Advertisement

அத்தியாயம் 28
வரும் வழியிலையே! வண்டியை நிறுத்தி மாணிக்கவேலுக்கு அழைப்பு விடுத்த ஆனந்த் நடந்ததை சுருக்கமாக சொல்லி அன்னையையும் அழைத்துக்கொண்டு சங்கரனின் வீட்டுக்கு வருமாறு கூற, வெளியே சென்றிருந்தவர் வீட்டுக்கு செல்லும் முன்பாகவே! செந்திலும், சங்கரனும் நண்பர்கள் அதனால் செந்திலுக்கு ஒரு வார்த்தை சொல்லிடலாம், சொந்த தங்கை மாப்பிளை வேறு, அது போக மருமகளின் தந்தையும் கூட என்று மாணிக்கவேல் நடந்ததை கூறி இருக்க, செந்தில் மங்கையை அழைத்துக்கொண்டு வர மாணிக்கவேல் வாணிக்கு விஷயத்தை கூறி இருந்தார்.
ஆனந்த் நினைத்தாலும் அவங்க பொண்ணு கொடுக்க மாட்டாங்க என்று விழி சொன்ன போது “என் பையனுக்கு என்ன குறைச்சல், அந்த பொண்ணைத்தான் கட்டுவான். முருகா நீதான் பாத்துக்கணும்” என்று வாணி கோபத்தில் வைத்த வேண்டுதலை முருகன் இவ்வாறு தன் திருவிளையாடலினூடாக நிறைவேற்றி இருந்தான்.
வேண்டுதலை மறந்து போன வாணி “நான் அப்போவே! நெனச்சேன். அந்த பொண்ணும் இவனும் லவ் பண்ணுறாங்கனு. எங்க கமுக்கமா இருந்தவன் ஒன்னும் சொல்லல” என்று  புலம்பியவாறு வர அதை பிடித்துக்கொண்டுதான் செந்தில் இவ்வாறெல்லாம் பேசி வைத்திருந்தார்.
“தான் பெத்த மகளுக்கு திருமணம் இவ்வாறு நடைபெற வேண்டியது விதி என்பது வாகைக்கு புரியா விடினும் ஆனந்தை பற்றி அறிந்திருந்தபடியால் அனிக்கு வீட்டோடு மாப்பிள்ளை அமைந்து விட்ட சந்தோசம் அடுத்த நொடி பிரதிபலிக்க புலம்புவதை நிறுத்தி விட்டு வாணியோடு ஐக்கியமாகி விட்டாள்.
மூத்த மகனுக்கு திருமணம் ஆன சந்தோசம் அதுவும், பெண் கொடுக்க மாட்டார்கள் என்ற வீட்டில். அனியை விழி-சந்தோஷின் திருமணத்தின் போது பாத்திருக்கின்றாள். பட்டுப்புடவையில் லட்சணமாக இருந்த பெண்ணை வாணிக்கு பிடிக்காமலில்லை.
இன்று ஜீன்ஸ் டாப்பில் இருந்தவள் கொஞ்சம் பணக்கார தோரணையில் இருக்க, “நம்ம வீட்டுக்கு வந்தா எல்லாம் சரியாகிடும்” என்று என்னும் பொழுதுதான் செந்தில் கண்டபடி பேச ஆரம்பித்தார்.
ஏற்கனவே! ஆனந்த் இந்த மாதிரியான பேச்சுக்களால் செந்திலின் குடும்பத்தை ஒதுக்கி வைத்திருக்க, இப்படி பேசினால் எப்படி என்று வாணியும், மாணிக்கவேலும் மங்கையைத்தான் பாத்திருந்தனர்.
செந்தில் பேச, அதீ பேச கடைசியாக ஆனந்த் பேசலானான்.
