Advertisement

அத்தியாயம் 9
“மீராவுக்கு என்ன நடந்தது என்று சரியா தெரியாததால் டிரீட்மென்ட் ஒழுங்கா பண்ண முடியல. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒன்னரை வருடம் நடந்தவைகளை மறந்துட்டா.  உன்ன மொதமொத பர்த்தவ ஊட்டி காலேஜ்ல தான் படிப்பேன் என்று அடம் பிடிச்சு சேர்ந்தவதான். ஊட்டி காலேஜ்கு ஏன் போனேன். என்ன எப்படி போக விட்டிங்க என்று என்னையே தாறுமாறா கேள்வி கேக்க ஆரம்பிச்சா. நா அங்க போனதால நீயும் வந்தன்னு சமாளிச்சுட்டேன்” என்றான் தேவ்.
“என்ன எங்க பார்த்தா? காலேஜ்ல தானே மொதமொத பார்த்தா” சைதன்யன் ஆச்சரியமாக கேட்க, மீரா சைதன்யனை முதன் முதலாக எங்கு பார்த்தாள் என்பதை தேவ் சொன்னான்.{மீராவுடையா கனவு பா நியாபகமிருக்குள்ள}  
“அவளுக்கு சையுவான சைதன்யனுடைய உன் நியாபங்கள் இல்லை தான். ஆனாலும் தனஞ்சயனா இருக்குற உன்ன தான் இப்பவும் லவ் பண்ணுறா” தேவ் சொல்ல ஒரு கீற்றுப்புன்னகை சைதன்யன் முகத்தில் மலர்ந்தது.
“உனக்கு அவ தான் என்று கடவுளே முடிவு பண்ணிட்டான். உன்ன மறந்தாலும் உன்னையே லவ் பண்ணுறது எல்லாம் அவ ஆழ்மனதில் நீ இருக்க என்பதால் தான். இப்போ தனஞ்சயன் என்று உன்ன லவ் பண்ணுறாளே! வேறுயாரையும் கல்யாணம் பண்ணா சத்தியமா அவ நல்ல இருக்க மாட்டா. நீ சொல்லுறத போல வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணி அவளுக்கு பழைய நியாபகங்கள் வந்தா? அவ வேதனை படுவா.  அது உன்ன கல்யாணம் பண்ணிகிட்டாத நினைச்சி இல்ல. உன்ன கல்யாணம் பண்ண முடியலைன்னு என்று மட்டுமாகத்தான் இருக்கும். ஏனென்றா அவ உன்ன எவ்வளவு காதலிக்கிறா என்று எனக்கு மட்டும்தான் தெரியும். அவளோட பழைய நியாபகங்கள் வந்தா? உன்ன கல்யாணம் பண்ணிகிட்டதற்கு அவ வருத்தப்படுவா என்று நீ பயப்படுறது அர்த்தமற்றது. உன் அன்பு தான் அவளை வாழவைக்கும். உன் காதலை நீ புரிய வை.  அவளுக்கான டிரீட்மென்ட்டே அது தான். எல்லாம் நல்லதாகவே நடக்கும்” தேவ் சொல்லி முடிக்க ஆமோதிப்பதாய் தலை ஆட்டினார் சரவணன் சார்.
தேவ் பேசப்பேச கொஞ்சம் கொஞ்சமாய் முகம் மலர்ந்தாலும் அன்று நடந்த சம்பவத்தினால் அவள் உயிர் போயிருக்கும் தீரன்{ஸ்} மட்டும் இல்லயெனில் அவள் இன்று உயிருடன் இல்லை என்பதை நினைத்தவன் கவலையாகவும் கொஞ்சம் குழப்பத்திலும் இருந்தான் சைதன்யன்.
இயல்புக்கு வந்த லட்சுமி அம்மாவும் “அப்போ கல்யாண வேலைய ஆரம்பிக்கலாமா?” சிரித்த முகமாய் கேட்க
“சின்ன சிக்கல் இருக்கு மா!” தேவ் நிமிர்ந்து அமர இவ்வளவு நேரம் கேட்டவைகளே போதும் போதும் என்றளவுக்கு இருக்க ‘இன்னும் என்ன’  என்ற பார்வை தான் அனைவரிடமும்.
