Advertisement

அத்தியாயம் 5
பாடவேளையை ஆரம்பிக்க பிரேயரை முடித்துக்கொண்டு மாணவர்கள் வரிசைக்கிரமமாக தங்களது வகுப்பறையை நோக்கி இரண்டு இரண்டு பேராக ஒரேமாதிரியான சீருடையில் செல்லும் காலை நேராக்கட்ச்சியை பார்த்தவாறு ஆசிரியர்களும் தங்களது வகுப்பறையை நோக்கி நடக்க, மெதுவாக ஊர்ந்து வந்த அந்த அரசு வண்டி கேட்டின் அருகில் நிறுத்தி காவலாளியோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட பாடசாலையின் முதல்வர் அமுதவேணி விறுவிறுவென கேட்டின் அருகில் ஓடாத குறையாக நடந்திருந்தார்.
பாடசாலை கேட்டோ இரண்டு பக்கமாக திறக்கக் கூடிய சாதாரண இரும்பு கேட். உயரம் மாணவர்களின் கழுத்துவரையில்தான் இருந்தது. பாடசாலைக்கு தாமதமாக வரும் மாணவர்களை தடுப்பதற்காகத்தான் கேட்டை பூட்டு வைப்பது இல்லையென்றால் அந்த நேரத்தில் கேட் பூட்டப்பட மாட்டாது. பூட்டினாலும் சில மாணவர்கள் எகிறி குதித்து வர கேட்டோடு விழுந்திருந்தனர்.  
இரண்டு துண்டாக விழுந்த கேட்டை சுவரோடு இணைத்து கயிறு வைத்து கட்டியிருக்க, ஒரு பக்கத்தை பூட்டி வைத்து மறு பக்கத்தை காவலாளி திறந்து வைத்துக்கொண்டு மாணவர்கள் உள்ளே செல்லும்வரை பிடித்துக்கொண்டு இருப்பார். இல்லையாயின் “சர்ர்…” என்ற சத்தத்துடன் எதிர் திசைக்கு பயணமாகி உள்ளே வந்துகொண்டு இருப்பவர்களின் மேல் மோதி விடும். 
வாகனம் ஏதாவது உள்ளே வர வேண்டுமானால், இரண்டு கேட்டையும் திறந்துதானே! ஆகா வேண்டும். திறந்தால் இருவர் இருபக்கமாக இருந்து கேட்டை பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும். அரசு வண்டியைக் கண்ட முதல்வர் தன்னிலை மறந்து தானே! கேட்டை பிடிக்க, சீ… திறக்க ஓடியிருந்தார்.
அவர் சென்று கேட்டை கைப்பற்றும் வேளையில் இரு மாணவர் வந்து கேட்டை பிடித்துக்கொள்ள, அப்பொழுதுதான் பின்னால் ஓடிவந்ததிருந்த மஞ்சரியை கவனித்திருந்தார் அவர்.
இன்று அரச அதிகாரிகள் வருவார்கள் என்று தெரியும் இத்தனை காலையில் வருவார்கள் என்று இவர்களும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
அரச வண்டியை பார்த்ததும் மஞ்சரி இரண்டு மாணவர்களை கேட்டை பிடிக்க அனுப்பி விட்டு பூங்கொத்தோடு வந்தவர்களை வரவேற்க ஓடி வந்திருந்தாள்.
ஒருவாறு கேட்டை பிடித்து திறந்திருக்க, அரசவண்டியோடு இன்னுமொரு காரும் உள்ளே நுழைந்திருக்க, முதல்வரும் மஞ்சரியும் வண்டிகளின் பின்னால் செல்ல மற்ற ஆசிரியர்களும் அவர்களோடு சேர்ந்த்துக்கொண்டனர்.
அரசவண்டியிலிருந்து அரச அதிகாரிகள் சிலர் இறங்க, பின்னாடி வந்த காரிலிருந்து இறங்கினான் அதீசன் வர்மா.  
