Advertisement

அத்தியாயம் 17
காலின் பெல் அடிக்கவும் தலையில் கைவைத்தவாறே அமர்ந்திருந்த சைதன்யன் ‘ப்ரியா வந்து விட்டாங்க’ என நினைத்தவாறே கதவை திறக்க அவனை தள்ளிக் கொண்டு தேவ் உள்ளே வந்தவன், “அம்மு அம்மு” மீராவை அழைத்தவாறே படுக்கையறையினுள் நுழைந்த தேவ் மீரா அழுதவாறே இருப்பதை கண்டு அவளை அணைத்து என்ன நடந்தது என விசாரிக்கலானான்.
“வேத் அத்தான்” என அவனின் மேல் பாய்ந்தவளின் அழுகை மேலும் கூடியது.
ப்ரியா வண்டியை நிறுத்தி விட்டு வரமுன், தேவ் காரை விட்டிறங்கி பாசமலையில் நனைய சென்றிருக்க காரை பூட்டிக்கொண்டு வீட்டினுள் வந்த ப்ரியா சைதன்யன் கையை கட்டியவாறே நின்றுகொண்டு ஜன்னலுக்கு வெளியே வெறித்தவாறே நின்றிருந்த தோற்றம் மனதுக்குள் ‘ஏதோ சரியில்லை’ என்று தோன்ற அவனிடம் பேச முற்பட்ட போது புயலென அறையிலிருந்து வெளியே வந்த தேவ் சைதன்யனை அறைந்திருந்தான். தேவ்வை  திருப்பி அடித்தான் சைதன்யன் அதிர்ச்சியடைந்து ப்ரியா அவர்களை பார்த்தாலே ஒழிய அவர்களை விலக்கிவிட தோன்றாமல் ஸ்தம்பித்திருந்தாள்.
“என்னடா பண்ண மீராவ உன்னால தான் அவ சாவோட விளிம்புக்கே போயிடு வந்தா. எக்சிடெண்ட் ஆனதால் அம்னிஷியானு நெனச்சிட்டு இருந்தேன். எல்லா டெஸ்டும் எடுத்தப்ப தான் பார்ட்டியல் அம்னீசியாவாலும் பாதிப்படைஞ்சு இருக்கானு தெரிஞ்சது. அதுக்கு முழுக்க காரணமும் நீ……….. நீ மட்டும் தான். அவ எக்சிடண்ட் ஆனதுக்கும் நீ தான் காரணம் நீ மட்டும் தான்” சைதன்யன் திருப்பி அடித்ததால் ஆவேசமடைந்த ப்ரியாவிடம் கூட சொல்லாத உண்மையை போட்டு உடைத்துக் கொண்டிருந்தான் தேவ்.
மீரா போட்ட பலி பத்தாதென்று தேவ் வேற கத்திக்கொண்டிருக்க, உண்மை நெஞ்சை அறுக்க தேவ்வின் இரு கைகளையும் பிடித்து தள்ளியவன் சோபாவில் அமர்ந்தான். நெஞ்சடைக்க தலை கவிழ்ந்தவன் “ஆமா என்னாலதான்……. என்னாலதான் என் ஸ்ரீகு இப்டியாச்சு நான் தான் சொன்னேனே நா அவளுக்கு வேணாம்னு நீ தான் நா சொல்றத கேக்கலையே!” தலை உயர்த்தி அவனை பார்த்தவன். “ஸ்ரீய கூட்டிட்டு போய்டு தேவ்” என வலியின் கணம் தாங்காமல் கண்ணீர் வடித்தான்.
ப்ரியாவை மருத்துவமனையில் தேவ் சந்தித்த போது தான் சைதன்யன் போன் பண்ணியிருந்தான். தான் அவசரபட்டு வார்த்தையை விட்டதை நினைத்த தேவ் சைதன்யனின் உணர்வுகளை புரிந்தவனாக அவன் தோளில் கை வைத்தான். “ஸ்ரீகு நா வேணாம் என்னால தான் ஆச்சு” என சைதன்யன் திரும்பத் திரும்ப புலம்பியவாறே இருந்தான்.
