Advertisement

அத்தியாயம் 29
அந்த அரங்கமே! கருப்பு அங்கியும், கருப்பு தொப்பியும் அணிந்த மாணவர்களால் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்க, பட்டமளிப்பு விழா இனிதே! ஆரம்பமாகி இருந்தது.
கலை, மருத்துவம், பொறியியல் என மூன்று பிரிவுகளும் அங்கே அமர்ந்திருக்க, பெற்றோர்களும் பட்டம் வாங்கப்போகும் தங்களது மக்களை காண ஆசையாக அமர்ந்திருந்தனர்.
முதலாவதாக கலைப்பிரிவிலுள்ளவர்களுக்கு பட்டம் வழங்க, அவர்கள் ஒரு வரிசையில் வந்து நிற்க, ஒவ்வொருவரது பெயராக அழைக்கப்பட ஒவ்வொருவரும் மேடையேறினர்.
அதை தொடர்ந்து, மருத்துவத்துறை. கடைசியாகத்தான் நம் பொறியியல்துறை. அதில் கிருஷ்ணா, அர்ஜுன், மாலினி, விழி என்று அனைவரும் வரிசையில் நின்றிருந்தனர்.
அர்ஜுனின் சார்பாக வாகை, சங்கரன் மற்றும் அதீயும், நிறைமாத வயிற்றை சுமந்தவாறு மஞ்சரியும் வந்திருந்தனர். மாலினிக்காக கோதாதாண்டமும் அவர்களோடு அமர்ந்திருந்தார்.
க்ரிஷ்னாக்காக யாசோதாவும், அருள்வேலும் வந்திருக்க, விழிக்காக சந்தோஷோடு அவளது மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தனர்.
முதலில் விழி நின்றிருக்க, அடுத்து அர்ஜுன், அடுத்து மாலினி, அடுத்து கிருஷ்ணா என்றுதான் வரிஷையில் நின்றிருந்தனர்.
 .
இன்னும் இரண்டு வாரத்தில் அர்ஜுனும் மாலினியும் ஆஸ்ரேலியா செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க, வாகைக்கு மட்டும் இளைய மகனை பிரிவதில் இஷ்டமில்லை. 
“என்ன மம்மி அண்ணன் இத்தாலிவரைக்கும் போய் படிச்சிட்டு வந்தான். நான் இங்க பக்கத்துல இருக்குற ஆஸ்ரேலியா தானே! போறேன். அதுவும் தனியாவா போறேன். உன் மருமகளோடதானே! போறேன். அவ என்ன நல்லா பாத்துப்பா. அதுவும் ரெண்டு வருஷம் தானே! இப்படி திரும்பறதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிடும். வேணும்னா வரும் போது உனக்கு பேரனோ! பேத்தியோ! பரிசா கொண்டுவரேன்”
அவனின் தோளில் அடித்தவாறே “படுவா படிக்க போறீயா? ஹனிமூனுக்கு போறீயா?”
என்னமோ! ஆஸ்திரேலியா சென்னைக்கு மிக அருகில் என்பது போல் பேசி வாகையை சம்மதிக்க வைத்திருந்தான் அர்ஜுன்.
     
விழியின் பெயரை அழைத்ததும் அவள் மேடை ஏறி சென்றிருக்க அர்ஜுனின் தோளை தட்டி “மச்சான் அடுத்து நீ தான் கெட் ரெடி” என்றான் கிருஷ்ணா.
அவனை திரும்பிப் பார்த்தா மாலினி “இவனா… இன்முகமாக பேசினான்?” என்று ஆச்சரியமாக பார்க்க
“என்ன லுக்கு… அங்க கவனி..” என்று மிரட்ட அவனை முறைத்தவாறு மேடையை கவனிக்கலானாள்.
“அர்ஜுன் கிருஷ்ண வர்மா” என்று அர்ஜுனின் பெயர் அழைக்கப்படவும் அர்ஜுன் மேடைக்கு செல்ல தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா? என்று மாலினி யோசிக்க
அவள் புறம் குனிந்த கிருஷ்ணா “புருஷனோட பேர் கூட சரியா தெரியாதா?” என்று கேட்க அவனை பார்த்து திருதிருவென முழிக்கலானாள் மாலினி.
