Advertisement

அத்தியாயம் 23

அன்று அய்நா குடும்பம் ஊருக்கு செல்வதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். நவ்பர் பாய் மட்டும் கடைக்கு போனவர் பத்து மணியளவில் வந்திருந்தார்.

கல்யாணத்துக்கு வந்தவர்கள் போட்டது போட்ட படியே வந்திருக்க, மறுவீட்டு விருந்து முடிந்த பின்தான் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதில் அய்னாவின் கணவர் மாத்திரம் ஊருக்கு சென்று தொழிலை கவனித்து விட்டு மறுவீட்டு விருதுக்காக வந்தவர் மீண்டும் சென்று நேற்று மாலை குடும்பத்தை அழைத்து செல்ல வந்திருந்தார்.

ஹாஜரா இங்கே காலேஜ் செல்வதால் அவளை தவிர மற்ற அனைவரும் ஊருக்கு கிளம்ப தயார்நிலையில் இருந்தனர். ரஹ்மானிடம் சொல்லிக்கொண்டு காலை உணவின் பின் கிளம்பலாம் என்று பார்த்தால் புதுமண தம்பதியினர் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

ரஸீனா அய்நாவிடம் தான் பார்த்ததை கூறி மதிய உணவை சாப்பிட்ட பின்னே செல்லுமாறு கேட்டுக்கொள்ள அய்நாவும் சரி என்று விட்டாள்.

ரஹ்மானும், பானுவும் எழுந்துகொள்ள காலை பதினோரு மணி தாண்டி இருந்தது. முதலில் கண் விழித்தது ரஹ்மான் தான். தன் நெஞ்சோடு உரசிக்கொண்டு தன்னை கட்டிக்கொண்டு வளமை போல் தூங்கும் மனைவியை இன்று காதல் பெறுக பார்த்தான் ரஹ்மான்.

வழக்கத்துக்கு மாறாக கன்னத்தில் முத்தம் வைக்காமல் அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பிக்க தூக்கம் களைந்தாள் பானு.

“தூங்கிட்டு இருக்குறவ கிட்ட பண்ணற வேலையா இது?” தோளில் இரண்டு அடிகளை வைக்க

“டேலி கன்னத்துலதான் கிஸ் பண்ணுவேன் அதான் உனக்கு நான் லவ் பண்ணுற விஷயம் தெரிஞ்சிருச்சே இனி கிஸ் பண்ண வேண்டிய இடம் கன்னம் இல்ல இங்கனுன்னு..” மீண்டும் முத்தமிட

“சீ.. சீ.. விடுங்க விடுங்க நா இன்னும் ப்ரஷ் கூட பண்ணல”

“நான் கூடத்தான் பண்ணல”

“சீ…”

“என்ன சீ… சொல்லுற ஒரு டர்ட்டி கிஸ்ஸோட மதிப்பு தெரியுமா உனக்கு. ஐஞ்சி நிமிஷம் கிஸ் பண்ணா நானூறு கலோரி பார்ன் ஆகும் ஜிம்முக்கே போக வேண்டியதில்லை”

ரஹ்மான் பேச ஆரம்பிக்கும் பொழுதே எழுந்த ஷஹீ ஜன்னலை திறந்து விட்டுக்கொண்டிருக்க அவன் கூறியதை கேட்டவள் அவன் புறம் திரும்பி அவனை நன்றாக முறைக்கலானாள்.

“என்ன முறைக்குற? ஒரு நாளை அஞ்சு கிஸ் போதும் பானு பாடிய பிட்ட வச்சிக்கலாம்”

“எங்க அந்த தொடப்ப கட்ட அவனவன் ஜிம்முல ரெண்டவர் மூணவர் டைம் ஸ்பென்ட் பண்ணி பாடிய பில்டப் பண்ணா இவரு கிஸ் பண்ண காரணம் கண்டு பிடிக்கிறாரு. அங்கேயே இருங்க இன்னைக்கு உங்களுக்கு செமத்தியா இருக்கு” மனதளவில் நன்றாகவே நெருங்கி விட்ட ஷஹீ ரஹ்மானோடு வாயாட, அறைக்குள்ளேயே ரஹ்மானை விரட்ட ஆரம்பித்திருக்க அவனும் கட்டில் மேல் ஏறி தாவி அந்த பக்கம் இந்த பக்கம் குதித்து ஓடலானான்.