“என்ன நடக்குது இங்க தேவ்வை அழைத்து வந்திருக்க கூடாதோ” என்ற எண்ணமே ப்ரியாவுக்கு. “மீரா என்ன சொன்னாள்?  தேவ் இவ்வளவு கோபப்பட?  மீராவின் எக்சிடன்டுக்கு சைதன்யன் காரணமா? என்ன பேசுறாங்க இவங்க ஒண்ணுமே புரியலையே” வாதம் நடக்கும் போது இவ்வாறே இருந்தது ப்ரியாவின் மனதில் ஒன்றும் கேட்கத்தோன்றாமல் மீராவின் அறையினுள் நுழைந்தாள் ப்ரியா.
மீரா அழுது அழுது முகம் வீங்கி இமைகள் தடித்து கட்டிலில் ஒரு மூலையில் அமர்ந்திருக்க அவளை பார்த்த ப்ரியாவுக்கோ சிரிப்பு தான் வந்தது “ஏய் என்னாச்சு இப்படி இருக்க” சாதாரணமாகவே கேட்டாள் ப்ரியா.
தாயின் மடி தேடும் குழந்தை போல அவள் மடியில் தலை வைத்து “எனக்கு என்னமோ ஆச்சு அத்து”
அவளை பேச விடாது “பாரு தலையை கூட வாராமல் வீட்டுக்கு விளக்கு வைக்கிற நேரத்துல இப்படியா இருப்ப” அதட்டினாள் ப்ரியா.    
“அத்து உனக்கு வது அத்தையோட காத்து பட்டிருக்கு அத்த மாதிரியே பேசுற” என கண்ணீருடன் புன்னகைத்தாள்.
ஒண்ணுமே இல்லாத விசயத்துக்கு மீரா இவ்வளவு அழுது இருக்க மாட்டா என புரிந்தாலும் ப்ரியாவை பொறுத்தவரை பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இல்லை “இப்ப சொல்லு எதுக்கு இவ்வளவு அழுகை” ப்ரியாவிடம் என்னவென்று சொல்வாள்? தன் கணவனிடம் உரிமையாக சண்டையிட்டு இருந்தாலும் அந்தரங்க விஷயத்தை எப்படி சொல்வது “திரு திருனு முழிக்காம சொல்லுமா” 
இதுவே சௌமியா கேட்டிருந்தால் சொல்லி இருக்க மாட்டாள். ப்ரியா ஒரு டாக்டரும் கூட சொனனால் தீர்வு நிச்சயம் கிடைக்கும் ஆனால் எப்படி சொல்வது ப்ரியாவின் முகத்தை பார்ப்பதும் தலையை  குனிவதுமாய் சில நிமிடங்கள் கடக்க
“மீரா உனக்கு நா அட்வைஸ் பண்ண எதுவுமே இல்ல. மத்தவங்க உணர்வ புரிஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி நடந்து கொள்ளும் பொண்ணு நீ. உனக்கு தேவ் கிட்ட எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை என் கிட்டயும் இருக்கு அத நான் சொல்ல வேண்டியதில்லையே. உனக்கும் தனுக்கும் என்ன பிரச்சினை? நீ சொன்னாத்தானே என்னால சொலூஷன் தர முடியும்” நிறுத்தி நிதானமாக வந்தது ப்ரியாவின் வார்த்தைகள்.
ப்ரியா பேசப் பேச மீராவின் தயக்கம் விலகி கொஞ்சம் கொஞ்சமாக வாய் பூட்டும் அகன்றது. “அத்து எனக்கு என்னமோ ஆச்சு நா.. நா..அவரை ……அவரை ..ரொம்ப தேடுறேன்” திக்கித் தினறி அறையும் குறையுமாக மீரா சொல்ல அவள் என்ன சொல்கிறாள் என ப்ரியாவுக்கு உடனே புரிந்தது மேலும் அவளை வருத்தாமல்
“இதுல என்ன வருத்தப்பட இருக்கு? புதுசா கல்யாணம் பண்ணி இருக்கீங்க, சந்தோசமான விஷயம் தானே மீரா” என்றாள்
“இல்ல அத்து இட்ஸ் ரியலி அன்யூசுஅல் பிஹேவியர்,  எப்படி புரியவைப்பதென்று எனக்கு தெரியல” மீரா முந்தானையில் நுனியை திருக்கியவாறே சொல்ல ப்ரியாவின் மனதில் சந்தேகம் எழுந்தது.
