Advertisement

அத்தியாயம் 18
சந்தோஷ் காரை காலேஜுக்குள் செலுத்தவும் அகல்விழி “என்ன இங்கயே! இறக்கி விடுங்க நான் போயிடுறேன்” என்றதும்
“இட்ஸ் ஓகே விழி” என்றவன் ஒரு மர்மப்புன்னகையோடு அவளை உள்ளேயே! இறக்கி விட்டு காரை விரிவுரையாளர்கள் வண்டிகளை நிறுத்தும் இடம் நோக்கி செலுத்தி இருந்தான்.
காலேஜுக்குள் வந்ததும் விழி சந்தோஷை மறந்து வகுப்பறையை நோக்கி செல்ல அர்ஜுனின் நியாபகங்கள் அழைக்காமலையே! அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தன.
 மாலனியை சீண்டுவதாக சொல்லி விட்டு அர்ஜுன் தனியாக சென்று தன் காதலைதான் வளர்த்தானா? அப்போ மாலனியும் அர்ஜுனை காதலித்தாளா? கிருஷ்ணாவுக்கு இது தெரியுமா? தெரிந்துதான் கோபமாக இருந்தானா? என்ற பல கேள்விகளோடு நடந்தவளுக்கு மலானியும், அர்ஜுனும் ஜோடியாக வண்டியில் வருவது தென்பட்டது.
அர்ஜுனின் வண்டியில் அவன் யாரையும் இதுவரை ஏற்றிச்சென்றதே! இல்லை. ஏன் விழியை தொட விட்டது கூட இல்லை. விழிதான் அர்ஜுனிடம் காதலிப்பதாக பிதற்றி இருக்கிறாளே! தவிர அர்ஜுன் ஒரு தடவையாவது கூறியதில்லை. அவள்தான் அவன் கையை பிடிப்பதும், தோளில் சாய்வதுமாக உரிமை எடுத்துக்கொள்கிறாளே! தவிர அவன் தோழி என்ற எல்லையை தாண்டி பழகியதில்லை.
இருவரும் சிரித்துப் பேசியவாறு வருவதைக்கண்டு அர்ஜுனின் மேல் கோபம்தான் வந்தது. சந்தோஷ் சொன்னது போல் உண்மையை சொல்லி இருந்திருக்கலாம். “சொன்னால் நீ அடம் பிடித்து அர்ஜுனை உன் கழுத்தில் தாலி கட்ட வைத்திருப்பாய்” என்றது அவள் மனம். மேலும் அவர்களை பார்க்கப் பிடிக்காமல் வகுப்பறைக்கு ஓடி இருந்தாள் விழி.
அர்ஜுன் மாலினியோடு காலேஜுக்குள் நுழைந்து வண்டியை நிறுத்தவும் விகாஷ் அவனருகில் வர தனுஷ் பாய்ந்து வந்து அர்ஜுனின் சட்டையை பிடித்திருந்தான்.
“ஏன் டா… கிருஷ்ணா ட்ரிப் போனத தெரிஞ்சிக்கிட்டு மாலினி கழுத்துல தாலிய போட்டதுமில்லாம அவ மனச மாத்தி அவளையே! கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன தைரியமிருந்தா ஜோடியா காலேஜுக்குள்ள வந்திருப்ப”
அவனை தடுத்த விகாஷ் “ஏன் டா ஊருக்கே! தெரியும் இவங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு. என்ன நீ திட்டம் போட்டு பண்ணது போல சொல்லுற?” அர்ஜுனுக்கு சாதகமாக பேச ஆரம்பிச்சிட்டாங்கடா என்ற பார்வைதான் மாலினியிடம்.
அர்ஜுன் பண்ண நினைத்த சம்பவத்தை இப்படி அல்லக்கையும், அடியாலும் தொடக்கி வைப்பார்கள் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை.
“சரி சரி வா கிளாசுக்கு போலாம் மாலு நேரமாச்சு இங்க என்ன வேடிக்க” என்று கிருஷ்ணா வந்து மாலனியின் கையை பிடித்து தர தரவென இழுத்துக்கொண்டு போக அவனை இரு ஜோடி விழிகள் சுவாரஸ்யமாக பார்த்திருந்தன.
