Advertisement

அத்தியாயம் 16
மீரா பாசமான குடும்பத்தில் அன்பை புரிந்து, தெரிந்து, அனுபவித்து வளர்ந்தவள். சைதன்யன் வீட்டை விட்டு தூரத்தில் இருந்தாலும் லட்சுமி அம்மா போன்லேயே பாசத்தை ஊட்டி வளர்த்ததால தான் எங்க இருந்தாலும் காலை மாலை தாய் தந்தையை அழைத்து பேசி விடுகிறான்.
மீரா ப்ரியா விஷயத்தில் கோவம் கொண்டு வது அத்தையை திட்டினாலும் அவரின் மனம் புண்படும் படியான ஒரு வார்த்தையையும் உபயோகிக்க மாட்டாள். அவருடன் கோபம் கொண்டு ஒரு நாளைக்கு மேல் அவருடன் பேசாமல் இருந்ததுமில்லை. எல்லாம் ஒரு நாளிலேயே முடித்துக் கொள்வாள். சூரியன் உதித்த உடன் புது நாள் புது ஆரம்பம் என நேற்று  நடந்த சண்டையை மறந்து இயல்பாகி விடுவாள்.
சைதன்யனின் நியாபகம் வந்திருக்கா விட்டாலும் அவளை சந்தித்த அன்றிலிருந்து பாசத்தை மட்டும் காட்டும் லட்சுமி அம்மாவின் மனம் நோகும்படி கல்யாணமன்று எந்தக் கேள்வியும் கேளாது எல்லா சடங்குகளையும் செய்திருந்திருப்பாள். 
சரவணன் சார் கேட்டுக் கொண்டதற்காக சைதன்யன் தனஞ்சயனா இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவள். சூழ்நிலையில் மாட்டி கொண்டிருக்கும் லட்சுமி அம்மாவை நினைத்து மிகவும் வருந்தினாள்.
சௌமியா சொல்வதை போல் சைதன்யன் நேரடியாக தான் தனஞ்சயன் என்றோ, அநாதை என்றோ கூறவில்லை எல்லாம் சந்துருவின் வாய் மொழியாக இருந்தாலும் சைதன்யன் எதையும் மறுக்கவுமில்லை.
“சரி ஆபீஸ்ல ஏதாவது தில்லு முல்ல கண்டு பிடிக்கணும் ஓகே ஏன் என் கிட்ட மட்டும் மறைக்கிறாங்க. என் கிட்ட சொல்லிட்டே செஞ்சிருக்கலாமே? இப்போதான் கல்யாணமாக போகுதே” அதுதான் மீராவை பெரிதும் குழப்பியது. 
“ஏய் க்யூட்டிப்பை எந்திரிடி தூங்கு மூஞ்சி” மீரா கண்விழித்த போது சைதன்யன் அவளை அணைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான். அவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் எண்ண ஓட்டத்தை அவனின் குரல் தடுத்து நிறுத்தியது.
“ம்ம் காபி கொடுங்க சையு” அவனை விட்டு விலகி தலையணையை அணைத்துக் கொண்டாள்.
 “கிட்சன் அந்த பக்கம் டி போய் காபி போட்டு கொண்டு வா”
“என்னது நானா?  காப்பியா?  காபி என்ன கலர்னு மட்டும் தான் சையு எனக்கு தெரியும் ப்ளீஸ் நீங்களே போடுங்க” கண்களை திறவாது கூறியவள் அவன் புறம் திரும்பவே இல்லை.
அவளை தன் புறம் திருப்பி நெற்றியில் முட்டியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு “ஓகே பொண்டாட்டி” என்றவாறே எழுந்து சமையலறை நோக்கி நடந்தான்.
நேற்றிரவு தான் நடாத்தி பாடத்தால் சோர்ந்திருப்பாள் அவள் இன்னும் சற்று நேரம் தூங்கட்டும் என்று இவன் நினைக்க, அவளும் குளியலறையில் புகுந்தவாறே “அப்படியே ப்ரேக்பாஸ்ட்டும் பண்ணிடுங்க எனக்கு எதுனாலும் ஓகே” எனக்கூற அவளை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தான் சைதன்யன். அதற்குள் அவள் குளியலறை கதவை பூட்டி இருந்தாள்.
