Advertisement

அத்தியாயம் 27

அந்த ஹோட்டல் அறைகள்  கண்ணாடியாலானவை. இயற்கை கொடிகளை படரவிட்டு அளவான சூரிய ஒளி புக கூடியவிதத்தில் பராமரிக்க பட்டு வரும் வேளையில் திரைசீலைகளும் தேவையாயின் உபயோகிக்கும் படிதான் இருந்தன.

ஷஹீ மாலை வேளையில் அறைக்கு வந்ததால் கண்ணாடியினூடாக தெரிந்த பச்சை விரிப்பு விரித்தது போன்ற கண்டலம கிராமத்தின் அழகை கண்கூடாக கண்டு கொண்டாள். கண்ணாடியில் படர விடப்பட்டிருந்த கொடிகளில் பூத்திருந்த வண்ண பூக்களை கண்டு மகிழ்ந்தாள். தூரத்தே தெரியும் வானமும், மலையும்,  குளமும் கண்ணை கவர காலை நேர காட்ச்சி இதமாகத்தான் இருக்கும் என்றுணர்ந்தவள் மலையினூடாக உதிக்கும் ஆதவனை காண சீக்கிரமே கண்விழிக்க வேண்டும் என்று நினைத்தாள். பாவம் அவள் அறிந்திருக்கவில்லை நாளைய விடியல் மதியம் தொடும் என்று.   

அறை பெரிதாக நடுவே கட்டில் போடப்பட்டு. ஒரு பக்கமாக துணிகளை வைக்கவென அலுமாரியும் கூடவே சோபாவும் டிவியும், நிலைக்கண்ணாடியும் இருக்க, மறு பக்கம் குளியலறை. இயற்கையை ரசிக்கவென கண்ணாடி தடுப்பின் அருகே இரண்டு கதிரைகள் மற்றும் ஒரு சிறு மேசை போடப்பட்டு தேநீர் பருக உணவுண்ண வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இரவு உணவுக்கு கீழே செல்லும் பொழுது சாதாரணமாக இருந்த தங்களது அறை. உள்ளே வரும் பொழுதே எதோ ஒரு பூவின் வாசம் வீசவே அறையை மாற்றி வந்து விட்டோமா என்றுதான் எண்ணினாள் ஷஹீ.

அறையும் அரை இருளில் இருந்தது. மெல்லிய வெளிச்சம் என்னவென்றால் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தன. அதுவும் சுவரோரங்களில் ஒரே வண்ணத்தில் அவற்றில் இருந்துதான் பூவின் வாசம் நாசியை நிறைத்தது.

கண்ணாடி தடுப்பு திரைசீலையால் மூடப்பட்டு சிவப்பு நிற  ஹார்ட் பலூன்கள் பறந்து கொண்டிருக்க ஒவ்வொன்றிலும் ஐ லவ் யு என்ற வாசகம் தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தன.

பொதுவாகவே ஹோட்டல் அறைகளில் விரிப்புகள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். வெள்ளை விரிப்புதான் ஆனால் விரிப்பை மறைத்து ரோஜாக்கள் வீற்றிருக்க கட்டிலின் ஓரங்களிலிருந்து மெழுந்த மல்லிகை கொடி முகட்டில் பொருந்தி இருக்க சுவர்களிலும் ரோஜாக்கள் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தன.

நிலை கண்ணாடியின் மேலும் அலங்கார மெழுகுவர்த்திகள். அறை அலங்காரத்தை பார்த்து ஆனந்த கூச்சலிட்ட ஷஹீ கணவனை கட்டிக்கொண்டு “ஐ லவ் யு” என்று இதழோடு இதழ் பொருத்தி முத்தமிடலானாள். 

மோதிரம் போட்டதை கண்டு கொள்ளாமல் படுத்துறான் என்று கடுப்பில் இருந்தவளுக்கு இப்படியொரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கத்தான் கணவன் அமைதி காத்தான் என்று அறிந்த பின் அவள் சந்தோஷமும் இரட்டிப்பாக, அவனுக்கு நன்றி சொன்ன விதமே இதழ் முத்தம் தான்.

