Advertisement

அத்தியாயம் 3
சென்னை மாநகரத்தின் பிரபலமான கல்லூரி அது. அங்கே படிப்பவர்கள் எல்லாம் அரிசியல்வாதிகளின் மக்களும், தொழிலதிபர்களின் மக்களும் மட்டுமே! பணத்துக்கு எந்த குறையும் இல்லையோ! வசதிக்கும் அவ்வளவு குறைகள் இல்லை.
காலேஜ் என்றாலே! மாணவர்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கும், சயன்ஸ், எஞ்சினியரிங், ஆட்ஸ் என்று பிரச்சினை தனியாக ஓட, சீனியர் ஜூனியர் பிரச்சினை, ஜாதி பிரச்சினை. காதல் விவகாரம், எக்ஸாம் டென்ஷன், அரியர்ஸ் இன்னும் ஏதேதோ…..
ஆனால் இங்கு எல்லோரும் பணம் படைத்தவர்கள் என்பதால் ஒரு வித்தியாசமான பிரச்சினை.
தொழிலதிபர்களின் பசங்களோ! “நீங்கள் வெறும் ஆறு வருடங்கள்தான் பதவியில் இருப்பீர்கள். அதன்பின் உங்களை அடையாளம் கூட தெரியாது. நாங்கள் அவ்வாறல்ல பரம்பரை பணக்காரர்களும் இருக்கிறோம். அது மட்டுமா? நீங்க தேர்தல்ல வெற்றி பெற நாங்க கொடுக்குற பெட்டி நிறைய பணம்தான் தேவைப்படுகிறது. அதனால நாங்கதான் உசத்தி” என்று பீத்திக்கொள்ள
“போங்கடா… அவன இவன காக்க புடிச்சியாவது அடிமட்ட தொண்டனா இருந்து மேல வந்தாலும், இல்ல ஒரேயடியா எம்.எல்.ஏ, எம்.பி, ஏன் சீ.எம் ஏ…யானாலும் நம்ம ஆளுற வர்க்கம்டா…. நம்ம கேட்ட உடனே! நீ பொட்டிய ஒன்னும் சும்மா கொடுக்கல. நாங்க ஜெய்ச்சி பதவில உக்காந்ததும் அத சாக்கா வச்சி, அரசாங்க டெண்டரையெல்லாம் கைப்பற்றி கொடுத்ததை விட காசு பாக்குறீங்களேடா லம்பாடி………”
இப்படியே! இரண்டு குழுவாக பிரிந்து காலம்காலமாக அடித்துக்கொள்ள காலேஜ் நிர்வாகமே! இவர்களை பிரித்து வைத்தது.
ஒரே! பாடத்தை இரண்டு வகுப்புகளுக்கு எடுக்க வேண்டிய நிலைமை விரிவுரையாளர்களும். சில பாடங்களுக்கு ஒரே பாடத்துக்கு இரண்டு விரிவுரையாளர்கள். காரணம் இரண்டு குழுக்களாக இவர்கள் இருப்பதுதான்.
A, B என்று வகுப்பை பிரித்தால் அதற்கும் சண்டை பிடிக்க ஆரம்பித்திருக்க, A for அரசியல் B for பிஸ்னஸ் என்று சொன்ன பிறகுதான் அடங்கினர் இளசுகள்.
எல்லாம் பணக்கார பசங்களாகிப் போக இவர்களை கேள்வி கூட யாரும் கேட்க முடியவில்லை. விரிவுரையாளர் பாடம் நடத்தும் பொழுது மற்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிகம்.
கம்பளைண்ட் பண்ணி பிரயோஜனமும் இல்லை. பெற்றோர்கள் வந்தால் இவர்களை விட தொல்லை.
வழுக்க மண்டை முதல்வருக்குத்தான் பிராணம் ஏர்ரில் ஏறி இறங்கும். அந்த டென்ஷனை குறைக்க, இன்ஹேலரை கையேடு வைத்திருப்பார். அந்த ஏசி போட்ட அறையிலும் வியர்க்கும் வியப்பான மனிதன் இவர் மட்டும்தான். மண்டையை துடைக்க, ஒரு கைக்குட்டை, வழுக்கையை மறைக்க விக். அது வேறு வியர்வையில் வழுக்க அதை சரி செய்ய ஒரு நேரம் போகும். சோடாபுட்டி கண்ணாடி அதை தவிர ஆளு கோட் சூட்  இல்லாம காலேஜில் நடமாட மாட்டார்.
