Advertisement

அத்தியாயம் 26

காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ருவதற்காக  சீகிரியாவிலிருந்து கண்டலம வரை ஒரு பைக் பயணம். 

உணவடுணையில் மேலும் ஒருநாள் தங்கி பிறந்தநாளையும் கொண்டாடி கடலில் ஆட்டம் போட்டவர்கள் வேறு எங்கே செல்வது என்று யோசிக்க ஷஹீக்கு ஒன்றும் தோன்றவில்லை. கணவன் எவ்வழியோ தானும் அவ்வழியே என்று விட்டாள்.

சிரித்தவன் “பீச் ட்ரிப்பாகவே போலாமா? இல்ல வேற எங்கயாவது போலாமா?”

“பீச் ட்ரிப்னா?”

“ரோட் ட்ரிப்னா பைக்ல, கர்லா ரோட்டுல பயணம் செஞ்சிகிட்டே இருக்குறது. பீச் ட்ரிப்னா எல்லா பீச்க்கும் போய் குளிக்கிறது”

“ம்ம்..  ரோட் ட்ரிப் அதுவும் பைக்ல கூட்டிட்டு போங்க. ரொம்ப தூரம்” சொல்லும் போதே குழந்தை போல் கையை நீட்டி சொல்ல சிரித்தவாறே சம்மதித்தான் ரஹ்மான்.

“எங்க போகணும்?”

“எங்க வேணாலும்”

“நைட்டு தூங்கும் போது டிசைட் பண்ணுறேன் காலையிலையே போலாம்” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு கடலில் குதித்திருந்தான்.

எருலகல மற்றும் திக்கண்டஹேனா ஆகியவற்றின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் கண்டலம கிராமம் மாதலே மலைகளின் வடக்கு முனையிலும், வறண்ட சமவெளிகளின் தொடக்கத்திலும் இடைநிலை மற்றும் வறண்ட மண்டலங்களின் எல்லையில் அமைந்துள்ளது.

வனப்பகுதியை அழிக்காது அமைக்கப்பட்ட கண்டலம ஹோட்டேல் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர தபுள்ள, சிகிரியா போலவே கண்டலம ஹோட்டலும் இப்பொழுது மத்திய மாகாணத்தின் பிரதான இடமாக உள்ளது.

உணவடுனயிலிருந்து கண்டலம வரை இருநூற்றி ஐம்பது கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியதால் சீகிரியவரை கார்ப் பயணம் செய்து, சீகிரியாவிலிருந்து கண்டலம ஹோடல்வரை பைக் பயணம் செய்யலாம் என்று ரஹ்மான் சொல்ல முகத்தை சுருக்கினாலும் சம்மதித்தாள் ஷஹீ.

கடலை விட்டு பிரிய மனமில்லாமல் சுபஹு தொழுகைக்கு பின் கடலில் முழ்கி எழுந்த பின் தான் சீகிரிய செல்லவே தயாரானாள்.

ஆறு மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் ரஹ்மான் அவசரப்படுத்த வேகமாக தயாரானவள் சந்தோஷமாகவே கிளம்பினாள்.

கார் ஏசியை அனைத்து விட்டு கண்ணாடியை இறக்கி விட்டவர்கள் காலியிலிருந்து கொழும்புவரை ஹைவேயில் வேகமாக வண்டியை செலுத்த அந்த பயணம் வித்தியாசமாக இருந்தது.

ஹைவேயில் உள்ள உணவகங்களில் காலை உணவை முடித்துக்கொள்ள அரை மணித்தியாலங்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் பயணத்தை தொடர சீகிரிய வரை நிறுத்தி நிறுத்தி வந்ததால் ஆறு மணித்தியாலங்களில் வர வேண்டிய பயணம் எட்டு மணித்தியாளமானது.

ஆனாலும் அதை பற்றிய எந்த கவலையும் அவர்களுக்கு இல்லை. வண்டியோட்டுவதும், பாதையோர கடைகளில் கண்டதை சாப்பிடுவதுமாக அவர்களின் பயணம் இருக்க, நடக்க போகும் விபரீதம் அறியாமல் சிரித்து பேசி மகிழ்ந்தனர்.

சீகிரியா வந்ததும் பைக்கோடு ஒருவன் இருக்க அவனிடம் காரை ஒப்படைத்த ரஹ்மான் கண்டலம ஹோட்டலில் சந்திக்கலாம் என்று புன்னகையோடு விடை பெற்றவன் மனைவிக்கு ஹெல்மெட்டையும் மாட்டிவிட

“இன்னும் எவ்வளவு தூரம்?” 