இதை விட சிறந்த பரிசையும் அவனுக்கு இந்த நேரத்தில் தன்னால் கொடுத்து விடவும் முடியாது. அவன் கொடுத்த சப்ரைஸுக்கு இது சின்ன ரிட்டன் கிட் தான். இப்படியெல்லாம் எண்ணி ஷஹீ முத்தமிடவுமில்லை. மனதில் இருந்த அதீத காதலால் கிளர்த்தெழுந்த அன்பினால் அளவில்லா சந்தோசத்தின் வெளிப்பாடாகத்தான் முத்தமிட்டிருந்தாள்.

ரஹ்மான் தன்னுடைய பல வருட காதலை பல வழிகளில் ஷஹிக்கு உணர்த்தி விட்டான். பீரோவில் இருந்த பொருட்கள் அவனுடைய சிறு வயது காதல் என்றால், மோதிரம் கொடுத்து தன் மனதை கூறி இருந்தான். போதாததற்கு அவள் மனதை அறிந்து கொண்ட பின் அறையை அலங்கரித்து இந்த சப்ரைஸ் ஏற்பாடு செய்திருக்கிறான்.

அன்பாக முத்தமிட ஆரம்பித்தவள் ஆசையாக முத்தமிடலானாள் அதுவே அவளின் காதலை அவனுக்கு உணர்த்தும் வன்மையான முத்தமாக மாறிக்கொண்டிருக்க, அவள் மனதை உணர்ந்து கொண்ட ரஹ்மான் தருணத்தை தனதாக்கிக் கொண்டான்.

 இத்தனை நாள் காத்திருப்பு அவள் சம்மதத்திற்காகத்தானே! அவளே காதலால் காசிந்துருகி இதழ் முத்தம் கொடுக்கும் பொழுது தனக்கு பிடித்த இசை கருவியை தாளம் தப்பாமல் மீட்டும் இசை கலைஞன் போல் அவன் விரல்கள் அவள் மேனி எங்கும் பயணிக்க அவளை மீட்டலானான் ரஹ்மான்.

அவன் விரல்கள் அவள் தேகமெங்கும் பரவ காதல் தீ அவளுக்கும் பற்றி எரிய ஆரம்பித்திருக்க ஆடைகளும் மெதுவாக களைய ஆரம்பித்தன.

பெண்ணவள் நாணம் கொண்டு மறுக்க, வன்மையான அவன் தழுவலும், கெஞ்சலோடு கொஞ்சியவாறே முத்தமிட்டு அவனுடைய ஆசையையும், நேசத்தையும் ஒன்றாக திரட்டி அவளை ஆழ, சிலிர்ப்புடன் அந்த மாயாஜாலத்துக்குள் கட்டுண்டு தன்னையே அர்பணிக்கலானாள் ஷஹீ. 

காமன் என்றோ தொடுத்த காதல் அம்பு இரு இதயங்களிலும் பாய்ந்து இன்றுதான் தேகங்களின் சங்கமம். அவள் அணிந்திருந்த வளையல்களும் இசை மீட்ட அவனை ஆராத்தழுவிக் கொண்டது அவள் கரங்கள்.

இளமையின் வேகமும்’ காதலின் தாபமும் பின்னிப் பிணைய ஒருவரை விட்டு மற்றவர் விட்டு விலகாமல் இறுகிய அணைப்பில் மஞ்சத்தில் சரிய இரவு வானில் நச்சத்திர பட்டாளங்களுக்கு மத்தியில் ஜொலிக்கும் வெண்ணிலவை மறைத்த மேகக்கூட்டம் மெதுவாக நகர்வது போல ஷஹீயின் நாணமும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு விடை பெற்று கொண்டிருந்தது.

யாருமற்ற தனிமையில் ரஹ்மானின் உயிரிலும் மேலான பானு அவனோடு. இந்த தருணைத்தை அவளுடன் காதல் பொழியும் இரவில் இந்த இனிமையான பொழுதை எத்தனை இரவுகள் கற்பனை பண்ணி பார்த்திருப்பான். காதல் கைகூடிய வேளை அவள் அவன் கைகளில் மயங்கி நிக்கும் வேளை அவள் மனதையே என்றும் காயப்படுத்த நினைக்காதவன் உடலையா காயப்படுத்த நினைப்பான்?

