Advertisement

அத்தியாயம் 18
சாம்பாவியும் கபிலரும் ஊருக்கு சென்ற விஷயமும், ஷக்தி தனியாக இருப்பதும் கௌஷிக்கு தெரியவில்லை. வெற்றியும், கதிர்வேலனும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை. சக்தியே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டனர்.
இரண்டு நாட்களாக கௌஷியும் வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே எங்கயும் செல்லவில்லை. கீழே காய்கறி வாங்க கூட செல்லவில்லை. இந்திராதான் ஒரு வாரத்துக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து வைத்திருந்தாளே. கீழே சென்றிருந்தால் ஒருவேளை சாம்பாவியும் கபிலரும் ஊருக்கு சென்றது தெரிந்திருக்கும். அது தெரியாமல் அவள் தனியாக, உண்டு, உறங்கி வீட்டு வேலையையையும், மெயிலில் வரும் ஆபீஸ் வேலையையையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஷக்தியை பற்றிய சிந்தனைகள் அப்போ, அப்போ தோன்றினாலும் தனக்கு பிடித்த பாடல்களை ஓட விட்டு தனிமையையும், சக்தியின் நினைவுகளையும் துரத்தியடிக்கலானாள். 
ஆனால் ஷக்தியின் நிலைமைதான் மோசமாக இருந்தது. என்னதான் வெற்றி ஷக்திக்கு கௌஷி தனியாக இருக்கின்றாள் பேசி பிரச்சினை தீர்த்துக்கொள் என்று கூறி இருந்தாலும் அவளிடம் கோபப்பட்டு வந்து விட்டேனே எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் போய் பேசுவது என்ற தயக்கம் சக்தியை ஆட்கொண்டிருந்தது.
ஆனால் இப்படியே இருந்து விட முடியாதே போய் பேசி பிரச்சினையை தீர்த்து தானே ஆக வேண்டும். என்ன செய்வது என்ற யோசனையிலையே இருக்க, அவனது அலுவலகத்தின் C.E.O ராஜவர்மன் அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்தார்.
ராஜவர்மன் அறுபதை தொட்டுக் கொண்டிருக்கும் உழைப்பால் உயர்ந்தவர். சக்தியின் காலேஜ் நண்பனின் அண்ணன் திருமணம் செய்திருப்பது ராஜவர்மனின் தம்பி மகளை. கௌஷிக்காக நண்பனை அணுகி ராஜவர்மனை சந்தித்து தனது பிரச்சினையை கூறி தனக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்பதை கூற, உண்மையை உள்ளபடியே கூறிய சக்தியை அவருக்கு பிடித்துத்தான் போனது.
கௌஷி வேலைக்கு சேர்ந்ததிலிருந்து அவளை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாள். ஆபீசில் அரசல்புரசலாக பேசப்படும் பேச்சுக்களும் அவருக்கு தெரியும்.
“பொண்டாட்டிய கரெக்ட் பண்ணுறேன்னு வேலைய கோட்ட விட்டுடாத யாங் மேன்” கிண்டல் செய்தவாறே சக்திக்கு வேலையையும் வழங்கியவர் இந்த நான்கு மாதங்களாக அவனது வேலையில் திருப்தியாகத்தான் இருந்தார்.
“என்ன இவர் நம்மக்கு போன் பண்ணி இருக்காரு? வேலைல ஏதாவது தப்பு பண்ணிட்டேனா” என்றவாறே அலைபேசியை இயக்கி காதில் வைத்தான் ஷக்தி.  
“ஹலோ சார்”
“என்ன சக்தி எப்படி இருக்க?” ராஜவர்மன் நலம் விசாரிக்க,
“நல்லா இருக்கிறேன் என்று சொல்லுற நிலைமைலையா நான் இருக்கேன்” மனதில் நினைத்தவன் அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் “ஏதாவது பிரச்சினையா சார்?” இவன் ஒரு கேள்வி கேட்டான்.
ராஜவர்மனும் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விசயத்துக்கு வந்தார். “ஆமாம் ஷக்தி. பிரச்சினைதான். பிரச்சினை கம்பனிக்கோ, உனக்கோ இல்ல. பிரச்சினை கௌசல்யாவுக்கு” என்றவர் அமைதியானார்.
