Advertisement

அத்தியாயம் 4
பெற்றோருக்கு குட் நைட் சொல்லி கட்டிலில் விழுந்த சைதன்யனுக்கு தன்னை நினைத்து சிரிப்பாக இருந்தது. அவனுடைய மனமோ ஊட்டி காலேஜ் நோக்கி மெல்ல நகர்ந்து, அவனுடைய கடைசி வருட காலேஜ் லைப்கு போனது. ஆறு வருடங்களுக்கு முன் குட்டி பெண்ணாக பொம்மைபோல் இருந்த மீரா மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை. அன்று அது காதல் என்று தோன்றவே இல்லை.
அன்று ஸ்ரீ ஐ லவ் யு சொல்லிட்டு போன பிறகு ‘கியூட்டி’ என்று தான் சொல்ல தோன்றியதே தவிர வேறொன்றும் தோன்றவில்லை. அவளை வளர்ந்த குழந்தையாக மட்டுமே பார்த்தான்.
.
அடிக்கடி காலேஜில் இவன் செல்லும் இடமெல்லாம் அவளை பார்க்க நேரும். [டேய் அவ உன்ன பாக்க தான்டா வாரா] அவை எல்லாமே கோஇன்ஸிடண்ட் என்று நினைத்தானே தவிர, குழந்தை முகம் கொண்ட அவள் திட்டம் என்று நினைக்கவே இல்லை. 
குட்டியா, அழகாக இருந்த அவளை பிடித்து போகவே நண்பர்களுடன் அவளையும் அழைத்து அமர்த்திக்கொள்வான். அவளுக்கு பிடித்ததை சாப்பிட வாங்கிக் கொடுப்பன். [நீ என்ன நெனச்சி வாங்கி கொடுத்தாயோ அவ லவ் என்று தான் சொல்றா]
நவீன் கூட “என்னடா மச்சான் லவ்வா என்று பல தடவ கேட்டு பார்த்து விட்டான். [உனக்கு புரியுது இந்த லூசுக்கு புரியலையே]
 “டேய் அவ குழந்தடா தப்பா பேசாத” அவனை ஆப் பண்ணிடுவான்.
மீராவும் ‘சையு சையு’ என்று சைதன்யன் பின்னாடியே தான் அவன் குரூபோடு சுத்திக் கொண்டு இருப்பாள்.
குரூப்பில் அனைவருக்கும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைத்ததாலேயே சைதன்யனும் “சையு” என்ற அழைப்பை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவ பேபி பேஷும் பிளஸ் பேச்சும் அனைவரையும் ஈர்த்ததால் வெட்டுப்பேச்சு பேசும் ரேஷ்மா கூட யாரும் மீராவை எதுவும் சொல்ல விடமாட்டாள். பாரின்ல இருந்த போது அவ ஞாபகம் வந்தாலும் சிரிக்க தோனினதே தவிர அவள மிஸ் பண்ணல. {நீ தான் நெனச்சிக்கிட்டே இருந்தியே அப்போ எப்படி மிஸ் பண்ணுவ}
ஆபீஸ்ல தெரியாத மாதிரி பார்த்து பேசினப்ப கூட கோவம் வரல. அவ வேத் அத்தன் கூட பாத்தப்போ ஏன் இவ்வளவு கோவம்னு புரியவே இல்ல” காலேஜ் நியாபகங்களிலிருந்து மீண்டு சட்டென்று மீண்டு நடப்புக்கு வந்திருந்தான் சைதன்யன்.
“உனக்கு தான் ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே!” மனசாட்சி கடுப்படிக்க
“ஒவ்வொருத்தருக்கும் காதலை உணரும் தருணம் எப்போனு தெரியாதே!” தனக்குள் சொல்லிக் கொண்டவனின் கண்களில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வந்து போனது.