“கல்யாணமாகி தனிக் குடித்தனம் வந்த அன்னைக்கி புருஷன எழுப்பி காபி கொடுப்பானு பார்த்தா என்ன காபி போட சொல்லுறா. சரிதான் என்று பாவம் பார்த்தா ப்ரேக்பேஸ்ட்டும் நான்தான் பண்ணனுமா? புருஷனா பதவி கொடுத்து சமயக்கட்டு பொறுப்பையும் கொடுத்துட்டா” முணுமுணுக்கலானான் சைதன்யன். 
மீரா குளித்து விட்டு ஜன்னல் பக்கமாக தோட்டத்தை பார்த்தவாறே தலை துவட்டியவள் காபியோடு பிரட் டோஸ் பண்ணி எடுத்து வந்தவனை திரும்பி பார்த்து “என்ன சையு இது. இட்லி, தோசை ஏதும் இல்லையா? பிரிஜ்ஜில் இட்லிமா வச்சதாக லக்ஸ் அத்த சொன்னாங்களே!” தன் பாட்டுக்கு தலையை துவட்டியவாறே பேசுபவளை வெற்றுப் பார்வை பார்த்தான் சைதன்யன்.
“சரி பரவால்ல விடுங்க லஞ்ச் என்ன செய்ய போறீங்க” என்றவாறே காபியை அருந்த
“என்னது லன்ச்சா?” அலறியே விட்டான். 
அவனின் அலறலில் தனக்குள் புன்னகைத்தவள் வந்த சிரிப்பை காபி மக்கில் செலுத்தி “எனக்கு சமைக்க தெரியாதுப்பா!” கண்ணை உருட்டியவாறே “நீங்க அனாதை இல்லத்தில் பல குழந்தையோடு குழந்தையா வளந்தவரு எல்லா வேலையும் கத்து கிட்டு இருந்தீப்பீங்க. தனியா வந்த பிறகு சமைச்சு தானே சாப்டீங்க?  டெய்லி கடையிலயா சாப்பிட முடியும்? கட்டுப்படியாகுமா?”
ஏதோ எனக்கு ஒண்ணுமே தெரியல நீ தான் எல்லா வேலையையும் பார்த்தாகணும் என்பதை போல் பல முகபாவங்களுடன் ஏற்ற இறக்கத்தொடு மீரா சொல்ல நிதர்சனம் உணர்ந்தான் சைதன்யன்.
எப்பேர்பட்ட பரம்பரை அவனுடையது பான் வித் சில்வர் ஸ்பூன் என்று சொல்ல கூடாது பிளாட்டினம் என்று தான் சொல்ல வேண்டும். அவன் சிறு வயதில் எதற்குமே அழுதது கிடையாதது. கேட்டது உடனே கிடைக்கும். அவன் பாரினில் இருந்தப்ப கூட தனி வீடெடுத்து தங்கி இருந்தவன். எல்லா வேலைகளுக்கும் தனித்தனியாக வேலையாட்களை நியமித்திருந்தான். அவனுக்காக வேலை செய்ய எத்தனை பேர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ள கூடியவனை அனாதையென்று கூறி அவளுடைய வேலைகளையும் பார்க்க சொல்கிறாள் அவன் மனையாள். அவனை போய் சமையல் செய், துணி துவை என்றால் என்ன மாதிரி ரியாக்சன் கொடுப்பது என்று அவனுக்கே குழப்பமாக இருந்தது.
அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான் என ஊகித்தவள். “ஏதோ உங்க லிட்டில் பாஸ் சைதன்யன் சௌதகர் உயிரை நீங்க காப்பாத்த போக லக்ஸ் அத்த இவ்வளவும் செய்றாங்க. உங்க பாஸ் அவர் வீட்டுல தங்க இடம் கொடுத்திருக்காங்க. ஆனாலும் எந்நாளும் இங்க இருக்க முடியாதில்ல. என்ன கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்கெல்லாம் போக வேணாம் என்று வது அத்தையும் லக்ஸ் அத்தையும் சொல்றாங்க. உங்க சம்பளத்துல தான் எல்லாம் பண்ணனும். வீடு கட்டணும் நிறைய குழந்தைகளை பெத்துக்கணும் நெறய செலவிருக்கே சையு. சமையலுக்கு ஆள் வச்சா நாங்க மிச்சம் வக்கிரதெப்படி. எல்லா வேலையும் நாங்களே தான் பாக்கணும். என்று அவன் தலையில் பாமை தூக்கிப் போட்டாள்.