எதோ மிலிட்டரி கேம்புக்குள் வருவது போல் தினமும் மாணவர்களின் பைகளை பரிசோதித்துதான் உள்ளே அனுமதிப்பார்கள். அதற்கு காரணம் ஒரு கூட்டம், கஞ்சா, அபின் என்று சரக்குகளை காலேஜுக்கு உள்ளே கொண்டு வருவார்களேயானால், இன்னுமொறுக் கூட்டம் காலேஜை லாட்ஜாக பாவிக்க ஆரம்பித்திருந்தனர்.
துப்பரவு செய்பவர்கள் அலறியடித்துக்கொண்டு வந்து அத பார்த்தேன், இத பார்த்தேன் என்பதும், “சார் லெப், லைப்ரரினு ஒரு இடம் விட்டு வைக்க மாட்டேங்குறாங்க, இதெல்லாம் நாம பொறுக்கணுமா?”
“காசு அள்ளி கொடுக்கும் போது ஈ…னு வாங்குறீங்கல்ல போய் சுத்தம் பண்ணுங்க” கத்தி அவர்களை துரத்தி விடுவார். மொத்தத்தில் முதல்வரின் வாய் சவுண்டில் எல்லாம் அடங்கும்.
அவர்களை துரத்தி விட்டு தனது இருக்கையில் அமர்பவர் “அடப்பாவிகளா… விட்டா என் ரூமையே! பெட்ரூமா மாத்திடுவாங்க போல இருக்கே!” இந்த முதல்வரால் சமாளிக்க முடியால் போனால் மாநிலத்தின் முதல்வரை தேடி ஓடி விடுவார்
“என்னய்யா? எப்போ பார்த்தாலும் ஸ்கூல் பையன் மாதிரி ஏதாவதொரு பிரச்சினையை கொண்டுவராய். எல்லாம் பெரிய இடத்து பசங்க கண்டுக்காம விட்டுடு” என்று கனகவேல் சொல்ல
“ஐயா தம்பி…” என்றால் போதும்
“என் பையனுமா… பொம்பள விசயமுமா? கஞ்சா மட்டுமா?” வலுக்க மண்டை என்ன சொல்ல முனைந்தார் என்று கேட்காமல் இவராக முடிவெடுத்து “என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா.. நெஞ்சு வெடிச்சு செத்துடுவாளே! ரூல்ஸை போடு பாலோ பண்ணலைனா…. இன்னும் போடு.. எல்லாத்துக்கும் என் கிட்ட வராத” என்றவர்
கோதாண்டத்திடம் திரும்பி “இவருக்கு ஐடியா கொடுக்க, ஒருத்தன ஏற்பாடு பண்ணி கொடுங்க. எந்த தப்பும் இனிமேல் நடக்கக் கூடாது. தம்பி விஷயம்..” என்று இழுக்க…
“அதெல்லாம் பெருசு படுத்த மாட்டேன் ஐயா…” மகளை கட்டிக் கொடுக்க போகும் இடம் என்பதால் முடியாது என்றா சொல்ல முடியும். கோதாண்டத்துக்கு மண்டை வெடிக்கும் போல் இருக்கும்.
கனகவேலும் கோதாண்டமும்  ஒரே ஊரை சேர்ந்தவர்கள். ஒரே ஜாதிக்காரர்கள். அதனால்தான் இத்தனை இணக்கம் காட்டுகிறார் கனகவேல். பகைத்துக்கொள்ளவாவும் முடியாது. மாநிலத்தின் முதல்வர் என்பதால் மட்டுமல்ல. “மாட்டேன்” என்றபின் வரும் பின் விளைவுகளை சந்திக்க கோதாண்டத்தால் முடியவே! முடியாது.
கனகவேல் ஒரு நச்சுப்பாம்பு என்பதையும் கோதாண்டம் நன்கு அறிந்துதான் வைத்திருக்கின்றார். மாலினியிடம் சொன்னது போல் கனகவேல் ஒன்றும் நல்ல நண்பர் கிடையாது. ஒரே ஊர்க்காரர் மட்டும்தான். அப்படி சொல்லவில்லையாயின் மாலினி கல்யாணத்துக்கு சம்மதித்திருக்க மாட்டாள். அவள் சம்மதித்திருக்கா விட்டால் அப்பன், மகள் இருவரும் உயிரோடு இருந்திருப்பார்களா? என்பது கூட கோதாண்டத்துக்கு  தெரியாது.      