ஷக்திக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. பரவும் நோயால் பல பேருக்கு வேலை பறிபோய் கொண்டிருக்க, கௌஷியை வேலையை விட்டு தூக்கி விட்டார்களோ?” என்றுதான் எண்ணினான். 
கௌஷிக்கு அவளுடைய வேலையில் எவ்வளவு பிடித்தம் என்று ஷக்தி நன்கு அறிவான். அது மட்டுமல்லாமல் அவளை வேலையை காரணம் காட்டித்தான் இங்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் அவள் வீட்டார்கள். அதுவும் சக்திக்காக. இந்த நேரத்தில் வேலை பறி போனால் ஷக்திக்கு இருக்கும் ஒரே கதவும் மூடப்படும்.
“என்ன சார் கௌஷிய வேலைய விட்டு தூக்க போறிங்களா?” ஷக்தி நேரடியாகவே கேட்டு விட்டான்.
“சக்தி கௌசல்யா என் ஸ்டாப் மட்டும் இல்ல. உன் மனைவியும் கூட அதனாலதான் இந்த பிரச்சினைய பத்தி உன் கூட டிஸ்கஸ் பண்ணலாம்னு நினச்சேன்”
“என்ன பிரச்சினை சார்?” ஷக்திக்கு ஒருகணம் ஒன்றும் புரியவில்லை.
“கௌசல்யா நேர்மையான பொண்ணு. என் ஆபீஸ்ல ஜோஇன் பண்ணதுல இருந்து பார்த்துகிட்டு வரேன். அவ மேல பணமோசடி கம்பளைண்ட் வந்திருக்கு” என்றார் ராஜவர்மன்.
“என்ன சார் சொல்லுறீங்க? கௌசல்யா பணம் மோசடி செஞ்சாளா? யாரு கம்பளைண்ட் கொடுத்திருக்காங்க? அதுவும் அவள் எக்கவுண்டன் இல்லையே பணம் எல்லாம் எக்கவுண்டன் பாலமுருகன் கிட்ட இல்ல கேட்கணும். இவ கிட்ட ரசீது மட்டும் தானே வரும் அத இவ கம்பியூட்டர்ல ஏத்துறை வேலைய தானே பாக்குறா?” ஆபீசில் யார் என்ன வேலை பார்க்கின்றார்கள் என்று சக்திக்கு தெரியாதா? ஷக்திக்கு கோபம் எகிறியது.
“நீ சொல்லுறது புரியுது. ஆனா கம்பனி ஆரம்பிச்ச நேரம் ரொம்ப குறைவான ஸ்டாப் தான் என் கூட இருந்தாங்க. அதுல கௌஷியும் ஒருத்தி. இந்த வேலைய பார்க்கணும் எங்குற வரையரையெல்லாம் கிடையாது” சக்திக்கு பிரச்சினையை புரிய வைக்க முயன்றார் ராஜவர்மன்.
ராஜவர்மனின் பேச்சில் குறுக்கிட்ட ஷக்தி “அப்போ கௌஷிய மட்டும் ஏன் சந்தேகப்படுறீங்க? மத்தவங்களையும் விசாரிக்கணுமில்ல”
ஷக்தியின் கோபம் அவருக்கு புரிந்தது. ஆனாலும் அவர் சொல்ல விளைவதை கேளாமல் கோபப்பட்டால் எப்படி?
“ஷக்தி முதல்ல நான் சொல்லுறத கேளு” அமைதியாக பேசிக்கொண்டிருந்தவர் குரலை உயர்த்த ஷக்தி அமைதியானான்.
