Advertisement

அத்தியாயம் 1
அதிகாலை நேரம் லட்சுமி அம்மா பூஜை அறையில் அவரது அன்புக்கணவரோ ஜோகிங் என்ற பேரில் வீட்டை சுத்தி ஓடிக்கொண்டிருந்தார். அவர் வாசலை தாண்டும் ஒவ்வொரு தடவையும் லட்சுமி அம்மாவின் பார்வை கணவனை தொட்டு தொட்டு மீண்டது. லட்சுமி அம்மா கணவனை சைட் அடிக்கவில்லை. அலைபேசி அடிக்கும் நேரமாகி விட்டதே பூஜை முடிவடைவதற்குள் அலைபேசி அடித்தால் கணவர் அலைபேசியை எடுத்து விடுவாரே என்ற டென்க்ஷன்தான்.
“பாக்குறளா மொறைக்குறளா” தனக்குல் புலம்பியவரே வீட்டுக்குள் வந்த சரவணன் போன் மணி அடிக்கவே! “பொன்னம்மா காபி” என்றவாறே போனை காதில் வைத்தார்.
மறுமுனையில் “ஹாய் அப்பா” என்றான் அவரின் ஒரே தவப்புதல்வன் சைதன்யன்.
“என்ன தனு எப்போ இந்தியா வரப்போற உனக்கு நான் தந்த டைம் முடிய போகுது” மகன் தொலைதூரத்தில் இருந்து அழைப்பு விடுத்திருக்கிறான் அவனிடம் அன்பாக இரண்டு வார்த்தை பேச வேண்டும் என்றில்லாமல் பாசத்தை குரலில் கொஞ்சமேனும் காட்டாமல் தினமும் கேட்கும் கேள்வியையே கேட்டார்.
“இந்த மனுஷனுக்கு பையன்கிட்ட அன்பா நாலு வார்த்த பேசணும் என்று எண்ணம் இருக்கா? எப்ப பார்த்தாலும் அவனை அடக்கி ஆள பாக்குறாரு?” பூஜை செய்தவாறே கணவனை முறைக்கலானார் லட்சுமி அம்மா.  
“ஹஹஹ சென்னையில் கோடீஸ்வரங்களுள் ஒருத்தரா இருக்கீங்க உங்க பையன் வேலை பார்க்கனுமா?” என்றான் இவனும் இடக்காக
“உன் அப்பா கோடீஸ்வரன் தான் பா, என் அப்பா லட்சாதிபதி அவர் காட்டின வழியில் போய் தான் இன்னைகு இந்த அளவுக்கு நம்ம பிஸ்னஸ பெருக்க முடிஞ்சது. நான் என் அப்பா வழில போனது போல நீயும் என் வழில போக வேணாமா? அது தானே எனக்கு பெருமை” குடும்ப பெருமையை அலைபேசி வழியாக பாட ஆரம்பித்தவர், மகனை தன் வழிக்கு கொண்டு வர முயன்றார்.   
 “கூல் டாட், டூ டேஸ்ல அங்க இருப்பேன்,அம்மா எப்படி இருக்காங்க” தந்தை அழைத்தாலே! தினமும் கேட்கும் சுப்பிரபாதம் இதுதான் எனும் விதமாக முகத்தை சுளித்தவன் பேச்சை மாற்றினான். இந்த நேரத்தில் அன்னை பூஜை செய்து கொண்டிருப்பாள் என்றும் தெரியும். சுவாமி பாடலும் அலைபேசி வழியாக அவன் காதை எட்டியும் இருந்தது.
 “நீ வந்து தெரிஞ்சிக்க” கடுப்பாகி அலைபேசியை அனைத்துவிட்டார் சரவணன்
பெற்றோர்களால் தனு என்று அழைக்கப்படும் சைதன்யன் சௌதாகர் ஆறு அடிக்கும் கூடுதலான உயரம், அளவான உடட்கட்டு, புலியை விட கூர்மையான பார்வை, நான் புன்னகை மட்டுமே செய்வேன் எனும் உதடுகள், தினமும் ஒரு மணி நேரம் கூடைபந்து விளையாடாமல் தூங்க மாட்டான். நிறைய நண்பர்கள் உண்டு அதில் பெண்களும் அடக்கம. காதல்னு யாராவது நெருங்கினாள் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது  என்று கழண்டுக்கொள்வான் [எதுக்கு இந்த பொய்]  யாருக்கும் அவனுடைய உயரம் தெரியாமல் பர்த்துக்கொள்கிறான். தோள்மேல் கைபோட்டு தோழனாய் பழகினாலும் யார் வீட்டுக்கும் செல்லமாட்டான். நாசூக்காக தவிர்த்து விடுவான்.