வார்த்தைகளில் நிதானம், செயலில் பொறுமை என்று திகள்பவன் அதீத பொறுமையில் அவளை கையாள, அந்த பொருமையெல்லாம் பெண்ணவளுக்கு இல்லை போலும் இத்தனை வருடங்களாக ஒருவன் தன் மீது வைத்திருக்கும் காதலை கண்ட போதே அவனிடம் சரணைடைந்திருக்க வேண்டும்.

அவன் அவளுக்கா செய்த ஒவ்வொன்றும், செய்யும் அனைத்தும் என்று எல்லாம் ஞாபகம் வர பொறுமை பறந்து பெருமை தலை தூக்க கணவனோடு ஒன்றுவதில் எந்த தயக்கமும் அவளுக்கு இருக்கவில்லை. 

எக்கணம் அவன் காதலை புரிந்து கொண்டாளோ! அக்கணம் அவனை முழு மனதாக ஏற்றுக்கொண்டாள். எக்கணம் அவன் மீதான தன் காதலை உணர்ந்து கொண்டாளோ! அவனோடு பின்னிப் பிணைந்து கூடிக் கழியும் பொழுதை எதிர் பார்த்து காத்திருந்தாள்.

கணவனை இழந்து விட்டேன் என்று உணர்ச்சி வசப்பட்டு காதலை ஒப்பித்தவளுக்கு அவன் முகம் பார்த்து மொழிய கூச்சம் கொண்டுதான் அவன் தூங்கிய போது மோதிரத்தை அணிவித்திருந்தாள். அந்த கூச்சமெல்லாம் இப்பொழுது எங்கே சென்றதென்று அறியாக் குழந்தையாகி கணவனோடு கூடிக் கழிக்கலானாள்.

அவளின் சிணுங்கல்களும், முத்த சத்தமும் மாத்திரமே அறையை நிறைக்க, காதலிலான அழகான ஒரு கூடல் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

இந்த சுற்றுலா பயணம் தேனிலவு பயணமாகும் என்று ஷஹீ எதிர்பார்த்திருக்க வில்லை. ரஹ்மானும் வீட்டாரோடு செல்லாம் பானுவின் பிறந்தநாளை அனைவரோடும் ஒன்றாக கொண்டாடலாம் என்றுதான் திட்டமிட்டான். ரஸீனா மறுக்கவும் முபாரக்கை அழைக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தவன் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

பானுவின் பிறந்தநாளையொட்டி அவளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசித்த ரஹ்மான் முதலிரவின் பொழுது கொடுக்கலாம் என்று வாங்கிய கபல் ரிங்ஸை கொண்டு வந்திருந்தான். அவன் மனதில் ஒரு எதிர்பார்ப்பிருந்தது. தன் காதலை புரிந்து கொண்டவள் தனிமையில் தன்னோடு இருக்கும் பொழுது தன் மனதையும் உணர்ந்து கொள்வாள். தங்கள் வாழ்க்கையின் அடுத்த அடியை இந்த பயணத்தில் கண்டிப்பாக எடுத்துவைப்போம் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது.

கடல்நீரில் நனைத்து ஒட்டி உரசி விளையாடிய பின் அவ்வளவு நெருக்கத்தில் அந்த ஈரஉடையில் அவள் அழகை ரசித்தவனின் அடிமனதில் மோதிரத்தை அணிவிக்கும் பொழுது முதலிரவை பற்றிய சிறு எதிர்பார்ப்பும் தலை தூக்கிப் பார்த்தது உண்மைதான்.

அவன் ஆசையை கோடிட்டு காட்டி இருந்தால் ஷஹீ மறுத்திருக்க மாட்டாள். ஆனால் அது அவளின் கடமை என்று எண்ணி விடுவாள். ஆனால் இன்று அவள் தன் மனதை உணர்ந்து கொண்டதன் பின் கொடுத்த இதழ் முத்தம் அவள் காதலை அவனுக்கு காட்டும் ஆசையும், வேகம் மட்டுமே!