“இங்க பாருங்க நீங்க என்ன நினைக்கிறீங்க அத பத்தி நான் இங்க பேச வரல” என்று செந்திலிடம் சொன்னவன் “அதீ சார் கல்யாணம் எந்த மாதிரியான சூள்நிலையில நடந்ததுன்னு உங்களுக்கு தெரியும். இந்த கல்யாணத்த ஏத்துகிறதும் ஏதுக்கமா இருக்குற உரிமை அனிகுதான் இருக்கு” என்றவன் அவளை பார்க்க
“என்ன ஓவரா பேசுறீங்க? தாலிய கட்டிட்டு நடந்தது கல்யாணமா? இல்லையானு பஞ்சாயத்து பண்ணுறீங்களா? நைட்டுல என் கிட்ட தனியா மாட்டுவீங்கல்ல” என்றவள் கண்ணாடியை சரி செய்ய வாகை அனியின் வாயை பொத்தி இருந்தாள்.
“ஐயோ என்ன சொல்ல போறாளோ!” என்று ஆனந்த் கலவரமடைய அவன் குடும்பத்தாரும் “என்ன டா இந்த பொண்ணு இப்படி பேசுது” என்று பார்க்க
வாகையின் கையை உதறியவள் “இருங்க உங்க சோடாபுட்டி கண்ணாடியை ஒளிச்சு வச்சிடுறேன்” என்று மிரட்டலானாள்.
அதீசன் சிரித்தவாறே “என்ன மாப்புள உங்களுக்கு உங்க பதில் கிடைச்சிருச்சே!”
“ஆ..” என்றவன் அனியின் புறம் திரும்பாது. “சீதனமா ஒரு பைசா கொடுக்கக் கூடாது. கல்யாண செலவு மொத்தமும் நான் ஏத்துக்கிறேன். வீட்டோட மாப்புளையா என்னால இருக்க முடியாது. கல்யாணத்துக்கு பிறகு அனி எங்க வீட்டுல எங்க கூட இருப்பா” என்று சொல்ல
“ஆனந்த் நீங்க அவசர படுறீங்க. செந்தில் அங்கிள் பேசினத்துக்கு நாங்க காரணமில்லை. எங்களுக்கு இருக்குறது ஒரே தங்கச்சி கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க” என்று அதீ பேச  
“பாவம்யா நீ” என்று அனி பார்க்க சந்தோஷும் விழியும் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தனர்.
யார் பேசியும் மனமிறங்காதவன் சந்தோஷ் பேசியதில் கொஞ்சம் மனமிறங்கினான்.
அத்தோடு இன்றிலிருந்து சங்கரனின் கம்பனியில் வேலை செய்வதில்லை என்று வேலையையையும் விடுவதாக கூற, அதீ அவனை தனியாக அழைத்து பேசலானான்.
ஆனந்த் சங்கரனின் பி.ஏ. வீட்டோடு மாப்பிள்ளியாக இருப்பான் என்று வாகை நினைக்க, “என்ன இவன் இவ்வளவு பிடிவாதக்காரனா இருக்கான்” என்று கணவனிடம் சென்று ஆனந்திடம் பேசுமாறு கூற
“அவன் ஒரு தன்மான சிங்கம். கண்டிப்பா திட்டம் போட்டு எல்லாம் அவன் அனிய கல்யாணம் பண்ணி இருக்க மாட்டான். அவன் அனிகு ஏத்த பையன்தான் என்ன நமக்கு வளஞ்சி கொடுக்க மாட்டான். அனி சந்தோஷமா இருந்தா போதும்” என்று சங்கரன் பேச வாகைக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள்.
அதீ பேசிய பின்பு அனியை பற்றிய தவறான எண்ணமெல்லாம் ஆனந்துக்கு முற்றாக மாறி இருந்தது. அது போக கல்யாணத்தையும் அதீ வீட்டாருக்கு விருப்பப்படி அவர்கள் செலவில் வைத்துக்கொள்ள சொல்லியவன். பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டு விட்டு கம்பனியில் அதீக்கு சரிசரமாக வந்தமர்ந்தான். ஆனால் வீட்டோடு மாப்பிள்ளையாக வந்து தங்க மட்டும் சம்மதிக்கவில்லை.
