Advertisement

அத்தியாயம் 9  
இப்படி ஒரு விஷயம் நடக்கக்கூடும் என்று முன் கூட்டியியே! அறிந்துக்கொள்ளும் சக்தி மனிதனுக்கு கிடையாது. ஆனாலும் ஒருவரின் ஜாதகத்தை கணித்து தோஷம் இருக்கு, யோகம் இருக்கு சொல்லி விடுவார்கள். இதெல்லாம் உண்மையா?
தோஷம் இருப்பதாக நம்பிக்கை வைப்போர் அதற்குண்டான பரிகாரங்களை செய்து வாழ்க்கையில் முன்னோக்கி செல்வர். யோகம் இருப்பவர்களும் அதை அடைய எல்லா வேலைகளையும் பார்ப்பார்கள்.
அப்படித்தான் முதலமைச்சர் கனகவேல் ராஜாவும் ஜாதகத்தை ரொம்பவும் நம்புபவர். அவரின் ஜாதகப்படி அவருக்கு முதலமைச்சராகும் யோகம் இருப்பதை தெரிந்துக்கொண்டு உடன் அரசியலில் களமிறங்கி இருந்தார்.
ஆரம்பத்தில் அவருக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருக்கவுமில்லை. அரசியலில் ஈடுபாடு இருக்கவுமில்லை.
படிக்கும் காலத்தில் ஒரு நண்பனின் தந்தை எம்.எல்.ஏ அவன் வீட்டுக்கு போவாரு. அங்கு நடந்த ஒரு பிரச்சினையில் எம்.எல்.ஏவை கொல்ல வந்த ஒருவனை இவர் பிடித்து எம்.எல்.ஏவை இவர் காப்பாற்றி இருக்க, மகனின் நண்பனான கனகவேல் அவரின் பார்வை வட்டத்துக்குள் வந்து விட்டார்.
அதே! நேரம் ஊரிலிருந்து ஞானவேல் அழைத்து எந்த வம்பு தும்புக்கும் போகாதே! குறிப்பாக அரசியல்வாதிகளோடு எந்த சகவாசமும் வைத்துக்கொள்ளாதே! என்று கூறி இருக்க அதையெல்லாம் கேக்க கூடிய வயதா? கனகவேலினுடையது?
இளம் கன்று பயமறியாது. கட்சசியிலும் உறுப்பினராகி தன்னை ஒரு ரௌடி போல் எண்ணிக்கொண்டு எம்.எல் ஏவின் கையாட்களோடு சுற்றிக்கொண்டிருந்தாலும், எம்.எல்.ஏவின் இன்னொரு மகனாகவே! மாறிப்போய் இருந்தார் கனகவேல்.
ஐந்து வருடங்கள் அவர் கூடவே இருந்து அரசியலின் நெளிவு சுளிவுகளை எல்லாம் கற்றுக்கொண்டாடிருந்தார் கனகவேல். இந்த நேரத்தில் எம்.எல்.ஏ இறந்து விட யாரும் சொல்லாமலையே! அவருடைய இடத்தில் அமர்ந்து விட்டார். ஞானவேல் தலைப்பாடாக அடித்துக்கொண்டார். “எது நடக்கக் கூடாது என்று நினைத்திருந்தேனோ! அது நடந்து விட்டதாக புலம்பினார்”
“என்ன சொல்லுறீங்க அப்பா?”
“உன் ஜாதகத்துல உனக்கு முதலமைச்சராகுற யோகமிருக்குனு ஜோசியக்காரன் பார்த்துட்டு சொன்னான். இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. ஊருக்கு வந்து நான் பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்க இல்லனா சொத்துல நயாபைசா தாரா மாட்டேன்” என்று மிரட்டி விட்டு செல்ல
பெண்ணை பார்க்க இருந்த ஆசையை விட ஜோசியரை பார்க்கும் ஆர்வம்தான் அதிகமாக இருந்தது.
தந்தை ஆட்டுவிப்பதற்கு ஆடும் பொம்மை போல் தன்னைக் காட்டிக்கொண்டு சொத்தையும் எழுதி வாங்கியவர் முற்றாக அரசியலில் குதித்திருந்தார்.
முதலமைச்சராகும்  யோகம் ஒன்றும் அவருக்கும் தானாக அமைந்து விடவில்லை. முதலமைச்சர் பதவியில் அமர, அந்த யோகத்தை கைப்பற்ற அவர் என்னென்ன வேலைகள் பார்த்தார் என்பது அவர் மட்டும் அறிந்த ரகசியம்.
