Advertisement

அத்தியாயம் 6
மாலை மங்கும்வேளை அந்த நட்சத்திர ஹோட்டலின் வாசலில் வந்தோரை வரவேற்றுக்கொண்டிருந்தனர் வர்மா குடும்பத்து ஆண்கள்.
அதே ஹோட்டலில் ஒரு அறையில் தனது பிறந்தநாளைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருந்தாள் அனன்யா.
மேற்கெத்தேய வடிவமைப்பில் ஒரு பார்ட்டி கவுன். கையில்லாமல், உடலை ஒட்டி, முழங்கால்வரை திறந்து, தகதகவென மின்னிக்கொண்டு இளநீல நிறத்தில் ஒல்லியான அவள் தேகத்துக்கு கனகர்ச்சிதமாக பொருந்தி பார்பி பொம்மைபோல் காட்ச்சியளிக்கலானானாள்.
“இந்தா… இந்த பிளாட்டினத்தை போட்டுக்க” வாகை ஒரு நெக்லஸ் மற்றும் ஒற்றை வளையலைக் கொடுக்க,
“தாங்க யு மம்மி” என்றவள் அதை அணிந்துக்கொண்டு அதற்கு பொருத்தமான வைர காதணியையும் அணியும் வேளை வாகையின் அலைபேசி அடிக்க, இயக்கி காதில் வைத்து பேசியவள்
“அனி… மங்கையும், விழியும் வந்துட்டாங்களாம். நான் கீழ போறேன். நீ வா… மறக்காம கண்ணுக்கு லென்ஸ போட்டுக்க” என்று விட்டு வாகை கிளம்பி இருந்தாள்.
“ஓகே மம்மி” என்ற அனி நகைகளை அணிந்துக்கொண்டு கண்ணுக்குப் போட லென்ஸை தேட அது கிடைத்த பாடில்லை.
“ஐயோ… கண்ணாடியை போட்டுட்டு போனா மம்மி திட்டுவாங்களே!” டென்ஷனாகவே! பேர்ஸையும் எடுத்துக்கொண்டு கதவை பூட்டியவள் மின்தூக்கியினுள் நுழைய முற்பட கண்ணாடி அணிந்திருக்கவில்லை என்பதால் ஹை ஹீல்ஸ் வேறு தடுக்க விழப்போனவளை  தாங்கிப் பிடித்திருந்தது இருக்கரங்கள்.
அவள் தோள் பட்டையை இறுக்கிப் பிடித்த அவன் கைகளின் சூடு அவளின் உடல் முழுக்க தாவ, புதுவித உணர்வுக்குள் சிக்குண்டவள் நிலையில்லாமல் தடுமாறும்வேளை மின்தூக்கியினுள் உள்ளே இருந்தவன் இழுத்து நிறுத்தி இருந்தான். அவனுக்குள் அப்படி எந்த வேதியல் மாற்றமும் நிகழவில்லை போலும், இரும்பாக நின்றிருந்தான்.    
“தா..ங்க்..ஸ்” பிற ஆடவனின் முதல் ஸ்பரிசம் சற்று தடுமாறியவாறே அவன் முகம் பாராமல் நன்றி சொன்னவள் அவள் செல்ல வேண்டிய தளத்தின் எண்ணை அழுத்த போக ஏற்கனவே! அழுத்தி இருப்பதைக் கண்டு தடதடக்கும் இதயத்தை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினாள்.
“பார்ட்டி இன்னும் ஆரம்பிக்கவே! இல்ல அதுக்குள்ள போதை தலைக்கேறி போச்சா?” வெறுப்பாக தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
பார்த்திருந்தால்தானே! அவள் தடுமாற்றம் புரியும்.
“நீங்களும் பார்ட்டிக்கிதான் வந்திருக்கிங்களா?” அவள் செல்ல வேண்டிய தளத்துக்கு செல்கின்றானே என்று அனி அவன் புறம் திரும்பாமல் கேட்க,
“இந்த பார்ட்டியையே! ஓர்கனைஸ் பண்ணது நான்” அவன் மைண்ட் வாய்ஸ் கேலி செய்ய அவளை முறைக்க முடியாமல் “ஐம் ஆனந்த் மேம். மிஸ்டர் சங்கர வர்மாவோட பி.ஏ.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். சம்பளம் தரும் முதலாளியின் மகளாயிர்றே! மரியாதை கொடுத்துத் தானே! ஆகா வேண்டும்.