இது அன்று நடந்திருக்குமா? அவன் வாழ்வின் இன்று கிடைத்த சந்தோசம் அன்று கிடைத்திருக்குமா? நிச்சயமாக இருந்திருக்காது. இன்று அவன் பானு சந்தோசமாக இருக்கிறாள். ரொம்ப சந்தோசமாக இருக்கிறாள் அதுதான் அவனுக்கு வேண்டும். அது மட்டும் தான் அவனுக்கு வேண்டும்.

இந்த உலகத்தையே வென்ற பூரிப்பில் கணவனின் நெஞ்சில் தலை சாய்த்திருந்தாள் ஷஹீ. 

மனைவியை கட்டிக்கொண்டு நெற்றியில் இதழ் பதித்த ரஹ்மான் “தேங்க்ஸ் பானு. எனக்கு நீ  கிடைக்க மாட்டியோ! என்ற டென்ஷன் இருந்து கிட்டே இருக்கும். ஆனா இந்த செக்கன் லைப்ல எல்லாமே கிடைச்ச சந்தோசத்தை கொடுத்துட்ட”  சொன்னவன் மீண்டும் நெற்றியில் இதழ் பதித்தான்.

“பட் ஐம் சாரிங்க” மனமுருகி கூற

“எதுக்குடி. இப்போ சாரி சொல்லுற”

“அன்னைக்கி ஆத்துல முழ்கின போ உங்களை பாக்கவே முடியாம போயிடும்னு மட்டும் தான் நெனச்சேன். அப்போவே என் மனசுக்குள்ள நீங்க வந்துட்டீங்கனு புரிஞ்சிக்கிட்டிருந்தேனா எங்க லைப் எப்பயோ ஆரம்பிச்சி இருந்திருப்போம். என் பர்த்டே அன்னைக்கி நீங்க ரிங் போட்டப்பவே இல்ல அதுக்கு முன்னதாகவே! சந்தோசமான வாழ்க்கையையே தொடக்கி இருப்போம். உங்களையும் புரிஞ்சிக்காம, என் மனசையும் புரிஞ்சிக்காம உங்கள ரொம்ப வார்த்தையால வதச்சு கஷ்டப்படுத்திட்டேன்ல. சாரி” ஆர்த்மார்தமாக மன்னிப்பு வேண்டி நிற்க

சத்தமாக சிரித்தவன் “எது எது எப்போ எப்போ நடக்கணுமோ அது அது அப்போ அப்போதான் நடக்கும். புரியுதா பொண்டாட்டி. பர்த்டே அன்னைக்கி ரிங் கொடுத்து உன்ன மடக்கலாம்னுதான் பாத்தேன். ஆனாலும் நீ கொஞ்சம் ஸ்ட்ரோங் தான். இல்லனா ஸ்கூல் போறப்போவே ஒருத்தன் பின்னாடி அலையிறத நோட் பண்ணி இருப்பியே” என்று விட்டு நகைக்க

“தத்தி எங்குறத இங்கிலீஸ்ல ஸ்ட்ரோங்னு மாத்தி சொல்லிறீங்களா? உங்கள…” அவன் தோளில் அடித்தவள் அவன் கன்னத்தை கடிக்க

“நல்ல முன்னேறிட்டியே! எங்க ஒரு கிஸ் கொடு பார்க்கலாம்”

“எதுக்கு அடுத்த ரவுண்ட் போகவா?”

“நானே வேணாம்னாலும் நீ விடமாடி போல இருக்கே” என்றவன் அவளை முத்தமிட்ட இறுக அணைத்துக்கொள்ள  

செல்லமாக முறைத்தாலும் அவன் நெஞ்சில் தலை சாய்த்தாள் ஷஹீ.

 அதன் பின் வந்த மூன்று நாட்களும் கண்டமலையில் தங்கியவர்கள் சுற்றுலா பயணத்தை தேனிலவு பயணமாக மாற்றி அமைத்துக்கொண்டிருந்தனர். 