“தெரிஞ்சி இருந்தா நீ இவ்வளவு பேசி இருக்க மாட்டல திரும்பவும் மனசாட்சி குரல் கொடுக்க, அன்று அவன் பேசியதை நினைத்து கவலைக்குள்ளானான் சைதன்யன்.
போன் மணியடிக்கவே யாரு என்று பார்த்தவன் சந்துரு என்று திரை காட்டவும் “சொல்லுடா நல்லவனே” நண்பன் எதற்கு அழைத்திருப்பான் என்று அறிந்தும் அறையாதவன் போல் கேட்டான்.
 “லிட்டில் பாஸ் எதுக்குடா வீட்டுக்கு போய் போன் பண்ண சொன்ன?”
“அதுவா உன் டிக்சனரில காபிக்கு என்ன மீனிங்னு கேட்க தான்” சிரிக்காம சொன்னான் சைதன்யன்.
“அதெல்லாம் லவேர்ஸ்க்கு மட்டுமான கோட் வார்ட் டா” உனக்கு நா நண்பேன்டா என்ற ரேஞ்சில் சந்துரு சொல்ல சைதன்யன் சத்தமாக சிரித்தே விட்டான்.
“டேய் நீ மீரா சிஸ்டர லவ் பண்ணுறியா?” சைதன்யனிடமிருந்து பதில் வராது போகவே! “டேய் என்னடா அமைதியாகிட்ட” சைதன்யன் காலை கட் செய்ய கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த சந்துரு சைதன்யனை முறைத்தான்.
“இவ்வளவு நேரமும் என் ரூமுக்கு வெளிய இருந்துதான் போன்ல பேசினியா? என்பது போல் அவனை பதிலுக்கு முறைத்தான் சைதன்யான்.
“இப்படி வந்து உக்காரு” நண்பனை அழைக்க, தனு யோசனையாக அமர்ந்ததும் சந்துரு சொல்ல ஆரம்பித்தான்.
 “மீரா சிஸ்டர் நம்ம ஆபீஸ் வந்து ஜோஇன் பண்ணி 6 ,7 மாசமாச்சு, அவங்க தனியா வந்து நா பார்த்ததே இல்ல அவங்க, டாக்டர் ப்ரியா அல்லது டாக்டர் தேவேந்தர் கூட தன் வருவாங்க போவாங்க, நம்ம ஆபீஸ் இலவச, தரமான உணவு பிளஸ் இயற்கை காய்கறி திட்டம் அவங்க ஐடியா தான்.
“அழகான தோட்டம் இதயும் பண்ணலாமேனு” சார் கூட பேசி, நா தான் அது சம்பந்தமானவங்கள அணுகி எல்லா வேலையும் பார்த்தேன். இந்த ஒரு விஷயம் நம்ம கம்பெனியோட தரத்தை வேற லெவெல்க்கு கொண்டு போச்சு. சார் கூட ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டாரு. லஷ்மிமா எங்க எப்போ பாத்தாங்க தெரியல அவங்கள பத்தி என் கிட்ட நெறய விசாரிச்சாங்க”
சந்த்ரு இன்னும் என்னென்னவோ சொன்னான். “அவ என்னெல்லாம் பண்ணணு நா கேக்கவே இல்லையே” சைதன்யன் உனக்கு சளைத்தவன் நா இல்ல என்பது போல் கையை கட்டிக் கொண்டு சந்த்ருவை பார்த்திருந்தான்.
“நாமா தான் தப்பா புரிஞ்சிகிட்டோமோ!” என்று சந்துரு குழம்ப அவன் மண்டைக்குள் நடிகர் வடிவேல் வந்து “பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு” என்று சிரித்தார்.
