Advertisement

அத்தியாயம் 19
மீரா கண்விழித்த போது மாலை மங்கியது போல் அறை இருட்டாக இருந்தது. ஜன்னல் கதவு மூடி இருக்க ஜன்னல் திரைசீலை போடப் பட்டிருப்பதாலும் வெளியே மழை கொட்டிக் கொண்டிருப்பதாலும் அறை மாலை வேலை போல் இருந்தது. அறையை சுற்றி முற்றி பார்க்க ஒன்னும் புரியவில்லை தலை வேறு கனத்து பாரமானது போல் வலிக்க ஆரம்பித்தது. தலையை தொட கட்டு போடப்பட்டிருந்தது.
மெதுவாக கண்ணை திறந்து எழுந்து அமர்ந்தவளுக்கு தான் வண்டியில் மோதியது நியாபகத்தில் வந்தது. “நா எங்க இருக்கேன்” எழுந்து கதவருகில் செல்ல தெம்பில்லாதவளாக கண்ணை மூடி யோசிக்க காலேஜில் இந்த ஆண்டு இறுதி நாள் சைதன்யனை பார்த்து தன் மனதில் மறைத்து வைத்திருக்கும் காதலை சொல்லியே ஆகா வேண்டும் இன்றோடு அவன் காலேஜை விட்டு சென்று விடுவான் என அவனை காணச் சென்றது மெல்ல மெல்ல நியாபகத்தில் வந்தது.
அவனை காணவென காத்திருந்தவள் மழை பொழியத் தொடங்கவே கையிலிருந்த பையை அணைத்தவாறே அவனுக்காக கட்டிடத்தின் கீழ் நனையாதவாறு நின்றிருந்தாள். இருந்தும் மழைத் தூரல் அவளை உரசிச்சென்றன.
வெகு நேரமாகியும் சைதன்யன் வெளியே வராததால் கவலையடைந்தவள் அவனை சந்திக்காது செல்ல நேரிடுமோ என அஞ்சியவளாக காத்திருந்தவள் மழையின் குளிர் தாங்காது நடுநடுங்க ஒரு கப் காபி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என காண்டீனை நோக்கி குடை பிடித்தவாறே நடந்தாள்.
மீரா வரும் போது சைதன்யன் மழையில்  நடந்தவாறே அவனுடைய பைக்கை நோக்கி கோவமாக சென்று கொண்டிருந்தான். அதை அறியாத மீரா மழையையும் பொருட்படுத்தாது குடையை மடித்தவள் தன் காதலை சொல்ல அவனிடம் ஓடினாள்.
காலேஜில் இறுதி நாள் என்பதால் நண்பர்கள் அனைவரும் சிரித்துப் பேசி கதையடித்துக் கொண்டிருக்க நவீன் ட்ரைனுக்கு டைம் ஆனதால் கிளம்ப குணால் ரேஷ்மாவை தனியாக பேசவென தள்ளிச்சென்றிருக்க கவிதா சைதன்யனை ஏக்கப் பார்வை பாத்திருந்தாள்.
காலேஜில் சேர்ந்த நாளிலிருந்து கவிதா சைதன்யனை காதலிக்க ஆரம்பித்தாள். அவனின் அலட்டலில்லா அழகும் பெண்களிடத்தில் ஒதுங்கிப் பழகும் குணமும் அவளை ஈர்க்க எப்போது காதல் வயப்பட்டால் என்று அவளே அறியவில்லை அதை அவனிடம் சொன்னால் நிச்சயமாக தன்னை ஒதுக்கி விடுவான் என அறிந்தவள் யாரிடமும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவனை காதலிப்பதை சொல்லவுமில்லை, காட்டிக் கொள்ளவுமில்லை.
கடைசி வருடம் செல்கையில் தான் மீரா வந்து சேர்ந்தாள். அவளிடம் சைதன்யன் காட்டும் கரிசனம் மீராவின் மேல் வெறுப்பை உதிர்த்தாலும் மீராவை வார்த்தையால் சாடவில்லை. அன்பாக நெருங்கி பழக்கவுமில்லை மீராவின் கண்ணில் சில கணம் சைதன்யனின் மேல் காதல் இருப்பது போல் தோன்றினாலும் சைதன்யன் அவளை சிறு குழந்தை போல் நடத்துவதனால் அதை கருத்திலும் கொள்ளவில்லை.
அவன் தன்னை என்றுமே காதலிக்கப் போவதுமில்லை. இன்று சொல்லவில்லையென்றால் என்றுமே தான் அவன் மேல் கொண்ட காதலை சொல்லப் போவதில்லை காதலை சொல்லாமல் தவிப்பதை விட சொல்லி விடுவதே போதுமானதென்று முடிவெடுத்தாள்.