அனியை அடிக்கடி கம்பனி வாசலில் ஆனந்த் பார்த்திருக்கின்றான். ஷாப்பிங் சென்ற பைகளோடு வருபவள் அதீசனை அழைத்து பணம் வாங்கிக்கொண்டு போவாள். அவளின் ஏ.டீ.எம் கார்டுக்கு மாதாந்தம் இவன்தான் பணம் போட்டு விடுவான். எவ்வளவு தொகை போடுவான் என்று போடுபவனுக்கு தெரியாதா? அதுவும் பத்தாமல் மாதம் கடைசியில் தவறாமல் பணத்துக்காக வந்து விடுவாள்.
படித்து முடித்து விட்டு கம்பனிக்கு வந்து வேலை பார்க்கா விட்டாலும் பரவாயில்லை. இப்படி அப்பா சம்பாதிப்பதை அநியாயமாக செலவு செய்கிறாள் என்ற அவள் மீதான வெறுப்பு ஆனந்துக்கு உருவாக்கி இருக்க, அவளை எங்கு பார்த்தாலும் முகம் சுளிப்பான். இன்று அவன் பார்வையில் குடித்து விட்டு வேறு வந்திருக்கிறாள்.
“ஓஹ்… டேடி பி.ஏ வா… ஆமா என்ன பாடி ஸ்பிரேய யூஸ் பண்ணுறீங்க, ரொம்ப மட்டமான ஸ்மெல்லா இருக்கு” பட்டென்று கேட்டு விட
பல்லைக் கடித்தவன் “மூவாயிரம் ரூபா பாடி ஸ்ப்ரே உனக்கு மட்டமான ஸ்மெல்லா” கோபம் சுள்ளென்று ஏறினாலும் பதில் பேசாது மௌனத்தையே! கடைபிடிக்க, மின்தூக்கியும் திறந்துகொண்டது.
வெளியேறும் பொழுது மீண்டும் விழப்போனவளை அனிச்சையாக பிடித்து நிறுத்தி இருந்தான் ஆனந்த்.
அது யாராக இருந்தாலும் செய்திருப்பான். “சே… விழ விட்டிருக்கணும்” அவன் மைண்ட் வாய்ஸ் சொல்ல மனம்தான் பார்ட்டியில் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்னு சொன்னது.  
“தாங்க யு ஆனந்த்” என்றவள் இந்த முறை அவன் முகம் பார்த்து கூறி விட்டே அனி விடை பெற்றாள்.
மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விட்டாள். அது அவள் பணத்திமிர் என்று ஆனந்த் நினைக்க, அது அனியின் குழந்தைக்  குணம் என்று அவனுக்கு புரியவில்லை. யாரோ ஒருவன் என்றுதான் முகம் பார்க்காமல் நன்றி கூறினாள். தந்தையிடம் வேலை பார்ப்பவன் என்று அறிந்த பின்தான் முகம் பார்த்துப் பேசினாள். ஒருவகையில் அறிந்தவன் என்ற எண்ணம்தான். அவள் அவனை பற்றி நல்ல முறையில் நினைக்க, அவனோ!   
“ஆளும், ட்ரெஸ்ஸும். பஞ்சத்துல அடிபட்டவ போல,  இதுக்கு துணி போடாமலையே! இருந்திருக்கலாம்” அனியை கண்ட மேனிக்கு வசைபாடியவாறே பார்ட்டி ஹாலை அடைந்தான் ஆனந்த்.