“உனக்கு அஜ்ஜுவையும் தெரியல, இந்த கிச்சாவையும் தெரியல” என்றவன் உதடு பிதுக்க
“நீ நீ…” என்றவள் தொண்டையடைத்து கண்களும் கலங்க மேடையில் இருக்கும் அர்ஜுனையும் க்ரிஷ்ணாவையும் மாறி மாறிப் பார்க்க மாலினியின் பெயரும் அழைக்கப்பட்டது.
“போ.. உன் பேர் அனவுனஸ் பண்ணிட்டாங்க, பாரு உன் புருஷன் மேடைல இருந்து இறங்காம நீ வரும்வரைக்கும் வைட்டிங்” என்றான் கிருஷ்ணா
கலங்கிய கண்களை துடைத்தவாறு மேடை ஏறியவளை கைப்பற்றிக்கொண்டான் அர்ஜுன். பட்டத்தை வாங்கியவள் மேடையை விட்டு இறங்கியதும் கேட்ட முதல் கேள்வியே! “உன் முழுப் பெயர் அர்ஜுன் க்ரிஷ்ணாவா?” என்றுதான்.
புன்னகைத்தவன் தலையசைக்க அவனை கட்டிக்கொண்டவள் “ஏன் என் கிட்ட சொல்லல” என்று கேட்க
அங்கு வந்த கிருஷ்ணா “ஹலோ… இது காலேஜ் எல்லாரும் உங்களத்தான் பார்த்துகிட்டு இருக்காங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” இருவரின் தோளிலும் தட்ட மாலினி அர்ஜுனை விட்டு விட்டு கிருஷ்ணாவை அணைத்துக்கொள்ள அர்ஜுனும் அவனை அணைத்துக்கொண்டான்.
அந்த தொடக்கபள்ளி வளாகத்தினுள் நுழைந்தது அமைச்சர் கனகவேல் ராஜாவுடைய வண்டி. வண்டியை ஓட்டி வந்த ஓட்டுநர் அவசரமாக இறங்கி பின்பக்கமாக இருந்த கதவை திறந்து விட குட்டி கிருஷ்ணா இறங்கி அன்று தன் பெற்றோரோடு வந்த வகுப்பறையை நோக்கி நடக்கலானான்.
தந்தை அமைச்சர் என்பதால் வீட்டை தாண்டி அவனால் எங்கும் செல்ல முடியாது. அன்னையும் சதா அழுதுகொண்டிருக்க, அவனோடு விளையாடவும் யாருமில்லை. பாடசாலைக்கு சென்றால் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள் என்று அன்னை சொல்லவும் சமத்தாக தலையாட்டியவன் இன்று காலை அவனை அழைத்து செல்ல அன்னை வரவில்லை என்பதை பற்றியெல்லாம் கவலை படாமல் சந்தோசமாக பாடசாலைக்கு வந்து சேர்ந்தான்.
ஆனால் இங்கு உள்ளே செல்ல மாட்டேன் என்று அன்னையின் காலைக் கட்டிக்கொண்டு அழும் குழந்தைகளைத்தான் பார்த்தான். அவன் சின்ன மூளைக்கு ஏன் என்று புரியவில்லை.
அவன் கண்களுக்கு அவ்விடமே! விசித்திரமாக தெரிய சுற்றியும் பார்த்தவாறு வர, வகுப்பறையின் வாசலில் உதடு பிதுக்கியவாறு தேம்பிக்கொண்டு கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்த குட்டி பொம்மை போன்ற சிறுமி கண்ணில் பட தானாகவே! அவன் கால்கள் அவளருகில் சென்றன.
“டேய் அஜ்ஜு அழாதடா.. சொன்னா கேளு டா.. குட்  பாய் இல்ல. ஸ்கூல் போனாதான் அதீ அண்ணா மாதிரி சீக்கிரம் பிக் பாயா வளர முடியும்” வாகை சமாதானப்படுத்த
“மாத்தேன்.. மாத்தேன்.. நான் உள்ள போக மாத்தேன். மம்மியும் என் கூத உள்ள வலணும்” குட்டி அர்ஜுன் வாகையின் சுடிதாரை பிடித்து இழுத்தவாறே பிடிவாதம் பிடிக்கலானான்.
