Advertisement

இடம் 2
வீட்டிற்கு வந்ததும் கீர்த்தி ப்ரெஸ் ஆகி விட்டு, மிதுனின் அம்மாவிற்கு அழைத்தாள்.
தனது வீட்டுடன் தான் அவள் பேசுவதில்லை. ஆனால் மிதுனின் வீட்டாரிடம் அவள் அடிக்கடி பேசுவாள். அதும் மிதுனின் அக்கா மகளுக்கு அவள் ஃபேவரேட்(Favriote) கூட.
“ஹலோ… அம்மா… எப்படி இருக்கீங்க??” – கீர்த்தி.
“நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க??” – மிதுன் அம்மா.
“நல்லா இருக்கேன் மா. அப்பா, அக்கா அப்பறம் எல்லாரும் நல்லா இருக்காங்களா??” – கீர்த்தி.
“எல்லாம் நல்லா இருக்காங்க. நீ தான் ரொம்ப நாளா போன் பண்ணல.” – மிதுன் அம்மா.
போன் பண்ணல என்று சொன்னவுடன் அவளின் நினைவு பின்னோக்கி சென்றது. ஒரு வருடத்திற்கு முன் அவளது நாட்கள், ஒரு நாளில் மூன்று வேளையும் உணவு உண்கிறாளோ!! இல்லையோ!! தனது வீட்டிற்கு நேரம் தவறாமல் காலை மதியம் இரவு என் மூன்று வேளையும் அழைத்து பேசி விடுவாள். அப்படி பேசுவது ஏதோ அவளுக்கு அவள் குடும்பத்துடனே இருப்பது போலவும், ஒரு வித பாதுகாப்பையும் தருவதாய் உணர்வாள்.
ஆனால் இப்போது??? அவ்வாறு இல்லை என்றாலும், அந்த உணர்வை மிதுனிடம் உணர்கிறாள் என்பது தான் விந்தையிலும் விந்தை.
அவள் எதுவும் பேசாமல் இருக்கவும், மிதுன் அம்மாவே “ஹலோ… கீர்த்தி… கீர்த்திமா… லைன்ல இருக்கயா??” என்று கேட்டார்.
“ஹான்… ஆன்… இருக்கேன்மா… அது வந்து கொஞ்சம் வேலை இருந்ததுமா. அதான்மா அடிக்கடி கால்(call) பண்ண முடியல” என்று பதில் மொழி கூறினாள் நினைவு வந்தவளாய் கீர்த்தி.
“சரி சரி மா. அது எல்லாம் ஒன்னும் இல்ல. அப்படியே கொஞ்சம் மிதுன் என்ன பண்ணறானு பாத்து சொல்லு மா??. இரண்டு நாளா அவனும் ஒரு போனும் பண்ணல. நான் பண்ணாலும் வெளியே இருக்கேன் வந்து கூப்படறேன் சொல்லிட்டு கூப்பிடவே இல்ல” என்றார் அவர்.
“இல்லமா… மித்து வீடு கட்டறது விசயமா வெளியே சுத்திட்டு இருக்கறாரு… இரண்டு நாளா ரொம்ப லேட்டா தான் வீட்டுக்கு போறாரு போல. கதிர் அண்ணா சொன்னாங்க. ஆனால் இன்னிக்கு ஒன்பது மணிக்கு முன்னாடி வந்துடுவாங்க. நான் ப்ளான் பண்ணி நைட் டின்னர் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். அதனால…” என்று பதிலளித்து விட்டு, “வந்ததும் உங்களுக்கு கூப்பிட சொல்லுறேன் மா.” என்று அவருக்கு ஒரு உறுதி மொழியும் அளித்தாள்.
“என்னவோ போடா. அங்கே எதுக்கு வீடு எல்லாம்??. இங்கே நமக்கு ஒரு வீடு இருக்கும் போது… சொன்னாலும் கேட்க மாட்டான். என் உழைப்புல வீடு கட்டனும்னு ஒரே பிடிவாதம்” என்று தனது புலம்பலை ஆரம்பித்தார்.
