Advertisement

அத்தியாயம் 3
பூஜை அறையில் லட்சுமி அம்மாவின் குரல் ஒலிக்க கண் விழித்தான் சைதன்யன். அவன் கண்ணுக்குள் அவனின் கியூடிப்பையின் முகம் வந்து இம்சிக்க கண்களை மூடிக் கொண்டவனுக்கு அவளை முதல் முதலாக பார்த்த நாளும் காட்சியாய் விரிந்தது.
காலேஜில் கடைசி வருடம் 1st  இயர் மாணவர்களை ரேகிங் செய்யவென்றே காலேஜுக்கு சென்ற நாள். வரும் ஒவ்வொரு மாணவரையும் குரூப் குருபாய் பிரிந்து ரேகிங் செய்து கொண்டு இருந்த வேளை, ரெட்டை ஜடையில் ஒரு ஜடையில் இருந்து இன்னொரு ஜடைக்கு பாலம் போல் பூச்சூடி மஞ்சள் நிற தாவனியில், கால் கொலுசோடு சின்னதா வட்டப்பொட்டு வைத்து கொலு கொழுன்னு ஒரு குட்டி தேவதை.
அவள் கேட்டினுள்ளே வரும் போதே சைதன்யன் பார்த்துவிட்டான். வேறெந்த குரூப்பும் அவளை அழைக்க முன் அவனே கை தட்டி அவளை அழைக்க, சூரியனை கண்ட செந்தாமரையாய் கண்களை அகல விரித்தவாரு அவனிருக்கும் இடத்திற்கு ஓடி வந்தாள்.
குட்டியா கியூட்டா இருந்தவளை என்ன செய்ய வைக்கிறதுனு ஒரு கணம் யோசிக்கும் போதே பக்கத்தில் இருந்த நண்பன் நவீன் “ஏய் பாப்லிமாஸ் உன் பேர் என்ன” என்ன என்று கேட்டுவிட நண்பனை முறைத்தான் சைதன்யன்.
சைதன்யனை விட நவீனை முறைத்தவாறே “ஸ்ரீ” என்று கூறினாள் மீரா.
 “ஸ்ரீராமா? சாய்ராமா?” என்று பக்கத்தில் இருந்த கவிதாக்கு ஹைப்பை கொடுக்க “மீராஸ்ரீ” என்று சைதன்யனை பார்த்தவாறே சொன்னவளின் மனமோ ஸ்ரீகு எப்படிடா சாய்ராம் ரைமிங்காகும் என்று குரல் கொடுத்தது.
“சரி உனக்கு பாட தெரியுமா?? ஆட தெரியுமா??” நவீன் கேட்க மீரா திருதிருனு முழிக்க ஆரம்பித்தாள்.
“மினி பூசணிக்கா மாதிரி இருக்கா இவ ஆடினா பூமி தாங்குமா?? வொய்ஸ் வேற கரகரனு துரு புடிச்ச தகரம் மாதிரி இருக்கு” கவிதா பக்கத்தில் இருந்த ரேஷ்மா குரல் கொடுக்க மீராவோ க்ரையிங் மூடுக்கு போய்விட்டாள்.
 “பாக்க பச்சை புள்ள மாதிரி இருக்கா இவளைப் போய் இப்படி சொல்லிட்டியே ரேஷு” எப்பொழுதும் ரேஷ்மாவின் காலை வாரும் குணால் சத்தமாக சொல்ல
 “நீ சொல்லுடா மச்சான் இந்த குட்டிக்கு என்ன டாஸ்க் கொடுக்கலாம்” நவீன் சைதன்யனை ஏறிட்டான்.
தனு மைன்ட் வொய்ஸ் “இவ்வளவு கியூட்ட இருக்காளே அழுதுடுவா போலயே” மனமோ பாவம் பார்க்க “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” யோசிப்பது போல் பாவனை செய்து
“கியூட்டா இருக்கா பேசாம உனக்கு புடிச்ச யாருக்காச்சும் ஐ லவ் யு சொல்லிட்டு போய்கிட்டே இரு கியூடிப்பை”
” மச்சான் செமடா” குணால் சைதன்யனை கட்டிப்பிடிக்க
 “டேய் அடங்குடா” நவீன் அவன் தலையில் கொட்ட மீராவின் முகம் திரும்ப ஹாப்பி மூடுக்கு வந்தது.
