Advertisement

அத்தியாயம் 27
அதீசன் தனது காரியாலய அறையில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அலைபேசி அடித்துக்கொண்டே இருக்க எடுத்து பேசத்தான் நேரமில்லை.
மூன்றாவது தடவையாக அடிக்கும் பொழுதுதான் “புது நம்பராக இருக்கு” என்றவாறு ஸ்டீவ் இயக்கி காதில் வைத்திருந்தான். 
மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில் அடுத்த  இரண்டு நிமிடங்களில் அதீசன் ஸ்டீவோடு  வண்டியில் ஏறி மஞ்சரியின் பாடசாலைக்கு சென்றிருந்தான்.
“வண்டி நின்ற அடுத்த நொடி பதட்டமாக உள்ளே நுழைந்தவனை பாடசாலை தாதி ஓய்வறைக்கு அழைத்து செல்ல,
“என் மனைவி மயங்கிட்டானு போன் வந்திருச்சு. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகமா இங்க ஏன் வச்சிருக்கிறீங்க?” கோபமாக கேட்டவாறு உள்ளே நுழைய மஞ்சரி சோர்வாக படுத்திருந்தாள்.
கணவன் கோபமாக பேசியது காதில் விழ கண்களை திறந்தவள் தாதியிடம் “நான் பேசிக்கிறேன்” என்று சொல்ல அவர் வெளியேறி இருக்க,
“என்ன ஆச்சு, ஒழுங்காகத்தானே! சாப்பிடுற? சாப்பிடுற ஏதாவது ஒத்துக்காம இப்படி ஆச்சா? வா ஹாஸ்பிடல் போலாம்” பதட்டமாக அவளருகில் அமர்ந்தவன் அவள் முகத்தை தடவ 
“போலாம், போலாம் ஒரு நல்ல கைனக்கோலஜிஸ்ட்ட பாருங்க” மஞ்சரி விரிந்த புன்னகையோடு எழுந்து அமர்ந்திருந்தாள்.
“ஹேய் என்ன டி சொல்லுற? நிஜமாவா?” என்ற அதீ அவளை கட்டிக்கொள்ள
“இது ஸ்கூல்” மஞ்சரி மெதுவாக சொல்ல
“சரி வா ஹாஸ்பிடல் போயிட்டு வீட்டுக்கு போலாம்” என்று அவளை கைத்தாங்கலாக அழைத்துக்குக்கொண்டு அதீசன் வண்டியை நோக்கிக் சென்றான்.
“என்ன மயங்கிட்டாங்கனு சொன்னாங்க ரெண்டு பேரும் சிரிச்சிகிட்டு வராங்க” என்று ஸ்டீவ் பார்க்க
“ஹாஸ்பிடலுக்கு வண்டியை விடு” என்ற அதீ எதுவும் பேசாது மஞ்சரியின் கையை தன்கைக்குள் பொத்திவைத்துக்கொண்டான்.
ஹாஸ்பிடல் சென்று உறுதிப்படுத்திக்கொண்டபின் நேராக வீட்டுக்கு செல்லும் பொழுது சுவீட் வாங்கிகொண்ட அதீ “ஸ்டீவ் நீ எனக்கு நண்பன் தானே! அப்போ மஞ்சரிக்கு யாரு?” என்று கேக்க
கொஞ்சமும் யோசிக்காமல் “அண்ணன்” என்றான் ஸ்டீவ். அவன் அவளுக்காக செய்து அனைத்தும் ஒரு சகோதரனாக நினைத்துதான் செய்திருந்தான்.
“ம்ம்.. அப்போ மாமா”
“யாருக்கு?”
“வீட்டுக்கு போனா தெரிஞ்சிடும்” என்ற அதீயை புரியாது பார்த்து வைத்தான் ஸ்டீவ்.
வீடு சென்ற உடனே! வாகையை கட்டிக்கொண்டு இனிப்பை வாயில் வைத்தவன் விஷயத்தை சொல்ல மஞ்சரி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.  