“இந்த செந்தில் அண்ணா வேற சொன்னா கேக்காம விழிய அவங்க வீட்டு பக்கத்துல இருக்குற ஸ்கூலை சேர்த்துட்டாங்க, அவ இருந்தாலாவது இவன் இருப்பான்” தனக்குள் புலம்பிய வாகை
“என்னயெல்லாம் உள்ள விடமாட்டாங்க. சொன்னா கேளு அஜ்ஜு. உன்ன மாதிரி நிறைய குட்டீஸ் இருக்காங்க பாரு. எல்லாருமா அழுறாங்க?”  அர்ஜுனை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று சுற்றியும் பார்வையை ஓட்டிய வாகையின் கண்ணில் விழுந்தாள் அந்த சிறுமி. “அங்க பாரேன் டால் மாதிரி பாப்பா அங்க அழுது கிட்டு இருக்கு. பாப்பாவோட அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்ல. நீதான் பிக் பாயாச்சே… போய் அழ கூடாதுனு சொல்லு. பாப்பா கூட விளையாடேன் பாவமில்லை”
அன்னை காட்டிய திசையில் உதடு பிதுக்கியவாறு நின்றவளை காண பாவமாக இருக்க வாகையின் கையை விட்டு விட்டு அவளிடம் ஓடியிருந்தான் அர்ஜுன்.
“ஐம் அஜ்ஜு”
“ஐம் கிச்சா”
தன் அருகில் வந்து நின்ற இருவரையும் மாறி மாறி பார்த்தவள் ஒரு நொடி அழுவதை நிறுத்தி விட்டு மீண்டும் அழ ஆரம்பிக்க
“நீயும் இந்த கிளாஸா? நானும் இந்த கிளாஸ் தான்” என்று அர்ஜுன் சொல்ல
“நானும்” என்றான் கிருஷ்ணா.
அர்ஜுன் அவன் கையிருந்த லாலிபாப்பை கொடுக்க, கிருஷ்ணாவும், டாபியை கொடுக்க, அவள் இருவரின் கைகளிலிருந்ததையும் வாங்கிக்கொண்டவள் அழுவதையும் நிறுத்தி இருந்தாள்.
“உன் நேம் என்ன?” அர்ஜுன் கேக்க
“மாலினி உள்ள வாம்மா…” என்று அந்த வகுப்பாசிரியை வந்து அவளை அழைக்க மூவரும் உள்ளே! சென்றனர்.
அன்றிலிருந்து மூவரும் நல்ல நண்பர்களாயினர். ஒரே இடத்தில்தான் அமர்ந்தும் இருந்தனர். ஒன்றாகத்தான் உணவும் உண்டனர்.
பிடிவாதம் பிடிக்காமல் அர்ஜுன் பாடசாலைக்கு செல்வதே! மேல் என்று வாகை நினைக்க, மாலினியும் முதல் நாள் அழுதபின் அழாததால் கோதாண்டமும் நிம்மதியாக தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.
“நான் பிக் பாயானா என்ன கல்யாணம் பண்ணிக்கிழியா மாலு” திடிரென்று கிருஷ்ணா கேக்க
யோசித்தவள் “இல்ல நான் அஜ்ஜுவதான் கல்யாணம் பண்ணிப்பேன்”
“வை”
“அஜ்ஜு நேம்லதான் அஜ்ஜு, கிச்சா லேண்து பேலும் இலுக்கிலீங்க” என்று மாலினி சிரிக்க,
“அஜ்ஜு நீ மாலுவ நல்லா பாத்துக்கணும். இல்லனா அதிப்பேன்” கிருஷ்ணா
லாலிபாப்பை வாயில் வைத்திருந்த அர்ஜுன் தலையை ஆட்டி வைத்திருந்தான்.