அன்றைய இரவு ரஹ்மானும் பானுவும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார்கள் என்றால் ஹாஜராவுக்குக்ம் முபாரக்குக்கும் கூட அன்றைய நாள் தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவெடுக்கும் நாளாகத்தான் அமைந்து விட்டது.

தூக்கம் வராமல் உருண்டுக்கொண்டிருந்தாள் ஹாஜரா. அவளுக்கு முபாரக்கின் மேல் அளவு கடந்த கோபம் இருந்தது. அதே போல் காதலும் இருந்தது. ஆம் காதல் தான். காதலித்து இழுத்துட்டு போவேன் என்ற சொல்லும் முன்பே அவனை பார்த்த பொழுது அவள் மனதில் நுழைந்திருந்தான் முபாரக். அதை அவள் அறிந்திருக்கவில்லை. அவனும் அறிந்திருக்கவில்லை.

ஹாஜரா அவனை நல்ல விதமாக சந்தித்து பேசி பழக நேர்ந்து தன் மனதை முபாரக்கிடம் வெளிப்படுத்தி முபாரக் அறிந்திருந்தால் இன்னும் பேசி அவள் மனதை காயப்படுத்தி அனுப்பி இருப்பான் அது வேறு கதை.

எல்லாம் நடப்பது நன்மைக்கே என்பது இவர்களின் விடயத்தில் உண்மை ஆனதுதான் விந்தை. ஹாஜரா பழிவாங்கவென்று முபாரக்கோடு அலைபேசியில் பேசி இருக்காவிட்டால் அவன் ஒருநாளும் அவளோடு பேசி இருக்க மாட்டான். காதலித்தும் இருக்க மாட்டான்.

அவனின் பதின் வயது மனக்காயங்களை கேட்டறிந்த பின் தான் செய்வது தவறு என்று ஒதுங்கியவள் அவன் நேரில் வந்து நின்ற பொழுது அவன் பேசியது மட்டும் தான் அவள் மனதில் நிழலாட டீயில் உப்பை போட்டுக்கொடுத்தாள்.

அதே போல் ரஹ்மானை பார்க்க வந்த பொழுதும் முபாரக் திமிராகவே பேச அது ஹாஜராவின் காதில் விழுந்ததுதான் அவன் அந்த வீட்டுக்கு வரும் பொழுதெல்லாம் பழிதீர்க்க அவள் முடிவெடுக்க காரணமாகவும் அமைந்தது.

ஆனால் என்று அவன் ஹானாவை பார்க்க ஆரம்பித்து விட்டானோ அக்காவை அவனிடமிருந்து காப்பாறுவதாக தன் மனதை தேற்றிக்கொண்டவள் நாளாக நாளாக தன் மனதில் அவனுக்கு இடம் கொடுத்து விட்டதை உணர்ந்து கொண்டாள்.

மறுவீட்டு விருந்தின் பொழுது தன்னிடமே ஹனா என்று நினைத்து பேச வேண்டும் என்று அழைக்கவும் கொலை வெறியில் இருந்தவள் குளிர் நீரை தான் ஊற்றினாள். வாளியை தூக்க முடிந்திருந்தால் சுடுநீரை ஊற்றி இருப்பாள்.

ஆனால் அவள்தான் அவனோடு பேசியவள் என்று அறிந்த பின் அவளை காதலிப்பதாக கூறினான் முபாரக். அதை ஹாஜராவால் ஏற்றுக்கொள்ள முடியவுமில்லை. ஜீரணிக்கவே முடியவில்லை.

பார்த்த உடனே பிடிக்கும் பெண்களில் தான் இல்லையா? அவன் கண்களுக்கு தான் அழகாக தெரியவில்லையா? அக்காவின் குரலை கேட்டவுடன் அவள்தான் என்று முடிவு செய்தானாம். அவளே கண்டிருக்கிறாளே! முபாரக் ஹானாவை பார்க்கும் பார்வையை. ரஹ்மானின் கல்யாணத்துக்கு பிறகு வீட்டுக்கு வந்த பொழுது அப்படி ஒரு பார்வை பார்த்தான்! வயிறெரிந்து பொறுக்க முடியாமல்தான்! நிச்சம் நடந்து விட்டது என்றாள்.