ஸ்டீவ் அதீயை கட்டிக்கொண்டு வாழ்த்து சொல்ல வாகை மஞ்சரியை பூஜையறைக்கு அழைத்து சென்றிருந்தாள்.
“டேடிக்கு போன் பண்ணலாம்” என்று கூறும் பொழுதே! சங்கரன் ஆனந்தத்தோடு வந்திறங்க தந்தையிடமும் விஷயத்தை கூறிய அதீ சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள ஆனந்த்தும் வாழ்த்துக் கூறலானான்.
“மஞ்சரி நீ உன் வீட்டுக்கு பேசுமா” என்ற வாகை “அஜ்ஜுவும், மாலினியும் காலேஜுல இருக்குறதால போன் வேல செய்யாது. அனிக்கு போன போடு” என்று சொல்ல
“அவ இன்னக்கி எங்க போய் இருக்கா?” என்றவாறு அதீ அலைபேசி தொடர்பை ஏற்படுத்த அது அணைக்கப்பட்டிருக்கவும் பதட்டமானான். 
சங்கரன் பதட்டமாக, வாகை பதட்டமாக மூவரும் மாறி மாறி அனிக்கு தொடர்பு ஏற்படுத்த முயற்சிகளாயினர்.
“சார்ஜ் இல்லாம போன் ஆப் ஆகி இருக்கும். எதுக்கு இவங்க இப்படி ஓவரா பண்ணுறாங்க” என்று நினைத்தான் ஆனந்த்.
“அதீ ட்ராக்கிங் டிவைஸ்” என்று ஸ்டீவ் கத்த அலைபேசியை குடைந்தவன் “நகரத்தை விட்டு போறதா காட்டுது. கண்டிப்பா அவ போய் இருக்க மாட்டா… ஸ்டீவ் கன்ன எடு போலாம்”
“அதீ போலீசுக்கு தகவல் சொல்லனுமா?” என்று சங்கரன் கேக்க
“யாரு? என்ன? எதுக்காக? பார்க்கலாம் டேட்” என்றவன் “ஆனந்த் நீங்களும் எங்க கூட வாங்க என்று அழைக்க வேறு வழியில்லாது ஆனந்த்தும் அவர்களோடு கிளம்பி இருந்தான்.
இது எதையுமறியாமல் வீட்டாரோடு சந்தோசமாக அலைபேசியில் உரையாடி விட்டு வந்த மஞ்சரி கணவனோடு தனியாக சிறிது நேரம் இருக்கலாம் என்று நினைக்க, “முக்கியமான வேலையா வெளிய போறேன். நைட்டுகுள்ள வந்துடுறேன். நீ ரெஸ்ட் எடு” என்ற அதீ மனைவியின் ஏக்கமான முகம் பார்த்து கன்னம் தட்டி விட்டு வெளியேறினான். 
ஸ்டீவும் ஆனந்தும் முன்னால் அமர்ந்திருக்க, அதீசன் பின்னால் அமர்ந்து வழியை சொல்ல சொல்ல ஸ்டீவ் வண்டியை செலுத்தலானான்.
அது நகரத்துக்கு ஒதுக்குபுறமான ஒரு பங்களாவாக தெரிய யாரோட பங்களா இது? சந்தேகம் வர வண்டியை தூர நிறுத்தி விட்டு நோட்டம் விட புரோகிதர் ஒருவர் உள்ளே! செல்வது தெரிந்தது. 
அவர் கையிலிருந்த பொருட்களை கவனித்து “யாரோட கல்யாணம் அனி எதுக்கு இங்க வந்திருக்கா?” ஸ்டீவ் யோசனையாக கேக்க
“அனி வரல தூக்கிட்டு வந்திருக்கானுங்க அனிக்குத்தான் கல்யாணம். அதான் அவ போன் ஸ்விட்ச் ஆப்னு வருது” என்றான் அதீ.
“ஏன் சார் அவங்க பிரெண்டு கல்யாணமாக கூட இருக்கலாம். அதுக்கு அவங்க வந்திருக்கலாம் இல்ல. போன் சார்ஜ் இல்லாம ஆப் ஆகி இருக்கும் இல்ல” கடுப்பாகி சொன்னான் ஆனந்த்.