“என்ன நம்ம முதல்வர் எக்ஸன் எடுக்கலானா தம்பியும் இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணுவார்னு சொல்ல வற்றதுக்குள்ள பேசி முடிச்சி கிளம்பிட்டாரு” வழுக்கமண்ட மண்டையை சொரிய 
கோதாண்டம் நிம்மதி பெருமூச்சு விட்டவாறே “நீங்க போங்க சார் நான் பாத்துக்கிறேன்” என்றார்.
கோதாண்டம்  ஏற்படுத்திய மூளைசாலியின் நடவடிக்கைகளின் காரணமாக ரூல்ஸ், ஸ்ட்ரிக்ட் ஆனா பின் கொஞ்சம் காலேஜ் வழுக்கையில் கண்ரோல்லுக்கு வந்தது. ஆனாலும் சண்டை போடுவதை நிறுத்த முடியவில்லை.
இந்த காலேஜில் படிக்கும் முதல்வரின் மகனும் காலேஜ் டான் என்று அழைக்கப்படும் க்ரிஷ்ணாவேல் ராஜா அரசியல்வாதிகளின் வாரிசுத் தலைவன் என்றால். அதே வகுப்பில் படிக்கும் அர்ஜுன் வர்மா தொழிலதிபர்களின் வாரிசுகளின் தலைவன் காலேஜ் கிங். கிருஷ்ணா குரூப் A பிரிவிலும், அர்ஜுன் குரூப் B பிரிவிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்துகின்றனர்.
கல்லூரியில் தனது டுகாட்டியை புழுதி பறக்க செலுத்தி வந்த அர்ஜுன் அதற்குரிய இடத்தில் நிறுத்த அவனை சைட்டடிக்கவென்றே சுற்றும் பெண்கள் கூட்டம் அலைமோதின. ஆறடிக்கு மேலான உயரம் சிவந்த நிறம் என்று பெண்களை காதல் பார்வை பார்க்கவும் ஆண்களை பொறாமைகொள்ளவும் செய்தான் அர்ஜுன்.
ஹெல்மட்டை கழட்டும் பொழுதே! அவனுக்கும் அடங்காமல் அவனது தலைமுடி சிலுப்பிக்கொண்டு வர, கைகளிலிருந்து உரைகளை கழட்டியவன் கையாலையே! தலையை கோதி முடியை ஒழுங்குப படுத்திவிட்டு பைக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து திருப்திப்பட்டுக்கொள்ள அவன் முதுகில் தட்டி இருந்தான் நண்பன் விகாஷ்.
என்னதான் அகல்விழிக்கும் அர்ஜூனுக்கும் திருமணம் பேசப்பட்டிருக்கிறது என்று காலேஜ் முழுக்க பேசப்பட்டாலும் இன்னும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. அதனால் யார்வேனானாலும் அர்ஜுனனை சைட் அடிக்கலாம் என்று விகாஷ் பகிரங்கமாக அறிக்கை விடுத்திருக்க, பெண்களுக்கு சந்தோசம் என்றால் விழியின் வயிற்றில் புகைதான்.
விகாஷ் அர்ஜுனின் நெருங்கிய நண்பன். ஸ்டேட்டஸ் என்று பார்த்தால் அர்ஜுனுக்கு சமனாகத்தான் இருக்கின்றான். ஆனால் கிருஷ்ணா குரூப் அவனுக்கு வைத்திருக்கும் பெயர் அடியாள். விகாஷ் என்று அவன் பெயர் சொல்லி அழைப்பதை விட அர்ஜுனின் அடியாள் என்றால் அவனை அறியாதவர் காலேஜில் இல்லை.
“ஹாய் அர்ஜுன்…”
“ஹாய்  அர்ஜுன்…”
“குட் மோர்னிங் அர்ஜுன்” என்றெல்லாம் பெண்கள் அவனிடம் வழிந்தவாறு செல்ல அவர்களை கண்டுகொள்ளாது தனக்காக் காத்துக்கொண்டிருந்த அகல்விழியை தேடி விகாஷோடு கேண்டீனை நோக்கி நடந்தான் அர்ஜுன்.