மாலனி திகைத்து விழிக்கையில் “டேய் டான். கைய விடுடா. மாலு இப்போ என் பொண்டாட்டி. அவ கைய புடிக்கிற உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு” என்று அர்ஜுன் தடுக்க
“ஏன் டா நான் கல்யாணம் பண்ண இருந்த மாலுவ நீ கல்யாணம் பண்ணிகிட்ட அதுக்கே! நான் உன்ன பொளந்து இருக்கணும். சரி போனா போகுதுனு விட்டா இப்போ அவ கைய பிடிக்க கூடாதுனு சொல்லுற, மாலுவோட முழு உரிமை முதல் உரிமை எனக்குதான் டா” கிருஷ்ணா முறைக்க,
“இங்க பாரு முழு உரிமை உன்கிட்ட இருக்கட்டும் முதல் உரிமை எனக்குதான். இப்போ எடு டா கைய” என்று அர்ஜுன் மாலனியின் கைய பிடித்து இழுக்க
விகாஸும், தனுஷும் “இவனுங்க என்ன லூசா? இல்ல நம்மள லூசாக்க பாக்குறானுங்களா?” என்று பார்க்க
“நான் என்ன பொம்மையா? ஆளாளுக்கு உரிமை கொண்டாட? பிடிச்சு இழுக்குறதால என் கை ஒன்னும் கழண்டு தனியா வந்து உங்க ரெண்டு பேருக்கும் கிடைக்க மாட்டேன். என் கைதான் வலிக்குது. விடுங்க டா” என்று மாலனி கத்த
“இங்க என்ன பிரச்சினை?” என்றவாறு வந்த H.O.D அவர்களை வழுக்க மண்டை முதல்வரின் முன் நிறுத்தி இருந்தார்.
“நீங்கெல்லாம் காலேஜுக்கு படிக்க வாரீங்களா? இல்ல பிரச்சினை பண்ண வாரீங்களா? ஒருத்தன் மாத்தி ஒருத்தன் பிரச்சினையோட வரீங்க? இன்னும் காலேஜ் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள என்ன டா பிரச்சினை?” கடுப்பாகி லம்போதரன் கத்த
“சார் இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்ப்ப உங்களால மட்டும்தான் சொல்ல முடியும்” என்று ஆரம்பித்த அர்ஜுன் மாலனிக்கும் தனக்கும் திருமணம் நடந்த விதத்தை விலாவரியாக சொல்லி முடித்தான்.
“சரிப்பா அதான் கல்யாணம் ஆகிருச்சே! நீயும் சரி, உங்க வீட்டாளுங்களும் சரி மாலினியை ஏத்துக்கிட்டீங்க, மாலினியும் உன் கூட வாழ ஆரம்பிச்சிட்டா, சி.எம் கூட வாழ்த்தி போக்கே அனுப்பி இருந்தாரே! நான் கூட கல்யாணத்துக்கு வந்தேனே! இப்போ என்ன பிரச்சினை?”
தன்னை நிதிபதியாக்கி இருந்த அர்ஜுனிடம் தனக்கு அனைத்தும் தெரியும் என்று சொல்லிக்கொண்டார் முதல்வர்.
“அத நான் சொல்லுறேன்” என்ற கிருஷ்ணா “மாலினி நான் கல்யாணம் பண்ண இருந்த பொண்ணு. நான் ட்ரிப் போன நேரம் பார்த்து, அதுவும் காட்டுக்கு, நீங்கதானே! அனுப்பி வச்சீங்க” முதல்வரை குற்றம்சாட்ட
“அது காலேஜ் கேம் ட்ரிப் பா, ஒவ்வொரு கிளாஸையும் அனுப்புறோம். விருப்பமானவங்க போகலாம் எந்த கட்டாயமும் இல்ல” சட்டென்று குற்றச்சாட்டிலிருந்து கழன்று கொண்டார் லம்போதரன்.
“சரி விடுங்க, போன் கொண்டு போக கூடாதுனு சட்டம் வேற, கொண்டு போனாலும் சிக்னல் இல்ல. இதெல்லாம் தெரிஞ்சிகிட்ட இந்த கிங் நான் கல்யாணம் பண்ண இருந்த மாலினி கழுத்துல தாலிய போட்டுட்டான். எனக்கு நியாயம் வேணும்” கிருஷ்ணா கோபமாக அர்ஜுனை முறைக்க மாலினிக்கு தலையே! சுத்தியது.
