Advertisement

அத்தியாயம் 29

முபாரக் ஹாஜராவின் கல்யாண நாளும் அழகாக விடிந்தது. மாப்பிள்ளை வீடு பெண் வீடு இரண்டு வீட்டு வேலைகளையும் ரஹ்மான் தான் பார்கலானான்.

முபாரக் மணமகன் என்பதாலும் அவன் வீட்டில் ஆண்மகன் அவன் மாத்திரம் என்பதாலும் தனியாக வேலை பார்க்க முடியாமல் திண்டாட ரஹ்மான் மாத்திரமன்றி பாஷித், அஷ்ரப், பவாஸ் என அனைவரும் இறங்கி வேலை பார்களாயினர்.

அதே போல் அய்னாவின் வீடு இங்கிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் கல்யாண வேலைகளுக்காக அடிக்கடி ரஹ்மான் அங்கே செல்லவும் நேர்ந்தது.

இரண்டு பெண்களுக்குமே ஒரே நாளில் திருமணம் என்பதால் சரியான முறையில் திட்டமிடவும் வேண்டி இருந்தது.

முபாரக்கின் வீட்டில் போலவே அய்னாவின் வீட்டிலும் தேடிப்பார்த்து வேலைகளை செய்ய யாருமில்லை. ஆதிலும் சின்ன பையன். அய்னாவின் வீடு நிறம் பூசுவது முதல் பொருட்கள் வாங்குவது வரை எல்லாம் ரஹ்மானின் பொறுப்பு என்றானது.

மணப்பெண்களுக்கான துணிகளை வாங்க அய்நாவும், ரஸீனாவும் செல்வதாக இருக்க அவர்களை தனியாக அனுப்பாமல் பாஷித்தையும் அவர்களோடு செல்லும்படி கூறினான் ரஹ்மான்.

அஸருக்கு பின் ஹனா மற்றும் இஷாதின் நிக்காஹ் நடை பெரும் என்றும் ஹானாவை மணமகன் வீட்டில் கொண்டு சென்று விட்ட பின் அடுத்த நாள் மணமகன் கொடுக்கும் வலீமா விருந்து. இரண்டு நாள் கழித்து பெண் வீட்டு விருந்து அது ஹாஜரா மற்றும் முபாரக்கின் திருமண நாளும் கூட.

திருமண மண்டபத்திலையே நிக்காஹ் செய்யப்பட்டு விருந்தும் கொடுக்கப்பட முபாரக் கொடுக்கும் வலீமா விருந்து இரண்டு நாள் கழித்து கொடுக்கலாம் என்று பேசிக்கொண்டனர்.

அது மாத்திரமன்றி திருமணத்தின் பின் மணமகன் வீடு செல்லாது மணமகள் வீட்டுக்கே செல்லலாம் இரண்டு நாள் கழித்து மணமகன் கொடுக்கும் வலீமா விருந்துக்கு பின்னே மணமகன் வீட்டுக்கு செல்லலாம் என்றும் தீர்மானித்தனர். இந்த தீர்மானம் ஹாஜராவின் படிப்பை முன்னிறுத்தியே எடுக்கப்பட்டிருந்தது.

 ஹனாவின் நிக்காஹ் மற்றும் வலீமா விருந்துக்கும் கலந்து கொள்ள வேண்டும் அதே சமயம் வீட்டில் கல்யாண ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டும் என்ற டென்ஷன் முபாரக்கை ஆட்டிப்படைக்க ஹாஜரா போடும் கண்டிஷனை முறியடிப்பது எப்படி என்பதையும் இரவில் சிந்திக்கலானான்.

ஹனா, இஷாத் வலீமா விருந்துக்கு பின்னும் ரஹ்மான் ஓடிக்கொண்டுதான் இருந்தான். அய்நா வீட்டு விருந்து அவர்களின் ஊரில் என்பதால் நிக்காஹ்வும் அந்த திருமண மண்டபத்தில் நடைபெறுவதால் ரஹ்மான்தான் அதையும் பார்க்க வேண்டியதாக இருப்பதால் பானுவை முபாரக்கோடு வரும்படி அங்கையே விட்டு விட்டு பாஷித்தை அழைத்துக்கொண்டு அய்நா வீட்டுக்கு கிளம்பி இருந்தான்.

