Advertisement

அத்தியாயம் 13
அடுத்து வந்த எல்லா நாட்களும் காலேஜ்க்கு சையுவ பாக்க மட்டும் தான் போனேன் தூரத்துல இருந்து பார்த்தா மட்டும் போதும் என்று இருந்த எனக்கு ஒரு நாள் அவரே அழைத்து அவரோட பிரெண்ட்ஸ் எல்லாம் அறிமுகப்படுத்தி வச்சாங்க. ஆனா வந்த அன்னைக்கே அவங்க பேர தெரிஞ்சிகிட்டேன் தூரத்துல இருந்து அவங்க எல்லாரையும் கவனிச்சு கிட்டு தான் இருந்தேன். அவங்க எல்லாம் என்கூட நல்லா பழகினாங்க அவங்க காங்ல நானும் ஒருத்தியா மாறிட்டேன்.
“ஹேய் க்யூட்டிப்பை இங்க வா. அங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்த? சாப்டியா?” மீரா சைதன்யனை சையு என்று செல்லப்பெயர் வைத்து எவ்வாறு அழைத்தாளோ அவனும் அவளை க்யூட்டிப்பை என்றே அழைத்தான்.
“ஒரு நேரத்துல ஒரு கேள்வி கேளுங்க. இன்னும் சாப்பிடல” அவனோடு இவள் உரிமையாகவே பேசினாள்.
அவளை பார்த்து சிரித்தவன் “வா சாப்பிடலாம். உனக்கு என்ன வேணும்” அவள் உரிமையான பேச்சும், செய்கைகளும் இவனுக்கு குழந்தைத்தனமாக மட்டுமே தெரிந்தது.
“எதுனாலும் ஓகே. நீங்க வாங்கி கொடுத்தா” முற்பாதியை சொன்னவள் பிற்பாதியை மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
கொஞ்சம் நாட்களாகவே அவர்களுடன் தான் உண்பாள். அவளுடைய வகுப்பில் அவளுக்கு தோழிகள் இருக்கவில்லை என்பதை விட யாரிடமும் அவள் நெருங்கிப் பழகவில்லை. இவள் இந்த காலேஜுக்கு வந்ததே அவளுடைய சையுவுக்காக அதுவே வேறு நண்பர்களை தேட விடாது எல்லாம் இவர்களே என்றானாள். 
“இதோடா எதுனாலும் ஓகே வாம். பக்கத்து கடைல புண்ணாக்கு தான் விக்கிறாங்க வாங்கிக்குடுடா” குணால் வாயை விட
அவன் தலையில் கொட்டியவள் “எரும மாதிரி இருக்க நீ போ போய் சாப்பிடு” என்றாள்.
“என்ன வாய் நீளுது நா சீனியர் மா கொஞ்சம் மரியாதையா பேசு” அவனும் சிரித்தவாறுதான் கூறினான்.
“சீனியரோ ஜூனியரோ இப்போ நானும் இந்த டீம் தான் ப்ரோ”
“பச்சபுள்ளன்னு நெனச்சி பாவம் பாத்தேன் உன்னலாம் வச்சி செய்யணும்” இவர்களின் வாய் சண்டையை பார்த்தவாறே மற்றவர்கள் வந்து சேர்ந்தனர். வரவிருக்கும் எக்ஸாம் பத்தி பேசியவாறே சாப்பிட ஆரம்பித்தனர்.
“நீ சாப்பிடலையா” சைதன்யனை நவீன் கேட்டான்.
“க்யூட்டிபை வா சாப்பிடலாம்” என மீராவை பக்கத்தில் அமர்த்திக்கொண்டவன் முதல் வாயை அவளுக்கு ஊட்டி விட்டு அவளை சாப்பிடும்படி கூறியவன் தானும் சாப்பிட, இரு கண்கள் மட்டும் அவளை குரோதமா பார்த்தன.
மீராவுக்கோ ஆச்சரியமான சந்தோச மனநிலையில் கண்ணில் நீர் கோர்க்க, அதை இமை தட்டி உள்ளிழுத்து தொண்டை கணக்க வாயை திறந்து அவன் ஊட்டியதை பெற்றுக்கொண்டாள்.
