Advertisement

அத்தியாயம் 30
அர்ஜுனும் மாலினியும் அஸ்ரேலியா கிளம்பிச் சென்று இரண்டு வாரங்களாகி இருந்தன.
அந்த மருத்துவமனையில் பிரசவத்துக்காக மஞ்சரி அனுமதிக்கப்பட்டிருக்க, குடும்பத்தார் மொத்தமும் கடவுளை வேண்டியவாறு பிரசவ வார்டின் முன்தான் குழுமி இருந்தனர். மஞ்சரியும் அழகான பெண் குழந்தையை பெற்றிடுத்திருந்தாள்.
தாதி மஞ்சரி மயக்கத்தில் இருப்பதாக சொல்லி குழந்தையை கொண்டுவந்து கொடுக்க, “அம்மா நீ வாங்குமா?” என்ற அதீயின் கண்கள் கலங்கி இருக்க குழந்தையை வாங்கிய வாகை அதீயின் கைகளில் வைக்க ரோஜா நிறத்தில் சிவந்து கண்களை மூடியவாறு தூங்கிக் கொண்டிருந்த குட்டி தேவதையை பார்க்கும் பொழுது அழுதே! விட்டான் அதீ.
பிஞ்சு விரலை மெதுவாக தடவ தேவதையும் தந்தையின் விரலை தன் கையால் பற்றிக் கொண்டு உதடு குவித்தவாறு  ஒற்றை கண்ணை திறந்து பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தி விட்டு தூங்கலானது.
சங்கரன் பேத்தி கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாட கம்பனி ஊழியர்களுக்கு இந்த மாதம் போனஸ் வழங்குமாறு அலைபேசி வழியாக கூறியவாறு குழந்தையை பார்த்திருந்தார்.
அந்த நேரத்தில் அர்ஜூனுக்கும் மாலினிக்கு வீடியோ கால் எடுத்து குழந்தையை காட்டி அனி செல்லம் கொஞ்சலானாள்.
அதீக்கு குழந்தையை கொடுக்க மனமே! இல்லை. தாதி வந்து மஞ்சரி கண் விழித்து விட்டதாகவும் அறைக்கு மாற்றிய பின் சென்று பார்க்கலாம் என்று கூற ஆவலாக காத்திருக்கலானான் அதீ.
“அனி”
“என்ன”
“நாமளும் சீக்கிரமா கொழந்த பெத்துக்கலாமா?” ஆனந்த் ஆசையாக கேக்க
“குட்டிய பார்க்கும் போது எனக்கும் ஆசையா இருக்கு ஆனந்த். ஆனா ரொம்ப பயமா இருக்கு. பொறக்குற குழந்தையும் என்ன மாதிரியே! எப்நோர்மலா பொறந்திடுமோனு” என்றவள் கணவனின் முகம் பார்க்க
“எப்படி பொறந்தாலும் அது நம்ம பாப்பா அனி. நாம நல்லா பாத்துக்கலாம்”
“நான் இப்படி இருக்குறது உங்களுக்கு கஷ்டமா இல்லையா ஆனந்த்?” ஆனந்த் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாலியை கட்டியதால் தன்னோடு வாழ்ந்துகொண்டு இருக்கின்றானோ! என்ற மனக்குழப்பம் அனிக்கு ஏற்பட ஆரம்பித்திருக்க அதை இவ்வாறு கேட்டிருந்தாள்.
அவள் நடவடிக்கைகளை சரியாக கவனித்திருந்த ஆனந்த் அவள் கையை பற்றிக்கொண்டு “உன்ன மொத மொத ஆபிஸ்ல வச்சி பார்த்த போ இன்டவிக்கு வந்திருக்கான்னுதான் நினச்சேன். அப்போவே! உன்ன எனக்கு பிடிச்சிருந்திருக்கணும் அனி. எனக்கு இந்த பணக்கார பசங்க மேல இருந்த வெறுப்புனாளால நீ யாரு? என்னனு தெரிஞ்சிகிட்ட பிறகு உன்ன ஒதுக்கவே! காரணம் தேடிகிட்டு இருந்திருக்கேன் போல. ஆனா உனக்கு ஆபத்துனு தெரிஞ்சதும் அங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் கூட யோசிக்காம உன்ன காப்பாத்தணும்னுதான் தாலி கட்டினேன். உன் அண்ணன் சொன்னான் நீ என்ன லவ் பண்ணுறான்னு. அப்பொறம் யோசிச்சு பார்த்ததுலதான் எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும்னு புரிஞ்சது” என்று சிரித்தான்.