கணவன் இரு வீட்டு வேலைகளையும் சேர்த்துப் பார்ப்பது சந்தோசத்தை கொடுத்தாலும் கல்யாணத்துக்கு பிறகு பிரிந்தே இராதவர்கள் பிரிந்திருப்பது ஷஹீயின் முகத்தை சுருக்கத்தான் செய்தது. அவன் அருகில் இல்லாமல் தூக்கம் கூட வராமல் தவிக்கலானாள்.

அலைபேசி அடிக்கவும் எடுத்தவள் ரஹ்மானின் பெயர் வரவும் ஸலாம் சொல்ல

“என்ன பானு குட்டி தூக்கம் வராம உருண்டு கிட்டு இருக்கியா?” அவனுக்கு தெரியும் தூங்கி இருக்க மாட்டாள் என்று அதனால் தான் அலைபேசி தொடர்ப்பை ஏற்படுத்தினான். முதல் ரிங்கில் தொடர்ப்பு ஏற்படுத்தப்பட்டதும் புன்னகைத்தவன் அருகில் இருப்பது போலவே பேச ஷஹீக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

“ம்ம்” தொண்டையடைக்க பதில் சொல்ல முடியாமல் சத்தமெழுப்பினாள் ஷஹீ.

“தூங்கு பானு நாளைக்கு கலையிலையே எழும்பனுமே! ஒழுங்கா தூங்கலைன்னா பார்க்க அசிங்கமா தெரிவ” என்று நகைக்க

புன்னகைத்தவள் “என்ன யாரு பார்க்க போறா? எல்லாரும் கல்யாண பொண்ணைத்தான் பார்ப்பாங்க”

“என்ன பார்த்து பொண்ணுங்க யார் டா இந்த ஹண்சம்னு ஜொள்ளு விட்டாங்கனு வை. எனக்கு கல்யாணம் ஆக்ச்சுனு சொன்னா… அந்த அதிஷ்டசாலி யார்னுதான் கேப்பாங்க அப்போ நீ அழகா இல்லனு வையேன். என்ன பார்த்து பரிதாபப்பட்டு வாழ்க கொடுக்க பார்ப்பாங்க. உன்ன விட அழகா இருந்த ஓகே சொல்லிடவா?”

“வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு” சிரித்தவாறே கடிந்தாள் ஷஹீ.

“இதெல்லாம் நீ சரியா தூங்காததால வரும் பிரச்சினமா. நல்ல பானு குட்டி இல்ல தூங்குமா” ரஹ்மானும் சிரிக்க

“நீங்க சாப்டீங்களா?”

“கல்யாண வீடுமா ஸ்பெஷல். நல்லா சாப்பிட்டேன். தூங்க போறேன். என் பானு குட்டி தூங்காம இருப்பானுதான் போன் பண்ணேன். அப்போ வைக்கவா? காலைலயே எந்திரிக்கணும். உன் நாநா கனவு கண்டு கிட்டு தூங்குறானாக்கும். நீயும் தூங்கு நாளைக்கு மீட் பண்ணலாம். அப்போ வைக்கிறேன்” என்றவன் அலைபேசி வழியாக முத்தங்களை அனுப்பி விட்டே அலைபேசியை அனைத்திருந்தான்.   

கணவனை எண்ணி சந்தோச பூரிப்பில் மிதந்த  ஷஹீ அதன் பின்தான் நிம்மதியாக தூங்கவே ஆரம்பித்தாள். 

“இவன் நாலு பிரெண்ட்ஸை சம்பாதித்து வச்சிருந்தா இந்நேரம் ராகிங் கல கட்டி இருக்கும். அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பன வேணும். நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட”

கோட் சூட்டில் அழகாக கம்பீரமாக இருந்தான் முபாரக். முகத்தில் ஒரு ஜொலிப்பு. புன்னகை முகமாகவே திகந்தவனை அஸ்ரப் மட்டுமே ஓட்டிக் கொண்டிருந்தான். பாவாஸ் மெளனமாக புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