நிறைய பாடசாலைகளிலிருந்து மதில் சுவர் இல்லை. அதனால் வரும் பிரச்சினைகள். கழிவறை இல்லை. விளையாட்டு மைதானம் இல்லை. கட்டிடம் இடிந்து விழும் நிலைமையில் இருக்கிறது என்ற மனுக்கள் முதலமைச்சரை வந்தடைந்துக்கொண்டுதான் இருந்தன.
இதே! மாதிரி அரச மருத்துவமனைகள் உட்பட எல்லா இடத்திலும் பிரச்சினைகள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாட்டு மக்கள் கேள்வி கேட்பதற்கு பயப்படுவதை விட எதிர்க்கட்ச்சிக்கார்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போனால் மீடியாவில் அதை போட்டுக் காட்டி கிழித்து விடுவார்கள் என்பது ஒரு புறம். அன்றைய காலங்களை பத்திரிகையில் கார்டூனாக ஒரு மூலையியில் அரசியல்வாதிகளை தாக்கி போடப்படும் செய்திகளை மக்கள் தினம் பார்த்து ரசித்தாலும் அதில் சொல்ல வரும் சமூக கருத்தை பலர் புரிந்துகொள்ள முயற்சிக்க வில்லை. இன்று மீம்ஸ் உலகனின் அரசன் வைகை புயலின் வரவால் நண்டு சிண்டு தொடக்கம் அனைவரும் ஆளுக்கொரு மீம்ஸ் பேஜை கையில் வைத்திருக்க, அரசியல் தொடங்கி சினிமா என்று எல்லா துறையிலும் நடக்கும் தப்புகளை மீம்ஸ் மூலமே! மக்களை விரைவில் சென்றடைய, அது மக்களின் மனதிலும் மறக்காமல் நிலை பெற்று விடுகிறது. அது காலத்துக்கும் அழியாமல் அரசியல்வாதிகளின் மானத்தை காற்றில் பறக்க விட்டுக்கொண்டிருக்கும் என்பதால் அந்த அச்சம் வேறு.
அரசியல் ஆலோசகரின்படி வரும் இலக்சனில் ஜெயிக்க வேண்டுமானால் நாட்டுக்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் ஒரே துறையில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியாதே! எல்லா துறையிலையும் ஏதாவது செய்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த அரசாங்கம் “இதோ இதை செய்திருக்கிறது. நல்லா கண்ணை திறந்து பாருங்க” என்று மேடையில் ஏறி வாய் கிழிய பேச முடியும்.
மற்ற துறையை விடுவோம் கல்வித்துறைக்கு வருவோம். பாடசாலைகளில் கிடைத்த மனுக்களை பரிசோத்தித்து, கட்டிடம் இடிந்து விழும் நிலைமையில் இருக்கும் இருபது பாடசாலைகளை தேர்வு செய்து, அதிலும் ஆகவே! மோசமான நிலையில் இருக்கும் பத்து கட்டிடங்களை கட்டும் பணியை எஸ்,எஸ் கான்ஸ்டக்க்ஷன் கம்பெனிக்கு அரசாங்க டெண்டர் மூலம் கிடைக்கப் பெற்றிருந்தது.
இருபது பாடசாலைகளையும் பார்வையிட்டு அதில் பத்தை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிகாரிகளை மட்டுமே! சாரும். கட்டிடத்தை கட்டிக்கொடுக்கும் பொறுப்பு மட்டும் அதீசனின் கையில் இருக்க, இது சங்கர வர்மாவின் சொந்த ஊர் என்பதால் இந்த ஊரின் பெயரும் லிஸ்ட்டில் இருப்பதைக் கேள்விப்பட்டவர் மகனிடம் “நீயும் கூடவே! போய் என்ன பிரச்சினைனு பார்த்து, பத்து ஸ்கூலில் என் ஊர் ஸ்கூலும் வரும்படி பார்த்துக்க, நான் படிச்ச ஸ்கூல். ஊருக்குத்தான் போக முடியல இதையாச்சும் செய்யலாம்” என்று சொல்லி இருக்க, தந்தை சொல் தட்டாத மகனாய் அரச அதிகாரிகளோடு வந்திருந்தான்.