“பண விஷயம் நான் யாரையும் நம்பி கொடுக்க மாட்டேன். எந்த விதமான காப்பீடாக இருந்தாலும் பணம் பாலமுருகன் தான் வாங்கி வைத்துக்கொள்வான். எந்த மாதிரியான காப்பீட்டை பெற வேண்டும்? எவ்வளவு பணம் மாதம் கட்ட வேண்டும் என்பதை பொதுவாக எல்லோரும் சொல்வார்கள். பார்ம் கூட பில் பண்ணி கொடுப்பதுண்டு”
“சரி சார். என்ன காம்ப்ளைன்ட் என்று கூட நீங்க இன்னும் சொல்லல. பணத்தை ரெண்டு பேர்தான் ஹாண்டில் பண்ணுனாங்கனும் சொல்லுறீங்க. பாலமுருகன் மேல் சந்தேகப்படாம கௌஷி மேல ஏன் சந்தேகப்படுறீங்க?” பொறுமையாக கேட்டான் ஷக்தி.
“நீ எங்க சொல்லவிட்ட?. மனிசன டென்சன் பண்ணுறதுலையே இருக்கியே” என்றவர் “ஒரு வயசானவர் அவரோட வீட்டை வித்து பையன வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பி இருக்காரு. அதுல கொஞ்சம் பணத்தை எங்க நிறுவனத்துல போடலாம்னு வந்திருக்காரு. மாசம் மாசம் கட்ட வேண்டிய பணத்தை ரெண்டு வருஷத்துக்கு ஒரேயடியா கட்டிட்டதா சொல்லுறாரு. ரசீது கூட இருக்கு. அதுல கௌசல்யா சைன் பண்ணி இருக்கா. ஆனா பாலமுருகன் பணம் வாங்கினதா எந்த ரெக்கோடும் இல்ல. பொதுவா வாகனங்களுக்குத்தான் இப்படி பணம் கொடுப்பாங்க, லைப் இன்சூரன்ஸ்க்கு இப்படி கட்ட மாட்டாங்க. மாசம் மாசம்தான் கட்டுவாங்க. அத பயன்படுத்திக்கிட்டுதான் கையாடல் பண்ணி இருக்கணும்” விளக்கமாக சொன்னார் ராஜவர்மன்.
“சார் நீங்க பேசுறத வச்சி பார்த்தாலே தெரியுது கௌஷி பணத்தை எடுத்திருப்பானு உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லனு. ஒன்னு பாலமுருகன் பொய் சொல்லணும், இல்ல அந்த பெரியவர் பொய் சொல்லணும்” என்றான் ஷக்தி.
“இல்ல ஷக்தி அந்த பெரியவர் எப்போ ஆபீஸ் வந்தார் என்ற திகதியை சொன்னப்போ நான் cctvவிய செக் பண்ணன் அவர் பொய் சொல்லல. அவர் குமுதா கிட்ட பேசி இருக்காரு. அவளும் அவருக்கு போர்ம் கொடுத்திருக்கா. ஆனா அவர் ஆபீஸ் வந்து பணம் கட்டளையாம். வீட்டுக்கு வந்து ஒரு பெண் காச வாங்கிட்டு எல்லா பார்மாலிட்டீஸையும் முடிச்சிட்டு ரசீதை கொடுத்துட்டு போனதா சொல்லுறாரு. இது எனக்கு மான பிரச்சினை. வெளிய தெரிஞ்சா கம்பனியை இழுத்து மூட வேண்டி இருக்கும். அதனால நான் அவருக்கு செட்டில் பண்ணிட்டேன். இல்லனா அவர் போலீசுக்கு போய் இருப்பாரு. ஆனா கலப்ரிட்ட நான் பிடிக்கணும். இனிமேல் இது மாதிரி நடக்கக் கூடாது இல்லையா? கௌசல்யா மேல இருக்குற களங்கமும் நீங்கும்”
அவர் சொல்லவிளைவது சக்திக்கு நன்கு புரிந்தது. யாரையும் ஏமாத்தி பிழைக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் அதை அவர் எவ்வளவோ வழிகளில் செய்திருப்பார். கம்பனியை முன்னேற்ற என்னெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆலோசிப்பவர் ஊழியர்களையும் குடும்பமாகத்தான் பார்த்தார். தனியார் நிறுவனம். கொரோனா பிரச்சினையால் வேலையை விட்டு நிறுத்தினால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்று சக்தியை அழைத்து கூட பேசி இருந்தார்.