அவனை அனைவருமே வித்தியாசமாய் பார்த்தனர் அது அவன் மீராவுக்கு ஊட்டி விட்டதை மட்டுமல்ல, அவள் சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிட்டதையும் தான். பொதுவாகவே சாப்பாடோ தண்ணீர் பாட்டிலோ தனியாகவே வைத்து கொள்வான். யாராவது அவன் பாட்டிலில் தண்ணி குடித்தால் கூட தூக்கி போடுபவன், அவன் சாப்பாட்டில் கை வைத்தாலோ சாப்பிடாமல் எழுந்து சென்று விடுவான். முதலில் அவன் செய்கையை புரியாதவர்கள் போகப்போக அவனின் இயல்பே அது என புரிந்துக்கொண்டு “ஏன்” எனக் கேக்க “சின்ன வயசுல இருந்தே பழகிட்டேன்” என்று சொல்ல ஒதுங்கி இருந்தனர்.
எந்தநாளும் மீராவுடன் பகிர்ந்து உண்பது  தொடர்கதையாக அவளுக்கு பிடித்த ஐஸ் கிரீமும் அதில் சேர்ந்தது. இதை பார்த்து விட்டு தான் நவீன் மீராவை காதலிக்கிறாயா எனக்கேட்டது.
காலேஜ் நாளில் பிரேக் டைமிலும் ஞாயிறு வெளியே என எந்நாளும் சைதன்யன் கூடவே இருந்தாள். இரவில் வீட்டுக்கு போன் செய்து பேசும் போது தேவ்விடம் சைதன்யனை பற்றி இன்று என்ன செய்தான், என்ன சொன்னான் என அனைத்தையும் கூறுவாள். இவ்வாறுதான் தேவ்வுக்கும் சைதன்யன் என்பவன் மீராவின் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்து போய் இருக்கின்றான் என்று தெரியும்.
அத்தையிடம் அவனுக்கு பிடித்ததை அவளுக்கு சாப்பிட வேண்டுமென செய்து அனுப்புமாறு கொஞ்சி கெஞ்சி சைதன்யனுக்கு கொடுப்பாள். இப்படியே காலேஜில் நடந்த இனிமையான சம்பவங்களை கூறிக்கொண்டிருந்தாள் மீரா. அதை அமைதியாக சௌமியா கேட்டுக்கொண்டிருக்க ப்ரொபெஷர் கிருஷ்ணமூர்த்தி அவளிடம் கேள்விகளை கேட்டவாறே இருந்தார்.
மாலையில் கூடைப்பந்து விளையாடும் இடத்தில் அமர்ந்து அவனை சைட் அடிப்பாள். அவளின் குழந்தை முகமும் சிறு பிள்ளை போல் எல்லாவற்றுக்கும் சண்டைக்கு நிற்கும் சுபாவமும் அவளை வளர்ந்த குழந்தை போல் பார்த்தார்களே ஒழிய அவள் மனதில் உள்ள காதலை உணரவில்லை. அதை உணரும் மனநிலையிலும் அவர்கள் இருக்கவில்லை இறுதியாண்டு படிக்கணும் நண்பர்களை பிரியனும் என்ற எண்ணமே அவர்க்களுக்கு.
“ஹேய் ஸ்ரீ வா பாஸ்கர்ட் பால் விளையாட” சைதன்யன் பந்தை கூடையினுள் போட்டவாறே சொல்ல
தனது பாடப்புத்தகத்தை கைவைத்தவாறே அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தவள் “நானா? …..நா……… எப்படி எனக்கு தெரியாதே!”
“நீ வா நா சொல்லி தரேன்” அவள் கைபிடித்து வலுக்கட்டாயமாக அழைத்தான் சைதன்யன்.     
சரி என்று எழுந்து வந்தவளின் இரு பக்கமாக போட்டிருந்த துப்பட்டாவை ஒரு பக்கமாக போட்டு கட்டிவிட அவனின் உரிமையான செயலினால் மெய் மறந்து அவனை பாத்திருந்தாள்.
அவனின் நெருக்கமும், மூச்சுக்காற்று பட்டு தேகம் சிலிர்க்க நின்றவளின் தோளை தொட்டு திருப்பி அவளின் பின்னாடி அவன் நின்று பந்தை அவள் வலதுகையில் திணித்து கையை பிடித்தவாறே கூடையை நோக்கி எவ்வாறு போட வேண்டும் என்று அவன் கூடையை பார்த்தவாறு சொல்ல அவளோ அவனை கண்சிமிட்டாமல் பார்த்திருந்தாள்.