புன்னகைத்த அதீ “பவர் பேங்க்  வச்சிருக்கா.. அத மறந்து வீட்டுல வச்சிட்டு வந்திருந்தாலும் வண்டிலேயே! சார்ஜ் போட்டுக்க முடியுமே! என்னதான் பிரெண்டு கல்யாணம் என்றாலும் எவ்வளவு அவசர கல்யாணம் என்றாலும் சொல்லாம இவ்வளவு தூரம் தனியா வர மாட்டா. வீட்டுக்கு சொல்லிட்டுதான் வருவா. அவ வண்டி வேற சினிமா தியேட்டர்ல நிக்குதுனு தகவல் வந்தது. சம்திங் ராங்” அதீ விளக்கமாக சொல்ல
“அப்பொறம் என்ன சார் இங்க பண்ணுறோம். உள்ள போய் பார்க்கலாம்” ஆனந்துக்குள்ளும் சிறு பதட்டம் தொற்றிக்கொண்டது.
“போலாம். உள்ள நாய் இருக்கலாம். எத்தனை பேர் இருப்பாங்கன்னு தெரியாது. ஆயுதம் இருக்கா? எவ்வளவு? ஒன்னும் தெரியாது. சீசீடிவி கூட இருக்கலாம். சோ பதுங்கித்தான் போகணும். அனி என்ன நிலமைல இருக்கானு பார்க்கணும். அப்போரம்தான் போலீசுக்கு கால் பண்ணுறதா? வேணாமான்னு யோசிக்கணும். போன சைலன்ட் மூட்ல போடுங்க”
“ஓகே.. ” என்ற ஆனந்த் அதீ சொன்னபடி உள்ளே நுழைந்திருக்க, அவர்களின் நல்ல நேரம் நாய்கள் எதுவுமில்லை. சீசீடிவி இருப்பதாகவும் தெரியவில்லை. தப்பு செய்பவர்கள் ஆதாரம் வைத்துக்கொண்டா செய்வார்கள்.
மூவரும் மூன்று வழியாக அந்த பங்களாவுக்குள் நுழைந்து அனியை தேட ஆனந்தின் கண்ணில் சிக்கினான் சுக்லா.
“இவர் இங்க என்ன பண்ணுறாரு? போய் பேசலாமா?” என்று யோசிக்கும் பொழுதே!
அங்கு வந்த சிம்ரன் “சுக்ல என்ன நீ இப்போவே! அந்த பொண்ண அனுபவிக்கணும்னு சொல்லுறியாம். அறிவிருக்கா? உனக்கு?” என்று கண்டபடி கத்த ஆரம்பிக்க
“என்ன இவ சொந்த அப்பாவ பேர் சொல்லி பேசுறா” என்று அங்கு செல்லாமல் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கலானான் ஆனந்த்
“இங்க பாரு சிம்.. பணக்கார பொண்ணுகளா பார்த்து கல்யாணம் எங்குற பேர்ல கல்யாணம் பண்ணுறது பொண்ணு எனக்கு பணம் உங்களுக்கு அதுதானே! டீல்”
“யோவ் அது அந்தாள் பொண்ண முறைப்படி கல்யாணம் பண்ணி கொடுத்தா டவ்ரியா  கொடுப்பான். நாம இப்போ பொண்ண தூக்கி இருக்கோம். அவன் பணம் கொடுக்க மாட்டான். முதல்ல கல்யாணத்த முடிப்போம். அப்பொறம் மிரட்டுவோம்”
“என்ன சிம் நீ.. புரியாம பேசுற.. கல்யாணம் பண்ண போறது ஆகாஷ் முதலிரவ கொண்டாட போறது நான். இப்போ நம்ம பிளான் டோடல் சேன்ஞ் ஆகிருச்சு. பொண்ண தூக்கிட்டோம். மொதல்ல முதலிரவ முடிச்சிக்கிறேனே!”