சந்துரு வெளி வேலைகளை பார்ப்பதால் ஆபீசில் அதிகம் இருக்க மாட்டான். முடிந்த அளவு அவனுடைய எகோமியவ பார்க்க லன்ச் டைமில் வந்துடுவான். வர்க் டைமில் மீட் பண்ண ரெண்டு பேருமே முற்சிக்கவில்லை. இப்பொழுது அவர்களுடன் மீராவும் தனுவும் வருவார்கள் என்பதால் லட்சுமி அம்மாவின் ஆசையும் சரவணன் சார் சைதன்யனுடன் போட்ட சேலஞ்சும் தெரியும் என்பதாலும் இன்று மீரா வந்த போது தனுவின் பார்வை உரிமையுடன் மீராவின் மேல் படிவடையும் பார்த்து நண்பனுக்கு உதவி செய்யும் எண்ணத்துடன் தான் மீராவை பற்றி தனக்கு தெரிந்த தகவல்களை கூறலானான்.
“என்ன இவன் இப்படி சொல்கிறான்” என்று அவன் யோசிக்க அறையில் சில நிமிடங்கள் மயான அமைதி நிலவியது. அமைதியை உடைத்த சைதன்யன் பேச ஆரம்பித்தான்.
“என் ப்ரோப்லேம் வேறடா” என்று மீராவை பார்த்த முதல் இன்றுவரை நடந்த அத்தனையையும் மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான்.
“உன்ன மியூசியத்துலதான்டா வைக்கணும்” நண்பனை ஏகத்துக்கும் முறைத்தான் சந்த்ரு.
“அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சுனு தப்பா புரிஞ்சிகிட்டு அவமேல கோவப்பட்ட போதுதான் என் மனசே எனக்கு புரிஞ்சது. பழிவாங்கணும் என்றெல்லாம் யோசிச்சேன்டா” தான் அவளை எவ்வளவு நேசித்திருந்தால்? தனக்கு அவள் இல்லை என்றதும் கோபம் வந்ததை பற்றி நண்பனிடம் புரியவைக்க இவன் கூற,
“யாரு நீ? மீரா சிஸ்டர் கிட்ட அடிவாங்காம இருந்தா சரி” சத்தமாக முணுமுணுக்கலானான் சந்த்ரு.
அவ என்ன பார்த்த உடனே கோவப்பட்டு இருந்தாலோ, வெறுப்பா பார்த்திருந்தாலோ அவள சமாதானபடுத்துறது எப்படினு யோசிச்சு இருப்பேன். அவ பார்க்குற அந்நிய பார்வையை தான் என்னால தாங்க முடியல, இன்னைக்கு ஆபீஸ் கேன்டீன்ல அவ வந்ததும் பேச முயற்சி பண்ணேன். நீயே பாத்த இல்ல ரெஸ்பான்ஸ் பண்ணாளா? நீயும் சௌமிகூட தனியா பேசணும்னு போயிட்ட, வராத கால வந்ததா என் ஸ்ரீ போய்ட்டாடா” சோகமான குரலில் பேசிக் கொண்டிருந்தான் சைதன்யன். 
சந்துருவிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. “ஆகா விட்டா விடிய விடிய பேசி உசுர எடுப்பான் போலயே” அவன் ஆழ் மனம் கூவ “பாஸ் சரக்கடிப்போமா?” சட்டென்று கேட்டான் சந்த்ரு.
“ஏன்டா ஏன் இருக்குற பிரச்சினை போதாதா அப்பா என்ன வீட்டை விட்டு வேற தொரத்தனுமா?” சைதன்யனும் சட்டென்று கோபமாக கத்திவிட்டான்.  
இன்னும் என்னவெல்லாம் சொல்லி சந்துருவை திட்டித்தீர்த்தானோ அவன் மனக்கவலை தீரட்டும் என்று எல்லாவற்றையும் பொறுமையா கேட்டுக் கொண்டு இருந்தவன் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை பறந்தோட
“ஹப்பா போதும்டா டேய் ஒரு கெட்டவார்த்தை யூஸ் பண்ணாம ஒருத்தன ஒரு அவரா திட்ட உன்னால மட்டும் தான்டா முடியும். நீயெல்லாம் என்ன டிசைனோ வா வா பாஸ்கட் பால் விளையாடலாம் உன் கூட விளையாடி ரொம்ப நாளாச்சு” என்றவாறே இழுத்துச் சென்றான்.