ஒரு பொய் சொல்ல போய் ஹனுமார் வால் போல் நீண்டு அவன் கழுத்தை நெறிப்பது போலவே உணர்ந்தான் சைதன்யன். அவள் பேச்சாலேயே எல்லா வழிகளையும் அடைத்து விட விழி பிதுங்கி நின்றான். மீரா தனக்கு சமைக்க தெரியாதென்றும் எல்லா வேலையையும் நாங்களே பார்க்க வேண்டும் என சொல்லியதே சைதன்யன் அப்பொழுதாவது அவளிடம் உண்மையை சொல்வான் என்று அவனோ உண்மையை அறிந்தால் அவளின் நிலை என்னவாகும் என அஞ்சியவன் பெவிகால் போட்டு ஒட்டியதை போல் வாயை இறுக மூடி நின்றான்.
இவள் அவனை அந்த வேலை செய் இந்த வேலை செய் என்று எவ்வளவு படுத்தினாலும் சைதன்யனிடமிருந்து உண்மை மாத்திரம் வெளிவராததால் வேறு வழியை கையாள முடிவு செய்தாள் மீரா.
“சையு ஜி”
“என்னது ஜி யா?”
“எஸ் ஜி ராஜஸ்தான்ல புருஷன ஓ….ஜி, ஏஜி, சுனியேஜி இப்படி தானே கூப்டு வாங்க”
அவள் சொன்ன விதம் சிரிப்பை மூட்ட அவள் எங்க சுத்தி எங்க வர போறாள் என அறியாதவன் அவளின் கையை பிடித்து இழுத்து மடியில் அமர்த்தி கூந்தலில் வாசம் பிடித்தவாறே ம்ம்.. நல்லா தான் இருக்கு உன் இஷ்டம் போல கூப்டு”
மாட்டினியா என்று மனதில் நினைத்தவள் “நீங்க என்ன ராஜஸ்தான் பரம்பரை வாரிசா” கிண்டல் போல் சொல்லி உடனே
 “ஆமா உங்க பாஸ் ஓட பையன் அதான் நீங்க உசுர காப்பாத்தீ பாரின் அனுப்பி வச்சீங்களே உங்க நண்பன் சைதன்யன் சௌதாகர் அவரு இந்தியா வரமாட்டாரா?  நம்ம கல்யாணத்துக்கும் வரல” சோகமான குரலில் கூறி உடனே “ஆமா அவர் உயிரை நீங்க எப்போ? எப்படி? காப்பாத்துனீங்க” ஆச்சரியமாக கேப்பது போல் கண்ணை அகல விரித்து அவன் புறம் திரும்ப என்ன சொல்வதென்று ஒரு கணமேனும் யோசிக்காமல் அவளின் இதழை சிறை பிடித்து மேலும் அவளை பேச விடாது தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன் அவளை ஆழத் தொடங்கினான்.
அவள் சைதன்யனை பற்றி பேச்செடுக்கும் போதெல்லாம் அவளை அடக்க, திசை திருப்ப அவன் இந்த வழியை கண்டறிந்தான். அந்த வழியை நேரம் காலம் பாக்காது கையாண்டான்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல சைதன்யன் ஒரு நல்ல குடும்பத்தலைவனாக மாறினான். அவன் சமையல் செய்கிறேன் என யு டியூபின் உதவியோடு சமையல் அறையில் கையை சுட்டுக் கொண்டதும்,  வெட்டிக் கொண்டதும் தான் மிச்சம். அவனின் நிலையை கண்டு மீரா உள்ளுக்குள் உருகினாலும் வெளியே தனக்கு எதுவும் தெரியாதென்றே காட்டிக்கொண்டவள் அவனுக்கு சிறிய சிறிய உதவிகளை செய்தாள்.
காய் கறிகளை வெட்டிக் கொடுப்பதும்,  துணி துவைப்பதிலும்,  ஷாப்பிங் செல்வத்திலும் கூடவே இருந்தாள். மொத்தத்தில் தங்களது வேலைகளை தாங்களே பார்த்துக் கொண்டனர்.  துணி துவைக்க துவைக்கும் இயந்திரம் இருக்க ஈ.பியை கட்டுப்படுத்த என நிறையா மின்சார பொருட்களை பாவிப்பதை நிறுத்தி இருந்தாள்.