“அடப்பாவிங்களா… மாமா பயலுங்களா டா.. நீங்க…” ஆனந்த் ஆதிர்ச்சியடைய அவன் தோளில் ஒரு கை வந்து விழுந்தது. மேலும் அதிர்ந்து திரும்ப ஸ்டீவ் நின்றிருந்தான்.
“என்ன நடக்குது இங்க? இவனுகளா அனிய தூக்கி இருக்கானுங்க” ஸ்டீவ் எட்டிப் பார்க்க
“ஆமா. மாமா பயலுங்க. மொதல்ல போலீசுக்கு போன போடுங்க. அதீ சார் எங்க?” என்றவாறு சுற்றும் முற்றும் பார்கலானான் ஆனந்த்.
ஆகாஷ் வந்து “இன்னும் கொஞ்சம் நேரத்துல அவளுக்கு மயக்கம் தெளிஞ்சிடும். அதுக்குள்ளே தாலிய கட்டிடனும்” என்றவாறு வர
“ஆகாஷ் இந்தாள என்னால சமாளிக்க முடியல நீயே என்னானு கேளு” என்றாள் சிம்ரன்.
“என்னய்யா உன்னால ஒரே ரோதனையா போச்சு. கொஞ்சம் பொறுமையாதான் இரேன்”
“ஆமா பொண்ண கடத்தி இருக்கோம். கல்யாணம் பண்ணா அவ அப்பன் காசு கொடுப்பானா?”
“யோவ்… பொண்ணு கேட்டு போனோம். இன்னும் ஒரு பதிலையும் சொல்ல. பொண்ணு மேல இருக்குற அதீத லவ்வால நான் அவள கடத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்று சொல்வேன்” என்று ஆகாஷ் சொல்ல
“அப்பன் நம்புவான். பொண்ணு சம்மதிக்கணுமே! அதான் அவ உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்துட்டாளே!” சுக்லா சந்தேகமாக கேக்க
“அதான் உனக்கும் அவளுக்கும் இன்னக்கி முதலிரவு நடக்க போகுதே! அத வீடியோ எடுத்து அவ கிட்ட காட்டி ஊருக்கே! காட்டுவேன்னு சொன்னா அடங்கிட போறா. அப்பொறம் என்ன?”
“அதுவும் சரிதான்” என்றான் சுக்லா.
“சீக்கிரம் தாலிய கட்டு ஆகாஷ்” என்று சிம்ரன் சொல்ல மூவர் பக்கத்திலிருந்த அறைக்குள் நுழைவது தெரிய ஸ்டீவும், ஆனந்தும் அவர்களை பின் தொடர்ந்தனர்.
மயக்கத்தில் இருந்த அனியை தூக்கிக்கொண்டு வந்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த புரோகிதர் முன் தூணில் சாய்த்து அமர வைக்கப்பட்டிருக்க, அவர் ஒரு வித பயத்தில் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார்.
அதீக்கு அழைப்பு விடுத்த ஸ்டீவ் தாங்கள் இருக்கும் இடத்தைக் கூறி வருமாறு கூற அதீ அவர்களை பார்த்து விட்டதாக கூறினான்.
அதீ பாய்ந்து வந்து சுக்லாவை தாக்க ஸ்டீவ் ஆகாஷை தாக்க ஆரம்பிக்க சிம்ரனின் கன்னத்தில் “பளார்” என அறைந்திருந்தான் ஆனந்த்.
ஒரு பெண்ணை அடிப்பான் என்று அவன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். சிம்ரன் பேசியவற்றை கேட்டபின் “இவளெல்லாம் பெண் ஜென்மமே! இல்லையென்று” தோன்ற சற்றும் யோசிக்காமல் அறைந்திருந்தான்.
புரோகிதர் அதிர்ச்சியில் எழுந்திருக்க, “யோவ் காச வாங்கிட்டா இல்ல. நீ மந்திரத்தை சொல்லு” என்று ஆகாஷ் கத்த அவர் சட்டென்று அமர்ந்து மந்திரத்தை ஓத ஆரம்பித்தார்.