மிதுன் இங்கே வேலைக்கு வந்து முதல் மூன்று வருடத்தில், ஒரு இடத்தை வாங்கினான். அதில் தான் தற்போது வீடு கட்ட உள்ளான். அதற்கு ஒரு பில்டரை தேடி தான் தற்போது சுற்றி கொண்டு உள்ளான்.
ஏன் வீடாகவே வாங்கி இருக்கலாம்ல என்று கீர்த்தி ஒரு முறை கேட்ட போது, “அது அடுத்தவங்க விருப்பத்தின் பேரில் கட்டினதா இருக்கும். எனக்கு பிடிச்ச மாறி ஒரு வீடு கட்டனும்” என்று கூறி விட்டான். மேலும் சிவகாசியில் ஒரு வீடு இருக்கும் போது இங்க எதுக்கு என்று அவன் அம்மா கேட்டத்தை போல் இவளும் கேட்க, “அது ஒன்னும் எங்க சொந்த ஊர் இல்ல கீர்த்து. அப்பாக்கு அங்க வேலை இருக்க, வீடு வாங்கினார். எனக்கு இங்க வேலை இருக்க இங்க கட்டறேன்” என்று கூறி விட்டான்.
அதை அவனது அம்மாவிடமும் கூறியவள் தொடர்ந்து, “அம்மா மித்து மாறி ஒரு பையனலாம் ரொம்ப ரேர்(rare) மா. நீங்க அவனையே குறை சொல்லுறீங்க. அப்போ…” என்று ஏதோ சொல்ல வந்தவள் பாதியில் நிறுத்தி அதை அப்படியே மாற்றி விட்டாள்.
அந்த அப்போவை அதனால என்று மாற்றி, “அதனால உங்க பையனை நினைச்சி பெருமை படனும் மா நீங்க” என்று கூறி முடித்தாள்.
“படலாம் படலாம்… ஆமா அவன்கிட்ட அப்படியே கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி தாடா. இருபத்தி ஆறு வயசு முடிய போகுது. அவனுக்கு பண்ணிடலாம் பார்த்த ஒத்துக்கவே மாட்டிங்கறான். வீடு கட்டிட்டு கட்டிட்டுனு சொல்லிட்டு இருக்கான்” என்று தனது அடுத்த ஆதங்கத்தை கூறினார்.
என்னதான் நன்றாய் பேசினாலும் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகள் தானே முதன்மையாய் தெரிவார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
முதலில் கீர்த்தி பற்றி சிறிது கேட்டவர் அடுத்து தனது மகனின் பக்கம் தாவி விட்டார். இது இயல்பு தானே!!!.
தவறே செய்து இருந்தாலும், அதை திருத்தி கண்டித்து என எல்லாம் செய்து அவர்கள் பக்கம் தானே பெற்றோர் இருக்க வேண்டும். ஆனால் நான் தவறே செய்யாத போது… அவர்கள் எவ்வாறு என்னை ஒதுக்கலாம்???.
வேண்டாம் வேண்டாம் என்று நினைத்தாலும், அவளை மீறி வேண்டும் என்றே வந்து தொல்லை செய்யும் நினைவுகளை அவளால் என்ன தான் செய்ய முடியும்??.
கீர்த்தி குடும்பம் பற்றி யாருக்கும் தெரியாது மிதுனுக்கு கூட… மிதுனின் அம்மாக்கு மட்டும் தெரிந்து விடவா போகிறது??. அவளது வீட்டில் பிரச்சனை இருக்கிறது என்று கூட அவருக்கு தெரியாது. அதனால் எல்லா அம்மாக்களை போலவும், நண்பர்களிடம் பையனை/பொண்ணை பாத்துக்குங்க என்று சொல்வது போல் அவரும் கூறினார். ஆனால் அந்த நண்பனின் பெற்றோர்க்கு அவன் குழந்தையாய் தெரியும், இவன் பெரியவனாய் தெரிவான்.