சைதன்யனை நெருங்கி நின்றவளை ஒரு பார்வை பார்த்தவன் இரண்டடி தள்ளி நின்று தனது பையை கையில் எடுத்து கிளம்ப எத்தனிக்க
“தனு ஒரு நிமிஷம் ஐ வாண்ட் டு டெல் யு  சம்திங்” கூந்தலை ஒதிக்கியவாறே வெக்கப்பட, இத்தனை வருடங்கள் தோழியாக பழகியவளின் உடனடி மாற்றம் அவனை யோசிக்க வைத்திருந்தாலும் புரியாமல் புருவம் உயர்த்தியவாறே என்னவென கேட்டிருந்தான்.  
 அதில் மயங்கியவள் “ஐ லவ் யு தனு” என்று நாணியவள் மேலே பேசமுன் கை நீட்டி தடுத்தவன் 
“கடைசியில் உன் புத்திய காட்டிட இல்ல பிரெண்டா பழகினா இப்படி தான் மேல வந்து விழுவியா” கடுமையாக ஒலித்திருந்தது அவன் வார்த்தைகள். வார்த்தைகள் மட்டுமா? அவள் அவனை நெருங்கி நின்றதை வேறு சுட்டிக் காட்டினான்.
ஏதோ அவள் கேவலமான பெண்போல அவன் மேல் விழுந்ததாக அவன் பேசுவதாக எண்ணியவள் அவன் தனது காதலை எக்காலமும் ஏற்க்க மாட்டான் என்று நன்றாக தெரிந்தும் அவனை அடையும் வெறி வரவே “எவெரிதிங் பேயார் லவ் அண்ட் வார்” என்றவள் உடனே கொஞ்சும் குரலில் “என் காதலுக்குகாக என்னையே கேட்டாலும் நா தருவேன்” மேலும் அவனை உரசியவாறே நெருங்கி நின்று கண்களில் எதிர்பார்ப்போடு கேட்டாள். அவன் தன் காதலை ஏற்றுக்கொண்டால் போதும் என்று தன்னையே விலை பேசலானாள்
அருவருப்பாக அவளை பார்த்தவன் “கண்ட சாக்கடைல எல்லாம் விழுந்து எந்திரிக்கிறவன் நானில்ல” சைதன்யனிடமிருந்து சூடாகவே பதில் வந்தது.
அவளை சாக்கடை என்றதும் “அப்போ அவ தான் உனக்கு பன்னீரா அவ பின்னாடியே சுத்தி கிட்டு இருக்க” தன்னையே தருகிறேன் என்ற போதிலும் இவன் இவ்வாறு சொவதென்றால் எல்லாம் மீரா செய்யும் மாயம் என்று கவிதாவின் கோபம் தலைக்கேறி இருந்தது. 
எவ என்று யோசித்தவன் மீராவைத்தான் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டு “அவளை பத்தி பேசாத பேச உனக்கு அருகத்தையுமில்ல” என கர்ஜித்தான். 
கேலிச் சிரிப்பினூடே “எத்தன தடவ விழுந்து எந்திரிச்ச. இல்ல இல்ல எத்தன தடவ பன்னீர் குளியல்” சைதன்யன் மீராவை காதலிக்கிறானா? என்று கவிதாவுக்கு தெரிந்தே ஆகா வேண்டி இருந்தது.
“தட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ்” இவ்வளவு நாளும் நட்பாய் இருந்தவள் நடந்து கொண்ட விதம் சொல்லிலடங்கா கோவத்தையும் வெறுப்பையும் உண்டாக்க கதவை அடைத்தவாறே நின்றிருந்தவளை தள்ளி விட்டு வெளியே சென்றான்.
அவனிடம் தப்பாக பேசியதுமில்லாது மீராவை பத்தி தப்பாகவும் பேசியதால் எரிமலையாய் கொதித்துக் கொண்டு வெளியே வந்தவனை மீரா ஓடி வந்து பைக்கின் முன் பாய்ந்து மூச்சுவாங்கி நின்றாள். அவளை கண்டதும் இவ்வளவு நேரம் இருந்த கோபம் மாயமாய் மறைந்து சட்டென்று புன்முறுவல் பூத்தவன் பணியில் நனைந்த பன்னீர் ரோஜா போல் மழையில் நனைந்திருந்தவளை அவனையறியாமலேயே ரசிக்க ஆரம்பித்தான்.
“ஹப்பா இப்போவாச்சும் வெளிய வந்தீங்களே. எங்க உங்கள பாக்காம போய்டுவேனோனு பயந்துட்டேன்” சொல்லியவாறே மூச்சு வாங்கினாள்.
