Advertisement

அத்தியாயம் 2
சரவணன் சௌதாகரின் வரவிற்காக வாசலுக்கும் பூஜை அறைக்கும் நடயாய் நடந்த வண்ணம் தனது பிரார்த்தனையை வைப்பதும் ஏதாவது வண்டி சத்தம் கேட்டால் வாசலுக்கு வருவதுமாய் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தார் லட்சுமி. ஏதோ கார் சத்தம் கேட்க மீண்டும் வாசலுக்கு வந்தவர் முகம் மலர்ந்தார்.
“வந்துடீங்களா! எங்கே மறந்திட்டிங்களோனு பயந்துட்டேன்”
கணவன் ஆபீஸ் வேலையில் மூழ்கி விட்டால் வீட்டை சுத்தமாக மறந்து விடுவார். அழைத்தாலும் பதில் வராது. வருகிறேன், வருகிறேன் என்று வராமலையே! இருந்து விடுபவர் சரவணன். அல்லது வீட்டுக்கு புறப்பட்ட பின் இடையில் வேறு வேலையில் மூழ்கி இருப்பார். இதனால் லட்சுவிடம் வாங்கிய வசவுகள் ஏராளம்.
அவரை சீண்டிப்பார்க்கவே “என்ன மறந்துடேன், எதுக்கு பயந்த” லட்சுமி அம்மாவின் முகம் வேதனையை காட்டவே ஒரு கணம் துணுக்குற்றார் சரவணன்.
கோபப்பட்டு பொரிந்துத் தள்ளுவார் என்று சரவணன் எதிர்பார்க்க, வழக்கத்துக்கு மாறாக லட்சுவின் வேதனை முகம் அவரை வாயடைக்க செய்தது.
லட்சுவை சமாதானப் படுத்த வாயை திறந்தவருக்கு பேச இடமளிக்காமலேயே இவ்வளவு நாளும் தனது மன ஆதங்கத்தை கொட்டித்தீர்தார் லட்சு.
”நான் என்ன சொன்னாலும் தனு விசயத்துல கேட்டு இருக்கீங்களா?  மூன்று வருசத்துக்கு அப்புறம் வாரவன பார்க்க ஆசையாக ஏர்போட் போலாம் வாங்கனு காலைல எத்தன தடவ சொல்லி இருப்பேன் மறந்துடேன்னு ஈசியா சொல்லுரீங்க. கம்பனியை நடாத்தி, பணம் சம்பாதிக்கிறது என்னையும், அவனையும் சந்தோஷமா பார்த்துக்க தானே. நம்ம வேலைய புறம் தள்ளிட்டு உங்களுக்கு அப்படி என்ன வேலை? மறதி?” சரவணனின் முகம் பார்க்க பிடிக்காமல் கோபமாக உள்ளே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார் லட்சு.     
லட்சு இன்னும் என்ன சொன்னாறோ பொறுக்காமல் உள்ளே வந்து அன்னையை அணைத்துக் கொண்டான் சைதன்யன்.
”என்னம்மா நீ சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு நான் தான் வந்துட்டேன்ல”
கண்ணீரோடு தனது மகனை பார்த்து மூன்று வருடங்களாக பக்கத்தில் இல்லாத ஏக்கத்தை தீர்கவென அவனை இறுக அணைத்தார் லட்சுமி.
இப்போது அவர் கண்ணில் ஆனந்தக்கண்ணீரே. தாயின் மடியில் தலைவைத்தவாறே நலம் விசாரித்தவன். மூன்று வருட பாரின் கதையை கூறத்துவங்க அம்போனு விடப்பட்டார் சரவணன் சௌதாகர்.
“பாவிப்பய என் கிட்ட டூ டேஸ்னு சொல்லிட்டு லட்சு கிட்ட கோர்த்து விட்டுடானே அவ ஏதோ புரியாம பொலம்புறானு அசால்ட்டா விட்டுட்டேன்” சரவணனின் மனசாட்சி இஷ்டத்துக்கு புலம்ப, 
தாயும் மகனும் பல கதை பேச, எதிர் சோபாவில் அமர்ந்தவாறு சமயல் செய்யும் பொன்னம்மாவை சைகையினாலயே காபி கொண்டு வரும் படி உத்தரவு விட்டு தாய் மகன் சம்பாசனையை கவணிக்கலானார் சரவணன். பொன்னம்மாள் காபி கொண்டு வரவும்தான் தாயும், மகனும் சுற்றுப்புற சூழலை பார்த்தனர்.