செந்தில் உட்பட கம்பனியில் சிலர் ஆனந்தின் காதுப்படவே! கண்டபடி பேச அதையெல்லாம் பொறாமையில் பேசுகிறார்கள் என்று ஆனந்த் கண்டுகொள்ளவே! இல்லை. சந்தோஷுக்கு அண்ணன் காரணமில்லாம் எதுவும் செய்யமாட்டான் என்று புரிய அவனை எதுவும் கேட்கக் கூடாது என்று கூறி விட வாணியும், மாணிக்கவேலும் மகனை எதுவும் கேட்கவில்லை.
அவர்களின் திருமணம் ஊருக்காக வெகு விமர்சையாக நடந்தேறி இருக்க, முதலிரவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் பெண் வீட்டில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனியின் அறையில் அமர்ந்திருந்தவனுக்கு ஒருநாளில் தன் வாழ்க்கை மாறிப்போன மாயத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
அவனுக்கு அனியை பிடிக்காது அதற்காக அவளை வெறுப்பதாக அர்த்தமில்லயே! அவளுக்கு ஆபத்து என்றதும் வேறு எந்த சிந்தனையும் தோன்றவில்லை. தாலியை கட்டி விட்டான். அதான் யாரும் பார்க்கவில்லையே! தன்னால் இத ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூட சொல்லி இருக்க முடியும். ஆனால் அப்படி சொல்ல மனம் வர வில்லை.
எந்த கோணத்திலும் அவளை விரும்புவதற்கான அறிகுறிகள் இல்லாத போது எந்த நம்பிக்கையில் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டான் என்று ஆனந்துக்கே! புரியவில்லை.
அதீ பேசிய பின் தான் கொஞ்சமாவது அவள் மேல் அனுதாபம் தோன்றியது.
அவள் பிரச்சினையை சரி செய்ய இயலாது. ஆனால் உறுதுணையாக இருக்கலாமே! என்ற முடிவோடுதான் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று கம்பனியில் சேர்ந்தான்.
“ஹாய் ஆனந்த் என் ரூம் பிடிச்சிருக்கா” என்றவாறு வந்த அனி பால் டம்ளரை மேசையின் மீது வைத்து விட்டு அவனருகில் அமர்ந்துகொள்ள
“ஆ நல்லா இருக்கு. என் ரூம் இந்த மாதிரி ரொம்ப பெருசா எல்லாம் இல்ல..” ஆனந்த் மேலும் பேசும் முன்
“அத நானே! அங்க போய் பாத்துட்டு சொல்லுறேன்” அப்பேச்சை முடித்துக்கொண்டவள் அவன் முகத்தையே பார்த்திருக்க,
“இங்க பாரு அனி நமக்கு திடிரென்று கல்யாணம் ஆகிருச்சு. ஒருத்தர புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் வேணும் அதனால…”
“அதனால இழுத்து போத்திகிட்டு தூங்க சொல்லுறியா? அட போய்யா… நா வேற ஆசையா வந்தா இப்படி புஸ்ன்னு ஆகிருசு நீ சுத்த வேஸ்ட்டு. காக்கா குருவி எல்லாம் ஒருத்த ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு முட்ட போடுதா? இல்ல ரோட்டுல இருக்குற நாய்ங்க லவ் பண்ணிதான் குட்டி போடுதா?”
ஆனந்தத்துக்கு சிரிப்பாகத்தான் இருந்தது. அதிர்ச்சியடையவில்லை. எப்படி பேசினால் அவள் எப்படி பேசுவாள் என்று அவனுக்கு ஓரளவு புரிந்துகொள்ள முடிந்திருந்தது. அதுவும் அவனிடம் மட்டும்.