அக்காவை பார்த்து ரசித்தவன் மனதில் ஆசைகளை வளர்த்துக்கொண்டிருப்பான். அவளோடான வாழ்க்கையை  எப்படியெல்லாம் கற்பனை பண்ணி பார்த்திருப்பானோ! யாரெனெ தெரியாமல் இருக்கும் வரை சரி. இவள்தான் அவள் என்னு சந்தேகம் வந்து விட்டால் போதுமே! மனதில் ஆசைகள் முளைத்து விடுமே! கற்பனைகள் தறிக்கிட்டு பறக்கும்! முபாரக்குக்கு ஹனாவின் உருவமே கிடைத்திருக்க வாழ்ந்தே பாத்திருப்பான். நினைத்து பார்க்கும் பொழுதே ஹாஜராவின் நெஞ்சம் எரிந்தது. அவனை காதலிப்பதாக அவனிடம் ஒருகாலமும் சொல்லப் போவதில்லை அவனால் அக்காவின் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாதென்று தான் அவனோடு பேசியதே! ஆனால் மொட்டை மாடி சந்திப்பு அவள் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருந்தது.

ஒரு நொடியில் மனம் மாறுமா? நீ அவளில்லை என்று ஹனா வேண்டாம் என்பானாம். என்னோடு பேசியது நீதான் என்று ஹாஜரா வேண்டும் என்பானாம். நான் என்ன பொம்மையா? அக்காவே என்றாலும் இன்னொருத்தியை நினைத்து பார்த்து விட்டானே!

இதுவே ஹனா இல்லை என்று கண்டு பிடித்த பின் என்னை கண்டு பிடித்திருப்பானா? இல்லை வீட்டில் பார்க்கும் பெண்ணை மணந்திருப்பானா? அல்லது போனில் பேசிய பெண் யார் என்று அறையில் இருந்த ஒவ்வொரு பெண்ணின் பின்னாடியும் அலைந்திருப்பானா?

ஹனாதான் அவனோடு அலைபேசியில் பேசி இருப்பாள் என்று சந்தேகம் வந்திருந்தால் அவளிடம் நேரடியாக பேசி இருக்க வேண்டும் அதை விட்டு விட்டு அவளை பார்ப்பதும், ரசிப்பதும், கனவிலும்,  கற்பனையிலும் அவளோடு வாழ்ந்து பார்த்து விட்டு, தன்னோடு பேசிய பெண் இவளில்லை வேறொருத்தி என்றதும் எப்படி மனசு மாறும்.

மனம் என்ன கரும் பலகையா? எழுதிவிட்டு உடனே அழித்து இன்னொன்றை எழுத? நான் மறுத்தால் வேறொருத்தியை மணந்து சந்தோஷமாகத்தான் இருப்பான். அதில் ஹாஜராவுக்கு கொஞ்சமேனும் சந்தேகம் இல்லை. இருந்துட்டு போகட்டும் அவனை பார்க்காமல் இருந்தால் போதும் என்றும் கூட தோன்றியது.

ஆனால் ரஹ்மானிடம் பேசுவான். வீட்டில் திருமணப்பேச்சு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. முபாரக்கின் முடிவில் அவன் தீவிரமாக இருக்கின்றான். ஒரு காலமும் அவனை திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்ற முடிவில்தான் இருந்தாள். ஆனால் அது பாஷிதிடம் பேசும் வரைதான் உறுதியாக இருந்தது. 

முபாரக் என்னை கல்யாணம் செய்து கொண்ட பின் காதல் செய் என்றதும் கோபத்தின் உச்சிக்கே செல்ல “இவன் என்ன விளையாடுகிறானா? இவன் விளையாட நான் தான் கிடைத்தேனா? ஒருவேளை நான் பழிவாங்க செய்ததை எனக்கே திரும்ப செய்கிறானோ” என்ற சந்தேகமும் வந்தது. பதில் சொல்லாது வெளியேறினாள். அவனும் அவள் பின்னால் வர காபி ஷாப்பிங் வெளியே பாஷித் நின்றிருப்பதைக் கண்ட ஹாஜரா பாஷித் சரியாக அங்கே எவ்வாறு வந்தான் என்று யோசிக்கத் தவறினாள்.