சத்தமா சிரித்த சரவணன் “என்ன பையனும் அம்மாவும் பேசி முடிச்சிடீங்களா? இன்னும் மிச்சம் மீதி ஏதாவது இருக்கா?” குரலில் கிண்டல் வழிந்தாலும் பார்வையில் பாசம் கரைபுரண்டோடியது.
மகனை வா வா என்று அழைக்கும் பொழுது வராத பாசம் நேரில் பார்த்த பொழுது சரவணனுக்கு வந்திருந்ததோ? அல்லது பாசத்தை சட்டென்று கொட்டி பழக்கமில்லையோ தெரியவில்லை. அமர்ந்தவாக்கில் பார்த்திருந்தார்.      
 “எனக்கு என் மகனுக்கும் இடையில் ஆயிரம் இருக்கும் நீங்கள் காபி சாப்டுங்க” கொஞ்சம் கடுப்பாகவே லட்சு சொல்ல ஒத்தூதினான் சைதன்யன்.
 “யெஸ் டாட் கொறஞ்சது ஐனுறாவது இருக்கு நீங்கள் காபி சாப்டுங்க” என்றான் கண் சிமிட்டியவாறே.
தான் அப்பாவை பார்க்க ஆபீஸ் போனது தெரிந்தால் அதற்கும் லட்சு “என் மேல பாசமே இல்ல அதான் வந்ததும் அப்பாவ பார்க்க போய்ட” என்று காதில் இரத்தம் வரும்வரை புலம்பித்தீர்துவிடுவார். அதனால் சமத்துப்பிள்ளையாய் அன்னையின் பக்கம் நின்றான் மகன்.
அதை சரியாக புரிந்து கொண்டு சத்தமா சிரித்தார் சரவணன். லட்சு எதை விட்டு கொடுத்தாலும் சைதன்யன் விசயத்துல இறங்கி வரமாட்டார்.
ஆசையாக மகனை பார்த்து “ரொம்ப  மாறிட்டான் கரு கரு மீசையுடன் திண்ணிய புஜங்களோடு மிக அழகாக வளர்ந்துட்டான்”  மனதில் நினைத்தவரே “தனு இப்பவே கல்யாணம் பண்ணிகிறியா? பொண்ணு பார்க்கவா? இல்ல உனக்கு பிடிச்ச யாராசும் இருக்கா?” படபடவென கேட்டுவிட்டு ஆசையாக மகன் முகம் நோக்கி நின்றாள் அன்னை
ஒரு கணம் அவள் முகம் கண் முன்னே வந்து போனாலும் கண்ணை முடி தன்னை சமன் செய்து சிரித்தவன் அன்னையிடம் எவ்வாறு மறுப்பதென்று யோசிக்கலானான்
“பார்த்து லட்சு இதான் சாக்குனு ஒரு வெள்ளக்காரிய கை காட்டிட போறான்” சரவணன் பேச்சுக்கு சொன்னாலும் மகனை ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தார்.  
 “என் பையன பத்தி எனக்கு தெரியும்” நொடித்தார் லட்சு
 “ஒ.கே மா… ரொம்ப டயடா  இருக்கு நா கொஞ்சம் துங்கி எந்திரிக்கிறேன்” ஏற்கனவே! தலைவலியில் இருந்த சைதன்யனுக்கு அவனின் கல்யாண பேச்சு இன்னும் தலைவலியை அதிகப்படுத்த அவ்விடத்திலிருந்து நகர முற்பட்டான்.
“சாப்டுடு படுபா” என்ற லட்சு குரலுக்கு பதில் தராமல் தனது அறைக்கு புகுந்து கொண்டான்.