சுக்லா வயதானவர் அதீயை சமாளிக்க முடியவில்லை. தற்காப்புக்கலைகளை கற்றிருந்த ஸ்டீவை சமாளிக்க முடியாமல் திணறினான் ஆகாஷ். சிம்ரனை பற்றி சொல்லவே! வேண்டாம் ஆனந்த் அடித்த அடியில் சுருண்டு விழுந்திருந்தாள்.
“ஸ்டீவ் போ.. போய் அனி கழுத்துல தாலிய கட்டு” என்று அதீ சொல்லியவாறு சுக்லாவை துப்பாக்கி முனையில் நிறுத்த, ஸ்டீவ் அடித்த அடியில் துவண்டு போய் விழுந்த ஆகாஷை சுக்லாவின் அருகில் நிற்க வைத்த அதீ சிம்ரனையும் துப்பாக்கியை கண்களாலே காட்டி அழைத்து அவர்களின் அருகில் நிறுத்தி இருந்தான்.
“நானா?” அதிர்ச்சியடைந்த ஸ்டீவ் என்ன செய்வது என்று ஸ்தம்பித்து நின்று விட்டான்.
அவன் மனம் முழுக்க அக்ஷராவை வைத்துக்கொண்டு அனியை எப்படி திருமணம் செய்வான்? சொல்வது அவனுக்கு எல்லாமாக இருக்கும் நண்பன் அதீ எனும் பொழுது அவன் பேச்சை தட்டவும் முடியாது. அக்ஷராவை பத்தி அவனிடம் சொல்லவுமில்லை.
“என் குழந்தைக்கு நீ மாமானா அனிய கல்யாணம் பண்ணிக்க உனக்கு எந்த தடையும் இல்லல” என்ற அதீயின் பார்வை ஆனந்தின் புறம் இருக்க ஸ்டீவ் அசையவில்லை
“என்ன இவன் இப்படி யோசிக்கிறான். சிட்டுவேஷன் புரியாம,…” ஓடிச்சென்று புரோகிதரிடமிருந்து தாலியை வாங்கி அனியின் கழுத்தில் தாலியை கட்டியிருந்தான் ஆனந்த்.
எதோ தாலியை கட்டி விட்டால் அனியை அந்த சூழலிலிருந்து காப்பாத்தி விட முடியும் என்று எண்ணம்தான் ஆனந்தின் மனதில் ஓட சற்றும் யோசிக்கவில்லை தாலியை கட்டி விட்டு நிமிர அனி கண்விழித்து சோபையாக புன்னகைக்கலானாள்.
அவளைக் கட்டிக்கொண்டவன் “ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல. எந்த பிரச்சினையும் இல்ல” என்ற ஆறுதல் படுத்த அவன் தோளில் முகம் புதைத்தவள் “தேங்க்ஸ்” என்றவாறு கண்கள் மூடி மூடி தேம்பித் தேம்பி அழ ஆனந்த் அவளை ஆறுதல் படுத்த அதீ அவர்களை புன்னகையோடு பாத்திருந்தான்.
அடுத்து நடந்தது எல்லாம் சினிமாவில் வருவது போல் எல்லாம் நடந்து முடிந்த பின் போலீஸ் வந்து அவர்களை கைது செய்ததுதான்.
அனியிடம் போலீஸ் விசாரிக்க தான் சினிமா பார்க்க திரையரங்கம் சென்ற போது ஆகாஷும் சிம்ரனும் அங்கு முத்தமிட்டு கொண்டிருந்ததாகவும் அதை தான் பார்த்து விட்டதால் தன்னை கடத்தியதாகவும் கூற
அவள் பேச்சில் குறுக்கிட்ட ஆனந்த் “அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கை தானே! கன்னத்துல கிஸ் பண்ணா என்ன தப்பு? அத பார்த்தத்துக்கா உன்ன கடத்துனாங்க?” என்று கேக்க
“சினிமா பாக்க சினிமா தியேட்டர் போனதே! இல்லையா? லிப்டு லிப் கிஸ் பண்ணாங்க” ஆனந்தின் புறம் குனிந்து சொன்ன அனி “ஏன் நீங்க பண்ணதில்லையா?” என்று வேறு கேக்க
“எதுக்கு டா இவ கிட்ட வாய கொடுத்தோம்” என்று அமைதியானான்.