வண்டியிலிருந்து இறங்கிய அரச அதிகாரிகளை முதல்வர் அமுதவேணி வரவேற்க, மஞ்சரி அவள் கையிலிருந்த பூங்கொத்தை முதல்வர் கையில் கொடுக்க, அவர் அதை வந்திருந்த தலைமை அதிகாரியின் கையில் கொடுத்து வரவேற்றார்.
கேட்டினுள் நுழையும் பொழுதே! அதீசனின் மனம் வேகமாக துடிக்க ஆரம்பித்திருக்க, நெஞ்சை நீவிக்கொண்டவன் லப்டப்பை அனைத்து விட்டு என்ன பிரச்சினை என்று நெஞ்சோடு உறவாடயவாறே இறங்க, காட்டுப்பூக்களோடு அவள் நின்றிருந்த அழகை இறங்கிய உடனே! கண்டவனின் இதயம் எகிறி குதித்து அவளிடம் மண்டியிட்டு இருந்தது. ஆனந்த அதிர்ச்சியை அவன் கண்கள் ஒரு நொடி காட்டி இருக்க, அவனை அழைக்கவும்  கூலரை அணிந்துகொண்டவன் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு அவர்களோடு பேசலானான்.
கூடவே வந்திருந்த அதிகாரி அதீசனை முதல்வருக்கு அறிமுகப்படுத்தி விட்டு, கட்டிடங்களை பார்வையிட செல்லலாமா என்று கேட்க, “ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்று மரியாதையாக முதல்வர் கேட்டிருக்க, மறுத்தவாறே நடக்க, மற்ற ஆசிரியர்களை வகுப்பறைக்கு செல்லுமாறு பணித்த முதல்வர் மஞ்சரியிடம் ஏதேதோ விவரங்களை கேட்டவாறு நடக்க, அவளும் ஒரு கோப்பை கையில் வைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தாள்.
“மஞ்சரி…” என்று முதல்வர் அழைத்து விவரம் கேட்டதில் அவளின் பெயரை தெரிந்துக்கொண்ட சந்தோசத்தில் அதீசனின் உதடுகள் கோடாக விரிந்து உடனே! நிர்மலானது. மனதோ! மஞ்சரி… பெயருக்கு ஏற்றது போல பூங்கொத்தோடதான் எப்பயும் தரிசனம் கொடுக்குறா… ஆமா.. அவ பெயர் மஞ்சரி மட்டும்தானா?” என்று கேட்டிருக்க பதில்தான் தெரியவில்லை.
“அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல, கவனிச்சியா? நெத்தில குங்குமம் இல்ல, கழுத்துல மஞ்சள்கயிறு இல்ல. உனக்கு இன்னும் சான்ஸ் இருக்கு” அதீசனின் மனம் குத்தாட்டம் போட “நிச்சயம் ஆகி இருந்தா?” என்று கேட்டுக்கொண்டு கண்கள் அவள் கையை நோக்க எந்த மோதிரத்தையும் காணாது நிம்மதி அடைந்தான்.
“என்ன அதீசன் சார் அமைதியாக வரீங்க? ஒண்ணுமே சொல்லல” தலைமை அதிகாரி பேச சுயநினைவுக்கு வந்தவன் என்ன பேசுவதென்று முழிக்க,
“இது உங்க அப்பாவோட சொந்த ஊர்ன்னுதானே! வந்தீங்க, அத பத்தி எதையும் கேக்க காணோம்”
கேள்வியாக முதல்வர் அதீசனின் புறம் திரும்ப,
“கட்டிடம் கட்டித்தர முடிவானா… சார்தான் கட்டிக்கொடுக்க போறாரு. சாரோட அப்பாவோட சொந்த ஊராம் இது அதான் சார் நேர்ல வந்திருக்குறாரு” என்று சொல்ல மஞ்சரி கொஞ்சம் நம்பிக்கையாக அவனை ஏறிட, “அரசாங்கம் கட்டிக்கொடுக்கலானா என்ன என் சொந்த செலவுல கட்டிக்கொடுக்குறேன் பெண்ணே!” என்று கூலரினூடாக அவளையே! பார்த்திருந்தான் அதீசன்.