அறைக்கு வந்தவனின் கை தானாக சட்டையை கலட்டியதும் குளியலறையில் குளித்ததும் மீண்டும் படுக்கைக்கு வந்ததும் ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல செய்தானே தவிர வந்ததிலிருந்து அவனது மனம் கோவத்தின் உச்சியிலும், மூளை சூடாகி எதையும் சிந்திக்கும் திறனை இழந்து, தன் கட்டுப்பாடின்றி தரிக்கெட்டு ஓடியது.
“என்ன தெரியத மாதிரியே பேசினாளே அப்பவே நா சுதாரிச்சு இருக்கனும் கல்யாணம் பண்ணி குழந்த வேற இருக்கு அழுது அழுது சொன்னாளே என்ன லவ் பண்ணுறேனு எல்லாம் பொய்யா?” சைதன்யனின் வாய் ஏகத்துக்கும் அவளை வசைபாட
“டேய் அவ உன்ன லவ் பண்ணுறேனு சொன்னா நீ என்ன சொன்ன மீ டூ…என்று சொன்னியா இல்லையே! ஜஸ்ட் ஈர்பு இது லவ்வே இல்லனு அடிச்சி சொன்னியே! எனக்காக வைட் பண்ணுணு சொன்னியா? இல்ல லவ் பண்ணுறேனு சொன்னியா? இப்போ அவ கல்யாணம் பண்ணது தப்பா?” மனசாட்சி ஏகத்துக்கும் கேள்வி கேட்ட அவன் நிலை அவனுக்கே குழப்பமாக இருந்தது.
மீராவை ஆபீஸில் பார்த உடன் அவன் மனதில் தோன்றிய மாற்றம் என்ன என்று அவனுக்கு புரியவில்லை. “யார் நீங்க” என்ற பெண் குரலுக்கு திரும்பினாலும் சத்தியமா அங்கு மீராவை எதிர் பார்க்கவில்லை. ஒரு நொடியில் ஆறு வருடங்களுக்கு முன்பு சந்தித்த கலேஜ் முதல் வருட மாணவியாக அறிமுகமான ஸ்ரீக்கும் இன்றைய மீராவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் பார்த்து விட்டான்.
ரெட்டை ஜடையில் ஒரு ஜடையில் இருந்து இன்னொரு ஜடைக்கு பாலம் போல் பூச்சூடி தாவனியில் கால் கொளுசோடு சின்னதா வட்டப்பொட்டு அழகா கியூடிபையா இருந்தா இப்போது சுடிதாரில் கோபுர பொட்டில் போனிடைல் கொண்டையிட்டு அன்றைக்கு நெஞ்சளவு உயரமாக இருந்தவ இன்றைய நல்ல உயரத்தில் ஹீல் போடாமலேயே இருந்தாள்.
தன்னை அளவிடும் பார்வை பார்த்தவனை எரிச்சலுடன் மீண்டும் “யார் சார் நீங்க”
“இது மீரா சாரோட இன்னொரு பி.ஏ நீங்க உள்ள போங்க” பதில் நேசமணி இடம் இருந்து வரவும்,
சுதாரித்தவன் “உண்மையிலயே! இவளுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே சொல்லுகிறாளா?” சைதன்யனை யோசிக்கவிடாமல் நேசமணி பேசவும் தந்தையை தேடி சென்றுவிட்டான்.   
“யார்டா இது” என்ற பார்வையோடு மீரா தனது கதிரையில் அமர்ந்தாள். உள்ளே சென்ற அவன் சரவணன் சாரை கட்டித் தழுவுவது கண்ணாடி அறையினுடாக தெரிந்தது.
உள்ளே வந்த மகனை கண்ட சரவணனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை கட்டித் தழுவி பல கதை பேசி இடை இடையே வேலையும் பார்த்து ஒன்றாக வீட்டுக்கு வரும் போது, மீண்டும் மீராவின் ஞாபகம் வர “டாட் நா கார்ல வைட் பண்ணுறேன்” அவர் பதில் எதிர் பார்க்காமல் மீரா கிளம்பி சென்று விடமும் அவளிடம் பேச வேண்டும் என்று கீழே வந்தான்.