முபாரக்குக்கு நண்பன் என்று யாருமில்லை. ஒரு வயதுக்கு பிறகு அவன் யாருடனும் நெறுங்கி பழகவுமில்லை. யாரையும் வீட்டில் சேர்க்கவுமில்லை. அஷ்ரப் கூறியது போல் ராகிங் செய்ய மட்டுமல்ல தோள் கொடுக்க தோழன் என்று யாருமில்லை. அதை முபாரக் உணர்ந்து கொண்டது ஷஹீயின் திருமணத்தின் போதுதான். தனியாகத்தான் எல்லா வேலைகளையும் பார்த்தான். ஆனால் அதை அவன் சிரமமாக நினைக்க வில்லை. தன் கடமை என்றே செய்தான். ஆனால் தன் திருமணத்தின் போது ரஹ்மான், பாஷித், அஸ்ரப்,  பவாஸ், என அனைவரினதும் உதவி கிட்டியதில் அவன் வேலை பளு எவ்வளவு குறைந்தது என்பதை நன்கு உணர்ந்தான்.

“இவனுக்கு ஒரு முட்டையாவது அடிக்கணும் டா… இல்லனா எனக்கு தூக்கம் வராது” ரொம்ப சாதாரணமாக முபாரக்கோடு நீண்ட நாள் நண்பன் போல் உரையாடினான் அஸ்ரப்.

“இவன் வேற… ஹாஜி என்ன பண்ண காத்து கிட்டு இருக்காளோ! அத நெனச்சா தொட நடுங்குது” உள்ளுக்குள் கடுகடுத்தவன்

“இங்க பாரு அஸ்ரப்பு இப்படி முட்ட அடிக்கிறதுலயே இருந்தினா கடைசில உனக்கு அவிஞ்சு முட்ட தான் வரும்” முபாரக் மிரட்ட

“அதெல்லாம் அப்போ பார்த்துக்கொள்ளலாம்” என்று அசால்டாக சொன்னான் அஸ்ரப்.

அஸ்ரப் பொதுவாகவே யாருடனும் ஒன்றி விடும் ரகம். அமைதியே உருவான முபார்க்கோடு கல்யாண வேலைக்காக சுற்றும் பொழுதே அவன் வாய் பூட்டை உடைத்தெறிந்திருந்தான். ஏற்கனவே ஹாஜராவோடு வாயாடி பழகியவனுக்கு அஷ்ரப்பை சமாளிப்பது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.   

மண்டபத்துக்கு செல்ல அரை மணித்தியாலங்கள் ஆகும் என்பதால் லுஹர் தொழுத உடனே செல்லலாம் என்று முடிவு செய்திருந்தபடியே குடும்பத்தாருக்கு ஸலாம் கொடுத்த முபாரக் வண்டியில் ஏற கூடவே பவாஸும், அஷ்ரபும் ஏறிக்கொள்ள வண்டி மண்டபம் நோக்கி கிளம்பியது.

ரஹ்மான் அலைபேசி வழியாக தொடர்புகொண்டு இங்கே எல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிறதா என்று மாறி, மாறி அஸ்ரப், பாவாஸ், ஷஹீ என அழைத்து விசாரித்துக்கொண்டுதான் இருந்தான்.

மணமகனோடு மணமகன் வீட்டாரும் வந்து சேர முபாரக், ஹாஜரா நிக்காஹ் இனிதே நடை பெற்றது.

ஹாஜராவின் தந்தை முபாரக்குக்கு மகளை நிக்காஹ் செய்து கொடுத்தது மாத்திரமல்லாது மண்டபத்துக்கு அழைத்து சென்று ஹாஜராவின் கையை முபாரக்கின் கையில் கொடுத்து துஆ ஓதி தாரை வார்த்து கொடுத்தார்.

அதன் பின் வழக்கம் போல் குழந்தைகளின் போட்டோ ஷூட் நடைபெற்றுக்கொண்டிருக்க விருந்தோம்பலும் ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

முபாரக் ஹாஜராவிடமிருந்து விடை பெற்று வந்தவர்களை கவனிக்கவென்று ஆண்கள் இருக்கும் தளத்துக்கு செல்ல உணவுண்டு முடித்தவர்கள் விடை பெறலாயினர்.