“இருபத்தி இரண்டு கிலோமீட்டர்ஸ்”

“அவ்வளவு தானா?”

“தம்புளைல இருந்து பைக்ல போலாம்னுதான் பாத்தேன். பத்து கிலோமீட்டர் பத்தாதுன்னு இங்க இருந்து” சொல்லியவாறே வண்டியில் ஏறியவன் மனைவி ஏறியதும் அவள் துப்பட்டா வண்டி சக்கரத்தில் சிக்கி விடாது கவனமாக முன்னாடி எடுத்து முடிச்சிடும்படி கூறினான்.

“டன். போலாம் போலாம் ரைட்” ஷஹீ சந்தோசமாக சொல்ல அவள் கைகளை இரண்டையும் இழுத்து தன் வயிற்றோடு சேர்த்து அணைக்க

“என்ன பண்ணுறீங்க? நா தோளயே பிடிச்சிக்கிறேன்” என்று கைகளை விலக்க போக

“போற வேகத்துக்கு நீ கீழதான் இருப்ப. பேசாம பிடிச்சிக்க” என்றவன் குழந்தைகளின் கையை கட்டுவது போல் கட்ட அவன் தோளில் தாடையை பதித்தவள்

“இப்போவாச்சும் வண்டிய எடுக்குறீங்களா?”

“இதோ மேடம்” என்றவாறே வண்டியை கிளப்பினான்.

காலநிலையும் வெப்பத்தை அள்ளி வழங்க வண்டி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் வீசிய காற்றும்  இதமாகத்தான் இருந்தது.

காரில் வரும் பொழுது கேட்ட பாடல்கள் இல்லை. வண்டியின் சத்தம் மட்டுமே! பாதையும் நீண்டும், வளைந்தும் மாறிமாறி சென்று கொண்டிருக்க, பாதையின் இரு புறமும் வெட்டவெளியும், பொட்டல் காடும் இடையிடையே வீடுகளும் தோன்றி மறைந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பேசினாலும் கத்தித்தான் பேச வேண்டும். அதை விட அமைதியாக காற்றில் மிதந்து பயணத்தை ரசிப்பதை விரும்பினர்.

தபுள்ள மற்றும் சிகிரிய பிராதான நகரங்கள் என்பதால் கொழும்பில் இருந்து வரும் வாகனங்களும் அதிகம். ஆனால் இன்று பாதையில் ரஹ்மானின் வண்டியை தவிர வேறு வண்டியை காணவில்லை. அது கூட தொந்தரவில்லாத பயணத்துக்கு நிம்மதி அளித்தது. 

ஆனால் அந்த சந்தோசம் சில நிமிடங்கள் தான். தூரத்தே ஒரு பஸ் ஹார்ன் அடித்தவாறு வந்து கொண்டிருந்தது. வரும் வேகம் பார்த்தாலே தெரிந்தது நேற்று செல்ல வேண்டிய பயணத்தை இன்று செல்கிறார்கள் என்று. ரஹ்மான் வண்டியை மிதமான வேகத்தில் ஓடியதால் பஸ்ஸுக்கு வழி விட்டே ஓட்ட அந்த பஸ்ஸுக்கு பின்னால் இன்னொரு பஸ் அதி வேகமாக வந்து கொண்டிருந்ததை கவனிக்கவில்லை.

இரண்டுமே தனியார் பேருந்துக்கள். யார் முதலில் நகரத்தை அடைவதென்று அவர்களுக்குள் போட்டி. இது அன்றாடம் நடப்பதுதான். அந்த பாதையில் சீசீடிவியும் இல்லை. வாகனங்களும் ஒதுங்கியே போக பேருந்துகளின் அட்டகாசம் ஓய்ந்த பாடில்லை.

எதற்கு வம்பு என்றுதான் வரும் வேகம் கண்டு ரஹ்மானும் ஒதுங்கியே வண்டியை செலுத்தலானான். ஆனால் அவன் கெட்ட நேரம் பாதையின் வளைவால் இரண்டாவது பேருந்தை கவனிக்கவில்லை.

அடுத்த வளைவின் போது இரண்டாவது பேருந்து முதல் பேருந்தை முந்த போக முதல் பேருந்து பாதையின் ஓரமாக வண்டியை விட ரஹ்மானின் வண்டியின் மீது லேசாக உரச வண்டி பாதையை விட்டு வெளியேறியது.