பாஷித்தை கண்டதும் அவனருகில் ஓடியவள் வீட்டுக்கு செல்லலாம் என்று பதட்டம் கொள்ள

“என்ன எல்லாம் பேசி முடிச்சிட்டியா? எல்லா பிரச்சினையும் முடிஞ்சதா?” என்றான் போனை நொண்டியவாறே

நடு வீதி என்றும் பாராமல் பாஷித்தின் மண்டையில் கொட்டியவள் “கூட்டு களவானியா? என்ன விளக்கு புடிக்க வந்தியா?” என்று முறைக்க

“சே இவ கிட்ட போய் வாய கொடுத்துட்டேன்” தன்னையே நொந்தவன் “நாநாதான் சொன்னான் வண்டில ஏறு” பதிலுக்கு அவளை முறைத்தான் பாஷித்.

ஓடிவந்த முபாரக் ஹஜாராவை தடுத்து நிறுத்தி “எனக்கு பதில் சொல்லிட்டு போ ஹாஜி” கெஞ்சாத குறையாக நிற்க

“உனக்கு பதில் அவ சொல்லி இருப்பாளே! திரும்ப தொந்தரவு பண்ணினா மச்சான்னு கூட பார்க்காம போலீஸ்ல புடிச்சு கொடுத்துடுவேன்” என்று மிரட்டிய பாஷித் ஹாஜரா அறியாமல் கண்சிமிட்டு விட்டு வண்டியை கிளப்பி இருந்தான்.

ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய பாஷித் “நாநா சொன்னேன்னுதான் அந்த லூசு சிடுமூஞ்சி முபாரக் கூட நீ பேசுற வர வெளிய நின்னேன் ஹாஜி இனிமேல் அவன் கூட பேசாத” கோபமான முகத்தை வைத்துக்கொண்டு சொல்வதை போல் சொல்ல எரிச்சலானாள் ஹாஜரா.

“இப்போ என்ன சொல்ல வர”

அவள் எரிந்து விழுந்ததிலையே பாஷித்துக்கு புரிந்தது முபாரக்கை திட்டியது அவளுக்கு பிடிக்கவில்லையென்று. உடனே பேச்சை மாற்றியவன்.

“நாநா என்னமோ நீ அந்த முபாரக்க லவ் பண்ணுறதா சொல்லுறாரு. லவ் பண்ணுறதா இருந்தா சந்தோசமா பேசி, சிரிச்சி இருந்திருப்பியே! உனக்கு அவனை சுத்தமா பிடிக்கல. அன்னைக்கி அவன் சொன்னதுக்கு தானே பழிவாங்க லவ் பண்ணுறது மாதிரி நடிச்ச? நான் மட்டும் பொண்ணா பொறந்திருக்கணும். கல்யாணம் பண்ணி, கிட்ட நிண்டு டாச்சர் பண்ணி, கொல்லுவேன்” குரலில் ஆவேசத்தை கூட்டினான் பாஷித்.

“என்ன சொல்லுற நீ”

“நா இப்போ என்ன சொன்னேன்? ஒன்னும் சொல்லலையே!” வா வீட்டுக்கு போலாம். லேட் ஆச்சு” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்து முபாரக்கை அலைபேசி மூலம் அழைத்து கூடிய விரைவில் ஹாஜரா கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிப்பாள் என்று தெரிவித்திருந்தான். 

“அப்படி என்ன டா அவ கிட்ட பேசின?” முபாரக் ஆவலாக கேட்க

“கல்யாணத்துக்கு பிறகு தெரிஞ்சிக்க மச்சான்” என்றவன் சத்தமாக சிரிக்க முழிக்கலானான் முபாரக்.

பாஷித் தனக்கு தானே சொல்லிக்கொள்வது போல் கூறியது ஹாஜராவின் மனதில் நச்சென்று நங்கூரத்தை பாச்சது போல் பதிந்திருந்தது.