“என்ன டா.. மச்சான். அவனவன் எந்த பிகருமே! மடியாதானு கவலைல இருக்கானுங்க. உனக்கு இருக்குற மச்சத்துக்கு அவளவளுங்க தானா வராளுங்க ஒரு ஹாய் தான் சொன்னா என்ன?”
நண்பனை கூர்மையாக பார்த்த அர்ஜுன் “நீ அகல்விழிய லவ் பண்ணுறியா என்ன?” என்று பட்டென்று கேட்டுவிட
அதிர்ச்சியில் நடையை நிறுத்தியவன் “டேய் என்னடா… அவங்க நீ கல்யாணம் பண்ணிக்க போறவங்க” எனறவனின் குரலில் பதட்டமும் சிறு பயம் இழையோடி இருந்தது. அது நண்பன் தன்னை தப்பாக நினைத்து விட்டானோ! என்ற அச்சமும், இன்றிலிருந்த தங்களது பிரென்ஷிப்பை துண்டித்துவிடுவானோ! என்ற பதட்டமும் அப்பட்டமாக தெரிந்தது.
அர்ஜுனுக்கு ஆயிரம் விகாஷ் கிடைப்பான். ஆனா விகாஸுக்கு அர்ஜுன் போல கெத்தான நண்பன் கிடைப்பானா? “இந்த காலேஜில் அப்படி ஒருவன் இல்லை. ஏன் இல்லை இருக்கானே! அவன் எதிரி கேங். அர்ஜுனன் பகைச்சிகிட்டு அவன் கிளாஸ்ல கூட இருக்க முடியாது. இதுல எங்க காலேஜ்ல இருக்குறது” நொடியில் விகாஷின் மனதில் பல சிந்தனைகள் ஓடி விட
விகாஷ் “அவங்க” என்று அகல்விழியை மரியாதையாக குறிப்பிட்டதிலையே! அவன் மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று புரிந்துக்கொண்ட அர்ஜுன் விகாஷ் நடையை நிறுத்தியதும் நடையை நிறுத்தி இருந்தான்.
“இல்ல… என்ன மத்த பொண்ணுங்க கூட கோர்த்து விடுறதுலையே! குறியா இருக்கியே! அதான் சந்தேகமா இருந்துச்சு. அதான் கேட்டேன். சரி வா போலாம். அகல் எனக்காக சாப்பிடாம காத்துக்கொண்டு நிற்பா” என்று நடையை தொடர,
“யப்பா.. சாமி… ஆள விடுடா… உன்னயெல்லாம் ப்ரெண்டா வச்சிக்கிட்டதுக்கு உசுர கைல வச்சிக்கிட்டு சுத்த வேண்டி இருக்கு. ஒரு செக்கன் சாவு பயத்த காட்டிட்ட. இப்போ நீ கேட்டது சிஸ்டருக்கு தெரிய வேணாம்”
“சரி டா.. மச்சான்… கவலைப்படாம வா போலாம்” என்று இழுத்துக்கொண்டு உள்ளே செல்ல அங்கே அகல்விழி மலர்ந்த முகத்தோடு அர்ஜுனுக்காக காத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அர்ஜுன் ஒரு எஞ்சினியரிங் ஸ்டுடென்ட். அவனுக்கு அப்படி என்ன பிடித்தம் என்று அவன் யாரிடமும் இதுவரை பகிர்ந்ததில்லை. மருத்துவம் தான் படிப்பேன் என்று இருந்தவன் கடைசி நேரத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தேர்வு செய்தது வீட்டாருக்கு பெரிய ஆச்சரியம் என்றால், அகல்விழிக்கு அதிர்ச்சி.
அவள்தான் இவனுக்காக மெனக்கிட்டு படிச்சி இருந்தாள். அதில் மண்ணை போட்டு இவன் வேறு படிக்க, இவள் பிடிக்காததை இவனுக்காக படிக்க அவனோடு சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை.
அர்ஜுனை திருமணம் செய்துகொண்டபின் அவன் என்ன தொழில் செய்தாலும் அதற்கு தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதே! விழியின் ஆசை. அதனாலயே! இந்த விபரீத முயற்சி.
“என்ன அகல் இன்னைக்கும் சாப்பாடு எடுத்துட்டு வந்தியா?” என்றவாறு அர்ஜுன் அவளருகில் வந்தமர விழிக்கு உள்ளுக்குள் ஜிவ்வென்று எதோ ஒன்று பறக்க ஆரம்பித்தது.