அங்கு மீரா ஒரு அழகான வலிபனுடன் பேசியவாரு ஒரு குழந்தையை கொஞ்சிக்  கொண்டு “அத்தான் இன்னைக் சனி சோ பீச் போலாம்” கொஞ்சும் மொழியாய் கெஞ்சுபவளை சைதன்யன் அதிர்ச்சியாக சில கணங்கள் பார்த்தான் என்றால் மறுநொடி வெறுப்பாக பார்கலானான். 
அந்த வலிபனோ வினு குட்டி சொன்னா ஒ.கே என்று மகள் முகம் பார்க்க கைதட்டி தனது சந்தோசத்தை காட்டி தலையாட்டினாள் குட்டி தேவதை. அவர்கள் போன திசையை வெறித்தவாறே இருந்தவனை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்து தந்தையின் குரல்தான்.
எல்லாவற்றையும் நினைத்து பார்த்தவனுக்கு கோபம் கொஞ்சம் குறையவில்லை. தன்னை அவள் அடையாளம் தெரியாதது போல் நடித்திருக்கிறாள். அந்த கோவத்தில்தான் வீடு வந்தான். லட்சு திருமண பேச்சை எடுக்கவும்தான் மீரா என்று அவன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டாள் என்ற உண்மை சைதன்யனுக்கு புரிய ஆரம்பித்தது. 
அவனது மனது அவளை நீ காதலிக்கிறாய் நொடிக்கு ஒரு தடவை ஞாபக படுத்த, அவனும் அவளும் பழகி அந்த இனிமையான நாட்கள் வேறு அவன் நியாபக அடுக்கில் வந்து அவனை இம்சிக்க “அதெப்படி அவ என்ன காதலிக்கிறதா சொல்லிட்டு இன்னொருத்தன கல்யாணம் செய்யலாம்? கல்யாணமும் பண்ணிட்டு என்ன தெரியாத மாதிரி அவாய்ட் பண்ணுறா” என்ற கோபம் தலைதூக்க, சினம் கொண்ட வேங்கையாக “விட மாட்டேன் டி உன்ன, என்ன லவ் பண்ணிடு இன்னொருத்தன் கூட செடில் ஆகிட்டியா? வரேன் டி எனக்கு கீழே உன்ன வேலை செய்ய வைச்சு உன்ன பண்ணுற டாச்சர்ல நீ கதறணும்” இன்னும் என்ன வெல்லாமோ எண்ணங்கள் தோன்றி மிகவும் குரூரமாக சிந்திந்த வாரே துங்கிப்போனான் காலம் கடந்து காதலை உணர்ந்த அந்தக் காதலன்.
ரவிக்குமார் இராணுவத்தில் சேர்ந்த பொழுது தனக்கு ட்ரைனியாக இருந்த மேஜரான ஹரிப்பிரசாத்தோடு ரொம்பவே ஒன்றி இருந்தார். 
விடுமுறைக்கு இவர் அவருடைய ஊருக்கு செல்வதும், அவர் இவருடைய ஊருக்கு வருவதுமாக இருந்த நட்பு நாளடைவில் தனது ஒரே அக்கா சரஸ்வதியை ஹரிப்பிரசாத்துக்கு திருமணம் செய்து வைத்ததில் நெருங்கிய உறவானது.    
சரஸ்வதி அம்மா கல்யாணத்துக்கு பிறகு ஹரிப்பிரசாதுடைய ஊரில் அவருடைய தாயுடன் வசித்து வந்த போது ஹரியின் தாயோ ஹரியையும் ரவிக்குமாரையும் அழைத்து
“ஹரி உன் அப்பாவின் பரம்பரையில் எல்லாருமே ராணுவத்தை சேர்ந்தவங்க அதனாலேயே என்னமோ ஒரே வாரிசா போயிடுறீங்க சரஸ்க்கும் ரவியை விட்டா யாரும் இல்ல. நாளைக்கு ரவிக்கும் கல்யாணம் ஆகிருசுனா அவன் மனைவியும் தனியா தான் இருக்கணும் பேசாம நாம சென்னைக்கே போய்டலாமா? ஒரே வீட்டுல ஒன்னா இருந்துடலாமே!” என்று கூற
தனது மாமியாரை ஆச்சரியமாக பார்த்த சரஸ்வதிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ரவிக்குமாருக்கோ சந்தோசம் தாளவில்லை அத்தனை சந்தோஷத்தையும் முகத்தில் காட்டியவாறே ஹரியை பார்த்தார்.