என்னதான் முபாரக் நீயென்று நினைத்துதான் ஹானாவை பார்த்தேன் என்று ஆயிரம் காரணம் கூறினாலும் பெண்ணவளுக்கு அவனை மன்னிக்க முடியவில்லை. உடலை துன்புறுத்த முடியாது. அதை செய்யவும் மாட்டாள். பாஷித் கூறியது போல் அவனை கல்யாணம் செய்து அருகில் இருந்து கொண்டு வார்த்தையால் துன்புறுத்துவது சாத்தியமா? கல்லால் அடிப்பதை விட சொல்லால் அடிப்பது தான் அதிகம் வலிக்கும் என்று புரியாமையே அவனை வலிக்க செய்ய முடிவு கட்டினாள் ஹாஜரா.

மணியை பார்த்தால் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. முபாரக்கை திருமணம் செய்வதென்று முடிவு செய்தாகிற்று யாரிடம் தன் முடிவை முதலில் கூறுவது. ரஹ்மானிடம் கூறலாமா? வேண்டாம் முபாரக்கிடமே கூறலாம் கூடவே தன்னுடைய நிபந்தனைகளையும் என்றெண்ணியவள் அலைபேசியில் அவனை அழைக்க அது அடித்து ஓயவே கடுப்பானாள்.

“நான் இங்க தூக்கம் வராம இருக்கேன். அவன் அங்க கொறட்ட விட்டு கிட்டு தூங்குறானா? நீ தூங்க கூடாதே” பொறுமியவள் மீண்டும் அழைத்தாள் இந்த முறையும் அலைபேசி எடுக்க படவில்லை.

மூன்றாவது தடவை முயற்சி செய்யலாம் எடுக்கா விட்டால் பேகம் மாமிக்கு அழைக்கலாம். என்ன சொல்வது என்று யோசித்தவள் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்ற முடிவோடு முபாரக்கை அழைக்க துண்டிக்க போகும் நேரத்தில் அழைப்பு இணைக்கப்பட்டது.

“ஹே ஹாஜி குட்டி என்ன தூக்கம் வரலையா? இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க” குதூகலமாக ஒலித்தது அவன் குரல்

அவனின் உற்சாகமான குரலில் “இவன் தூங்கிட்டு இருக்கலயா?” தனக்குள் கேட்டுக்கொண்டவள் “என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” அதட்டலாகவே கேட்டாள்.

“படம் பாத்துகிட்டு இருந்தேன் ஹாஜி”

“நான் இங்க தூக்கம் வராம அல்லல் பட்டு கிட்டு இருக்கேன் உனக்கு படம் தான் கேடா”

“வேற என்ன பண்ண சொல்லுற? எனக்கும் தூக்கம் வரல. படம் பாத்து உன் மனச மாத்துறது எப்படினு ட்ரைனிங் எடுக்குறேன்” என்று சிரிக்க” பல்லைக் கடித்தாள் ஹாஜரா.

ஹாஜரா மௌனம் காக்க முபார்க்கே பேசினான். “சொல்லு ஹாஜி என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க?”

அவளுக்கு தேவையாக இருந்தது அதுதான். அவனே கேட்கட்டும் என்றுதான் மௌனம் காத்தாள்.

“நான் உன்ன கல்யாணம் செய்துக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன். ஆனா எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு. அதுக்கு நீ ஒத்துக்கிட்டா பண்ணிக்கிறேன். இல்லனா பண்ணிக்க மாட்டேன்” பட்டென்று விஷயத்தை போட்டுடைத்தாள் ஹாஜரா.

சம்மதம் சொல்வாள் என்று பாஷித் சொன்னதும் இவ்வளவு சீக்கிரம் சொல்வாள் என்று எதிர்பார்க்காதவனோ “நீ என்ன சொன்னாலும் ஒத்துகிறேன் ஹாஜி. எனக்கு முழு சம்மதம்” என்று விட்டான்.

“பேச்சு மாற மாட்டியே”

“மாட்டேன். வல்லாஹி” என்று அவள் சொல்லும் கண்டிசன்களை கேளாமையே அல்லாஹ் மீது ஆணையிட்டு விட்டான். அவள் வலையில் வசமாக சிக்கி விட்டான்.

Advertisement