பதவி, பணம் இந்த இரண்டும் தனக்கு பிறகு தன் வாரிசுக்கு கிடைக்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. அதுவே! மக்களை ஆளும் முதலமைச்சர் பதவி என்றால்?
அதை தெரிந்துகொள்ளத்தான் பலம் பெரும் ஜோதிடர் ராமானுஜத்தை வரவழைத்திருந்தார். கனகவேல்.
அருள்வேல் ராஜா இயல்பில்லையே! அமைதியானவன் வத்சலாவின் குணத்தைக் கொண்டு பிறந்தவன். தந்தையின் வழிகாட்டலில் அவன் அரசியலில் நிலைப்பான் என்ற ஜோதிடர் கிருஷ்ணாவின் ஜாதகத்தைப் பார்த்து வியந்தார்.
“என்ன ஜோசியரே! இப்படி பாத்துகிட்டு இருக்கீங்க?” முதலமைச்சர் கேக்க
“இந்த ஜாதகக்காரர் நினைச்சதை சாதிப்பவராச்சே! அதான் யோசிக்கிறேன்” என்றார் ராமானுஜம்.
“என்ன சொல்லுறீங்க?” கனகவேல் கலங்க
“அவர் என்ன நினைக்கிறாரோ! அதை நடத்தி முடிச்சிடுவாரு” ராமானுஜத்தின் முகத்தில் வெளிச்சம் பரவி இருந்தது. கண்டதை காணாத பூரிப்பில் மிளிர்ந்தது.
“முதலமைச்சர் ஆகும் யோகம் இருக்கா?” அவரின் முகத்தில் இருந்த அதீத சந்தோசமே! கனகவேலுக்கு இந்த கேள்வியை கேக்க தூண்டி இருந்தது. 
“முதலமைச்சர் என்ன? அமெரிக்காக்கு ஜனாதிபதிதான் ஆவேன்னு நெனச்சா அதையும் செய்யக் கூடிய ஜாதகம் இது. ஆனா..”
“என்ன பிரச்சினை?” கவலைக்குள்ளானார் கனகவேல்.
“ராகசந்திரா தோஷமிருக்கு” மீசையை நீவலானார் ராமானுஜம்.
“அப்படினா?” புரியாது கனகவேல் கேக்க
“பெத்த அப்பாகூட மனஸ்தாபம். சொல் பேச்சு கேக்குறதில்ல”
“அட ஆமா”
தாடியை நீவியவாறே ராமானுஜம் “தோஷம் யோகத்தை தடுக்குது. அரசியல் ஆச, சுத்தமா இல்ல”
“இதுக்கு பரிகாரம் எதுவும் இல்லையா?” பெருமூச்சு விட்டவாறே கனகவேல் ராமானுஜத்தை ஏறிட்டார்.
“இருக்கு. இந்த ஜாதகத்துக்கு பொருத்தமான ஜாதக்காரிய கல்யாணம் பண்ணி வைக்கணும்”
“உடனே! பண்ணிடுறேன்” முகம் மலர்ந்தார் கனகவேல்.
“அதுதான் தப்பு. ஜாதகக்காரரோட இருபத்தி அஞ்சாவது வயசுல பண்ணனும். அப்போதான் தோஷம் நீங்கி யோகம் கைகூடும்”
“அப்போ ஜாதக்காரிய தேடி எடுக்க காலம் இருக்கு”
“ஆமா. அதுக்குள்ள உங்க பையன் காதல் பண்ணாம பாத்துக்கோங்க, கல்யாணம் இருபத்தி அஞ்சு வயசுக்கு முன்னதாகவோ! அல்லது பின்னதாகவோ! நடந்தா யோகம் கைகூடாது” ஜோசியர் தீவீரமாக சொல்ல கனகாவேல் ராஜா அதை அப்படியே! நம்பி இருந்தார்.
அந்த நேரம் பார்த்துதான் கோதாண்டம் மாலினியின் ஜாதகத்தை கொண்டு வந்து காட்ட அதை பார்த்து கிருஷ்ணாவுக்கு பொருத்தமான ஜாதகம் என்று கூறி இருந்தார் ராமானுஜம்.