“நீங்க என்ன காரணம் சொன்னாலும் சைதன்யன் தனஞ்சயனா மீரா கிட்ட அறிமுகமாகி இருக்கக் கூடாது. தனஞ்சயனுக்கு யாருமில்ல என்பது அவளை ரொம்ப பாதிச்சிருக்கு உடனே போய்  தனஞ்சயன் தான் சைதன்யன் என்று சொல்லி புரிய வைக்க முடியாது இப்போ அவ இருக்குற மனநிலைக்கு அது இன்னும் சிக்கலை ஏற்படுத்துமோ என்று பயமா இருக்கு”
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த தேவ் அவர்களின் பீதியடைந்த முகங்களை பார்த்தவாறே “அவளுக்கு அம்னீசியா மட்டுமல்ல சைதன்யன் பேசினதால ரொம்ப மனசு பாதிச்சிருச்சு அத எப்படி சொல்லனும்னா! தாங்க முடியாத வேதனை வந்தா? இப்படி  நடந்திருக்க கூடாது. காலத்தை மாத்தி அந்த சம்பவம் நடந்தத நடக்காம பண்ணா நல்ல இருக்கும். இல்லைனா அந்த வேதனைய மறந்தா நல்ல இருக்கும் என்று நினைப்போமே! அதே மாதிரி அந்த வேதனையை மறக்கணும் என்று அதையே நினைச்சி நினைச்சி மனசுல பதிய வச்சுட்டா. இப்போ அது கணமா ஆழ் மனசுல இருக்கு. எல்லாமே நியாபகம் வந்தாலும் எக்சிடண்ட் அன்று நடந்தது நியாபகம் வருமா என்று தெரியல {வரும் ஆனா வராது எங்குறீங்க}  உடம்புல ஏற்படும்  காயம் மாதிரி இல்ல மனக்காயம் அத ஆத்துறது ரொம்ப கஷ்டம்”
தேவ் சொல்ல சரவணன் சாரையும் சைதன்யனையும் மாறி மாறி முறைத்தார் லட்சுமி அம்மா. “சொன்னேன்ல சட்டுபுட்டுனு போய் கல்யாணத்த பேசுங்கன்னு சொன்னா, சின்ன பசங்க மாதிரி பந்தயம் காட்டுறேன் என்று சிக்கலை இழுத்து வச்சிருக்கீங்க” கடுப்பாய் மொழிய
தாடையில் கை வைத்து “மீராகு குணமாகும் வர “ம்ம்ம்ம்ம்” யோசிக்கலானார் சரவணன் சார்.
அவர் யோசிப்பதை பார்த்து மூன்று பேரும் மூன்று விதமா யோசித்தனர் லட்சுமி அம்மா ‘இப்போ என்ன ஏழரைய கூட்ட போறாரோ’ என்றும்
‘குணமாகும் வர கல்யாணத்த தள்ளி வைக்க சொல்வாரோ’ என்று தேவும்.
“அன்னைக்கி லிப்டில் நடந்தத வைத்து ஏதாவது ஏடாகூடமாக முடிவெடுப்பாரோ”  என்று சைதன்யனும் நினைக்க
“மீரா குண மடையும் வரை தனு தான் சைதன்யன் என்று யாருக்கும் தெரிய வேண்டியதில்ல. அவன் தனஞ்சயனாகவே இருக்கட்டும்” 
சொல்லி முடிக்க விடாமல் இடைமரித்த லட்சுமி அம்மா “முடியாது முடியாது என் பையன பிரிக்கிறதே உங்களுக்கு வேலையா போச்சு தனஞ்சயனா வாழட்டும்னு சொல்றிங்களே! அதுல எவ்வளவு சிக்கல் இருக்கு. எங்க குடும்ப முறைபடி கல்யாணம் பண்ண முடியுமா?  யாரோ மாதிரி தனியா வாழவிட முடியாது. மீரா வந்தா அவள எப்படி எல்லாம் பார்த்துக்கணும் என்று ஆசையா இருந்தேன்” கலங்கிய குரலில் சொல்ல, அவரின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த சரவண சார் லட்சுவின் கையை பிடித்து தட்டிக் கொடுக்க, தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்த சைதன்யன்,  இடது பக்கமாக அமர்ந்து கையை பிடித்து ஆறுதல் படுத்தினான். 