 “அது சரிவராதுமா” என்று யோசிக்கும் முகபாவனையை ஹரி காட்ட, அக்காவும் தம்பியும் ஒரு கணம் கவலைக்குள்ளாகினர்.
“பக்கத்துக்கு பக்கத்துலேயே ரெண்டு வீடு கட்டுவோம். ரவியின் வருங்கால மனைவி என்று வரும் பொண்ணுக்கும் ஆசாபாசங்கள் இருக்குமில்ல”
கிராமத்து பெண்மணியான ஹரியின் அன்னை சொந்த ஊரை விட்டு வர, இப்படி ஒரு முடிவெடுப்பார் என்பதே சரஸ்வதிக்கு ஆச்சரியம் என்றால் தனது கணவன் குடும்பத்துக்கு வராத பெண்ணையும் பற்றி சிந்தித்ததில் ஆனந்தமும், நிம்மதியும் அடைந்தாள். 
ஹரி நிறையவே! யோசித்து இந்த முடிவை எடுத்திருந்தான். ஹரியின் யோசனை சரியாக படவே பக்கத்துக்கு பக்கத்தில் ரெண்டு வீடு கட்டி அக்காவும் தம்பியும் குடி வந்தனர். இன்று ஒரே வீட்டில் அனைவரும் வசிக்க அடுத்த வீடு சரஸ்வதியின் போட்டிக் என்றானது.
கார் ஹார்ன் சத்தம் கேட்டு டிவியில் செய்தி பார்த்துக் கொண்டு இருந்த ரவிக்குமார் அதை அமர்த்தி விட்டு வெளியே வர அங்கு தேவ் முன் இருக்கையில் இருந்து இறங்கி கதவை பூட்டிக்கொண்டு இருந்தான். அடுத்த சீட்டில் மீரா வினுவை அணைத்துக் கொண்டு இருக்க, இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
 “இன்னைக்கும்  பீச்சில் ஆடிவிட்டு வரிங்களா? சாப்டீங்களா? இரு மீராவ எழுப்புரேன்”
 “நல்லா தூங்குரா! இருக்கட்டும் மாமா நீங்க வினுவ தூக்குங்க”
தூக்கம் கலையாதவரு வினுவை தூக்கி ரவிக்குமாரிடம் கொடுத்த தேவ் மெதுவாக மீராவை தூக்கி தூக்கம் கலையாதவரு தூக்கிக் கொண்டு நடந்தான்.
“உன் பொண்ணு என் கைல என் பொண்ணு உன் கைல” ரவிக்குமார் பாட்டு மாதிரி பாட
தேவ் புன்னகைத்தவாரே “என் பொண்ண என்னால தூக்க முடியும். உங்க பொண்ண உங்களால தூக்க முடியுமா?” சவால் விடும் பார்வை பார்த்தான்.
 “வயசாகிடேனு குத்திக் காட்டுறியா மாப்ள, அய் ஏம் எ எக்ஸ் ஆர்மி மேன்” வினுவ ஒரு கையில் பிடித்தவர் மீசையை முருக்கி விட்டவாறே உள்ளே குரல் கொடுத்தார்.
உள்ளே இருந்த ப்ரியா வரவும் “ப்ரியாமா இந்தாமா உன் பொண்ணு டிரஸ் மாத்தனும் என்று எழுப்பி விட்டுடாத தூங்கட்டும்”
எதுவும் சொல்லாது ப்ரியா தேவ்வை ஒரு பார்வை பார்க்க “இவ நாளைக்கு தானே வரேனு சொன்னா? தேவ் இன்னைகு நீ செத்த” கதறிய மனசாட்சியை அடக்கி வைத்து அக்மார்க் புன்னகையுடன்
 “ஹாய் பொண்டாட்டி மர்னிங் தான் வருவனு சொன்ன? சொல்லி இருந்தா உன்ன பிக்கப் பண்ண ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருப்பேன்” சமாளிக்க முயன்றான்.