அவர்களின் நட்புக்கு ஆயுள் இரண்டு வருடங்கள்தான். மாலினியை கோத்தாண்டம் மகளிர் பாடசாலையில் சேர்த்திருந்தார். ஆறாம் ஆண்டுக்கு சென்ற பின் அவளை பெங்களூரில் போர்டின்க் ஸ்கூலில் வேறு சேர்த்து விட்டார். அர்ஜுனும் விழியும் ஒரு பாடசாலையிலும், கிருஷ்ணா வேறொரு பாடசாலையிலும்தான் படித்தனர். ஆனாலும் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளின் போது கிருஷ்ணாவும் அர்ஜுனும் சந்தித்து கொள்ள நேர்ந்த போது அவர்களை நட்பு தொடரத்தான் செய்தது.
காலப்போக்கில் மாலினி இவர்களை மறந்து போய் இருக்க, கிருஷ்ணாவோ! அர்ஜுனோ! அவளை மறக்கவில்லை. இருவரும் சந்திக்க கிடைக்கும் நிமிடங்களும் மிக்க குறைக்கு அதிலும் சந்தித்தால் மாலினி எங்கு இருப்பாளோ! என்றுதான் பேசுவார்கள். விழியிடமும் அர்ஜுன் கிருஷ்ணாவை அறிமுகப்படுத்த ஒவ்வொரு தடவையும் முயற்சி செய்திருக்கின்றான். ஆனால் முடியாமல் போய் விட்டது.
காலேஜில் விண்ணப்ப படிவம் கொடுக்க செல்லும் பொழுது அர்ஜுன் மாலினியை பார்த்து அடையாளம் கண்டு கொண்டதோடு கிருஷ்ணாவையும் சந்தித்திருந்தான். ஆனால் காலேஜில் அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கும், தொழிலதிபர்களின் வாரிசுகளுக்கும் நடுவில் நடக்கும் யுத்தம் பற்றி அறிந்துக்கொண்டபின் “நம்ம கிளாஸ்ல நாமதான் ஹீரோவா இருக்கணும்” என்ற முடிவோடு காணும் பொழுதெல்லாம் முட்டி மோதிக்கொள்ள ஆரம்பிக்க அவர்களை சுற்றி கூட்டமும் கூடி அவர்களை தலைவராக்கி இருந்தனர்.
“அடப்பாவிகளா.. நாலு வருஷமா அடிச்சிக்கிட்டு இப்போ என்ன டா கட்டுபிடிச்சிகிட்டு நிக்குறீங்க?” விஷால் புரியாது கேட்டவாறு வர,
“அதானே! காலேஜ் சண்டையை விடு. இந்த மாலினிக்காக சண்டை போட்டீங்களேடா..” என்றவாறு தனுஷ் வர
“காலேஜ் வாழ்க்கை நாலு வருஷம்தான். அதுக்கு பிறகும் சண்டை போட்டுக்கிட்டா திரிய போறோம். அதுவுமில்லாம நாங்க சின்ன வயசுல இருந்தே! ப்ரெண்ட்ஸ்” என்று கிருஷ்ணா சொல்ல
“அடப்பாவி.. போட்ட சண்டை எல்லாமே! டிராமாவா?” விகாஷ் அர்ஜுனை முறைக்க,
“டான் அப்போ புரியாத நிறைய விஷயம் இப்போ புரியுது. ஆனாலும் மாலினி” தனுஷ் கேக்க நடந்ததை நினைத்து சிரித்தனர் அர்ஜுனும் கிருஷ்ணாவும்.
“என்ன டா சொல்லுற? மாலினியை கல்யாணம் பண்ண போறியா? இன்னுமாடா அத நியாபகத்துல வச்சிருக்க?” கிருஷ்ணா கேக்க,
விண்ணப்பபடிவத்தை நிரப்பியவாறு “ஆமா. ஆனா மாலினிக்கு என்ன அடையாளம் தெரியல. அவ முன்னாடி போய் நின்னேன். முறைச்சிகிட்டே போய்ட்டா” என்று அர்ஜுன் சிரிக்க,
“அப்போ என்னையும் அவளுக்கு நியாபகம் இல்லையா?” கிருஷ்ணா வருத்தத்தோடு கேக்க, அர்ஜுன் புருவம் உயர்த்தினான்.