“என்ன இவன்? இவனுக்குத்தான் நம்மள பிடிக்காதே! வேண்டுமென்றே பிரச்சினை பண்ணுறானா?” மாலனி கிருஷ்ணாவை ஆராய்ச்சி பார்வை பார்க்க,
“ஐயோ சார் நான் வேண்டுமென்றே செய்யல, வேட்டி கட்டி பழக்கமே! இல்ல கழண்டு விழுந்திருச்சு முன்னாடி இருந்த பொண்ணு கழுத்துல பொன்தாலிய போட்டுட்டேன். அது மாலினி என்கிறது கூட எனக்கு தெரியாது. அந்த நேரத்துல மாலினி அங்க வருவான்னு எனக்கு எப்படி தெரியும்?” அர்ஜுன் பக்காவா நடிக்க
“ஏன் பா.. கிருஷ்ணா அதான் சி.எம் சாரே இந்த பிரச்சினையை முடிச்சி வச்சிட்டாரே! மாலினி இப்போ அர்ஜுன் மனைவியாகிட்டா இப்போ இப்படி பேசுறது தப்பு” முற்றுப்புள்ளி வச்ச பிரச்சினைக்கு இந்த கிருஷ்ணா எதுக்கு காமா போட்டு ஆரம்பிக்கிறான் என்ற கடுப்பில் பேசினார் முதல்வர்.
“சரி சார் நான் பேசல மாலினி அர்ஜுன் பொண்டாட்டியாகவே இருக்கட்டும். அவள வகுப்புக்கு வர சொல்லுங்க இன்னும் கொஞ்சநேரத்துல மணி அடிச்சிடும்” கிருஷ்ணா கூலாக சொல்ல
“என்ன டா இவன் இவனுக்கு மாலினியை பிடிக்காதுன்னு சொல்லுறான். அதே நேரம் அவள யாரும் தப்பா பேசினா வெளுத்து வாங்குறான். எதோ ஒரு காரணத்துக்காக அவள வெறுக்குற மாதிரி நடிக்கிறான்னு நெனச்சேன். கிங் மாலனிய கல்யாணம் பண்ணிகிட்டத்துக்கு சண்டை போடாம கிளாஸுக்கு வர சொல்லுறான். இவன புரிஞ்சிக்கவே! முடியல” தனக்குள் பேசியவாறு தனுஷ் விகாஷின் தோளில் கை வைத்திருக்க,
“இந்த அர்ஜுன் மட்டும் சும்மாவா? தாலினா என்னானு பையனுக்கு தெரியாதா? சட்டுனு போட்டுட்டான். அப்பொறம் வரும் விளைவுகளை யோசிக்க வேணாம்” விகாஷ் பொரும
“அட ராமா இவனுகளுக்கு ப்ரெண்டா இருக்கற சோதனை இருக்கே!” என்று விகாஸும் தனுஷும் ஒரேநேரத்தில் கூறியவாறு இருவரினதும் முகம் பார்த்துக்கொள்ள இருவரும் முறைத்துக்கொண்டு விலகி நின்றனர்.
“சார் முதல்ல மாலினியோட கிளாசை மாத்துங்க. இப்போ அவ என் பொண்டாட்டி. இன்னுமும் அவ குரூப் A இல் இருக்க வேண்டிய அவசியம் இல்லல” அர்ஜுன் கிருஷ்ணாவை முறைத்தவாறு சொல்ல
“இது பாயிண்ட்” என்ற முதல்வர் மாலினியின் புறம் திரும்பி “ஏன் மா உனக்கு B குரூப்புக்கு போறதுல எந்த ஆட்சோபனையும் இல்லல” என்று முதல்வர் கேக்க மாலனி திருதிருவென முழிக்கலானாள்.
மூன்று வருடங்கள் A குரூப்பில் படித்து விட்டு கடைசி வருடத்தை மட்டும் எப்படி B குரூப்பில் படிப்பாள். அதுவும் அது எதிரி கேங்.