“அதான் பாத்திட்டியே இன்னைக்கி மூட் ஆப் நாளைக்கு பார்க்கலாம்” அவன் சொன்னது மழையின் காரணமாக காதில் விழவில்லையோ காதலை சொல்லனும் என்று வந்த பதைபதைப்பில் உணரவில்லையா என்னவோ “நாளை” என்றது கேட்காமாலையே போய் விட்டது.
“இருங்க இருங்க நா சொல்ல வந்தத சொல்லிடுறேன்” மழை தூரல் அவளின் மேல் விழ குளிரில் உதடுகள் தந்தியடிக்க அவனை காதல் பார்வை பார்த்தவளை
“சீக்கிரம் சொல்லு” என்று இவனும் அவசர படுத்தினான்.
“சையு எனக்கு எனக்கு” என்று தடுமாற கவிதா சொன்னது நியாபகத்தில் வர
“என்ன என்னை லவ் பண்ணுறியா” என்று கேலியாக கேட்டான்.
அவனை ஆச்சரியமாக பார்த்தவள் ஆமாம் என்று மேலும் கீழும் வெக்கப் புன்னைகையுடன் தலையசைக்க இவ்வளவு நேரமாக இருந்த இதம் மாற அவளை முறைத்தவன் “விளையாடாதே க்யூட்டிப்பை”  அவன் கவிதாவிடம் காட்டிய கோபத்தில் ஒரு பங்கேனும் இவளிடம் காட்டவில்லை. காட்டவும் முடியவில்லை. இவள் குழந்தை. ஏதோ உளறுவதாகவே எண்ணினான்.  
“ஐம் ரியலி சீரியஸ் சையு. ஐ ரியலி லவ் யு” இவ்வளவு நேரமும் தமிழில் பேசியவள் ஆங்கிலத்துக்கு மாற
“தமிழ்ல சொன்னாலும் ஆங்கிலத்துல சொன்னாலும் ஒரே பதில் தான்” கடுப்பாகி சிடுசிடுக்கலானான் சைதன்யன்.
“சத்தியமாக சையு” என தலையில் கைவைத்து சொல்ல குழந்தை தனத்தை பார்த்து உள்ளுக்குள் சிரிப்பு மூட்டினாலும், இவளை இப்பொழுதே அடக்கி வைக்க வேண்டும் என்று எண்ணியவன்
“போதும் நிறுத்து எத்தன பேர் கிளம்பி இருக்கீங்க ஒருத்தன் பாக்க அழகாகவும் படிச்சவனா பணக்காரனா இருந்தா போதுமே உடனே லவ் னு சொல்லிடுவீங்களோ”
அவனின் கோப முகம் அவள் மனதை சில்லிட வைத்தது. அவனின் பெயரையும் படிக்கும் காலேஜையும் மாத்திரம் அறிந்து அவனை தேடி வந்தவளிடம் இப்படி பேச சட்டென்று கண்கள் கலங்கியது. அந்தோ பரிதாபம் கண்ணீரா?  மழைநீரா? அவன் கண்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை போலும்
“லூசு மாதிரி பேசிகிட்டு போ போய் படிக்கிற வேலையாய் பாரு” வண்டியை கிளப்ப முயன்றான்.
“நா என்னை செய்யணும்” காதலை புரியவைக்க என்ன செய்யணும்னு என்ற அர்த்தத்தில் அவள் அழுதவாறே கேட்க, கவிதா சொன்னது தருணத்தில் நியாபகம் வந்தது விதியோ?
இவ்வளவு நேரமும் எரிமலையாய் அடங்கி இருந்தவன் தீக்குழம்புகளை காக்கலானான். “என் கூட படுப்பியா? அதுக்கு கூட தயங்க மாட்டிங்களே! காதல் என்று சொல்வீங்க அப்பொறம் எதுக்கும் தயாராக தான் இருக்கீங்க. சரியான உசார் பாட்டிங்க டி நீங்க, பணம் வசதி இருக்குற பையன வளைச்சு போட எந்த எல்லைக்கும் போவீங்களே! அப்படி என்ன உங்களுக்கு பணத்தாசை இதுக்கு பேசாம உடம்ப வித்து பொழைங்க”
தகாத பெண்களிடம் சிக்குண்டு அல்லல் படாமல் இருக்க எல்லா பெண்களையும் ஒதுக்க பரம்பரை பரம்பரையாய் அவனுக்கு சொன்ன பாடம் மீராவை ஒதுக்க வார்த்தையால் சாடி எங்கயோ எரிந்த நெருப்பை இவளின் மேல் கொட்டினான்.
காதல் என்ற வானில் சிறகு விரிக்க பயப்படும் குஞ்சிடம் பருந்து போல் வேட்டையாட காத்திருக்கிறேன் என்பதை போல்  அவன் சொன்னது அந்த சின்ன இதயத்தை குத்திக் கிழிக்க கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் பெருகி அவன் விம்பமும் தெளிவில்லாது போனது.