மாலினிக்கு கிருஷ்ணாவை நியாபகம் இருக்காததால் கிருஷ்ணா அவள் மேல் கோபத்தில் இருக்க, அடுத்த ஒருவாரத்தில் க்ரிஷ்ணாவுக்கும் மாலினிக்கு வீட்டார் திருமணம் பேசி முடித்திருந்தனர்.
கிருஷ்ணா யாரோ ஒருவன் என்று மாலினி அவனோடு பேசுவதால் அதீத கோபமடையும் கிருஷ்ணா அதை அவள் மேல் காட்ட ஆரம்பித்தான். இதில் திருமண பேச்சு வேறு வெறுப்பை சேர்த்திருந்தது.
அர்ஜுன் கிருஷ்ணாவை அழைத்து வசை மழையில் நனைய வைக்க,
ஏற்கனவே! கடுப்பில் இருந்த கிருஷ்ணா “நான் எதுக்கு உனக்கு மாலுவ விட்டுத்தரனும்” என்று பேச
கிருஷ்ணாவின் சட்டையை பிடித்த அர்ஜுன் “மாலுவ நான்தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று சவால் விட
“ஓகே. நாமதான் அவ சின்ன வயசு ப்ரெண்ட்ஸ் என்று சொல்ல கூடாது அவளா கண்டு பிடிக்கட்டும். அப்படி அவ யாரை முதல்ல கண்டு பிடிக்கிறாளோ! அவங்கதான் அவளை கல்யாணம் பண்ணனும்” என்று கிருஷ்ணா சொல்ல அர்ஜுன் கிருஷ்ணாவை முறைத்து விட்டு சென்றிருந்தான்.
கனகவேல் ராஜாவின் மீது இருந்த வெறுப்பும், மாலினியின் மீது இருந்த கோபமும் கிருஷ்ணாவுக்கு இந்த திருமணத்தில் பிடித்தமில்லாமல் போனது. மாலினி அவனுக்கு தோழி மட்டும்தான். அவன் யாரென்று அவள் அறிந்துகொண்டால் நிச்சயமாக அவள் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டாள் என்றுதான் கிருஷ்ணா எண்ணினான். அதனாலயே! அவளை துரத்தியடிக்கலானான்.
அர்ஜுனுக்கு கிருஷ்ணா ஏன் இவ்வாறு செய்கின்றான் என்று புரியவில்லை. கிருஷ்ணாவுக்கு உண்மையிலையே! மாலினியை பிடித்திருக்கா? இல்லையா? மாலினியின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள இப்படி நடந்துக்கொள்கின்றானோ! இதற்கிடைகையில் அவனுக்கும் விழிக்கும் வீட்டில் திருமண முடிச்சை போட அர்ஜுனுக்கு என்ன செய்வதென்று சுத்தமாக புரியவில்லை.
அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் மாலினியோடு க்ரிஷ்ணாவாக இன்ஸ்டாகிராமில் உரையாடுவது மாத்திரம்தான்.
இப்படியே சென்றால் கிருஷ்ணா மாலினியை திருமணம் செய்துகொண்டு சென்று விடுவான். அல்லது மாலினியின் மனம் அவன் பக்கம் சாயக் கூடும் அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும் என்றுதான் பூஜையை காரணாம்கி அங்கு மாலினியை வரவைத்து தாலியையும் போட்டிருந்தான்.
“அடப்பாவி அப்போ நீ மாலினி கழுத்துல திட்டம் போட்டுத்தான் தாலிய போட்டிருக்க” கிருஷ்ணா சிரிக்க,
“ஆமா அதுவும் நீ ஏதாவது செஞ்சி தடுத்திடுவியோன்னு பயந்து, நீ காட்டுக்கு கேம்ப் போனப்போ” என்று அர்ஜுன் சிரிக்க
“நல்லா வருவடா நீ…” கிருஷ்ணா அவனை அடிக்க ஆரம்பிக்க
“எவ்ரித்திங் பாயர் இந்த லவ் அண்ட் வார் மை ப்ரெண்ட்” அர்ஜுன் ஓட ஆரம்பித்தான்.
“அடப்பாவிகளா கூட்டுகளவாணிகளா நீங்க” விகாஸும் தனுஷும் ஒன்றாக சேர்ந்து அர்ஜுனையும், கிருஷ்ணாவையும் மொத்த மாலினி அவர்களை காப்பாற்றலானாள்.