அதன் பின் மணமக்கள் குடும்பத்தாரோடு அமர்ந்து உணவுண்ட குடும்பத்தாரோடும், தனியாகவும் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

மணமக்களை மண்டபத்திலிருந்து அழைத்து வந்து வீட்டில் அமர வைத்த பின்னே நிம்மதி பெருமூச்சு விட்டாள் அய்நா. இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து விட்ட நிம்மதி அவள் முகத்தில் சந்தோசமாக தெரிய எல்லா வேலைகளையும் ஓடியாடி பார்த்துக்கொண்டிருந்தாள்.

முபாரக்குக்கும் நன்கு பழக்கப்பட்ட குடும்பம் என்பதால் எந்த தயக்கமும் இருக்கவில்லை. ஆதிலும் அவனோடு ஒட்டிக்கொண்டு திரிய

“டேய்  நான் குடும்பத்துக்கு மூத்த மாப்புளடா என்ன கவனிடா” என்று இசாட் கிண்டலடிக்கலானான்.

“நீங்க வர முன்னாடியே முபாரக் மச்சானை எனக்கு தெரியும்” என்று விட்டான் ஆதில்.

“ஆஹா.. ஹனா உன் கூட மட்டும் போன் பேசினது தப்புனு இப்போ புரியுது டி.. முபாரக்  இவனுக்கு என்ன வாங்கி கொடுத்து உங்க பக்கம் சாச்சி வச்சிருக்கீங்க”

இஷாடும் சகஜமாக பேச முபாரக்கும் அவனோடு தோழமையாக உரையாடலானான்.

இரவு உணவுக்கு பின் அவன் ஆசையாக காத்திருந்த இரவு, அதே போல் ஹாஜரா பூகம்பத்தை பூட்டி வைத்து முபாரக்குக்கு ஷாக் கொடுக்க போகும் இரவு. அவன் ஆவலாகவும் மனம் பதைபதைப்போடும் காத்திருக்க, ஹஜாராவை காணவில்லை.

அவன் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக்கொண்டுதான் இருந்தது. எப்படியும் இன்றைய இரவு நல்லவிதமாக அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க போவதில்லை என்பது உறுதி. ஆனாலும் பேசி ஒரு முடிவுக்கு வர ஹாஜரா அறைக்குள் வர வேண்டுமே! வராமல் கண்ணாமூச்சி காட்டினால்? அல்லது வேறு அறையில் தூங்கினால்? “சீ.. சீ.. அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை” தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவன் எழுந்து சென்று தண்ணீர் அருந்திக் கொண்டிருக்கும் பொழுது அறையினுள் நுழைந்தாள் ஹாஜரா.

முபாரக் அவளை ஆசையாகவோ! ஆர்வமாகவோ! பார்க்கவில்லை. சொல்லபோனால் முயற்சி செய்து அவன் பார்வையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு இருக்கும் வேகத்துக்கு அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டிருப்பான். ஆனால் அதன் பின் நடக்கும் விபரீதத்தை நினைத்துதான் அடக்கி வாசித்தான்.

அறைக்குள் வந்தவள் நேராக சென்றது நின்றது அலுமாரியின் அருகில். அலுமாரியை திறந்தவள் ஒரு கோப்பை எடுத்து முபாரக்கின் புறம் நீட்டினாள். அதை பெற்றுக்கொண்டவன். அதை திறந்தும் பாராமல் அலைபேசியை கையில் எடுத்து

“அடடா…  என் மொபைல்ல சார்ஜ் இல்ல. உன் மொபைல் கொடுக்கிறியா?”

“எதுக்கு?”

“ரஹ்மானையும், பாஷித்தையும் வரச்சொல்ல”

“அவங்கள எதுக்கு வர சொல்லணும்” விழிகளை இடுக்கியவள் கோபமாக கேட்க

“என்ன பொண்டாட்டி நீ.. விஷயம் தெரியாம பேசுற. ஒப்பந்தம் போட்டா அட்லீஸ்ட் ரெண்டு சாட்ச்சியாவது சைன் பண்ணனும் இல்லனா செல்லாது. ரஹ்மானும், பாஷித்தும் வரட்டும். மூணு பேருமா சேர்ந்து படிச்சு பார்த்து சைன் பண்ணுறோம்” என்று கண் சிமிட்ட, எச்சில் கூட்டி விழுங்கிய ஹாஜரா கோப்பை அவன் கையிலிருந்து பறித்திருந்தாள்.