அடுத்து ப்ரியா கேட்ட கேள்வியிலும்  சொன்ன செய்தியிலும் “நோ……..” என மீரா கத்த வாசலில் அமர்ந்திருந்த தேவ் சைதன்யனின் சட்டையை பிடித்தான்.
தேவ்வை முறைத்த சைதன்யன் “நா உன் கண்ணு முன்னால தானே இருக்கேன் அவ அறைக்குள்ள கத்தினத்துக்கும் நா தான் பலியா?” கோவமாக சொல்ல வேண்டியதை சிரித்தவாறே சொன்னான்.
சைதன்யன் தேவ்வை அறிந்திருந்த வரையில் மீராகு ஒன்றென்றால் சம்பந்தபட்டவர்களை ரெண்டா வகுக்கும் ரகம். கொஞ்சம் முன்னாடி அவனை அடித்தவன் தான் ஆறுதலாகவும் தோளில் கை வைத்து பேசிக் கொண்டிருந்தான் மீராவின் அலறலில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிறுச்சு.
“சாரி ப்ரோ அம்மு ஏன் கத்துனா?
அப்பாவியாய் கேட்க்கும் தேவை குறும்புடன் பார்த்து “கத்தினது என் வைப்தான். கூட இருக்குறது உங்க வைப் ப்ரோ என் கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்?”  உள்ளே என்ன பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் என தெரிந்தாலும் மீரா எதற்கு கத்தினாள் என்றுதான் புரியவில்லை. இருந்தும் தேவ்வை சீண்டவே மீரா கத்தியதற்கு ப்ரியாதான் காரணமோ என்று மறைமுகமாக கூறினான்.   
சைதன்யன் கூறியதை புரிந்து கொண்ட தேவ் மீண்டும் அவனை முறைத்தான்.  
“இவ சொல்றத கேட்டு நியாயமா பார்த்தா ப்ரியா தான் கத்தி இருக்கணும் என்ன நடக்குதுன்னு தெரியலையே?” தேவ்வை பார்த்து சைதன்யனுக்கு சிரிப்பாக இருந்தாலும் மீராவை நினைக்கையில் பதட்டமாகத்தான் இருந்தது. தேவ்வும் பதட்டமாகவே “இரு கதவை தட்டி பாக்கலாம் என சொல்ல கதவை திறந்து கொண்டு ப்ரியா வெளியே வந்தாள்.
அவர்கள் இருவரையும் கண்டுக்காமல் சமயலறையில் புகுந்தவளின் பின்னாலயே வந்த இருவரும் மீராவை பற்றி மாறி மாறி கேள்வி கணைகளை தொடுக்க பிரிஜ்ஜை திறந்து சாக்லட்டை கையில் எடுத்தவள் வாசலுக்கு வந்து கடவுளின் படங்களின் முன்னாள் வணங்கி நின்றாள்.
அவள் என்ன செய்கிறாள் என கவனிக்கும் மனநிலையில் இருவரும் இல்லை. கேள்விகள் மட்டும் நிறைந்திருக்க, மீராவை பார்க்க செல்லாது அவள் பின்னாடியே வந்தவர்கள் அவள் ஒரு இடத்தில் நிற்கவும்
“சொல்லு ப்ரியா மீராகு என்ன ஆச்சு என் கிட்ட எதுவும் சொல்லாம அழுது கிட்டே இருக்கா, இவன் தான் ஏதாச்சும் பண்ணிட்டானா?” என சைதன்யனை தேவ் முறைக்க
அவனை திருப்பி முறைத்தவன் ப்ரியா என்ன சொல்ல போறாளோ என காத்திருக்க
அவளோ கூலாக சாக்லட்டை பீஸ் பீஸாக உடைத்து  இருவரிடமும் கொடுத்து “மீரா ஈஸ் ப்ரெக்னன்ட்” என புன்னகைத்தாள்.