“சாரி கிச்சா, சாரி அஜ்ஜு. உங்க ரெண்டு பேரோட முகமும் எனக்கு நியாபகமில்ல. சொல்லி இருக்கலாமில்ல” மாலினி சோகமான முகத்தோடு சொல்ல
“உன் முயல் மூஞ்சி மட்டும் எங்களுக்கு எப்படி நியாபகம் இருக்கு? கிருஷ்ணா கிண்டலடிக்க
“அழு மூஞ்சி” என்று சொல்லி மாலினியிடமிருந்து அடிகளையும் பெற்றுக்கொண்டான் அர்ஜுன். 
“கிருஷ்ணா நீ என்ன பண்ண போற?” அர்ஜுன் கேக்க
“நான் மேற்படிப்புக்காக லண்டன் போக போறேன்”
“நாங்க ரெண்டு பேரும் ஆஸ்திரேலியா போக போறோம்”
“எல்லாரும் இங்கதான் இருக்கீங்களா?” என்றவாறு கோத்தாண்டம் வர மாலினி தந்தையை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சலானாள்.
“அர்ஜுன் உன் மனசுல இருக்குறத மானிலிகிட்ட இன்னைக்கே! சொல்லிடு. நீதான் அவ இன்ஸ்டகிராம் ப்ரெண்ட்னு சொல்ல போறியா?” கிருஷ்ணா கேக்க
“இல்ல. சொல்ல மாட்டேன். என் கூட பிரச்சினைனாலும் அவளுக்கு மனம் விட்டு பேச பிரெண்டுனு ஒருத்தி இருக்கானு நினைக்கிறா. அது நான்னு தெரிஞ்சா சந்தோஷ படுவாளோ! வருத்தப் படுவாளோ! தெரியாது. நமக்குள்ள பிரச்சினை வராம இருக்க கிருஷ்ணா நமக்குள்ள இருப்பா”
“ஓகே. அப்போ நான் கிளம்புறேன்” என்றவன் மாலினியிடமிருந்தும் விடைபெற்றான்.
     
மாலினிக்கு தனது சிறு வயது தோழர்கள் அஜ்ஜுவும் கிச்சாவும் செய்த எல்லா சேட்டைகளும் நியாபகத்தில் இருந்தாலும் அவர்களின் முகம் மட்டும் நியாபகத்துக்கு வரவே! இல்லை. அவர்களை பார்க் வேண்டும், தேட வேண்டும் என்ற எண்ணமோ! அவர்களை பற்றி வேறு யாரிடமோ! பகிர்ந்துகொள்ள கூட இல்ல.   
குடும்பத்தார் வந்தலால் அர்ஜுனோடு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று இருந்து விட்டாள். கிருஷ்ணா செல்லும் பொழுது “மாலு இவன் அன்னக்கி எனக்கு கொடுத்த ப்ரோமிஸ்ஸுக்காகவே! உன்ன கல்யாணம் பண்ணிகிட்டான் பயல கொஞ்சம் நல்லா கவனி” என்று ஏத்தி விட்டு சென்றிருக்க, கணவனின் முகத்தை முகத்தை பாத்திருந்தாளே ஒழிய எதுவும் கேட்கவில்லை. குடும்பத்தார் மொத்தமும் மாறி மாறி வாழ்த்துக் கூற  அனைவரும் வீடு நோக்கி பயணமாகினர்.
இரவு உணவுக்கு பின் வளமை போல் அர்ஜுன் குட் நை சொல்லி விட்டு அவனது அறைக்கு சென்று விட பின்னால் சென்ற மாலினி அவனை அணைத்திருந்தாள்.