ஒருகணம் மீராவுக்கு அவன் என்ன பேசுகிறான் என்று கூட புரியவில்லை. அவன் வார்த்தைகளின் அர்த்தம் நெஞ்சத்தை பதம்பார்க்க அதன் தாக்கம் கண்களிலிருந்து கண்ணீராகத்தான் வெளிவந்து கொண்டிருந்தது. பேசவே திரணியற்று அவனை வெறிக்கலானாள்.
விம்மி விம்மி அழும் அவளை பார்த்தவன் மனம் இளக “நாளை காலை பத்து மணிக்கு என் வீட்டுக்கு வா” என்றுவிட்டு வண்டியை கிளப்பி இருந்தான். அவன் சொன்னது பொறுமையாக பேசிக் கொள்ளலாம் என்ற அர்த்தத்தில் அவளோ அவளை இரையாக்க அழைப்பு விடுத்ததாக அர்த்தம் கொண்டாள்.
  . 
அதன் பின் அவளை சந்திக்கும் சூழ்நிலை அவனுக்கு அமையவுமில்லை அவளிடம் பேசிய விதத்தை அவளின் நன்மைக்காக என்று தன்னை தேற்றுக் கொண்டான். அவளின் மீது காதல் கொண்ட அவன் மனம் இன்றைய அவளின் நிலைக்கு அவன் பேசியது தான் காரணம் என்று சொல்ல  முழுதாக உடைந்தான்.
அவன் செல்வதை அழுதவாறே ஆணியடித்ததை போல் அந்த இடத்திலேயே நின்றவளை தொட்டது ஒரு கரம்.
திரும்பிப் பார்த்தவள் அவசர அவசரமாக கண்களை துடைத்து புன்னகைக்க முயல அவளை பார்த்து கவலையான குரலில் “நா நாலு வருசமா அவன காதலிக்கிறேன் என்னையே அவன் கிட்ட பல தடவ கொடுத்தும் இருக்கேன் ரெண்டு தடவ கருக்கலைப்புக்கு செஞ்சேன். அவன் நல்லவன் என்று ஏமாந்துட்டேன்” என்று தலையில் அடித்தவாறே கவிதா அழ பேச்சின்றி போனாள் மீரா.
“நல்ல வேல நீ தப்பிச்ச…” இன்னும் என்னவெல்லாம் சொல்ல முயன்றாளோ மீரா மயங்கிச்சரிந்தாள்.
சைதன்யன் தள்ளிச் சென்றதும் கோபத்தில் வெகுண்டு எழுந்து வந்தவள் மீரா சைதன்யனிடம் தன் காதலை சொன்னதும் அவன் மறுத்ததும் திருப்தியாக இருந்தாலும் சைதன்யன் நெருங்கி பழகிய ஒரே பெண் மீரா என்பதால் அவளை காய படுத்தவே சைதன்யனை பற்றி தவறாக பேச மீரா மயங்கியதை கண்டு பயந்தவள் சுற்றும் முறும் பார்த்து யாரும் தன்னை கவனிக்கவில்லை என்றதும் இடத்தை காலி செய்தாள் கவிதா.
சைதன்யன் பேசிக் சென்றதையும் கவிதா சொன்னதை கேட்டு தன் காதல் பொய்த்துப் போனதை தாங்காது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனதோடும் மூளையோடும் போராடியவள் தாங்க முடியாமல் மூளை அதிர்ச்சியடைந்து மீரா மயங்கி விழுந்ததுதான் பகுதியளவு மறதியால் பாதிப் படைந்து எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ கண்விழித்தவள் மரத்தை சுற்றி வளையம் போல் கதிரை அமைத்திருந்த இடத்தில் அமர்ந்தவாறே விழுந்து இருக்க தான் ஏன் இங்கு இருக்கோம் என்று யோசிக்க சைதன்யனை சந்திக்க வந்தது நியாபகத்தில் வர அவனிடம் பேசியது மறந்து போய் இருந்தது. கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தவள் மூன்று மணி நேரம் கடந்திருக்க “இங்கயே தூங்கிட்டேனா?” என்று குழம்பியவாறே அவன் சென்றிருப்பான் நாளை கண்டிப்பாக சந்திக்க முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.
அதிக நேரம் மழையில் நனைந்தால் மேனி ஜில் என்றிருக்க ஜுரம் வருவது போல் இருந்தது. மெதுவாக நடந்தவள் சைதன்யன் பேசியது போலும் கவிதா பேசியது போலும் மாறி மாறி தோன்ற எங்கே போகிறாள் என்றறியாது கால் போன போக்கில் நடக்கலானாள். ஒரு வளைவில் ஜுரத்தில் சுயநினைவில்லாது பாதையை கடக்க ஏதோ ஒரு வண்டியில் மோதி தூக்கி வீசப்ப பட்டாள்.