அவள் புறம் திரும்பியவன் அவளின் காதல் பார்வையை உணர்ந்தானில்லை அவளின் நாடியை இடது கையால் திருப்பி “அங்க பாரு” என நாடியை உயர்த்தி கூடையை காட்ட அவனின் தொடுகையில் உடல் முழுவதும் புது இரத்தம் வேகமாய் பாய்வது போல் உணர்ந்தாள். அவனின் அருகாமை இதமாய் இருக்க அவனின் நெருக்கம் அவஸ்தையாய் தவித்தாள் சையுவின் மீரா. பந்தை போடுவதில் குறியாய் இருந்தவனோ அவளின் அவஸ்தையை உணரவே இல்லை.
நவீனும் குணாலும் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரோம் என கிளம்பி இருக்க தனியாக பந்தை போட்டுக்கொண்டிருந்தவன் மீராவை அழைத்து பந்தை எப்படி பிடிப்பது எப்படி போடுவது என அவளை தொட்டு தொட்டு அவளின் காதல் தீயை மூட்ட அதில் அவளே எரியப்போகும் காலம், நேரம் வெகு சீக்கிரமே வரும் என அறியாத பேதை அவன் அருகாமையில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள்.
பந்தை அவள் பல தடவை சரியாக போடாமல் இருக்க “ஹப்பா…. முடியல குட்டச்சி என் நெஞ்சு உயரத்துல இருக்க அதான் உன்னால போட முடியல நல்லா பூஸ்ட்டு சாப்பிட்டு ஹைட்டா வளர்ந்ததுக்கு அப்பொறமா சொல்லி தரேன்” என்று சொல்லி பந்தை அவளின் தலை சுற்றி இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றியவன், அங்கேயே அமர்ந்து தாகமெடுக்க தண்ணீர் பாட்டில் காலியாகி இருப்பதை கண்டு நண்பர்களின் நியாபகம் வரவே “எங்க போய்ட்டானுங்க இவனுங்க” நண்பர்களை தேட ஆரம்பித்தான்.     
மீரா அவனுக்கு அவளின் தண்ணீர் பாட்டிலை கொடுக்க மறுப்பேதும் சொல்லாமல் “தாங்க்ஸ்” என்று அதை பருக நவீனும் குணாலும் வந்து சேர்ந்தனர். அவன் மீராவின் பாட்டிலில் நீர் அருந்துவதை கண்டும் எதுவும் கேட்காமல் அவர்கள் இருவரும் புருவம் உயர்த்தி தங்களுக்குள் சைகை செய்து பேசிக்கொட்டனர். கேட்டாலும் “அவ சின்ன பொண்ணுடா தப்பா பேசாதீங்க” என்று சிடுசிடுப்பான் என அறிந்திருந்தவர்கள் அதை பற்றி பேசுவதில்லை. சைதன்யன் அவர்களுக்கு பல நேரம் ஒரு புரியாத புதிராகவே இருந்தான்.
“ஏன்டா எங்கடா போய்ட்டிங்க எவ்வளவு நேரமா வெயிட் பண்ணுறேன்” கடுப்பாக சைதன்யன் மொழிய
“எஸ்சாமுக்கு இன்னும் ஒரு மாஸசம் தான்டா இருக்கு அடுத்த ரெண்டு வருசமும் இங்கயே குப்பை கொட்டலாம்னு ஆபீஸ் போய் போர்ம் வாங்கிட்டு வந்தேன். நீ என்ன செய்ய போற” நவீன் கேக்க குணால் அவனை அமைதியாகப் பார்த்தான்.
“நா பாரின் போலாம் என்று முடிவு பண்ணிட்டேன். நான் மாட்டேன் என்று சொன்னாலும் அப்பா பிளைட்ல ஏத்தி விடுவாரு” சைதன்யன் சாதாரணமாகவே சொல்ல
மீராவின் காதல் மனது சுக்கு நூறாகி துண்டு துண்டாக உடைந்தது “போகப் போறானா? என்னை விட்டு போய்டுவானா? என்ன விட்டு போய்டுவானா?” கண்கள் குளமாக நிதர்சனம் உணர்ந்தாள் சின்னவள்.