விஷயம் என்னவென்று பகிரப்படாததால் தங்களுக்கு சற்றுமே! பொருத்தமில்லாத இடத்தில் பெண் எடுக்க யோசிப்பது கிருஷ்ணாவின் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் முதல் மனைவி இறந்து விடுவாளோ! அதற்காகத்தான் இத திருமணமோ! என்று  கோதாண்டம் பயந்து போய் இருந்தார்.
முறையாக திட்டமிடுவதிலும் அதை சரியாக செயல் படுத்துவதிலும் சிறந்தவன் மனிதன்.
ஆனால் அவன் போடும் திட்டங்களை முறியடிப்பதில் வல்லவன் இறைவன்.
அதற்காகவேதான் காதல் என்ற ஒன்றை இந்த பூமியில் காற்றோடு கலக்க விட்டு பரவ விட்டு இருக்கின்றான் போலும்.  
யசோதாவின் மூலம் விஷயமறிந்த முதலமைச்சர் கனகவேல் ராஜாவுக்கு கோபம் தலைக்கேறி இருந்தது.
“அந்த சங்கர வர்மாவ குடும்பத்தோட தூக்கி கொன்னு புதைங்க” என்று கத்த
“ஐயா இலெக்ஷன் வேற நெருங்கிருச்சு. இந்த நேரத்துல போய் இப்படி ஒரு சம்பவம் நடந்தா… ஆட்ச்சி கூட மாற வாய்ப்பிருக்கு. கொஞ்சம் பொறுமையா ஹாண்டல் பண்ணலாம்” அவரின் அரசியல் ஆலோசகரரான நல்லதம்பி சொல்ல கனகவேல் ராஜாவின் கோபம் அடங்குவது போல் தெரியவில்லை.
“அப்போ எக்சிடன் பண்ணி குடும்பத்தோட தூக்க சொல்லு” கர்ச்சித்தவாறே குறுக்கும் நெடுக்குமாக நடக்கலானார்.
“அதுவும் நீங்க சொல்றது போல அவ்வளவு ஈஸி இல்ல. சங்கரவர்மா சாதாரண ஆளு இல்லையே! எது பண்ணாலும் உடனே! பண்ண முடியாது. முறையா பிளான் பண்ணனும். சொதப்பினா ரிட்டன் அடிப்பாரு. காண்ட்ராக்ஷன் அசோஷியேஷனோட ஹெட் அவரு”
“என் பையன் எதிர்காலம் புதைகுழில போறத பார்க்க சொல்லுறியா? எங்க டா கோதாண்டம். எங்க போய் தொலைஞ்சான்”
“அவரு இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்க சங்கரவர்மா வீட்டுத்தான் அவர் பொண்ண கூட்டிகிட்டு போய் இருக்காரு”
“யார் வீட்டு பொண்ண எங்க கூட்டிகிட்டு போய் இருக்கான். வரட்டும் அவன். முதல்ல அவன போடுறேன்”
“ஒன்னு மட்டும் பண்ணலாம் சங்கரவர்மா பையன கடத்தி கொன்னு, நம்ம தம்பிக்கும், கோதாண்டத்தோட பொண்ணுக்கும் உடனே! கல்யாணம் பண்ணலாம்”
“உடனே! கல்யாணம் பண்ண முடியாது. கிருஷ்ணாவோட இருபத்தி அஞ்சாவது வயசுலதான் கல்யாணம் பண்ணனும்னு ஜோசியர் சொல்லிட்டாரு. ஆமா கிருஷ்ணா எங்க? ரெண்டு நாளா அவனை பார்க்கவே! இல்ல” என்றவாறே யசோதாவுக்கு அலைபேசியில் அழைத்து விசாரித்தவர் காண்டாகி
“நல்ல நேரம் பார்த்தான் ஊரு சுத்த. இங்க ஒருத்தன் அவன் பொண்டாட்டிய தள்ளிக்கிட்டு போய்ட்டான். இது தெரியாம அவன் ஊரு சுத்திகிட்டு இருக்கான். இவன பெத்ததுக்கு நாலு எரும மட்ட மேஞ்சி இருக்கலாம்” வளமை போல் கிருஷ்ணாவை வசைப்பாட ஆரம்பித்திருந்தார்.
“ஒன்னு பண்ணலாம் ஐயா. ஜோசியர் கிட்ட ஆலோசனை கேக்கலாம். ஒன்னும் பண்ண முடியலைன்னா பையன தூக்கிடலாம்”
“எல்லாம் ரெடி பண்ணி வை” என்றவர் ராமானுஜத்தை அழைத்தார்.