அப்பா சரவணன்சௌதாகர் எஸ்.எஸ் குருப் ஆஃப் கம்பெனிகளின் சார்மன். அவருடைய தாத்தா காலத்திலேயே எல்லா தொழில்களிலும் கால் பதித்த குடும்ப என பெயர் எடுத்தவர்கள்.
சரவணன் சௌதகர் ஒரே வாரிசாக இருந்ததுனாலையும்,  குடும்ப கட்டுப்பட்டினலையும்,  கொஞ்சம் பிடிவாதமானவராக இருக்கப்போய் லட்சுமி அம்மாவை ஊர் திருவிழாவில் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொண்டார். மனைவி மகன் ரெண்டு பேர்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவர்.
“என்ன சொல்றான் உங்க பையன்”  கொஞ்சம் கடுப்பாகி கேட்டார் தனுவோட அம்மா லட்சுமி.  
அவர் ஆதங்கம் அவருக்கு. தனு பிரசவிக்கும் போதே கருப்பையில் பிரச்சினை என்று அகற்றவும் தனு ஒரே பையனா போய்விட்டான். தனியா இருந்தா தான் எல்லாப் கத்துக்குவான், தன்னம்பிக்கை  வரும்,  பிரச்சினைகளை சமாளிக்கும் மனப்பக்குவம் வரும்னு என்று போர்டிங் ஸ்கூல்ல சேர்த்து விட்டார் சரவணன். தனு விடுமுறைகு வீட்டுக்கு வந்தாலும் கூடைபந்து விளையாடனும்னு வீட்டிலே இருக்க மாட்டான். காலேஜ் சேர்ந்த பிறகு விடுமுறைக்கும் வீட்டுக்கு வருவதில்லை. காலேஜ் முடித்த பின் “உலகத்ததெரிஞ்சிக்க” என்று சரவண அமேரிக்கா அனுப்பி வைத்தார். முன்று வருடங்கள் கடந்து விட்டன. சரவணனுக்கு ஒரு பையன் இருக்கான் என்பதோடு சரி, அவனை பார்த்தவர்கள் ஒரு சிலரே.
லட்சுமி அம்மாவுக்கு சட்டுன்னு கோவம் வரும். அப்போ அப்போ கடுப்பாகி கணவன் மேல் காட்டுவார். கல்யாணமாகி இத்தனை வருடங்களில் லட்சுமியம்மாவை புரிந்துகொண்டதில் அடங்கித்தான் போகிறார் மனிசன்.
“ம்… என் பையனா! அது சரி ஏன் சொல்ல மாட்ட அவன் இங்க இருந்தா என் பையன்னு கொஞ்ச வேண்டியது பாரின் போனதுல இருந்தது என் பையனா?   அவரும் கோபமாக பேச
 “என் கவல எனக்கு. பாரின் போய் மூணு வருசமாகுது காலா காலத்துல அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணணுமேனு எண்ணம் இருக்கா”  லட்சு தன் பாட்டுக்கு புலம்பியவரே உள்ளே சென்று விட்டார்.
 “நாலு இடத்துக்கு போனா தான்மா எல்லா விசயத்தையும் கத்துக்குவான். பசங்கள கைக்குள்ள வைச்சிக முடியாது லட்சு சமுதாயதுல உருண்டு புரண்டு வந்தா தான் கரையேற முடியும்”   சொல்லிய வாரே திரும்பி பார்க்க, அங்கு லட்சுமி அம்மாவை காணாது கடுப்பாகி
“இவளுக்கு இதே வேலையா போச்சு பேசிகிட்டு இருக்கும்போதே உள்ள போறா பாக்குறவங்க என்ன லூசுனு சொல்லுவாங்க” கோபத்தில் சத்தமாக பொரிய
 “இப்ப மட்டும் என்னவாம் போய் ஆபீஸ கட்டி அழுங்க” கோவமா லட்சுமி அம்மா கத்த சரவணன் சார் கப்சிப் என்று ஆபீஸ் கிளம்பினார்.