“லட்சு…. தேவ் தம்பி சொன்னது புரிஞ்சதில்ல இப்போ என்ன பொண்ணா பொறந்தா கட்டி கொடுத்து அனுப்ப மாட்டோமா?    இவன் தனிக்குடித்தனம் போய்ட்டானு நினைச்சிக்குவோம்”
“இவன் போறதுக்கு யார் அழுதா? மீரா இந்த வீட்டுக்கு வர மாட்டாளோ என்று தான் கவலையா இருக்கு. சின்ன வயசுல இருந்தே என்ன விட்டுட்டு இருந்தவனில்ல” சமயம் பார்த்து தனது மனத்தாங்கலை வெளிப்படுத்தினார்.
லட்சுமி அம்மாவை கட்டியணைத்து அவர் கன்னத்துல முத்தம் வைத்தவன். அவரை இலகுவாக்கும் பொருட்டு “அப்போ என்ன தத்தெடுத்துக்கோ மா” அவன் எந்த நேரத்தில் சொன்னானோ? அதை தான் மீராவிடம் சொல்லப் போகிறோம் என்று அவர்கள் அறியவில்லை.
அவன் முதுகில் ரெண்டு அடி போட்டலட்சுமி அம்மா புடவை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு “இருங்க நா போய் எல்லாருக்கும் சாப்பிட ஏதாச்சும் எடுத்து வரேன்.” எழுந்து சென்றார்.
தேவ் பக்கம் திரும்பிய சரவணன் சார் மீராவின் நிலை பற்றி அவருக்கெழுந்த சந்தேகங்களை கேட்டு அறிந்துக்கொண்டார்.
எல்லாவற்றையும் சைதன்யனும் கேட்டுக் கொண்டிருக்க சந்தோஷமும் துக்கமும் கலந்த கலவையான உணர்வில் இருந்தான்.
சாப்பிட டீயோடு ஸ்னாக்ஸ் கொண்டு வந்த லட்சுமி அம்மா “இப்பயாச்சும் கல்யாண விஷயம் பேசுவோமா?” சிரித்தவாறே ஆரம்பித்தவர் “எல்லா சம்பிரதாயமும் எங்க குடும்ப வழக்கப்படி முறைப்படி நடக்கனும்” கராறாகவே கூறினார்.
 “எல்லாம் ஒழுங்கா நடக்கும் லட்சு” சரவணன் சார் அவரை சமாளித்துக்கொள்ளலாம் என சொல்ல
“அப்போ நாளைக்கே பொண்ணு பாக்க போலாம்” எல்லாம் உடனே நடக்க வேண்டும் என்று பேசினார் லட்ச்சு 
‘இவ புரிஞ்சி பேசுறாளா? புரியாம பேசுறாளா? இவ்வளவு நேரம் என்ன சொன்னோம் பிடிவாதக்காரி’ மனசுல தான்பா வாய தொறந்து சொல்லி லட்சு கிட்ட வாங்கி கட்டிக்க சரவணன் சார் என்ன லூசா?
“என்ன பாக்குறீங்க மீராவுக்கு எல்லாம் நியாபகம் வந்தா நம்மள கை விட்டுட்டாங்க என்று வருத்தப்படுவால்ல” சரவணன் சாருக்கு ‘ஐயோ!’ என்றானது.
“நீங்க ஒன்னும் கவலபட வேணாம்மா. நா மீராவை சமாளிச்சிக்கிறேன்” தேவ் சொல்ல
அப்பட்டமான ஆனந்தத்தை முகத்தில் காட்டியவாறே “அப்போ நாளைக்கே பொண்ணு பாக்க போறோம்” கறாரா கூறிவிட்டு அதற்கான ஆயத்தங்களை செய்ய சென்று விட்டார்.
“அப்போ நா கிளம்புறேன் சார் நாளைக்கு ஈவினிங் வாங்க நா வீட்டுல பேசுறேன் ஒன்னும் பிரச்சினை இல்ல” தேவ் விடைபெற்று செல்ல சந்தோச வானில் பறந்தான் சைதன்யான்.
இனிமேல் தான் உனக்கு இருக்கு என்று விதி சிரித்தது.
அறைக்கு வந்த தேவ் தூங்கிக் கொண்டிருக்கும் வினுவை முத்தமிட்டவன். ப்ரியா வரும்வரை நாளைய பெண் பார்க்கும் படலத்தை எப்படி செயல் படுத்துவதென்று யோசிக்கலானான். ப்ரியா வரவும் அவளை இழுத்து தனது கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் முத்தமிட,
“என்ன டாக்டரே! ஹாப்பி மூட்ல இருக்கீங்க போல “என்ன விஷயம்னு கரெக்ட்டா சொல்லடா? தனஞ்சயன மீட் பண்ணீங்க சரியா?