ஆனந்த் சங்கர வர்மாவின் பி.ஏ. சங்கரவர்மாவின் வலதுகை. அவர் எள் என்றால் இவன் எண்ணெய்யாக நிற்பான். ரொம்பவே! புத்தி கூர்மையானவன். திராவிட நிறம்தான். அவன் முகத்துக்கு சற்றும் பொருந்தாதது அவனின் கண்ணாடி மட்டுமே! அதை பற்றியெல்லாம் அவனுக்கு கவலை கூட கிடையாது. சட்டைக்கு போடும் கஞ்சியையும் உள்ளே! தள்ளியவன் போல் விறைப்பான ஒரு தோற்றம்.
பார்ட்டிக்கான உணவுகள் அனைத்தும் தயாராகி விட்டனவா என்று பார்க்க சென்றவனுக்குத்தான் அனியின் தரிசனம் கிடைத்திருந்தது. என்னதான் சங்கரவர்மாவின் பி.ஏ என்றாலும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆனந்த இந்த பணக்கார வர்க்கத்தின் கலாச்சாரத்தை முற்றாக வெறுத்தான். நல்ல சம்பளத்தில் வேலை. வேலையை மட்டும் சரியாக பார்ப்பான்.  
பார்ட்டி ஹால் மிதமான ஒளியில் இருக்க, அனியால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் தடுமாறியவாறு நடக்க, அவள் பின்னாடி வந்த ஆனந்த் அவள் விழுந்து விட்டால் பிரச்சினையாகும் என்று அவளை பிடித்தவாறு வர தன்னை தாங்கிப்பிடுத்தது யார் என்று பாடி ஸ்ப்ரேயை வைத்தே! கண்டுகொண்டவள்
“என்ன மம்மி கிட்ட விட்டுடுங்க ஆனந்த்” என்றாள். கொஞ்சும் குரலில் அனி பேச அக்குரல் குடித்து விட்டு குளறுவது போல்தான் ஆனந்தின் காதில் விழுந்தது. 
“இருக்குற வேலைல குடிகாரியெல்லாம் தாங்கிப்பிடிக்க வேண்டியதாயிருக்கு” கோபத்தை கட்டுப்படுத்தியவாறே ஆனந்த் நடக்க, கூடியிருந்த கூட்டம் இருவரையும் பார்த்திருந்தனர். 
வாகை அனிக்கு என்ன ஆச்சோ என்று பதறியவாறு வந்து “என்ன ஆச்சு அனி…” என்று விசாரிக்க,
“மம்மி என் லென்ஸ் மிஸ் ஆச்சு… எங்க வச்சேன்னு தெரியல, நீங்க கண்ணாடி வேற போட வேணாம்னு சொல்லிடீங்களே! கண்ணு சரியா தெரியாம விழப்போனேன். ஆனந்த் தான் கூட்டிட்டு வந்தாரு” குழந்தையையாய் சிணுங்கியவாறே அன்னையிடம் முறையிட்டாள் அனி.
“என்னது கண்ணாடி போடாம கண்ணு தெரியாதா?” ஆனந்த் சற்று சத்தமாகவே! கேட்டிருந்தான். குடித்து விட்டு அதை வாகையிடமிருந்து மறைப்பதற்காக அனி பொய் சொல்வதாகத்தான் அவனுக்கு தோன்றியது.
“இது தெரியாமத்தான் நீ பிடிச்சிட்டு வந்தியா?” என்று வாகை பார்க்க,
“அவ குடிச்சா என்ன? விழுந்தா என்ன? சேர்க்க வேண்டிய இடத்து சேர்த்தாச்சு” சுதாரித்தவன் “எனக்கும் அதே பிரச்சினைதான்” என்றவன் புன்னகைத்தவாறே இடத்தை காலி செய்திருந்தான்.
“ஒரு பொருளை கொடுத்தா பத்திரமா வச்சிகிரியா? ஆள் தான் வளர்ந்திருக்க, கொஞ்சம் கூட பொறுப்பில்லை” வாகை அடிக்குரலில் சீற,
“மம்மி டுடே மை பர்த்டே” அழுகுரலில் கூறினாள் அனி. 
“கண்ணாடி இல்லாம கேக் எப்படி வெட்டுவ?” வாகை கடிய
“நீ ஹெல்ப் பண்ணு” குழந்தையாய் வாகையின் முந்தானை நுனியை திருக,
“நீ என்ன பாப்பாவா? கண்ணாடியாவாச்சும் எடுத்துட்டு வந்தியா?”