“மீரா எந்திரிச்சிட்டியாடா?,  குளிச்சிடியா” மீராவால் மட்டுமே வது அத்த என்று செல்லமாக அழைக்கப்படும் சரஸ்வதியின் குரலுக்கு மீராவின் அறையில் இருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவே, “என்ன ஆச்சு இன்னைகு” என்றவாரே மீராவின் அறைக்குள் செல்ல அங்கு மீரா குளியலறையில் இருந்து வந்த துண்டோட கப்போர்டில் ஏதோ மும்முரமாக தேடிக்கொண்டிருந்தாள். அவளை ஒரு சின்ன சிரிப்புடனே பார்த்திருந்தவர் தோளில் தட்ட 
தேடுவதையும் நிறுத்தாது  “நான் ரொம்ப பிசி”  திரும்பி பார்க்காமலேயே சொன்னாள் அவள்.
“எக்ஸ்கியுஸ் மீ,  நீங்க தேடும் சுடி இதானு பாருங்க மிஸ் மீராஸ்ரீ அவர்களே!” என்று விளம்பர பாணியில் குரல் கொடுத்தாள் சரஸ்வதி.
 “வாவ் வது அத்த இந்த யெல்லோ சுடிய தான் தேடிக்கிட்டு இருந்தேன்” கண்களை அகல விரித்தவள் சந்தோசத்தில் கூச்சலிட்டாள். 
“இன்னைகு மியா ஓட பர்த்டே. இந்த சுடி தான் போடனும்னு போன வாரமே சொன்னியே அதான் நேத்து ரத்திரியே எடுத்து வைச்சிடேன்” மருமகளின் கன்னம் கிள்ளியவள் அவளுக்கு த்ரிஷ்டியும் கழித்து விட்டாள்.
 “அத்தனா அத்த தான்” பதிலுக்கு வது அத்தையின் கன்னத்தில் மீரா அழுத்தமாக முத்தமிட்டாள்.
“நீ சொன்ன மாதிரி சொளமிக்கு கிப்டா கொடுக்க சுடி தைச்சி பேக் பண்ணிட்டேன்” கூடுதலான தகவலாக இதையும் கூற
“தேங்க்ஸ் வது அத்த அத்தான் ரெடியாகிட்டாரா”
“ நீ இன்னைகு எர்லியா போகனும்னு சொன்னதும் ரெடியாகிட்டான். சரி டிரஸ் பண்ணிடு வா சாப்பிடலாம்” என்ற சரஸ்வதி அறையைவிட்டு வெளியேற மீரா கையில் இருந்த மஞ்சள் சுடிதாருக்குள் புகுந்து கொண்டவள் தன்னை அலங்கரித்துக்கொள்ள கண்ணாடியின் முன் நின்றாள். 
மீரா ஸ்ரீ ஐந்தரை அடி அழகு சிலை. சிரிக்கும் கண்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் வாய் ஓயாமல் பேசுபவள், எல்லாருக்கும் ஒரு செல்லப் பெயர் வைப்பது அவள் பொழுதுபோக்கு. அந்த பெயரையே அழைப்பாள். தற்போது எஸ்.எஸ் குருப் ஆஃப் கம்பெனி சார்மன் சரவணன் சொதாகரின் பி.ஏ ஆக பணிபுரிகிறாள். சரஸ்வதி மீராவின் அப்பா ரவிக்குமாரின் அக்கா. வீட்டிலேயே போட்டிக் வைத்து நடத்தி வருகிறார். மீராவின் பாசன் டிசைனரும் இவரே.
“பாய் அத்த வர்க் பாக்குறது ஒகே. டைம்கு சாப்டுங்க” கொஞ்சம் மிரட்டலாகவே எந்த நாளும் சொல்வதை சொல்ல
“சரிடி தங்கம் பத்திரமா போயிட்டு வா” சரஸ்வதி உள்ளிருந்தே குரல் கொடுத்து வழியனுப்பி வைத்தாள்.   
“எங்கள் இந்த டைவர இன்னும் வரல” வேண்டுமென்றே குரல் உயர்த்தினாள்  மீரா.
“அடிங்க நா உனக்கு டைவரா” வார்த்தையில் கடுமை இருந்தாலும் முகத்தில் புன்னகையுடன் “சரி சரி வண்டில ஏறு, அப்புறம் லேட் ஆச்சுனு என்ன திட்டக் கூடாது” முன் பாதியை கோவமாகவும் பின் பாதியை நடிகர் வடிவேலு குரலிலும் சொன்னான் மீராவால் வேத் என்றும் மற்றவர்களால் தேவ் என்றும் அழைக்கப்படும் தேவேந்திரன்.
தேவேந்திரன் மீராவின் பாசமான அத்தான். பார்க்க கிரேக்க சிலை மாதிரி இருக்கும் ஆண் அழகன்.