கூலரணிந்திருந்த படியால் அவன் யாரை பார்க்கிறான், எதை பார்க்கிறான் என்று மற்றவர்களுக்கு புலப்படாததால் தன்னவளை அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருந்தவன் மஞ்சரி நேராக அவனை பார்த்த நொடியில் கூலரை கழட்டி புன்னகைக்க, அவளோ! புன்னகைக்காமல் மரியாதையாக தலையமட்டும் அசைத்து வைத்தாள்.
அதில் திமிரில்லை. என்னிடமிருந்து விலகி இரு என்ற உள்ளர்த்தம் இருக்க, அதெல்லாம் அதீசனுக்கு புரியவில்லை. புரிய முயற்சிக்கவுமில்லை.
“வணக்கம்” என்று முதல்வரை பார்த்து கூறியவன் கட்டிடம் சம்பந்தமாக பேச ஆரம்பித்தான். அவரோ! “மஞ்சரி… சாருக்கு தேவையான டீடெயில்ஸ் எல்லாம் சொல்லுமா…” என்று மஞ்சரியிடம் கூறியவர் தலைமை அரச அதிகாரியிடம் பேசலானார். 
அவளும் கர்மா சிரத்தையாக கோப்பை கையில் வைத்துக்கொண்டு அவனுக்கு விளக்க, மேலும் அவளின் பக்கவாட்டில் நெருங்கி நின்றவன் அவள் பிரத்தியேக வாசனையை நுகரலானான்.
 பதட்டத்தில் அவள் நெற்றியில் பூத்திருந்த சிறு வியர்வை துளிகளை துடைக்க அவன் பெருவிரல் பரபரப்பதைக் கட்டுப்படுத்திக்கொண்டு கன்னத்தை ஏறிட அவள் பேசும் அழகில் அசையும் கன்னம் அதன் மீதிருந்த சிறு பரு கூட ரோஜாவின் மேல் பனித்துளியை நியாபகமூட்ட, சிரித்துக்கொண்டவன், பட்டாம்பூச்சியை படபடக்கும் அவள் இமையை ஏறிட கவனம் முழுவதும் கோப்பில் மட்டுமே! அடுத்து அதீசனின் பார்வை சாயம் பூசாமல் சிவந்திருந்த அவள் உதட்டின் மேல் விழ நொடிக்கொருமுறை கீழுதட்டை நாக்கால் ஈரப்படுத்தியவாறு அவள் பேசும் அழகு அதன்பின் அதீசனின் பார்வையை வேறு எங்கும் இட்டுச்செல்ல விடவில்லை.   
“இதுதான் சார் பிரச்சினை” என்று விட்டு நிமிர மிக அருகில் அவன் முகம் கண்டு திடுக்கிட்டவள் விலகி நின்றாள்.
தன்னையே! ரசனையாக பார்த்திருக்கும் அதீசனின் கண்களை கண்டு துணுக்குற்றவள் மறுகணம் அவனை முறைக்க ஆரம்பித்தாள்.
முறைப்பவளை விடாது ரசித்தவன் புன்னகைத்தவாறே “உங்க பேர் மஞ்சரி ஏம் ஐ ரைட். மஞ்சரி மட்டும் தானா?” என்று அவனுக்கு தேவையான முக்கியமான விவரமாக அவள் பெயரைக் கேட்க மேலும் திகைத்தவள் சுதாரித்து
“வாராக மஞ்சரி தங்கராசு” என்று மிடுக்காகவே! சொல்ல “தங்கராசு….” என்று நெற்றி சுருக்கி யோசித்தவன் “அப்பாவா?” என்று அவளையே! கேட்க மௌனத்தையே! அவனுக்கு பதிலாக கொடுத்தவள் அங்கிருந்து நகர்த்திருந்தாள்.