சட்டென்று கண்ணை திறந்தவளுக்கு பழையவை தெளிவாக நியாபகத்தில் இருந்தது.
மெதுவாக எழுந்து அறையின் விளக்கை போட்டவள் அறையை அலச கடிகாரத்தை பார்த்தவள் அதிர்ந்தாள். நேரம் மட்டுமில்லாது வருடம் மாதமென அது காட்ட எக்சிடெண்ட்வரை நடந்தவை நியாபகத்தில் இருக்க மற்றவை {அதன் பின் நடந்தவைகள்} மறந்து போய் இருந்தது.
கட்டில் மேசையில் தண்ணீர் கோப்பை இருக்க மட மடவென அருந்தியவள் தன்னை ஒருநிலை படுத்த கண்ணாடியில் அவளது உருவம் தெரிய மீண்டும் அதிர்ந்தாள். அவளின் கழுத்தில் பொன்தாலி மின்ன அதை கையில் ஏந்தியவள் அதை அவளின் கழுத்தில் கட்டியவன் யாரென குழம்ப, கதவை திறந்துக் கொண்டு ஷரப் சௌதகர் ஹாய் பாபி {அண்ணி} என்று சொல்ல பார்பி {பார்பி பொம்மை} என்று அவள் காதில் விழுந்தது விதியின் சதியோ!
“நீங்க தான் என் கணவனா?” அப்பாவி குழந்தைப் போல் மீரா கேட்க புருவம் உயர்த்தி குரூரமாக புன்னகைத்தான் ஷரப் சௌதாகர்.
மீராவை அடித்தவனை தூக்கச் சொல்லியவன் வ்ருஷாதை அழைத்து சொன்னது மீரா எங்க இருந்தாலும் தன்னோட கஷ்டடியில் கொண்டு வரும்படி. அதன்படி விசாரித்தவன் அவளை அப்பாதையில் சென்றவர்கள் கண்டு மருத்துவமனையில் சேர்த்ததை அறிந்து ஷரப்புக்கு தகவல் தர நேரில் சென்று அவளை தன் மனைவியென்று கூறி அவனுடைய இடத்துக்கு மாற்றி இருந்தான்.
அவளை கண்காணிக்கவென அவளிருக்கும் அறையில் கேமரா பொருத்தி இருக்க அவள் எழுந்ததிலிருந்து பண்ணிய அத்தனையையும் பாத்திருந்தவன் அவளிடம் பேசச் சென்றான்.
தன்னை உரிமையாக கொஞ்சுபவனை பயப்பார்வை பார்த்தவள் அவனின் கனிவான பார்வையில் வேற்று ஆண் மகன் காரணமின்றி தன் அறையினுள் வர முடியாதென்று புரிந்துகொண்டு அவனை நேர் பார்வை பார்த்தது “நீங்க தான் என் கணவனா” என்று தாலியை தூக்கி காட்டியவாறே கேட்டாள்.
அவளின் தற்போதையை நிலையை விசாரித்ததில் அறிந்திருந்தவன் அவள் மறதியின் காரணமாக தன்னை “கணவனா” என்று கேட்க அவனின் கிரிமினல் மூளை வேகமாக கணக்கு போட்டது
அவளிடம் பதில் சொல்லாது “இப்போ ரெஸ்ட் எடுத்தா தான் உடம்பு சரியாகும் கன்சீவ் வேற” என்று கவனமாக நீ என்றோ நீங்க என்றோ சொல்லாதது தவிர்த்து கேமராவை பார்த்து கண்ணடித்தவன் அவளை அணைத்தவாறே கட்டிலில் அமர்த்தி தலையணையை சரிசெய்து வைக்க முயன்ற போது அவன் சொன்னதை கேட்டு மீண்டும் மயங்கி அவன் கைகளிலேயே சரிந்தாள் மீரா. மீரா மயங்கிவிழ அவளை நேராக கிடத்தி டாக்டரிடம் அவளை ஒப்படைத்தவன் சைதன்யனை காண சென்றான்.
இங்கே சரவணன் சார், தேவ், நேசமணி ஷரப் அனுப்பி இருந்த இரண்டாவது காணொளியை பார்க்க அதில் சந்துருவும்  மிராவுமிருந்தனர். சைதன்யனுக்கும் சந்துருவுக்கும் சில ரௌடிகள் கட்டைகளை கொண்டு சரமாரியாக அடிப்பது இருக்க சௌமியா அழத்தொடங்கி விட்டாள். சரஸ்வதி அம்மாவை வினுவை பார்த்து கொள்ளுமாறு வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்க சைதன்யன் கடத்தப்பட்டது முதல் மீரா கடத்தப்பட்டது வரை அவரிடம் பகிரப்படவில்லை.