அதிர்ச்சியில் ஷஹீ ரஹ்மானை கட்டிக்கொள்ள ரஹ்மானும் ஷஹீயிடம் “பானு இறுக்கி பிடிச்சிக்க” என்றே கூறலானான்.

வண்டி சென்ற வேகமும், பஸ்ஸால் தள்ளு பட்ட வேகமும் என்று அதிர்ச்சியால் ரஹ்மானால் வண்டியை நிறுத்த கூட தோன்றவில்லை. சுதாரித்தவன் பிரேக் பிடிக்க எதிலையோ மோதி வண்டி மேலே எழும்ப, விழுந்தால் சிறுகாயம் தான் இருந்தாலும் மனைவியை காப்பாற்ற எண்ணியவன்  நொடியில் சிந்தித்து ஷஹீயை மண்குவியல் மீது தள்ளிவிட்டான். ஷஹீ பாதுகாப்பாய் மறு புறம் விழ இவன் வண்டியோடு இந்த புறம் விழுந்திருந்தான்.

உடலில் இருந்த மண்ணை தட்டிக்கொண்டு எழுந்த ஷஹீ ரஹ்மானை தேட வண்டிக்கடியில் இருந்தவனின் தலை கல்லில் மேல் இருக்கவே கதறியே விட்டாள்.

அவன் ஹெல்மெட் அணிந்திருப்பதெல்லாம் அவள் கண்ணுக்கு தெரியவுமில்லை. தலை அடிபட்டு இரத்தம் வழிகிறதா என்று பார்க்கவுமில்லை. கல்லின் மேல் தலை இருப்பதைக் கண்டதும் வண்டியோடு விழுந்தவன் கல்லில் தலை மோதி ஏதாவது ஆகிவிட்டது என்றே கதறலானாள்.

வண்டியை எவ்வாறு தூக்கி தள்ளி விட்டாள் என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

கணவனின் முகத்தை அள்ளி அணைத்தவள் முகம் முழுவதும் முத்தமிட்டவாறு “ஐ லவ் யு. ஐ லவ் யு கண்ண திறந்து பாருங்க. என்ன விட்டு போய்டாதீங்க” என்று திரும்பாத திரும்ப கூறிக்கொண்டே இருந்தாள்.

அவனை அந்த நிலைமையில் பார்த்ததும் அவளுக்கு அவனை இழந்து விட்டோம் என்று மாத்திரம்தான் தோன்றியது. அவன் மூச்ச்சு விடுவது கூட கவனிக்கும் நிலைமையில் அவளில்லை. சந்தோசமாக வந்த பயணம் இவ்வாறு ஆயிற்று என்ற அதிர்ச்சி. ஷஹீயை எதையும் சிந்திக்கவிடாமல் மனதில் இருந்த காதலை சொல்ல வைத்திருந்தது.

எதுவுமே அருகில் இருக்கும் பொழுது அருமை தெரிவதில்லை. இனிமேல் இல்லை என்று ஆனா பின்பே அது எவ்வளவு முக்கியம் என்று உணர்கிறோம். பொருட்களும் அவ்வாறே! உறவுகளும் அவ்வாறே!

மற்ற எல்லா உறவுகளை விடவும் கணவன், மனைவி  உறவு கடைசிவரை தொடர்வது. காதலை உணரும் தருணம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதம் என்றால் ஷஹீக்கு இவ்வாறு அமைத்து விட்டது.

வண்டியோடு சரிந்த ரஹ்மானும் அதிர்ச்சியின் காரணமாக வண்டியை அப்புறப்படுத்த தெம்பில்லாமல் ஹெல்மெட்டின் பட்டியை கழட்டியவன் தலையை அருகில் இருந்த கல்லின் மீது வைத்து கண் மூடி இருந்தான்.

அவன் சிந்தனையெல்லாம் பேருந்துக்கள் இவர்களை கவனிக்காது பறந்து, மறைந்தே சென்றிருக்க, மாலை வேலை என்பதாலும் வெளிச்சம் இருப்பதாலும் ரஹ்மானால் சமாளிக்க முடிந்தது. இதுவே இரவென்றால் என்ன நடந்திருக்கும்? தெரியாத ஊர். தெரியாத பாதை. எதுவேனாலும் நடந்திருக்கலாம்.