அவர் பேச வேண்டிய அவசியமே இல்லை. வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக மெயில் மட்டும் அனுப்பி இருக்கலாம். அவர் பணத்தில் ஒருவன் கை வைத்திருக்கின்றான் என்றால் அவனை சும்மா விடுவதா? அதுவும் கௌஷி கையொப்பம் வேறு போட்டிருக்கிறாள் என்று சொல்லுகிறாரே. கம்பனி பெயர் கெட்டு விடக் கூடாதென்று பணத்தை கொடுத்து விட்டார். கௌஷியின் மீது விழுந்த பழியை நான் தான் போக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் ஷக்தி.
“ஆபீஸ்ல ஸ்டாப் எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியுமா?” கௌசிக்கு இந்த விஷயம் வேறு யார் மூலமாவது தெரியவந்தால் அவள் என்ன மாதிரியான மனநிலைக்கு தள்ளப்படுவாள் என்று அஞ்சினான் ஷக்தி.
“இல்ல. பாலமுருகன் வாய அடச்சீ வச்சிருக்கேன். கௌசல்யா கிட்ட பேசுறத விட, உன் கிட்ட சொன்னா நீ யோசிச்சு ஏதாவது பண்ணுவேன்னு தோணினதால உனக்கு போன் பண்ணேன்” என்றார் ராஜவர்மன்.
“ஓகே சார். நான் பாத்துக்கிறேன்” என்ற ஷக்தி உடனே கௌஷியை காண சென்றான்.
மின்தூக்கியில் எறியவனுக்கு “ஏன்டா ஏறினோம்” என்று பர்வதத்தை பார்த்த போது தோன்றியது.
“என்ன ஷக்தி அம்மாவும் அப்பாவும் ஊருக்கு போய்ட்டாங்க போல. சாப்பிட கௌஷி வீட்டுக்கு போறியா? ஆனா அவங்க எல்லாரும் கூட ஊருக்கு போய்ட்டாங்களே”
“கௌஷி இருக்கா” அவளை தானே பார்க்க போறான். ராஜவர்மன் சொன்னது மட்டும் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்க பட்டென்று சொல்லி விட்டான்.
“ஓஹ்.. அவ இருக்காளா? கீழ வரவே இல்ல. ஒருவேளை அவளும் போய் இருப்பான்னு இல்ல நினச்சேன். சரி வா அவளை ஒரு எட்டு பார்த்துட்டே போயிடுறேன்” பருவதமும் சக்தியோடு கௌஷியின் வீடு இருக்கும் தளத்தில் மின்தூக்கியிலிருந்து இறங்கிக் கொண்டாள்.
“ஐயோ இவங்க வேற வந்துட்டாங்களே கௌஷி கோபத்துல ஏதாவது பேசிட்டா அபார்ட்மெண்ட் பூரா தெரிஞ்சிடுமே” பதைபதைப்போடு பர்வதத்தை பார்க்க
“என்ன ஷக்தி பொண்டாட்டிய பார்க்க வெறுங்கையா வீசிக்கிட்டு வந்தோமேனு யோசிக்கிறியா? ஒன்னும் பிரச்சினை இல்ல. நாடு இருக்குற நிலைமை கௌஷிக்கு தெரியும்” என்றவாறே அழைப்பு மணியை அழுத்தி இருந்தாள் பருவதம் அத்த.
தன்னை பார்த்து கௌஷி எவ்வாறு நடந்துகொள்வாளோ என்ற அச்சம் ஷக்தியின் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட கதவை திறந்த கௌஷி பர்வதத்தை வரவேற்றவாறு சக்தியை கண்டு அதிர்ந்தாள்.
“உன் அத்தையும் மாமாவும் ஊருக்கு போனதுல  இருந்து ரெண்டு பேரும் கீழையே வர்ரதில்ல. என்ன ஹனிமூன் போனதா நினைப்பா?” என்றவாறே உள்ளே நுழைந்தாள் பர்வதம்.  