சந்துருவின் அம்மா கலாவதி லட்சுமி அம்மாவின் அருகில் இருக்க சந்துரு கடத்தப்பட்டது அவரிடம் யாரும் சொல்ல விரும்பவில்லை.
ரவிக்குமார், சரவணன், தேவ், நேசமணி மாத்திரம் பேசிக் கொண்டிருந்ததை தற்செயலாக சௌமியா கேட்டு கணநொளியை பார்த்தவள் ஒப்பாரி வைக்காத குறையாய் அழ அவளை கட்டுப் படுத்த முடியாமல் ஊசி ஏற்றி அவளை தூங்க வைத்தாள் ப்ரியா.
ப்ரியா கவலையடைந்தாலும் கலங்க இது நேரமல்ல என மற்றவர்களுக்கு என்ன உதவி செய்யலாம் என அவர்கள் பேச்சை செவி சாய்த்தாள்.
“போலீசுக்கு போலாம்” என ரவிக்குமார் சொல்ல
அதை மறுத்தார் நேசமணி கடத்தினவன் எப்படிப் பட்டவன் என்று அறியாததால் ஒரு வேலை சந்துருவை கொன்று இவர்களை பயமுறுத்த கூடும் என்று அஞ்சி “இல்ல சார் என் பையன ஏதாவது பண்ணிவானோனு பயமா இயருக்கு” அதை ஏற்றனர் சரவண சாரும் தேவும்.
“யொத்தா” என்றால் என்ன? நேசமணி கேக்க  “போர்வீரன்” அது ஒரு ஹிந்தி சொல் ரவிக்குமார் சொல்ல
“போர்வீரன்” வீரனா? அவன் என்ன கேக்குறான் என்றே புரியல என்றான் தேவ்
“சரவணன் சார் குடும்பம் அரச பரம்பரையில் வந்தது லட்சுமி அம்மா கல்யாணம் அன்று ஊர்ல வச்சு நிறைய தகவல்கள் சொன்னாங்க. அத வச்சு பார்த்தா சாரோட பரம்பரை வாளை தான் கேக்குறாங்களோ?” ப்ரியா சொல்ல எல்லாருக்குமே ப்ரியா சொன்னது சரியாக இருக்கும் என்று தோன்ற சரவணன் சார் தலையில் கை வைத்தவாறே அமர்ந்தார்.
“அப்பா சாகும் போது நா பக்கத்துல இல்ல லட்சு தான் இருந்தா. அவ கிட்ட என்ன சொன்னாரோ தெரியல. ஊர்ல இருக்குற பூர்வீக வீட்டுல ஒரு இரகசிய அறைல வாளை பத்திரமா வச்சி இருக்கோம். லட்சுமிகு மட்டும் தான் அந்த அறையின் கடவுச்சொல் தெரியும். அவ இப்போ ஐ.சி.யுல இருக்கா. இப்போ என்ன பண்ணுறது” சிறு குழந்தையாய் கேட்க்கும் அவரை தேற்ற வழியறியாது தவித்தனர் மற்றவர்கள்.
சைதன்யன் இருக்கும் அறைக்கு வந்த வ்ருஷாத் ஒரு கணணியை மேசையின் மேல் வைத்து அதை ஓட விட, அதில் தூங்கும் மீரா தெரிந்தாள். அவளின் தலையில் கட்டோடு இருக்க கொதித்த சைதன்யன்
 “என்னடா பண்ணின என் ஸ்ரீய” என கத்த
“என்ன ப்ரோ இன்னும் இரத்தம் சிந்தனுமா? என்றவாறே ஷரப் உள்ளே நுழைந்தான்.
அடி வாங்கி தோய்ந்து விழுந்த நிலையில் சைதன்யனால் ஷாரப்பை முறைக்க மட்டுமே முடிந்தது.