என்ன செய்து பார்த்தும் சைதன்யனின் வாயிலிருந்து உண்மையை வெளிக் கொண்டுவர முடியவில்லை மாறாக அவன் நடுத்தர வர்க்கத்தினர் போல் வாழ்க்கையை வாழ கற்றுக்கொண்டான். தேவ் நினைத்தது போல் இருவரின் தனிமை  புரிதலையும், காதலையும் அதிகப் படுத்தியதோ?
அவன் உண்மையை சொல்லவில்லை என்பதை தவிர இருவருக்கிடையில் காதலிலும் கூடலிலும் எந்த  குறையோ  தடங்களோ வரவே இல்லை. மாறாக அவனின் பால் அவளின் காதல் பெருகிக் கொண்டுதான் சென்றது.
“டி க்யூட்டிப்பை பொண்டாட்டி ஹனி மூன் எங்க போலாம்” உலகத்தின் எந்த மூலைக்கும் அழைத்து செல்ல வசதி படைத்தவன் கேட்க
“நாங்க இருக்கும் வீடும் சரி, இடமும் சரி ஹனி மூன் வந்த மாதிரி தான் சையு இருக்கு. எங்கும் போக வேண்டியதில்ல” என  சிரிக்க அவள் வெகுளியாக சிரிப்பதா அர்த்தம் கொண்டான். அவனின் அருகாமையில் எல்லாவற்றையும் மறப்பவள் அவனின் காதலை உணர்ந்தாலும் அவனை புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடினாள்.
லட்சுமி அம்மா அடிக்கடி வந்து சென்றாலும் அவரிடம் எதுவும் கேட்டு அவரை சங்கடப்படுத்த தோன்றவில்லை. புதுமண தம்பதியரை தொந்தரவு பண்ண கூடாதென மற்றவர்கள் சைதன்யனின் வீட்டுக்கு செல்லவில்லை. தேவ் மேல் சிறு கோபம் வேறு இருக்க மீரா அவள் வீட்டுக்கு அதிகம் செல்லவில்லை போனில் பேச்சை முடித்துக் கொள்வாள். வேலைக்கும் போகாததால் எந்தநாளும் ஆபீசில் நடப்பவற்றை சௌமியா மூலம் அறிந்துக் கொண்டாள்.
இன்னைக்கி எப்படியாவது அவன் வாயிலிருந்து உண்மையை வெளிக் கொண்டு வந்தே ஆகனும் என்ற பிடிவாதத்துடன் மாலையில் அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்திலுள்ள ஒரு மரநிழலில் போடப்பட்ட அலங்கார இருக்கையில் அமர்ந்தவள் கையேடு அவன் போனை எடுத்து வந்தானா என நோட்டம் விட்டவாறே கப்பில் டீயை ஊற்றி அவனிடம் கொடுத்து மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.
“ஏன் சையு உங்க பாரின் பிரெண்டு போனாச்சும் பண்ணுவாரா? போன் போட்டு தாங்க நா பேசனும்”  எப்பொழுது சைதன்யனின் பேச்சை ஆரம்பித்தாலும் அவளை முத்தமிட்டு எல்லை மீறுபவன் தோட்டத்தில் இருந்தால் உண்மையை பேசிதானே ஆகா வேண்டும் என்று நினைத்தாள் மீரா.   
“யாரை பத்தி கேக்குற” உசாராக கையிலிருந்த கப்பை கீழே வைத்தான்
“அதான் நம்ம வருங்….”
“ஸ்ரீ அங்க பாரேன் பட்டர்பிளை” என அவள் பேச்சில் குறுக்கிட்டவன் அவள் கையிலிருந்த கப்பையும் கீழே வைத்து அவளை இழுத்து சென்றான்.
அங்கே எந்த பட்டர்பிளையையும் காணாது அவனை இவள் முறைக்க அவளை அவன் அழைத்து வந்த இடம் கொஞ்சம் மறைவானதாக இருந்தது. அவள் மீண்டும் சைதன்யனை பற்றி பேசவும் கூடாது, இந்த இடத்தை விட்டு நகரவும் கூடாது என்று  அவளின் இதழை சிறை பிடித்தான். அவனுள் தொலைந்து கொண்டிருந்தவள் மேலும் முன்னேற அவளை இழுத்து தன்னை விட்டு வலுக்கட்டாயமாக பிரித்தவன் “ஸ்ரீ ஸ்ரீ நாம கார்டன்ல இருக்கோம்” என அவளை உலுக்க
“ஐ நீட் யு சையு ஐ நீட் யு ரைட் நவ்” என ஈனசுரத்தில் முனங்கினாள் மீரா.