“இன்னக்கி என்ன ஸ்பெஷல் சிஸ்டர்” என்று விகாஷ் அமர்ந்துகொள்ள,
அவன் சிஸ்டர் என்று அழைத்தது அகல்விழிக்கு ஆச்சரியம் என்றால், அர்ஜுனுக்கு சிரிப்பை மூட்டி இருந்தது.
விகாஷ் விழியை சிஸ்டர் என்று அழைக்காவிட்டாலும், அர்ஜுனின் வீட்டுப்பெண் என்று மரியாதையாகத்தான் அழைப்பான். இன்று நண்பன் பேசியதில் பிரச்சினைகள் வரக்கூடாதென்று விழியை “சிஸ்டர்” என்று அழைத்திருந்தான்.
அர்ஜூனுக்கு விகாஸை பற்றி நன்கு தெரியும், தெரிந்ததாலும், புரிந்துகொண்டதாலும்தான் நண்பனாகவே! இருக்கின்றான். காலேஜ் பெண்களிடம் அவன் வழிவதும் இல்லாமல் தன்னையும் கோர்த்து விட பார்க்கின்றானே! என்ற கடுப்பில்தான் அப்படி ஒரு கேள்வியை கேட்டு இருக்க, அதற்கு இவன் இவ்வளவு ரியாக்ட் செய்வான் என்று அர்ஜுன் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
“என்னாச்சு விகாஷ் தலைல ஏதாச்சும் விழுந்திருச்சா?” விழி கிண்டலாக கேட்டவாறு மங்கை கொடுத்தனுப்பியதை கடைபரப்பலானாள்.
அது அவனுக்கு புரியவில்லை. “இல்லையே! ஒன்னும் விழவில்லையே!” எனறவன் தலையையும் தடவி அண்ணாந்து மேலையும் பார்க்க அர்ஜுன் சத்தமாகவே! சிரிக்கலானான்.
“அடேய். இப்படி பச்சை புள்ளையா இருக்காதா, உன் தல எங்கயாச்சும் அடி பட்டிச்சா? மூள குழம்பிருச்சானு கேக்குறா? 
இருவரையும் முறைத்தவன் “உங்க ரெண்டு பேருக்கும் காவலா தான் இங்க இருக்கேன். கரடியா இல்ல. நான் போறேன்” என்று கோபமாக எழுந்துக்கொண்டவன் வேகமாக திரும்ப தனுஷ்ஷின் மேல் மோதி நிற்க
“வாட் ப்ரோ..” என்று அவன் விகாஷின் நெஞ்சின் மீது கைவைத்து தள்ளி விட்டு நகர,
அர்ஜுன் காலை நீட்டி தனுஷை விழவைக்க முயற்சிக்க, கிருஷ்ணா தனுஷை பிடித்து நிறுத்தி அவர்களை முறைக்க ஆரம்பித்தான். 
விகாஷ் அர்ஜுனுக்கு எப்படியோ! தனுஷ் கிருஷ்ணாவுக்கு அப்படியே! விகாஷை கிருஷ்ணா குரூப் அடியாள் என்று அழைப்பது போல் அர்ஜுன் குரூப் தனுஷை அல்லக்கை என்று அழைத்தனர்.
மகாபாரதத்தில் அர்ஜுனனும், கிருஷ்ணனும் நண்பர்கள் என்று அறிகிறோம். ஆனால் இந்த கிருஷ்ணனும், அர்ஜுனனும் எதிரிகள் எப்பொழுதும் முட்டி மோதிக்கொள்ள காத்திருக்கும் எதிரிகள். இவர்களின் பகைக்கு காரணம், அரசில்வாதியின் வாரிசு, தொழிலதிபரின் வாரிசு என்பதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை.
மெக்கானிக் 3rd year படிக்கும் இவர்களை போலவே! ஒவ்வொரு வகுப்பிலும் அரசியல் வாரிசு, தொழிலதிபரின் வாரிசு என்று சண்டை பிடித்து, சட்டையை கிழித்துக்குக் கொண்டு தினம்,தினம் முதல்வரின் முன் பஞ்சாயத்துக்கு வந்துகொண்டுதான் நிற்கின்றனர். இன்ஜினீயரிங் இல் மட்டுமா? ஆட்ஸ், சயன்ஸ் என்று எல்லா டிபார்ட்மென்டிலும்தான்.