“சொல்லாம வந்ததால் தான் அப்பாவும் பொண்ணுங்களும் பண்ணுறது தெரிய வந்தது” கணவனை நன்றாகவே முறைத்தாள் ப்ரியா.
ஆம் தேவ்கு மீரா மூத்த மகள் தான் அவனை விட பத்து வயது இளையவளான மீரா பிறந்ததிலிருந்து அவளை எதற்கும் அழ விட்டதில்லை. அவள் சொல்லி எதுவும் செய்யாது இருந்ததில்லை. மீராவும் சமத்தா அவன் சொன்னதை கேட்பாள்.  அவன் ஊட்டினால் உண்பாள். அவன் பாடசாலை சென்றால் அவளை சமாளிக்க சகுந்தலா பெரும் பாடு படவேண்டி இருந்து ஒருவாறு தேவ் பேசி சமாதானப் படுத்தி விட்டு போவான்.
மீராவை கட்டிலில் படுக்க வைத்து பக்கத்தில் வினுவையும் கிடத்தி போர்வையை இழுத்து விட்டு லைட்டை அணைத்து கதவையும் சாத்திவிட்டு தங்களது அறைக்கு நுழைந்ததும் ப்ரியாவை இழுத்து அணைத்த தேவ்
 “மிஸ் யூ டி செல்ல குட்டி” எனக் கொஞ்ச ஆரம்பித்தான்.
அவனை தள்ளி விட்டு “நாளு நாள் ஊர்ல இல்ல என்றதும் நல்லா ஊர் சுத்துரிங்க மிஸ் யூ வாம் மிஸ் யூ” கணவனின் அருகாமை இம்சித்தாலும் கோபமுகத்தை காட்டலானாள் மனையாள்.
 “ஐயோ உன்ன கூட்டிடு போகலனு கோவமா”  திரும்பவும் அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட மற்ற எல்லாவற்றையும் மறந்து போனாள் தேவின் ப்ரியா.
காரை பூட்டி மீராவின் ஆபீஸ் பை மற்றும் இதர பொருட்களையும் எடுத்துக் கொண்டு வெளி கேட்டையும் பூட்டி விட்டு உள்ளே வந்து பொருட்களை வைக்கும் போது தூக்கம் கலைந்து எழுந்து வந்தார் சரஸ்வதி
“பசங்க வந்துடாங்களா?” கதவை பூட்டிக் கொண்டிருந்த தம்பியிடம் பதில் வராது போகவே “ரவி என்னடா எதாவது பிரச்சினையா?”
”அக்காவின் தொடுகையில் சுய உணர்வுக்கு வந்த ரவிக்குமார் “ என்ன கேட்ட” அக்காவின் கலங்கிய முகத்தை பார்த்து ஊகித்தவர்
 “பிரச்சினை ஒன்னும் இல்லகா மீராவ பத்தி தான் யோசிச்சிடு இருந்தேன் இன்னும் சின்ன புள்ள மாதிரியே இருக்கா. அவள கல்யாணம் பண்ணி வீட்டிலிருந்து அனுப்புறாத பத்தி யோசிச்சா தான் பயமா இருக்கு சகு(சகுந்தலா) எக்சிடன்ல செத்தத பார்த்த புள்ள ஒரு மாதிரி இருந்தால்ல அதான்” கவலையான குரலில் அவர் கூற
“நம்ம தேவ்கே மீராவ கட்டி வைச்சி இருக்கனும்டா அவன் காதலிக்கிறதா சொன்னப கட்டாயபடுத்தியாவது கல்யாணம் பண்ணி இருக்கனும்” சரஸ்வதி தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தலானார்.