“அச்சோ ரூம்லயே! விட்டுட்டு வந்துட்டேன்”
“விளங்கிடும்” என்ற வாகை கணவனை அழைத்து விஷயத்தை சொல்ல தாங்கள் யாரும் செல்ல முடியாததால் ஆனந்தை அழைத்து அனி தங்கியிருந்த அறைக்கு அனுப்பி வைத்தார் சங்கர வர்மா.
“அப்போ உண்மையில்லையே! கண்ணு தெரியாமத்தான் விழப்போனாளா?” ஆனந்தத்தால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “ஊதாரி மட்டும்தான் அப்போ குடிகாரி இல்ல” தனக்குள் சொல்லிக்கொண்டவன் மீண்டும் “அது பார்ட்டி முடியும் பொழுது தெரிஞ்சிட போகுது” அனியை பற்றின நல்லெண்ணம் அவனுக்கு வரவே! இல்லை.
அனி தங்கியிருந்த அறைக்கு செல்ல பார்ட்டிக்கு செல்லும் அவசரத்தில் கழட்டிய துணி கட்டிலில், பொருட்களை கண்ட இடத்திலும் போட்டு விட்டு வந்திருந்தாள். அதையெல்லாம் பார்த்தவன் “பொறந்ததிலிருந்த வேலைக்கு ஆள் வச்ச இப்படித்தான் தன்னுடைய வேலைய கூட செய்யாதுங்க” கண்டமேனிக்கு திட்டியவாறு  கண்ணாடியை தேட அங்கே சன்கிளாஸ் ஒன்றை தவிர வேறு ஒன்றும் இல்லை. “இதைத்தான் அவ ஷாப்பிங் போகும் போது கூட போடுவா. என்று அதை எடுத்துக் பார்க்க, அது உயர்ரக மூக்குக் கண்ணாடி என்று புரிய, தான் அணிந்திருந்த கண்ணாடியை நிலைக்கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக்கொண்டவன் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
அவன் வாங்கும் சம்பளத்துக்கு நல்லதாய் ஒரு கண்ணாடி வாங்க முடியாமலில்லை. ஆடம்பர செலவு எதற்கு என்றுதான் வாங்கவில்லை. கண்ணாடியை எடுத்துக்கொண்டு திரும்பியவனின் கண்ணில் பட்டது லென்ஸ். அதையும் எடுத்துக்கொண்டு பார்ட்டி ஹாலுக்கு சென்றான்.
லென்ஸையும், கண்ணாடியையும் வாகையின் கையில் கொடுத்தவன் ஒதுங்கி கொள்ள, வாகை அனியை குளியலறைக்கு அழைத்து செல்வது அவன் கண்ணில் பட்டது. அதன்பின் அவனுக்கு அவர்களை பார்க்க நேரமிருக்கவில்லை. சொன்ன நேரத்துக்கு கேக் பார்ட்டி ஹாலுக்கு வந்தாக வேண்டும். அதை கவனிக்க சென்று விட்டான். 
சங்கர வர்மா உரையை முடித்துக்கொண்ட உடனே! பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அனி கேக்கை வெட்டி தந்தைக்கு ஊட்டி விடப்போக, அர்ஜுன் பாய்ந்து அவள் கையை பிடித்து கேக்கை அவன் வாயில் திணித்துக்கொண்டிருந்தான்.
“பாருங்க டேடி…” என்று அங்கேயும் அவள் புகார் வாசிக்க,
அர்ஜுனின் தோளில் அடித்த அதீசன் “இன்னைக்காவது பேபிமாவ சீண்டாம இரேண்டா…”
“முதல்ல கடைக்குட்டி சிங்கத்துக்குத்தான் தரணும் அதான் எழுதப்படாத சட்டம்” என்று அர்ஜுன் சொல்ல
“கடைக்குட்டி சிங்கமா நீ… கடைக்குட்டி நாய்..” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறியவள் தந்தைக்கும், தாய்க்கும் கேக்கை ஊட்டி விட்டு அதீசனுக்கு ஊட்டினாள்.