“நான் ரிட்டையராகுறதுக்குள்ள என் வழுக்க  தலைல இருக்குற கொஞ்ச நஞ்ச முடியையும் பிச்சி எரிஞ்சிடுங்க, கெட் லாஸ்” என்று அவர் கத்துவது அதிர்வலையாகி காலேஜ் முழுக்க ஒலிக்கும்.
“ஏன் டா… கால தட்டி விட்ட?” கிருஷ்ணா அர்ஜுனனை முறைக்க,
“அவன் எதுக்குடா என் நண்பனை தள்ளி விட்டான்?” அர்ஜுன் கிருஷ்ணாவை முறைக்க,
“எதுக்கு அஜ்ஜு இந்த சாக்கடை கிட்டயெல்லாம் சரிக்கி சமமா பேசிகிட்டு இருக்க? வா போலாம்” விழி அர்ஜுனின் கையை பிடித்து இழுத்தவாறு கிருஷ்ணாவை முறைக்க,
கிருஷ்ணாவின் பார்வை அகல்விழியின் பக்கம் செல்லும் பொழுதே! எங்கிருந்தோ வந்த மாலினி “அத ஒரு சாக்கடை சொல்லக் கூடாது” என்று சொல்ல முகம் மாறினாள் விழி.
“ஏய்….” என்று அர்ஜுன் கத்த
“ஏய்…” என்று அவனுக்கு குறைவில்லாமல் கத்தினான் கிருஷ்ணா.
“ஆஹா…. இங்க ஒரு சம்பவம் நடக்க போகுதுடா…” என்று கேன்டீன் உரிமையாளர் கடையை மூடும் வேளையில் இறங்க, மணி அடித்து காலேஜ் ஆரம்பமாகப் போவதை தெரிவிக்க, இரண்டு இளம் சிங்கங்களையும் அடியாலும், அல்லைக்கையும் இழுத்துச்சென்றனர்.
“ஏய்… நீ என்ன எங்க பிரச்சினைல வர?” கோபமாக நடந்துக்கொண்டிருந்த கிருஷ்ணா நடையை நிறுத்தி மாலினியை முறைக்க,
“ஏன் கிருஷ்ணா உனக்காக நான் பேசக் கூடாதா?” முகம் சுருங்கியவளாக மாலினி கேக்க
“கூடாது…..” கத்தியவன் விரல் நீட்டி எச்சரித்தவாறே! “உனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா? பகல் கனவு காணாத, உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காது. போ… போய் கிளாசை எட்டன்ட் பண்ணு”
“ஏன் நீ எங்க போற?” சந்தேகமாக கேக்க,
கண்களை உருட்டி, பல்லைக் கடித்தவன் ஓங்கி கையை தொடையில் குத்திக்கொண்டு நகர்ந்து விட
“போமா… போ… அவன் வேற கோபத்துல இருக்கான் நீ வேற தூபம் காட்டிகிட்டு” தனுஷ் மாலினியை துரத்துவது போல் பேசினாலும் கிருஷ்ணா அறியாதவாறு கும்பிட்டுதான் கேட்டுக்கொண்டிருந்தான்.
என்னமோ! இன்னக்கி நாள்ல க்ரிஷ்ஷுக்காக அவள் செய்ய வேண்டியதை செய்து விட்டதாக முழு திருப்தியுடன் மாலினி தோளைக் குலுக்கியவாறு வகுப்பறையை நோக்கி நடந்தாள்.
“ஏன் டா.. மச்சான் இப்படி பண்ணுற? என்ன இருந்தாலும் மாலினி நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு டா..” தனுஷ் கிருஷ்ணாவின் தோளை தொட்டு  பேச
அவனை உதறித் தள்ளியவன் “இங்க பாரு… நீ என் பிரெண்டு என்று என்னோட பெர்சனல் விசயத்துல தலையிடாத, புரியுதா?” அவனையும் கை நீட்டி மிரட்ட,
கிருஷ்ணாவின் குணம் அறிந்தவனாக தனுஷ் பேச்சை மாற்றினான். “சரி வா கிளாசுக்கு போலாம். இப்படி கோபப்பட்டு, கோபப்பட்டு கிளாசை கட் பண்ணி எக்ஸாம் சரியா எழுதாம எரியஸ் வைக்க முடியாது”
நின்னு நிதானமாக அவனை பார்த்து “உன்ன என் பின்னாடி வர சொல்லி நான் சொல்லி இருக்கேனா?”