“வாட்” என இருவருமே ஆனந்தமாக அதிர்ந்தனர்.
ப்ரியா மனதில் எழுந்த சந்தேகத்துடன் மீராவிடம் கேட்டது “கடைசியா எப்போ குளிச்ச” என்றுதான்.
“இன்னக்கி தான் அத்து” என்றவள் ப்ரியாவின் முறைப்பில் அவள் எதை பத்தி கேட்கிறாள் என புரிந்தவளாக விரல் எண்ணி யோசித்தவாறே “நோ” என கத்தி விட்டாள்.
“ஏன்டி கத்துற உன் அத்தான் கதவை உடைச்சிட்டு உள்ள வந்துட போறாரு”
“பாப்பாக்கு.. பாப்பாக்கு அதனால எந்த ஆபத்தும் வராதில்ல” என்றவள் சிறிது நேரம் யோசித்து “அத்து கற்பமானா வாமிட் வருமில்ல சினிமால எல்லாம் காட்டுவாங்களே மயக்கம் போட்டு விழுறதும் வாந்தி எடுத்தா கன்சீவ் ஆகிட்டாங்கனு சொல்றாங்களே எனக்கு வாமிட் வரவே இல்லையே அப்போ நா கர்ப்பமா இல்லையா?” வந்த சந்தோசம் காற்று போன பலூன் போல் முகம் வாட கேட்டவளை 
“இந்தா ப்ரெக்னன்ஸி டெஸ்டிங் கிட் போய் செக் பண்ணிட்டு வா” முகம் மலர வந்தவளை கதிரையில் அமர்த்தி அவளின் தலையை வாரி பின்னலிட்டவாறே
“அநேகமாக வாமிட் வந்து படுத்தியெடுக்கும். எல்லாருக்கும் வாமிட் வராது மீரா. சில பேருக்கு உன்ன மாதிரி வாமிட் வராம கோவம் அதிகமா வரும்” என சிரிக்க, ப்ரியாவை மீரா புரியாத பார்வை பார்த்தாள்.
 “சில பேருக்கு வெளிச்சம் கண்டா பிடிக்காது. ஜன்னல் எல்லாம் சாத்தி விட்டு அறைக்குள்ளேயே அடஞ்சி கிடப்பாங்க, சில பேரால சாப்பிடவே முடியாம வாமிட் பண்ணி கிட்டே இருப்பாங்க. அவங்கள ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி சேலைன் கொடுக்கும் நிலைமையும் வந்திருக்கு. சோர்வு, தலைசுத்தல், தலைவலி, உடம்பு வலி, அவங்க விரும்பி சாப்பிடும் சாப்பாட்டின் வாசம் கூட பிடிக்காம போய்டும், ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் கோவமும் வரும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் உனக்கு அந்த பீலிங்ஸ் அதிகமா இருக்கு எல்லாம் மூனு நாலு மாசத்துல நோர்மல் ஆகிடும். 
“ஏன் எனக்கு மட்டும் இப்படி”
“நல்ல கேள்விமா அத உன் வயித்துல இருக்குற பாப்பா தான் சொல்லணும். என் புருஷன் உன் புருஷன முறைச்சிகிட்டே இருக்குறாரு நா போய் விசயத்த சொல்லிட்டு வரேன் நீ போய் முகம் கழுவி துணிய மாத்து” என ப்ரியா வெளியே வந்து கூலாக விசயத்த சொன்னதும் இருவரும் “வாட்” என ஆனந்தமாக அதிர்ந்தனர்.
சைதன்யனை முந்திக்கொண்டு தேவ் அறையினுள் செல்ல ப்ரியா தலையில் கை வைத்தாள்.