“இவன் எங்கே இங்கே வந்தான். தனியாக வந்தால் உள்ளே விடமாட்டேன் என்று அத்தையோடு வந்தானா? என்னது அத்தையும், மாமாவும் ஊருக்கு போனார்களா?” சக்தியை முறைக்க,
“ஷக்தி உன்ன பார்க்க வந்துகிட்டு இருந்தான். அவனை லிப்ட்டுள்ள நான் பார்கலைனா நீ இருக்கிறதே எனக்கு தெரியல பாரேன். நீயும் ஊருக்கு போய்ட்டதா நினைச்சுகிட்டு இருந்தேன்” என்று பருவதம் நடந்ததை கூறினாள்.
“என்ன பார்க்க வந்தானா? எதுக்கு?” கண்களாளேயே சக்தியிடம் வினவினாள் கௌஷி.
பருவத்தின் முன் அவன் வந்த காரணத்தை கூறத்தான் முடியுமா? ஷக்தி புன்னகைக்க,
“என்ன கௌஷி உன் புருஷன் பசில வந்திருக்கான் நீ பார்த்துகிட்டு நிக்கிற, எடுத்து வை முதல்ல சாப்பிடட்டும்” ஷக்தி சாப்பிடத்தான் வந்தான் என்று பர்வதம் நினைத்து பேசினாள். 
“இல்ல நான் அப்பொறம் சாப்பிடுறேன்” என்றான் ஷக்தி.
“இது நல்ல கதையா இருக்கே. தள்ளு” என்று பருவதமே சமயலறைக்குள் புகுந்து தட்டில் சாதத்தை போட்டுக்கொண்டு வந்தவள் குழம்பையும் ஊற்றி முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுங்க. ஷக்தி உன் பொண்டாட்டிக்கு ஊட்டி விடு. சரியா ரெண்டு பேருக்குத்தான் சமைச்சி இருக்கா. நீ கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலும் அவ பட்டினிதான்”
இரவைக்கும் சேர்த்து சாதம் வைத்திருந்தாள் கௌஷி. அவள் மட்டும்தானே. அதை அறியாமல் பர்வதம் சக்திக்கும் கௌஷிக்கும் மட்டும் அவள் சமைத்ததாக நினைத்து பேச, எதிர்த்து பேச முடியாமல் அமைதியாக இருந்தாள் கௌஷி.
பருவதம் நல்லவள் என்றாலும் அவளின் நடத்தையால் தன்னை வில்லி போல் காட்டிக் கொண்டதால் கௌஷி அவள் முன்னிலையில் தங்களது குடும்ப பிரச்சினையை பேசுவதையோ, தனக்கும் சக்திக்கும் பிரச்சினை இருப்பதாக காட்டிக் கொள்ளவோ விரும்பவில்லை. 
தான் சக்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்த பின் தங்களது பிரச்சினை மற்றவர்கள் தெரிந்துகொண்டால் என்ன? என்று கௌஷி யோசிக்கவே இல்லை. பர்வதம் பேசிக்கொண்டிருக்க, ஷக்தி ஊட்டி விட கௌஷி பல்லைக் கடித்தவாறு சாப்பிடலானாள்.
அவர்கள் சாப்பிட்ட பின் “நான் வந்து ரொம்ப நேரமாச்சு அப்போ நான் கிளம்புறேன். நீங்க பேசிகிட்டு இருங்கப்பா… பேசிகிட்டு மட்டும்தான் இருக்கணும். உங்கள சேர்த்து வைக்க இன்னும் நாளிருக்கு. கௌஷி தனியா இருக்க, ஏதாவது தேவைன்னா என்ன கூப்டு” சிரித்தவாறே வெளியேறினாள் பர்வதம்.
“நீயும் கிளம்புறியா…” கௌஷி கதவின் பக்கம் கைகாட்ட
“யப்பா ஊட்டி விடும் போது சாப்பிட்டுட்டு. இப்போ பேச்ச பாரு” என்றவன் சட்டமாக சோபாவில் அமர்ந்துகொண்டான்.
“இப்போ எதுக்கு இங்க வந்திருக்க? வீட்டுல யாரும் இல்லாததை தெரிஞ்சிக்கிட்டு வம்பு வளர்க்கலாம்னு வந்திருக்கியா?” சக்தியின் பேச்சு கௌஷியின் கோபத்தை தூண்டி இருந்தது.