இங்கே மீரா தூக்கம் வராமல் சைதன்யன் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். உணவகத்தினுள் நுழைந்தவள் சந்துரு அழைக்க “என்ன த்ரூ அண்ணா மியா குட்டிய விட்டுட்டு இருக்க முடியாதோ” என்றவாறே வர, தனுவை கண்டு ஒரு கணம் தயங்கினாலும் தன்னை சமன் செய்து கொண்டு அவர்கள் அருகினில் சென்று அமர்ந்தாள். நேற்று கண்ட கனவின் பின் அவனை காணும் பொழுதெல்லாம் அவள் இதயம் படபடவென அடித்துக் கொள்வதை பார்த்து அவளுக்கே அவள் நிலை புரியவில்லை. காலையில் சரவண சார் அறையில் பார்த்த நொடி எங்கே அவள் இதயம் எகிறி குதித்து அவனிடம் சென்று விடுமோ என்று அஞ்சினாள். நல்லவேளை சரவணன் சார் வெளியே இருக்கும்படி கூறவும் தன்னை சமன் செய்து கொண்டாள். அறையிலிருந்து வெளியே வந்தவன் தன்னை பார்த்த பார்வைக்கு என்ன பொருள் என்றே புரியவில்லை. திரும்பவும் இதயம் அடிக்க, சௌமியாவிடம் சொல்லிக் கொண்டு அகன்றுவிட்டாள். மீண்டும் உணவகத்தில் பார்ப்பாள் என்று அறியாதவள் இதயம் துடிக்க ஆரம்பிக்கவும் வராத போன் காலை பேசியவாறே ஓடிவிட்டாள்.
தனக்கு நடக்கும் மாற்றம் என்னவென்று புரியாதவளோ! ஒவ்வொரு விதமா சிந்திக்கலானாள். கண்ட கனவும், இதயத்தின் துடிப்பையும் வைத்து ஒருவேளை போன ஜென்மத்தில் இருவரும் காதலித்து இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்தாள். வெக்கம் வந்து புதுசா ஒட்டிக்கொள்ள நாளைக்கு தனுவை நேரில் பார்த்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று யோசிக்கலானாள். தனஞ்சயன் என்ற பேருக்கு எந்த மாதிரி செல்ல பேர் வைக்கலாம் என்று யோசித்தவாறே தூங்கியும் போனாள்.
“வாடா சந்துரு. தனு எங்கடா விடியக்கலையில போய்ட்டு வர” பூஜையறையிலிருந்து வெளியே வந்த லட்சுமி அம்மா இருவரையும் மாறிமாறி பார்த்தவாறு கேட்க
“எங்கேயும் போகலமா பின்னாடி பாஸ்கட் பால் விளையாடினோம்” சைதன்யனை பதில் கூறினான்.
 “மணி இப்ப தான்டா 5 நீ எப்போ வந்த சந்துரு?”
 “நா நைட்டே வந்தேன்மா” என்றான் அவன்.
“அப்போ தூங்கலையா? தூங்காம அப்படி என்ன விளையாட்டு” அக்கறையும் கோவமுமாக ஒலித்தது லட்சுமி அம்மாவின் குரல்.
“சரி சரி கொஞ்ச நேரமாச்சும் தூங்குங்க, சந்துரு நீயும் போ நா உன் அப்பாகிட்ட பேசுகிறேன் இன்னைக்கி ரெண்டு பேரும் ஆபீஸ் போகவேனாம்”
கெட்டது குடி “மா அதெல்லாம் ஒன்னும் இல்ல இன்னும் டைம் இருக்கு நா போகனும்” காலை தரையில் உதைத்தான் சைதன்யன்.
சந்துருக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை, ஆபீஸ்ல வேல பாக்கவா போற சிஸ்டர சைட் அடிக்க போற” என்றது அவன் புன்னகை.
