Advertisement

இடம் 3
அலங்கார பெயர் பலகையை பார்த்து அப்படியே நின்று விட்ட கீர்த்தி தோளை குழுக்கி, “என்ன இங்கயே நின்னுட்ட கீர்த்து… வா உள்ளே போலாம்” என்று சொன்னாள் சங்கவி.
அதில் சுயநினைவு வந்த கீர்த்தி, தற்போது அந்த பெயர் பலகையை பார்க்க அங்கே அவளது தோழி சிந்துவின் பெயரும், அவளது துணையின் பெயரும் இருந்தது.
“இதோக்கா போலாம்” என்று கூறிய கீர்த்தி அவருடன் இணைந்து நடந்தாள்.
அங்கே நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவனுக்கு ஒரு வித ஒட்டாத தன்மையை தந்தது. தனது வாழ்வின் மிக பெரிய மாற்றத்திற்கு இவை தான் காரணம் என்று.
ஒரு காலத்தில் திருமணம் என்பதை பற்றிய பல கற்பனைகள் அவளுக்கு இருந்தது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
மீண்டும் சங்கவியாலே நிகழ் காலம் வந்தாள் கீர்த்தி.
“வா கீர்த்து. கிப்ட் கொடுத்துட்டு வரலாம்” என்று சொல்லி அவளை மண மேடைக்கு அழைத்து சென்றாள் சங்கவி.
அவர்கள் பாதி வழி நடந்து செல்லும் போதே, சிந்து அவர்களை பார்த்து கையசைத்தாள் விரிந்த புன்னகையுடன். பதிலுக்கு கையசைத்த கீர்த்தி, சங்கவி மற்றும் நண்பர்கள் மேடையை நோக்கி முன்னேறினர்.
“காங்கிராட்ஸ்…”
“ஹேப்பி மேரிட் லைப்”
“ஹேப்பி மேரிட் லைப் அண்ணா”
“ஹார்ட்டி விஷ்ஸஸ் பார் யுவர் ஃப்யூச்சர்” என்று பல வகையான வாழ்த்துக்களை அவர்கள் இருவருக்கும் சொல்லி விட்டு, அவர்களுக்காக தாங்கள் தேர்ந்தெடுத்த பரிசு பொருளையும் அவர்களிடம் சேர்ந்து விட்டனர்.
பின்னர் இங்கே வந்ததற்கு அடையாளமாக, ஒரு புகைப்படத்தையும் எடுத்து கொண்டு உணவு பரிமாறும் பந்தியை நோக்கி சென்றனர்.
இந்த ஒன்று மட்டும் எப்போதும் புரிவதில்லை. கல்யாணத்தில் போடும் உணவின் சுவை மட்டும் வித்தியாசமாக இருப்பது ஏன் என்பது தான்.
அந்த உணவை சிலாகித்து கீர்த்தியிடம் சொன்னவாறே உண்டு கொண்டு இருந்தாள் சங்கவி.
“இந்த பூசணி அல்வா நல்லா இருக்குல்ல” – சங்கவி
“கவிக்கா இந்தாங்க. எனக்கு இனிப்பு புடிக்காது” என்று அவளின் இலையில் இருந்து மஞ்சள் நிற அந்த பூசணி அல்வாவை எடுத்து கவிக்கா என அழைக்கப்படும் சங்கவியின் இலையில் வைத்தாள் கீர்த்தி.
மேலும் இது நல்லா இருக்கு சாப்பிடு அது நல்லா இருக்கு சாப்பிடு என்று தன் தோழமைகள் எல்லாரிடமும் சொல்லி கொண்டே சாப்பிட்டாள் சங்கவி.
அதன் பின் மீண்டும் உள்ளே சென்று மணமேடையை பார்த்தவாறே அமர்ந்து கொண்டு தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டு இருந்தனர்.
சிறிது நேர அரட்டைக்கு பின் மீண்டும் கேப் ஒன்றை பதிவு செய்து அவரவர் இல்லம் அடைந்தனர்.
வீட்டிற்கு வந்து உறக்கத்திற்கு தயாராகி தனது படுக்கையில் படுத்த கீர்த்திக்கு ஏதேதோ எண்ணங்கள் வர, அதை தடுக்கவில்லை அவள். அதை தொடர்ந்து தனது அலைபேசியை எடுத்து பார்த்தாள்.
கால் ஹிஸ்டரியில்(Call history) சங்கவி, மிதுன், மிதுனின் அம்மாவின் அழைப்பை தவிர வேறொன்றும் இல்லை. ஒரு வருடத்திற்கு முன் வரை வாய் ஓயாமல் பேசி கொண்டு இருந்தவள் தான் இப்போது அமைதியாய் மாறி விட்டாள்.
அந்த எண்ணங்களின் ஊடே அப்படியே உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மேலே தான் எழுந்தாள் கீர்த்தி. சங்கவியும் அவ்வாறே… விடுமுறை நாள் என்றால் காலை வேளையை பார்ப்பது அரிதிலும் அரிது அல்லவா!!.