ஒரு கட்டத்தில் அவளிடம் வேண்டுமென்றே மாட்டிக்கொண்டவன் அடிகளையும் பரிசாக பெற்றுக் கொண்டு தன் கைகளால் அவள் இடுப்பை வளைத்து பிடித்துக்கொண்டான்.

அவனை அடித்து மூச்சு வாங்க நின்றவளோ அவன் கைகளுக்கு சிறைப்பட்டதை அறியாமல் அவன் தோள்களில்லையே சரணடைய அவளை மேலும் தன்னுள் இறுக்கியவன் மெதுவாக அவள் இதழ்களை முற்றுகையிட்டான்.

இந்த தடவை ஷஹீ விலக வில்லை. கைகளை மாலையாக ரஹ்மானின் கழுத்தில் கோர்த்துக் கொண்டவள் முத்தத்தில் லயிக்க ரஹ்மானின் அலைபேசியில் அலாரம் அடித்தது.

அந்த சத்தத்தில் விலகி நின்ற இருவரும் ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைக்க அலைபேசியை கையில் எடுத்த ரஹ்மான் அலாரத்தை அணைத்தவாறே

“என்ன பானு குட்டி டர்ட்டி கிஸ் கொடுத்ததும் அந்த விரட்டு விரட்டின இப்போ கொடுத்தது மட்டும் டர்ட்டி கிஸ் இல்லையா?”

“உங்கள…” மீண்டும் அவனை துரத்த ஆரம்பிக்க

ஓடாமல் அவளை வளைத்து பிடித்தவன் “சரியான ஆளுதான் டி நீ ரூமுக்குள்ளயே எப்படி எக்சசைஸ் பண்ணுறதுனு தெரிஞ்சி வச்சிருக்க” மீண்டும் முத்த மிட போக

கை கொண்டு அவன் இதழ்களை மூடியவள் “மணியை பாத்திங்களா? மொதல்ல போய் குளிங்க” மிரட்டலாகவே சொல்ல

“இன்னும் மூணு கிஸ் இருக்கு டி”

“இந்த தடவ உதை விழும்” டவலை கையில் கொடுத்தவள் குளியலறை புறம் தள்ள

“ஒண்ணே ஒன்னு டி மத்த ரெண்டும் குளிச்சி வந்து வாங்கிக்கிறேன்” என்றவன் ஷஹீ திமிரத் திமிரை பலவந்தமாகவே முத்தமிடலானான்.

திமிறி விலக்கியவள் “கதவை தட்ட முன்ன போய் குளிங்க இன்னைக்கு அய்நா சாச்சி எல்லாரும் ஊருக்கு போறதா சொன்னாங்க இல்லையா மறந்துட்டீங்களா?”

“ஓஹ்… யா யா” சந்தோஷமாகவே சொன்னவன் “அப்போ வா சேர்ந்தே குளிக்கலாம்” என்று அவளின் கைய பிடித்து இழுக்க

“இன்னைக்கு உங்களுக்கு என்னமோ ஆச்சு. போங்க போங்க சீக்கிரம் குளிங்க” ரஹ்மானை தள்ளி விட்டாள் ஷஹீ.

“சரி நான் வெளிய குளிக்கிறேன். நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா” என்றவன் துண்டோடு அறையை விட்டு  வெளியேறி இருந்தான். 

ரஹ்மான் குளித்து விட்டு வரும் பொழுது லுஹருக்கு அதான் சொல்லவே ஆண்கள் அனைவரும் கிளம்பி பள்ளிக்கு செல்ல பெண்கள் சமையலில் ஈடு பட்டுக்கொண்டிருந்தனர்.

சஹன் தான். ஆண்களுக்கு ஒன்றும் பெண்களுக்கு ஒன்றும் பரிமாறப்பட வாசலில் பாய் விரித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்தே பகல் உணவை உண்டனர்.