“அஜ்ஜு… அஜ்ஜு… இங்க வா” சங்கரன் அர்ஜுனை அழைக்க,
“எதுக்கு இப்போ அவன் பேர ஏலம் போடுறீங்க. இப்போ அவனுக்கு கல்யாணமாக்கிருச்சு. மருமக வேற வீட்டுல இருக்க. கொஞ்சம் மரியாதையா பேசுங்க”  
“கல்யாணம் பண்ணுற வயசா அவனுக்கு? அவனுக்கு நான் மரியாதை கொடுக்கணுமா?புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருக்கு எல்லாம் என் நேரம் டி…” முணுமுணுமுத்தவர் மனைவியை முறைத்தவாறே
“என்ன டேட்” என்று வந்து நின்றவனிடம்
“கல்யாணம் முடியும் வரைக்கும் காலேஜ் போக வேணாம்” என்று சொல்ல
“ஏன் டேட். சி.எம் ஏதாவது பிரச்சினை பண்ணுவார்னு நினைக்கிறீங்களா?”
விளையாட்டு பிள்ளை என்று நினைத்தவன் இவ்வாறு பேசவும் “கண்டிப்பா பண்ணுவாரு. நாமதான் பாதுகாப்பை இருக்கணும். அதுக்காகத்தான் போக வேணாம்னு சொன்னேன்”
“ஓகே டேட்” என்று அர்ஜுன் சொல்ல
“நான் அதிகிட்ட பேசிட்டு வரேன்” என்று நகர்ந்தார் சங்கரன்.
“காலேஜ் போக வேணாம்னா இந்த கரடிக்கு அப்படியொரு ஆனந்தம்” என்று அனி அர்ஜுனின் முதுகில் அடிக்க,
“அவன பேசலான உனக்கு நிம்மதி இல்லல. நாக்கை அடக்கு அனி. மாலனி இருக்கா. அவ காதுல விழுந்தா என்ன ஆகுறது” வாகை சொல்ல
சத்தமாக சிரித்தவள் “யாரு மாலனியா? அவ ஏற்கனவே! கொரங்குனு சொல்லிட்டா நான் கரடின்னு சொல்றதுல ஒன்னும் தப்பில்ல” என்று அனி சொல்லும் பொழுது அதை காதில் வாங்கிய வாறு அங்கு வந்த மாலனியின் முகம் மாறியது.
“ஐயோ இந்த அனி இப்படி போட்டு கொடுத்துட்டாளே! இந்த புது மாமியார் என்ன சொல்ல போறாங்களோ!” டென்ஷனாக மாலனி வாகையின் முகம் பார்க்க,
“வாம்மா மாலினி. வந்து என் பக்கத்துல உக்காரு” என்று அவளை அருகில் அமர்த்திக் கொண்டாள்.
“உங்கள நான் எப்படி கூப்பிடனும்” மாலினி கண்ணில் எதிர்பார்ப்போடு கேக்க
“ஏன்மா அத்தைன்னுதான்” வாகை புரியாது அவள் முகம் பார்க்க
ஒரு நொடி கவலைக்குள்ளான மாலினி “அர்ஜுனை பார்த்தவாறு “நான் உங்கள அம்மானு கூப்பிடவா?” என்று கேக்க
“ஆ.. என் அம்மாவை நீ அம்மானு கூப்டு. இதோ இவள அக்கானு கூப்டு. என்ன அண்ணனு கூப்டு. சரியா போச்சு. ஒழுங்கு மரியாதையா அத்தைனு கூப்டு. அம்மாவாம் அம்மா. அத்தைய அம்மானு கூப்பிட்டா புருஷன அண்ணனா கூப்பிடுவாங்க” அர்ஜுன் முறைக்க
“போடா பொறாமை புடிச்சவனே!” என்ற வாகை “அவன் அப்படிதான்மா… சின்ன வயசுல இருந்து இதோ அனிய கூட நெருங்க விட மாட்டான். நீ நாம ரெண்டு பேரும் தனியா இருக்கும் பொழுது மட்டும் அம்மானு கூப்டு. சரியா” என்று மாலினியின் நாடியை தடவ வாகையை கட்டிக்கொண்டவள்
“நான் கொஞ்ச நேரம் உங்க மடில படுத்துக்கவா?”