எழுந்து பல் துலக்கி விட்டு தனது அறையில் இருந்து வெளியே வந்த கீர்த்தி, சமையலறை சென்று டீ போட்டு கொண்டு வந்தாள். அப்போது தான் சங்கவியும் தனது அறையில் இருந்து வெளியே வந்தாள். ஆனால் குளித்து முடித்து சுத்த பத்தமாக…
“என்ன கவிக்கா??. இன்னிக்கு இவ்ளோ சீக்கிரம் ரெடி ஆகி இருக்கீங்க??. அதுவும் நீட்டான டிரஸ்ஸா??” என்று டீயை அருந்தி கொண்டே கேட்டவள், அப்படியே அவருக்காக எடுத்து வைத்து இருந்த டீயையும் கொடுத்தாள்.
“ஆமாடா கீர்த்தி. ப்ரெண்ட்ஸ் வெளிய போலாமா கேட்டாங்க… நானும் சும்மா தான இருக்கேன்னு வரேன் சொல்லிட்டேன்” என்று சொல்லி கொண்டே டீயை பருகினாள் கவி.
“அப்பறம் உனக்கு காய் கட் பண்ணி வச்சி இருக்கேன். தயிர் இருக்கு. அரிசி ஊற வச்சி இருக்கேன். சமைச்சி சாப்பிட்டுக்கோ” என்று சொல்லி கொண்டே தனது ஹேண்ட் பேக்கில் இருந்து ஏடிஎம் கார்ட்டை எடுத்து அவளது அலமாரியில் வைத்து விட்டு, கொஞ்சம் பணமும் ஐடி ப்ரூப்க்கு ஒரு அரசாங்க அடையாள அட்டையும் எடுத்து பையில் வைத்தாள்.
அடையாள அட்டை ஏதாவது ஒரு அசாதாரண சூழ்நிலையில் தேவைப்படலாம் என்று கீர்த்தி தான் எப்போதும் கூறுவாள். அதனால் அதையும் எடுத்து வைத்து கொண்டாள் சங்கவி.
“கீர்த்து மா… சேஞ்ச் வச்சி இருக்கயா??” சங்கவி கேட்க, தனது பையில் இருந்து, சில்லறை காசுகளை எடுத்து கொடுத்தாள் கீர்த்தி.
லோக்கல் ட்ரெயின் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்ய சில்லறை வைத்து கொள்வது நமக்கும் மற்றவருக்கும் பயனுள்ளது என்பதால்.
“கவிக்கா… ஹேர்ஸ்டைல் இந்த டிரஸ்க்கு மேட்ச் ஆகலகா… வாங்க நான் பண்ணி விடறேன்” என்று அவளுக்கு தலையலங்காரம் செய்தாள் கீர்த்தி.
தனது தலையை அவளிடம் கொடுத்த சங்கவி வாட்ஸ்-அப்பில் தனது தோழர்களுக்கு எப்போது அவர்கள் சந்திக்க நினைத்த இடத்தை அடைவாள் என்று குத்து மதிப்பாக ஒரு நேரத்தை குறிப்பிட்டாள்.  தொடர்ந்து கீர்த்தியிடம், “கீர்த்தி மா… வீடு க்ளீன் பண்ணறவங்க வந்தா… எல்லாம் பண்ண சொல்லிடுமா… என் ரூம் நான் வந்து க்ளீன் பண்ணிக்கறேன்” என்று கூறினாள்.
அடுத்து தனது அறையில் இருந்து வெளியே வந்த கவி, தனது காலணியை அணிந்து கொண்டே, “ஹான் கீர்த்தி… ஈவ்னிங் சீக்கிரமா வர மாறி இருந்தா கால் பண்ணறேன்… எதுவும் வேணும்னா சொல்லு வாங்கிட்டு வரேன்” என்றாள்.
“சரி” என்று கீர்த்தி தலை ஆட்ட, அவளுக்கு ஒரு பாய் சொல்லி விட்டு கிளம்பினாள் கவி.
காலேஜ் படிக்கும் போதே ஊர் சுத்தின நாம்ம இப்போ இப்படி இருக்கோம்!!. ஏன்?? என்று தனது மனதுக்குள் கேட்டு கொண்டே, எல்லாத்துக்கும் நம்ம எண்ணம் சூழ்நிலை மனசு தான் காரணம் போல என்று ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டே மீண்டும் அந்த நாற்காலியில் அமர்ந்து, தொலைகாட்சியை ஆன் செய்தாள்.
‘டக் டக்’ என்று கதவை யாரோ தட்ட, திறந்தாள் கீர்த்தி.
மீண்டும் கவி தான்.
“தண்ணி மறந்துட்டு போய்டேன்” என்று ஏற்கனவே நிரப்பி வைத்து இருந்த ஒரு அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை எடுத்து தனது ஹேண்ட் பேக்கில் வைத்து கொண்டு பாய் சொல்லி விட்டு ஓடினாள் சங்கவி.
சிரிப்புடன் உள்ளே வந்து, தனது வேலையை தொடர்ந்தாள் கீர்த்தி. அது தான் டிவி பார்ப்பது.