“ஆமா லட்சு பையன் இப்போ தான் பொறுப்பா ஆபீஸ் வாரேங்குறான்” என்றவாறு எழுந்து வந்த சரவணன் சார் எல்லாருக்கும் ஒரு குட் மோர்னிங் வைக்க, சந்துரு அவன் வீட்டுக்கு கிளம்பினான்.
“என்னமோ பண்ணுங்க என் பேச்ச எப்போ கேட்டிங்க” லட்சு புலம்பியவாறு உள்ளே செல்ல சைதன்யன் தனதறைக்குள் புகுந்துகொண்டான்.
போகும் வழியெல்லாம் சந்துருக்கு சைதன்யன் சொன்னவைகளே மனதில் படம் போல் ஓடியது.
சைதன்யனுக்கும் அவனின் கியூடிப்பையின் நினைவுகளே!
வாய் நிறையா சாக்லேட் சாப்பிடும் ஸ்ரீ, ஐஸ் கிரீம் சாப்பிடும் ஸ்ரீ, குழந்த போல மூக்கிலும், கன்னத்திலும் ஒட்டி இருந்த ஐஸ் கிரீமையும் சாக்லேட்டையும் எத்தனை தடவ என் கைகுட்டையாலயே துடைத்து விட்டு இருப்பேன். {இதெல்லாம் தேவ் பார்த்த வேலைடா இப்போ நீ பாக்குற} என்ன பாத்த உடனே அவ முகம் பிரகாசமாகும். அவ சாப்பாட எனக்கு கொடுப்பா, வீட்டிலுருந்து என்ன அனுப்பி இருந்தாலும் எங்க குரூப்க்கு பங்கு உண்டு. ஹாஹாஹா பாஸ்கர்ட் பால் விளையாட கத்துகொடுக்க நா பட்டபாடு!! செல்லமா கூட அவளை திட்டினது இல்லை. கடைசில எல்லாத்துக்கும் சேர்த்து அவளை திட்டி அழவச்சிட்டேன்.
“பாஸ் ‘மன்னிப்பு’ என்று ஒரு விஷயம் இருக்கு மறந்துட்டியா? சிஸ்டர் காலுல விழுந்துடு. உன் மனசையும் புரிஞ்சிக்கல அவங்க காதலையும் புரிஞ்சிக்கல. தேவலாமா பேசி அவங்கள காயப்படுத்திட்ட மன்னிப்பு கேளு. தண்டனை தந்தா ஏத்துக்க. அப்பொறம் ஹாப்பி எண்டிங் தான்”
சைதன்யனின் முகத்தில் புன்னகை சட்டென்று மலர்ந்தது. “அவ பூமாதிரி தண்டனை எல்லாம் தர மாட்டா. என்ன வச்சி செய்வா ஏற்கனவே தெரியாத மாதிரி நடிக்கிறா. இன்னும் என்னவெல்லாம் செய்ய பிளான் பண்ணுறாளோ?
விடியும்வரை மீரா பற்றியே பேசி பேசி இடையிடையே கூடைபந்தும் விளையாடிய சைதன்யன் சந்தோசமான குரலில் பேசி கடைசியில் வருத்தமான குரலில் முடித்தான்.
“எல்லாம் சரியாகும் வா கொஞ்சம் நேரம் தூங்கி ஆபீஸ் போகலாம் என்று தான் இருவரும் உள்ளே வந்ததே. அதற்குள் லட்சு ஒன்று சொல்ல, சரவணன் மகன் எதற்காக சொல்கிறான் என்று தெரியாமலையே அவன் பக்கம் பேசி இருந்தார்.
ஆபீஸ் வந்த மீராவை வாயிலிலையே பிடித்துக்கொண்ட மியா தனு புராணம் பாட ஆரம்பித்தாள்.