பஸ் வண்டியின் மீது லேசாய் உரசியத்துக்கே இப்படி என்றால்? முற்றாக உரசி இருந்தால்? உயிரோடு இருந்திருப்போமா என்பது கூட சந்தேகம்தான். நினைக்கும் பொழுதே உடல் உதறியது.

அதிர்ச்சியில் இருந்தவனுக்கு மனதில் இருந்த மொத்த தெம்பும் வடிந்திருந்தது. மனைவி கதறுவதோ! வண்டியை அப்புறப்படுத்துவதோ! அவன் கவனத்தில் இல்லை. சட்டென்று ஷஹீ அவனை அள்ளி அனைத்து முத்தமிடவும்  கண்களை திறந்தவன் “ஐ லவ் யு” என்றதும் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

எல்லாம் நடப்பது நன்மைக்கே! ஆபத்து வந்ததென்று அதிர்ச்சியிலிருந்தவனிடம் காதலை சொல்லி பேரதிர்ச்சியோடு மகிச்சியையும் வாரி வழங்கி கொண்டிருந்தான் அவன் மனையாள்.

ரஹ்மானுக்கு நடந்த ஒவ்வொரு விபத்துக்கும் ஷஹீயை காரணமாக்கி ஊர் பரப்பிய வதந்தி நொடியில் ஞாபகத்தில் வர தன்னால்தான், தன்னை திருமணம் செய்ததால்தான் அவனுக்கு இன்று இந்த நிலைமை என்று கதற ஆரம்பித்தாள் ஷஹீ.

கொஞ்சம் இருந்தாலே அழுது கரைபவள் ஒப்பாரியே வைக்க ஆரம்பித்திருக்க,

காதலை ஒப்பிக்கிறாள். முத்தம் கொடுக்கிறாள் என்று கண் மூடி இருந்தால் இவள் இரத்தத்தை கொதிக்க வைக்கிறாள். கொதித்த ரஹ்மான் என்றுமில்லாது அவன் பானுவின் மீது எரிந்து விழுந்தான்.

“ஏய் என்ன லூசு மாதிரி உளறி கிட்டு அறைஞ்சேன்னு வை. முதல்ல அழுகிறத நிறுத்து டி. எனக்கு ஒன்னும் இல்ல” எழுந்தமர்ந்த ரஹ்மான் ஷஹீயின் கண்களை துடைத்து விட திருதிருவென முழித்தவள் சந்தோசத்தில் அவனைக் கட்டிக்கொண்டாள்.

மாலை வேலையானாலும் வெயில் சுல்லென்றுதான் அடித்தது. மணலும் சுட்டது.

“உனக்கு ஒண்ணுமில்லயே! பானு” ரஹ்மானின் குரலிலும், கண்களிலும் அச்சம் வெளிப்படையாகவே தெரிந்தது.

வெக்கப்பட்டவாறே தலைகவிழ்ந்தவள் தலையசைத்து இல்லையென்று “உங்களுக்கு” அவன் முகம் பார்த்து கேட்டு அவனை ஆராயலானாள்.

அவள் வெக்கம் கண்டு அவன் கோபமும் மெல்ல தணிந்தது. “பைக் காலுக்கு மேல விழுந்துள்ள கால் போச்சுன்னு நினைக்கிறேன்” மெதுவாக நகைக்க ஷஹீ அவன் காலை ஆராயலானாள்.

மிதமான வேகத்தால் சென்றதாலும் சுதாரித்து பிரேக் பிடித்து நிறுத்தியதால் பெரிதாக அடியொன்றுமில்லை. வண்டி மேல் எழுந்து கவிழ்ந்ததில் தான் ரஹ்மானின் மேல் விழுந்திருப்பது போல் தோன்றினாலும் பின்னாடி சக்கரம்தான் அவன் காலின் மேல் இருந்தது. காலில் சிறு சிராய்ப்பு அவ்வளவுதான் அதற்கே ஷஹீ பதற ரஹ்மான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தலைவேறு கல்லில் பட்டதாகவும் சொல்லி அவனை மருத்துவமனைக்கு செல்லலாம் என்று வற்புறுத்தலானாள்.

“வா முதல்ல பைக்குக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கலாம் ஆசையாசையா பைக்ல போலாம்னு வந்த பயணம் இப்படியாகிருச்சு. ஆனாலும் பாரேன் எனக்கு ஏதாவது ஆகிருச்சுனாதான் நீ ஐ லவ் யு சொல்லுவ போல இருக்கு”  கிண்டலாக மொழிவது போல அவள் முகத்தை பார்த்தவாறே நிற்க வெக்கப்பட்டவாறே அவன் தோளில் அடித்தவள் அவன் மார்பில் புதைத்தாள்.