ஒன்றாக உணவு உண்பதை இது போல் குடும்பத்தோடு உண்ணும் பொழுது விட்டுக் கொடுத்திடலாம் என்று ஷஹீ ரஹ்மானிடம் கேட்டுக்கொள்ள சரி என்றவன் ஒரே ஒரு கண்டிஷனையும் வைத்திருந்தான். அது அவன் உண்ணும் முதல் வாயை அவளுக்கு ஊட்டி விடுவதே!

அத்தனை பேர் முன்னிலையிலுமா? என்று ஷஹீ மறுக்க, ரஹ்மான் பிடிவாதம் பிடித்ததில் சரி என்றவள் அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

இன்று சோற்றை பிசைந்து அவளை தன் புறம் திருப்பி ஊட்டி விட்டுத்தான் உண்டான். யாரும் எதுவும் சொல்லவுமில்லை. கண்டு கொள்ளவுமில்லை. அவளும் அமைதியாக சாப்பிடலானாள்.

உண்ணும் போதே ஹாஜராவின் கல்யாண பேச்சை ஆரம்பித்தான் ரஹ்மான்.

“ஏன் சாச்சி ஹனா கல்யாணத்த சேர்த்து ஹாஜி கல்யாணத்தையும் வைக்கலாமே! ஒரே கல்லுல ரெண்டு மங்கா. செலவும் குறைவு தலைவலியும் உங்கள விட்டு போய்டும்”

“அதைத்தான் பா நானும் யோசிக்கிறேன்” அய்நாவும் சிரிக்க

சாப்பிட்டு கொண்டிருந்தவள் திரும்பி இடது கையால் அவன் முதுகில் ஒரு அடி வைத்து விட்டு “நான் தலைவலியா? அப்போ நான் இங்க இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா” என்று முகத்தை சுருக்க

“நீ இங்க இருக்குறது எங்களுக்கு பிடிக்கிறது இருக்கட்டும் உங்க வீட்டாளுங்களுக்கு தலைவலின்னுதான் உன்ன இங்க துரத்தி விட்டிருக்காங்க இல்லையானு கேளு” பாஷித் வம்பிழுக்க

“ஆமா இவ வீட்டுல இருந்தா ஒரே சத்தம் நிம்மதியா டீவி கூட பாக்க முடியாது ஹனாக்கா தான் குட்” ஆதிலும் ஒத்தூத

“முதல்ல சாப்பிடுங்க எப்போ பாத்தாலும் அவளை வம்பிழுத்துக்கிட்டு” ரஸீனா அதட்டலானாள்.

“கிண்டல் பண்ணாலும் விஷயம் உண்மை தானே சகல ஹானாவும் ஹாஜிக்கும் ஒரு வருடம் தானே வித்தியாசம். இப்போ பண்ணாவிட்டாலும் மாப்புள தேடினா படிப்பு முடிஞ்சா உடனே கல்யாணத்த பண்ணிடலாம்ல. ஹனா மாப்பிள்ளையும் வெளிநாட்டுல இருந்து வர ஆறு மாசம் ஆகும்னு சொல்லுறீங்க அவ கல்யாணத்தோட பண்ணாலும் சரி இல்ல படிப்பு முடிஞ்சி பண்ணாலும் சரி. மாப்புளய பாத்துடலாமே” கையில் சோற்றை வைத்துக்கொண்டு நவ்பர் பாய் சொல்ல முகம் மாறினாள் ஹாஜரா.

“கைல மாப்புளய வச்சி கிட்டு எதுக்கு தேடணும்” ரஹ்மான் சொல்ல “அதுயாரு அந்த மாப்புள” என்று  அனைவரும் அவனை ஏறிட்டனர்.

“முதல்ல சாப்பிடுங்க, சாப்பிடும் போது பேச கூடாதுனு தெரியாதா? சாப்பிட்டுக்கிட்டே தான் நல்ல விஷயம் சொல்லனுமா? முதல்ல சாப்பிட்டு முடிங்க” ரஸீனா ஒரே போடாக போட அனைவரும் அமைதியாக உண்ணலாயினர்.