அகல்விழி தனக்கும் ஊட்டிவிடுவாள் என்று எதிர்பார்க்க, அனிக்கு அந்த யோசனையெல்லாம் வரவே! இல்லை. அவள் அர்ஜுனோடு சண்டை போடும் வேலையில் இறங்கி இருந்தாள்.
அனி தன்னை இந்த குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கோபம் விழிக்கு சிறிதாக எட்டிப்பார்த்தாலும், அனி குழந்தை போல் எப்போ எதை செய்வாள் என்று அவளே! அறியாததால் அதை பெருசு படுத்த தோன்றவில்லை.
“என்ன நாய்னு சொன்ன இல்ல. உனக்கு கிப்ட் இல்ல போ…” அர்ஜுன் முறிக்கிக்கொள்ள
“மிஞ்சி போனா.. ஐஸ் கிரீம் வாங்கித் தருவ, அத நான் அதீ கிட்டயே! கேட்கிறேன்” அனியும் முகத்தை திருப்ப,
“சண்டை போடாம இருந்தா ரெண்டு பேருக்கும் நான் கிப்ட் தருவேன். இல்லனா நோ கிப்ட்” என்றான் அதீசன்.
“ஓகே… சரண்டர்” என்றவாறு அர்ஜுன் தன் நண்பர்களோடு ஐக்கியமாகி விட அகல்விழியும் அவனோடு சென்றாள். சங்கர வர்மாவும் செந்திலும் பிஸ்னஸ் சம்பந்தமானவர்களோடு பேச,
“எங்க அதீ அவன் இன்னைக்கும் வரலையா??” வாகை கேக்க
“உங்களுக்குத்தான் அவனை பத்தி தெரியுமே! மம்மி” என்ற அதீசன் அனியை அழைத்துக்கொண்டு நடமாட செல்ல,  வாகையும் மங்கையும் ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டனர்.
மங்கைக்கு வாகையிடம் அர்ஜுன் மற்றும் அகல்விழியின் திருமணத்தை பற்றி பேசவா? வேண்டாமா? என்று ஒரே குழப்பம். செந்தில் வேண்டாம் என்ற பின்னும் பேசி அது ஏதாவது ஒரு பிரச்சினையில் வந்து விடியுமோ! என்ற அச்சம் வேறு.
“பசிகலயா மங்கா?” வாகை கேக்க
“ஆ… இல்ல. அவங்களும் வரட்டும்” என்று கணவனின் புறம் பார்த்து சொல்ல வாகையின் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது.
“இவங்க ரெண்டு பேருக்கும் நல்ல வரன் அமைஞ்சா… ஒரே மேடைல கல்யாணத்த நடத்தலாம். அதீசன் பிடி கொடுக்க மாட்டேங்குறான். அனிக்கு வீட்டோட மாப்புளத்தான் பார்க்கணும்” கலங்கிய குரலில் வாகை சொல்ல,
“ஏன் வாகை… நம்ம வசதியோடு இருக்குறவங்க, வீட்டோட மாப்பிள்ளையா இருக்க, சம்மதிப்பாங்களா?” யோசனையாக கேட்டாள் மங்கை.
“என்ன பண்ண போறேனோன்னு தெரியல மங்கா.. மூணு பசங்க கல்யாணமும் எந்த பிரச்சினையும் இல்லாம நடக்கணும்னு அடுத்த வாரம் பூஜைக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். நீயும் குடும்பத்தோட கலந்துக்க” என்ற வாகை விவரங்களை கூறலானாள். 
அதீசனுக்கும், அனன்யாவுக்கும் திருமணம் இன்னும் அமையாததால் பூஜை பரிகாரம் ஏதாவது செய்யலாமா? என்று கேட்கத்தான் மங்கை நினைத்திருந்தாள். வாகையே! கூறியதில் மங்கை சற்று நிம்மதியாகவே! உணர்ந்தாள்.