ஷஹீ தன் மனதை உணர்ந்து விட்டாள். தனக்கு ரஹ்மான் மேல் இருப்பது கணவன் என்ற பிடித்தம் மாத்திரம் அல்ல காதலும் தான் என்பதை அவனை இழந்து விட்டோம் என்று நினைத்த தருணத்தில் உணர்ந்து விட்டாள்.

இது போலவே தன் மனதை உணர அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. அது அன்று அவள் ஆற்றில் மூழ்கி மூர்ச்சையாகி போவேன் என்று எண்ணிய போது. இனிமேல் ரஹ்மானை பார்க்கவே முடியாது என்றுதான் அவள் மனம் எண்ணியதே தவிர பெற்ற அன்னையையோ! கூட பொறந்த சகோதரனையையோ ஒரு தடவையாவது நினைத்து பார்த்தாளா?

அந்த கணம் அவள் சிந்திக்கும் மனநிலையிலும் இல்லை. அச்சத்தில் வெடவெடத்துக் கொண்டிருந்தவள் பிறகாவது தெளிவாக யோசித்து பாத்திருக்க வேண்டும். ரஹ்மான் தன்னை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு அலைபவன் காதலை சொல்லவில்லை என்று அவன் மேல் கோபம் கொண்டு புலம்பி தவிக்கலானாலே ஒழிய தான் ஏன் மூழ்கும் பொழுது இத்தனை வருடங்களாக தனக்கு எல்லாமாக இருந்த அன்னையையும், அண்ணனையும் விட்டு விட்டு எல்லா பிரச்சினைக்கும் காரணமான ரஹ்மானை மட்டும் நினைத்தாள் என்று யோசிக்க தவறினாள்.

      

அன்றே யோசித்திருந்தால் தன் மனதை அன்றே உணர்ந்திருப்பாள். ரஹ்மான் எத்தனை வருடங்களாக தன்னை காதலிக்கிறான் என்று பீரோவைத் திறந்து பார்த்து அறிந்த போதும். தன் மீது  கொண்டிருக்கும் காதலின்  ஆழத்தை மோதிரம் கொடுத்து உணர்த்திய போதும் தன் மனதை திறந்திருப்பாள்.

இரண்டு சந்தர்ப்பத்தையும் விட்டு விட்டாள். அதை மட்டுமா விட்டு விட்டாள். “இந்த சுற்றுலா பயணம். தேனலவு பயணமாக இருந்திருக்கும். பிறந்தநாளன்று தேனிலவை கொண்டாடி இருக்கலாம். இவ்வளவு தத்தியாவா இருந்திருக்கிறேன்” தன் தலையில் குட்டிக்கொண்டவள் இதயத்தில் ஒரு வித பட படப்போடு ரஹ்மான் வரும் வரை காத்திருக்கலானாள்.

விபத்து நடந்த இடத்திலிருந்து கண்டலமவரை ரஹ்மான் தான் வண்டியை செலுத்தினான். ஷஹீ எவ்வளவு கூறியும் தனக்கு ஒன்றுமில்லை என்றவன் அவளின் வற்புறுத்தலின் பெயரில் மருத்துவமனைக்கும் சென்று பரிசோதனைகளையும் மேற்கொள்ள ஒரு மணித்தியாலங்கள் ஓடி இருந்தது.

அதன் பின்னே இருவரும் கிளம்பி கண்டலம ஹோட்டலுக்கு சென்றனர். வண்டியோடு நின்றவண்டிடம் வண்டியை ஒப்படைத்து நடந்த விபத்தை பற்றியும் கூற இது போன்ற சம்பவங்கள் ஏராளம் நடைபெறுவதாக கூறியவன் போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கும்படி வலியுறித்தினான்.

ரஹ்மானுக்கு சும்மா விட மனசில்லை. ஆனாலும் தெரியாத ஊர். வந்திருப்பது பானுவோடு. வந்திருக்கும் சுற்றுலா பயணம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்து விடுமோ என்று அஞ்சி, வண்டி எண் கூட தெரியாதே! என்று உண்மையை கூறினான்.