“என்ன மாலு என்ன ஆச்சு…”
“தேங்க்ஸ் அஜ்ஜு. என்ன இவ்வளவு லவ் பண்ணுற, சத்தியமா நான் உன்ன இவ்வளவு லவ் பண்ணுவேனோனு தெரியாது” என்றவள் அவன் முகம் பார்க்க
“பிளான்க்கா இருக்குற உன் மனசுல அஜ்ஜுவ நிரப்புறது ஒன்னும் கஷ்டமில்லை மாலு” என்று சிரிக்க
“எல்லாம் உனக்கு விளையாட்டுதான்”
“இல்ல ஐம் சீரியஸ். அன்னக்கி நீ எதேச்சையா கோவிலுக்கு வந்த… அத பயன் படுத்தி உன் கழுத்துல தாலிய போட்டுட்டேன்” என்றவன் பாதி உண்மையையும் பாதி பொய்யுமாக சொல்ல
“என்ன?…” அதிர்ச்சியடைந்தவள் “அஜ்ஜு…” என்று அவனை நன்றாக மொத்தி விட்டு “வேறென்ன தில்லுமுல்லு பண்ணி வச்சிருக்க?”
“நிறைய பண்ணி இருக்கேன். எல்லாம் நீ கிடைச்சா போதும்னு பண்ணதுதான்”
“எப்போலா இருந்து என்ன லவ் பண்ணுற?” என்று மாலினி கேக்க
“தெரியல மாலினி. உன்ன காலேஜ்ல பார்த்த நொடியே உன்ன விடக்கூடாதுனு மனசு சொல்லிச்சு அதான் இப்படி” புருவம் உயர்த்தி தான் செய்த அனைத்துக்கும் காதல் தான் காரணம் என்று நியாயப்படுத்தலானான் அர்ஜுன்.
“உனக்கு நியாபகம் இருக்கா? பேன்சி ட்ரெஸ் காம்பெடிஷன் நடந்துச்சு அதுல நாம மூணு பேரும் எடுத்துக்கிட்ட போட்டோ ஒன்னு என் கிட்ட இருக்கு. டெய்லி ஸ்கூல் போகும் போது அத பார்த்து உன்கிட்டயும் கிருஷ்ணா கிட்டயும் பேசிட்டுதான் போவேன். அதனாலதான் என்னால உங்க ரெண்டு பேரையும் மறக்க முடியல” என்றான் அர்ஜுன்.
“என் கிட்டயும் அந்த போட்டோ இருக்கு அதுல நீ காட்டுவாசி மாதிரி ட்ரெஸ் பண்ணி இருந்த உன் மூஞ்சே தெரியல. கிருஷ்ணா மரம் மாதிரி” மாலினி பெருமூச்சு விட
சிரித்த அர்ஜுன் “நீ தேவதை மாதிரி ட்ரெஸ் பண்ணி இருந்த” என்றவாறு அந்த புகைப்படத்தை எடுத்துக்காட்ட மாலினியும் புன்னகைத்தாள். 
“சாரி மாலு. எங்க கிருஷ்ணா உன்ன லவ் பண்ணுறானோ! எங்க நீயும் அவனை லவ் பண்ணிடுவியோ! எங்க நீ எனக்கு கிடைக்காம போய்டுவியோன்னு பயந்துதான்…” என்றவன் மேற்கொண்டு பேசாமல் மௌனமாக
அவனை அணைத்துக்கொண்டு மாலினி “அர்ஜுனா நீ செஞ்சது எல்லாம் தப்புதான். அர்ஜுன் க்ரிஷ்ணாவா நீ செஞ்சது எல்லாம் எனக்கு தெரிய வந்ததால நான் உன்ன மன்னிச்சிடுறேன்”
“ஆமா அது என்ன அர்ஜுன் மேல இல்லாத லவ் அர்ஜுன் கிருஷ்ணா மேல இருக்கு”
“ஏன்னா மாலினிக்கு அர்ஜுனையும் பிடிக்கும் க்ரிஷ்ணாவையும் பிடிக்கும்” என்றவள் சிரிக்க அர்ஜுன் அவளை நன்றாக முறைக்கலானான்.
 அர்ஜுனுக்கு மாலினியின் மேல் எந்த அளவுக்கு பிடித்தம் இருக்கின்றதோ! அதே அளவு பிடித்தம் மாலினிக்கு அர்ஜுனின் மீதும் உண்டு.
அர்ஜுனுக்கு மாலினியின் மீதும், மாலினிக்கு அர்ஜுனின் மீதும் உண்டான பிடித்தம் அதுதான் இன்று வளர்த்து காதலாக அவர்கள் முன் நிற்கின்றது.

Advertisement