“எப்படி டி பொண்டாடி கரெக்ட்டா தப்பா சொல்ற” சிரிக்காம சொன்னான்.
“அப்போ எதுக்கு பெளர்ணமி நிலா மாதிரி முகம் பிரகாசமா இருக்கு”
“அதுவா சையுவ பார்த்து கல்யாணத்த பேசி முடிச்சிட்டேன்”
அதிர்ச்சியான ப்ரியா “என்ன சொல்றீங்க எப்படி கண்டு பிடிச்சீங்க? அவரே வந்தாரா?
” ஹேய் ஹேய் ஸ்டாப் என்ன இப்படி கேள்வி கேக்குற ஒவ்வொண்ணா கேளு, தனஞ்சயன் பாக்க போனேனா சையுவ பாத்து பேசிட்டேன்”
“என்ன தேவ் குழப்புறீங்க” கணவனை முறைத்தாள் ப்ரியா.
அவளை சீண்டியது போதுமென நடந்தவைகளை விவரித்தவன் சைதன்யன் மீராவை திட்டியதை மாத்திரம் காதலை ஏற்க மறுத்து விட்டான் என்று மட்டும் திரித்து கூறினான். குடும்பத்துக்கு வரும் மாப்பிள்ளையை பத்தி தவறான எண்ணம் வேண்டாம் என சொல்லாமல் மறைத்து விட்டான். நாளை மீராவை பெண் பார்க்க வருவதையும் கூற
“என்ன தேவ் சொல்றீங்க எப்படி பண்ண போறோம்” சாதாரணமாகவே மீரா கேள்வி கேப்பா அவங்க குடும்ப முறைபடி கல்யாணம்னா தாறுமாறால்ல கேப்பா”
“பண்ணித்தான் ஆகனும் சைதன்யன் அவங்களுக்கு ஒரே பையன்”
“அது சரி சொந்தபந்தமெல்லாம் வருவாங்க யார் வாய் வழியாகவும் மீராவுக்கு தெரிஞ்சா?”
“நீ அவ கூடயே இரு”
” ம்ம்ம் எனக்கென்னவோ மீராகிட்ட பக்குவமா எடுத்து சொல்லலாம்னு தோனுது தேவ்”
“இவ்வளவு நாளும் அவளுக்கு என்ன ஆச்சுன்னு சரியா தெரியல இப்போ அவ சம்பந்தமான சின்ன விஷயம் நாளும் சொல்ல பயமா இருக்கு”
“எல்லாம் சரியாகும் தேவ் டோன்ட் ஒர்ரி” தேவ் வாய் மூடி குலுங்கி சிரிக்க அவன் தோளில் மாறி மாறி அடித்தவள் “எதுக்கு சிரிக்கிறீங்க சொல்லிட்டு சிரிங்க நா என்ன காமடி ஷோ வா காட்டுறேன்”
“நீ சொன்னதுக்கில்லடி தனஞ்சயன் தான் சைதன்யன் சரவணன் சார் பையன் என்று மீராகிட்ட சொன்னா ஒன்னும் ஆகாது அவ அத புரிஞ்சிப்பா”
“தேவ் என்ன சொல்றீங்கா அப்போ எதுக்கு அப்படி சொன்னீங்க” கேள்வியாய் அவனை பார்க்க
பழிவாங்கத்தான் என்றான் தேவ் கண்கள் சிவக்க.
தேவ் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த ப்ரியா “என்ன தேவ் சொல்றீங்க பழி வாங்க போறிங்களா?”
“பின்ன மீரா……….. என் ஏஞ்சல் அவ இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன சும்மா விடுவேனா? அவள தனியா எங்கயும் நா அனுப்பியதே இல்ல ஊட்டி வரைக்கும் அவனுக்காக போனவள சாகுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டான்”
“எனக்கு பயமா இருக்கு தேவ் என்னென்னமோ சொல்றீங்க. அதான் மீராகு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிசே அவள குணப்படுத்திடலாம் தேவ். பழி வாங்குறேன்னு மீராவ அவருக்கே கல்யாணம் பண்ணி குடுக்க போறீங்க”
‘ஹாஹாஹா’ வில்லச்சிரிப்பு சிரித்தவனை பார்த்து ப்ரியா பயந்து அவனை விட்டு தள்ளி நிற்க “என்னடி பொண்டாட்டி புருஷன் சொல்றானே சரி மாமா உங்களுக்கு உறுதுணையா நா இருக்கேன் வெட்டுங்க மாமா என்று அருவாவ கைல தர வேணாமா? இதுவல்லவோ நல்லா பொண்டாட்டிக்கு அழகு” அவன் ஒவ்வொரு வசனத்தையும் ஒவ்வொரு வில்லன் {நடிகர்கள்} போல் சொல்ல அவன் மேல் பாய்ந்ததவள் அவனை கை வலிக்கும் வரை மொத்த ஆரம்பித்தாள்.