“வாவ்” என புருவம் உயர்த்தியவனை பார்த்து மேலும் மயங்கி அவன் கழுத்தில் மலையக கையை கோர்த்தவள் அவனை முத்தமிட ஆரம்பிக்க அவளை தூக்கிக் கொண்டு வீட்டினுள் சென்றான் சைதன்யன்.
கூடல் முடிந்து தனது நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவாறே “க்யூட்டிப்பை நீ ரொம்…..ப ஆக்ட்டிவ், செம்ம்ம்…..ம எனர்ஜி  டி” என அவளை முத்தமிட்டு அவன் பால் இறுக்கிக் கொண்டு  மீண்டும் அணைக்க அவள் புறத்திலிருந்து விசும்பல் ஒலியே வந்தது. அவள் எதற்க்காக அழுகிறாள் என புரியாதவன் அடித்துப் பிடித்து எழ அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தான்.
வெகு நாளாய் ராஜஸ்தானை புரட்டிப் போட்டு தேடிக் கொண்டிருந்த ‘வாள்’ தமிழ் நாட்டிலிருப்பதை கண்டறிந்த ‘ஷரப் சௌதாகர்’ தமிழ் நாட்டை நோக்கி புறப்பட்டான்.
தன்னுடைய தனி விமானத்தில் கோயம்புத்தூர் வந்திறங்கினான் ஷரப் சௌதாகர். ராஜஸ்தானியர்களுக்குரிய மேனியின் நிறம். ஆறடிக்கு மேல் உயரம். அவனை மூண்டாசில் பெரிய மீசையில் கற்பனை பண்ணினால் பக்கா வில்லன் தோற்றம். ஆனால் அவனோ கோர்ட் சூட்டில் தாடி மீசை இல்லாத முகமாய் பழுப்பு நிற கண்களை மறைக்க கூலர் அணிந்து கன்னம் குழிவிலும் புன்னகையுடன் பார்க்க பாலிவுட் ஹீரோ மாதிரி இருந்தான்.
“அதே வாள் தானே பேஸ்புக்கில் போட்டோ போட்டு ரெண்டு மாசத்துக்கு மேலாகுது யார் போட்டா?  எப்போ எடுத்த போட்டோ?  எல்லாம் சரியா வெறிபாய் பண்ணிடீங்கள்ல? எந்த தப்பும் நடக்க கூடாதென்று தான் பொறுமையா விசாரிச்சு காய் நகர்த்துறேன். தட்ஸ் மை ஸ்டைல் என கர்வமாக புன்னகைத்தவன். அவன் முன் இருந்தவரை கேள்வி கணைகளால் துளைத்துக் கொண்டிருக்க அவனுடைய மொபைல் அலறியது பேசிக் கொண்டிருந்தவரை அமைதியாக இருக்கவும் என சைகை செய்தவன் காலை எடென்ட் பண்ணினான்.
மறுமுனையில் என்ன சொல்ல பட்டதோ “வோ மெரி ஹேய் சிரப் மெரி  ஹேய்” {she  is  mine   only   mine } . நான் அவளை அடைந்தே தீருவேன்,  யார் தடுத்தாலும் ஏன் அவளே தடுத்தாலும்” என கர்ஜனை குரலில் கூறியவன் போனை அணைத்து முகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவன் அவரை நோக்க
“எஸ் சார் சைதன்யன் சௌதாகர் சான் ஒப் சரவணன் சௌதாகர். அவரோட மேரேஜ் அன்னக்கி தான் வாள் வெளியே எடுக்கப் பட்டிருக்கு அந்த போட்டோல அவரோட முகம் சரியா தெரியல பட் மணப்பெண்ணின் முகம் தெளிவா தெரியுது அத வச்சு தான் அவங்க பாமிலிய கண்டு பிடிக்க முடிஞ்சது. அவரோட நண்பன் சந்துரு எங்குறவரோட பேஸ்புக் ஐடில தான் போஸ்ட் செய்யப் பட்டிருக்கு. அவங்க இப்போ சென்னைல தான் இருக்காங்க ஆனா…..”
அவன் மேலே சொல்லுமாறு சைகை செய்ய “அந்த வாள் சென்னையில் உள்ள அவங்க வீட்டுல இல்ல அவங்க பூர்வீக வீட்டில தான் இருக்கும் என்ற சந்தேகம் சார் அண்ட் சைதன்யன் சார் அவங்க அப்பா கூட தங்காம தனியா வீடெடுத்து அவர் வைப் கூட தங்கி இருக்கிறார்” அவர் சொல்ல சொல்ல நெற்றி சுருக்கி யோசித்தவன்.  