“சீக்கிரம் சொல்லுமா” குணால் அவசர படுத்தினான்.
பொறுமையா தனது பையிலிருந்து சாக்லெட்டை எடுத்து சைதன்யனுக்கு கொடுத்தவள் ‘ஐ லவ் யு சோ மச்’ என்று சொல்லி சென்று விட்டாள். அன்று அவளது குழந்தைதனத்தை பெரிதும் ரசித்த சைதன்யன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
கதவு தட்டும் சத்தத்தில் அழகான கனவு கலைந்தது போல் கண் திறந்தவன் “வரேன்மா’ என்று கதவை திறக்க லட்சுமி அம்மா “எந்துரிச்சிட்டியாப்பா ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்க கோவிலுக்கு போயிட்டு வருவோமா”
“ஆரம்பிச்சிடீங்களா?” என்று கேட்டவனால் அன்னையை முறைக்க முடியவில்லை. இவனை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்வதே அங்கு செல்லும் குமரிப் பெண்களை காட்டி “இந்த பொண்ணு நல்லா இருக்கா, அந்த பொண்ணு நல்லா இருக்கா, உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு விசாரிக்கலாம் என்பாள்.
“நீ எனக்கு அம்மாதானே” என்று அன்னையை அங்கிருந்து இழுத்துக் கொண்டு வந்தவன் அதன் பின் அவளோடு கோவிலுக்கு செல்வதே இல்லை. “நாளைக்கு போலாமா குளிச்சிடுவாரென் உங்க கையால ஸ்ட்ரோங் காபி கிடைக்குமா?” இன்று ஒருவாறு சமாளித்தான்.
 “சரிடா சீக்ரம் வா”
“லட்சு எனக்கும் காபி கொடுமா”
“பொன்னம்மாவை தானே எந்நாளும் கேப்பிங்க இன்னைக்கு மட்டும் என்னவாம்” லட்சுமி அம்மா முறைக்க
 “பையன் வந்தா தானே நீ கிட்சன் பக்கமே போற” மனைவிக்கு பதிலையும் கூறி முறைப்பையும் பரிசாக பெற்றுக்கொண்டவர் மகனின் புறம் திரும்பி “மை சன் எப்போ ஆபீஸ் வரப்போற”
“மீராவை ஒருவழி பண்ணவே வரனும்” எல்லாம் மனதுக்குள் தான் சொல்லிக் கொண்டவன் “எனக்கு என்ன போஸ்டிங் தருவீங்க” விட்டா அவர் சீட்டில் போய் உக்காருவதுபோல் முகபாவத்தில் அமர்ந்திருந்த மகனை எரிச்சலாக பார்த்தார் சரவணன். 
“ஆரம்பிச்சுட்டீங்களா? நீங்க ஆபீஸ் ஆபீஸ்னு அலைறது போதாதுன்னு இவனையும் இழுக்குறீங்களா? நா என்ன சொன்னேன் தனு வந்த உடனே அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொன்னேன்ல” லட்சுமி அம்மா முறுக்கிக்கொள்ள,
“ஐயோ இந்த அம்மா வேற” “இப்போ கல்யாணத்துக்கு என்னம்மா அவசரம்” மீராவை பழிவாங்கனும் மனதினுள் நினைத்தவனுக்கு அதை எவ்வாறு அமுல்படுத்துவதென்றுதான் தெரியவில்லை.
 “அந்த மீரா பொண்ணு தனுக்கு பொருத்தமா இருப்பால்ல” லட்சுமி அம்மா சட்டுன்னு கேட்டுவிட்டார்.
சரவணன் சார் ஆகட்டும் லட்சுமி அம்மாவாகட்டும் ரெண்டு பேருக்குமே மீராவை பிடித்து போக தனு வந்தா பொறுமையா பேசலாம்னு சரவணன் சார் ஒரு பிளான் போட லட்சு இப்படி டக்குன்னு கேட்டே விட்டார்.