பணக்கார வீட்டு பெண்களாக பார்த்து வலை விரித்து திருமணம் என்ற பெயரில் பெருத்த தொகையை சீதனமாக வாங்கி திருமணம் செய்வதுதான் சுக்லா மற்றும் ஆகாஷ் சிம்ரனின் குலத்தொழில். 
சிம்ரனும், ஆகாஷும் காதலர்கள். அப்படி ஆகாஷ் திருமணம் செய்யும் பெண்களை அனுபவிக்கும் சுக்லா துபாய்க்கு விற்றும் விடுவான்.
யாருமே! தொட முடியாத பணக்கார வீட்டு பெண்கள் என்று அவர்களுக்கு தனி விலை பேசி விடுவான்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள பணக்காரர்களை பட்டியலிட்டு ஒரே மகளாகப் பார்த்துதான் தேர்வும் செய்வார்கள். பெயரை மாற்றி, கெட்டப்பை மாற்றி இதுவரை நான்கு பெண்களை ஏமாற்றி இருக்க, அனியின் நல்லநேரம் தப்பித்து விட்டாள்.
“ஏன் டா இந்த சுக்லா சைக்கோவா இருப்பானோ!” தனது சந்தேகத்தை அதீயிடம் கேட்டான் ஸ்டீவ்.
“உனக்கு என்ன டா அப்படியொரு சந்தேகம்?”
“இல்ல பொதுவா… வீட்டை விட்டு வர பொண்ணுகளை தான் டாக்கட் பண்ணி ஏமாத்துவானுங்க இவனுக என்ன பணக்கார பொண்ணுகளா பார்த்து தூக்கி இருக்கானுங்க”
“சுக்லாவை பத்தி டிடெக்டிவ் கிட்ட விசாரிக்க சொல்லி இருக்கேன். அவர்தான் சொல்லணும். ஒருவேளை பணக்கார பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி லைப்ல செட்டில் ஆக்லாம்னு நினைச்சி இருந்து அது நடக்காம போன சைக்கோவாக கூட இருக்கலாம்” என்றான் அதீ.
“என்ன கேட்டா இந்த மாதிரி மாமா பசங்கள எல்லாம் போலீஸ்ல புடிச்சி கொடுக்க கூடாது. தீர்த்து கட்டிடனும். இவனுக உசுரோட இருந்தா இன்னும் நாலு பேர எப்படி கஷ்டப்படுத்தலாம்னுதான் யோசிப்பானுக”
“ஜெயில்ல சூசைட் பண்ணிக்கிட்டா ஓகே தானே!” சூசகமாக அதீ சொல்ல
“ஓகே நண்பா” என்று சிரித்தான் ஸ்டீவ்.
இவர்கள் முன்னாடி அமர்ந்து இவ்வாறு பேசிக்கொண்டு வர பின்னால் அனி ஆனந்தின் தோளில் சாய்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள். ஆனந்துக்குத்தான் பெரும் அவஸ்தையாக இருந்தது.
“சார் வண்டிய நிறுத்தீனீங்கனா நான் இங்கயே! இறங்கி இப்படியே! வீட்டுக்கு போய்டுவேன்” என்று ஆனந்த அதீயிடம் சொல்ல
“என்ன ஆனந்த் என் தங்கச்சி கழுத்துல தாலிய கட்டிட்டு அம்போன்னு விட்டு போறீங்க” புன்னகையை அடக்கியவாறு கேக்க
“ஐயோ.. அது அவங்கள காப்பத்த…” என்றவனுக்கு அப்பொழுதுதான் அங்கிருந்த பதட்டமான சூழ்நிலையில் தான் என்ன செய்து வைத்திருக்கின்றோம் என்று புரிந்தது.
அதீதான் அவர்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி வைத்திருந்தானே! தாலி கட்ட தேவை இருக்கவில்லை. அதீ ஸ்டீவுக்கு சொல்ல, தான் முட்டாள் மாதிரி அதை செய்து முடித்திருக்கின்றேன்.