ஆடித்தான் போனாள் ஹாஜரா. முபாரக்கிடமிருந்து இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. அவள் சொல்லும் கண்டிசன்களை கேளாமலே சரி என்றவன் வாய் வார்த்தையில் சொன்னது செல்லுபடியாகாது எழுதி கையொப்பம் போட்டால் தான் செல்லுபடியாகும் என்றான். அதுதான் ஹஜ்ராக்கு சரி என்று படவே எழுதி எடுத்துக்கொண்டு வந்தால் இரண்டு சாட்ச்சிகள் கையெழுத்து போட வேண்டுமாம்.

அதுவும் யாரை அழைக்கிறான். அவளுடைய இரண்டு நாநாவையும் சாட்ச்சி கையெழுத்து போட அழைக்கிறான். பாஷித் கூட பரவாயில்லை அன்று பேசியதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக அவளுக்கு உறுதுணையாக நிற்பான்.     

ஆனால் ரஹ்மான் அவள் தோலை உரித்து உப்பு போட்டு காய போடுவான். அதுவும் கோப்பை ரஹ்மான் கையில் கொடுத்து படிக்க வேற சொல்வானாம் அவள் கணவன். 

“என்னது சாட்ச்சியா? இத அன்னைக்கி சொல்லல”

“ஏன்மா? நா சொல்லலைனா என்ன உனக்கு தெரியாதா என்ன? எங்க போன கொடு. உன் ரெண்டு நாநாவையும் வர சொல்லலாம்”

“ஒன்னும் வேணாம்” முகத்தை சுருக்கினானாள் ஹாஜரா.

“என்ன வேணாம்” புரியாதவன் போல் கேட்டான் முபாரக்.

“சைன் பண்ண வேணாம்” தலையை குனிந்தவாறு சொன்னாள் அவன் மனையாள்.

“அப்படி வாடி வழிக்கு என் கார பஜ்ஜி” செல்லமாக மனதில் கொஞ்சி கொண்டவன் “சரி சரி வா டைம் வேஸ்ட் பண்ண வேணாம் இன்னைக்கு நமக்கு பாஸ்ட் நைட்” என்றவாறே கட்டிலில் போய்  காலை நீட்டி போட்டு அமர்ந்து கொண்டவன் ஒரு காலை மற்ற காலின் மீது போட்டு ஆட்டியவாறே முதுகுக்கு கொடுத்த தலையணையணையின் மீது கையை தூக்கி வைத்து குறும்பு சிரிப்போடு மனைவியை கண்களால் அழைத்தான்.

“என்னது..” அதிர்ச்சியடைந்தவள்  தலையை உயர்த்தி பார்த்து “உனக்கு இந்த ஆச வேற இருக்கா?” பாய்ந்து வந்தவள் அவனை மொத்தலானாள்.

“நீ என்ன தொட்டு பேசவே கூடாது. நமக்குள்ள அந்த மாதிரி எந்த உறவும் இருக்க கூடாது. அந்த சிந்தனையே உனக்கு இருக்க கூடாதுன்னுதான் கண்டிஷன் போட்டிருந்தேன். எல்லாத்தையும் கெடுத்துட்ட” சொல்லி சொல்லி அடிக்கலானாள் ஹாஜரா.

“அடிப்பாவி இதுதான் உன் கண்டிஷனா?” அவ்வளவு நேரமும் அடிகளை பெற்றுக்கொண்டவன் ஹாஜராவின் கைகளை பிடித்து தடுத்தவாறு கேட்க

“இன்னும் நிறைய இருக்கு” ஹஜாராவை பேசவிடாமல் அவளை இறுக அணைத்தவன் அவன் இதழ் கொண்டு அவள் இதழ் மூடி முத்தமிடலானான்.

அவள் எவ்வளவு திமிறியும் அவனின் பிடியிலிருந்து அவளால் வெளியே வர முடியவே இல்லை. மூச்சு முட்ட முத்த மிட்டவன் மெதுவாக அவளை கையாள தொடங்கினான்.