செல்லும் அவளை புன்னகையினூடாக பார்த்திருந்தவன் அதி முக்கியமான வேலையாக அவளுடைய பெயருக்கான முழு அர்த்தத்தை அலைபேசியில் பார்க்க பூங்கொத்தோடு வந்த தேவதை என்றிருக்க “எனக்கு நீ தேவதை தான். வாராக மஞ்சரி வர்மா  தான் பொருத்தத்தமா இருக்கு. நாம பேர மாத்திக்கலாம் கண்ணம்மா…” மெல்ல முணுமுத்துக்கொண்டவன் அரசாங்க அதிகாரிகளிடம் சென்றான்.
கட்டிடத்தை பார்வையிட்டவர்கள் ரொம்பவே! பழமை வாய்ந்தது எனப் புரிய கண்டிப்பாக புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்று கூறப்பட, வேலைகள் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்று முதல்வர் கேட்க, அடுத்த வாரமே! ஆரம்பிப்போம் என்று கூறி இருக்க, அவரும் மகிழ்ச்சியாக அரசாங்க அதிகாரிகளுக்கு விடைகொடுத்தார்.
அதீசன் முதல்வரிடம்! மஞ்சரியை பற்றிக் கேட்க, “மஞ்சரி மிஸ் கிளாஸ் எடுத்துட்டு இருப்பாங்க” என்று சொன்னதும் அடுத்த வாரம்வரை காத்திருக்காமல் அதற்கிடையில் அவளை வந்து பார்த்துப் பேச ஏதாவது வழியிருக்கா என்ற யோசனையில்லையே! அதீசன் வண்டியில் ஏறி இருந்தான்.
கிருஷ்ணாவுக்கு புட்பால் என்றால் கொஞ்சம் இஷ்டம் வாரம் மூன்றுநாள் அதிகாலையில் புட்பால் ப்ராக்டிஸ்கு காலேஜுக்கு வந்துவிடுவான். இன்றும் வந்திருந்தான்.
மாலனி அலைபேசியை நொண்டியவாறே காலேஜினுள் நடந்துவந்துக் கொண்டிருக்க, அன்று புட்பால் பிராக்டிஸ் முடித்துக்கொண்டு கிருஷ்ணாவும், தனுஷும் ஒருவரையொருவர் கேலியும் கிண்டலும் செய்தவாறு ஓடிவர, கிருஷ்ணா மாலனியின் மேல் இடித்து விட மாலனி கீழே விழுந்து விட்டாள்.
யாரோ ஒரு பெண்ணின் மேல் இடித்து விட்டதாக நினைத்த கிருஷ்ணா “சாரி…” என்ற வார்த்தையை மாலனியைக் கண்டதும் உள்ளுக்குள்ளேயே! முழுங்கியவன் “கண்ண என்ன பிடரிலயா வச்சிக்கிட்டு நடப்ப” என்று கத்த ஆரம்பித்தான்.
தான் அலைபேசியில் மூழ்கியவாறு வந்ததால் கிருஷ்ணா வருவதைக் கவனிக்கவில்லை என்று நினைத்தவள் “சாரி கிருஷ்ணா” என்று இன்முகமாகவே! கையை நீட்டி அவளை தூக்கி விடும்படி சொல்ல அவளை நன்றாக முறைத்தவன் தனுஷை இழுத்துக்கொண்டு நகர்ந்திருந்தான்.
“டேய் என்ன டா… நீ இடிச்சி தள்ளி விட்டதும் இல்லாம மாலினியை சாரி கேக்க வச்ச, அது கூட பரவால்ல, அவளை தூக்கி கூட விடாம நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரியில்ல” தனுஷ் நண்பனை கடிய,
“மூடிக்கிட்டு வாடா…” கிருஷ்ணா மாலனியை திரும்பியும் பாராது சென்றான்.