“அம்மூ நா மாமாவாக போறேன்” என அவளை அணைத்து  தலையை தடவியவாறே கேள்வி மேல் கேள்வி கேக்க சைதன்யன் கடுப்பாக நின்றிருந்தான்.
அவனை கண்ட மீரா அவள் அவனிடம் நடந்து கொண்ட முறையை நினைத்து அவனிடம் எப்படி பேசுவதென்று தயங்க தேவ் இப்பொழுது வெளியே வரமாட்டன் என புரிந்துக் கொண்ட சைதன்யன் அவளை ஏக்கப் பார்வை பார்த்தவாறே வெளியே சென்று லட்சுமி அம்மாவை அழைத்து மீரா கன்சீவ் ஆனா விஷயத்தை பகிர்ந்தான். ப்ரியாவும் சரஸ்வதி அம்மாவுக்கு போன் போட்டு சொல்லி இருக்க எல்லாருக்கும் விஷயம் பகிரப்பட்டு அனைவரும் சைதன்யன் வீட்டுக்கு படையெடுத்தனர்.
வீட்டார் அனைவருமே பரிசு பொருட்களுடன் வந்து வாழ்த்த மீராவும் வேறொரு சுடியில் முகத்தை அடித்துக் கழுவி சிறு ஒப்பனையுடன் வாசலிலுள்ள தனி சோபாவில் அமர்ந்திருந்தாள். சைதன்யன் அவளை கண்ணெடுக்காமல் பார்த்திருக்க அவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை. விஷயம் சந்துருவின் மூலம் கேள்விப்பட்டு தோழியை காண ஓடி வந்தாள் சௌமியா.
லட்சுமி அம்மா வந்து பரம்பரை நகையை அணிவித்து அவளை நெற்றியில் முத்தமிட
“என்ன அத்த முத்தம் தந்து சத்தமில்லாம எஸ் ஆகிடலாம்னு நினைப்பா? “
“அம்புட்டு பெறுமதியான நகையை போட்டும் ஒன்னும் பண்ணாத மாதிரியே பேசுறியே” சௌமியா சந்துருவை பார்த்தவாறே கிண்டல் குரலில் சொல்ல
அவளை முறைத்த மீரா “அத்த உங்க கையாள சாப்பிடணும்னு தோனுது எப்போ சாப்பாடு போட போறீங்க”
“என்னடி தங்கம் இப்பவே சமைச்சு ஊட்டி விடுறேன்” என அவர் எழு 
“உங்க வீட்டுல உங்க கையாள சமைச்சி  தரனும்” என சைதன்யனை ஒர பார்வை பார்த்தவாறே சொல்ல “ஏதோ பிளான் பண்ணிட்டா குட்டச்சி” என மனதுக்குள் செல்லம் கொஞ்சினாலும் முகத்தை சாதாரணமாகவே வைத்திருந்தான்.
  
ஒரு கணம் திகைத்தார் லட்சுமி அம்மா. கிட்ட தட்ட இந்த மூனு மாசத்திலும் மீராவையும் சைதன்யனையும் அவரே வந்து பார்த்து விட்டு போவாரே ஒழிய ஒரு நாளும் வீட்டுக்கு அழைத்ததில்லை. அதற்கு அவர் சைதன்யனிடம்  சொன்ன  காரணம் “மீரா எங்க வீட்டு மருமகளா என் பையன் சைதன்யன் பொண்டாட்டியா தான் எங்க வீட்டுக்கு வரனும். யாரோ மாதிரி வரது எனக்கு பிடிக்கல” 
புள்ளத்தாச்சி பொண்ணு கேட்டா என்ன வேணாலும் பண்ணி கொடுக்கணும் என்று இருந்தவரை இப்படி பேசி லாக் பண்ணிட்டாளே!