சரவணன் சார்க்குத்தான் “ஐயோ” என்றானது ஓட்டைவாய் லட்சு அவனை ஆபீஸ் வர சொன்னதே மீராவை மருமகள் ஆக்கத்தானே என்று ஒரு பார்வை பார்க்க
என்னடா மீரா பெயர் சொல்லுறாங்களேன்னு பார்வையை கூர்மையாக்க சரவணனின் பார்வை ஏதோ விஷயம் இருக்கும் போல் இருக்க எதுவும் தெரியாதவன் போல
 “யார்மா மீரா” தனு எப்போ கேப்பான் என்று வைட் பண்ணிக்கிட்டு இருந்த லட்சுமி அம்மா கடகடவென சொல்ல ஆரம்பித்தார்.
 “மீரா அப்பாவோட பி.ஏ பா ரொம்ப நல்ல பொண்ணு எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருக்கு நீ அவளையே கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று விட்டு மகனின் முகம் பார்த்து பதிலுக்காக காத்திருந்தார்.  
ஒரு கணம் “அம்மா வேற ஒரு மீரா பத்தி சொல்ல போறாங்களோனு” நினைத்த தனுவுக்கு  அப்பாவின் பி.ஏ என்றதும் அவள் வேறு யாருமல்ல அவனுடைய கியூடிப்பை என்று தெரிந்த உடனே எப்படி ரியாக்ட் செய்வது என்றே புரியல. தனது பதிலுக்காக காத்து கிட்டு இருக்கும் பெற்றோருக்கு காபியை உறிஞ்சவாறே “உங்க இஷ்டம்மா” என்று சிம்பலா பதில் சொல்லியவன்
மனதுக்குள் கியூடிப்பை மாமவ ரொம்ப லவ்ஸ் பண்ணுறியடி செல்லம் அப்பாவ பார்த்து என்ன லவ் பண்ணுறதா சொல்லி, அம்மா மனசுல இடம் புடிச்சிட்டியே கள்ளி. இன்னும் என்னவெல்லாம் சிந்தித்து வானில் பறக்க ஆரம்பிக்கும் முன்னே சரவணன் சார் அடுத்து சொன்னது தனுவை யோசிக்க வைத்தது.
“லட்சு மீராவை பார்த்த அன்னைக்கே இந்த பொண்ணு தான் என் மருமகள்னு முடிவு பண்ணிட்டேன். உனக்கும் அவளை புடிச்சிருக்கு. ஆனா வாழ போறது இவங்க ரெண்டு பேரும் அதனால தனு முதல்ல ஆபீஸ் வரட்டும் மீரா கூட பேசி பழக்கட்டும் அவ வேல செய்ற விதத்தை பார்க்கட்டும் அவனுக்கு பிடிச்சு இருந்தா அவங்க வீட்டுல பேசலாம். மீரா கசின் பிரதர் சைக்கஸ்ட்ரிக்ட் நம்ம ஆபீஸ்ல வேல பாக்குறவங்களுக்கு கவுன்சலிங் கொடுக்குறாரு அவர் மூலமா பேசலாம்” சரவணன் சார் தான்பாட்டில் சொல்லி முடித்தார்.
சைதன்யன் முற்றிலும் குழம்பிப் போனான் தான் நினைத்தது என்ன இங்க நடக்குறது என்ன? அப்போ அன்னைக்கு நா பேசுனத அவ மறக்கல கோவமா இருக்கா. அதான்  என்ன தெரியாத மாதிரி இருக்காளா?
“நீ பேசுனது கொஞ்சமா? நஞ்சமா?” மனசாட்சி ஏகத்துக்கும் குரல் கொடுக்க
“வரேண்டி கியூடிப்பை உன்ன என் பக்கத்துலேயே வச்சு உன் கோவத்தை தூர எரிஞ்சிடுறேன்”
 “என்னப்பா யோசிக்கிற” அப்பா சரவணன் கேட்க
“நா எப்போ ஜோஇன் பண்ணனும்” சிரித்த முகமாகவே கேட்டான் சைதன்யன்.
அடுத்த ஆப்பு ரெடி என்று தெரியாம சிரிக்கிறியேனு விதி அவனை பார்த்து சிரித்தது.
“நாளைக்கே! இல்ல உன் இஷ்டம்,  பட் ஒரு கண்டிஷன்” சரவணன் புதிர் போட, என்ன என்ற பார்வை தான் தனுவிடம்
“ஜஸ்ட் என் எம்ப்ளய்யா தான் ஜோஇன் பண்ணனும் எக்கவுண்ட் செகிஷனில் சேரு எந்த காரணத்தை கொண்டும் நா உன் அப்பா என்ற விஷயம் யாருக்கும் தெரியவேண்டியதில்லை.