“உன் கிட்ட வம்பிழுக்கனும்னா எல்லாரும் ஊருக்கு போன அன்னைக்கே வந்திருப்பேனே இன்னக்கி ஏன் வரணும்” ஷக்தி விடாது மனைவியை பார்க்க, கௌஷி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
வந்த வேலையை விட்டு விட்டு மல்லுக்கட்டிக் கொண்டு நின்றால் சண்டை பிடித்துக்கொண்டு வெளியேற நேரிடும் என்று சக்தியின் புத்தியில் உரைக்க, “ராஜவர்மன் சார் போன் பண்ணி இருந்தார்” என்று ஆரம்பித்து அவர் சொன்ன விஷயத்தை பக்குவமாக கௌஷிக்கு எடுத்துக் கூறினான்.
“சார் என்ன சந்தேகப் படுறாரா?” அதிர்ச்சி மாறாமல் கேட்டாள் கௌஷி.
இல்லை என்ற ஷக்தி அந்த பெரியவருக்கு பணம் கொடுத்து விட்டதையும், அவரிடம் இருந்த ரசீதில் கௌஷியின் கையொப்பம் இருப்பதாகவும் கூற,
“நான் யார் வீட்டுக்கும் போய் பணம் கலெக் பண்ணாதே இல்ல. அதுக்குன்னு வேற ஆட்கள் இருக்கும் பொழுது நான் ஏன் போகணும்” அது என் வேலையே இல்லையே என்பது போல் பேசினாள் கௌஷி.
“ஆகா ஆபீஸ் வரவங்க பணம் கொடுக்குறத கலெக்ட் பண்ணி இருக்க, அத கம்பியூட்டர்ல பதிவிடுற”
“ஆமா”
“அப்போ உன் சைன போட்டு யாரோ அந்த பெரியவரோட பணத்தை அடிச்சிருக்கணும். அதுவும் நம்ம ஆபீஸ்ல நமக்கு நல்ல தெரிஞ்ச ஒருத்தர்தான்” என்றான் ஷக்தி.
“யாரா இருக்கும்” யோசனையில் குழம்பினாள் கௌஷி.
“எனக்கு ஒருத்தன் மேல சந்தேகமாக இருக்கு ஆனா ஒரு பொண்ணு வந்துதான் ரசீது கொடுத்ததா அந்த பெரியவர் சொன்னதும் அவனை என் சந்தேக லிஸ்ட்டுல இருந்து தள்ளி வச்சேன். ஏன் அவன் ஒரு பொண்ண அனுப்பி பணத்தை அடிச்சிருக்க கூடாதுனு தோணுது. அந்த பெரியவர் வந்து ஆபீஸ்ல சொன்னாலும் அவன் மாட்ட மாட்டான் இல்ல. பக்காவா திட்டம் போட்டு இருக்கான்”
“யாரை சொல்லுறீங்க” ஒருமையில் பேசிக் கொண்டிருந்தவள் தன்னை அறியாமலையே மரியாதையாக பேசி இருந்தாள். 
“வேற யாரு அந்த பாலமுருகன் தான். அவனுக்குத்தான் பண விஷயம் எல்லாம் தெரியும்” சக்தியின் முகத்தில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.
“இங்கே ஊருக்கு வந்த சாம்பவிக்கு இந்திரா குடும்பத்தோடு வந்திருப்பதையும் பண்ணை வீட்டில் தங்கி இருப்பதையும் தெரிய வர, கணவனிடம் எகிறலானாள். 
“ஏங்க என்ன? ஏது? என்று கேக்க மாட்டீங்களா? அவளுங்க நம்ம பண்ண வீட்டுல வந்து தங்கி இருக்காளுங்க. அண்ணன் போனதும் அண்ணி அவங்க இஷ்டத்துக்கு ஆடுறாங்க”
“இப்போ நீ எதுக்கு கத்துற? நம்ம பையன்தான் பண்ண வீட்டுல அவன் பொண்டாடி கூட இருக்கான். நம்ம பண்ண வீடுன்னு சொல்லுறியே உங்க அப்பா உனக்கு எந்த சொத்தும் எழுதி வைக்கல. உன் அண்ணனுக்கும் எந்த சொத்தும் எழுதி வைக்கல. எல்லா சொத்ததையும் உனக்கும், உன் அண்ணனுக்கும் பொறக்க போற குழந்தைகளும், பேரபாசங்களும் பரம்பரபரம்பரையா அனுபவிக்க மட்டும்தான் உரிமை இருக்கு. அந்த வகைல பார்த்தா உன் பையன் வெற்றி தானே பண்ண வீட்டுல இருக்கான்” என்றார் கபிலர்.