ஹாஜராவின் மனதிலோ ரஹ்மான் யாரை பற்றி கூறுகிறான் என்ற சந்தேகம் முளைக்க கூடவே இருப்பது அஸ்ரப் என்பதால் கண்டிப்பாக அது அஸ்ரபாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தவள் ரஹ்மான் பேச்சை தொடங்கும் பொழுதே பிடிக்கவில்லை என்று சொல்லிவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

சாப்பிட்டு முடித்த உடனே அய்னாவின் கணவருக்கு ப்ளாக் காபி சாப்பிடும் பழக்கம் இருப்பதால் அவர் காபி கேக்க ரஹ்மானும் தனக்கு வேண்டும் என்று சொல்ல பஷிதும் வேண்டும் என்றான்.

ஷஹீயும் ஹாஜராவும் சஹன் இரண்டையும் கறிகள் இருந்த தட்டுகளை சமயலறைக்கு எடுத்து சென்று கழுவ, வாசலில் இருந்த பாயை ரஸீனா சுத்த அன்னைக்கு உதவலானான் பாஷித்.

ஹனா அனைவருக்குமே காபி போட அனைவருமே வாசலில் அமர்ந்திருக்க அய்நா வந்து பரிமாறினாள். ஒவ்வொருவரும் கப்புக்களோடு ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

“இப்போ நல்ல விஷயம் பேசலாம்ல” பாஷித் கூற அவனை முறைத்த ஹாஜரா

“நான் படிப்பு முடியுற வரைக்கும் கல்யாணம் பண்ணுறதா இல்ல” ஹாஜரா கோபமாக சொல்ல

“கல்யாணம் பேசி வைக்கிறதுல உனக்கு என்ன பிரச்சினை?” அய்நா தான் கேட்டாள்.

பதட்டமானவள் “கல்யாணம் பேசினா படிப்புல கான்சன்ட்ரேட் பண்ண முடியாது”

புன்னகைத்த ஹனா “நானும் படிக்கிறேன். பானு மைனியும் படிக்கிறாங்க. என் காலேஜ் செமஸ்டர் லீவுனு அவங்க கல்யாணத்துக்கு படிக்கிறதையும் விட்டுட்டு இங்க இருக்கேன். வீட்டுக்கு போய் தான் புத்தகங்களை புரட்டணும். அப்படி ஒன்னும் மறந்துடலயே!” சொல்லி முடித்தவள் காபியின் ஒரு மிடறு குடித்தாள்.

“இப்போ என்ன சொல்லுவ? இப்போ என்ன பண்ணுவ?” பாஷித் மேசையில் தட்டியவாறே பாட

“அப்போ இவனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க” ஹாஜரா கோபத்தின் உச்சிக்கே செல்ல

அவ்வளவு நேரமாக அமைதியாக அமர்ந்திருந்த ரஹ்மான் பேசினான். “பேகம் மாமி முபாரக்கு பொண்ணு பார்க்க சொன்னாங்க, நம்ம வீட்டுலையும் பொண்ணு இருக்கு” ரஹ்மான் சொல்லி முடிக்க வில்லை.

அன்று பொண்ணு பார்க்க சென்ற பொழுது நடந்த சம்பவம் ஞாபகம் வரவே ஹஜாராவை பார்த்துப் பார்த்து வேண்டுமென்றே  சத்தமாக சிரித்தான் பாஷித்.

அது இன்னும் ஹஜாராவை சீண்டவே “அந்த சிடுமூஞ்சிய நா கல்யாணம் பண்ணவே மாட்டேன்” என்றவள் அறையினுள் புகுந்து கதைவடைத்துக் கொண்டாள்.

“ஏன் டா…” பாஷிதை முறைத்தான் ரஹ்மான்.

ஹஜாராவை கிண்டல் செய்யவே சத்தமாக சிரித்தான் தவிர நாநாவே கல்யாண பேச்சை ஆரம்பித்ததில் கரணம் இருக்கும் என்பதில் அமைதி ஆனான் பாஷித்.

“முபாரக் தங்கமான பையன். எங்களுக்கு பிடிச்சிருக்கு ஹாஜி விருப்ப படணுமே! அதுவும் இல்லாம அவங்க வீட்டுல விருப்பப்படுவாங்களா?” மனைவியின் முகத்தை பார்த்தே சம்மதம் பெற்றுக்கொண்ட அய்னாவின் கணவர் ரஹ்மானிடம் கூற

பானுவின் முகத்தை பார்க்க அவள் தலை அசைந்ததும் “பானு வீட்டுல நான் பேசுறேன்” என்றவன் ஹாஜராவோடு பேச அறைக்குள் நுழைந்தான். 