“அம்மா…” என்று அர்ஜுன் கத்த
“போச்சா அம்மா மடியும் போச்சா.. இன்னும் இந்த வீட்டுல என்ன எல்லாம் போக போகுதோ! தெரியலையே! அஜ்ஜு நீ தெரியாம பண்ண ஒரே ஒரு தப்புக்கு இன்னும் என்னவெல்லாம் நீ அனுபவிக்க வேண்டி இருக்குனு தெரியலையேப்பா… தெரியலையே!” அனி ராகமா அர்ஜுனை வம்பிழுக்க அவளின் தலையில் கொட்டியவன் இடத்தைக் காலி செய்ய அனியின் அலைபேசியும் அடித்தது.
இயக்கி காதில் வைக்க விழிதான் பேசி இருந்தாள் “அஜ்ஜு ஏன் போனே எடுக்க மாட்டேங்குறான்” எடுத்த எடுப்பிளையே!! கேட்டிருக்க,
“அவனுக்கு மாலினியோட கொஞ்சவே! நேரமில்லை இது போன் எங்க பேசுவான்” என்று இவளும் சொல்ல கடுப்பானவள் அலைபேசியை வைத்திருந்தாள். 
அனி அர்ஜுனின் மேல் இருந்த கடுப்பில் அவ்வாறு சொல்லி இருந்தாலே! தவிர யோசித்து ஒன்றும் சொல்லி இருக்கவில்லை.
“அர்ஜுனுக்கு அந்த மாலினிகிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு” என்று கோபமாக தந்தையின் முன் நின்ற விழி அதீசனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்திருந்தாள். 
மங்கை மகளை சந்தேகமாக பார்க்க, தனதறைக்குள் புகுந்துக்கொண்டவள் “அர்ஜுன் என்னதான் லவ் பண்ணுறான். இப்போ இருக்குற சிட்டுவேஷனுக்கு அதீய கல்யாணம் பண்ணி அந்த வீட்டுக்குள்ள போய் மாலினியை துரத்தணும். அப்பொறம் அதீகிட்ட பேசி டிவோர்ஸ் வாங்கி அர்ஜுனன் கல்யாணம் பண்ணிக்கணும். யெஸ்.யெஸ். கிரேட் பிளான். விழி. யுவர் ஆர் எ ஜீனியர்ஸ்” என்று மார்தட்டியவள் மொக்கையான ஒரு ஐடியாவை பிளானாக போட்டு வைத்து சந்தோசப்பட்டுக்கொண்டாள்.
மகள் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சந்தோசத்தில் செந்தில் நண்பனை அழைத்துப் பேச, மங்கைக்கு நடப்பது எதுவும் சரியாக படாததால் அவள் யாரையோ! அழைத்துப் பேசலானாள். 
 “டைகர் டோன்ட் ரன் டோன்ட் ரன்” என்றவாறு ஓடிவந்த அனி ஒருவனின் மேல் மோதி இருவரும் விழ,
“ஐயோ அம்மா..” என்றவன் கண்ணாடியை தேட
“மம்மி..” என்றவாறு அனியும் தனது மூக்குக்கண்ணாடியைத்தான் துழாவிப் கொண்டிருந்தாள்.
ஒருவாறு கண்டு பிடித்து அணிந்துக்கொண்டவள் “ஹே ஆனந்த் வாட் எ பிளேசன்ட் சப்ரைஸ். இங்க என்ன பண்ணுறீங்க?” இதுவரைக்கும் வீட்டுக்கு வராதவன் வந்திருக்கானே!   என்று அனி கேக்க
“ஆ.. புல்லு புடுங்கி கிட்டு இருக்கேன்” என்றான் கடுப்பாகி”
கண்ணாடி கையில் சிக்காமல் புற்தரையை தடவிக்கொண்டிருப்பதைத்தான் அவ்வாறு கூறுகிறான் என்று கருதிய அனி சிரித்தவாறே அவன் கண்ணாடியை எடுத்து கொடுக்க எண்ணிய நேரம் அவள் குறும்பு தலை தூக்க அவள் கண்ணாடியை அவனிடம் கொடுத்திருந்தாள்.
அவசரத்தில் அது தன்னுடையதா என்றும் பார்க்காமல் அணிந்துக்கொண்டவன் அவளை பார்க்க எனோ அவள் முகம் தெளிவாக தெரிவது போல் இருக்க,
“சார் வரசொன்னாரு சார் எங்க?”
