Advertisement

இடம் 6
மிதுன் தன் மனதில் தோன்றிய அவளை பற்றிய கேள்வியை கேட்டு விட்டான்.
“அப்பனா யாரும் ஆசிரமம் போய் உதவி செய்ய கூடாதா??” என்று கேட்டான்.
“சே.. சே… நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே!!. உண்மையிலே உதவி பண்ணறவங்க யாருக்கும் தெரியாம, அவங்க நல்லதுக்குனு நினைச்சி தான் பண்ணுவாங்க. வலது கை கொடுக்கறது இடது கைக்கு கூட தெரிய கூடாதுனு சொல்லுவாங்க.. கேள்விப்பட்டு இருக்கயா??. அப்படி தான் இருப்பாங்க” என்றவள் தொடர்ந்து, “இப்போ நீ ஒரு நாள் அங்க ஸ்பெஷல் சாப்பாடு போட ஆகுற காசை அவங்ககிட்ட கொடுத்துட்டா… அவங்க அதை வச்சி வயிறு வாடாம ஒரு அஞ்சு நாளைக்கு எப்பவும் சாப்பிடற உணவை சாப்பிடலாம். நான் அங்க குடுக்கறேன் நான் நல்லவ நீ பாருனு யாருக்கும் காட்ட தேவையில்ல. சில பேர் அந்த நிர்வாகி கிட்டயே காசை கொடுப்பாங்க. ஆனா அவங்க டெக்ஸ் எக்ஸ்ஷம்ஷன்க்காக (Tax Exemption) தான் கொடுப்பாங்க. அதுவும் வேற எங்கயும் இன்வஸ்ட் பண்ண முடியாதுங்கற பட்சத்தில் தான். மனசார கொடுக்கறவங்க சில பேர் தான். பல பேர் தன் ஆதாயத்துக்காக தான் பண்ணறாங்க” என்று தன் எண்ணங்களை சொன்னாள் கீர்த்தி.
“அப்படி இல்ல… ஒரு நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் நினைச்சி தான் சாப்பாடு போடுவாங்க. மத்தபடி யாரும் சீன் போடனும் நினைச்சி பண்றது இல்ல” என்றான் மிதுன் விடாமல்.
“ஏன்??. அவங்க மட்டும் தான் நல்ல சாப்பாடு சாப்பிடாம இருக்காங்களா??. நாட்டுல பாதி பேரு அன்னிக்கு சம்பாரிச்சி அன்னைக்கே இல்ல வார கணக்கா சம்பளம் வாங்கி சாப்பிடுறவங்க தான். அவங்களுக்கு பண்ணலாம்ல. அது பண்ணா தெரியாது யாருக்கும். பெருசா பேசவும் மாட்டாங்க” என்றாள் கீர்த்தி.
கீர்த்தி சொல்வது சரி என்று தோன்றினாலும், மற்றவர்களை அவ்வாறு சொல்வது அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அதற்காக அவளை வெறுக்க தான் அவனால் முடியாது. பிடிக்கவில்லை என்பதற்கும் வெறுக்கிறதுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. பிடிக்கலை என்பது அந்த ஒரு குறிப்பிட்ட விசயத்தை இங்கே குணத்தை… வெறுப்பதால் அவர்களது நல்ல செயல்/குணம் கூட தவறாய் தான் தோன்றும்.
அவளுக்காக என் கருத்தை நான் மாத்திக்கலை. ஏன் அம்மா சொல்லியே நான் கேக்காம தான் இருக்கேன் சில விசயங்களில். அதே போல் அது அவளது கருத்து. ஆனால் மற்றவர்களை தவறாய் சொல்வது தான் அவனுக்கு மனம் ஒப்பவில்லை.
“சரி. அதற்காக மத்தவங்களை தப்பு சொல்லறது சரியா??” – மிதுன்.