“அம்மா மித்து விருப்பம் அதுவா இருக்கும் போது நம்ம இன்னும் ஒரு நாலு மாசம் வெயிட் பண்ணா அவரு வீடு கட்டி முடிச்சிடுவாரு. அந்த கேப்புல நீங்க அவருக்கு பொண்ணு பாக்க ஆரம்பீங்க… வீடு கட்டவும் ஏதோ ஒரு பொண்ண செலக்ட் பண்ணுனு சொல்லிடலாம்” என்று அவருக்கு ஒரு யோசனையை கூறினாள்.
“ஹ்ம்ம்… இது கூட நல்லா தான் இருக்கு. எப்படியும் பொண்ணு பாத்து செட் ஆக கொஞ்ச நாள் எடுக்கும் தான்” என்று மகிழ்வுடன் கூறினார்.
அதன் பின் அவர்கள் பேச்சு பொதுவாய் இருக்க எது எதோ பேசி கொண்டு இருக்க, மணி 7 ஆனது. அதை கீர்த்தி தான் முதலில் பார்த்தாள்.
“அம்மா மணி 7 ஆச்சி. அப்பா எட்டு மணிக்கு சாப்பிட வந்துடுவாங்க இல்ல… நீங்க போய் சமைங்க” என்று கூறி அவரது ஒப்புதலையும் பெற்ற பின் அழைப்பை துண்டித்தாள்.
அடுத்த சில மணி நேரங்களில் ஹவுஸ் மேட் அக்கா சங்கவியும், வந்து விட சிறிது நேரம் இருவரும் பேசி கொண்டு இருந்தனர்.
சரியாக மணி 8:48 ஆக, மிதுன் வந்து சேர்ந்தான். என்ன தான் இருவரும் நன்றாய் பழகினாலும், அவளது வீட்டிற்குள் செல்ல மாட்டான் மிதுன். முக்கால் வாசி எல்லோரும் இயல்பாய் இருப்பது அவர்களது இல்லத்தில் தான். அங்கே நாம் அதிகம் பழகாதவர்கள் வருவது கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும். அதாவது கீர்த்திக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும், அவளது உடன் இருப்பவருக்கு அந்த மாதிரி தோன்றலாம். எதற்கு என்று அவள் இல்லம் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவான் மிதுன்.
இருவருக்கும் அவன் உணவு வாங்கி வர, இவர்களது வீட்டிற்கு மேல் மொட்டை மாடி தான். இந்த நேரத்திற்கு மேல் அங்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்பதால், கீர்த்தி அவளது வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வர, அந்த மாடி படிகளில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.
“மித்து… மித்து… அம்மாக்கு போன் பண்ணி பேசுங்க… அம்மா பேச சொன்னாங்க” என்று கீர்த்தி கூற, அவனும் சரி என்று தலையை ஆட்டி விட்டு உணவை உள்ளே தள்ளினான்.
“அப்பறம் போன காரியம் என்ன ஆச்சி??” – கீர்த்தி.
“நான் கம்மி செலவுல ப்ளான் போட்டு தரவங்கள தேடுறேன்டா. அதான் லேட் ஆகுது. பாப்போம். இன்னும் ரெண்டு பேர் இருக்கறதா சொல்லி இருக்காங்க. பேசி பாக்கலாம். அப்பறம் முடிவு பண்ணலாம்.. என்ன பண்ணறதுனு” என்று அவனுக்கு பதில் கூறினான்.
“ஹ்ம்ம்…” என்று கேட்டு கொண்டவள், அடுத்து “நீ கல்யாணத்துக்கு ஏன் ஓகே சொல்ல மாட்டிங்கற??. அம்மா ரொம்ப வருத்தப்படறாங்க மித்து” என்று அடுத்து கேட்க…
‘என் லவ் ஓகே ஆகிட்டா நான் ஓகே சொல்ல போறேன்’ என்று மனதில் நினைத்தவன் வெளியே, “வீடு கட்டி முடிக்கலாம்டா முதல்ல… அப்பறம் பாக்கலாம்” என்று கூறினான்.