“என்னயெல்லாம் உன்னால சமாளிக்க முடியாது அனி. சொன்னா கேளு தூங்கு” என்று உசுப்பேத்த
“அப்படியா? பார்க்கலாமா?”  என்றவள் அவனை இழுத்து முத்தமிட்டு ஆரம்பித்து வைத்தருக்க முடிவில் அவள் துவண்டு போய் “போதும் ஆனந்த் என்ன விடு” என்றவாறு அவன் நெஞ்சில் தூங்கி போய் இருந்தாள். 
தூங்கும் அவளையே! பாதித்திருந்தவனுக்கு வாழ்க்கை இன்பமாக மாறிய உணர்வுதான்.
அனி ஒரு பொறுப்பில்லாதவள், ஊதாரி என்று அவளை பிடிக்காது என்று சொல்லிக்கொண்டு திரிந்தான். என்னதான் மாயம் செய்தாளோ! அவளுள் தொலைந்து, கரைந்து அவள்தான் உலகம் என்று வாழ தயாராகி விட்டான் ஆனந்த்.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே! மெய் என்று சும்மாவா சொன்னார்கள்.
“சொல்லுங்க அதீ சார் என்ன சொல்ல கூப்டீங்க? நீங்க என்ன சொன்னாலும் நான் என் முடிவை மாத்திக்க மாட்டேன்” ஆனந்த் பிடிவாதம் பிடிக்க,
“முதல்ல உக்காருங்க ஆனந்த். இப்போ நீங்க சிஸ்டரோட ஹஸ்பண்ட் சார் எல்லாம் வேணாம்” புன்னகைத்த அதீ “நான் சொல்ல போற விஷயம் உங்களுக்கு நம்ப முடியாம கூட இருக்கலாம். ஆனா இதுதான் உண்மை” என்று அதீ புதிர் போட ஆனந்த அப்படி என்ன இவர் சொல்ல போகிறார் என்று பாத்திருந்தான்.
“அனி ஒரு கோட் செலெக்டெட் சைல்ட்”
“அப்படினா..” புரியாது முழித்தான் ஆனந்த.
“அனி பிறக்கும் போதே! வித்தியாசமா பிறந்தவ. அதீத அறிவு. போர்த் வரைக்கும் பர்ஸ்ட் ரெங்க் தான் வருவா. எல்லா சப்ஜெக்டுலயும் ஹன்ரன்ட் அவுட் ஆப் ஹன்ரன்ட். பிப்த் வந்தப்போ ஒரு சப்ஜெக்ட்டுக்கு எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டா. இன்னொரு சப்ஜெக்ட்டுக்கு படிச்சது எதுவும் நியாபகம் இல்லனு சொல்லி எக்ஸாம் எழுதல. கண் பார்வையும் மங்குதுனு சொன்னா.. டாக்டர் கிட்ட போய் காட்டினோம். நார்மல்னுதான் சொன்னாங்க. நியுரோலொஜிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போனோம். அவர்தான் அவ ஒரு அப்னோர்மல் சைட்னு சொன்னாரு. எப்போ அவ குழந்தையா இருப்பா.. எப்போ புத்திசாலியா பேசுவானு அவளுக்கே! தெரியாதுன்னு சொன்னாரு. இது ஒரு ரேர் டிசீஸ். அனிய போல் உலகத்துல ஒன்னு ரெண்டு பேருக்குத்தான் இந்த நோய் இருக்கு. மருந்தும் இல்ல. குணப்படுத்தவும் முடியாது. அதான் கோட் செலெக்டட் சைல்ட்னு பேர் வச்சிருக்காங்க”
“இப்படியெல்லாம் உலகத்துல வியாதி இருக்குமா?” ஆனந்த் அதிர்ச்சியாக அதீயை ஏறிட.