என்ன சொல்றதுன்னு புரியாம லட்சுமி அம்மா குழம்ப அவரை பார்த்து மீரா “என்ன அத்த உங்க பையன இனிமேலும் பிரிஞ்சி இருக்கணுமா மருமக வேற உண்டாகி இருக்கா மாமா சட்டையை உலுக்கி சண்டை போட்டு எங்களை மேல தாளத்தோட இப்பயாச்சும் உங்க வீட்டுக்கு தப்பு தப்பு கன்னத்தில் போட்டவாறே  நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போக வேணாமா? அசராமல் எனக்கு எல்லாமே தெரியும் என அனைவருக்கும் நாசூக்காக சொன்னாள்.
அவள் ஒவ்வொரு வார்த்தையாய் நிறுத்தி நிதானமாக அனைவரையும் மாறி மாறி பார்த்தவாறே சொல்ல தேவ்வுக்கு புரிந்து போனது அவள் சொல்லும் விஷயத்தின் சாராம்சம் ஒரு கணம் அதிர்ச்சியானாலும் எப்படி தெரிஞ்சது என நெற்றியை சுருக்கி அவளை பார்த்தவாறே கண்களால் அளவிட அவனை கண்டு கொள்ளாது
 “சீக்கிரம் கூட்டிட்டு போங்க உங்க பையன் சமைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு” சிரிக்காமல் சொல்ல
“என்னது மாப்பிளையை  சமைக்க சொல்லி நீ நல்லா மூக்கு முட்ட சாப்ட்டு தான் ஒரு சத்து பெருத்துட்டியா” மீராவுக்கு சமைக்க தெரிந்தாலும் வீட்டில் சமைப்பதில்லை. மாப்பிள்ளையை வேலை வாங்கினாயா என்று சரஸ்வதி அம்மா கொஞ்சம் முறைப்போடு கேட்டார்.  
“அடபோங்க சம்பந்தி அவனுக்கு சுடு தண்ணி வைக்க கூட தெரியாது” என லட்சுமி அம்மா நொடித்துக் கொண்டார். நடப்பவைகளை இன் முகத்துடன் பார்த்திருந்தனர் அப்பாக்கள்.
உண்மையிலேயே அவனுக்கு காபி கூட போடத் தெரியாது என அறிந்தவள் உண்மையை சொல்ல வைக்கவென சைதன்யனை சமைக்க சொன்னதும் அவன் சமயலறையில் கையை சுட்டுக் கொண்டது நியாபகத்தில் வரவே கண்ணில் நீர்கோர்க்க மீரா சைதன்யனை ஏறிட்டாள்.
கை முழங்கைக்கு கீழே சுட்டிருக்க நீளமா கையுள்ள சட்டடையை அணிந்து அதை மறைத்துக் கொண்டு ஆபீஸ் போனதை நியாபகம் வந்தவனாக “அதெல்லாம் வீர தழும்பு எப்பேர் பட்ட பரம்பரை நாங்க, இதெல்லாம் ஜுஜுபி என கண்ணாளையும் வாயால் முணுமுணுத்தவாரும் அவளை சமாதானப்படுத்த அதை கண்டு விட்டான் சந்துரு.
ரவிக்குமார் வாஞ்சையுடன் அவளின் தலையை தடவ அவரின் கையை பிடித்துக் கொண்டவள் “என்னப்பா அம்மா நியாபகமா?” என்று அவரின் நெஞ்சில் சாய்ந்தவள் “அம்மா இல்லனா என்னப்பா அத்தையும் நீங்களும் இருக்கீங்களே என்ன பாத்துக்க என் கூட இன்னைக்கி நைட் தங்குறீங்களா” ஆசையாக அவர் முகம் பார்க்க சைதன்யனின் காதில் புகை வராத குறைதான்.
“ஏன் டி கன்சீவ் ஆனா எல்லா பொண்ணுங்களும் புருஷன் பக்கத்துல இருக்க ஆசைப்படுவாங்க இங்க என்னடா என்றா அத்தானு ஒரு கழுத என்ன பக்கத்துலயே விடாம பிரசவம் பாக்கும் வர இருப்பான் போல இதுல உங்கப்பன வேற கூட்டு சேர்க்கிறியா” மாசுக்குள் மீராவை அர்ச்சனை செய்து கண்ணால் அவளை கெஞ்ச அவள் அவன் புறம் திரும்பினாள் தானே.