“தங்க யு ஆனந்த்” என்ற அனி கணவனை புரிந்துகொண்ட அவன் கையை இறுக பற்றிக்கொண்டாள்.
ஒவ்வொருவராக சென்று குழந்தையும் மஞ்சரியையும் பார்த்துவிட்டு வந்திருக்க, அதீ மஞ்சரியின் அருகில் அமர்ந்திருந்தான்.
 “தங்க யு வாராகி. உன்ன மாதிரியே! தேவதைய பொண்ணா கொடுத்திருக்க” என்றவன் அவள் நெத்தியில் முத்தமிட அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டவள் தொட்டிலில் இருந்த மகளை பார்த்து “பார்க்க உங்கள மாதிரி தான் இருக்கா” என்றாள்.
 அவளை அணைத்துக் கொண்ட அதீ ஆசையாக மகளை பாத்திருந்தான். 
அக்ஷராவின் முன் கோபமாக நின்றிருந்தான் ஸ்டீவ். கடந்த ஆறு மாதமாக அவளிடமிருந்து எந்த தகவல்களுமில்லை. அலைபேசி தொடர்புகளுமில்லை. அழைப்பை ஏற்படுத்தினாலும் எடுக்க மாட்டேன் என்கின்றாள்.
நான்கு மாதங்கள் பாண்டியின் வேலைகளோடு போக அடுத்த மாதங்கள் அனைத்தும் ஆனந்தும் கம்பனியில் ஜோஇன் செய்ததால் கிடைத்த ப்ரொஜெக்ட் வேலைகளால் எங்கேயும் நகரக் கூட முடியவில்லை.
சமீபத்தில்தான் மஞ்சரிக்கு குழந்தை பிறந்திறந்தது. அதீயே அழைத்து “டேய் எல்லாரும் செட்டில் ஆகிட்டோம் நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?” என்று கேட்டிருக்க, அக்ஷராவை பற்றி சொன்னவன் இதோ அவள் முன் வந்து நின்று சூரியனாய் தகித்துக்கொண்டிருந்தான்.
“ஹேய் ஹாய் ஸ்டீவ். வாங்க.. நல்லா இருக்கீங்களா? காப்பி சாப்பிடுறீங்களா?” என்று அக்ஷரா கூலாக கேக்க
“ஆமா நான் சென்னையிலிருந்து டில்லிக்கு பிளைட் ஏறி வந்தது நீ கொடுக்குற காப்பிய சாப்பிட்டு போக பாரு” கடுப்பானவன் முகம் சிவந்தவாறே கத்த
“என்ன ஆச்சு ஸ்டீவ் ஏதாச்சும் பிரச்சினையா?” என்றவள் சாவுகாசமாக சோபாவில் அமர்ந்துகொண்டாள்.
“எங்க உன் அப்பா… வீட்டுல இல்லையா? உன் அம்மாவ கூப்டு நான் அவங்க கிட்டயே! நியாயம் கேட்கிறேன்”
“அண்ணாக்கு ரீசன்ட்டாதான் கல்யாணம் ஆச்சு ஸ்டீவ். எல்லாரும் ஊருக்கு போய் இருக்காங்க. எதுக்கு இப்போ அவங்கள கேக்குறீங்க?”
“ஆ.. உங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுட்டு அம்போன்னு விட்டுட்டு போய்ட்டானு புகார் கொடுக்கத்தான்”
அவன் சட்டையை பிடித்தவள் “கேட்டபோ நீ பதில் சொன்னியா? சொன்னியா டா? இல்ல அதுக்கு பிறகாவது போன் பண்ணி சொன்னியா? இப்போ வந்திருக்க? எதுக்கு வந்த? எனக்கு வீட்டுல மாப்புள பாத்திருக்காங்க அடுத்த மாசம் கல்யாணம் வேணும்னா வந்து மொக்கிட்டு போ” என்று அக்ஷரா கத்த
“என்ன டி.. சொல்லுற?” ஸ்டீவ்  அதிர்ச்சியடைய
“சொல்லுறாங்க சொரைக்காக உப்பில்லையாம், பருப்பு வேகலையாம்னு வந்துட்டாரு ஒரு வருஷம் கழிச்சு. பதில் சொல்ல” கடுப்பானாள் அக்ஷரா. 