“அவளுக்கு வேற எந்த பிரச்சினையும் இல்ல. மத்தபடி ஷி ஐஸ் நோர்மல். அதனாலதான் அவ இஷ்டத்து விட்டு வச்சிருக்கோம். அவ கூடவே! ஆள் வைக்கிறது அவளுக்கு பிடிக்காது. அதான் டிராக்கிங் டிவைஸ்” என்று அதீ புருவம் உயர்த்த அன்று அவர்கள் அந்த அளவுக்கு பதட்டமடைந்த காரணம் ஆனந்தத்துக்கு இப்பொழுது புரிந்தது.
“அவளோட சிக்ஸ்த் சென்ஸ் நல்லாவே! வேலை செய்யும் ஆகாஷ், சிம்ரனை சந்திச்சப்போவே! அவங்க தப்பானவங்கனு சொன்னா. அதே! மாதிரி உங்க மேல அவளுக்கு இருக்குற விருப்பத்தை அவளுக்கு சொல்ல தெரியல. அதான் அவளோட பிரச்சினை”
“அனி என்ன விரும்புறாளா?” ஆனந்த் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் கேக்க
“அத நீங்க அவளோட வாழ்ந்துதான் தெரிஞ்சிக்கணும் மாப்புள. இன்னொரு விஷயம். யார் கிட்ட எப்போ? என்ன பேசணும்னு புரியாம பேசிடுவா சோ ஜாக்கிரதை” என்றவன் கிளம்ப
“அப்போ அனி எதுக்கு மாசம் மாசம் அவ்வளவு அமௌண்ட்டுக்கு ஷாப்பிங் பண்ணுறா?” தனது நீண்ட நாள் சந்தேகத்தை அதீயிடம் கேட்டான். அதுதானே! அவன் அனியை வெறுக்க முதல் காரணம்.
“அனிக்கு நம்ம கம்பனில ஜோஇன் பண்ணனும்னு ஆச ஆனா அவளால முடியல. அவ ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ் அவ தனியா சம்பாதிச்சதே அவ அகண்டுல இருக்கு. அத செலவு செய்ய கூடாதுனு அப்பாவோட கட்டளை. அந்த கோவத்துலதான் அவர் காச மாசா மாசம் ஷாப்பிங் பண்ணி கரைக்கிறா சோ டோன்ட் ஒர்ரி அண்ட் நீங்க தனியா கம்பனி ஆரம்பிக்கிறது பத்தி ஒன்னும் பிரச்சினை இல்ல. அந்த கம்பனி வேற துரைனா.. ஒரே துறைல போட்டியா எதுக்கு இருக்கணும். உங்க தம்பியும் உள்ள வர மாட்டாரு. அஜ்ஜுவும் வர மாட்டான். சோ நாமதான் நம்ம கம்பனியை பாத்துக்கணும். செந்தில் அங்கிள் அவர் லைப்ல நடந்தத வச்சி பேசுறாரு. அதையெல்லாம் நீங்க பெருசு படுத்தாதீங்க. அவ ஆசைய நீங்க நிறைவேத்தலாமே! அனிக்காக ஒரு தடவ யோசிச்சு சொல்லுங்க ” என்று கேட்டுக்கொள்ள ஆனந்த்தும் பலவாறு சிந்தித்து சரியென்று விட்டான்.
அதீ பேசி பத்து நாட்களுக்குள் கம்பனியில் பொறுப்பில் அமர்ந்தது, திருமணம் என்று அனியின் வாழ்க்கையில் முற்றாக நுழைந்திருந்தான் ஆனந்த்.
“நீ ஒரு கேடி பாப்பா அனி” என்று அவள் தலை கோதி ஆனந்த் அவளை அணைத்துக்கொண்டு தூங்கலானான்.
எட்டி நின்று பார்த்தவரை இருந்த அனி அருகில் இருக்கும் பொழுது வேறு மாதிரி தெரிந்தாள். ஹனிமூனுக்கும் அவள் வெளிநாட்டுக்கு எல்லாம் செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. “யுவர் விஷ் ஆனந்த்” என்று விட்டாள்.