கைகளை மார்புக்கு குறுக்காக அவன் கட்டி நின்றிருந்த தோரணை “ஆணழகன் டா… நீ” என்று சொல்லாத தோன்றினாலும் அவன் கேட்ட கேள்வியில் “அடப்பாவி… நண்பன்னு உன் கூட வந்ததுக்கு நல்ல வச்சி செஞ்சிட்ட. செய்டா செய். உன்ன அந்த மாலினிகிட்ட இருந்த காப்பாத்தி இருக்கவே! கூடாது. எக்கேடும் கேட்டு தொல” என்று கோபமாக நடக்க,
“நண்பேன்டா…” என்று அவன் கழுத்தில் கைபோட்டு க்ரிஷ்… அவனை இழுத்துக்கொண்டு நடக்கலானான்.
“என்ன இருந்தாலும் அகல் நீ நடுவுல பேசி இருக்கக் கூடாது” செல்லும் அவர்களை பார்த்தவாறு அர்ஜுன் கோபமாக சொல்ல
“உன்ன பேசினா… நான் பேசுவேன்” விழி முகத்தை திருப்ப,
“இங்க பாரு விழி கோபத்துல அவன் உன்ன அடிச்சிட்டானு வை. அப்பொறம் சண்டை பெருசாகும்”
“எனக்காக நீ சண்டை போட மாட்டியா?” அதற்கும் விழி முறிக்கொள்ள,
“உனக்காக சண்டை போடலாம். ஆனா உன்னால சண்டை போட்டு, ஒரு பொண்ணால அவன் கூட சண்டை ஆகிருச்சுனு யாரும் சொல்லிட கூடாதில்ல. புரிஞ்சிக்க”
“ஆமா சிஸ்டர் அர்ஜுன் சொல்றது சரிதான்”
“ஆனாலும் அவன் ஆளுக்கு ரொம்பதான் வாய் நீளுது. அவள ஏதாச்சும் பண்ணனும் அஜ்ஜு…”
“நாம ஒன்னும் பண்ண வேண்டியதில்லை. இந்நேரம் அவனே! அவளுக்கு காரியம் பண்ணி இருப்பான்” விகாஷ் சிரிக்க,
“என்ன டா… சொல்லுற?” விழி கண்ணை உருட்ட
“ஐடியல் கபல்னு காலேஜ்ல பேசப்படுற மிஸ்டர் டான் அண்ட் மிஸ் வாரணம் ஆயிரம் ஒட்டாத கம்மாம்.
“புரியல”
“ரெண்டு பேர் வீட்டுலையும் கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் க்ரிஷ்க்கு இஷ்டமில்லையாம். டான்{க்ரிஷ்} யான{மாலினி} மேல கடுப்பாதான் எப்போவும் இருக்காராம் நம்பத்தகுந்த வட்டாரம் சொன்னாங்க”
“ஹாஹாஹா பாவம் டா.. அவ. ஒருத்தன லவ் பண்ண வைக்க அவன் பின்னாடி ரொம்ப அலைய வேண்டி இருக்கும் போலயே!” தனக்கும் சேர்த்து விழி சொல்லிக்கொள்ள இவர்களின் சம்பாஷணையை அர்ஜுன் கேட்டுக்கொண்டிருந்தானே! தவிர பதில் எதுவும் சொல்லவில்லை.
“சுவத்துல பட்ட பந்தா… பீனிக்ஸ் பறவையா… மீண்டும் மீண்டு மாலினி டான தேடி வந்துகிட்டே இருக்கா…” விகாஷ் ராகமாக சொல்ல
அவன் தலையில் தட்டிய அர்ஜுன் “போதும் டா… டேய்… அடுத்தவங்க பெர்சனல் நமக்கு எதுக்கு? மணியடிச்சி ரொம்ப நேரமாச்சு வா போலாம்” அர்ஜுன் இழுத்து செல்ல விழியும் மாலினியை ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவோடு கூடவே! நடந்தாள். மங்கை கொடுத்த உணவுகள் மட்டும் பரிதாபமாக அங்கே கிடந்தன.

Advertisement