ஆனால் சாம்பவி இலேசில் கைவிடுபவளா? “அவன் இருக்கான் சரி. அவளுங்க எதுக்கு இருக்காளுங்க?”
“இது என்ன கேள்வி? வெற்றி அவன் பொண்டாட்டி கூட இல்ல இருக்கணும். அவ வேற உடம்பு முடியாம இருக்கா. அதனால அவ அம்மாவும், அப்பாவும் அவ கூட இருக்காங்க. அது மட்டுமா. சக்தியும் நீயும் பண்ண கூத்தால கதிர்வேலன் சொந்த வீட்டை வித்துட்டு சென்னைக்கு போனார்” மனைவிக்கு குட்டு வைக்க, சாம்பவி கணவனை முறைத்தாள்.
“என் பையன இழுத்துட்டு ஓடினா நான் விட்டு விடுவேனா? அதான் அவளுங்கள ஓட விட்டேன். இனியும் என் பசங்க வாழ்க்கைல இருக்க விட மாட்டேன்” வன்மம் கொஞ்சம் குறையாது கர்ஜித்தாள் சாம்பவி.
கோபமே வராத கபிலருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சாம்பவியை கன்னம் கன்னமாக அறைந்தாலும் தனது கோபம் குறையும் என்று தோன்றவில்லை. அடித்தாலும் சாம்பவி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள். அவள் நினைத்ததைதான் செய்வாள். அது கபிலருக்கு அவள் முகத்தை பார்த்தாலே புரிந்தது.
அவள் பண்ணை வீட்டுக்கு சென்று இந்திராவையோ, சந்தியாவையோ அல்லது வெற்றியையோ எதுவும் பேசி விடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த கபிலர்
“என்ன பண்ணை வீட்டுக்கு சென்று சத்தம் போடலாம்னு கனவு காணுறியா?” சாம்பவியை ஏறிட்டு கேட்டிருந்தார். 
“கனவா? ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டிச்சாம். அப்படி இல்ல இருக்கு. அவளுங்க வந்து தாங்குவாழுங்கலாம். நான் அமைதியா பார்த்துகிட்டு இருக்கணுமா? போய் நாக்கை புடுங்கி தூக்குல தொங்குற மாதிரி நாலு வார்த்த கேட்டுட்டு வரேன்” புடவை முந்தியை இடுப்பில் சொருகிய சாம்பவி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
ஒரு நிமிஷம் நில்லு. இப்போ நீ போய் பேசி பிரச்சினை பண்ணினா… அப்படியே அங்கேயே தங்கிடு. இந்த வீட்டு வாசற் படிய மிதிக்கக் கூடாது. என் பொண்டாட்டியா, இந்த வீட்டு மருமகளா இருக்கணும்னா உள்ள போ. உன் அப்பாக்கு பொண்ணா மட்டும் இருந்தா போதும், உன் குடும்ப சொத்துதான் முக்கியம், அந்த இந்திரா மேல இருக்குற வன்மம் தான் முக்கியம்னா வெளிய போ. போனா வராத” என்ற கபிலர் தன முடிவில் உறுதியாக இருக்க,
 கணவனின் இந்த அவதாரத்தில் ஆடிப் போனாள் சாம்பவி.
இத்தனை வருடங்களில் தான் என்ன செய்தாலும் அமைதியாக போகும் கணவனா இது எனும் விதமாக இருந்தது கபிலரின் பேச்சு.
கபிலரின் பார்வையும், நின்றிருந்த தோரணையும், சாம்பவியின் உள்ளுக்குள் குளிர் பரவ, எதுவும் பேசாமல் சமயலறைக்குள் புகுந்துகொண்டாள்.