அவள் அடிப்பதை “வினு இத விட நல்ல அடிப்பா நீ வேஸ்ட் பொண்டாட்டி” என்று சிரிக்க
விளையாட்டை கை விட்டவள் “எதுக்கு தேவ் அப்போ பொய் சொன்னீங்க”
அவள் முகத்தை ஏறிட்டு “ரெண்டு பேரும் கொஞ்சம் நாள் தனியா இருக்கட்டும் இது சைதன்யனுக்கும் சவால் தான். தனியா அவள சமாளிக்கணும் அவள புரிஞ்சிக்கணும் அது போல அவளும் அவன் அன்ப உணரட்டும் பழைய நியாபகங்கள் வந்தாலும் அவங்க ஒன்னா இருப்பங்கள்ல.
“அதுக்காக லட்சுமி அம்மா பாவமில்லையா”
 “பாவம் தான் ஒரு வருஷமாவது தனியா இருக்கட்டும் அதுக்கு அப்பொறம் உண்மைய சொல்லிடலாம்”
“இத சரவணன் சாருக்கும் லட்சுமி அம்மாக்கும் சொல்லி செய்ய வேண்டியது தானே! எதுக்கு மறைச்சீங்க”
 “அந்தம்மா மீரா விசயத்துல ஆர்வக்கோளாறா இருக்காங்க. மீராட உயிர்க்கு ஆபத்துனு சொன்னதால தான் அடங்கி இருக்காங்க. நாளைக்கு வருவங்கள்ல நீயே பாரு”
“தேவ் அப்போ அப்போ நீங்க மனநல மருத்துவார்னு ப்ரூப் பண்ணுறீங்க”
வினு தூக்கத்தில் சினுங்க “இவ என்ன இங்க தூங்குறா மீரா கூட தூங்க வைக்க வேண்டியது தானே”
“உங்க மூத்த பொண்ணு லவ் மூட்ல இருக்கா. அதான் டிஸ்டர்ப் பண்ணல”
“இன்னைக்கு வினு என்ன பண்ணா”
“மீரா கூட சேர்ந்து அவ பண்ணுற சேட்டை தாங்க முடியல” என்று சிரிக்கா “அப்படி என்ன பண்ணாங்க”
 “அத ஏன் கேக்குறீங்க தேவ் நீங்க வர முன்னாடி கண்ணாமூச்சி விளையாடினோமா” ப்ரியா கண்ணை உருட்ட
“அப்பொறம்” தேவ் கதை கேக்க ஆரம்பிச்சான்.
அங்கே மீராவும் சைதன்யனிடம் இன்று பார்க்கில் நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அத்து தான் எங்களை பார்க் கூட்டிட்டு போனா”
“அத்துவா யாருடா அது”
“அது வேத் அத்தான் வைப் ப்ரியா”
“ப்ரியாக்கு செல்ல பேர் எப்படி அத்துவாகும் யோசிக்கும் பாவனையில் சைதன்யன் கேக்க,
” ஓஹ் அதுவா அத்தான் வைப் அத்து” அசால்ட்டா சொல்ல
“என்னமா பேர் வைக்கிறா நமக்கு புள்ள பொறந்தா வித விதமா பேர் வைப்பா போலயே தலையணையை சரி செய்து சாய்ந்தமர்ந்தவன் ஹெட்போனை மாட்டிக்கொண்டான்.
“ஹலோ கேட்டுகிட்டு இருக்கீங்களா!”
“இருக்கேன் சொல்லு ஸ்ரீ”
“அப்பொறம் கண்ணாமூச்சி விளையாடினோமா” அவள் சொல்ல சொல்ல ‘ம்ம்ம்’ கொட்டினான் சைதன்யன்.