“டேய் என்ன இருந்தாலும் அவன் உங்க ரெத்தம்டா இந்த அடி அடிக்கிற செத்துடுவான்டா அவன உசுரா நினைக்கிறவ எழுந்தா நீ என்ன பதில் சொல்ல போற” சந்துரு ஒரு வார்த்தை நண்பனுக்காக பேசினால் அவனை அடிக்கவென ஒருவனை நிறுத்தி இருக்க அடி விழுந்தாலும் பரவாயில்லை என சந்துரு குரல் கொடுக்க
“ஹாஹாஹா” என்று சந்துரு ஏதோ ஒரு பெரிய ஜோக்கை சொன்னது போல் அடக்க மாட்டாமல் சிரித்த ஷரப் சந்துருவை அடிக்கவென இருந்தவனுக்கு அடிக்க வேண்டாம் என சைகை செய்தான்
அவன் விலகியதும் “ஏன்டா ஊமையடி உள்காயம் கேள்வி பட்டிருக்கிறேன் எப்படிடா எலும்பு முறியாம இந்த அடி அடிக்கிறீங்க” சந்துரு வலியோடு முனக
“தட்ஸ் ராஜஸ்தான் ஸ்டைல் மிஸ்டர் ஆல் இன் ஆல் சந்துரு. உங்க தொங்கச்சி கண்ணு முழிச்சா என்ன எதுவும் கேக்க மாட்டா இதோ இருக்கானே உங்க உசுர கூட கொடுக்க துடிக்கிற நண்பன் அவனுக்கு வைப்பா ஆப்பு” என மீண்டும் சத்தமாக சிரிக்க அவனை புரியாத பார்வை பார்த்த இருவரும் தங்களுக்குள் பார்வை மாற்றம் செய்து கொண்டனர்.
இருவரினதும் பார்வை மாற்றத்தை கண்டு கேலியாக நாக்கை சுழற்றி வ்ருஷாத்தை பார்க்க மீரா ஷரப்பை “நீங்க தான் என் கணவனா? என்று கேட்பதிலிருந்து அவளை கட்டில் வரை அழைத்து செல்வது வரை ஓட விட அதிர்ந்தே விட்டனர் இருவரும்.
இவ்வளவு நேரமும் மீராகு என்ன ஆச்சோ என்ற கவலையில் அமைதியாய் இருந்தவன் மீராவின் பழைய நினைவுகள்   வந்ததை விட்டு விட்டு அவள் நன்றாக இருக்கிறாள் என்றறிந்தவன்
“நீதான் உண்மையான வாரிசென்று நீ சொல்வதை எப்படி நம்புறது? எனி ப்ரூப்?” சைதன்யன் அலட்டல் கேள்வி கேக்க
 “உன் அழகான முகம் எதுவும் ஆகா கூடாதென்று முகத்தில் அடிக்க வேண்டாமென்றேன். நீ சொல்றத பாத்தா அடி பத்தாது போலயே! உன் வய்ப் எந்திரிக்கட்டும் உன் கண் முன்னாடியே ஜல்ஷா பண்ணுறேன். ராஜஸ்தான் மொளகா ரொம்ப காரமா இருக்கும் அத அடிபட்ட இடத்தில் பூசினத விட எரியும் இல்ல.  தனக்கு உரிமையானதை தொட்டா எப்படி எரியும்னு புரிய வைக்கிறேன். “யொத்தா” சாதாரண வாள் இல்லடா எங்க உயிர், யொத்தா காணாம போனது மானப்பிரச்சினை. அத எத்துனை வருசமா தேடுறோம் தெரியுமா? உன் கல்யாணம் அன்னைக்கி யொத்தா மேல சத்தியம் பண்ணியே! எங்க தலை முறைல கல்யாணம் நடக்கும் போது யொத்தா இல்லாம வாக்கு கொடுக்க முடியாம கட்டின பொண்டாட்டி முன்னிலையிலும் ஊர்மக்கள் முன்னிலையிலும் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு கூனிக்குறுகி நின்னோம். அன்னைக்கி முடிவு பண்ணிட்டேன் டா என் உயிர் போறதுக்கு முன்னால யொத்தாவ கண்டு பிடிப்பேன்னு” ஷரப் புலியின் சீற்றத்தோடு சொல்ல
என்னை மறந்தவள் இப்போ என்னை வெறுக்க ஆரம்பிச்சிட்டா. இவன் சொல்றத நம்பிட்டா என்றால்? உள்ளுக்குள் சிறு அச்சம் இருக்க கண்டிப்பா என் காதல் எனக்கு துணையிருக்கும் என்றெண்ணியவன் தலை நிமிர்ந்து
“உனக்கு வாள் தான் வேண்டுமென்றால் வீட்டுக்கு வந்து கேக்க வேண்டியதுதானே” கேட்டிருந்தால் நாம கொடுத்திருப்போம் என்று சைதன்யன் தன்மையாக சொன்னான்.  
“என்ன பிச்சை போடுறியா? யார் வாளை யார் கொடுப்பது. அடுத்தவன் பொருளையே கேக்காமல் பறித்தெடுப்பவன் நான்” சொல்லும் போது அவன் கடத்தி மணம் புரிந்த மங்கையின் பயந்த முகம் கண்ணில் வந்து போக தலையை உலுக்கி அவளை துரத்தியவன் “எனக்கு சொந்தமானதை பிச்சை எடுப்பேன் என்று நினைத்தாயா” கர்வமாக சொல்ல
அவனை அடித்தே ஆகணும் என்ற வெறி சைதன்யனுக்கு வந்தது. “கட்டி போட்டு அடிக்கிறியே பொட்டப் பய” வெறியை வார்த்தையாய் துப்பினான்.