“என்ன ரெண்டு பேரும் கிளம்பியாசா! எனக்கு டாடா சொல்லல” என்ற வாரே நடை பயிற்சியை முடித்து கொண்டு வந்த ரவிக்குமார் கேட்டார்.
இன்னும் குழந்தை போல் கேட்ட தம்பியை ஒரு புன்னகையுடன் பார்த்த சரஸ்வதி “சொளமியாவோட பர்த்டேனு போய்டாங்க  நீ வா சாப்பிடலாம்”
“ஓ அதான் சொல்லாம போனாங்களா,  செல்ல குட்டி இன்னும் தூங்குறாளா?”
 “ம்… அம்மா அப்பா ரெண்டு பேரும் வேல வேலனு அழையுதுங்க இவள சமாளிக்க இன்னும் ரெண்டு பேர் வேணும்”  குரலில் கொஞ்சம் கடுப்பாகி மொழிய,
தன் அக்காவின் கோபம் எதனால் என்று அறிந்திருந்தவரோ மேலும் அக்காவை கோபத்துக்குள்ளாக்காமல் “சரி வா சாப்பிடலாம் நீ போடிக்கு போ வினுகுட்டிய நான் பாத்துகிறேன்” என்றவாறே உள்ளே சென்றார் ரவிக்குமார்.
“குட்மர்னிங் தாத்தா” அழகான புன்னகையுடன் ரவிக்குமாரை அணுகினாள் வினு குட்டி என்று எல்லோராலும் அழைக்கப்படும் வினிதா முன்று வயதேயான குட்டி தேவதை.
 “குட்மர்னிங் வினு எந்திரிச்சீங்களா?  பால் சாப்பிடலாமா”
“ஹையோ! தாத்தா ப்ரஸ் பண்ணாம சாப்டா மீராவும் தேவும் திட்டும்”
 “அடிக் கள்ளி அவங்க திட்டுரதாலயா தினமும் ப்ரஸ் பண்ணுற”
தனது முத்துப்பற்களை காட்டி நகைத்த வினு “நோ தாத்தா அம்மா சொன்னாங்க ப்ரஸ் பண்ணாம இருந்தா பூச்சிவரும்னு வாங்க வாங்க நாம போய் ப்ரஸ் பண்ணலாம் வினு குட் கர்ள்”  புன்னகைத்தவாறே ரவிக்குமார் எழ அவருடைய போன் ஒலி எழுப்பியது
“போன்ல யாரு” சத்தமில்லாமல் சைகையாலேயே வினு கேட்க
வினுவின் சுட்டித்தனமான செய்கையால் புன்னகைத்தவாறே “மீரா தான் மா” என்று போனை ஸ்பீக்கர் மூடில் போட மீரா ஹலோ சொல்வதை கேட்ட வினு குஷியாக கை தட்டலானாள்
 “சொல்லுமா”
“ ஸாரி பா,  சொளமி பர்த்டே, அதான் சீக்ரமா வந்துட்டேன் சாப்டீங்களா! வினு எந்திரிச்சிட்டாளா?”
“இப்ப தான் எந்திரிச்சா, சமத்தா பல்லு விளக்க போறா, அப்புறமா பால் சாப்பிட போறா” வினுவை பார்த்தவாறே பதில் அளிக்க, வினு சமத்தா தலை ஆட்டி துள்ளிக்குதித்தாள்.
“வினு செல்லம் குட் கர்ளா தாத்தக்கூட இருங்க மீரா ஆபீஸ் முடிஞ்சி ஓடி வந்துடுறேன் ஈவ்னிங் பீச் போலாம் ஓகே வா?”
வினு சந்தோசமா “ஓகே ஓகே” என்று கை தட்டியவரே குளியலறைக்கு ஓடி விட
“சரிபா ஆபீஸ் வந்துட்டேன் வைச்சிடுறேன்”
“சரிமா வச்சுடுறேன்”
இங்கே தேவும் இவர்களின் உறையாடலை ஸ்பீகர்மூடில் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். பீச்சுக்குப் போலாம் என்றதும் தன் மகள் போடும் ஆட்டமும், இங்கே மீரா தன்னிடம் கேளாமல் அழைத்துச் செல்வதாக கூறிவிட்டதால் இன்று அழைத்துச் செல்லும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டான். 
மீராவை இறக்கி விட்ட தேவ் அவளிடமிருந்து விடைபெற்று மருத்துவமனைக்கு கிளம்ப கம்பனி தோட்டத்து பார்த்தவாறே உள்ளே நடந்தாள் மீரா.   