தனுக்கு யாருமில்லை என்று அறிந்த மீராவுக்கு அவனை உடனே பார்த்து “உனக்கு எல்லாமாக நா இருக்கேன்” என்று ஆறுதலாய் அணைத்துக்கொள்ள தோன்றியது. அவன் வரும் வரை காத்திருந்தவள். சரவணன் சார் வர அவருடன் லிப்ட்டினுள் புகுந்தாள். லன்ச் ஹவரில் பாக்கலாம்னு மூன்றாவது மாடியிலுள்ள சரவணன் சார் அறைக்கு வந்து அன்றைய வேலைகளை பார்க்கலானாள். எப்போ லன்ச் ஹவர் வரும் என்று காத்திருந்தவளுக்கோ அன்றைய எந்த வேலையும் சரியாக பார்க்க முடியவில்லை.
சரவணன் கூட “என்ன மீரா ஏதாவது ப்ரோப்லமா? உடம்புக்கு ஏதாவது?” என்று ரெண்டு தடவ கேட்டுப் பாத்தார்.
எப்படியோ நேரத்தை நெட்டித்தள்ளி லன்ச் ஹவரும் வர உணவகத்தை நோக்கி முதல் ஆளாய் விரைந்தாள் மீரா. லிஃப்டை எதிர் பார்க்காமல் படியிலேயே செல்ல முடிவு பண்ணினாள். அவளின் நல்ல நேரம் லிப்ட் திறந்து கொண்டது. லிப்ட்டினுள்ளே தனுவை கண்டவள் அடைந்த சந்தோசத்தின் அளவு அவள் மட்டுமே அறிவாள். அடுத்த கணம் என்ன நடந்தது என்று அறியும் முன் தனுவின் அணைப்பில் அவனின் முத்த மழையில் நனைந்துக் கொண்டு இருந்தாள்.
தூங்கி எந்திரிச்சு ஆபீஸ் வந்து சேர்ந்த சைதன்யன் ஹாப்பி மூடிலேயே இருந்தான். 4ஆம் மாடியிலுள்ள எக்கவுண்ட் டிபார்ட்மெண்டில் இருந்து லிப்ட்டில் கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது 3ஆம் மாடியில் கதவு திறந்ததும் தன்னை பார்த்து ஆறு வருடங்களுக்கு முன் காலேஜ் நுழைவாயிலில் முகம் மலர்ந்த அதே ஸ்ரீயை கண்டதும் அவளின் கையை பிடித்து லிபிட்டினுள் இழுத்தணைத்தவன் முகமெங்கும் முத்தமிட ஆரம்பித்தான்.
உள்ளே வரும் போதே சரவணன் மீரா ஏதோமாதிரி இருப்பதை கவணித்து விட்டார். வேலையில் கவனமின்மையும் கண்ணில்பட என்ன ஏதுன்னு விசாரிச்சு பார்த்தவருக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை. லஞ்ச் ஹவேரில் விசாரித்துக்கொள்ளலாம் என்று சாப்பிடாமல் வந்தவருக்கோ யாரோ லிபிட்டினுள் மீராவை இழுத்தது கண்ணில்பட, அது யார் என்று பார்ப்பதற்குள் லிப்டின் கதவுகள் மூடிக்கொண்டன.
அதே தளத்தில் அமைந்துள்ள சிகியூரிட்டி அறைக்கு விரைந்தவர் “ஜூம் தி லிப்ட் கேமரா” என்று கர்ஜனை குரலில் கூற அவ்வறையில் இருந்த இரண்டு பேருக்குமே சரவணன் சாரை கண்டு உதறல் எடுத்தது. லிப்ட் 3ம் மாடியிலேயே நின்றிருந்தது.
கேமராவில் சைதன்யனை கண்டவர் அறையில் இருந்த ரெண்டு பேரையும் பார்க்காமலேயே “அவுட்” என்று கத்த முட்டி மோதியவாறே அவ்வறையை விட்டு ஓடாத குறையாய் வெளியேறினர்.