மாலனி கையிலிருந்த அலைபேசிக்கு ஒன்னும் ஆகவில்லையே! என்ற ஆராச்சியில் இருக்க, அவளருகில் வந்து நின்றது அர்ஜுனின் வண்டி.
“ஹாய் மாலினி… என்ன தரையிலையே! நீச்சல் கத்துக்கிறியா?” என்று சத்தமாக சிரிக்க,
அவனை முறைத்தவாறே எழுந்து நின்றவள் உடையில் ஒட்டியிருந்த தூசியை தட்ட, அர்ஜுன் பொறுமையாக ஒரு சுவிங்கத்தை தோலுரித்து வாயில் திணித்து மெல்லலானான்.
மாலினி புத்தக பையை எடுத்துக்கொண்டு நகர முற்படும் பொழுது “நீ மொபைலை நோண்டிக்கொண்டு வந்த சரி… டான் என்ன பண்ணிக்கிட்டு வந்து உன் மேல மோதினான்” என்று கேட்க,
“ஆமா… என்ன பண்ணிக்கிட்டு வந்தான்” தலையை சொறிந்தவாறு அர்ஜுன் புறம் திரும்பியவள் அவனையே! ஏறிட்டு கேக்க,
“நான் உள்ள வரும் போது அல்லக்கையும், டானும் ஓடி பிடிச்சி விளையாடிகிட்டு இருந்தாங்க, சிவனேனு போன உன்மேல மோதியது மட்டுமில்லாம, உன்ன திட்டிடும் போறான் டான். நீ சாரி கேட்டுட்டு பே….னு நிக்குற” மீண்டும் சத்தமாக சிரித்தவன் “அப்பா டா… கொழுத்திப் போட்டாச்சு…” என்றெண்ணியவாறே வண்டியை நகர்த்தகி இருந்தான்.
அலைபேசியில் லயித்தால் சுற்றுப்புற சூழலை மறந்து விடும் தன்னுடையை பலகீனத்தை பயன்படுத்திக்கொண்ட கிருஷ்ணா தன்னையே! திட்டிவிட்டு போனான் என்றதும் மாலனியின் இரத்தம் சூடானது. நேராக கிருஷ்ணாவை நோக்கி சென்றாள்.
ஸ்போர்ட்ஸ் முடித்து விட்டு வரும் மாணவர் குளிக்கவும், துணி மாற்றவும் இருக்கும் அறைப் பக்கமாகத்தான் இருவரும் சென்றார்கள் என்று விசாரித்தவாறே வந்தவள் அறிந்துக்கொண்டு கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆண்கள் குளிக்கும் பகுதிக்குள் நுழைந்திருந்தாள் மாலினி.
ஒவ்வொரு குளியலறைக் கதவும் இடுப்பிலிருந்து முழங்கால்வரை மட்டும்தான் உயரம். உள்ளே யார் குளிக்கிறார்கள் என்று வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
முதல் குளியலறையில் யாரோ! ஒருவன் ஒரு ஆங்கிலப் பாடலை ஹை பிச்சில் பாடியவாறே குளித்துக்கொண்டிருக்க, அடுத்த அறையில் இருந்தவன் ரெப் வரிகளை பாடிக்கொண்டிருந்தான்.
“ஒவ்வொருத்தன் காலையும் பாரு… ஷேவிங் பண்ணாத கொரங்காட்டம்” திட்டியவாறே கிருஷ்ணாவை தேடி கண்டுப்பிடித்தவள்
“டேய் கிருஷ்ணா என்ன தள்ளி விட்டது மட்டுமில்லாம திட்டியும் விட்டுட்டு… நீ பாட்டுக்கு வந்துட்ட” என்று கத்த மாலினியின் குரல் கேட்டு திடுக்கிட்டவன் குழாயை மூடி விட்டு பிரம்மையோ! என்று யோசிக்க மீண்டும் அவள் கத்தியதில் கதவுக்கு வெளியே! அவள் முகம் தெரிய பல்லைக் கடித்தான்.