“அவ கிட்ட என்ன சார் கேக்குறீங்க? புருஷன் நான் இருக்குற இடத்துலதான் சார் பொண்டாடி அவ இருப்பா. இல்ல மாலு” என்று புன்னகைமுகமாக அர்ஜுன் சொல்ல
“என்ன புருஷன் பொண்டாட்டின்னு கொஞ்சிக் குலாவிக்கிட்டு இது காலேஜ். அதெல்லாம் காலேஜுக்கு வெளிய வச்சுக்கணும்” என்று கிருஷ்ணா சொல்ல அதுக்கு பதில் அர்ஜுன் பேச மீண்டும் கிருஷ்ணா பேச என்று வாக்கு வாதம் தொடர வழுக்க மண்டை முதல்வர் விக்கை கழட்டி விட்டு மண்டையை சொறியலானார்.
“ஸ்டாப் இட்” என்று கத்திய மாலினி “நான் எந்த கிளாசுல படிக்கணும் என்கிறத நான்தான் முடிவு பண்ணனும்” என்று சொல்ல அவள் முத்தையே! பார்த்திருந்தனர் கிருஷ்ணாவும் அர்ஜுனும்.
இருவரையும் மாறிமாறி பார்த்த மாலினி ஒரு முடிவோடு முதல்வரிடம் திரும்பி “என்ன B குரூப்புக்கு மாத்திடுங்க சார்” என்றாள்.
கிருஷ்ணாவுக்கு ஆரம்பித்திலிருந்தே! மாலனியை பிடிக்காது. அர்ஜுனையும் பிடிக்காது. இப்பொழுது மாலனி அர்ஜுனின் மனைவியாகிவிட்டாள். அர்ஜுனை பழிவாங்க கிருஷ்ணா மாலினியை பயன்படுத்திக்கொள்ள எண்ணி சுமூகமாக நடந்துகொள்ள முயற்சிப்பதாக எண்ணினாள் மாலனி.
கல்யாணமான நாள் முதல் அர்ஜுன் மாலனியை சீண்டினாலும் பழிவாங்க நடந்துகொள்வது போல் நடந்துகொள்ளவுமில்லை. கிருஷ்ணாவை பற்றி பேசவுமில்லை. அந்த நம்பிக்கையில்தான் குரூப் B  இல் சேர்வதாக சொன்னாள்.
“யெஸ் யெஸ்” என்று கையை காற்றில் அடித்து கத்தினான் அர்ஜுன்.
அர்ஜுன் இன்று செய்ய வேண்டும் என்று நினைத்த சம்பவமே! இதுதான். மாலினியை தன் வகுப்புக்கு மாற்றுவது. முதல்வர் லம்போதரனிடம் பேசினால் ஒரேயடியாக ஒத்துக்கொள்ள மாட்டார் இப்படி பிரச்சினையானதால்தான் ஓத்துக்கொண்டிருந்தார்.  
அவனை முறைத்த கிருஷ்ணா “வந்த வேல முடிஞ்சிருச்சு வா தனுஷ் போலாம்” என்று தனுஷை அழைக்க
“என்ன டா நடக்குது இங்க” புரியாத பார்வையோடு அவனோடு கிளம்பினான் தனுஷ்.
மாலினியை B குரூப்புக்கு மாத்திக்கொண்டு அர்ஜுனும் விகாஸும் மாலினியோடு A வகுப்பறையை தாண்டும் பொழுது கிருஷ்ணா அமர்ந்திருப்பது தெரிந்தது.
அர்ஜுன் ஏதாவது பழிப்பு காட்டுவானா! என்று மாலின் பயந்தவாறு வர அவனோ! கிருஷ்ணாவுக்கு இரண்டு பெருவிரல்களையும் காட்டி சிரிக்க கிருஷ்ணாவும் கண்ணடித்து சிரித்தான். சம்திங் பிஷி என்று மாலனியின் மனம் இடித்துரைத்தது.
 தனுஷ் இவர்களுக்கு முன்னால் நடந்ததால் கிருஷ்ணா மற்றும் அர்ஜுனின் சைகைகளை கவனிக்கவில்லை. விகாஷ் கவனித்தானா தெரியவில்லை. கவனித்திருந்தாலும் அவன் மாலனியைத்தான் பாத்திருப்பான்.