வழமையாக அக்ஷரா குறுந்செய்திகள் அனுப்பிக்கொண்டுதான் இருந்தாள். ஸ்டீவுக்குத்தான் அவள் கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்டதில் என்ன பதில் சொல்வதென்று புரியாத குழப்பத்தில் பதில் அனுப்புவதை நிறுத்தி இருந்தான்.
“என்ன இவன் மெஸேஜை பாக்குறான் ரிப்லை பண்ண மாட்டேன்குறான். ஒருவேளை கல்யாணம் பண்ண இஷ்டமில்லையோ! இஷ்டமில்லன்னா சொல்ல மாட்டானா? அதுக்காக இப்படித்தான் பண்ணுவானா?” கடுப்பான அக்ஷரா அதீயிடம் பேசி இருக்க
“அவனும் உன்ன விரும்புறான் மா… கொஞ்சம் குழப்பத்துல இருக்கான். கொஞ்சம் பிசி… அதான்” என்று அதீ இழுக்க
“ஓஹ்… அப்படியா? ஈஸியா கிடைச்சா வேலிவ் இல்லல. இரு டா உன்ன பாத்துக்கிறேன்” என்றவள் அவனை கண்டுகொள்ளவே இல்ல. ஸ்டீவும் அக்ஷராவுக்கு எந்த ஒரு குறுந்செய்தியும் அனுப்பவுமில்லை. அலைபேசி தொடர்பும் ஏற்படுத்தி இருக்கவில்லை.
  “என்ன இவ கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுட்டு கண்டுக்காம இருக்கா? நான் பேசலைனா பேசமாட்டாளா?” என்று கொதித்துப்போய் தான் வந்திருந்தான். வந்தவனுக்குத்தான் பொய்யான கல்யாண செய்தியை கூறி வெறுப்பேத்தலானாள் அக்ஷரா. 
“ஏய்.. இங்க பாரு எவன் வரான்னு பாக்குறேன். நீ எனக்குதான் டி” என்றவன் அவளை இழுத்து முத்தமிட ஆரம்பிக்க அக்ஷரா அவனை தடுக்கவே இல்லை.
அக்ஷராவை இழந்து விடுவேனோ என்ற பயத்தில் ஸ்டீவிடம் வேகம் மட்டும்தான். அவன் கைகளும் எல்லை மீற ஆரம்பிக்க அவனிடமிருந்து திமிறி விலக முயன்றாள் பெண்ணவள். 
ஸ்டீவ் விடுவதாக இல்லை. இன்று விட்டால் அவள் என்றைக்குமே! கிடைக்க மாட்டாள் என்ற எண்ணத்தில் அவளை அடையும் வெறியில் வேகத்தை கூட்டி இருக்க “பாளர்” என அறைத்திருந்தாள் அக்ஷரா.
“எதுக்கு டி இப்போ என்ன அடிச்ச?” கன்னத்தில் கையை வைத்தவாறு நின்றிருந்தான் ஸ்டீவ்
“என்ன பண்ணிக்கிட்டு இருக்க? அதுவும் நடு வாசல்ல” மூச்சு வாங்கியவளாக அக்ஷரா பேச
“அப்போ வா ரூம்ல போய் வச்சிக்கலாம்” இதெல்லாம் ஒண்ணுமே இல்ல என்பது போல் ஆணுக்கே உண்டான திமிர் தலை தூக்க அவள் கையை பிடித்து இழுக்கலானான் அவன்.
அவன் கையில் ஒன்று வைத்தவள். “என்னதான் உன் பிரச்சினை இப்போ?”
“கல்யாணம் பண்ணிக்கிட்டு இதெல்லாம் பண்ணா தப்பில்ல. இப்போ பண்ணா மட்டும் தப்பா?”
“இந்த கேள்வியை கேக்கத்தான் சென்னைல இருந்து டில்லிக்கு பிளைட் ஏறி வந்தியா?
“நீ சொல்லாம கொள்ளலாம் இங்க வந்து உக்காந்திருந்தா? வந்துதானே! ஆகணும்” அவளை முறைத்தான் ஸ்டீவ். 