சக்கரனும், செந்திலும் வர பெண்கள் இருவரும் அவர்களோடு சேர்ந்து சென்று பூப்பேயில் உணவுப்பரிமாறிக்கொண்டு வந்து உண்ணலாயினர்.
“இன்வைட் பண்ணின எல்லோரும் போல வந்திருக்காங்க இல்லையா சங்கரா?” செந்தில் சொல்ல,
“ஆமாம்” என்ற சங்கரனின் பார்வை அதீசன் மற்றும் அனியின் மீதே இருப்பதைக் கண்டு
“என்னங்க பிரச்சினை?” என்று வாகை கேட்க,
“இத்தனை பிஸ்னஸ் குடும்பத்தை இன்வைட் பண்ணி இருக்கோம். எல்லா குடும்பத்திலையும் பசங்க, பொண்ணுங்கனு இருக்காங்க, இந்த அண்ணனுக்கும், தங்கச்சிக்கு வேற யாரையும் கண்ணுல தெரியல பாரேன்” இப்படியே! இருந்தா இவர்களுக்கு திருமணமே! நடக்காது என்று சங்கரன் பேச
“பொறுப்பா நாம கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எதிர்பாக்குறாங்கனு அர்த்தம்னு எடுத்துக்க, சங்கரா… இந்த காலத்து பசங்க என்னெல்லாமோ செய்றாங்க அந்த வகைல நம்ம பசங்க ஒழுங்காதானே! இருக்காங்க” செந்தில் பெருமை பீத்திக்கொண்டார்.
“டேய் என்ன டா பார்ட்டி இது விஷ்கி, பிராண்டி ஒண்ணத்தையும் காணோம் அட்லீஸ்ட் வைன், பீர் எதுவுமே! கிடையாதா?” விகாஷ் அர்ஜுனை போட்டு உலுக்கிக் கொண்டிருக்க,
“ஏன் இல்ல. அதெல்லாம் இல்லாம ஒரு பார்ட்டியா?”
“இருக்கு ஆனா இல்லா மாதிரி கண்ணுலயே! காட்ட மாட்டெங்குறியே!”
“ஓசி சரக்குக்கு நாய் மாதிரி நாக்க தொங்க போட்டுக்கிட்டு அலையுற” விழி கிண்டல் செய்ய,
“பார்டினா சரக்கு, சரக்குனா பார்ட்டி இதுதான்மா கான்சப்ட்டு. பொண்ணு உனக்கு என்ன தெரியும்” விகாஷ் விழியை சீண்ட
“ஏன் பொண்ணுங்க நாம குடிச்சா மட்டும் போதை ஏறாதோ!”  விழி கோபமாக கேக்க,
” போதையெல்லாம் நல்லாத்தான் ஏறும். அப்பொறம் உன் மம்மியை யாரு சமாளிப்பாங்களாம்” என்று அர்ஜுன் சிரிக்க,
“ஏன் நீ சமாளி” என்று புன்னகைத்தாள் விழி.
அந்த பக்கமாக வந்த ஆனந்தை அழைத்து சரக்கு எங்க கிடைக்கும் என்று விசாரிக்க, “மொளச்சி மூணு இல்லை விடல இவனுகளுக்கு சரக்கு ஒரு கேடு” உள்ளுக்குள் புகைந்தவன் வேறொரு ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூற, செந்தில் பேசியதை பொய்யாக்கியவாறு அர்ஜுனும் நண்பர்களும் சத்தமில்லாமல் நழுவி இருந்தனர்.
“நல்லாவே! டான்ஸ் ஆடுற பேபிம்மா.. கிளாஸ் போனியே! ஒழுங்கா கத்துக்கிட்டியானு டவுட்டா இருந்தது இப்போ இல்ல”
“அதீ… அஜ்ஜுவ சீண்டாதனு நீ சீண்டுறியா”
“ஐயோ… இல்ல டா.. உன்ன போய் சீண்டுவேனா?”