மாலனிக்கு அவள் பார்த்ததை கிரகித்து புரிந்துக்கொள்ள பல நிமிடங்கள் தேவைப்பட்டிருந்தது. ஆனாலும் அவளால் சிந்திக்க முடியாதபடி அவள் B குரூப்புக்குள் நுழைந்திருக்க, அர்ஜுன் ஆரவாரத்துடன் அவளை வரவேற்றிருந்தான். 
இவர்களின் சத்தத்தில் விழி அவர்களின் புறம் திரும்பியவள் மாலனி இனிமேல் தங்கள் வகுப்பில்தான் படிக்கிறாளா? என்று யோசிக்க அர்ஜுன் அவளை அழைத்துக்கொண்டு ஒரு இடத்தில் சென்று அமர்வது தென்பட்டது.
விழி தினமும் அர்ஜுனோடுதான் அமர்வாள். இன்றும் அவள் அர்ஜுனோடு அமரும் இடத்தில்தான் அமர்ந்திருந்தாள். அது அவள் தினமும் அமரும் இடமல்லவா? பழக்க தோஷத்தில் அமர்ந்து விட்டாள்.  அர்ஜுன் ஒரு ஹாய் கூட சொல்லாது மாலினியை அழைத்துக்கொண்டு விழி என்ற ஒருத்தி அங்கு இருப்பது போலவே! கண்டுகொள்ளாது வேறு இடம் அமர்ந்தது முகத்தில் அடித்தது போல் இருக்க விழி அர்ஜுனின் புறம் திரும்பவே! இல்லை.
மாலினிதான் வகுப்பறையை வேற்று கிரகத்துக்கு வந்தது போல் பார்த்துக்கொண்டிருந்தாள். இன்ஜினியரிங் என்றாலே! ஆண்கள்தான் அதிகம் படிப்பார்கள் அவள் வகுப்பில் மூன்று பெண்கள் இந்த வகுப்பில் ஒரே ஒரு பெண் அது விழி மட்டும்தான் போலும் என்றெண்ணியவள்
“விழி தனியா இருக்கா.. நா வேணா அவ கூட போய் உக்காரவா?” என்று அர்ஜுனிடம் கேக்க
“அவ கூட பேச கூடாதுனு இல்ல. ஆனா அவ இவ கிட்ட என்ன பேசுவாளோ!  இப்போதான் இவ கொஞ்சம் நல்ல விதமா பேசுறா. இருக்குற கொஞ்சம் நஞ்ச உறவையும் தூண்டிச்சுடுவாளோனு பயமா இருக்கு” அர்ஜுனின் மனம் சொல்ல கண்களை மாலனியை பார்த்தியிருந்தனவே! தவிர வாய் பதில் ஏதும் சொல்லவில்லை.
முதல் வகுப்பு ஆரம்பிக்க மணி அடிக்கவே! “ப்ரோபோசர் வந்திடுவார் மாலு, அப்பொறம் இத பத்தி பேசிக்கலாம்” என்ற அர்ஜுன் புத்தகத்தினுள் தலையை நுழைத்துக்கொள்ள மாலனி அவன் கவனத்தை திசை திருப்ப விரும்பாமல் தானும் புத்தகத்தை கையிலெடுத்தாள்.
“யார் டா இது செம ஹண்சம்மா இருக்காரு” என்று யாரோ ஒரு மாணவன் சொல்ல விழி தலையை நிமிர்த்திப் பார்க்கும் வேளை
“குட் மோர்னிங் ஸ்டுடண்ட்ஸ்” என்றாவாறு புன்னகைத்துக்கொண்டிருந்தான் சந்தோஷ்.
சந்தோஷைக் கண்டு விழி விழிவிரிக்க, அர்ஜுனும் விகாஸும் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
திருமணமன்று சந்தோஷ் இன்முகமாக பேசினாலும், விகாஷ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எல்லாம் தான் பணக்காரன் என்ற திமிர்தான்.
அர்ஜுனுக்கு மாலினி பக்கத்தில் இருந்ததால் சந்தோஷோடு பேச தோன்றவில்லை.