“அத்து கண்ண கட்டி நானும் வினுவும் போக்கு காட்டி கிட்டு இருந்தோம். அங்க ஒரு காதல் ஜோடி மர நிழல்ல குடை பிடிச்சு கிட்டு இருந்தாங்களா” சைதன்யனுக்கு சுவாரஸ்யம் கூடியது
 “ஆ அப்பொறம் வினு அவங்க கிட்ட  போய்  குடைய இழுத்து எடுத்துட்டா”
“ஹாஹாஹா அப்பொறம்”
“அந்தாளு வேற அங்குட்டு போ பாப்பா போ பாப்பா என்று துரத்திக்கிட்டு இருந்தான். என் பக்கத்திலேயே இருந்ததால நானும் அவ போறத கவனிக்கல அந்தாளு கத்துறத பாத்து தான் அங்க திரும்பி பாத்தேன். அத்து கிட்ட சொல்லிட்டு நடையை எட்டி போட்டா நம்ம வினு குட்டி கேட்டாளே ஒரு கேள்வி”
“அப்படி என்ன கேட்டா?”
 “எல்லாரும் மழைல அம்ரெல்லா எடுத்து போவாங்க. பாட்டி வெயில்ல போற போ எடுத்து போறாங்க. நீங்க ஏன் நிழல்ல பிடிக்கிறீங்க”
“ஹஹஹஹ” சைதன்யன் சிரிப்பை நிறுத்த முடியாமல் திணற
இங்கே மீரா போனை சார்ஜில் போட்டவாறு “இதுல அப்படி என்ன சிரிக்க இருக்கு வினு குட்டி சமத்தா சரியா தானே கேட்டா அவன் சிரித்ததுக்கான உண்மையான அர்த்தம் புரியாமல் மீரா நொடித்துக் கொண்டாள்.
ஒருவாறு தன்னை சமாளித்தவன் “நாம எப்போ மரநிழலில் குடை பிடிக்கலாம் ஸ்ரீ” என்று சைதன்யன் கேட்க
அவன் கேட்ட தொனியிலேயே வெக்கத்தில் முகம் சிவந்தவள் “எனக்கு தூக்கம் வருது ஜெய்” என்று காலை கட் செய்தாள்.
“ஜெய்… இது வேறயா” அவளின் சையு என்ற அழைப்புக்கு ஏங்கியது அவன்  மனது.
“ஆமா தேவ் வினு அப்படி கேட்கவும் அந்தாளு திட்ட ஆரம்பிச்சுட்டான். பப்லிக் பிளேஸ்ல இப்படி நடந்துக்கிறியேனு லெப்ட் ரைட் வாங்கிட்டேன்.
“என் பிலேசுல நா இருக்கலாம்ல”
“என்ன பிளேஸ்” ப்ரியா புரியாமல் அவனை ஏறிட
“ம்ம் என் மக்கு பொண்டாட்டி நீ தான்டி என் பிரைவேட் ப்ரோபர்டி. உன் லிப்ஸ் தான்டி என் பிரைவேட் பிளேஸ்” என அவளை இழுத்து அணைக்க
அவனிடமிருந்து திமிறி வெளி வந்தவள் “என்ன பேச்சு மாறுது பேசாம தூங்குங்க நாளைக்கு நெறய வேல இருக்கு, மீரா என்ன டிரஸ் போட போறாளோ!”
“நீ கனவு காணாம தூங்கு” கடுப்பாய் தேவ் மொழிந்து அவளை அவன் கையணைப்பில் கொண்டுவர கண்ணயர்ந்தாள் அத்தானின் அத்து.
மீரா சைதன்யனை சந்தித்தது காதல் வயப்பட்டது சரஸ்வதிக்கும் ரவிக்குமாருக்கு தெரியாது. அம்னீசியா என்பது மாத்திரம் அறிந்தவர்கள் இந்த கல்யாண விஷயத்தை தேவ் சொல்லவும் லட்சுமி அம்மாவை தெரியும் என்பதால் சரஸ்வதி அம்மா நிம்மதி அடைந்தவராக தனது சம்மதத்தை கூறினார்.
ரவிக்குமாரோ “மீரா பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லிட்டியா பா” என்று தேவ்வை கவலை நிறைந்த விழிகளால் நோக்க
“எல்லாம் சொல்லிட்டேன் மாமா ஒரு சின்னா பிரச்சின”
“என்னப்பா அவங்க தகுதிக்கு ஏத்த மாதிரி பெருசா ஏதாச்சும் செய்ய சொல்றாங்களா?”