ஹனாவும் ஹாஜராவும் அக்கா தங்கை என்றாலும் ஹனா ரொம்ப அமைதியான பெண். ஹாஜரா அவளுக்கு நேர்மாறானவள். ஹனா எல்லா விஷயத்திலும் பொறுமையை கடை பிடிப்பாள் என்றால் ஹாஜரா கோபப்படுவாள்.

அவள் கோபம் நியாயமானதாக இருந்தாலும் பொறுமை என்பதே சிறிதும் இல்லை. நிதானமாக யோசிக்க வேண்டிய நேரத்தில் பொறுமையை இழந்து வார்த்தையை விட்டு விடுவாள்.

இப்பொழுது கூட ரஹ்மான் முபாரக்கை பற்றி கூறியும் பாஷித் சிரித்ததும் கோபத்தில் யோசிக்காமல் வார்த்தையை விட்டு விட்டாள். அறையினுள் நுழைந்தவள் மெளனமாக அழுது கொண்டுதான் இருந்தாள். அவள் எதற்காக அழுகிறாள் என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

முபாரக் ஹாஜராவிடம் சைகையால் ஏதோ சொல்வதை கண்ட ரஹ்மான் கண்களை இடுக்கி யோசனையாக பார்த்தவன் ஹாஜரா முபாரக்கை முறைப்பதும் முபாரக் சிரிப்பதும் சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு கல்யாண வீட்டில் வாலிபர்களுக்குள் நடக்கும் கலாட்டா என்று புரிந்தாலும். முபாரக்கின் குணம் அறிந்த ரஹ்மானால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அதை பற்றி அவனிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் வேறு மனதில் உதித்தது. இத்தனை வருடங்களுக்கு பின் இப்பொழுதான் சுமூகமான உறவு தங்களுக்குள் ஏற்பட்டிருக்க சாதாரணமான பார்வை பரிமாற்றமாக இருந்தால் அதை பற்றி பேசப் போய் வீண் பிரச்சினை தான் கிளம்பும். ஏற்கனவே எதுக்கு பிரச்சனை என்றே தெரியாமல் பிரச்சினைகள் ஓடிக்கிட்டு இருக்கு இதுல இன்னொன்றா? ரஹ்மானின் மனம் கேள்வி எழுப்ப முபாரக்கை கண்காணிக்கலானான்.

பல வருடங்களாக காதல் கடலில் மூழ்கி தத்தளிப்பவனுக்கு தெரியாதா? முபாரக் ஏன் சிரிக்கிறான்? சம்பந்தம் சம்பந்தமில்லாமல் என்ன உளறுகிறான் என்று.

“என்ன மச்சான் லவ்வா? பொண்ணு யாருனு சொன்னா நானும் ஹெல்ப் பண்ணுவேனில்ல?” என்று தூண்டில் போட்டான் ரஹ்மான்.

கண்ட கனவு வேறு அவனை அச்சுறுத்தி  இருக்க, ரஹ்மானிடம் சொல்லலாமா? வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்திருப்பான் போலும். சொல்லாமல் பெண் கேட்க முடியாதே! சொல்லித்தான் ஆகணுமே! என்ன நடந்தாலும் முகம் கொடுக்க தயாராகி, அவர்களுக்குள் நடந்த அனைத்தையும் கூறலானான் முபாரக்.

அலைபேசி அழைப்புகள் முதல் அது நின்றது வரை மீண்டும் அவளை தேட ஆரம்பித்ததிலிருந்து அது ஹனா என்ற சந்தேகம் உட்பட. இல்லை அது ஹாஜரா தான் என்று கண்டு பிடித்தது வரை சொல்லி முடித்தான் முபாரக்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த ரஹ்மான் “உனக்கு என் தங்கச்சிய தர முடியாது” என்று விட

கண்ட கனவு எதிர்பார்த்தது போல் நொடியில் பலிக்க உக்கிர பார்வையை வீசிய முபாரக் “என்ன பழிவாங்க பாக்கிறியா” என்று முறைக்க

“இப்போ தெரியுதா? லவ் பண்ண பொண்ணு உனக்கில்லனு சொன்ன எவ்வளவு கோபம் வரும்னு?” கூலாகவே பதில் சொன்னான் ரஹ்மான்.