தேவ்வுக்கும் ப்ரியாவுக்கும் திருமணம் நிகழ்ந்தது ஆறுவருடங்கள் ஆகியிருந்த நிலையில் இன்னமும் இதையே பேசுகிறாளே என்ற கோபம் சற்று தலை தூக்க,  “என்ன அக்கா பேசுற தேவ் மனசுல அப்படி எந்த எண்ணமும் இருக்கலையே! மீரா தானே தேவ் ப்ரியாவ லவ் பண்ணுறதயே சொன்னா நீயும் குழம்பி வீணாக எதாசும் பேசி வைக்காத, ப்ரியாவும் என் பொண்ணு தான் போ போய் தூங்கு”
தனது மனவேதனையை இந்த வீட்டில் யாரும் புரிந்துகொள்வதில்லையென்று பெருமூச்சு விட்டவாரே சரஸ்வதி தனது அறைக்கு சென்றுவிட்டார்.
“தேவ்”          
“ம்”                
 “தேவ் மீரா…..கு ஒன்னும் பிரச்சினை இல்லல இப்போ அவள கல்யாணம் பண்ணி கொடுக்கலாமா?” தேவின் கைவளைவில் இருந்தவாறே ப்ரியா கேட்க
“அவ யார லவ் பண்ணாணு தெரியல ரியா. நானும் அவ படிச்ச ஊட்டி காலேஜ் போய் விசாரிச்ச வர ப்ரெண்ட்ஸ் என்று பொதுவா தான் எல்லாருகிட்டயும் பழகி இருக்கா. சையுனு தான் அவன் பேர் சொன்னா” தேவும் யோசனையாகவே! பதில் சொன்னான்.
 “ஒரு வேல ‘சாய்’ யா இருக்குமோ?   என்ன தேவ் அவனுக்காக ஊட்டிவர போய் இருக்கா. நீங்க பேர கூட சரியா தெரிஞ்சிக்காம விட்டுட்டீங்களே!”
“அவள அவன் லவ் பண்ணி இருந்தா தேடி வந்து இருக்கனுமே யாரும் வரலயே” கவலையான குரலில் தேவ் உச்ச கொட்ட குழப்பமாக தேவை ஏறிட்டாள் ப்ரியா.
“அன்னைக்கு என்ன நடந்ததுனு மீரா மட்டும் தான் சொல்ல முடியும் மழையில நனைஞ்சு கீழ விழுந்து தலைல அடி பட்டதால அவளுக்கு அம்னிசியானு நெனசிடு இருந்தேன் இது வேற ப்ரியா”
என்னங்க என்னென்னமோ சொல்லுறீங்க”
 “அத்த இறந்தப்ப அவ மனசு பாதிச்சு அத்த இறக்கலனு அவளாவே நெனசிடு அத்தைக்கூட பேசிகிட்டு கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருந்தாளே அதே மாதிரி ஏதோ அவ மனசு வருத்த படும்படி நடந்து இருக்கு”
 “அப்போ அந்த பையனுக்கு ஏதாசும் ஆகிரிச்சா”
“ஒரு டாக்டர் மாதிரி பேசு ரியா அப்படி ஏதாவது நடந்து இருந்தா அவன் கூட குடும்பம் நடத்திகிட்டு இருப்பாலே ஒழிய ஒரேயடியா மறந்துட மாட்டா”
 “நீங்க தான் சைக்ராட்டிஸ், நா கைனாலஜிஸ்ட்பா… தெளிவா சொல்லுங்க” கணவனை முறைத்தாலும் விஷயத்தில் கவனமானா ள்.
“எனக்கு என்னமோ சையு மீராவ ரிஜெக்ட் பண்ணதால இப்படி ஆகிடாளோ என்று தோணுது”
“இல்லங்க மீரா தைரியமான பொண்ணு ரிஜெக்ட் பண்ணிண காரணத்த கேட்டு மூவ் பண்ணி இருப்பா. உங்க பின்னாடி நா பலோ பண்ணுறத பாத்து என்கிட்டயே வந்து ‘என்ன என் அத்தான லவ் பண்ணுறீங்களா?’ என்று கேட்டவளாசே”
 “ஆமா நீ என் பின்னாடி சுத்தினத அப்படியே உள்டாவாக்கி வீட்டுல போட்டு கொடுத்து உன்ன என் தலையில கட்டிடா” சிரிக்காம தேவ் சொல்ல எங்க இருந்து தான் ப்ரியாகு கோவம் வந்ததோ தெரியல  தேவை மொத்த ஆரம்பித்தாள்.

Advertisement