“ஐயோ இவன் என்ன டா நமக்கு ப்ரோபோசரா வந்திருக்கான்?” விகாஷ் கேக்க
“தெரிஞ்சிருந்தா நல்லா பேசி பிரெண்டாகி இருக்கலாம்” என்று அர்ஜுன் சொல்ல
“நான் வேற பந்தா பண்ணேனே! மார்க்ஸ்ல கை வச்சிடுவானோ!” என்று விகாஷ் நெஞ்சில் கைவைத்திருந்தான்.
“இவன் என்ன இங்க பண்ணுறான்” என்று விழி ஆச்சரியப்பட, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சந்தோஷ் வகுப்பை எடுக்க ஆரம்பித்தான்.
இந்த பாடத்துக்குரிய விரிவுரையாளர் வெளிநாட்டுக்கு சென்றதால் புதிதாக ஒரு விரிவுரையாளர் வருவதாக தெரியும். அது சந்தோஷ் என்று எதிர்பார்க்கவில்லை. முதலிரவன்று என்ன வேலை பார்க்கிறாய்? என்று கேட்டதற்கு புதிராக பதில் சொன்னதுக்கு காரணம் இதுதானா? என்று விழியின் சிந்தனை சந்தோஷ சுத்தியே! இருக்க, அவன் நடத்தும் பாடத்தில் இல்லை. பாடவேளை ஆரம்பித்து அரைமணி நேரம் கூட இல்லை. பாடத்தை நடத்தியவாறே! மனைவியின் யோசனை படிந்த முகத்தை பார்த்தவன் அவளிடமே! கேள்வி கேக்க, கடுப்பானவள் அவனை முறைக்க ஆரம்பித்தாள்.
இன்னும் பதினைந்து நிமிடங்கள் சென்றிருக்க, முதல்வர் லம்போதரன் அரக்கப்பரக்க ஓடி வந்து “சந்தோஷ் சார் சந்தோஷ் சார் சீக்கிரம் வாங்க” என்று அழைக்க,
“என்ன பிரச்சினை சார்” என்ற சந்தோஷ் வகுப்பை பாதியில் விட்டு விட்டு அவரோடு கிளம்பி இருந்தான்.
“என்ன விழி உன் ஹஸ்பண்ட் ப்ரோபோசர்னு சொல்லவே இல்ல” என்று விகாஷ் விழியிடம் கேக்க
தனக்கு தெரியாது என்றா சொல்லவா முடியும்? புன்னகைத்து சமாளித்தாள்.
“ஆமா எதுக்கு முதல்வரே! அரக்கப்பரக்க வந்து அவர கூட்டிட்டு போனாரு? பெல் பாய் கிட்ட சொன்னா  அவன் வந்து சொல்ல போறான்” என்று மாலினி கேக்க அர்ஜுனும் விகாஸும் யோசனை படிந்த முகபாவத்தை கொடுத்தனர்.
“கிங் விஷயம் தெரியுமா? கெமிஸ்டரி லேப்புல ஒருத்தன் மயங்கிட்டானாம். புதுசா ட்ராக்ஸ் உருவாக்க ட்ரை பண்ணி இருக்கான் போல. வழுக்க மண்டையும் புதுசா வந்த ப்ரோபோசரும் அங்கதான் போனாங்க” என்றாவாறு ஜூனியர் ஒருவன் தகவல் சொல்லி விட்டு செல்ல
“மொபைல் நெட் வொர்க்க ப்ளக் பண்ணதுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது” என்று கடுப்பானான் விகாஷ்.
“வழுக்க மண்ட சந்தோச எதுக்கு கூட்டிட்டு போனாரு? அதுவும் மெடிக்கல் செக்சனுக்கு?”  தன் சந்தேகத்தை கேட்ட அர்ஜுன் விழியை பார்க்க அவள் முகத்திலும் சந்தேக ரேகைகள்.
செந்திலின் அறைக்கு புயல் போல் நுழைந்திருந்தான் ஆனந்த்.
“வா..ப்பா ஆனந்த்” செந்தில் புன்னகை முகமாக வரவேற்க, ஆனந்தின் முகத்தில் அந்த புன்னகையை காணவில்லை. முகம் வளமை போல் சாந்தமாகத்தான் இருந்தது. மாறாக உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தான்.