ஆனால் சைதன்யனின் மனதை சரியாகப் படித்த  சந்துரு “என்னப்பா நீ இங்க இருக்கிறதே ஒரே ஒரு பெட்ரூம் அவரை வாசல்ல தூங்க சொல்லுவா போலயே! இந்த சின்ன வீட்டுல நாம தங்க இடமிருக்குமா?” என நெஞ்சில் கை வைக்க அவன் முதுகில் அடித்தாள் சௌமியா.
வீடு ஒரே அறை என்பது உண்மை ஆனால் ரெண்டு பெரிய அறையின் இடத்தை அடைத்திருந்தது வாசல் ரெண்டு சோபாவை உள்வாங்கியும் இன்னும் தாராளமா இடம் இருக்கு என சொல்லிக் கொண்டிருந்தது.
அனைவரும் அமர்ந்து நல்ல நாள் பார்த்து அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என பேசிக்கொண்டிருக்க சைதன்யனை வெளியே தள்ளிச்சென்றான் சந்துரு.
தேவ்வுக்கும் மீராவிடம் சில விஷயங்களை பேச வேண்டி இருந்ததால் அவளை தனிமையில் சந்திக்கவென காத்திருந்தான்.
அவளோ வினுவை மடியில் வைத்து கொண்டு அவளின் கையை தனது வயிற்றில் வைத்தவாறே ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.
“டேய் என்னடா இது ஒரு பேச்சுக்கு சொன்னா உண்மையிலே நடத்தி காட்டிட்டியே இம்புட்டு பாஸ்ட் ஆகாதுடா நாடு தாங்காது” என நண்பனை அணைத்தவாறே வாழ்த்து கூறினான் சந்துரு. வெட்கப் புன்னகையுடன் நன்றி கூறினான் சைதன்யன்.
“ஆமா சமையல் எல்லாம் செஞ்சு சாகசம் எல்லாம் பண்ணி இருக்க போல” என நக்கல் சிரிப்பை உதிர்க்க
 “எனக்கு வில்லன் வெளியே இல்லடா கூடவே வச்சு சுத்தி கிட்டு இருக்கேன் உன் கொள்ளிக் கண்ணுல இருந்து எதுவுமே தப்பாது போலயே” என அவனை அடிக்கத் துரத்த பூட்டியிருந்த எதிர் வீட்டிலிருந்து அவர்களை புகைப்படம் எடுத்தான் ஒருவன்.
ஒருவாறு ஒவ்வொருவராக விடைபெற்று செல்ல தேவ் தனிமையில் பேசாமளையே விடை பெற்று சென்றான். சைதன்யன் மீரா ஜோடி மீண்டும் தனிமையில். மீரா மறுக்க மறுக்க சாப்பாட்டை அத்தைகள் இருவரும் ஊட்டி விட்டு சென்றிருக்க பால் எடுத்து  வந்தான் சைதன்யன்.
அவனை கண்டதும் மாலையில் நடந்தவைகள் நியாபகத்தில் வந்து அவன் முகம் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள் மாது.
