Advertisement

இடம் 9
மிதுன் அனுப்பிய இடத்தை ஒரு வழியாக கண்டு பிடித்து அங்கு வந்து சேர்ந்து இருந்தான் தேவ் அவனது நண்பன் பிரதீப்புடன்.
“ஏய்!!!. கொஞ்சம் அவுட்டர் இல்ல டா” – பிரதீப்.
“ஆமா” என்ற தேவ்வும், இப்போது தான் ஆங்காங்கே முளைத்து கொண்டு இருந்த ஒன்று இரண்டு வீடுகளை பார்த்தான்.
“ஆனா சீக்கிரம் இங்கே இடம் வச்சி இருக்கவனும் பெரிய ஆளு ஆகிடுவான்டா. இட வேல்யு ஏறிடும்” என்று தொடங்க உள்ள ஒரு ஐடி கம்பெனி ப்ரான்ச் பற்றிய தகவல் உள்ள பலகையை காட்டினான் பிரதீப்.
மேலும் இந்த இடத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கார்மெண்ட்ஸ் உம் தொடங்க உள்ளது. ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஒரு அரசு ஆரம்ப நிலை பள்ளியும் தொடங்க உள்ளது.
தொழில் பகுதியாய் மாறினால் அங்கு உள்ள இடங்களுக்கு வேல்யு அதிகம் ஆகும் என்பது பொதுவான கருத்து.
“ஆமாண்டா பிரதி. இப்ப இங்க இடம் வாங்க எவனும் யோசிக்க மாட்டான்
ஆனா மூணு வருடம் முன்னாடியே இங்க இடம் வாங்கி இருக்காரு நம்ம க்ளைண்ட். தெரிஞ்சி வாங்கனாறா இல்ல சும்மா வாங்கி போடுவோம் நினைச்சி வாங்கி இப்படி ஆகிடுச்சா தெரியல” – தேவ்.
அதே நேரம் அவர்களை பார்த்து விட்ட மிதுன், “ஹாய்” என்று அவர்களை நோக்கி கை அசைக்க, அவர்களும் ஒரு தலையசைப்புடன் அவனை நோக்கி வந்தனர்.
“வந்து ரொம்ப நேரம் ஆச்சா??” – தேவ்.
“இல்ல இப்போ தான் நானும் வந்தேன்” – மிதுன்.
“அப்பறம் இது பிரதீப். என் ப்ரெண்ட். கம்பெனில இவனும் ஒரு பாட்னர்” என்று பிரதீப்பை மிதுனிடமும், “இது மிதுன் நம்மகிட்ட வீடு கட்ட சொல்லி கேட்டவரு” என்று மிதுனை பிரதீப்பிடமும் அறிமுக படுத்தினான்.
“ஹாய்” – மிதுன்.
“ஹலோ” – பிரதீப்.
“சரி வாங்க. இப்போ இடத்தை பாக்கலாம்” என்று உள்ளே சென்றனர்.
மிதுன் அவனுடைய இடத்தை காட்ட, பிரதீப் அந்த இடத்தையும் அதை சுற்றி உள்ள பகுதியையும் பார்வை இட்டு கொண்டிருந்தான்.
“வாசல் எந்த பக்கம் வைக்கனும் இல்ல… எந்த அறை எந்த பக்கம் வரணும் என்று எதுனா டிமன்ட்ஸ் இருக்கா??” என மிதுனிடம் கேட்டான் தேவ்.
மிதுனும் அவன் சொன்ன சில விசயங்களை தேவ்விடம் சொன்னான்.
“கிரவுண்ட் ப்ளோர் மட்டும் பர்ஸ்ட் கட்டனா போதும் தேவ். அதே போல மேலயும் இரண்டு ரூம் கட்டற மாறி இருக்கனும். ஆனா இப்போ இல்ல கொஞ்ச நாள் கழிச்சி” என்று மேலும் தனது கோரிக்கைகளை தேவ்விடம் கூறினான்.
எல்லாவற்றையும் கேட்டு கொண்ட தேவ் மற்றும் பிரதீப், மிதுனிடம் விடை பெற்று கொண்டு தங்களது இருப்பிடம் சென்றனர்.
அடுத்த நாள்…
பேஷன் பில்டர்ஸ் கம்பெனி இருக்கும் கட்டிடம்…
தேவ், பிரதீப், கௌதம் மற்றும் கீதா நால்வரும் சேர்ந்து ஆரம்பித்த சிறிய கம்பெனி தான் இது.