எஸ்.எஸ் குருப் ஆஃப் கம்பெனி தலைமை காரியாலயம் ஐந்து மாடி கட்டடம். வெளிச் சுவர்கள் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. காரியாலயத்தை சுற்றி உள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தும் இடம் போக முன் பகுதியில் வித விதமாக மலர் செடிகளும், பின் பகுதியில் இயற்கை முறையில் குறுகிய இடத்தில் பயிரிடக்குடிய செடிகளும் பயிரிட்டு பராமரிக்க படுகின்றன. மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். காரியாலத்தின் உள்ளே காற்றை சுத்தம் செய்யும் செடிகளும் சின்ன பூந்தொட்டிகளில் அலங்கார பொருட்கள் போல் அழகாகவே மிக நேர்த்தியாக பராமரிக்க படுகின்றன.
“யார் சொன்னது ரோஜா தான் முள்ளோடு அழகென்று
இதோ போகன்விளாவும் அழகு தான் கலர் கலராய்”
“ஹப்பா கவித கவித காலையிலேவா” மீராவின் முதுகில் பலமாக தட்டினாள் மீராவால் மியா என்று அழைக்கப்படும் சௌமியா.
“பொறாம…… பர்த்டே கர்ள்னு சும்மா விடுறேன்” என்றவள் “ஹாப்பி பர்த்டே டி. இந்த உன் கிப்ட்” என்று ஒரு கவரை மியாவின் கையில் கொடுத்தாள். அதை அவள் அங்கேயே! பிரிக்க முற்பட, அதை தடுத்த மீரா “வா உள்ள போலாம்” என்று இழுத்துச் சென்றாள்.
“ஹப்பி பர்த்டே டு யூ ஹப்பி பர்த்டே டு யூ ஹப்பி பர்த்டே டு யூ டியர் சொளமி ஹப்பி பர்த்டே டு யூ” எல்லாரும் ஒரே குரலாக வாழ்த சொளமி நெகிழ்ந்து போனாள்.
சௌமியா மீராக்கு அறிமுகம் ஆனது எஸ். எஸ் குரூப்  இல் சேர்ந்த போது ஹாய் சொல்லி தன்னை அறிமுக படுத்தியதோடு மட்டுமில்லாமல் மீராவின் காதில் இரத்தம் வரும் வரை ப்ளேடு போட்டு ஆபீசில் அருமை பெருமைகளை விளக்கோ விளக்குன்னு விம் போடாத குறையா சொல்லி முடித்து விட்டுத்தான் அவள் அவளுடைய வேலைய பார்க்க போனதே.
இன்று கூட தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் மீரா மறக்காமல் சௌமியா சொன்னதை அச்சு பிசகாமல் ஒப்பிப்பாள்.
அன்று தொடக்கம் ஆறு மாதமாக மூழ்காத பிரெண்ட்ஷிப் நம்ம பிரெண்ட்ஷிப்னு டிவெட்டர், பேஸ்புக் இலும் சௌமியாவின் அலப்பறை போய்கிட்டு தான் இருக்கு.
 “குட்மர்னிங் சார் இன்னைகு  சொளமி பர்த்டே அதான் சின்னதா செலப்ரேட் பண்ணுறோம்”
திடீரென்று ஆஜரான சார்மன் சரவணன் சௌதாகரை கண்டு திக்கித்தினறி சொன்ன மீராவை சிறு புன்னகையுடன்  பார்த்து விட்டு சொளமி பக்கம் திரும்பி
 “ஹப்பி பர்த்டே சொளமி. ஆபீஸ் ஆரம்பிக்க 20 மினிட்ஸ இருக்கு எக்ஸ்ரா டென் மினிட்ஸ எடுத்துகோங்க என்ஜோய்” தனது வேலை முடிந்தது என்ற பார்வையில் தனது அறைக்கு சென்றுவிட்டார் சரவணன்.
இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்களுக்கு இடமளிப்பவர் சரவணன் என்றாலும் ஏதும் சொல்லி விடுவாரோ என்று  அவர் பின்னால் வந்த மீரா சரவணன் சார் என்ன சொல்ல போறாரோ என்று கலங்க
 “என்ன மீரா ஏன் டென்சன் ஆகுற போய் என்ஜோய் பண்ணு”
“இல்ல சார் நீங்க எர்லியா வந்து இருக்கிங்க ஏதாவது முக்கியமான வர்க் இருக்கா?”