சைதன்யனின் மனமோ “மீரா உங்க பி.ஏ பா. நா எக்கவுண்ட் செகிஷனில் சேர்ந்தா அவளை எப்படி கரெக்ட் பண்ணுறது” என்றே யோசித்தது.
“என்னப்பா ஓகேவா?” எங்கே மகன் முடியாது என்று சொல்லிவிடுவானோ என்ற கவலை பெற்றோர்களுக்கு.
லட்சுமி அம்மாவிற்கு மீராவை பற்றி எண்ணம் தோன்றியபோதே சரவணன் சொன்னது “மீராவை பத்தி தனு தான் முடிவு எடுக்கணும் அவ பணத்தை பாத்து மனசு மாறுற பொண்ணு இல்ல பணத்துக்காக அவனை விரும்பலனு அவன் புரிஞ்சிக்கணும்” என்று தெளிவாக லட்சுமி அம்மாவிடம் சொல்லிவிட்டார்.
சைதன்யன் அவன் மனதில் நினைத்ததை கேட்டு விட
சத்தமாக சிரித்த சரவணன் “அது உன் சாமர்த்தியம்” என்று விட்டார்.
ஓகே “டன்” என்று கட்டைவிரலை உயர்த்தி செலென்ஜ் பண்ண, பதிலுக்கு சரவணனும் கட்டைவிரலை உயர்த்தினார்.
 “பொண்ண புடிச்சி இருந்தா வீட்டுல போய் சட்டு புட்டுன்னு பேசி கல்யாணத்த பண்ணாம சின்ன பசங்க மாதிரி இது என்ன விளையாட்டு” லட்சுமி அம்மா கோவமா பேச
 “மா செலென்ஜ் எக்செப்ட் பண்ணிட்டேன் பின்வாங்க முடியாது வெற்றி எனக்கே” தனு புன்னகைத்து கண்சிமிட்டினான். 
தான் கட்டிக்கிட்டவரையும் பெத்துக்கிட்டவனையும் லட்சுமி அம்மா வசைபாடியவாறு உள்ளே செல்ல சரவணன் ஆபீஸ் கிளம்பிச்சென்றார்.
“குட் மோர்னிங் டாட்”
“என் கூடயே ஆபீஸ் வந்துருக்கலாம்ல உன்ன 9 மணிக்கு கரெக்டா வர சொன்னேனே இப்போ டைம் 10 .30 எங்கடா போன”
 “சார் எங்க அம்மா கூட கோவிலுக்கு போய்ட்டேன் சார்” பள்ளியில் குழந்தைகள் சொல்வதை  போல் கிண்டலாக சொல்ல லட்சு கூட என்றதும் சரவணன் கப்சிப் என்றானார்.
“அப்பா ஆபீஸ்ல நா உங்க பையன் இல்லையே என் பைக்யிலேயே டெயிலி வந்துடுறேன். டோன்ட் ஒர்ரி”
கதவை தட்டிக் கொண்டு மீரா உள்ளே வரவும் “மீரா திஸ் ஈஸ் தனு. நா சொன்ன படி எப்பாய்ன்மென்ட் ஆர்டர் டைப் பண்ணிடீங்களா?”
 “எஸ் சார் இதோ” என்றவள் சைதன்யனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் பார்வையோ அவளை தவிர வேறு எங்கும் செல்லவில்லை.
மகனின் பார்வையைக் கண்டு தொண்டையை கனைத்த சரவணன் கையில் வாங்கி சரி பார்த்தது “நா பில் பண்ணிக்கிறேன். ஓகே மீரா தனுவ கூட்டிட்டு போய் எக்கவுண்ட் செக்சனில் அறிமுக படுத்துங்க”
“மிஸ்டர் தனஞ்சயன் என் கூட வாங்க” என்ற மீரா சரவணனின் அறையை விட்டு வெளியேற,
மீரா உள்ளே வந்ததிலிருந்து அவளை அணுஅணுவா ரசித்துக்கொண்டிருந்த சைதன்யன் அவளின் அந்நிய குரலுக்கு முற்றிலும் குழம்பிப்போனான்.