பொதுவாக தேவாமிர்தன் மற்றும் பிரதீப் தான் வீட்டிற்கு டிசைன் செய்வார்கள். ஒருவர் செய்த டிசைனை மற்றவர் பார்த்து சரி செய்வார்கள். இருவருக்கும் திருப்தி எனில் மட்டுமே அதை கஸ்டமர்களுக்கு காட்டுவார்கள்.
கீதா இன்டீரியர் டிசைன், மாடுலார் கிட்சன் போன்றவற்றை வடிவமைப்பாள்.  அது தகுந்தவாறு வீட்டிற்கான டிசைன் உள்ளதா என்பதையும் தேவ்விடம் ஒரு முறை செக் செய்து கொள்வாள்.
அடுத்து கௌதம் கொத்தனார் முதல் சித்தாள் வரை ஆட்களை எடுப்பது, எலக்ட்ரிசிட்டி, ப்ளம்பிங் முதலிய வேலைகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களது வரவு செலவுகளை பார்ப்பது போன்ற வேலைகளை செய்வான்.
வேக வேகமாக உள்ளே வந்த கௌதம், “ஹேய் தேவ், பிரதி, கீத்து… ஒரு கவர்மண்ட் ப்ராஜெக்ட் டென்டர்க்கு வந்து இருக்கு. டிரை பண்ணலாமா??” என்று கேட்டான்.
“அதெல்லாம் பெரிய பெரிய கம்பெனி இல்லனா அரசியல்வாதிங்க கம்பெனி இல்லனா அவங்க சொந்தகாரங்க கம்பெனி அப்படி தான்டா கிடைக்கும்” – பிரதி.
“ஆமாம்டா முக்காவாசி அவங்களே எடுத்துப்பாங்க. ஆனா ஒன்னு ரெண்டு வெளியே தான் எடுப்பாங்க. இது சின்ன ப்ராஜெக்ட் தான். சோ நாம்மளும் டிரை பண்ணலாம்” – கௌதம்.
“ஹ்ம்ம் பண்ணலாம் தான். நம்மளும் ஒன்னரை வருசமா பண்ணறோம். சின்ன சின்ன பில்டிங்கும் கட்டி இருக்குறோம் தான்” – கீதா.
“வேணா டிரை பண்ணி பாக்கலாம். சும்மா நமக்கு கரெக்ட்டா எஸ்டிமேட் பண்ண முடியுதா??!! என்னனு. நமக்கும் ஒரு எக்ஸ்பிரியண்ஸ் தான்” – தேவ்.
“எக்சேக்ட்லி… அதே தான்.” என்ற கௌதம், “மோர் ஓவர்… அந்த ப்ள்டிங் காட்டுற இடம் இப்ப தான் க்ரோத் ஆகிட்டு இருக்குது. சோ நம்ம நல்லா பண்ணுனா  அதை பாத்து அந்த நெம்பர் ப்ளேஸ் பிலடிங்ஸ்க்கு கூட நம்மள அப்ரோச் பண்ண சான்ஸஸ் இருக்கு” என்றான்.
“ஓகே… எல்லாம் கரெக்ட் தான். ஆனா என்னை பொருத்த வரைக்கும், நம்ம சும்மா டிரை பண்ணி தான் பாக்குறோம். இதுல ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி, அப்பறம் கிடைக்கலைனாலும் டிஸ்அப்பாய்ண்ட் ஆக கூடாது” என்றான் தேவ் அவர்களது கற்பனைகளை குறைக்க.
“எஸ் பாஸ். புரியுது” என்று கோரசாக சொல்ல அனைவரும் சிரித்தார்கள். எல்லோரும் அந்த கம்பெனிக்கு பாஸ் தான் என்றாலும் சூழ்நிலைக்கு தக்க யார் சரியாக தீர்வு சொல்வார்களோ, அவர்களை பாஸ் என்று மற்ற மூவர்களும் அழைப்பர். அழைத்து விட்டு தங்களுக்குள்ளே சிரித்தும் கொள்வர்.
இது அவர்களது கம்பெனி என்று அவர்கள் அடிக்கடி நியாபகம் படுத்தி கொள்வார்கள் போல… நம்மளே அடிச்சி விடுவோம்.