கம்பளைண்ட் மட்டும் கொடுக்கலாம் போலீஸ் பார்த்துக்கொள்ளட்டும் என்று விட, அரையொதுக்கி ஷஹீயை குளித்து ரெஸ்ட் எடுக்குமாறு கூறியவன் கிளம்பி சென்றிருந்தான்.

போலீஸ் ஸ்டேஷனில் ரஹ்மான் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. சொல்ல போனால் விபத்து நடந்த ஏரியா தங்கள் ஏரியாவுக்குள் வராததால் கேஸை எடுக்க முடியாது என்றே கூறலாயினர்.

அதற்காக மீண்டும் சீகிரியா செல்ல முடியாது. பேசாம திரும்பி போய்டலாம் எனும் பொழுதுதான் உள்ளே வந்த ஐ.ஜி. என்ன ஏது என்று விசாரித்தார். நடந்த சம்பவத்தை கூறிய ரஹ்மான் தான் வெளியூர் என்றும் தன்னால் அடிக்கடி வழக்குக்காக இங்கே வந்து செல்ல முடியாதென்றும் கூற,

“இந்த ஊரில் மட்டுமில்லை எல்லா பிரதான நகரங்களுக்கு செல்லும் சாலைகளிலும் தனியார் பேருந்துக்களின் அட்டகாசம் அடங்காமல் தான் இருக்கிறது. பொதுமக்கள் கம்பளைண்ட் கொடுக்காமல் ஒதுங்கி போவதால் தான் பிரச்சினை தீவிரமாக உள்ளது. என்ன விஷயமாக இந்த ஊருக்கு வந்திருக்குறீங்க?”

“புதுசா கல்யாணம் பண்ணி மனைவியோட வந்திருக்கேன் சார்”

“இது வேறயா?” அந்த ஒற்றை சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது.

“சந்தோசமாக தேனிலவுக்கு வந்த ஜோடி சாலை விபத்தில் பலி” பத்திரிக்கையில் கொட்டை எழுத்தில் வரும் செய்தி தானே! வாழ வேண்டியவர்கள் யாரோ ஒருவனின் கவனக் குறைவால் உயிரை இழந்து மாண்டு போவதா?” குடும்பத்தாருக்கு எவ்வாறு ஆறுதல் செய்வதென்று திணறிய சமம்பவங்கள் ஏராளம்.

“சரிப்பா வண்டி நம்பரும் தெரியாதுன்னு சொல்லுறீங்க நீங்க கிளம்புங்க. நா இத பொது பிரச்சினையா மேலிடத்துக்கு கொண்டு போறேன்” 

“இவங்கெல்லாம் இப்படித்தான் சார் காச வாங்கிட்டு கண்டுக்க மாட்டாங்க” காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த வண்டிக்காரன் சொல்ல

“எனக்கென்னமோ அவரை பார்த்தா தப்பானவரா தெரியல. பார்க்கலாம்” என்ற ரஹ்மான் அவனிடமிருந்து விடை பெற்று ஹோட்டலை வந்தடைய மணி ஆறாகி இருந்தது.

“போன காரியம் என்ன ஆச்சு”

“கம்ளைன் கொடுக்கல வாய் வார்த்தையா விசாரிச்சாங்க. ரொம்ப டயடா இருக்கு. வண்டி ஓட்டிட்டு வந்த டயட் வேற ஒரு ரெண்டு மணித்தியாலம் தூங்கவா? உனக்கு பசிக்குதா?

“இல்லங்க. வரும் வழியெல்லாம் கண்டதெல்லாம் சாப்பிடத்துல பசிக்கல. நீங்க தூங்குங்க. நான் டீவி பாக்குறேன்” என்றவள் டிவியின் முன் அமர்ந்து கொள்ள ரஹ்மான் அடித்து போட்டது போல் தூங்கலானான்.

தூங்கி எழுந்த ரஹ்மான் குளித்து விட்டு வர ஷஹீ அவன் முகத்தை முகத்தை பார்க்கலானாள்.

“என்ன பானு என் கிட்ட ஏதாவது சொல்லனுமா?”

“ஒன்னும் இல்லையே!” என்றவள் வாய்க்குள் வசை பாட

தோளை குலுக்கியவன் “மேடம் சீக்கிரம் தயாராகி வந்தீங்கன்னா கீழ போய் கேண்டில் நைட் டின்னை சாப்பிடலாம்” என்று சிரித்தவாறே சொல்ல

“அது ஒண்ணுதான் குறைச்சல்” என்று கணவனை திட்டியவாறே சோபாவில் இருந்த தலையணையை அவன் மேல் வீசி விட்டு குளியலறையினுள் புகுந்திருந்தாள்.   