திமிறிக்கொண்டிருந்தவளோ! அவன் முத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து பந்தமாக அவனுள் அடங்கி மந்திரத்துக்கு கட்டுண்டவள் போலானாள்.

அவன் தொடவே கூடாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட காத்திருந்தவள் அவன் தொடுகையில் மெய்சிலிர்த்து தன்னையே தொலைத்துக்கொண்டிருந்தாள். 

பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவனும். அவளை சீண்டவேன முத்த மிட ஆரம்பித்து அவள் அவனிடத்தில் அடங்கி போனதில் அவளை மெல்ல மெல்ல ஆழத்துவங்கி இருந்தான்.

ஹாஜரா அலைபேசியில் பேசாமல் இருப்பதும், வீட்டுக்கு சென்றால் முகம் கொடுத்து பேசாமல் இருப்பதும் கண்டிஷனில் இல்லை என்றதும் இந்த மாதிரி ஏதாவது சிறுக்குத்தனமா ஒப்பந்தம் போடுவாள் என்று முபாரக் ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான்.

அதனாலயே அன்றே அதை பற்றி பேசாமல் ஒப்பந்தம் போட்டு சைன் பண்ணலாம் என்று அவளை உசுப்பேத்தி விட்டு வந்திருந்தான்.

“அவனுக்கு தண்டனை கொடுக்க தாம்பத்தியத்தை விலக்கி வைப்பது அவளுக்கும் தான் தண்டனை என்பது அவள் அறிவுக்கு எட்டவில்லையா? இதற்க்கு அவள் வேறு யாரையாவது திருமணம் செய்திருக்கலாம்” என்று கூட எண்ணியவன், நொடியில் தலையை உலுக்கிக் கொண்டு அவள் இல்லாத வாழ்க்கையை நினைத்தும் பார்க்க முடியாது, அருகில் இருந்தால் குழப்பம் தீரும். பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று ஒன்றுமே இல்லை. பேசி பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

ஆனால் அவன் மனையாள் அவ்வளவு எளிதில் மலையிறங்குபவள் இல்லையே! அதனாலயே ஷரீஆ சட்டம் பேசி ஒப்பந்தம் போட வேண்டுமானால் இரண்டு சாட்ச்சிகள் வேண்டும் என்று கூறி கையொப்பம் இடுவதையே முறியடித்தான்.

ஆனால் அவனும் எதிர்பாராதது அவன் கைகளில் அவள் மயங்கி கட்டுண்டு போவாளென்று. அவளை கையாள்வது அவனுக்கு சிரமமாக இருக்கவில்லை. பெண்சிங்கம் போல் சீறிக்கொண்டிருந்தவள் ரிங் மாஸ்டரிடம் அடங்கியது போல் அடங்கி விட்டாள்.

வெறுப்பை மட்டும் கக்கிக் கொண்டிருந்தவள் அவனோடு கூடிக்கழித்து நெஞ்சில் தலை சாய்த்து அவன் நெஞ்சில் உள்ள உரோமங்களோடு விளையாடியவாறே

“டேய் முபா நாளைக்கு காலைல எந்திரிச்சதும் மொத வேலையா உன் தாடியை எடுக்குற” அதிகாரமாக கட்டளையிடலானாள் ஹாஜரா.

“ஏன் டி செல்ல குட்டி” அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவாறே கேட்க

“குத்துது டா” அவனை தள்ளி விட்டாள் ஹாஜரா.

“அடிப்பாவி. போன்ல பேசும் பொழுது உன் முகத்துக்கு தாடி செம்மயா இருக்கு. வெட்டாதேன்னு சொன்னவளா டி நீ. எங்க என் போன்? ஓல்ட் மெஸ்ஸேஜெஸ்” என்றவன் சிரிக்க

அவன் மண்டையில் கொட்டியவள் “சொன்னா கேளு. இல்ல இந்த ஹாஜியோட மறு முகத்தை பாப்பா”

“பார்த்து கிட்டு தான் டி இருக்கேன்” இரட்டை அர்த்தத்தில் சொன்னவன் மறந்தும் சிரிக்கவில்லை. கூடல் முடிந்து அவள் சண்டை போடுவாள், சட்டையை பிடிப்பாள். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாள், அவளை சமாதானப் படுத்துவதே பெரும் பாடாகும் என்று நினைத்திருக்க, அவளோ மிகவும் சாதாரணமாக நடந்து கொண்டதில் நிம்மதியடைந்தவன். சிரித்து அவளை வெறுப்பேற்ற எண்ணவில்லை. சிரித்திருந்தால் மீண்டும் அவனை மொத்த ஆரம்பித்திருப்பாள் அவனின் கார பஜ்ஜி என்றறிந்தே அமைதி காத்தான்.