“ஐ நீட் மை ஸ்வார்ட்  ப்ரோம் தேம்  அண்ட் ஆல்சோ கோயி ஸ்மால் டீடைல் பீ மத் சோடியே {ஒவ்வொரு சின்ன டீடைலாயும் விடாதீங்க}  என் பார்வைக்கு எல்லாம்  “எல்லா……….மே” வரனும். அந்த எல்லாமே யை சொல்லும் போது அவரை  அழுத்தமாக பார்த்து கூறி “என்ன பண்ணனும் எப்ப பண்ணனும் நா சொல்லுறேன். ஐ ஹாவ் லிட்டில் ஒர்க் ஹிய முடிச்ச உடனே சென்னை கிளம்பிடுவேன். நீங்க இப்போ சென்னை போய் எல்லா ஏற்பாடும் பண்ணுங்க நா வரேன்” என குரூரமாய் புன்னகைத்தான்.
பல காலமாய் ராஜஸ்தானை புரட்டிப் போட்டு, மூளை முடுக்கிலும் தேடிய வாள் இருக்கும் இடம் அறிந்தவன் மகிழ முடியாமல் அவன் நெஞ்சில் சுமப்பவளுக்கு திருமணமாம் அதுவும் காதல் திருமணம் என்றதும் சென்னை செல்லாது கோயம்புத்தூர் வந்திறங்கியவன் அவளின் மேல் கொலைவெறியில் இருந்தான்.
“என் பணத்தைப் பார்த்து அழகப்ப பார்த்து என் படுக்கைக்கு வராத பெண்ணும் இல்ல, என் கன்னக்குழியில விழாத பெண்ணும் இல்லடி. என்னையே வேணாம்னு சொல்லுறியா? வரேன்டி வந்து உன் காதலன் முன்னாடியே உன்ன தூக்குறேன்டி” வெறிகொண்ட வேங்கையாய் அறையினுள் அங்கும் இங்கும் நடை பயின்றான். என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுத்தவன் பி.ஏ வ்ருஷத்தை ஏறிட்டான்.
காதல் ஒரு மனிதனை என்ன பாடு படுத்துகிறது இரண்டு தலைமுறையாய் தேடும் வாளை விட தன்னை வேண்டாம் என்று சொன்னவள் தான் முக்கியமென அவளை அடைவது தான் குறிக்கோளாலென அவளை கடத்தியாவது அவளை அடைய முடிவு செய்தான். அவனுக்கு தேவையானதை எவ்வழியிலும் அடைந்தே தீருபவன்.
மீரா அழுது அழுது முகம் வீங்க அமர்ந்திருக்க அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் அவளை பார்த்தவாறே வேதனை நிறைந்த நெஞ்சோடு அமர்ந்திருந்தான் சைதன்யன். அவன் அவள் அருகில் போனாலே கண்ணீரை தாரை தாரையாக கொட்டும் அவள், அவன் விலகிப் போனால் விசும்ப ஆரம்பித்தாள்.
அவளை எப்படி கையாளுவதென்று ஒரு கணம் யோசித்தவன் “தேவ்வை போனில் அழைத்து பேசலாமா…….ம்ம்ம் இல்ல ப்ரியாவ அழைக்கலாம். இவ சொல்ற விசயத்துக்கு ஒரு பெண் தான் சரி அவங்க டாக்டர் வேற” என மனதுக்குள் பேசியவன் ப்ரியாவை அழைத்து உடனே வீட்டுக்கு வருமாறு கூறினான்.
சைதன்யன் அழைக்கவும் ப்ரியா “என்ன மாப்புள ஏதாச்சும் ஹாப்பி நியூஸ் சா” என கேட்க என்ன சொல்வதென்று முழித்தவன்
“அது மீரா கொஞ்சம் அப்சட்டா இருக்கா கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என போனை துண்டித்தான்.