ஆனந்த் பொறுப்பில் அமர்ந்தபின் கம்பனி வளர்ச்சிக்கு புது ஐடியாக்களையும் கொடுக்க, அதீ ஒரு ப்ராஜெக்ட் ஆனந்த் ஒரு ப்ராஜெக்ட் என்று கவனிக்க அசுரர் வளர்ச்சிதான். 
செந்திலுக்கு இவன் தனியா கம்பனி ஆரம்பிச்சு இருந்தா கண்டிப்பா நமக்கு போட்டியா வந்திருப்பான் என்று தோன்ற அவனிடமே! நேரடியாக எதுக்கு நீ பி.ஏவாக வேலை பார்த்தாய் என்று கேட்டும் விட்டார்.
“அனுபவம்தான் நல்ல ஆசான்” என்று சுருக்கமாக பதிலளித்தான் ஆனந்த்.
அதன்பின் செந்திலும் அவனை சீண்டவில்லை.
ஆனந்த்-அனி ஜோடிகளுக்கு நாட்கள் அழகாக சென்று கொண்டிருக்க, விழிக்கு அவர்களை பார்க்க பொறாமையாக இருந்தது. என்னதான் ஆனந்த் சந்தோஷின் அண்ணனாக இருந்தாலும். விழிக்கும் சந்தோஷுக்கு இவர்களுக்கு முன்தான் திருமணம் நிகழ்ந்தது. ஆனால் சந்தோஷ் நெருங்கி வர மறுக்கின்றான்.
சமீபகாலமாக காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்து அவளை விட்டு விட்டு எங்கயோ! செல்பவன் நடு இரவில்தான் வீடு வருகின்றான். 
முதலில் தன்னை தவிர்க்கத்தான் இவ்வாறெல்லாம் செய்கின்றான் என்று விழி நினைக்க, அவள் நெருங்கினால் இணக்கமாகத்தான் போகின்றான். படிப்பு முடியட்டும் என்கின்றான். அப்படி என்னதான் செய்கின்றான் இவன். அதை தெரிந்துக்கொள்ளாமல் விழியின் மண்டை உடைந்து விடும் போல் இருந்தது.
என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு ஒன்று தோன்ற இன்று காலேஜ் விட்டு காத்திருந்தவனிடம் “நீங்க போங்க சந்தோஷ் எனக்கு லைப்ரரில கொஞ்சம் புக்ஸ் எல்லாம் எடுக்கணும், ரெபர் பண்ணனும், ஒன் ஹவர் ஆகும். நான் கேப் புக் பண்ணி வந்துடுறேன்” என்றாள். 
கைக்கடிகாரத்தை பார்த்தவன் “ஓகே… டேக் கேயார்” என்று விட்டு செல்ல ஓட்டமெடுத்தவள் அடுத்த நுழைவாயிலில் வெளியேறி ஏற்கனவே! அவள் வர சொல்லியிருந்த கேப்பில் ஏறி அமர்ந்து சந்தோஷின் வண்டிக்காக காத்திருந்தாள்.
சந்தோஷின் வண்டியும் வந்தது, அதை பின் தொடருமாறு கூற ஒரு சிக்கனலில் அவன் மாயமாய் மறைந்து போனான்.
பின் தொடர்வதை அறிந்துக்கொண்டு வேண்டுமென்றே சிக்கனலில் தாமதித்து சிட்டாக பறந்து விட்டான் சந்தோஷ். விழிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு ட்ராபிக்கில் பின்தொடர்வது அவனுக்கு எப்படி தெரிந்தது? அடுத்த நாளும் அதையே! செய்தால் மாட்டிக்கொள்ளக் கூடும் என்று பத்துநாள் பொறுமையாக யோசிக்கலானாள்.