அவன் இறுதியாண்டில் இருப்பது ஏற்கனவே அறிந்தது தான். இருந்தாலும் அவனே அவளை விட்டு தூர செல்கிறேன் எனும் பொழுது மனம் தாங்கமுடியவில்லை அவளின் மனக்குமுறலை பொறுக்காத வானமும் அழ அவள் கண்ணீர் அவனுக்கு தெரியாமலே போனது. அப்போதைய மனநிலையில் அவன் யோசித்திருப்பானோ என்னமோ! அவனின் நெஞ்சம் முழுதும் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கும் போது அவள் காதலை சொன்னது தான் விதியின் சதியோ?
“ஹேய் க்யூட்டிப்பை மழை பெய்து வா சீக்கிரம் பாரு நல்லாவே நனைச்சிட்ட” என்று அவளின் கையை பிடித்து இழுத்தவாறே நண்பர்களை அம்போ என விட்டு விட்டு ஓடி, ஹாஸ்டலில் வாசலில் அவளை விட்டவன் “சீக்கிரம் உள்ள போ” என அவளை தள்ளாத குறையாய் உள்ளே அனுப்பியவன் சிரித்தவாறே அவனது பைக் இருக்கும் இடம் நோக்கி ஓடிவிட்டான். விழிநீர் வழிய அவன் செல்வதையே பாத்திருந்தவள் எவ்வாறு அறையினுள் வந்து சேர்ந்தாள் என அவளே அறியவில்லை.
தனது காதலை அவனிடம் சொல்ல விடாமல் தடுப்பது எது அவன் அவளை சிறு குழந்தைபோல் நடத்துவதா? எந்த பெண்ணிடமும் நெருங்கிப்பழக்கமால் தன்னிடம் மட்டும் பழகுபவனிடம் காதலை சொன்னால் என்னவாகும் என்ற பயமா? என்று புரியாமல் குழம்பியவள் அவன் இப்பொழுதே பிரிந்து சென்று விட்டான் என்பது போல் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.
“மீரா மீரா கண்ட்ரோல் யுவர் ஸெல்ப் இங்க பாருங்க, நா சொல்றது கேக்குதா? கண்ண தொறந்து பாருங்க” ப்ரோபசர் க்ரிஷ்ணமூர்த்தி அழைக்க கண்களில் நீர்வழிந்த வண்ணம் மெதுவாக மீரா கண்ணை திறந்தாள். தோழியின் காதலை பிரமிப்பாக கேட்டுக் கொண்டிருந்த சௌமியா அவளருகில் ஓடி வந்து அவளை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினாள்.
அவளை நேராக அமர்த்தி தண்ணீர் புகட்டி “ஆர் யு ஓகே நவ்? ரொம்ப எமோஷனல் ஆகிட்டீங்க. எல்லாம் நியாபகத்துல வந்துச்சா?”
“தல ரொம்ப வலிக்குது டாக்டர். ஏதோ கனவு மாதிரி, இல்ல இல்ல சினிமா பாத்த மாதிரி,   ம்ம்ம்…………. தெரியல சொல்ல தெரியல” மீரா கண்களை மூடி தான் பார்த்த காட்ச்சிகளை மீண்டும் மனதுக்குள் நினைத்துப் பார்த்தாள்.
“கவலை படாதீங்க எவ்ரி திங்க் வில் பி ஆல்ரைட். உங்க டாக்டர் உங்களுக்கு சரியாதான் டிரீட்மென்ட் பண்ணி இருக்காங்க அதான் உங்களுக்கு சீக்கிரம் நியாபகத்துல வந்துச்சு. ஆர் யு ஹாப்பி நவ்? அவர் புன்னகைத்தவாறே கேட்க கண்களை மெல்ல திறந்து அவரை நன்றியோடு பார்த்தவள் கைகூப்பி வணங்கியவாறே கண்ணீருடன் தலையாட்டினாள்.