சில நிமிடங்கள் கூட அவளால் டிவி பார்க்க முடியவில்லை. என்ன பார்ப்பது என்றே அவளுக்கு தெரியவில்லை. தினமும் அல்லது வார விடுமுறைகள் என்று பார்ப்பவர்கள் என்றால் இந்த நேரம் இதை பார்க்கலாம் என்று தெரியும். நாமே ஆடிக்கு ஒரு வாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டி என்று பார்த்தால் எப்படி தெரியும்.
சரி என்று சமைச்சி சாப்பிடவாது செய்யலாம் என்று சமையலறை சென்றாள்.
சரியாக அந்த நேரம் மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. யாரென்று சென்று பார்த்தாள். வீடு க்ளீன் பண்ணும் அக்கா தான்.
அவரை உள்ளே விட்டு விட்டு அவள் சமைக்க சென்றாள்.
அவர்களின் அறையை தவிர, வீடு முழுவதும் கூட்டி, மருந்து தண்ணீர் விட்டு துடைத்து விட்டாள்.
அதற்குள் கீர்த்தியும் சாதம் வைத்து விட்டு, பொரியல் செய்து விட்டாள்.
அட்டெச்ட்டு பாத்ரூம் என்பதால், அவர் பாத்ரூமை க்ளீன் செய்யும் போது கீர்த்தியும் அந்த அறையில் இருந்தாள்.
அவர் சென்ற உடன் குளித்து விட்டு, உணவை எடுத்து வைத்து டிவி ஏதோ ஒரு சேனலை வைத்து அதை பார்த்து கொண்டே உண்டு முடித்தாள்.
தனியாக தங்கி இருப்பவர்கள் எல்லாம் மினி குடும்ப தலைவி/தலைவன் என்றே சொல்லி கொள்ளலாம். அவர்கள் தங்கி இருக்கும் வீட்டை பராமரிப்பது முதல் தேவையான பொருட்கள் வாங்குவது வரை அவர்கள் தான் செய்ய வேண்டும் அல்லவா??.
மாதம் மாதம் கேஸ் புக் செய்வது, கரண்ட்  பில் கட்டுவது, தண்ணீர் கேன் வாங்குவது, வாடகை செலுத்துவது, சமைப்பது, சமையல் பொருட்கள் வாங்குவது என யோசித்து யோசித்து சிக்கனமாக செயல்பட வேண்டும்…
சமைக்க தெரியாதவர்கள் கூட சமைக்க கற்று கொள்வார்கள். நம்ம கீர்த்தி போல… தற்போதும் அவளுக்கு சமைக்க தெரிந்தது, சாதம், தோசை, இட்லி, பணியாரம், பொரியல் போன்ற குறைவான பொருட்களை பயன்படுத்தி செய்யும் உணவு வகைகளே!!!. நிறைய பொருட்களை பயன்படுத்தும் பருப்பு குழப்பு, ரசம், பிரியாணி போன்ற பிரதான உணவுகள் தெரியாது. ஆனால் தனியாய் வாழ தேவையான உணவுகள் செய்ய தெரியும்.
######
மிதுன் தனது தோழனின் வீட்டிற்கு சென்று கொண்டு இருநதான்.
அவனது வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டை பாரத்தான். முன்பெல்லாம் அந்த வீட்டை பார்க்கும் போது பெரிதாய் எடுத்து கொள்ள மாட்டான். ஆனால் இப்போது அதை பார்க்கும் போது அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
மிதுன் அவனது தோழனிடம், “இந்த வீட்டை யார் கட்டினா மச்சா??” என்று கேட்டான் சம்பர்தாய விசாரிப்புகளுக்கு பிறகு.
“அது அந்த வீட்டிலிருக்கறவங்க தங்கச்சி பையன் தான் ப்ளான் போட்டு கொடுத்ததாம். இரண்டு வருடத்துக்கு முன்னாடி தான் கட்டினாங்க. இந்த வீட்டை கட்டும் போது அந்த பையன் எம் ஈ கடைசி வருடம் படித்து கொண்டு இருந்தானாம். இப்போ ஒரு சின்ன ஏஜென்சி இல்ல கம்பெனி மாறி வச்சி வீடுங்க, சின்ன சின்ன கடைங்க எல்லாம் கட்டி கொடுக்கறான்” என்று கூறினான் அந்த தோழன்.
“ஓஓஓ… சரி அந்த பையன் பேரு என்ன??. எங்க கம்பெனி வச்சி இருக்கான்??. நானும் அவன்ட்டயே கேட்டு பாக்கலாம் நினைக்கறேன்” என்று யோசனையுடனே கூறினான் மிதுன்.
“பேசன் பில்டர்ஸ்(Passion builders). அந்த பையன் பேரு தேவ். முழு பேரு தேவாமிர்தன்” என்று மிதுனுக்கு தேவையான தகவல்களை கூறினான் அவன்.
இந்த தேவாமிர்தன் தான் நம் கதையின் நாயகன். இவனை அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம்.
கொடுப்பாள்

Advertisement