“சரி அப்போ நானும் கௌதமும் போய் அந்த இடம் எப்படி இருக்கனு பார்த்துட்டு வரோம்” என்று சொல்லிய பிரதீப் கௌதமுடன் வெளியே சென்றான்.
அதன் பின் கீதாவும், தேவ்வும் அவர்களது பணியில் இறங்கினர்.
இங்கே கீர்த்தி மற்றும் மிதுன் அலுவலகத்தில், கவியை பார்த்து பார்த்து சிரித்து கொண்டு இருந்தான் மிதுன். அவனுக்கு எதிரில் அமர்ந்து இருந்த கவியோ கையை கட்டி கொண்டு முகத்தை மறு புறம் திருப்பி கொண்டு சிரித்து கொண்டிருந்த மிதுனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல் இருந்தாள்… இயல்பாக காட்டி கொள்கிறாளாம்…
கீர்த்திக்கு மிதுன் சிரிப்பதை பார்த்து சிரிப்பு வந்தாலும், கவி வலியில் இருக்கும் போது சிரிக்க தோன்றவில்லை. கூட இருந்து பார்த்தவள் ஆயிற்றே…
அப்படி என்ன தான் நடந்தது கவிக்கு… நடக்கிறது தான் அவளுக்கு பிரச்சனையே!!!
“உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை??” சிரிப்புடனே மித்து.
“என்னது தேவை இல்லாத வேலையா இதனால ஏன் மானமே போச்சி. அப்பறம் எப்படி நீ தேவை இல்லாத வேலைனு சொல்லுவ??” சிறிது கோபமாக கவி.
இந்த வாக்கியத்தை கேட்டதும் கட்டுபடுத்தி கொண்டிருந்த கீர்த்திக்கும் சிரிப்பு வந்து விட்டது.
கவி அவளை முறைக்க, “சரி சரி சாரி அக்கா” என்று கூறியவாறு ஒருவாறு சிரிப்பை அடக்கி விட்டாள்.
“சரி வாங்க போலாம். போய் வேலைய பார்ப்போம்” என்ற கவி கீர்த்தியை அருகில் அழைத்து அவளை பற்றி கொண்டே மெதுவாக அனத்தி கொண்டே எழுந்தாள் நாற்காலியில் இருந்து.
அவள் அமைதியாக எழுந்து இருந்தால் கூட அவர்களுக்கு ஒன்றும் தோன்றி இருக்காது. ஆனால் நடக்கும் போது அமரும் போது என்று அவள் போடும் சத்தத்தமும் அதற்கு ஏற்ற அவளது நடையும் தான் மித்துவும் கீர்த்துவும் சிரித்து கொண்டிருக்க காரணம்.
இன்று கவியின் நிலமையோ, ‘அம்மே… அம்மே… அம்மம்மே…’ என்று தான் இருந்தது.
அது என்னவென்றால், கவி சனி அன்று அவர்களது தோழர்களுடன் வெளியே சென்றாள் அல்லவா!!!. அங்கே இருந்த ஒருத்தி ‘சங்கவி குண்டு ஆகிட்டா இல்ல’ என்று சொல்லி விட்டாள். அதை தொடர்ந்து, ‘ஆமா லாஸ்ட் இயர் பாக்கும் போது கூட இவ்வளவு குண்டா இல்ல’, ‘அப்போ எடுத்த டிரஸ் எல்லாம் இப்போ போட முடியுதா??. கண்டிப்பா பத்தாது’ என்று எல்லாம் சொல்லி கொண்டு இருந்தனர்.
அதனால் மிஷன் வெயிட் லாஸ்ஸை தொடங்கி விட்டாள் கவி. ஒரு யூ டியுப் சேனலை பார்த்து நேற்று ஞாயிறு காலை சில உடற்பயிற்சிகள் செய்து உள்ளாள். பெரிதாக ஒன்றும் இல்ல. சின்ன சின்ன உடற்பயிற்சி தான். அதன் பிறகு தான் நேற்று கீர்த்தியின் பிறந்த நாளை கொண்டாட வெளியே வந்தது. அப்பறம் இன்று காலையும் சில வெயிட் லாஸ் உடற்பயிற்சிகள் செய்தாள். அதன் பிறகு தான் சோதனையே!!!. அதாவது மதிய உணவிற்கு பின்…
அவளது தொடை, கால் பகுதி என எல்லாம் வலிக்க ஆரம்பித்து விட்டது. அவளால் உட்கார்ந்தால் எழு முடியவில்லை. எழுந்தால் உட்கார முடியவில்லை. எழுந்தால் நடக்க முடியவில்லை. அந்த அவதி தான்.