அவனை குரூரமாக பார்த்தவன் “நா ஆம்பளையா? பொட்டப் பயலா? உன் பொண்டாட்டிய இன்னும் கொஞ்சம் நேரத்துல  விசாரிச்சு தெரிஞ்சிக்கலாம்”
“எப்படி பால் போட்டாலும் அசராம சிக்ஸர் அடிக்கிறியே நீ வில்லன் தான்யா பக்கா வில்லன்” சந்துரு வலியிலும் கேலி செய்யலானான்.
உள்ளே வந்த வ்ருஷாத் “அவங்க போலீசுக்கு போனதாக தெரியல சார் மிஸ்டர் சரவணன் பூர்வீக வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாரு”
“போலீசுக்கு போனாலும் ஒன்னும் ஆகாது” சைதன்யனை பார்த்தவாறே சொல்ல “யொத்தா” அவர் கை வசமானதும் எங்க என்ன மீட் பண்ணனும்னு தகவல் அனுப்பிடு” என்றவன் எக்ஸ் ஆர்மி மேன்,டாக்டர் அண்ட் சந்துருவை காட்டி இவனோட அப்பா எல்லார் மேலயும் ஒரு கண் இருக்கட்டும்” சரியென்ற விதமாக தலையசைக்க வ்ருஷாத் விடை பெற்றான்.
அறையை திறக்க முயற்சி செய்து தோற்றவராக சரவணன் சார் தோய்ந்து அமர அவரை தேற்ற முடியாது கவலையடைந்தார் நேசமணி.
சைதன்யனை கடத்தியவன் யாரென்ற தகவல் இல்லாததால் குழம்பி இருந்த தேவ்வை தனியாக அழைத்த ரவிக்குமார் “லட்சுமி அம்மா எந்திருக்கும் வரை காத்திருக்க முடியாது இதுக்கு ஒரே வழி வேறேதாவது வாளை ஏற்பாடு செய்வது” முகம் மலர்ந்தான் தேவ்
“வேறெங்கும் போக வேண்டியதில்லை இதோ இந்த வீட்டிலேயே நிறைய வாள் சுவர் பூராவும் தொங்கிக்கிட்டிருக்கு அதுல ஒன்ன கொண்டு போய்டலாம். அதன் பின் எல்லோரிடமும் பேசி ஒரு பெட்டியில் “யொத்தா” போல் உள்ள வாளை இட்டு எடுத்து வந்தனர் ஆண்கள் நால்வரும்.
இவர்களை போலோவ் செய்து வந்தவன் வ்ருஷாத்துக்கு தாவல் சொல்ல ஷரப்பிடம் வ்ருஷாத் மூலம் தகவல் வந்து சேர சரவணன் சாரை மாத்திரம் சைதன்யன் வீட்டுக்கு வரும்படி குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அவர் மட்டும் புறப்பட்டு வந்ததாகவும் மற்றவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டார்கள் என்று உறுதியான தகவல் வந்தது.
குறுந்தகவலை படித்தவர்கள் சைதன்யன்,சந்துரு, மீரா, மூவரையும் கடத்தி அவர்கள் வீட்டிலேயே வைத்திருப்பதை அறிந்து   கொஞ்சம் குழப்பமும் கொஞ்சம் அதிர்ச்சியும் அடைந்தனர்.
“எப்படி தம்பிய கடத்தி அவங்க வீட்டிலேயே வைக்க முடியும்? காவலுக்கு இருக்குறவங்க என்ன ஆனாங்க? செல்வந்தர்கள் மாத்திரம் இருப்பதால் பலத்த பாதுகாப்பு இருக்குற இடமாச்சே” நேசமணி யோசனையாய் கூற ஆமோதித்தனர் மற்றவர்கள்.
“சம்மந்தி உங்கள மட்டும் தனியா அனுப்ப முடியாது அவன் யாருன்னு கூட தெரியாதே” ரவிக்குமார் சொல்ல
“வாள் வேற ஒரிஜினல் கிடையாது கண்டு பிடிச்சிட்டான்னா உங்களுக்கு அவனால ஏதாவது ஆபத்து வர வாய்ப்பு இருக்கு” தேவ் கவலையாக கூறினான்.
 “எதுனாலும் பரவால்ல பசங்கள மீட்டெடுக்கணும்” என்றவர் தனியாக கிளம்பிச்சென்றார்.
அடுத்து நடந்த நிகழ்வுகளில் ஷாரப்பை சைதன்யன் அடிக்க மீரா ஓடிவந்து ஷாரப்பை அணைத்தவாறு சைதன்யனை முறைத்தாள்.
.

Advertisement