“யாரு ப்ரியா போன்ல” அவள் புறம்  திரும்பாமலேயே தேவ் கேட்க ப்ரியா யோசித்தவாறே
“நம்ம சையு தாங்க”
“ஹா ஹாஹா  நீ தனு என்றே கூப்டு. சையு என்று கூப்பிடறது மீரா காதுல விழுந்துச்சு வேத் அத்தானோட அத்துனு பாக்க மாட்டா” தேவ் கிண்டல் குரலில் சொல்ல அவள் புறமிருந்து பதில் ஏதும் வராமல் போகவே அவளை திரும்ப பார்க்க வெளியே செல்வதற்காக தயாராகுவது தெரிய அவளை இழுத்து நிறுத்தியவன் “மீராகு என்னாச்சு” அவனை ஆச்சரியமாக பார்த்தவள் எத்தகைய அன்பு இவனுடையது என பொறாமையும் பட்டாள். “என்ன அப்படி பாக்காம மீராகு என்ன ஆச்சு என்று சொல்லு” அவனின் பதட்டம் அப்பட்டமாக தெரிய
“தெரியல தேவ் அவசரமா வர சொன்னார். மீரா கொஞ்சம் அப்சட்டா இருக்கிறாளாம்” அவ்வளவு தான் ப்ரியாவுக்கு முன் வண்டியில் அமர்ந்தான் தேவ்.
மீரா சொன்னதை அவன் எப்படி ப்ரியாவிடம் சொல்வது? அவன் நெஞ்சில் தலை வைத்து அழுபவளை என்ன ஏதென்று அடித்துப் பிடித்து எழுந்து விசாரிக்க “என்ன ஏதோ பண்ணிட்ட நா… நா.. எப்படி.. இப்படி..  மாறிப் போனேன். இப்படி அதுக்கு… அதுக்கு… அடிமையா…” சொல்ல வருவதை சொல்ல முடியாமல் திணற, அவள் என்ன சொல்ல வருகிறாள் என புரியாதவனோ
“என்ன ஸ்ரீ?” என அவளை அணைக்க அவனை தள்ளி விட்டவள் “நீ தான் நீதான் நா சைதன்யனா பத்தி பேசும் போதெல்லாம் என்ன…. என்ன…” மேலே சொல்ல முடியாமல் தொண்டையடைக்க மூச்சு விட முடியாதபடி கேவலை வெளியிட்டவள் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். 
அவசரமாக தண்ணீரை ஊற்றி அவளுக்கு சைதன்யன் புகட்ட மறுப்பேதும் சொல்லாம மட மடவென குடித்தவள் மீண்டும் அவனை குற்றம் சாட்ட ஆரம்பித்தாள்.
இவ்வளவு நேரமும் “நீ… நீ..” என தன்னை மீறி அழைத்தவள் “நீங்க தனஞ்சயன் இல்ல சைதன்யன் என்று எனக்கு எப்போவோ தெரியும்” சைதன்யனின் அதிர்ச்சியான பார்வையை கண்டு கொள்ளாது “ஏன் என் கிட்ட பொய் சொன்னீங்க எல்லாருக்கும் தெரியும் என்னை தவிர” நொந்து விட்டான் சைதன்யன்.
அவளுடைய தற்போதைய நிலைமையில் அவள் தனஞ்சயனாக இருப்பது சைதன்யன் தான் என அறிந்தால் அவளுக்கு ஏதாவது நடக்கும் என அஞ்சி அவளிடம் சொல்லாமல் மறைத்தால் அதை அவள் அறிந்துக் கொண்டதுமில்லாமல் அவனையே குற்றம் சாட்டுகிறாள். அவளுடைய மனக் குமுறலை கொட்டித் தீர்க்கட்டும் என அவன் அமைதியாகி விட அவனின் தலையில் இடியை இறக்கினாள் அவனின் மனையாள்.
 “நா எல்லாம் தெரிஞ்சி அமைதியா தான் இருந்தேன் ஒவ்வொருத்தரும் பண்ணும் அலும்பு தாங்காம உங்க வாயாலேயே உண்மைய சொல்ல வைக்கணும்னு உங்கள டோச்சர் பண்ண வீட்டு வேல எல்லாத்தையும் உங்க தலைல கட்டி முயற்சி பண்ணேன். அவள் பண்ணியவற்றை பட்டியலிட
‘குட்டச்சி இவ்வளவு வேல பாத்துருக்கிறாளா’ அசந்து தான் போனான் சைதன்யன் “ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும் அது சுகமான டோச்சர் டி என் பொண்டாட்டி”  மனதுக்குள் சொல்லியவாறே அவளை தீர்க்கமாக பார்த்திருந்தவன் எதுவும் பேசவில்லை.