புன்னகை முகமாகவே “எல்லா வர்க்கயும் சீக்ரமா முடிச்சுடு சீக்ரமா வீட்டுக்கு வர சொன்னா லட்சு அதான்” வீட்டில் நடந்த சண்டையை இந்த பெண்ணிடம் கூறவா முடியும்? ஆதர்ஷ தம்பதியர்கள் தாங்கள்தான் என்பது போல் பேசி சமாளித்தார்.   
“ஓ..” என்ற பதிலோடு மீரா தனது இருக்கையில் அமர்ந்தாள். லட்சுமி சொன்னா நோ அபீல் என்று இந்த சில மாதங்களில்  மீரா அறிந்ததே.
ரெஸ்ட்ரூமிலிருந்து மீரா கொடுத்த சுடியை அணிந்துகொண்டு வந்தாள் சௌமியா.  
“வாவ் செமயா இருக்கு” அவளை கடக்கும் அனைவரும் புகழ.
மீராவைக் கட்டிக்கொண்டவள் “எப்படிடி எனக்கே! அளவெடுத்து தச்சா மாதிரி தைச்சிருக்காங்க? பிட்டிங் எல்லாம் க்ரெட்டா இருக்கு” தன்னையே! சுத்தி சுத்தி பார்க்க
“அதுதான் என் வது அத்தையோட ஸ்பெஷல். உன்ன பார்த்த உடனே! கண்ணாலேயே! அளவெடுத்துட்டாங்க”
“ஹே சூப்பர் டி. இனிமேல் உங்க அத்த போட்டிக்கு ஆடர்ஸ் குவியும் பாரேன்” சிலாகித்தாள். 
அந்த கால்டக்சியை அனுப்பி விட்டு வந்த சைதன்யன் யாருக்கோ கால் பண்ண வேகமாக வந்தவர் “என்ன சார் திடீரென்று சொல்லம கொள்ளாம வந்த இருக்கீங்க, இன்னும் ரெண்டு நாள்ல வரதா தானே சார் சொன்னாரு”
 “என்ன அங்கள் ஒன்னு அப்பாவ சார்னு சொல்லுங்க, இல்ல என்ன தம்பினு கூப்பிடுங்க கன்பியுஸ் ஆகுது. டுடேன்னு சொன்னது டூ டேஸ்சனு கேட்டு இருக்கும் வயசானலே இப்படி தான்”   தந்தையை வாரினான் சைதன்யன்.
பதிலுக்கு புன்னகைத்த நேசமணி சரவணன் சௌதாகரின் முதல் பி.எ. “சார் ஆபீஸ்ல தான் இருக்கார் லக்கேஜ் குடுங்க சார் கார்லயே வைச்சிடுறேன்”
நேசமணி சரவணன் சொதாகர் தொழிலில் கால் வைக்கும் போதே அவர் அப்பாவால் நியமிக்கப்பட்டவர். சரவணனின் வலதுகைனு கூட சொல்லலாம்.
மீரா உடன் சேர்ந்து முன்று பி.ஏக்கள். மீரா ஆபீஸ் வேலைகளை பார்ப்பாளேயானால் வெளிவேலைகளை பார்ப்பது சந்துரு நேசமணியின் மகன்.
  “அப்பா ஆபீஸ் ரூம மாத்தலயே! இன்னும்அதே ரூம் தானே” ஒரு தலை அசப்பாலயே அவர் பதில் சொல்ல சைதன்யன் லிப்டை நோக்கி சென்றான்
.
அவன் பார்வை முழுவதும் இந்த மூன்று வருடங்களில் கம்பனியில் நடந்துள்ள மாற்றங்களளை கவனிக்க தவறவில்லை. லிப்ட்டினுள் ஏறியத்திலிருந்து தந்தை தன்னைக் கண்டால் அடையப்போகும் ஆச்சரியத்தைக் கண்டு முகம் புன்னகையை தத்தெடுக்க, அவனுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சியை அவன் அறியவில்லை.
“யார் இவர் சொல்லம கொல்லாமல் சார் ரூம்கு போறது” தனக்குள் முணுமுணுத்தவாரே  “எக்ஸ்கியுஸ் மீ யார் நீங்க” சரவணன் அறைக்குள் அனுமதி இன்றி செல்ல முற்பட்ட அவனை தடுத்தாள் அவள்.
திரும்பி பார்த்த சைதன்யனுடைய வாய் தானாய் முணு முணுத்து “கியூடி பை”
யார்டா இந்த கியூடிப்பை?

Advertisement