ்வர பாத்துமா ஆம்புல புள்ள வேணும்குற ஆச போகல”

“ஏன் சமத்தா சொல் பேச்சு கேக்குற பொண்ணுங்கதான் பிடிக்குமா? கொஞ்சம் அட்டகாசம் பண்ணுற மகனையும் கட்டி மேய்ங்க. அப்போதான் உங்க உம்மா என்ன கஷ்ட பட்டாங்கனு புரியும்”

“நான் எல்லாம் சொல் பேச்சு கேக்குறவன் டி. நீ தான் சேட்ட புடிச்சவ. என் மகன் சமத்தா தான் இருப்பான்”

“பின்ன என்ன பயம்?”

“பயம் எல்லாம் இல்ல. இன்னக்கி அவனுங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு. முர்ஸீத் வேற உன் மேலையே தாவுறான். எங்க உன் வயித்துல அடி பட்டுடுமோனு பயம் வேற போன கொடுத்து சமாளிச்சு வச்சிட்டேன். ஆனாலும் குழந்தைகளுக்கு போன் கொடுக்குறது அவ்வளவு நல்லதில்லை”

“முர்ஸீத்துக்கு என் மேல பாசம் அதிகம். ரஹ்மாவையும் கிட்ட வர விடமாட்டேங்குறான்”

“ஆ.. அடிக்கிறான். விட்டா என்னையும் அடிப்பான் போல” என்றவாறே கன்னத்தில் முத்தம் வைக்க

“என்ன இன்னைக்கு ரொம்ப லவ் மூடுக்கு போய்ட்டிங்க போல”

“தேங்க்ஸ் டி பொண்டாட்டி. லைப்ல எல்லாமே கிடைச்சிருச்சு. நீ நம்ம மகள். இது போதும்” என்றவன் அவள் தலை கோதியவாறு சொல்ல

“ஆனா எனக்கு இது போதாதே!”

“அதான் உன் ஆசபடி பையன் பொறந்துடுவானே! பொண்ணு பொறந்தா….? மூணாவதா ட்ரை பண்ணனலாம். அதுவு…ம் பொண்ணுனா… நாலாவது…” இழுத்து இழுத்து சொல்ல 

அவன் தோளிலையே அடித்தவள் “நான் என்ன மெஷினா?” என்று சிரிக்க

“அப்போ என்ன தான் டி உன் ஆச. கல்யாணத்துக்கு முன்ன காலேஜ் படிச்சு முடிக்கும் வர குழந்தை பெத்துக்க மாட்டேன்னு சொன்ன, அதன்படிதான் நடந்துச்சு. நீ ஆசபட்ட படிப்பை படிச்ச, இப்போ ஒரு நல்ல வேலைல இருக்க, குழந்தைகளுக்கு கற்பிக்கும் வேலைய பார்த்தாலும் நிலையும் இன்னும் படிக்க இருக்குனு தேடி படிக்கிற, வயித்துல இருக்குற குழந்தைக்கு நல்லதும் சொல்லுற, எல்லாம் உன் இஷ்ட படிதானே போய் கிட்டு இருக்கு. சில விஷயங்களை நான் வேணான்னு சொன்னாலும் பிடிவாதம் பிடிச்சு சாதிக்கிற” பெருமூச்சுவிட்டவாறே சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சொன்னான் ரஹ்மான்.

வயிற்றில் இருக்கும் குழந்தையோடு ஷஹீ மேற்படிப்பு படிப்பதை குறை காணாதவன், அதற்காக அவள் வாரம் தோறும் கொழும்புக்கு பயணம் செய்வதை மறுக்க, நான்கு மாத கரு கேட்கும் திறனுடையது அவள் படிப்பதை குழந்தையும் கேட்கட்டுமே படித்து முடிக்கும் பொழுது குழந்தையும் பிறந்து விடும் சென்று கூறி இருந்தாள்.

“என்ன குத்தி காட்டி பேசுறீங்களா? காலேஜ் படிக்கும் பொழுது குழந்தை வேணாம்னு கல்யாணம் பண்ண முன்னாடி சொன்னேன். ஆனா கல்யாணத்துக்கு பிறகு வேணும்னுதானே சொன்னேன். அத நீங்க கேக்கலையே!” கன்னம் கிள்ள

“சரி விடு டி” அதான் இப்போ குட்டி தேவதை இருக்கா, உன் ஆசபடி பையன் பொறந்தா சந்தோசம். இப்போ சொல்லு உன் ஆச என்ன?”

“ஒரு பேமிலி ட்ரிப் போகணும்க, அதுவும் பெரிய பஸ்ஸ புடிச்சி. குடும்பம் மொத்தமும் ஒண்ணா. ஒரு மூணு நாளைக்கு. இல்ல ஒரு ஐஞ்சு நாளைக்கு நல்ல ஒரு பீச் ஓரத்துல ஒரு அழகான வீடு எடுத்து தங்கி, சமைக்க ஒரு சமையல்காரரையும் கூட்டிட்டு போகணும் இல்லனா மாமியும், சாச்சி, உம்மானு அந்த வேலைல இறங்கிடுவாங்க. அவங்களுக்கும் ரெஸ்டு கொடுத்து நல்லா என்ஜோய் பண்ணனும்”

“ஒரே பஸ்ஸுல போறதுல என்ன டி விஷேசம்?”

“செம ஜாலியா இருக்கும்க. டான்சு, பாட்டுனு கொண்டாட்டமா இருக்கும். சந்தோசம்தான்!” சொல்லும் பொழுதே அவள் கண்கள் மின்ன

“பாசித் வலீமா முடியட்டும் அவன் ஹனிமூன் ட்ரிப்பை பேமிலி ட்ரிப்பாக்கிட வேண்டியதுதான்”

“பாவங்க அவரு”

“எல்லாரும் ஒண்ணா போய் அஞ்சு நாள்ல நாம திரும்பிடலாம் அவங்கள வேற எங்கயாச்சும் தனியா என்று கண்சிமிட்ட”

“அப்போ பிளான் பண்ணிடீங்க” எதையும் முறையாக திட்டமிடுவபனை கேலி செய்யலானான் ஷஹீ.

“பக்காவா பண்ணிட்டேன் டி.” என்றவன் தலையை ஒருவிரலால் தட்டி சொன்னான்.

“சரி சரி தூங்குங்க ரொம்ப நேரமாச்சு”

“என்னது தூங்கவா? ட்ரிப் எல்லாம் பிளான் பண்ணி இருக்கேன் ரிட்டன் கிப்ட் உன் கிட்டாதான் வசூலிக்கனும்” என்றவன் அவளை பதில் பேச விடாது முத்தமிடலானான்.

 

 

Advertisement