“ஆனால் எல்லாரும் அப்படி தான் இருக்காங்க. தான் நல்லவங்கனு காட்ட தான் நினைப்பாங்க. அடுத்தவங்க மனசை புரிஞ்சிக்காம. தன்னோட ஆதாயத்துக்கு மட்டும் தான் உதவி பண்ணறேன் வருவாங்க இல்ல இப்ப பண்ண உதவிகளை பின்னாடி சொல்லி காட்டி நம்மள ப்ளாக் மெயில் பண்ணுவாங்க. கார்னர் பண்ணுவாங்க” என்று எதையோ நினைத்து கொண்டே பேசுபவள் போல சொன்னாள் கீர்த்தி.
மிதுன் புரிந்து கொண்டான். அவளது குடும்பத்துடனான பிரச்சனைக்கும், அவளது இந்த கருத்துக்களுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்பதை. மேலும் தன்னையும் அப்படி தான் நினைக்கிறாளோ!!! என்றும் அவனுக்கு தோன்றியது. ஆனால் அதற்கு மேல் அதை பற்றி பேச விரும்பாமல், பேச்சை மாற்றினான்… காலங்கள் போக அவளே மனிதர்களை புரிந்து கொள்வாள் என்று. அவளது கருத்துக்கள் முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. அவளது எண்ணங்கள் சரி தான். ஆனால் மனிதர்களை தவறாய் எண்ணுவது தான் அவனுக்கு நெருடலாய் இருந்தது. இருந்தும் அவளை தனது கீர்க்குட்டியாய் எண்ணி பேசினான். இந்த அளவு பந்தம் அவளுடன் அவனுக்கு எப்படி வந்தது என்று தான் அவனுக்கு புரியவில்லை. சில நேரம் நம் உடன் பிறப்புகளிடமே நான் தான் பெரிய ஆள் என்ற அகங்காரம்(Ego) இருக்கும். ஆனால் இவளிடம் அவனுக்கு அப்படி தோன்றவில்லை என்பது தான் வியப்பு.
“சரி விடு மா. அப்ப நம்ம எங்க போலாம் இன்னிக்கு??” என்று மிதுன் பேச்சை மாற்ற, “ப்ச்… எனக்கு ஒன்னும் தோணலை. நீயே சொல்லு” என்றாள் கீர்த்தி.
“ஹம்ம்… எங்க போலாம்?? எங்க போலாம்??” என்று யோசித்து, “ஹான்… மூவி போலாம். அங்கயே சாப்பிட்டு அதாவது உன்னோட ட்ரீட் முடிச்சிட்டு, அப்பறம் கிப்ட் வாங்க போலாம். ஓகேவா??” என்று மிதுன் அவசரமாய் போட்ட ப்ளானை சொன்னான்.
“இந்த ட்ரீட் மேட்டர் அவசர ப்ளான் மாறி தெரில. சாவகாசமா பண்ண ப்ளான் மாறி தான் இருக்கு. ட்ரீட்னா கவிக்காவையும் கூட்டி வந்து இருக்கலாம்” என்று அவனை கலாய்த்து விட்டு, தனது எண்ணத்தையும் கூறினாள்.
“அவளாம் ஒன்னும் வர தேவை இல்லை. வந்தா என் கூட சண்ட போட்டுட்டு தான் இருப்பா. சரியான டெவில்” என்று அவளை திட்டும் மோடுக்கு போய் விட்டான்.
“அச்சோ!!. உங்க இரண்டு பேர் கூடவும் முடில என்னால” என்று சலித்து கொண்டே எழுந்தாள் கீர்த்தி.
அதன் பின் இருவரும் சேர்ந்து அங்கே ஒரு தியேட்டருக்கு மூவி பார்க்க சென்றனர்.
காலையிலே மதன், அமிருக்கு அழைத்து விட்டான். ஆனால் அந்த அமிர் தான் இன்னும் உறங்கி கொண்டு இருந்தான். அவன் எடுக்கவில்லை என்றவுடன் என்ன பண்ணலாம் என்று யோசித்து விட்டு, ‘சரி அத்தை வீட்டுக்கு போகலாம். அங்கயே மார்னிங் சாப்பாடு சாப்பிட்டு விட்டு வெளியே போகலாம்’ என்று எண்ணி அங்கே கிளம்பி விட்டான்.
மதன், “அம்மா நான் அத்தை வீட்டுக்கு போய்ட்டு… அங்க இருந்து அமிர் கூட வெளிய போக போறேன்” என்று சொன்னான்.