அவள் அருகில் வந்தவன் “ஐம் சாரிடி உன்ன ரொம்ப படித்திட்டேனா” என அவளை அணைத்து மன்னிப்பு வேண்டி நிற்க
 “நான் தான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் சையு உங்க வாயில இருந்து உண்மைய வர வைக்கணும்னு ஏதேதோ பண்ணிட்டேன்”
“ஆமா உனக்கு எப்போ உண்மை தெரிஞ்சது”
அவள் கேட்டிருந்தால் இவனே உண்மைகளை சொல்லி இருப்பான். இவள் நிலையால்தான் எதையும் கூற முடியாமல் மறுத்ததாக இவன் கூற, மீரா அம்பிகாவை சந்தித்ததையும் ப்ரொபஸர் க்ரிஷ்ணமூர்த்தியை சந்தித்தவரை சொல்லியவள்
“எனக்கு பழைய நியாபகம் எல்லாம் வந்துருச்சு சையு” என காலேஜில் நடந்த சில சம்பவங்களை சொல்ல, எல்லாமே என்று மீரா சொன்னதை அவனால் தான் சாவை தொட்டு மீண்டாள் என தெரிந்து கொண்டு பேசுகிறாள் என தப்பாக அர்த்தம் கொண்டவன்
 “ஸ்ரீ அப்போ என்ன மன்னிச்சிட்டியா?” என்று அவள் கைப் பிடித்து அதில் முகம் புதைக்க அவளோ அவன் தனஞ்சயனாக ஏன் மாறினேன் என்று சொல்லாமல் மறைத்ததை தான் சொல்கின்றான் என நினைத்து
“ஐ லவ் யூ சையு உங்கள பார்த்த நொடியிலிருந்து உங்கள இங்க இங்க” என்று இதயம் இருக்கும் பகுதியை தொட்டுக்க காட்டியவாறே சுமந்த்துக்கிட்டு இருக்கேன்” என்றவள் தொடர்ந்து “நீங்க உண்மைய மறைச்சதால உங்கள படுத்திட்டேன் என்ன தான் நீங்க மன்னிக்கனும்” என்றாள். அவளை இறுக அணைத்து காதல் பெறுக அவளின் இதழ் சுவைத்தே விடுவித்தான்.
அவள் சொன்னதை அவன் கவனத்தில் எடுத்து புரிந்திருந்திருக்கனமோ?
“சையு நா… நா….. உங்க கிட்ட ஈவினிங் அப்படி நடந்திருக்க கூடாது” என்று தடுமாற
“குறும்பு சிரிப்பினூடே அவளின் முகம் பார்த்து ‘எப்படி? கர்டென்ல நடந்து கிட்டியே அப்படியா ரௌடி பேபி? இல்ல இங்க” என்று கட்டிலை கண்ணால் காட்டியவாறே “நடந்து கிட்டதா” வெட்கப் புன்னகையுடன் அவனை இரு கைகளாலும் மொத்தி எடுக்க
“இரு இரு என் பொண்ணு வெளிய வரட்டும் அவ கிட்ட சொல்லி உன்ன மொத்த சொல்லுறேன்”
“ம்ஹூம் பையன்தான் எனக்கு வேணும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே உங்கள செமயா கவனிப்போம்”
“பொண்ணு தான்டி பொறக்கும் நீ குண்டா இருக்கும் போதே தெரியாதா? உன்ன படுத்தாம நா ஆக்கி போட்டத சாப்பிட்டுட்டு குட்டி “ஸ்ரீ” சமத்தா இருக்கா”அவளை கொஞ்சிக், கெஞ்சி சீண்டவும் செய்தான் சைதன்யன்.
ப்ரியா போகும் முன் சைதன்யனிடம் மீராவின்  நிலையை எடுத்து கூறி சென்றிருந்ததால் சாதாரணமாக கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு உண்டாகும் அசௌகரியங்களை விட வித்தியாசமா இருப்பதால் அவளை கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்திருந்தான்.
அவன் குண்டாகிட்டான் என்றதும் மற்றவைகள் பின்னுக்கு செல்ல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு “உங்க பொண்ணால தான் எல்லாமே”
அவளை அனைத்துக் கொண்டு “இப்போ தான்டி காலேஜில் பார்த்த பப்லிமாஸ் மாதிரியே இருக்க” என்று அவள் கன்னம் கடிக்க அன்றைய நியாபங்களால் வெக்கப்பட்டவள் அவன் முதுகில் முகம் புதைத்து அவனை பின்னால் அணைக்க அவன் தலை சாய்த்து அவளின் தலையில் முட்டியவன் “ஐ லவ் யு ஸ்ரீ” என்றான் நெஞ்சம் நிறைந்த நிம்மதியுடன்.
இவர்களின் நிம்மதியை குழைக்கவென தனது வேட்டையை கோயம்புத்தூரில் முடித்துக் கொண்டு ஷரப் சௌதாகர் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

Advertisement