அப்படி கிடைத்த ஐடியாவை வைத்து, வாணியின் அலைபேசியை வாங்கி அதில் ட்ரெக்கிங் ஆப்ஐ இன்ஸ்டால் செய்தவள் காலேஜ் விட்டு வந்ததும் சந்தோஷ் குளித்து விட்டு உடை மாற்ற செல்லும் நேரம் வாணியின் அலைபேசியை எடுத்து சைலன்ட் மூடில் போட்டு அதை சந்தோஷின் காரில் வைத்தவள் ஒன்றும் அறியாத குழந்தை போல் அமர்ந்திருந்தாள்.
சந்தோஷ் வீட்டை விட்டு கிளம்பி அரைமணித்தியாலங்களுக்கு பின் சாவுகாசமாக குளித்து விட்டு கேப்பில் ஏறி சந்தோஷ் இருக்கும் இடத்தை அடைந்தாள்.
சந்தோஷின் வண்டி நின்றிருந்தது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்க பணக்காரர்கள் வாழும் பகுதி போல்தான் தெரிந்தது. யாரை சந்திக்க இங்கு வந்திருக்கின்றான்? என்ற சிந்ததையில் அவனை இங்கு எவ்வாறு தேடி கண்டு பிடிப்பது என்ற சிந்தனையும் சேர, மலைத்துத்தான் போனாள் விழி. 
“அவன் வந்து செல்லும் குடியிருப்பையே! கண்டுபிடுத்தாயிற்று. வீட்டையா கண்டுபிடிக்க முடியாது” தன்னைத்தானே! சமாதானப்படுத்திக்கொண்டவள் அடுத்தநாள் அதே லைப்ரரி கதையை கூறி கேப்பில் ஏறி அவனை பின் தொடராமல் அந்த குடியிருப்புக்கு வந்து மறைந்து நின்றுகொண்டாள்.
சந்தோஷின் வண்டியும் வந்தது, அவனும் வந்தான். அதே! நேரம் அங்கு இன்னொரு வண்டி வர அதிலிருந்து ஒரு பெண் இறங்கி வந்து சந்தோஷோடு பேச விழிக்கு புசுபுசுவென புகைய ஆரம்பித்தது.
“என்ன நடக்குது இங்க? இவள பார்க்கத்தான் தினமும் இங்க வரானா?” கோபம் கட்டுக்கடங்காமல் வர
“கொஞ்சம் பொறுமையா இரு விழி. தினமும் இங்க வாரான். அதனால பழக்கமான பொண்ணா கூட இருக்கலாம் முதல்ல பாலோ பண்ணு” மனம் கூவ
அவர்கள் மின்தூக்கியில் நுழைந்து எந்த தளத்தை அழுத்தினான் என்று கவனித்தவள், அவள் வெளியே! வரும் பொழுது அவர்கள் வீட்டுக்குள் சென்று விடக்கூடாதே! என்ற வேண்டுதலோடு. அடுத்த மின்தூக்கியில் நுழைந்திருந்தாள்.
விழி வெளியே! வரும் பொழுது ஒரு வீட்டுக்கு முன் அந்த பெண்ணும் சந்தோஷும் நின்றுகொண்டிருந்தார்கள். பார்த்த உடன் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அந்த வீட்டுக்கு செல்வது தெரிய விழிக்கு தப்பான எண்ணம்தான் தோன்றியது. பற்களை நறநறவென கடிக்கலானாள் விழி.
ஓடிச்சென்றவள் சந்தோஷின் முதுகில் நன்றாக மொத்தியவாறு “எத்தனை நாளா நடக்குது இந்த கூத்து” என்று கத்த
ஒரு வயதானவர் கதவை திறந்து  “சந்தோஷ் ஹூ  ஈஸ் ஷி” என்று கேக்க
“மை வைப் சார்” என்றவனின் முகத்தில் மருந்துக்கும் புன்னகையில்லை.