“டேய்… நேத்து நான் கேட்டது… சரி மா நான் யோசிச்சிட்டு சொல்லறேன்” என்று சொன்னவன் வெளியே கிளம்பினான்.
அந்த நேரம் மதனின் பக்கத்து வீட்டு காரனான மிதுனின் நண்பனும் வெளியே கிளம்ப அவனை பார்த்த மதன், “டேய் மச்சா… தேவ் நம்பர உன் கொலிக் கிட்ட கொடுத்துடுடா… நான் அவன் கிட்ட சொல்லி வைக்கிறேன். அப்படியே அவரு நம்பரும் எனக்கு அனுப்பி விடுடா” என்று சொன்னான்.
“சரி மச்சா. நான் அனுப்பறேன்” என்று அவன் சொல்ல, இருவரும் அவரவர் வழியில் கிளம்பினர்.
ஆக மொத்தம் யாரும் லீவ் நாள் வீட்டுல இருக்க மாட்டிங்க… சரி தான்.
மதன் தனது அத்தை வீட்டிற்குள் நுழைய, அம்பிகா அங்கே ஹாலில் அமர்ந்து சமைப்பதற்கு தேவையான ஆயத்தங்கள் செய்து கொண்டு இருந்தார். அவர் வெங்காயம் தொளித்து கொண்டு இருக்க, அமிரும் அவர் அருகே அமர்ந்து பூண்டு தொளித்து கொண்டு இருந்தான்.
பெண் பிள்ளைகள் இல்லாத முக்கால் வாசி வீட்டில் ஆண் பிள்ளைகள் தான் அவர்கள் அம்மாவுக்கு சமையலில் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள். அப்படிப்பட்ட ஆண் பிள்ளைகளில் நம் நாயகனும் ஒருவன். இது சின்ன விசயமாய் தெரியலாம். ஆனால் இதன் பின் எவ்வளவு பெரிய விளக்கங்கள் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல் அவர்கள் வீட்டிலும் நீ இந்த வேலை எல்லாம் செய்ய கூடாது… நீ ஆண் பிள்ளை.. நீ அப்படி.. நீ இப்படி… என்று கூறி அவன் மனதில் ஒரு வித அகங்காரத்தை/கர்வத்தை ஏற்றி வைக்கவில்லை. வேலை என்பது எல்லோருக்கும் பொது. மத்தவங்க மேல இல்லைனாலும், நம்ம குடும்பத்துல உள்ளவங்க கஷ்டம் புரிஞ்சிக்கிட்டு அவங்களுக்கு உதவி செய்யனும் என்று தான் சொல்லி கொடுத்து உள்ளனர். நம் வீட்டில் இருந்து தான் சமூகம் உருவாகிறது. இந்த சின்ன சின்ன விசயங்கள் சமூகத்தில் பெரிய பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. அதன்படி தான் அமிரும் வளர்ந்து நிற்கிறான்.
“என்ன அத்தை… அம்மாவும் பையனும் சேர்ந்து சமையல் செய்ய போறீங்களா??. கரெக்ட் தான் அமிர்… மாமா வந்து இருக்கேன்ல. அத்தானுக்கு பிடிச்ச மாறி சமைச்சி போடனும். சரியா??” என்று கிண்டலாக கேட்டு கொண்டே அவன் தலையை கலைத்து விட்டான் மதன்.
“வாடா மதன்” – அம்பிகா.
“வாடா… ரசத்துல விசத்த கலந்து உனக்கு ஊத்தறேன்” என்று கூறி கொண்டே அவன் கையை தனது தலையில் இருந்து தட்டி விட்டான் அமிர்.
அதை கேட்டு கொண்டே அங்க அமர்ந்த மதன், அவனும் சில பூண்டை எடுத்து தொளித்து கொண்டே, “சரிடா இன்னிக்கு வெளிய போலாம் சொன்னனே. அதுக்கு போன் பண்ணறேன்னு சொன்னனே நினைப்பு இருக்கா??” என்று கேட்டான்.