சரவணன் சார் தனு என்று அழைத்ததும் அவன் பெயர் தனஞ்சயன் என்று தானாகவே முடிவு பண்ணினவள் அவனை அழைக்க மகனின் குழம்பிய முகத்தை பார்த்து
 “மீரா நீ கொஞ்சம் வெளியில் வெயிட் பண்ணுமா” மீரா வெளியேறிய உடனே
 “டேய்…….. மருமகளே உனக்கு பேர் வச்சிட்டாடா அதேயே மென்டெய்ன் பண்ணு ஓல் தி பெஸ்ட்”
 ஒரு தலை அசப்பில் அப்பாவுக்கு பதில் அளித்தவன் யோசித்தவாறே வெளியே வர, சௌமியா ஏதோ சிரித்து பேசியவாறே கையில் இருந்த பைலால் மீராவை அடிக்க பதிலுக்கு அடிக்கும் மீராவையே கண்சிமிட்டாமல் பார்த்தான்.
“என்ன வச்…..சு செய்ய முடிவு பண்ணிட்டா! தெரியாத மாதிரி பார்த்தா,   இப்போ பேரேயே மாத்திட்டா,   அது சரி செல்ல பெயர் வைக்கிறது அம்மணிக்கு ஒன்னும் புதுசு இல்லையே! ‘சையு சையு’னு ஆயிரம் தடவ சொல்லி இருப்பா” மனதினுள் நினைத்தவாறே பெருமூச்சு விட்டவன். என்னையே தெரியாத மாதிரி நடிக்கிறியா உன்ன உன் வழியிலேயே மடக்குறேண்டி  கியூடிப்பை.
“எஸ்க்கியுஸ் மீ  ஸ்ரீ போலாமா?”
தன்னை ஸ்ரீ என்று தனு அழைத்ததும் மீராவின் மனதில் ஏதோ மாற்றம் “இவங்க சௌமியா எக்கவுண்ட் டிபார்ட்மென்ட் தான் இவங்க கூட போங்க” சொல்லியவள் சௌமியா பக்கம் திரும்பி “சார கூட்டிட்டு போ” என்று மாத்திரம் சொல்லியவள் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
“என்னாச்சு இவளுக்கு” என்ற பார்வையோடு மியாவின் புறம் சைதன்யன் திரும்பி அடுத்து கேட்ட கேள்வியால் சிக்கினாண்டா சிவனாண்டினு ப்ளேடு போடும் வேலையை ஆரம்பித்தாள் சௌமியா.
தனது இருக்கையில் அமர்ந்த மீராவுக்கோ நேற்று இரவு  கண்ட கனவு தான் ஞாபகத்திற்கு வந்தது. ஸ்கூல் யூனிபோர்மில் அவளுடைய பள்ளித்தோழி அம்பிகா உடன் ஐஸ் சாப்பிட்டவாறே கதை பேசி வர முதியவர் ஒருவர் தள்ளு வண்டியை தள்ள முடியாமல் தள்ள உதவி செய்ய முடிவு பண்ணியவள் அவர் அருகில் போய் வண்டியில் கை வைத்து தள்ள அடுத்த பக்கமாக வந்த சைதன்யனும் தள்ள வண்டி முன்னாடி சென்றது.
அவனை விழி விரித்து பார்த்தவாறே வண்டியை தள்ள அவனோ அந்த முதியவருடன் கதை அளந்தபடி வந்தான்.
மீராவுடன் சேர்ந்து தள்ளிய அம்பிகாவோ ஐஸை ஒரு கையில் வைத்துக் கொண்டு தள்ள சிரமப்பட்டவளாக அதை வாயில் வைப்பதும் குளிரும் போது கையில் எடுப்பதுமாக போராடிக் கொண்டு இருந்தமையினால் தோழியின் சைகையை கவனிக்கத் தவறினாள்.
அவனது மொபைல் ரிங் டோன் எழுப்ப “ஆமாடா மண்டே மோர்னிங் ஊட்டில இருப்பேன். நம்ம xxx காலேஜ் தான் வெற்றி பெரும் டோன்ட் ஒர்ரி மச்சான்”
அந்தப்பக்கம் என்ன சொன்னங்களோ “வரேன் வரேன் நா இல்லாம பாஸ்கெட் பால் மேட்ச் இருக்குமா??” பேசியவாறே மீராவின் பக்கம் திரும்பி கண்ணடித்தான். அவன் செயலோ தன்னை மீறி வேறு சிந்தனையில் நடந்தேறியது. ஒரு கணமே மீராவை பார்த்தாலும் கருத்தில் பதியவில்லை. ஆனால் அது மீராவின் மனதில் மின்னலாய் பாய்ந்து ஊடுருவி சென்றிருந்தது. 