பானு குளியலறையிலிருந்து வரும் பொழுது ரஹ்மான் வெள்ளை ஷார்ட் பேண்ட்டில் தயாராகி நிற்க “டினருக்குத்தானே போறோம்?”

“ஆமா” என்றவன் அவளை கண்டு கொள்ளாமல் கண்ணாடியின் முன் நின்று தலை வாரலானான்.

உதடு சுளித்தவள் “எதோ பங்க்சனுக்கு போறது போல ரெடியாகி இருக்குறாரு நான் மட்டும் சாதாரணமா போக முடியுமா?” என்று விலை உயர்ந்த லேகங்காவை அணிந்து கொள்ள கண்ணாடி வழியாக அவளை பார்த்திருந்தவன் புன்னகைத்தவாறே நின்றிருக்க

“தள்ளுங்க” என்றவள் கண்ணாடி முன் நின்று தலை வாரி மிதமான ஒப்பனையில் தயாராகி வர பெருவிரலையும், ஆள் காட்டி விரலையும் மடக்கி “சூப்பர்” என்றவன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.  

உணவகம் வெட்ட வெளியில் குறைந்த ஒளி விளக்குகள் ஏற்றப்பட்டு அமைக்கப்பட்டதோடு ஒவ்வொரு தனி மேசையும் அலங்கரிக்கப்பட்டு மெழுகுவர்த்திக்கு குவளை வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு கண்ணை கவர்ந்தது.

தடுப்பு சுவர் கொண்டு தனியான மேசைகளும் தனிமையை நாடுவோருக்காக பூக்கள் அலங்காரத்தோடு காணப்பட அவ்வாறான ஒரு மேசையை ஒதுக்கி இருந்தான் ரஹ்மான்.

மெல்லிசையும் ஒரு புறம் தவழ்ந்து வர, பூப்பே உணவகமும் ஒரு புறம் இயங்க, விரும்புவோருக்கு உடனே அவர்களின் கண் முன்னால் சமைத்தும் கொடுக்கப்பட்டது.

“ரொம்ப அழகா இருக்கில்ல. பகல்ல வெயில் கொளுத்தும். ராத்திரில இந்த இடம் இப்படி இருக்கு” அமர்ந்தவாறே சொன்னாள் ஷஹீ

“ம்ம்… என்ன சாப்பிடுற?” குறும்பு புன்னகை உதட்டில் தவழ கேட்டான் ரஹ்மான்.

அந்த இடத்தை பார்த்ததில் கணவன் மீதான கோபம் மறந்திருக்க மீண்டும் முகத்தை தூக்கிக் கொண்டவள் “எதுவேனாலும் சொல்லுங்க. சாப்பிடறதும், தூங்குறதும் தானே வேல” என்றாள்.

அவள் கோபம் ஏன் என்று புரிந்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் சில உணவுகளை வரவழைத்தவன் அமைதியாக உண்ணலானான்.

ஷஹீக்கு ரஹ்மானின் மேல் அப்படியொரு கோபம் வந்தது. காதலை சொல்ல வெக்கப்பட்டு அவன் தூங்கும் பொழுது விரலில் மோதிரத்தை அணிவித்திருந்தாள். “குளிக்கும் பொழுது கண்டிருக்க மாட்டானா? துடைக்கும் பொழுது கண்டிருக்க மாட்டானா? ஆடையணியும் பொழுது கண்டிருக்க மாட்டா?

கண்டும் காணாதது போல் இருக்கின்றானா? அல்லது கவனிக்கவில்லையா? அது எப்படி விரலில் இருக்கும் மோதிரம் கண்ணுக்கு தெரியாமல் போகும்? ஒருவேளை கவனிக்கவில்லையென்றால்?” இவ்வாறு குழம்பி தவித்துக்கொண்டிருந்தது அவள் மனம்.

விழித்தெழுந்த கணவன் மோதிரத்தைக் கண்டு தன்னை கொஞ்சுவான். காதல் மொழி பேசுவான் என்று எதிர்பார்க்க குளியலறைக்குள் நுழைந்திருந்தான். சரி கவனிக்கவில்லை என்று நினைக்க, குளித்து விட்டு வந்தவன் உணவுண்ண அழைத்து வந்து விட்டான். வளமை போல் அவளால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது.