“ஏன் இல்ல?? அதெல்லாம் எனக்கு நல்லாவே நினைப்பு இருக்கு. உனக்கு தான் நினைப்பு இல்ல. எங்க நீ தான் போனே பண்ணல” என்று பதிலுக்கு சொல்லி கொண்டே பூண்டு தோலை தூக்கி அவன் மேல் போட்டான் அமிர்.
“உன் போன எங்க வச்சி இருக்க??. அத எடுத்து பாரு… அப்போ தெரியும் நான் போன் பண்ணனா இல்லையானு” என்று வெங்காய தோலை எடுத்து அவன் மேல் எறிந்தான் மதன்.
“போதும் டா பசங்களா. இப்படியே வீடு பூராம் எடுத்து இப்படி எறிஞ்சிகிட்டு இருந்தீங்கனா… நீங்க தான் வீடு முழுக்க கூட்டி விடனும்” என்று அவர்களை எச்சரித்தார் அம்பிகா.
“ச்சே… நாங்க ஏன் எடுத்து எறிய போறோம்” என்று இருவரும் அவர்கள் அருகில் கீழே விழுந்து கிடந்த குப்பையை எடுத்து ஏற்கனவே இருந்த தோல் குப்பைகளுடன் சேர்த்து வைத்தனர். அதன் பின், “மா நா போய் குளிச்சிட்டு வந்துடறேன்” என்று விட்டு தனது அறைக்கு ஓடினான் அமிர்… எங்கே இருந்தால் உண்மையாகவே கூட்ட சொல்லி விடுவார்களோ என்று.
அவனுக்கு வீடு கூட்டுவது கூட பிரச்சனை இல்லை. ஆனால் வந்து பார்த்து விட்டு டேபிள் அடியில குப்பை இருக்கு. செல்ப் அடியில குப்பை இருக்கு. டீபாய் நகர்த்தி கூட்டனும் என்று சொல்லுவார் அதனால் தான் ஓடி விட்டான்.
“அத்தை நானும் அவன் ரூமுக்கு போறேன்” – மதன்.
“நீ ஏன்டா போற??. அவன குளிப்பாட்டி விட போறயா??” என்று சிரித்து கொண்டே கேட்டார் அம்பிகா.
மதன் என்ன சொல்வது என்று தெரியாமல் திரு திருவென முழிக்க, “சரி சரி ரொம்ப முழிக்காத… இந்த குப்பையை மட்டும் எடுத்து குப்பை தொட்டியில் போட்டுட்டு போ. முக்கா மணி நேரத்தில் சாப்பாடு ஆகிடும். சாப்பிட்டு எங்கனாலும் வெளியே போங்க” என்று எல்லாம் எடுத்து கொண்டு சமையலறை உள்ளே சென்றார் அம்பிகா.
அந்த குப்பை எல்லாம் எடுத்து ஒரு ஓரத்தில் இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு, “போட்டுட்டேன் த்த” என்று அவரிடமும் சொல்லி விட்டு அமிர் அறைக்கு சென்றான் மதன்.
அமிர் குளியல் அறையில் குளித்து கொண்டு இருக்க, மதன் அமிரின் மெத்தையில் படுத்து கொண்டு இருந்தான் மதன்.
குளித்து விட்டு வெளியே வந்த அமிர், அங்கே இருந்த மதனை பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல், இன்று வெளியே செல்வதற்கு ஏற்ற உடையை அணிந்தான்.
அம்பிகாவும் சமைத்து முடிக்க, மூவரும் சேர்ந்து வெளியே எடுத்து வந்து வைத்தனர். நந்தாவும் எழுந்து வரை நால்வரும் காலை உணவை முடித்து விட்டு அந்த நாளை தொடங்கினர்.
“சரி மா. போயிட்டு வரோம் பா” என்று அமிரும், “போய்ட்டு வரோம் மாமா.. அத்த” என்று மதனும் கூறி விட்டு, மதனின் இரு சக்கர வாகனத்திலே இருவரும் கிளம்பினர்…. கீர்த்தி, மிதுன் சென்றுள்ள திரையரங்குக்கே…
கொடுப்பாள்…

Advertisement