அவளின் கோபமுகத்தை மட்டுமே கண்டிருந்தவனுக்கு அவள் காட்டிய மறுமுகம் ரொம்பவே பிடித்திருந்தது. அந்த சந்தோசமான மனநிலையை கெடுக்க கூடாதென்றே சிரிக்காமல் சொன்னவன் அவள் இரு முகங்களையும் ரசிக்கலானான்.

முபாரக் – ஹாஜரா வலீமா விருந்தும் சிறப்பாக நடந்தேற மணமக்கள் முபாரக்கின் வீடு வந்து சேர்ந்தனர். ஒரு வாரமாக விருந்தினர்கள் வருவதும், உறவினர்கள் வருவதுமாக வீடே நிறைந்திருக்க ஷஹீயும், ரஹ்மானும் கூட அங்கையே தான் தங்கி இருந்தனர்.

கல்யாணத்துக்கு வந்தவர்கள், உறவினர்கள் என்று அனைவரும் கல்யாணத்தின் போதும் சரி, வலீமா விருந்தில் சரி, வீட்டுக்கு வந்த போதிலும் சரி ஷஹீயிடம் “எப்போ நல்ல செய்தி சொல்ல போற” என்று மாறி மாறி கேட்க விழித்தவள் மண்டபத்தில் சிரித்து சமாளித்தாள்.

ஆனால் வீட்டில் அவள் அருகில் இருந்த ரஹ்மானின் காதில் அவர்கள் கேட்டது விழவே!  “அவ படிப்பு முடியும் வர அத பத்தி யோசிக்க கூட மாட்டோம்” ஷஹீயின் கையை ஆறுதலாக பற்றிப் பிடித்த ரஹ்மான் அவளுக்கும் சேர்த்து பதில் சொன்னான். 

கணவனை பெருமிதமாக பார்த்த ஷஹீ கண்களில் பெருகிய கண்ணீரை சிமிட்டி உள்ளிழுத்து புன்னகைத்தாள்.

நாட்கள் உருண்டோட அவரவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தது. ஒரே ஒரு மாற்றம் ஹாஜரா முபாரக் வீட்டில் இருப்பது மாத்திரம் தான்.

காதல் கொண்ட அவள் மனம் அவனோடு ஒன்றி வாழ்ந்தாலும், அவன் ஹானாவை பார்த்தான் நேசித்தான் என்பது இன்னும் அவள் மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருக்க, அது குத்தும் பொழுதெல்லாம் முபாரக்கை படுத்தி எடுக்கலானாள்.

ஒருநாள் குழம்பில் காரம் ஜாஸ்தியாய் இருக்க கத்தி விட்டான் முபாரக்.

“ஏன் டா… வாயில ஏதாச்சும் புண் இருக்கா? காரம்னு சொல்லுற? நான்தான் டா சமைச்சேன். நானும் இதைத்தானே சாப்பிட்டேன். வர வர உனக்கு என் சமையல் புடிக்கல குறை சொல்ல ஆரம்பிச்சிட்ட, இனிமேல் உன் பொண்டாட்டியாவே! சமைக்க சொல்லி சாப்பிடு” பேகம் வேறு திட்டி விட்டு செல்ல சட்டியில் உள்ள குழம்பை ருசி பார்க்க அது நன்றாகத்தான் இருந்தது. அவனுக்கு பரிமாறியது மட்டும்தான் காரமாக இருந்தது. அப்படியாயின். இது அவன் மனைவியின் கைகாரியம் என புரிய அறையினுள் சென்று பார்க்க சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனையாள் அதன் பின் இது அடிக்கடி நடக்க, உசாராக பரிமாறும் போது கவனமானான்.