தனது மொபைலை எடுத்து சைதன்யனுக்கு போன் பண்ணியவர். “கம் டு மை ரூம் இமீடியாடலி” என்று போனை வைத்த போது சீப் சிகியூரிட்டி இன்ச்சார்ஜ் அமர்வர்மா கதவை தட்டி சரவணன் சார் பதிலுக்காக காத்திருந்தான்.
லிப்ட் கமெராவை ஜூம் அவுட் பண்ணியவர் அக் காட்சி பதிவாகி இருக்கும் ஒளித்தட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அமர்வர்மாவை ஏறிட “லிப்ட் ஒர்க் ஆகலானு தான் பார்க்க வந்தேன் எனி ப்ரோப்லம் சார்” என்றான் பணிவாக
“நத்திங்” என்று தனதறையை நோக்கிச்சென்றார் சரவணன்.
ஒரு நாளும் ஆகாதவாறு லிப்ட் நின்று விட்டது என்றதும் தனது நீண்ட கால்களை எட்டிப்போட்டு இரண்டு இரண்டுப் படியாய் தாவி வந்தவனுக்கு வெளியே நின்ற cctv அறையில் பணிபுரியும் இருவரும் தென்படவே என்ன என்று விசாரித்தவனுக்கு சரவணன் சார் உள்ளிருப்பது தெரிந்தது. தனது விரலால் புருவத்தை நீவிவிட்டவன் கதவை தட்ட வெளியே வந்தவரின் “நத்திங்” எரிச்சலூட்டியது.
லிபிட்டினுள் மீராவை இழுத்த சைதன்யன் கதவு மூடிக்கொண்ட உடனே லிஃப்டை நிறுத்தி இருந்தான். அவளின் பிரகாசமான முகம் கண்டு அவள் தன்னை மன்னித்து விட்டாள் என்று தவறாக புரிந்து கொண்டான். அதனாலேயே “சாரி” என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து வரவில்லை.
மீராவோ போன ஜென்ம பந்தம் என்று நம்பியதால் அவனுள் பந்தமாக அடங்கி அவன் முத்தமழையில் நனைந்தவாறு அவனுக்கு இசைந்திருந்தாள்.
லிபிட்டினுள் தன்னை மறந்து இருந்த இருவரையும் சைதன்யனின் மொபைல் ரிங் டோன் சுயநினைவுக்கு வரவைத்தது.
மீராவை அணைத்தவாறே காலுக்கு பதில் அளிக்க, அப்பாவின் கர்ஜனை குரலை கேட்டவன். ஏதோ பிரச்சினை என்று புரிந்துக்கொண்டு லிஃப்டை இயக்க, லிப்ட் கீழ் நோக்கி சென்றது.
சைதன்யனின் மொபைலில் “பாஸ்” என்று வர மீரா முற்றாக தன்னை மீட்டுக்கொண்டாள்.
செலென்ஜ் எக்ஸ்ப்ட் பண்ணிய அன்னைக்கே தந்தையின் அலைபேசி எண்ணை ‘பாஸ்’ என்று மாற்றி இருந்தான்.
சைதன்யனின் முகபாவத்தை வைத்து ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவன் லிஃப்டை இயக்கவும் “இத எப்போ நிறுத்தினாங்க” என்று குழம்பி நின்றாள் மீரா.
லிப்ட் கதவு திறக்கவும் உள்ளே இருவரும் மாட்டிக்கொண்டார்கள் என்று எண்ணியவர்கள் நலம் விசாரிக்க பதில் அளித்தவன். “ஈவ்னிங் பாப்போம்” என்று மீராவின் காதருகே சொல்லிவிட்டு மீண்டும் லிஃட்டினுள் சென்றான்.
தந்தையை பார்க்க சென்றவனுக்கு அவருடைய கணனியில் அவர் கையேடு எடுத்துச் சென்ற ஒளித்தட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, சைதன்யனின் மனமோ “மண்டைல இருக்குற கொண்டையை மறந்துட்டியே” என டைமிங்கில் ரைமிங் பாடியது.

Advertisement