“எதுக்கு சொல்லிட்டு வரணும் நீ என் புருஷனா? சொல்லிட்டு வர?” அக்ஷராவும் சரிக்கு சமமாக பேச
“அப்போ என்ன கல்யாணம் பண்ணிக்க” விடா கொண்டனானான்.
“பண்ணி தொலைக்கிறேன். வேற வழி. எங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்கு”
“பேசித் தொலைக்கிறேன்” அவளை போலவே பதில் சொன்னான் ஸ்டீவ்.
அக்ஷரா கோபமாக அவனை முறைக்க அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் “சாரி டி.. அன்னக்கி நீ பட்டுனு கேட்டுட்டு போய்ட்ட என்னால என்ன பதில் சொல்லுறதுனு சத்தியமா புரியல. நா ஒரு அநாதை, சாதாரணமான பி.ஏ வேலதான் பாத்துகிட்டு இருக்கேன். நீ என்ன விட சம்பாதிக்கிற, என்னால அதீய விட்டுட்டு வரவும் முடியாது. என்ன பண்ணுறதுனு தெரியல” என்று புலம்ப
ஆண்களுக்கே உண்டா எண்ணங்கள் எனப் புரிய? “இதுதான் உன் பிரச்சினையா?” அக்ஷரா அவனை மேலும் முறைக்க
“இப்போ ஒரு பிரச்சினையும் இல்ல. அதீ என்னையும் கம்பனில பாட்னராகிட்டான்” சந்தோஷமாக சொல்லியவாறு அவளை முத்தமிட 
“இரு டா மகனே! உன்ன வச்சிக்கிறேன். உன்ன பார்த்ததும் பிடிச்சிருக்கு என்ற ஒரே காரணுத்துக்காக கல்யாணம் பண்ணிக்கலாமான்னு. பட்டுனு கேட்டுட்டேன். என்ன ஒரு வருஷம் மண்டைய பிச்சிக்கவச்சில்ல. இதுல உனக்கு ஈகோ வேறயா? உன் மண்டைய காய வைக்கிறேன்” என்று கருவியவள் “என் வீட்டுல அம்மா அப்பா அக்கா, மாமா.. அண்ணா எல்லாரும் உன்ன பார்த்து உன் கிட்டு பேசி சம்மதம் சொன்ன பிறகுதான் நான் உன்ன கல்யாணம் பண்ணிப்பேன்” என்றவள் அவன் முகத்தை பார்க்க
“ஏன் அவங்க வேணாம்னு சொன்னா பண்ணிக்க மாட்டியா?”
“மாட்டேன். எனக்கு என் குடும்பம்தான் முக்கியம். முடிஞ்சா அவங்க சம்மதத்தை வாங்க பாரு” என்றாள்.
“இது வேறயா?” என்று முணுமுத்தவன் ஒருவாறு அக்ஷராவின் குடும்பத்தை சந்தித்து பேச அவர்களுக்கு ஸ்டீவை பிடித்துத்தான் இருந்தது. அவனுக்கு யாருமில்லை என்ற குறை மட்டும் அக்ஷராவின் தந்தை ஆத்மநாதனுக்கு இருக்க, அதீ பேசியதில் அந்த குறையும் தீர்ந்திருந்தது.
“மாப்புள நாங்க டில்லில இருந்தாலும் ஊர்லதான் எங்க குடும்பம் மொத்தமும் இருக்காங்க ஒரு வாட்டி நீங்க ஊருக்கு வந்தா உங்கள அவங்க பார்த்தா மாதிரி இருக்கும் அக்ஷராவின் அன்னை நித்யா சொல்ல ஸ்டீவும் மறுக்காது தலையசைக்கலானான்.
“மாட்டினா டா மவனே!” என்ற அக்ஷரா ஸ்டீவிடம்  சென்று “ஆ.. முக்கியமா ஊருல எங்க தாத்தா.. பெரிய மாமா, சின்ன மாமா இருக்காங்க அவங்க உன்ன பார்த்து ஓகே சொல்லணும். பெரிய மாமா வாசன் இருக்காரே அவர் ஒரு டெரெர் பீஸ் வேட்டி மட்டும்தான் கட்டுவாரு. பண்பாடு, கலாச்சாரம்னு ஊறி போனவர். ட்ரைன்ல ஊருக்கு போகும் போது வேட்டி கட்டிட்டு போ என்ன. மத்தவங்க பத்தி ஊருக்கு போன பிறகு சொல்லுறேன் சரியா” என்றவள் கண்சிமிட்டு விட்டு செல்ல முழிபிதுங்கி நின்றான் ஸ்டீவ்.