“டேடி உள்ள தான் இருக்காரு” என்றவள் “டைகர் எங்க ஓடின” என்று கத்த
“டைக்காரா? புலியெல்லாமா வளக்குறீங்க? இது தெரியாம அசால்ட்டா வந்துட்டேனே!” என்று சுற்றியும் நோட்டம் விட
“கிண்டல் பண்ணாதீங்க ஆனந்த். டேடி வைட் பண்ணிக்கிட்டு இருப்பாரு போங்க” என்றவள் அவன் செல்லும்வரை அங்கிருந்து அசையவில்லை. அவளுக்குத்தான் கண்ணாடி இல்லாமல் கண்ணு தெரியாதே! அவன் சென்றதும் அவன் கண்ணாடியை போட்டு பார்த்தவள்
“ரெண்டு பேருக்கும் சேம் நம்பரா?” என்றவாறு டைகரை தேடிச்சென்றாள்.
புன்னகை முகமாகவே! அலைபேசி உரையாடலை முடித்துக்கொண்டு வந்தமர்ந்தார் சங்கரன்.
அவர்கள் இருவரும் ஏதாவது முக்கியமான விஷயம் பேசுவார்கள் என்று மாலினி எழுந்து உள்ளே சென்று விட “என்ன முகத்துல பிராகாசமான பல்பு எரியுது” என்று வாகை கணவனை வாரியாவரே! கேக்க
“இங்க நடந்த எல்லா விஷயத்தையும் அதீ கிட்ட சொல்லிட்டேன். அர்ஜுன் பிரச்சினைக்கு உடனே! ஜோசியரை பார்த்து பேசவும். அவரே! ஒரு நல்ல முடிவு சொல்வாருன்னு சொல்லுறான். அப்படி இல்லனா.. ஒருகை பார்த்துடலாம் டோன்ட் ஒர்ரிபானு சொல்லுறான். செந்தில் பேசினான். விழியும் அதீய கல்யாணம் பண்ணிக்க முழு மனசா சம்மதிச்சிட்டாளாம். அதீயும் கல்யாண வேலைய பாருங்கப்பா நான் வந்துடுறேன்னு சொன்னான்”
“ஹ்ம்ம்” என்ற வாகை எதுவும் பேசவில்லை.
“சார் மே ஐ கமிங்” என்றவாறு ஆனந்த் வர
“உள்ள வா ஆனந்த்” என்ற சங்கரன் உடனே! ஜோசியரை அழைத்து சந்திக்க முடியுமா என்று கேக்க சொல்ல ஆனந்தும் அழைத்துப்பேச அவர் சி.எம் வீட்டுக்கு கிளம்புவதாக கூற அலைபேசி சங்கரனின் கைக்கு மாறி இருந்தது.
“வணக்கம் ஜோசியரே!”
“அடடே! சொல்லுங்க சங்கரன் சார். நல்லா இருக்கீங்களா?”
“எங்க ஜோசியரே. நல்லா இருக்க விடமாட்டாங்க போல இருக்காங்க” சங்கரன் விரக்தியாக சொல்ல
“என்ன பிரச்சினை”
“இப்போ நீங்க சி. எம் வீட்டுக்கு போறது கூட என் பிரச்சினை சம்பந்தமா தான்” என்ற சங்கரன் சுருக்கமாக விஷத்தை சொல்ல
“ஒன்னு பண்ணுங்க சங்கரன் சார் உங்க பையன், அந்த பொண்ணு ஜாதகம் ரெண்டையும் எடுத்துக்கொண்டு சி.எம் வீட்டுக்கு வாங்க நான் பேசி பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன்”
“ரொம்ப நன்றி” என்ற சங்கரன் ஆனந்தத்தோடு உடனே! கிளம்பி சென்றிருந்தார். செல்லும் வழியில் கோத்தாண்டத்தை அழைத்து விஷயத்தைக் கூறி மாலனியின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சி.எம் வீட்டுக்கு வரும்படி கூறி இருந்தார்.
அனைவரும் சி.எம் மனையியல் கூடி இருக்க, கனகவேல் சங்கரனை கண்டு கொலைவெறியில் இருந்தார்.
“யோ என்னய்யா புள்ளய பெத்து வச்சிருக்க? தாலிய போட்டா கல்யாணம் நடக்கும்னு தெரியாத அளவுக்கு அவன் என்ன சின்ன பாப்பாவா? வேட்டி அவுந்திருச்சாம் பக்கத்துல இருந்த பொண்ணு கழுத்துல தாலிய போட்டுட்டானாம். நல்லா கத சொல்லுறீங்கடா. எங்கிருந்துதான் வாறீகளோ!”