“ரொம்ப யோசிக்காதீங்க வீட்டுக்கு போய் நல்லா தூங்கி எந்திரிச்சா சரியாகும் மெல்ல மெல்ல அடுத்து நடந்தவைகளை நியாபகத்துல வரும். அந்த மெடிசினாயே கன்டினியூ பண்ணுங்க” என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்தவர் அவளுடைய மருத்துவ அறிக்கையை பார்த்தவருக்கு புரிந்து போனது அவள் எக்சிடெண்டில் தலையில் அடிபட்டதால் மாத்திரம் நடந்து முடிந்ததை மறக்கவில்லை மனதை அழுத்தும் கவலையால் partial amnesia எனும் பகுதியளவு மறதியாலும் பாதிப்படைந்து இருக்கிறாள் என்று.
“இதுங்க ரெண்டும் எங்க போச்சுன்னே தெரியலையே மியா வழக்கமா போற பாலரையும் பாத்தாச்சு ,சிட்டில இருக்குற பெர்மஸ் பாலார் எல்லாத்திலும் ஒரு ரவுண்ட் வந்தாச்சு” சந்துரு அலுத்துக்கொள்ள
“ஸ்ரீ போன மறந்தது வச்சிட்டு வந்துட்டா சௌமியா போன்ல பாலன்ஸ் இல்லையா பேட்டரி போச்சானே தெரியலையே!” சைதன்யன் யோசனையாக சொன்னான்.
“பாலன்ஸ் எல்லாம் இருக்கும் ரிசார்ஜ் பண்ணுற எனக்கு தெரியாதா? முகத்துல ஏதாச்சும் அப்பி பூசிக்கிட்டு தூங்கி இருக்கும் லூசு கழுதைங்க”
 “டேய் உன் எகோமியாவ என்னவேனாலும் சொல்லிக்க என் ஸ்ரீய சொன்ன” என்றவாறு அடிக்கவென கையை தூக்க அவனின் போன் அலறியது.
“ஹேய் க்யூட்டிப்பை எங்கடி போன” ஒரு துள்ளலுடன் வந்தது சைதன்யனின் குரல். அவன் குரலில் இருந்த சந்தோசம் அவளையும் தொற்றிக்கொள்ள
“நாங்க வீட்டுக்கு வந்துட்டோம் போன் வேற மறந்துட்டேன் இந்த லூசு சௌமியா போன சார்ஜ் வேற போடாம வந்துட்டா” என்று சௌமியாவை பார்த்து கண்ணாடிக்க மீராவின் முதுகில் அடித்தாள் சௌமியா.
“இந்த லூசுக்கு அந்த லூசு சரியான ஜோடி தான்” சைதன்யன் சிரிக்க, சந்துரு அவனை முறைத்தான்.
“சரிங்க ரொம்ப டயடா இருக்கு நா அப்பொறம் பேசுறேன்” தலைவலி அவளை படுத்த அவனின் பதிலை கேக்காமலேயே போனை அமர்த்தினாள்.
சௌமியா விடைபெற்று செல்ல நன்றாக தூங்கி எந்திரிச்ச மீராவிற்கு பசுமையான நியாபகங்கள் நெஞ்சில் “சையு உங்கள இவ்வளவு லவ் பண்ணி இருக்கேனே அதான் உங்கள பார்த்த உடனே என் இதயம் அப்படி துடிச்சதா? நீங்க என் லவ்வ எப்போ எப்படி புரிஞ்சி கிட்டீங்கனு தெரியலையே! நா சொன்னேனா? இல்ல நீங்களாகவே கண்டு பிடிச்சீங்களா?” மொபைலில் அவனின் புகைப்படத்தை பார்த்தவாறே பேசியவள் அவனுடன் வாழப்போகும் இன்பமான வாழ்க்கையை எண்ணி மகிழ அக்கணம் அவன் தனஞ்சயனா மாறிப்போன மாயத்தை மறந்தாள். நியாபகம் வந்தால் இந்த சந்தோசம் நிலைக்குமா?
அடுத்து வந்த நாட்களில் அவனுடன் போனில் பேசியவாறே நேரத்தை கடத்தினாள். கல்யாண நாளும் நெருங்க நெருங்க கன்னி அவள் கண்ட கல்யாணக் கனவு பலித்து விட்டதாக மகிழ முடியாமல் சைதன்யன் தனஞ்சயனாக மாறிப் போன மாயம் புரியாமல் குழம்பித் தவித்து கொண்டிருக்க கல்யாண நாளும் அழகாய் விடிந்தது.

Advertisement