“உள்ள வாங்க” என்றவர் வழிவிட்டு நின்று “நீயெல்லாம் ஒரு ஸ்பை உன் பொண்டாட்டியே! உன்ன பாலோ பண்ணிக்கிட்டு வந்திருக்கா அது தெரியாம வந்திருக்க” என்று திட்ட
“என்ன ஸ்பையா” விழி வாயை பிளந்தவாறு அந்த வீட்டை பார்க்க, அது வீடல்ல எதோ ஒரு ரகசிய ஆபிஸ் மாதிரிதான் இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் கணணியும், இயந்திரங்களும் குவிந்திருந்தது.
“என்ன சார் நீங்க சந்தோஷ் வைப்னா அவன் அறிவு கொஞ்சமாச்சும் அவன் வைப்க்கு இருக்காதா?” என்ற அந்த பெண் விழியின் புறம் திரும்பி “ஹாய் ஐம் நேஹா” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு “எப்படி கண்டு பிடிச்சீங்க?” என்று கேக்க விழி விவரித்ததில் விழுந்து விழுந்து சிரித்தவள்
“உலகத்துல இருக்குற மிக கொடுமையான நோய் சந்தேகம். அது பொண்டாட்டிகளுக்கு வந்தா என்ன ஆகும்னு விழி நிரூபிச்சிட்டா” என்று சொல்ல   சந்தோஷ் மனைவியை முறைக்கலானான்.
அவர்களிடமிருந்து விடைபெற்று வீட்டுக்கு வரும்வரை இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
“நீ என்ன சந்தேகப்பட்டியா?” என்று சந்தோஷுக்கு விழி மேல் கோபம்.
“என் கிட்ட சொல்லி இருக்கலாமே” என்று விழிக்கு சந்தோஷின் மேல் கோபம்
நிதானமா யோசித்த சந்தோஷ் விழியின் முன் சென்று நின்று “சாரி என் வேல அப்படி யார் கிட்டயும் உண்மைய சொல்ல முடியாது. அதனாலதான் நீ என் மேல சந்தேகப்படும்படி ஆகிருச்சு” என்று பேச
“வீட்டுல யாருக்கும் தெரியாதா?” விழி விழிவிரிக்க
“தெரியாது. வேல பிடிக்கல அதனால் வேற ஜாப் செய்றேன்னு சொல்வேன்” இதெல்லாம் சாதாரணம் போல் பேசினான் சந்தோஷ்.
“உங்கள சந்தேகப்பட்டதுக்கு நான் சாரியெல்லாம் கேக்க மாட்டேன். நான் கேட்டிருந்தாலும் நீங்க உண்மைய சொல்லி இருக்க மாட்டீங்க”
“உண்மைதான். அதனால நமக்குள்ள பிரச்சினை கூட வந்திருக்கலாம். உனக்கு உண்மை தெரிஞ்சதும் நல்லதுதான். எனக்கு நிம்மதியா இருக்கு. உனக்கு என் வேல ஒன்னும் பிரச்சினை இல்லையே!” சந்தோஷ் புருவம் உயர்த்தியவாறு கேக்க
“நானும் ஜோஇன் பண்ணிக்கலாமா?” கேள்வியையே! பதிலாக கொடுத்தாள் விழி.
“ஹாஹாஹா அதுக்கு எக்ஸ்டரா மூள வேணும். உன் கிட்ட இருக்குனு இன்னக்கி நிரூபிச்சிட்ட, பார்க்கலாம். முதல்ல படிச்சி முடி”
“அதுக்காத்தான் நம்ம வாழ்க்கையை தொடங்குறத தள்ளி போட்டுக்கிட்டே போறீங்களா?”
“ஆமா”
“லூசு”
“யாரு நானா? படிக்கிற பொண்ணு பாவம்னு பார்த்தா ரொம்ப ஓவராதா பேசுற” என்றவன் அவளை கைகளில் ஏந்திக்கொள்ள
“யாரு பாவம் பார்க்க சொன்னாங்களாம்” விழி சந்தோஷின் கைகளில் பந்தமாக அடங்கிப்போனாள்.  

Advertisement