கவியின் இடத்திற்கு செல்லும் வழியிலே மிதுன், “சரி பண்ணறது தான் ஸ்டார்ட பண்ணிட்ட… விடாம கண்டினியூ பண்ணு. உடற்பயிற்சி செய்யிறதும் நல்லது தான். விடாம பண்ணனும். வலிக்குதுனு விட கூடாது. அப்பறம் எப்ப பண்ணாலும் வலிக்க தான் செய்யும்” என்றான்.
“அய்யோ… செம்ம வலி… தினமும் என்னால தாங்க முடியுமா தெர்ல” – கவி.
“ப்ரஸ்ட் பண்ணும் போது முத ஒரு மூணு நாலு நாள் அப்படி தான இருக்கும். அப்புறம் சரியா போய்டும்” – மிதுன்.
“ஹ்ம்ம்” – கவி.
“இரத்தம் கட்டி இருக்கும். சுடு தண்ணி கொஞ்சம் காலுல ஊத்து வலி குறையும்” – மிதுன்.
“ம்ம் சரி” – கவி.
“ஒரு நாலு அஞ்சு நாளுல சரியா போய்டும் கவி. இது எல்லாருக்கும் பொதுவா வரது தான். நம்ம உடம்புக்கு புதுசா எதுனா ஒரு வேலையை அதிகமா கொடுத்துட்டா அப்படி தான் பண்ணும். இதுக்கு பயந்துட்டு நீ நிறுத்திட கூடாது. வலி சரி ஆகட்டும்னு விட்டு திரும்ப பண்ணா அப்பயும் இப்படி தான் வலிக்கும். ஆனா அதை கண்டுக்காம நீ தான் தினமும் உடற்பயிற்சி பண்ணனும். அப்ப தான் வெயிட் குறைக்க முடியும்” என்று அவளை மோட்டிவேட் செய்தான் மிதுன்.
“எஸ் நான் பண்ணுறேன்” என்று தனது கையை மடக்கி முகத்தில் தீவிரத்தை கொண்டு வந்து சொன்னாள் கவி.
“வாவ் அதே தான்” என்று இன்னும் உற்சாகத்துடனே கூறினான் மிதுன்.
ஒருவழியாக மெதுவாக கவியை அவளது இடத்தில் அமர வைத்து விட்டு தங்களது வேலை செய்ய சென்றனர் கீர்த்தி மற்றும் மிதுன். அதன் பின் பணி முடித்து அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்தான் மிதுன்.
கவி, “அய்யோ திரும்ப படிக்கட்டா??!. நேரா கூட நடந்துடுவேன் போல இந்த படிக்கட்டுல இறங்குறதுக்குள்ள காலெல்லாம் நடுங்குது” என்று புலம்பி கொண்டே தனது உடலின் பாதி எடையை கீர்த்தி மீது செலுத்தி இறங்கினாள் கவி.
வீட்டிற்கு சென்றதும், முகம் கை கால் கழுவி விட்டு உடை மாற்றி கொண்டு கீர்த்தி கவிக்காக ஹீட்டர் ஆன் செய்து வைத்தாள். சிறிது நேரத்தில் கவியும் தனது கால்களில் சுடு தண்ணிர் ஊற்றி, வலி இருக்கும் இடங்களில் எல்லாம் தனது கை விரல்களை மடக்கி மெலிதாக குத்தி விட்டாள். அப்போது சிறிது வலி குறைந்து இருக்க, உறங்கி விட்டாள். பின் கீர்த்தி தான் இரவு உணவாக, வெங்காயம் கறிவேப்பிலை வர மிளகாய் என எண்ணெயில் தாளித்து மாவில் கொட்டி அதில் பணியாரம் செய்து இருந்தாள். இப்படி செய்தால் மாவு அதிகமாக புளித்து இருந்தாலும்  அது தெரியாது. மேலும் கீர்த்தி தெரியாத குழம்பு சட்னி போன்றவை செய்யும் அவசியமும் ஏற்படாது. இரவு உணவை முடித்து விட்டு இருவரும் உறங்கி விட்டனர்.
கொடுப்பாள்…

Advertisement