“ஐயோ என்ன மாமா நீங்கா விட்டா கல்யாண செலவெல்லாம் தனியாவே பத்துப்பார். நான் தான் மீரா எங்க வீட்டு ஒரே பொண்ணு எங்க ஆசையையும் செய்ய விடுங்க என்று கெஞ்சாத குறையா சொல்லிட்டு வந்துட்டேன்”
“அப்போ என்னப்பா?” சரஸ்வதி அம்மாவும் கொஞ்சம் பதட்டப்பட
“பயப்படும் அளவுக்கு ஒன்னும் இல்ல”
சைதன்யனும் சரவணன் சாரும் போட்ட பந்தயத்தையும் மீரா பேர் வைத்து இருப்பதையும் சொன்னவன் இப்போ உண்மைய சொன்னால் மீராவின் மனது தாங்காதென்று கூறி அவர்களை சம்மதிக்க வைத்தவன் மாலை பெண் பார்க்கும் படலத்துக்கு வேண்டியவைகளை வாங்க சரஸ்வதி அம்மா உடன் சேர்ந்து பட்டியலிட ஆரம்பித்தான்.
ப்ரியா மருத்துவ மனைக்கும், மீரா ஆபீசுக்கு சென்றிருக்க வினு குட்டி அவளின் பிலே ஸ்கூல் சாமான்களை காட்ட ரவிக்குமாரை இழுத்துச் சென்றிருந்தாள்.
லன்ச் அவரில் சைதன்யனை சந்திக்க மீரா லிப்டினுள் புக அன்றைய நியாபகம் வந்து வெட்கப்புன்னகை சிந்த லிபிட்டினுள் இருந்த சிலர் வித்தியாசமாக பார்க்கவே முகத்தை இயல்பாக வைக்க முயன்றும் தோற்றவளாக தலையை பணித்து உதடுகளை மடித்து புன்னகைத்துக்கொண்டாள்.
உணவகத்துக்கு செல்ல அங்கே சௌமியா மாத்திரம் அமர்ந்து இருந்தாள்.
“எங்க த்ரூ அண்ணா வரலையா?”   
”இல்லடி”  
“அவர் பிரெண்டு…”    
“அதோ வராரே” எங்கே என திரும்பி ஆர்வமாக பார்க்க சைதன்யனை காணாது அசடு வழிந்தாள்.
“எனக்கு நீ சொல்லாட்டி  என்ன சந்துரு எல்லாம் சொல்லிட்டான்”
சௌமியாவை பாவமாக பார்த்தவள் “நாங்க இன்னும் லவ்வே சொல்லலைடி” என கைப்பிடிக்க,
கையை இழுத்துக்கொண்டவள் “லவ்வே சொல்லாம தான் லவ் பண்ணுறீங்களோ” இன்னும் கிண்டலாக என்னவோ சொல்ல வந்தவள் நிறுத்தி “வாங்கண்ணா” என பம்ம
சௌமியா நடிப்பதாக நினைத்த மீரா “இல்லடி உண்மையா நா அவர்கிட்ட என் லவ்வ சொல்லவே இல்ல”
அதை கேட்டு துணுக்குற்ற சைதன்யன் மனதுக்குள் “நீ தான் அழுது அழுது சொன்னியே” என வருந்தினான்.
 “ஏய் லூசு” என சௌமியா எழுந்து “நீங்க பேசுங்க” என ஒதுங்கி சென்றாள்.
அவளை நன்றியுடன் பார்த்த சைதன்யன். ஒரு தலை அசப்பில் அவளுக்கு விடையளிக்க அவன் நிஜமாகவே வந்து விட்டான் என உணர்ந்த மீரா அவனை ஆர்வமாக பார்க்க அவளருகே இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தான். ஸ்வீட் நத்திங்ஸ் பேசியவர்கள் மணியாகவே
“சரி நா சீட்டுக்கு போறேன்” என மீரா கிளம்ப “ஈவினிங் வீட்டுக்கு வரேன்” என சொல்லியவன் மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.
அவன் முன்னாடி அசைவு தெரியவே தலையே நிமிர்த்திப் பாக்க அங்கே தீரமுகுந்தன் நின்றுகொண்டிருந்தான்
பொண்ணு பாக்க போக யார் யாரெல்லாம் வர போறீங்க?

Advertisement