சதா கோட் சூட்டில் திரியும் ஸ்டீவ் அக்ஷரா சொன்னதைக் கேட்டு ட்ரைனை விட்டு இறங்கும் பொழுது வெள்ளை வேட்டி சட்டையில் இறங்க
“என்ன மாப்புள நேரா கல்யாண மண்டபத்துக்கே! போய்டுவாரு போல இருக்கு” என்று அக்ஷராவின் அண்ணன் ஆதி கலாய்க்க
“அண்ணா நான் மட்டும்தான் கலாய்ப்பேன்” என்று அக்ஷரா சிரிக்க ஆதி அவள் முடியை பிடித்து இழுத்தான்.
அக்ஷரா அவளிடம் விளையாடி இருக்கிறாள் என்று ஸ்டீவுக்கு புரிய அவள் குடும்பத்தார் முன்னிலையில் அவளை முறைக்கவும் முடியாமல் திண்டாடினான் அவன்.  
ஒரு வருடமாக தன்னை கண்டுகொள்ளவில்லையென அக்ஷரா  படுத்தியெடுக்க அவளின் அத்தனை சொந்தபந்தங்களின் நடுவில் அவர்களின் கவனிப்பில், அன்பில் திண்டாடித்தான் போனான் ஸ்டீவ்.
அதீயின் குடும்பத்தாரோடு, மஞ்சரியின் குடும்பத்தாரும் ஸ்டீவின் குடும்பமாக கல்யாண வேலைகளை பார்த்தவாறு கல்யாணத்தில் கலந்துகொண்டு வாழ்த்த, ஊர் கோவில் அக்ஷரா மற்றும் ஸ்டீவின் திருமணம் இனிதே! நடைபெற்றிருந்தது. 
கவிதைகளிலும், காவியங்களிலும் காதலை அழகாக சொல்லி இருப்பார்கள். ஒரு ஆண் பெண்ணிடம் காதல் கொண்டாலும் சரி ஒரு பெண் ஒரு ஆணிடம் காதல் கொண்டாலும் சரி அதை சொல்ல கொஞ்சம் துணிவுதான் வேண்டும். சொல்லி விட்டால் நிம்மதி சொல்லா விட்டால் இறந்தாலும் மனம் அமைதியடையாது என்பார்கள்.
சொல்லி விட்டால்? அந்த காதல் கைகூடிய பின்? ஆயிரம் சண்டைகள் வந்தாலும் அந்த உறவு நிலைக்க? குட்டி குட்டி பொய்கள் சொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
அப்படியாயின் காதல் கைகூட எந்த எல்லைக்கும் செல்ல அர்ஜுனை போல் இதயத்தில் காதல் பூத்தவர்களும் உண்டு.
தன் மனதில் காதல் பூத்ததை அறியாமல் அலசி ஆராய்ந்து பின் அறிந்துகொள்ளும் அதீ போன்றவர்களும் உண்டு.
தன் இதயத்தில் பூத்த காதலை மறைத்துக்கொண்டு வாழும் சந்தோஷ் போன்றவர்களும் உண்டு. எல்லாரும் சந்தோஷ் போல் அதிஷ்டசாலிகளும் கிடையாது.
காதல் என்ற ஒற்றை சொல்லை தூரவே! நிறுத்தி வைத்து காதல் அழைக்கும் பொழுது ஏற்றுக்கொள்ளும் ஆனந்த் போன்றவர்களும் உண்டு.
உடனே! கிடைத்தாலும் குழம்பித் தவிக்கும் ஸ்டீவ் போன்றவர்களும் இந்த பூமியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். 
தனக்கு பிடிக்காத விஷயங்களை மனைவி செய்கிறாள் என்று அறிந்தும் வாகை செய்யும் அனைத்தையும் சங்கரன் கண்டும் காணாது போல் இருப்பது வாகையின் மீது சங்கரனின் இதயத்தில் பூத்த காதலால் அன்றி வேறில்லை.
காதலுக்கு வயதுமில்லை. எல்லையுமில்லை. எல்லா ஜோடிகளும் சந்தோசமாக வாழ வாழ்த்தி விடைபெறுவோமாக
                                     நன்றி

 

Advertisement