“ஆனா நீங்க..நீங்க …” அவன் பார்வைவை தாங்காமல் தலை குனிய மேலும் தொடர முடியாதபடி தொண்டையடைக்க ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
அப்போ நா சைதன்யன்னு ஏற்கனவே தெரியுமா?  எப்போ தெரிஞ்சது அது பிரச்சினை இல்ல போலயே. இவ என்ன சொல்ல வாரா என குழம்பியவன் “ஸ்ரீ சொல்றத தெளிவா சொல்லு முதல்ல அழுகுறத நிறுத்து. சும்மா சும்மா டாமை திறக்குற, இப்போ நிறுத்த போறியா இல்லையா? சொல்றத அழுது முடிச்சிட்டு சொல்லு,  இல்ல சொல்லிட்டு அழு” அதட்டலாக அவன் கூற அவனின் அதட்டலில் வெகுண்டெழுந்தவள் ஆவேசமாக அவன் சட்டையை பிடித்திருந்தாள். 
கட்டிலை காட்டி “நீ.. நீதான் என்ன இப்படி மாத்திட்ட. என்ன என்ன இதுக்கு அடிமையாக்கி வச்சிருக்க” என அவனை உலுக்க அவள் சொல்வதை புரிந்து கொள்ளவே அவனுக்கு சில நொடிகள் எடுத்தது.
“ஏய் என்னடி உளறுற” திகைத்தவனாக சைதன்யன் அவளை ஏறிட
“நீங்க தனஞ்சயனா இருக்குறத நா தெரிஞ்சிக்க கூடாதென்று நா பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் என்ன பேச விடாம இப்படி சீப்பா நடந்து கிட்டீங்க” அவள் சொல்ல சொல்ல அவளை அடிக்கும் வெறி ஏறியது.
அவனை இதை விட யாராலயும் அவமானப் படுத்த முடியாது. அவன் கைகளில் அவள் காதலால் உருகியதை இப்படி அர்த்தம் கொள்வாள் என கொஞ்சமேனும் நினைத்துப் பாத்திருக்க வில்லை. அவனின் காதல் கொண்ட மனம் அவளை தள்ளி வைக்க விடவும் இல்லை. எக்காலமும் அவனால் அது முடியாத காரியம். அவளின் பழைய நினைவுகள் வந்தால் அவள் எந்த மாதிரி முடிவெடுப்பாள் என அறிந்திருந்தும் அவளின் காதல் மேல் வைத்த நம்பிக்கையில் அவளை நெருங்க எந்த வித தடையும் அவனுக்கு இருக்க வில்லை. ஆனால் இன்று அவனின் காதலை மாத்திரமல்லாது அவளின் காதலையும் சேர்த்து கொச்சை படுத்தி விட்டாள் அவனின் ஆருயிர் காதலி.
வந்த கோபத்திற்கு நாலு அறை விட்டு இருக்கணும். அவனின் வளர்ப்பு முறையும் காதல் கொண்ட மனமும் அதை செய்ய விட வில்லை. அவளை அவன் ஒரு வார்த்தை பேசவோ திட்டவோ இல்லை. ஒரு தடவை பேசியதற்கே அவளின் நிலைமை படுமோசமாகி சாவை தொட்டு மீண்டு அவனிடத்தில் வந்து சேர்ந்து விட்டாள். எக்காலத்திலும் அவளை வார்த்தையால் வதைக்க மாட்டேன் என தனக்கு தானே சத்தியம் செய்து கொண்டுதான் திருமணமே செய்திருந்தான்.    
அவன் பொறுமையை விடாது மௌனம் காக்க
அவனின் மௌனமே அவளை மேலும் மேலும் பேசத் தூண்ட 
அவனின் பொறுமை எல்லை தாண்ட
கோபம் தலைக்கேற
அவள் பேசுவதை பொறுக்க மாட்டாமல் மேசையின் மேல் இருந்த பூச்சாடியை தூக்கிக்கி அடித்தான் சைதன்யன்.
அதில் அவள் சற்று அடங்கினாலும் அழுவதை நிறுத்த வில்லை.
அவளை சமாதானப் படுத்த எந்த முயற்சியையும் அவன் எடுக்க வில்லை அழும் அவளையே வெறித்துப் பார்த்தவன் ப்ரியாவை அழைத்து விட்டான்.
ப்ரியா கேட்ட கேள்வியில் நோ……. என மீரா  கத்த சைதன்யனின் சட்டையை பிடித்திருந்தான் தேவ்.

 

Advertisement