“என் தங்கச்சிய கட்டிகிட்ட என்ற திமிரா? விளையாடாத ரஹ்மான்” மூக்கு விடைக்க கண்கள் சிவந்தான் முபாரக்.

“மச்சான் என்ற மரியாதை எல்லாம் காத்துல பறந்துட்டுது போல” சிரிப்பை அடக்கியவாறு மச்சானை வம்பிழுத்தான் ரஹ்மான்.

“இங்க பாரு மச்சான் பழசெல்லாம் மனசுல வச்சசிகிட்டு என் வாழ்க்கைல விளையாடிடாத” ஒரு நொடியில் கோபத்தை கை விட்டவன் சொல்லும் போதே கண்கள் கலங்கினான் முபாரக்.

“டேய் என்னடா தமாஷ் பண்ணாலும் சீரியஸ் ஆகுற. உன்ன மாதிரி அக்மார்க் தங்கமான பையன் ஹாஜிக்கு எங்க தேடினாலும் கிடைக்க மாட்டான் டா.. ஆனா அவ பாத்திருக்குற வேலைதான்…” லேசாக அவனை அணைத்தவாறு கூறினான் ரஹ்மான்.

ரஹ்மான் கிண்டல் பண்ணான் என்றதும் “இங்க பாரு என்ன நடந்ததுன்னு சொன்னாதான் உன்னால முறைப்படி கல்யாணத்த பேசி முடிக்க முடியும்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உண்மையை சொன்னேன். இல்லனா எனக்கு ஹாஜராவ பிடிச்சிருக்குனு மட்டும் சொல்லி இருப்பேன். ஒருவேளை உங்க வீட்டாளுங்க சம்மதிக்கலைனா? அவ எதுக்கு என் கிட்ட பேசாம இருக்கானு தெரியல. முறைச்சிகிட்டே திரியிறா காரணம் தெரியல. அவ கிட்ட பேச முடியல. இப்போ அதுக்கு அவசியமில்லை. நீ வீட்டுல பேசி  கல்யாணத்த நடத்தி வைக்கணும்” மிரட்டலான குரலில் முபாரக் சொல்லி முடிக்க

“நாநாவும் தங்கச்சியும் எப்படிடா சொல்லி வச்சா போல ஒரே மாதிரி போர்போமன்ஸ் பண்ணுறீங்க” என்றவாறு சிரித்த ரஹ்மான் தான் பார்த்துக் கொள்வதாக கூறி இருந்தவன் மறுவீட்டு விருந்து முடிந்த வந்ததும் அய்னாவின் கணவரும் வரட்டும் வந்த பின்னே பேசலாம் என்று இருக்க அவன் எதிர் பார்த்தது போல் ஹாஜராத்தான் பிரச்சினை பண்ணலானாள்.

ஹாஜரா பண்ண தவறையும் சுட்டி காட்ட வேண்டும் அதே சமயத்தில் அவள் மனதில் முபாரக் மீது விருப்பம் இருக்குமா என்று அறியவும் வேண்டும் எவ்வாறு பேச வேண்டும் என்ற யோசனையினூடாகவே அறையினுள் நுழைந்தான் ரஹ்மான்.

“எதுக்கு ஹாஜி இப்போ அழுது கிட்டு இருக்க?” ரஹ்மானின் குரல் அருகில் ஒலித்ததும் கண்களை துடைத்துக் கொண்டவள்

“நா எதுக்கு அழணும்” முகத்தை சுருக்கியவள் எழுந்து நின்றாள்.

“மரியாதையெல்லாம் மனசுல இருந்தா போதும். உக்காரு” ரஹ்மானும் அவள் அருகில் அமர்ந்து கொண்டவன்

“சரி சொல்லு எதுக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்லுற? யாரையாவது லவ் பண்ணுறியா?” நேரடியாகவே தங்கையிடம் கேட்டு விட்டான்.