“தலைவரே! அமைதி..அமைதி.. அதான் ஜோசியர் வந்திருக்காருல்ல அவர் பார்த்து சொல்வாரு” நல்லதம்பி சொல்ல பல்லைக்கடித்து அமைதியானாலும் ஒரு நிலையில் கனகவேலின் மனம் இல்லை.
சங்கரனின் மனம் இளைய மகனைத்தான் வசைப்பாடிக்கொண்டிருந்தது. “முடாள் மகன் போயும் போயும் இந்த ஆளுகிட்ட வம்பு வளர்த்து வச்சிருக்கான்” என்று அர்ஜுனை திட்டுவதாக நினைத்து தன்னையே! திட்டிக்கொண்டார்.
ராமானுஜம் கிருஷ்ணா, மாலினி அர்ஜுன் மூவரினதும் ஜாதகங்களை ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர்
“இந்த பொண்ணு கழுத்துல தாலி ஏறினதால கிருஷ்ணா தம்பியோட தோஷத்தை இந்த ஜாதகக்காரியால தீர்க்க முடியாது”
“என்ன சொல்லுறீங்க? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க” கனகவேல் கடுப்பாக
“தெளிவாக சொல்லுறேன் கேட்டுக்கோங்க. அந்த பொண்ணு கழுத்துல இருக்குற தாலிய கழட்டி எறிஞ்சிட்டு உங்க பையனுக்கு கட்டி வைக்க நீங்க நெனச்சீங்கனா அந்த எண்ணத்த கைவிட்டுடுங்க. அதனால உங்க பையன் தோஷம் நீங்கிடாது தாலி ஏறினது ஏறினதுதான். உங்க பையனுக்கு பொருத்தமான வேற ஜாதக்காரியாதான் தேடணும்”
சங்கரன் மற்றும் கோதாண்டம் ஒருவரையொருவர் பார்த்து நிம்மதியாக புன்னகைத்துக்கொள்ள,
“கைக்கெட்டிய பொண்ண இப்படி கோட்ட விட்டுட்டு நா எங்க போய் இன்னொரு பொண்ண தேடுவேன்?” கனகவேல் குதிக்க,
தாடியை தடவியவாறே! “உங்க பையனுக்கு இப்போதான் இருபத்தி ஒரு வயசு இல்லையா? இன்னும் நாலு வருஷம் இருக்கு. என் கிட்ட வர ஜாதகங்கள் கூட நான் பாக்குறேன். இந்த பெண்ணுக்காக இந்த குடும்பத்தை ஏதாச்சும் பண்ண நினைக்காதீங்க. பாவக்கணக்கு கூடிகிட்டே போனா யோகம் கூடவும் பல தடங்கல் ஏற்படலாம். அத நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டியதில்லை. நீங்க கடந்து வந்த பாதையும் அப்படித்தானே! சில விஷயங்களை நான் சபைல பேச முடியாது” ஜோசியர் கனகாவேலை லாக் பண்ண
“ம்ம்” என்றவர் சங்கரனை பார்த்து “என்னால எந்த பிரச்சினையும் வராது அதான் ஜோசியரே! சொல்லிட்டாரே. தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணாலும் எந்த பிரயோஜனம் இல்லனு”   கடுப்பாகி சொன்னவர் கையால் செய்கை செய்து கிளம்பும் படி சொல்ல
“அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன். அடுத்த வாரம் கல்யாணம் வச்சிருக்கேன். ஐயா வந்து வாழ்த்திட்டு போகணும்” என்று பவ்வியமாக சொல்லி கோத்தாண்டத்திடம் கண்ணசைவில் விடைபெற்று சங்கரன் ஆனந்தத்தோடு கிளம்பி இருந்தார்.
செல்லும் வழியில்தான் ஆனந்துக்கு கண்ணாடி மாறிப்போன விஷயமே! தெரிந்திருந்தது.
ராமானுஜம் தலையிட்டதில் எந்த சிக்கலும் இல்லாமல் இந்த பிரச்சினை முடிவுக்கு வர கல்யாண வேலைகளை பார்க்க ஆரம்பித்திருந்தனர் வீட்டார்.

Advertisement