“ரொம்ப நன்றி பா இந்த இடம் தான்” என்று அம்முதியவர் கூற, ஒரு தலை அசப்பில் பதில் அளித்தவன் தனது நண்பனுடன் பேசியவாறு தனது வண்டி இருக்கும் இடத்துக்கு வேக நடையில் சென்றுவிட்டான். அவன் கண்ணடித்ததும் அதிர்ச்சி அடைந்த மீரா ஒரு கணம் பிரீஸ் ஆனாலும் அடுத்த செக்கன் அவன் பேசியதில் கவனமானாள்.
அவனிடம் விடைபெற்ற முதியவர் இவளிடம் நன்றி கூற, அவனை போலவே தலையசைத்து புன்னகைத்தவள் தோழியை இழுத்துக் கொண்டு அவனிருக்கும் இடம் நோக்கி செல்ல அவன் வண்டியை கிளப்பி இருந்தான்.
இது எந்த மாதிரியான கனவுனு குழம்பியவாறு கண் திறந்த மீரா தனுவை கண்டதால் இப்படி ஒரு கனவுனு என்று தன்னை சமாதானப்படுத்தினாள்.
அவளிடம் யார் சொல்வது தன் வாழ்வில் நடந்த இந்த சில நிமிட சந்திப்பு தன் வாழ்க்கையே புரட்டிப்போட்டுள்ளது என்றும், அவனை மீண்டும் பார்த்ததால் ஆழ்மன போராட்டங்கள் தட்டி எழுப்பப்பட்டுள்ளது என்றும்.
சௌமியாவின் அறுவையிலுருந்து எப்படி தப்பிப்பதுனு விழிபிதுங்கி நின்ற தனுவை காக்க வந்து சேர்ந்தான் சந்துரு.
தனு விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தால் வீட்டில் தாங்காது சந்துருவோட தான் ஊர் சுற்றுவான். ரெண்டு பேருக்கும் நல்ல நட்பும் புரிதலும் இருந்தது. வருங்கால பாஸ் என்ற மரியாதை இருந்தாலும் அப்போ அப்போ சந்துருவின் குறும்புத்தனம் தலை தூக்கும்.
ஒரு தூணுக்கு அந்தப்பக்கம் தனுவும் இந்தப்பக்கம் சௌமியாவும் இருந்ததால் சந்துரு தனுவை கவனிக்காது சௌமியா கை பிடித்து இழுத்து “மியா குட்டி மாமாக்கு ஏஜெண்டா ஒரு காபி  தாடி செல்லம்” என்று சொல்லி முடிக்கும் போதே தனுவை கண்டவன் திகைத்து நின்றான்.
சௌமியாவோ “லூசு யாரு பக்கத்துல இருக்குறாங்கனு பாக்குறதில்ல” திட்டியவாறு சந்துருவிடமிருந்து கையை இழுத்துக் கொண்டவள் என்ன சொல்வதென்று புரியாத பார்வையை ரெண்டு பேரிடமும் மாறி மாறி வீசினாள்.
நொடியில் புரிந்து கொண்ட தனு சத்தமாக சிரித்தவாறே “டேய் நல்லவனே நீ சொல்லும் எகோமியா இவங்க தானா?”  ஈ என்று இளித்தவாறு சந்துரு “ஆமாம்” என்று தலை அசைக்க சந்துருவை முறைத்தாள் சௌமியா.
“தனஞ்சயன் சார உனக்கு ஏற்கனவே தெரியுமா??” சௌமியா சந்துருவை புரியாது பார்க்க
ஏற்கனவே சரவணன் சார் நேசமணியையும் சந்துருவையும் அழைத்து பேசியதால் எந்த சங்கடமுமில்லாமல் “ஆ தெரியும் சார் நம்ம சரவணன் சார் டிரஸ்ட் மூலம் படிச்சான்” என்று வாயில் வந்ததை உளறினான்.