திருதிருவென முழித்தவள் “இல்ல” என்று தலையசைக்க

யோசனையாக அவளை பார்த்தவன் “இங்க பாரு ஹாஜி லவ் பண்ணுறது ஒன்னும் தப்பில்ல. தப்பான பையன லவ் பண்ணுறதுதான் தப்பு. உன் மனசுல யாராவது இருந்தா பயப்படாம சொல்லு நான் வீட்டுல பேசுறேன்” அவளுக்கு தைரியம் வரும்படி பேசலானான் ரஹ்மான்.

“இல்ல நான் யாரையும் லவ் பண்ணல” சற்றும் யோசிக்காமல் மறுத்தாள் ஹாஜரா.

“உடனே சொல்லணும் என்றில்லை ஒரு ரெண்டு மூணு நாள் டைம் எடுத்துக்க, நல்லா யோசி” ரஹ்மான் கூறி முடிக்க முன் இடை மரித்தவள்

நூறு நாள் யோசிச்சாலும் ஒரே பதில் தான் “நான் யாரையும் லவ் பண்ணல, பண்ணல, பண்ணவும் மாட்டேன்” யோசித்து தெளிவு பெறட்டும் ரஹ்மான் கூற பிடிவாதமாக பேசுபவள் மீது கோபம் கொள்ளலானான் ரஹ்மான்

பல்லை கடித்தவன் “அப்போ எதுக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லுற? வீட்டுல பாக்குற மாப்பிளையை கட்டிக்க வேண்டியதுதானே!”

“எனக்கொண்ணும் கல்யாணம் பண்ணிக்க அவசரம் இல்ல. முதல்ல படிப்பு முடியட்டும்”

அவள் மண்டையில் வலிக்க ஒரு கொட்டு வைத்தவன் “படிக்க வந்தவ படிக்கிற வேலைய மட்டும் பாத்திருந்தா நா எதுக்கு உனக்கு கல்யாணத்துக்கு மாப்புள பாக்க போறேன். அங்க ஒருத்தன் உன்ன நெனச்சி கிட்டு லூசா சுத்துறான். அவனுக்கு என்ன பதில் சொல்ல போற?” இவ்வளவு நேரம் இருந்த பொறுமை பறந்தது.

தங்கைகளிடம் விளையாட்டுக்கு அடிப்பதும், கொட்டுவதும் தான் ஆனால் என்றும் வலிக்கவோ! அழவோ வைத்ததில்லை. இன்று கொட்டியதில் கபாலம் கலங்கி நிற்க மண்டையை தடவிக் கொண்டவள் நாநாவை முறைத்தாளே தவிர அவன் சொல்ல வருவதை புரிந்துகொள்ள விளைய வில்லை.

“அப்போ உன் படிப்பு முடிஞ்சதும் வீட்டுல பாக்குற மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்கிறியா?” ரஹ்மான் கேக்க மண்டையை பலமாக ஆட்டினாள் ஹாஜரா.

“இங்க பாரு முபாரக் உன்ன பிடிச்சிருக்கு கல்யாணம் பேச சொன்னான் அதான் வீட்டுல பேசினேன். உனக்கு இஷ்டம் இல்லைனு உனக்காக யாரும் காத்துகிட்டு இருக்க மாட்டாங்க. அவன் கிட்ட நான் பேசி அவனுக்கு உன்ன விட நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கத்தான் போறேன். நீ அவன் வாழ்க்கைல விளையாடியது போதும்.

இனிமேல் போன் பண்ணுறது, மெஸேஜ் பண்ணுறது, பாட்டு படிக்கிறது, கிண்டல், குத்தல், நையாண்டினு பேசுறது, எல்லாத்தையும் விட்டுடனும். நீ எனக்கு தங்கச்சினா! அவன் எனக்கு மச்சான் புரியுதா? திரும்ப அவனுக்கு போன் பண்ண, அப்படி, இப்படினு என் காதுக்கு நியூஸ் வந்தது தோலை உயிர்ச்சிடுவேன்”

“இவங்க மெஸேஜ் பண்ணுவாங்கலாம், பாட்டு பாடி தூங்க வைப்பாங்களாம் கேட்டா லவ் இல்லயாம். பசங்க இவங்கள நெனச்சி கிட்டு காலம் பூரா தேவதாஸ் மாதிரி அலையணுமா? இங்க பாரு நீயே வந்து அவனை லவ் பண்ணுறேன்னு சொன்னாலும் நா கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன். அவனுக்கு நான் பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் டி”  மிரட்டியவன் அறையை விட்டு வெளியேற திகைத்து நின்று விட்டாள் ஹாஜரா.