“எனக்கொரு அண்ணிய கூட்டிகிட்டு வந்து அவங்க கூட ஆட வேண்டியது. இந்த அனியோட  ஆடிக்கிட்டு இருக்க” எனறவள் நகைக்க,
அவ்வளவு நேரமும் மஞ்சரியின் நினைவுகளில் இருந்து விடுபட்டிருந்தவன் அனி சொன்னதில் மஞ்சரியின் நியாபகம் வர கூடவே! அவளுக்கு அவனுடைய வாழ்க்கை முறையும், கலாச்சாரமும் ஒத்துப்போகாது. அதை அவள் எப்படி ஏற்றுக்கொள்வாள் என்றும் தோன்றியது.
“என்ன அதீ.. கல்யாணம் என்றதும் சீரியஸ் ஆகிட்ட, உண்மையிலயே! கல்யாணம் பண்ணிக்க உனக்கு இஷ்டமில்லையா? ஏதாவது பிரச்சுனை இருக்கா?” கண்ணை உருட்டி கேட்க,
“யாருகிட்ட என்ன கேக்குறதுன்னு இல்லையா அனி. இப்படி கேட்டு வைக்கிற?” அதீசனுக்கு சிரிப்பாக இருந்தது. அனி இப்படித்தான் மனதில் பட்டத்தை சொல்லியும் விடுவாள். கேட்டும் விடுவாள் யார்? என்ன? என்றெல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை.
“ஏதாவது பிரச்சினைனா நாம ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம் அதீ டோன்ட் ஒர்ரி” அவள் சீரியஸாக பேச
சத்தமாக சிரித்தவன் “ஒன்னும் பிரச்சசினை இல்ல. இப்போதான் உன் அண்ணிய கண்டு பிடிச்சு இருக்கேன். கல்யாணம் பண்ண அவ சம்மதம் சொல்லணும். எப்படி சம்மதிக்க வைக்கிறதுன்னுதான் யோசனையா இருக்கு”
“ஹே என்ன லவ்வா? இந்த புள்ள பீர்  சாப்பிடுமான்னு மாதிரி ஒரு மூஞ்சி நீ லவ் பண்ணுறியா? நம்ப முடியலையே!”
“ஏன் நான் லவ் பண்ண கூடாதா?” அனியை ஒரு சுத்து சுத்தி தன்னோடு அணைத்தவாறு கேக்க,
“ஏன் பண்ணக் கூடாது. தாராளமா பண்ணலாமே! அப்படியே! அண்ணிய எனக்கு இண்ட்ரடியூஸ் பண்ணி வச்சா நானும் அவங்களோடு மிங்கில் ஆகிடுவேனே!”
“அட.. பொறு பேபிமா… முதல்ல நான் இண்ட்ரடியூஸ் ஆகிக்கிறேன்” என்றவனின் முகம் புன்னகையை மட்டுமே! தத்தெடுத்திருந்தது.
“பசிக்குது அதீ… சாப்பிடலாமா?”
ஓகே பேபிமா..” என்றவன் அனியை அழைத்துக்கொண்டு பூப்பேயை நோக்கி சென்று உணவை பரிமாறிக்கொண்டவாறே “அஜ்ஜு சாப்பிட்டானா தெரியல”
“அவன் ப்ரெண்ட்ஸ் கூட மொக்கி இருப்பான். அகல் வேற இருக்கா இல்ல”
“ஆமா உன் ப்ரெண்ட்ஸ் யாரையும் ஏன் இன்வைட் பண்ணல. காலேஜுக்கு அப்பொறம் யாரையும் காணோம்” அதீசன் யோசனையாகவே! கேக்க,
“சிலது கல்யாணமாகி பாரின்ல செட் ஆகிட்டாங்க, மீட் பண்ணாலும் பந்தா பண்ணுவாளுங்க, மொக்கையா இருக்கும். என்னமோ! பிரிட்டிஸ் இளவரசிங்க மாதிரியே! பேசுவாளுங்க, என்னால முடியாதுப்பா”
“ஏன் உனக்கு இங்கிலிஷ் வராதா?” சிரித்தான் அதீசன்.