இன்று அவன் காரியாலயத்துக்கு வந்தால் சங்கரன் அழைத்து அவனை பி.ஏ வேலையிலிருந்து தூக்கி மேனேஜரா பதவி உயர்வு கொடுத்திருப்பதாக கூற
“சார் இது உங்க முடிவா?” என்றுதான் கேட்டான்
“இல்ல பா.. இது செந்திலோட முடிவு. நீ அவனோட சொந்தக்காரன் அதுவும் மாப்பிளையோட அண்ணன் உன்ன எப்படி நான் என் பி. ஏவாக வச்சிருக்க முடியும்?” சொல்லும் பொழுதே! உன்னை போல் ஒருவனை என்னால் எங்கும் தேடி கண்டு பிடிக்கவும் முடியாது என்ற உள்ளர்த்தம் இருந்ததை ஆனந்தும் உணர்ந்தான். 
“சரி சார் நான் அவர்கிட்டயே! பேசுகிறேன் என்றவன்தான் இதோ! செந்திலின் முன் நின்று “உங்க கிட்ட நான் சொந்தக்காரன்னு சொல்லி என்ன மேனேஜர் பதவில உக்கார வைக்க சொன்னேனா?” என்று கேக்க
அவன் வார்த்தைகளில் இருந்த கடுமையை உணராத செந்தில் “நீ சொல்லலைனா என்ன ஆனந்த். நீ என் மனைவியோட அண்ணன் மகன். அதுமட்டுமா? இப்போ என் மாப்பிளையோட அண்ணன். அப்டரால் ஒரு பி.ஏ. வேலைல இருந்தா அது நம்ம குடும்பத்துக்கு ஆகாதில்லை”
பல்லைக் கடித்த ஆனந்த் “இத்தனை வருஷமா எங்க போய் இருந்தீங்க? பொண்டாட்டியோட அண்ணன், அண்ணன் குடும்பம், பசங்க இப்போதான் உங்க கண்ணுக்கு தெரியுதா?”
“அது வந்து…” செந்தில் தடுமாற
“சரி அத விடுங்க? நான் என்ன படிச்சிருக்கேன் என்றாவது உங்களுக்கு தெரியுமா? சாதாரண பி.ஏ என்றதும் என்ன மேனேஜர் போஸ்ட்டுக்கு போட்டிருக்கீங்க?” கேலியாக உதடு வளைத்தான் ஆனந்த்.
ஆனந்த் பேசப்பேச அவனை புரியாது பார்த்திருந்தார் செந்தில்.
“நான் நினச்சா இந்த மாதிரியான கம்பனியையே! சின்ன அளவுல உருவாக்கி இருக்க முடியும். இல்ல இங்கயே! மேனேஜர் போஸ்டுக்கு இன்டவியூகு  வந்திருக்க முடியும். சாதாரண பி.ஏனு நீங்க நினைச்ச போஸ்ட்ட நான் அப்படி பார்க்கல, அதுல எவ்வளவு அனுபவம் எனக்கு கிடைச்சிருக்குனு எனக்கு மட்டும்தான் தெரியும். உங்க நண்பன் என் திறமையை பார்த்தே! கைநிறைய சம்பளம் கொடுக்குறாரு. அது எனக்கு திருப்தியா இருக்கு. ஒரு இடத்துல உக்காந்து வேல பாக்குறத விட இந்த வேல எனக்கு பிடிச்சிருக்கு. வேற என்ன வேணும்? அதனாலதான் உங்கள பார்த்த பிறகும் இங்க இருக்கேன். சொந்தம் பந்தம் எல்லாம் வீட்டோட வச்சிக்கோங்க கம்பனிக்குள்ள நீங்க என் பாஸோட பாட்டனார். அவ்வளவுதான்” என்றவன் எபோய்ன்மெண்ட் லெட்டரை கிழித்தெறிந்து விட்டு செந்திலின் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
“எந்தநாளும் இதே! வேலைல இருக்க போறானா? அவன் நெனச்சா கம்பனி உருவாக்குறானாம். வாயில நல்லா வருது. மாசச் சம்பளம் வாங்குற இவனுக்கு இவ்வளவு திமிர் இருக்கக் கூடாது” என்று கோபத்தின் உச்சிக்கு சென்ற செந்தில் மங்கையை அழைத்து பொரிந்துத் தள்ளலானார்.

Advertisement