“ஆனந்த் நீ சரியான கூமுட்டை அடுத்தவன் என்ன சொல்லுறான் அத மட்டும் செஞ்சி பழகிட்ட. எதுக்கு சொல்லுறான்? ஏன் சொல்லுறான்னு? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?” அவன் மனம் ஆயிரம் கேள்விகளை எழுப்ப
“வீட்டுக்கு போய் பேசிக்கலாம் ஆனந்த்” என்ற அதீ அமைதியானான்.
அவன் எண்ணமெல்லாம் வீட்டில் அனிக்கு வரன் வந்திருக்கு என்று சங்கரன் சொன்ன போது அனிக்கு இருக்கும் பிரச்சினைக்கு வீட்டோடு மாப்பிளைத்தான் பார்க்க வேண்டும் என்று வாகை சொல்ல,
“அதெல்லாம் ஒரு பிரச்சினையா? நல்ல இடமா பார்த்தா அவளை நல்லா பத்துப்பாங்க” என்று சங்கரன் வாக்குவாதம் பண்ண
அதீ அனியிடம் வந்து “நீ சொல்லு பேபிம்மா உனக்கு எந்த மாதிரி மாப்புள பார்க்கட்டும்” என்று அதீசன் கேக்க
“எனக்கு ஆனந்த பிடிச்சிருக்கு அதீ லவ்வானு தெரியல. பிடிச்சிருக்கு. டேட் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாரு” என்றவள் சிரித்தவாறே சென்றிருந்தாள். 
அவள் மனதில் என்ன இருக்கின்றது என்று அவளால் புரிந்துக்கொள்ளவும் முடியவில்லை. அதை சொல்லவும் தெரியவில்லை.
அன்று காபி ஷாப்பில் ஆனந்தத்தை ஒரு பெண்ணோடு பார்த்ததும் லவ்வாரானு கேட்டதுக்கு காரணமும் அதுதான். அகிலா மற்றும் ஆனந்தத்தின் உடல் மொழியை வைத்து அனியின் மூளையில் மணி அடித்துக்கொண்டே இருக்க ஆனந்த அனைத்து விட்டு கொளுத்திப்போட்டு விட்டுத்தான் சென்று விட்டாள்.
அதையும் அதீயிடம் வந்து சொல்லியிருந்தாள் அனி. விசாரித்தலில் பெண் பார்க்கத்தான் சென்றிருக்கின்றான் என்று தெரிந்தது.
அனி ஆனந்தத்தோடு இருந்தால் சந்தோசமாக இருப்பாள். ஆனந்திடம் பேசி சம்மதிக்க வைக்க வேண்டும் சங்கரனிடம் பேசி புரியவைக்க வேண்டும் இதெல்லாம் எவ்வாறு செய்ய போகிறேன். இப்பொழுதுதான் மஞ்சரியை ஏற்றுக்கொண்டிருந்தவர் இதற்க்கு சம்மதிப்பாரா? என்றெல்லாம் குழம்பியவனாக, தங்கையை பற்றி கவலையாகத்தான் இருந்தான் அதீ.
எல்லாம் நடப்பது நன்மைக்கே! என்பது போல் அனி கடத்தப்பட்டது என்று தெரிய வந்த நேரம் ஆனந்த் அங்கு இருக்க, அவனையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தான்.
ஸ்டீவ் அக்ஷராவை காதலிப்பது அதீயிடம் சொல்லவில்லையென்றாலும் அக்ஷரா அதீயிடம் சொல்லியிருக்க, அந்த சூழ்நிலையில் ஸ்டீவிடம் சொன்னாலும் ஆனந்த் என்ன செய்வான் என்றுதான் பார்த்தான் அதீ. அவன் நினைத்தது போல்தான் நடந்தது.
ஆனந்த் மனதில் அனி இருக்கிறாளா? தெரியவில்லை. அதீ நினைத்தது நடந்து விட்டது. இனி வீட்டாரை சமாளித்து விடலாம்.