“உனக்கு ஒரு நாலு மாசம் தான் டைம். அப்பறம் உனக்கு கல்யாணம் தான். அம்மா தான் சொல்ல சொன்னாங்க” என்று கீர்த்தி கூற, “என்னது??” என்று அதிர்ச்சி ஆனான் மிதுன்.
“சரி சரி… சாப்பிட்டல்ல அம்மாட்ட பேசிட்டு போய் தூங்குங்க… குட் நைட்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள் கீர்த்தி.
சிறிது நேர யோசனையில் இருந்த மிதுனும், வீட்டிற்கு அழைத்து பேசி விட்டு அவனது இல்லம் சென்றான்.
அடுத்த நாள்… வெள்ளி கிழமை… அன்று மாலை சொன்னது போலவே கீர்த்தி மேலும் மூன்று பேர் அந்த அறை தோழி திருமணத்திற்கு சென்றனர்.
கேப்பில்(Cab) இருந்து இறங்கிய உடனே, அங்கே இருந்த பெயர் பலகையை பார்த்தாள் கீர்த்தி.
இதே போல் தான் அன்றும் பெயர் பலகையில் மணமக்களின் பெயர்கள் எழுதி அலங்காரம் செய்து இருந்தனர்.
சரவண வேல்
வெட்ஸ்
பவித்ரா
அதை ஆசையாய் பார்த்தாள் அன்று… ஆனால் என்று அவளது நினைவு அவளை அறியாமலே அவளை பின்னோக்கி இழுத்து செல்ல….
அந்த சரவண வேலோ அவனது ஊரில், லுங்கியை எடுத்து மடித்து கட்டி கொண்டு, “இங்க என்ன பிரச்சனை??. இன்னும் ஏன் கூலி கொடுக்காம இருக்கு??” என்று பணம் பட்டுவாடா செய்வனை கேட்டான்.
“அது வந்து தம்பி… இவன் பாதி நாள் போய் தான் வேலைக்கே வந்தான். வேலையும் ஒழுங்கா செய்யல. ஆனாலும் நாள் கணக்குனு பாதி நாள் பணம் கொடுத்தா வாங்க மாட்டிங்கறான். மதிய சோத்துக்கு முன்னமே வந்துட்டேன். ஒரு நாள் கூலி தரணும்னு பிரச்சனை பண்ணிட்டு இருக்கான்” என்று பிரச்சனையை கூறினார்.
அதை கேட்ட அவன், “ஹம்ம்…” என்று யோசித்தவன், “இவனுக்கு நாள் கணக்கு போடாம, வேலை கணக்கு போட்டு கூலி கொடுத்துடு” என்று சொல்லி விட்டு சென்றான்.
நாள் கணக்கு போட்டால் வரும் பணத்தை விட வேலை கணக்கு போட்டால் வரும் பணம் குறைவாகவே இருக்கும். ஆனால் சரவணனின் குடும்பம் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்தது. முதலில் இருந்தே அவர்கள் பின்பற்றி வரும் பழக்கம் அது…
அதிலும் இவன் தான் அந்த பாதி நாள் வேலையையும் சரியாக செய்யவில்லையே… அதனால், “இல்லை வேண்டாம் பாதி நாள் கணக்கே கொடுக்க சொல்லுங்க தம்பி” என்று சொன்னான்.
ஆனால் அதை கண்டு கொள்ளாமல் தனது இல்லம் சென்று விட்டான் சரவணன். அவன் அப்படி தான் ஒரு முடிவு என்று எடுத்து விட்டால் இருந்து மாற மாட்டான். ஆனால் முடிவு எடுக்கும் முன் அவன் மனம் பலவற்றை சிந்தித்து இருக்கும்.
கொடுப்பாள்…

Advertisement