“ஆங்கிலம் ஒரு மொழி. அதுங்க பண்ணுற அலப்பறை, தாங்க முடியாது. நான் சொன்னது பேச்சு மட்டுமில்ல, நடத்தையும்தான். அதான் எல்லாத்தையும் விட்டுட்டேன்”
“சரி வா சாப்பிடலாம்” இருவரும் ஒரு இடத்தில் அமர,
“நாங்களும் ஜோஇன் பண்ணிக்கலாமா?” என்றவாறு ஒரு இளம் யுவதியும், ஆணழகனும் அமர,
“அதான் சரினு சொல்ல முன்னாடியே! உக்காந்துட்டீங்களே!” என்ற அனி அவர்களை பொருட்படுத்தாது சாப்பிட முகம் கருத்தாள் அப்பெண்.
“ஹாய் ஐம் ஆகாஷ் சுக்லா. இது என் சிஸ்டர் சிம்ரன்” அந்த ஆடவும் அனியின் முகத்திருப்பாலை பொருட்படுத்தாது தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள
“ஹாய் சாப்பிடுங்க” அவனுக்கு சுக்லாவை தெரியும். தங்களது பார்ட்டிக்கு வந்திருப்பவர்களை அவமதிக்க முடியாதே! அதனால் முகம் திருப்ப முடியாமல் அதீசன் ஒற்றை வரியில் பதில் சொல்லி விட்டு சாப்பிடலானான்.
ஆகாஷும் விடாது பேச்சுக்கொடுக்க, சிம்ரனும் அனியோடு பேச முயற்சி செய்து தோற்று அதீசனோடு பேச அவனும் சாதாரணமாக பேசியவாறு உன்ன அனி ஒரு வார்த்தை பேசவில்லை. சோறுதான் முக்கியம் என்பது போல் பிரைட் ரைஸை ஸ்பூன் கொண்டு வாயில் திணித்துக்கொண்டிருந்தாள்.
சாப்பிட்டு முடித்த பின்னும் அதீசனோடு கைகழுவ சென்றவள் அவனுடனையே! சுற்றிக்கொண்டிருக்க,
“என்ன பேபிமா  அந்த ஆகாஷ் ரொம்ப தொல்லை பண்ணுறானா? இல்ல, அந்த சிம்ரன்தான் பிரச்சினை பண்ணுறாளா?” என்று கேட்க,
அதிர்ச்சியாக அண்ணன் முகம் பார்த்தவள் “உனக்கு எப்படித்தெரியும்”
“என் பேபிமா.. யாரையும் அவமரியாதையா பேச மாட்டா… அதுவும் அவ பார்ட்டிக்கு வந்த யாரையும் இப்படி பேசவும் மாட்டா.. சம்திங் ராங்”
“நான் போற போற இடமெல்லாம் சிம்ரன் வந்தா… பொண்ணுதானேனு கொஞ்சம் ப்ரேன்ட்லியா பேசினா… அண்ணான்னுனு ஆகாஷ கூட்டிட்டு வந்து கோர்த்து விட பாக்குறா, எனக்கு அவங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே! டவுட்டா இருக்கு”
“ஏன்  அப்படி சொல்லுற?”
“தெரில தோணுது”
“சரி விடு நான் பாத்துக்கிறேன்”
பார்ட்டியிலிருந்து ஒவ்வொருவராக விடைபெற்று செல்ல, கடைசியாக எஞ்சியது சங்கரன் குடும்பமும், செந்தில் குடும்பமும், அவர்களுக்கு ஊழியம் பார்ப்பவர்களும் மட்டுமே! ஆனந்திடம் பொறுப்பை கொடுத்து விட்டு இரண்டு குடும்பமும் வீடு வர நள்ளிரவை தாண்டியிருந்தது.
ஆனந்த் எல்லா வேலையும் முடித்துக்கொண்டு விடியக்காலை என்பதால் அனிக்காக ஒதுக்கி இருந்த அறையில் தங்கிக்கொண்டான். 
அவளின் துணிமணி, மேக்கப் சாமான்கள் என்று எல்லாவற்றையும் அவளை திட்டியவாறே சூட்கேசில் அடைத்தவன் கட்டிலில் விழ, நித்திரா தேவி அவனை தழுவிக்கொண்டிருந்தாள்.

Advertisement