“ஆ.. ஆனந்த் உங்க வீட்டாளுங்களையும் போன் பண்ணி எங்க வீட்டுக்கு வர சொல்லுங்க. கல்யாண விஷயம் பேசணும்” என்று சொல்ல ஆனந்தின் முகம் பேயறைந்தது போல் ஆனது.
“இந்த ஜென்மத்தில் அனியை திருமணம் செய்ய மாட்டேன் என்றவன் தானே! எந்த மூஞ்ச வைச்சுக்கொண்டு அவர்களை சந்திப்பது” ஆனந்த் யோசிக்க
“நான் போன் பண்ணவா?”
“இல்ல நான் பண்ணுறேன்” என்றான் ஆனந்த்.
வீட்டுய்க்கு சென்று நடந்த விஷயத்தை கொஞ்சம் மாற்றி ஆகாஷ் தாலி கட்ட போனதாகவும் அதை தடுக்க வேறு வழியில்லாது ஆனந்த் தாலியை கட்டி விட்டதாகவும் அதீ கூற
“கடவுளே! நான் என்ன பாவம் பண்ணேன்னு தெரியல என் புள்ளைங்க கல்யாணம் எல்லாம் இப்படியே நடக்குது” என்று வாகை அழ, அனி அன்னையிடம் சென்றிருந்தாள்.
“ஏன் அஜ்ஜு எனக்கு என்னமோ இந்த கிட்னப்பிங் ஒரு டிராமானு தோணுது” மாலினி அர்ஜுனின் காதைக் கடிக்க
“அண்ணன் சொல்லுறான் இல்ல. இருக்காது மாலு” என்றான் அர்ஜுன்.
அந்த சூழ்நிலையிலும் மனைவி ஓவ்வெடுகிறாள் என்று அறிந்துகொண்டு நிம்மதியடைந்த அதீ அவளை எழுப்ப வேண்டாம் என்றான். 
சங்கரன் என்ன சொல்வது? என்ன செய்வது? என்று புரியாது ஒரு இடத்து அமர்ந்திருக்க, விஷயம் கேள்விப்பட்ட ஆனந்தின் குடும்பத்தோடு செந்தில் மற்றும் மங்கையும் வந்து சேர்ந்தனர்.
வந்தவர் சும்மா இருக்காமல் “என்ன ஆனந்த் குறுக்குவழில  பணக்காரனாக தீர்மானிச்சிட்ட போல. எத்தனை நாளா திட்டம் போட்டிருந்த?” நக்கலாக செந்தில் பேச
“என்னங்க என்ன? பேசுறீங்க?” மங்கை கடிய  செந்தில் அடங்கவில்லை.
“எனக்கு தெரியாதா? என் கிட்டயே! கம்பனி ஆரம்பிக்குறேன்னு சொன்னவன்தானே! இவன்கிட்ட எங்க அவ்வளவு காசு? இவன் திட்டம் போட்டு பண்ணி இருக்கான்”
ஆனந்த் கோபத்தில் பல்லைக்கடிக்கொண்டிருக்க, “ஏற்கனவே! இங்க டேடி எப்படி சம்மதிக்க வைக்க போறேன். ஆனந்த் வேற குழம்பி இருக்கானு நான் மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன். இதுல இவரு வேற” கடுப்பான அதீசன்
“என்ன செந்தில் அங்கிள் ஸ்கெட்ச்சு போட்டு கொடுத்தது நீங்க போல” என்று சொல்ல
“அதீசா என்ன பேசுற நீ” செந்தில் எகிற
“அங்க நானும்தான் இருந்தேன். கண்ணால பார்த்த மாதிரி பேசுறீங்க? உங்க பொண்ண அஜ்ஜுக்கு கல்யாணம் பண்ணிகொடுக்க முடியல என்ற கோபத்தை ஆனந்த் மேல காட்டாதீங்க. கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க” என்றான் அதீ.
“நான் பேசலாமா?” என்று ஆனந்த் சொன்னவைகளைக் கேட்டு “பாவம்யா நீ” என்று பரிதாபமாக பார்த்தாள் அனி.

Advertisement