“என்ன ஆச்சு இந்த மனுசனுக்கு? வர வர ஓவரா அவளுங்களுக்கு சப்போர்ட் பண்ணுறாரு. இவருக்கு ஏதாச்சும் சூனியத்தை வச்சிருப்பாளுகளோ” என்றவாறே சக்தியை அழைத்தாள்.
கௌஷி மாட்டி இருக்கும் பிரச்சினையால் அவன் அலைபேசியை எடுக்கவே இல்லை. பலமுறை அழைத்தவள் அவனை திட்டியவாறே வேலைகளை பார்கலானாள். 
அன்னையிடமிருந்து ஏகப்பட்ட அழைப்புக்கள் வந்திருப்பதை கவனித்த ஷக்தி ஏதும் பிரச்சினையோ என்று சாம்பவிக்கு அழைக்க, ஒப்பாரி வைக்காத குறையாக கபிலர் தன்னை மிரட்டியதாக கூறினாள் அவள்.
“இருக்குற பிரச்சினை போதாததுக்கு இவங்க வேற…” சக்திக்கு சாம்பவி எதற்கு அடி போடுகிறாள் என்று தெள்ளத் தெளிவாக புரிய, “அம்மா நான் வேலையா இருக்கேன். என்ன டிஸ்டப் பண்ணாத, எதுவானாலும் வெற்றி கிட்ட பேசிக்க, அவன் ஊர்லதானே இருக்கான்” என்று அலைபேசியை அனைத்து விட்டான்.
“இவனுகள பெத்ததுக்கு ரெண்டு எரும மாட்ட மேச்சி இருக்கலாம். ஒருத்தன் என்னடான்னா பொண்டாட்டி பின்னாடி அலையிறான். இன்னொருத்தன் என்னடான்னா வேல வேலைனு வேலைய கட்டிக்கிட்டு அலையிறான்” தான் பெத்த மகன்கள் தன் பேச்சை கேட்கவில்லை என்றதும் வசை பாட ஆரம்பித்தாள் சாம்பவி. 
பண்ணை வீட்டில் இந்திரா சமைத்துக் கொண்டிருக்க, சந்த்யா ஏதாவது வேலை கொடுமா என்று வந்து நின்றாள்.
உடம்பு இன்னும் கொஞ்சம் தேரட்டும் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று மகளை ஓய்வெடுக்க அனுப்புவதில்லையே குறியாக இந்திரா இருக்க, “சரி கீரையை கொடு சுத்தம் செய்கிறேன்” என்று வாசல் படியில் அமர்ந்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள் சந்த்யா.
தொலைக்காட்ச்சியில் பாடல்கள் ஓடிக்கொண்டிருக்க, வெற்றியும் அங்குதான் அமர்ந்து கணனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
கதிர்வேலன் வெளியே சென்றிருந்தார். தந்தையின் மரணத்துக்கு பின் கணக்கு வழக்குகள் எதுவும் சரிவர பார்க்க முடியவில்லை என்று பிரணவ் தான் வந்து அவரை அழைத்து சென்றிருந்தான்.
வெற்றியும் கதிர்வேலனிடம் அவர் வீட்டை விற்றவரிடம், அதை மீண்டும் வாங்க முடியுமா? என்று பேசிப் பார்க்க கூறி இருந்தான். தனது அன்னையை பற்றி அவனுக்கு தெரியாதா? பிரச்சினை உருவாக்கி சண்டை பிடிப்பவலாயிர்றே. எந்த நேரம் பண்ணை வீட்டின் முன் வந்து நிப்பாளோ, கதிர்வேலனின் வீடென்றால் வரமாட்டாள். புது வீடு வாங்குவதோ, நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கு பதிலாக, அவருடைய பாரம்பரியமான வீட்டையே வாங்கிடலாம் என்றெண்ணினான் வெற்றி.
பாடல் ஒளிபரப்புவதை நிறுத்தி பிரேக்கிங் நியூஸாக செய்தி ஒளிபரப்பப்பட வெற்றி அதிர்ச்சியாக பாத்திருக்க, சந்த்யா கதறி அழ ஆரம்பித்தாள். 

Advertisement