 “அப்போ நீங்க அனாதையா?” சௌமியா தனுக்காக வருந்த ஒன்னும் சொல்ல தோன்றாமல் தனு தலையை ஆட்டி வைத்தான்.
சூழ் நிலையை சமன் செய்யும் பொருட்டு சௌமியா “வாங்க ஒரு காபி சப்பிட்டே பேசலாம்” என்று தனுவை அழைக்க பதறினான் சந்துரு
“அடியேய்” என்று கத்த, அவன் மேலும் எதுவும் பேசாதவாறு அவனின் வாயை கையால் மூடியவள், தலையில் ஒரு கொட்டு வைத்து “வாய திறந்த கொன்னுடுவேன்” என்று மிரட்டி விட்டு அவனையும் இழுத்துக்கொண்டு கீழ் தளத்தில் உள்ள உணவகத்துக்கு சென்றாள்.
அவள் செய்கையை விசித்திரமாக பார்த்த தனு,   எதையோ சிந்தித்தவாறு புன்னகைத்தவன் அவர்களின் பின்னால் சென்றான்.
உணவகத்தில் அதிக கூட்டம் இருக்கவில்லை ஒரு மேசையை கை காட்டிய மியா, அனைவரும் அங்கே அமர்ந்ததும்தான் தாமதம்.  மியாவும் சந்துருவும் ஒரே காலேஜ் என்பதிலிருந்து கைல, கால்ல விழாத குறையா லவ் பண்ண வச்சி, ஒரே ஆபிசில் வேலை பார்ப்பது வரை தானுவிடம் சொல்லி முடித்து விட்டு
“உங்களுக்கு சந்துருவ ஏற்கனவே தெரியுமா? ரொம்ப நாளா தெரியும் மாதிரி பேசுறீங்க”
“தெரியுமாவா? நாங்க ட்ராவ்சர் போடும் காலத்திலிருந்து ப்ரண்ட்ஸ். பண்ணாத சேட்டையே இல்ல பாஸ்கெட் பால் டீம் வேற இருக்கு” என்று அருமை பெருமைகளை சந்துரு அள்ளி விட்டான்.
குடித்துக்கொண்டிருந்த காபி தொண்டையில் சிக்கியது போலானது தனுக்கு. எங்கே சந்துரு ஆர்வக்கோளாறில் எல்லாவற்றையும் சொல்லிவிடுவானோ என்று அஞ்சி பேச்சை மற்றும் பொருட்டு
” அது என்ன எகோமியா?”
இப்பொழுது சந்துருவை நன்றாகவே முறைத்தாள் சௌமியா.
ஒரு அசட்டு சிரிப்புடன் “அது நம்ம மீரா சிஸ்டர் மியானு செல்ல பேர் வச்சுட்டாங்களா? நானும் என்ன பேர் வைக்கிறதுனு யோசிச்சு எக்கவுண்டன எகோனு சுருக்கிட்டேன்”
“பாத்திங்களா அண்ணா இந்த லூசு வச்சிருக்கும் செல்ல பேர” மீண்டும் சௌமியா முறைக்க
இதுவரை சார் என்று அழைத்தவள் சந்துருவின் நண்பன் என்றதும் அண்ணா என்று அழைத்ததை “நோட் திஸ் யுவர் ஹோன்னேர்” என்று  மனசாட்சி கவுண்ட்டர் கொடுக்க “மியாவை வச்சு தான் மீராவை அணுகனும்” என்று அடக்கியவன்.
“காபிக்கு உன் டிக்சனரியில் என்ன பொருள்” என்று கண்சிமிட்டியவாறே சந்துருவிடம் கேட்க செவ்வானம் பூசிக்கொண்டது மியாவின் முகம்.
குடிக்கும் காபி புரையேற உணவகத்தில் நுழைந்த மீராவை கண்ட சந்துரு “மீரா சிஸ்டர் இங்க” என்று கை அசைத்து அழைத்தான்.
தனு கல்யாணம் ஆச்சு என்றான்.
சரவணன் சார் பையன் இல்ல என்கிறார்.
மீரா பெயரையே மாற்றி விட்டாள்.
சந்துரு ட்ரஸ்டில் படித்தவன் என்றான்.
சௌமியா அனாதை என்றாள்.

Advertisement