“ரொம்ப கொழுப்பு டி உனக்கு. பசங்க குளிக்கிற இடத்துக்கே! வந்து மிரட்டுறியா?” என்றவன் துண்டைக்கட்டிக்கொண்டு வெளியே! வர மாலினியின் சத்தத்தில் குளித்துக்கொண்டிருந்த அனைவரும் குளிப்பதை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.
சிக்ஸ் பேக்கில் துண்டோடு வந்து நின்றவனை ஒரு நொடி திகைத்துப் பார்த்தவள் எங்கயோ! பார்த்தவாறு “எதுக்கு என் மேல இடிச்சிட்டு சாரி கேக்காம வந்த” என்று கேட்டாள்.
அவள் முகம் போன போக்கும், முகத்திருப்பலும் கிருஷ்ணாவுக்கு சிரிப்பாக இருந்தாலும் “இருடி உன்ன வச்சி செய்றேன்” என்று கருவிக்கு கொண்டவன் சொடக்கிட்டு அழைத்து “பேசணும்னு வந்துட்டு என்ன அங்க பார்த்து பேசுற? கண்ணுல ஏதும் பிரச்சினையா? நான் உன் முன்னாடி நிக்குறேன்” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தான். 
“நியாயம் கேக்க நல்ல இடம் பார்த்திருக்க…” தனுஷ் தலையில் அடித்துக்கொண்டவாறு வெளியே! வந்து “மாலினி முதல்ல வெளிய போமா” என்று கண்களாளேயே! சிக்னல் கொடுக்க, அதை புரிந்துக் கொண்டிருந்தால் வந்திருக்கவே!! மாட்டாளே!
தனுஷை முறைத்த கிருஷ்ணா “பாய்ஸ் கம் அவுட்” என்று அழைக்க, குளித்துக்கொண்டிருந்த அனைவரும் குளியலறைக்கு கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்து நின்றனர்.
அனைவரும் துண்டோடு வந்து நிற்கவும் மாலினியின் மண்டைக்குள் மணியடித்தது. “இவனுங்க எல்லாரும் துண்டோடு வரானுங்க, குளிக்கும் போது ஷார்ட்ஸ் போட்டுட்டு குளிக்கலயா?”
அவள் பார்வை போன இடத்தை வைத்து அவள் என்ன நினைக்கிறாள் என்று கணித்த கிருஷ்ணா “வசமா வந்து மாட்டிக்கிட்டியே! மாலு… ஒரு பொம்பள புள்ள இப்படி பசங்க குளிக்கிற இடத்துல வந்து மாட்டிக்கலாமா?” என்றவாறு அவளை மேலும் கீழும் பார்க்க அவனை பயப்பார்வை பார்த்த மாலினி எச்சில் கூட்டி விழுங்கி இருந்தாள். 
“குளியலறைக்குள்ள சீசீடிவி கூட இல்ல. என்ன நடந்தாலும் யாருக்கும் தெரிய போறதும் இல்ல” என்றவாறு கிருஷ்ணா மாலனியை சுத்தி நடக்க, பசங்களும் அவளை சுத்தலானார்கள்.
“வெளியே சீசீடிவி இருக்கு” உள்ளே போன குரலில் மாலனி சொல்ல,
“இந்நேரத்துக்கு அது திருட்டு போய் இருக்கும்” என்ற கிருஷ்ணா ஒருவனை பார்க்க, “டன் டான்” என்று அலைபேசியை காட்ட மாலனிக்கு உடம்பெல்லாம் உதற ஆரம்பித்திருந்தது.
“ஆமா… என்ன தைரியத்துல நீ பசங்க குளிக்கிற இடத்துக்கு வந்த?” தாடையை தடவியவாறு அவளை சுத்தி நடக்க, சுடுநீரால் வந்த புகை மூட்டமும், அறையின் சூடும் மாலனியை வியர்வையில் குளிக்க செய்திருக்க, அவனை திரும்பிப் பார்த்துப் பார்த்தே! அவளுக்கு தலை சுத்துவது போல் இருந்தது.