முபாரக் உன் தங்கச்சியை காதலித்து இழுத்துட்டு ஓடுவேன் என்று சொன்னதுதான் ஹஜாராவை தூண்டி இருக்க முபாரக்கை சீண்டவென்று அலைபேசியில் பேசியது இன்று இவ்வளவு தூரம் வந்து நின்று விட்டது.

“நான் என்ன தப்பு பண்ணேன்னு என்ன குத்தம் சொல்லிட்டு போறாரு? யாரும் அந்த சிடு மூஞ்சிக்காக ஏங்கிக்கிட்டு இல்ல. அவன் என் அக்காவை சைட் அடிப்பானாம். போன் பண்ணது நான் என்று தெரிஞ்சதும் என்ன லவ் பண்ணுறேன்னு சொல்வானாம். நான் உடனே ஈன்னு இளிச்சு கிட்டு அவனுக்கு ஓகே சொல்லனுமா? அவன் வந்து இந்த ஹாஜி கிட்ட கெஞ்சனும். என்ன கல்யாணம் பண்ணிக்கனு கெஞ்சனும்”

வாசலுக்கு விரைந்தவள் ரஹ்மானின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு செல்ல

“ஏய் என்ன பண்ணுற”

“ஏன் நாநா அந்த சிடு மூஞ்சி பொண்ணு பார்க்க போனப்போ பேசினது மறந்துட்டீங்களா? ஆ.. நீங்க மறந்திருப்பீங்க. உங்க மச்சான் இல்ல. மச்சானை முறைச்சா… பானு மைனி மனசு நொந்துடும் இல்ல. உங்க தங்கச்சிக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல. மச்சானுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க அப்படித்தானே” கோப மூச்சுக்கலை விட்டவாறே பேச

“எனக்கும் என் மச்சானுக்கு சண்டை, அவன் வார்த்தையை விட்டுட்டான். நீ நடுல வந்ததே தப்பு. அவன் உனக்கு மெஸேஜ் பண்ணி போன் பண்ணானா இல்லையே! பொம்பள புள்ள நீ அந்த வேலைய பாத்திருக்க அதுவும் பாஷித் கிட்ட சொல்லி புது நம்பர் வாங்கி இருக்க, முபாரக் சந்தேகப்பட்டு போலீஸ் கம்பளைண்ட் கொடுத்திருந்தா பாஷித்த தூக்கி உள்ள வச்சிருப்பாங்க. அப்போ உனக்கு சந்தோசமா?” அவள் செய்த செய்கையின் வீரியம் தெரியாமல் பேசுபவளை என்னவென்று சொல்ல.

“அப்போ அவன் பேசினத்துக்கு அவனை சும்மா விட சொல்லுறியா?”

“அங்க ஹானாவும் தானே இருந்தா அவ உன்ன மாதிரி ஒன்னும் கிளம்பலையே! சொன்ன அவனே! மறந்துட்டானே! நீ எதுக்கு தொங்கி கிட்டு இருக்க? உன் பிரச்சினை என்ன தெரியுமா? அவன் பேசினது இல்ல நீனு நெனச்சி அவன் ஹானாவை பார்த்ததுதான். நீ அவனை லவ் பண்ணுற உன் அக்காவை பார்த்தது உனக்கு பிடிக்கல அத ஏத்துக்க முடியாம பிடிவாதம் பிடிக்கிற. இப்போவாச்சும் நல்லா யோசி” என்றவன் வீட்டை நோக்கி நடக்க ஹாஜரா ஆற்றோரத்தில் தனியாக அமர்ந்து விட்டாள்.

Advertisement