“ஏங்க இந்த ரிங் என் விரலுக்கு ரொம்ப அழகா இருக்கில்ல” இடது கையை கணவனின் புறம் நீட்டியவள் வேண்டுமென்றே திருப்பி திருப்பி காட்டலானாள்.

“ஆஹா… இப்படி கிளம்பிட்டாளே!”

தூங்கி எழுந்த ரஹ்மான் குளிக்கும் பொழுது மோதிரத்தை கவனித்து விட்டான். “அடிப்பாவி தூங்கும் போதாடி மோதிரம் போடுவ. செல்லாது செல்லாது. ஐ லவ் யு சொல்லி போட்டிருக்கணும் டி. முத்த மழையே பொழியவச்சிருப்பேனே” என்றவன் முகத்துக்கு நேராக விரலை வைத்து “இன்னும் என்ன முத்த மழைனு சொல்லிக்கிட்டு பஸ்ட் நைட்டே கொண்டாடிடுடா” குதூகலமானவன் என்ன பண்ணலாம் என்று குளித்து முடிக்கும் பொழுதே யோசித்து விட்டான்.

டின்னர் சாப்பிடுவது ஏற்கனவே பிளான் பண்ணதுதான். அதனால் பானுவை அழைத்து வந்திருக்க உடனே அறைக்கும் போக முடியாது. அவளும் விடாது மோதிரத்தை பற்றி பேச ஆரம்பித்திருந்தாள்.

“நல்லா இருக்கு” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவன் உடனே “சாப்பாடு நல்ல இருக்கு. சாப்பிடு” என்று ஆரம்பித்து கண்டலம ஊரை பற்றியும், ஹோட்டல் பற்றியும் பேச ஆரம்பித்தவன் அவளை பேசவே விடவில்லை. நொந்து விட்டவள் அவனை முறைத்தவாறே சாப்பிட்டு முடித்தாள்.

ஹோட்டல் ஊழியன் ஒருவன் வந்து ரஹ்மானின் காதில் ரகசியமாக ஏதோ சொல்ல புருவம் உயர்த்தினாள் பானு. அவனுக்கு நன்றி கூறியவன் மனைவியோடு அறைக்கு நடந்தான்.

“என்ன பானு அமைதியாகவே வர”

“அதான் என்ன பேச விடாம லெக்சர் கொடுத்து வாய அடைச்சிட்டீங்களே!” அவன் முகம் பார்த்து முறைத்த பானு நடக்க அவள் தோளில் கை போட்டான் ரஹ்மான்.

“கைய எடுங்க”

“யாரும் நம்மள கண்டுக்க போறதில்ல. கேள்வியும் கேக்க மாட்டாங்க” என்றவன் தோளில் இருந்த கையை எடுக்காது நடக்க அவன் மேல் இருந்த கோபம் அவளை சீண்டவே அறை சீக்கிரம் வராதா என்றிருந்தது.

அறை வந்ததும் “பானு நீ கொஞ்சம் வெளிய இரு நான் கூப்பிட்டதும் உள்ள வா” என்று ரஹ்மான் சொல்ல

“இங்க பாருங்க. விளையாடாதீங்க எனக்கு தூக்கம் வருது. தூங்கணும்” கோபத்தில்தான் சொன்னாள்.

கதவை திறக்காமல் சாய்ந்து நின்றவன் “என்னது தூக்கம் வருதா? இன்னைக்கி தூங்க முடியாது மேடம்” என்றவன் நகைக்க முழித்தாள் பானு.

“என்ன சொல்கிறான் இவன்” என்று கணவனை பார்க்க கதவை திறந்தவன் அவளை உள்ளே செல்ல வழி விட்டான்.

அறையை முதலிரவு அறை போல் அலங்கரிக்கும்படி ஹோட்டல் மேனேஜரை கேட்டுக்கொண்டிருக்க எல்லாம் சரியாக இருக்கா என்று பார்க்க வேண்டி இருந்ததால்தான் வெளியே நிற்க சொன்னான்.

பானுவின் கோபத்தின் அளவை நன்கு அறிந்தவன் “முதலுக்கே மோசம் வந்திடும் போல் இருக்கே ரஹ்மான்” முணுமுத்தவன் கதவை திறந்து வழி விட்டு நிற்க உள்ளே சென்றவள் ஆச்சரியத்தில் கூச்சலிட்டு கணவனின் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிடலானாள.

Advertisement