“ஒரு இடத்துல நின்னு பேசு க்ரிஷ்” என்று அவள் தலையை பிடித்துக்கொள்ள
சட்டென்று நின்றவன் “பாய்ஸ் கேட் ரெடி..” என்று மாலனியை பார்த்து புன்னகைக்க, மாலனியோ கிருஷ்ணாவை புரியாது பார்த்திருந்தவேளை அவனும் அவன் கூட்டமும் துண்டின் மீது கை வைத்திருக்க, நடக்க போகும் விபரீதம் அறிந்தவளாக என்ன செய்வதென்று முழித்தவள் கைகளால் முகத்தை மூடி இருந்தாள். எந்த சத்தமும் வராததால் மெதுவாக கண்ணை திறந்து பார்க்க கிருஷ்ணா அவள் கண்ணை திறப்பதற்காக காத்திருந்தான் போலும்
“ஒன்னு… டூ…” என்று கிருஷ்ணா எண்ண ஆரம்பிக்கவும் மாலினி எதற்கு இவன் இப்போ எண்ணுறான் என்று “பே..” வென்று அவனையே! பார்த்திருக்க,   தனுஷ் அவளை இழுத்துக்கொண்டு சென்று குளியலறைக்கு வெளியே! விட்டான்.
அந்த அறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் அவளால் சீராக மூச்சு விட முடியும் போல் உணர தலை தெறிக்க, ஓடியவள் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு ஆழமாக மூச்செடுக்க, கண்ணீரும் முட்டிக்கொண்டு வந்தது.
கிருஷ்ணா எவ்வளவு திட்டி இருந்தாலும், இன்று அவன் செய்தது சற்று அதிகப்படியாகவே! தெரிய, அவனை வழிக்கு கொண்டு வரும் வழியும் தெரியாமல் அழுது கரையலானாள்.
“டேய் கிருஷ்ணா… அறிவிருக்கா.. என்ன டா.. பண்ணிக்கிட்டு இருக்க…?” தனுஷ்  கிருஷ்ணாவை திட்ட,
விழுந்து, விழுந்து சிரித்த கிருஷ்ணா “இனிமேல் அவ என் பக்கம் தலை வச்சு படுக்க மாட்ட இல்ல.
“அதுக்காக இப்டியாடா.. பண்ணுவ? மாலினி ரொம்ப நல்ல பொண்ணு டா…” தனுஷ் புரிய வைக்க முனைய,
“பாய்ஸ் மாலுவ, சீண்டுறது, திட்டுறது எல்லாம் நான் மட்டும் தான். யாராச்சும் அவ கிட்ட வாலாட்டினீங்க, வால ஒட்ட நறுக்கிடுவேன்” என்றவன் குளிக்க செல்ல,
“நாய் புல்லு திங்காதம், தின்கிற ஆட்டையும் துரத்துமாம்” தனுஷ் சத்தமாக முணுமுணுக்க,
“அது அப்படியில்ல டா… என்னதான் டொம்மும் ஜெர்ரியும் சண்டை போட்டாலும் டாம் வேற பூனைக்கு ஜெர்ரிய விட்டு கொடுக்காது. அது மாதிரிதான். இதெல்லாம் உனக்கு புரியாது. கண்டதையும் யோசிக்காம அடுத்தவாரம் ட்ரிப்புக்கு போக எல்லா ஏற்பாடையும் பண்னு””
“என்ன எழவோ!” என்ற தனுஷ்
“ஏற்பாடு பண்ணிக்கலாம். உங்கப்பா உன்ன அனுப்புவாரா?” என்று கேக்க,
“நான் என்ன குழந்தையா?” என்று கிருஷ்ணா முறைக்க, 
“சரிடா மச்சான் வண்டிய மிஸ் பண்ணாம வந்து சேரு” என்றவாறு தனுஷ் உடை மாற்ற செல்ல, கிருஷ்ணா மாலினியை நினைத்து வருந்தியவாறே குளிக்கலானான்.

Advertisement