“த்து என்ன டி ஹாஜி சக்கரைக்கு பதிலா உப்ப போட்டிருக்க?” வாயில் வைத்த காபியை துப்பியவன் கப்பை மேசையின் மீது வைத்து கேட்டான்.

“உப்பிட்டவரை உள்ளளவும் நினைனு சொல்வாங்கள்ல. அதான் அடிக்கடி உப்ப அள்ளி போட்டு உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கணும்னு பதிய வைக்க முயற்சி பண்ணுறேன். வேறு யாரும் இருக்கக் கூடாது”

“என்ன டி உளறுற. என் மனசுல நீ மட்டும் தான் இருக்க. வேறு யாரு இருக்க போறா?”

“என் வாய கிளறாத” என்றவள் கோப மூச்சுக்கலை வாங்க

அவள் கையை பிடித்து கட்டிலில் அமர்த்தியவன் “உனக்கு என்னதான் டி பிரச்சினை? உனக்கு நல்லாவே தெரியும் நான் உன்ன எவ்வளவு லவ் பண்ணுறேன்னு. நீயும் என்ன அவ்வளவு லவ் பண்ணுற. ஆனா இடையில நடந்ததை நினைச்சி இன்னும் குழம்பி கிட்டு இருக்க. உன் அக்கா மேல சந்தேகம் இருக்குற மாதிரியும் தெரியல”

முபாரக் அதை சொல்லும் பொழுது விழி உயர்த்தி பார்த்தவள் கண்கள் கலங்கி இருந்தது.

“இருந்திருந்தா உன் அக்காவை முறைச்சு கிட்டே தெரிஞ்சி இருப்ப. உன்ன பத்தி தெரியாதா? அவ அவ புருஷன லவ் பண்ணுறானு உனக்கு நல்ல தெரியுது அதான் என்மேல கண்டாக்குற. ஆனா அதுவும் வீண். உன் கோபம் தான் என்ன?” தன்மையாக கேட்டான் முபாரக்.

ஓவென அவன் நெஞ்சில் சாய்ந்து அழுது தீர்த்தவள் “நீதான். நீ என்ன லவ் பண்ணிட்டு எதுக்கு என் அக்காவை பார்த்து. அவளை சைட் அடிக்கலாமா?” கேட்டவாறே அவனை நன்கு மொத்தியவள் “என் மனசு ஆற மாட்டேங்குது”

“சத்தியமா சைட் எல்லாம் அடிகளை டி என் பார்வையே அப்படிதான். நீயே சொல்லு. நல்லா பேசிட்டு திடீருனு பேசாம விட்டா ஏன் பேச மாட்டேங்குறானு ஒரு ஆராய்ச்சு பார்வை இருக்கும்ல அந்த பார்வை தான் அது”

“நிஜமாவா?” சற்று தெளிந்தவளாகத்தான் கேட்டாள் ஹாஜரா.

“உன் மேல சத்தியமா” என்றவன் அவள் தலையில் கைவைக்க போக

“இல்ல இல்ல நீ என்ன ஏமாத்த பாக்குற. எல்லாரும் அல்லாஹ் மேலதான் சத்தியம் பண்ணுவாங்க நீ என என் மேல சத்தியம் பண்ணுற? என்ன ஒரேயடியா மேல அனுப்ப பாக்குறியா?”

“வாயிலேயே ஒன்னு போட்டேனா” என்றவன் “இருந்தாலும் நீ இவ்வளவு உஷாரா இருக்க கூடாதே என் அறிவுக்கொழுந்தே!” மனதுக்குள் சொல்லியவாறு நொந்து கொண்டான் முபாரக்.

தன்னோடு பேசியது ஹனாவா இருக்கோமோ! என்று சந்தேகம் வந்த போது ஆசையாக பார்க்காவிட்டாலும் ஆர்வமாக பார்த்தது உண்மைதானே! அதனால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யாமல் நழுவ நினைத்தால் அவன் மனையாள் அவனுக்கு மேலல்லவா இருக்கிறாள். இவளை இதிலிருந்து வெளியே கொண்டு வரவே முடியாதா? இவள் இதை மறக்கவே மாட்டாளா? விடவே மாட்டாளா? ஹஜாராவையே பாத்திருந்தான் முபாரக்.

Advertisement