Advertisement

அத்தியாயம் 25
நான்கு மாதங்களாக ஸ்டீவ் அக்ஷராவோடு எந்த தொடர்பையும் ஏற்படுத்தி இருக்கவில்லை. அக்ஷராவும் அவனுக்கு தினமும் குறுந்செய்தியும் அனுப்பவில்லை. அன்று அக்ஷராவை சந்திக்க செல்லும் முன் அலைபேசி தொடர்பை ஏற்படுத்தி சந்திக்க அனுமதி கேட்கும் பொழுதே! அவனுக்கு குறுந்செய்தி அனுப்புவது அக்ஷரா என்று அறிந்துகொண்டிருந்தான் ஸ்டீவ்.
அதீசன் மீட்டிங்கு போறானா? டேட்டிங்கு போறானா? என்று சந்தேகப்பட்டது போல் நன்றாக தயாராகித்தான் அக்ஷராவை பார்க்க சென்றிருந்தான். தொழில் சம்பந்தமான கால் தவிர வேறு அலைபேசி அழைப்புக்கள் வந்ததில்லை. குறுந்செய்தி மூலமாக அக்கறையாக யாரோ விசாரிக்கவும் முதலில் ராங் நம்பர் என்றுதான் நினைத்தான். இருந்தாலும் அந்த விசாரிப்பு அவனுக்கு இதத்தை கொடுத்திருக்க, யார்? என்ன? என்றெல்லாம் சிந்திக்காமல் பதில் அனுப்ப ஆரம்பித்திருக்க, அது அக்ஷரா என்றதும் ஆசையும் எட்டிப்பார்த்தது.
சாப்பிட்டு செல்லலாம் என்று சமயலறைக்குள் செல்லும் பொழுது அதீசன் சாபமிடுவது போல் கல்யாணமாகாது என்றதும் கலவரமடைந்தான்.
முதல் சந்திப்பே! சண்டையில்தான் ஆரம்பமானது. அவள் தன்னோடு விளையாடுகிறாளா? என்ற சந்தேகமும் ஸ்டீவுக்கு இல்லாமல் இல்லை. சந்தேக்கத்தோடுதான் அவளை சந்திக்கவே! சென்றிருந்தான்.
பேசின கொஞ்சம் நேரத்திலையே! அவளை பிடித்திருக்க, அவளோடு அவளுடைய கேஸ் விஷயமாக அலைந்து திரியலானான்.
கேஸ் விஷயமாகவும், பொதுவான விஷயங்களையும் பேசிப்பேசியே! அன்றைய பொழுதை அவளோடு கழித்தவன் விடைபெற
“ஒரு நிமிஷம் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று அக்ஷரா கேக்க
“வா ஒரு கப் காபி சாப்பிடலாமா? என்று கேக்குற மாதிரி கேக்குறா? இவ என்ன லூசா? இல்ல நம்மள ஓட்டுறாளா?” என்று அவளை யோசனையாக பார்த்தவனுக்கு என்ன பதில் சொல்வதென்றுதான் புரியவில்லை.
ஸ்டீவ் வளர்ந்த சூழ்நிலையும் சந்தித்த மனிதர்களும், அவன் அனுபவங்களும் சட்டென்று ஒரு பெண் இவ்வாறு கேட்டதும் நம்பிக்கை வர  மறுத்தது. குழம்பிய முகபாவனையைத்தான் கொடுத்தான். 
முதலில் கெட்ட வார்த்தை பேசியதால் ஸ்டீவை தப்பாக கணித்த அக்ஷரா சட்டென்று இப்படியொரு முடிவை எடுக்க அவளுடைய அனுப்பவுமும்தான் காரணம் என்று அவளுக்கு தெரியாதா?
புன்னகைத்தவாறே! “சரி யோசிச்சு சொல்லு” என்றவள் விடைபெற்று சென்றிருந்தாள். அதன்பின் அவளிடமிருந் வரும் குறுந்செய்தியும் படிப்படியாக குறைந்துதான் போய் இருந்தது.
அதை கவனிக்கும் சூழ்நிலையும் ஸ்டீவுக்கு இருக்கவில்லை. பாடசாலைகளை கட்டும் பணி, கோவிலை கட்டும் பணி. பாண்டியை வேறு ஒரு வழி பண்ண வேண்டியதாக இருக்க திருவிழா வேறு இருந்தது. எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டு அதீசனோடு தொழிலையும் பார்க்க, நேரம் இறக்கைக் கட்டிக்கொண்டு பறந்ததில் அக்ஷரா என்றொருத்தியை மறந்துதான் போய் இருந்தான் ஸ்டீவ்.
பாண்டியை எப்படி மடக்குவது என்று யோசித்த அதீசனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. இதற்கிடையில் ஊரில் கோலா கம்பனி ஆரம்பிக்க ஒரு காப்ரேட் கம்பனி வந்து இடங்களை பார்வையிட்டுக்கொண்டிருக்க, அந்த செய்தி ஸ்டீவ் மூலம் அதீசனின் காதுக்கு வந்தது.
ஊரு மக்களை விழிப்புணர்வு செய்து இதை தடுக்க வேண்டும் என்று அதீசன் பஞ்சாயத்து தலைவரோடு பேச காப்ரேட்க்காரனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பேக்டரி வந்தால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் அதற்கு தன்னுடைய நிலங்களையும் கொடுப்பதாக பேச ஊரு மக்களும் பாண்டி செய்வதுதான் சரியென்று பேசி இருந்தனர்.
“இப்போ என்ன பண்ணுறது?” என்று இதன் விபரீதம் அறிந்து அமுதவேணி கேக்க
அதீசன் “தெரியல” என்று சொல்ல பாண்டி அவனை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு சென்றான். 
சொன்னது போலவே! பாண்டி தனது நிலங்களை, அதாவது பேச்சியம்மாள் அவனுக்கு கொடுத்திருந்த நிலங்களை காப்ரேட் கம்பெனிக்கு மொத்தமாக வித்திருந்தான். அந்த பணத்தை வாங்கிக்கொண்டு வங்கியில் போடலாம் என்று வண்டியில் வந்துகொண்டிருந்தவனை ஜீப்பில் வந்த ஐந்து ரௌடிகள் சுற்றி வளைத்து தாக்கி பணத்தை பறித்துக்கொண்டு சென்றிருந்தனர்.
இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த பாண்டியை அவ்வழியாக வந்த அதீசனும், ஸ்டீவும் தான் அரச மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். இரண்டு நாட்களுக்கு பின் ஸ்டீவ் மட்டும் வந்து பார்த்து விட்டு சென்றிருக்க, போலீஸ் வேறு வந்து பாண்டியை விசாரித்து விட்டு சென்றியிருந்தனர்.
“என்ன டா.. சொல்லுறான் அவன்?” அதீசன் நக்கலாக கேக்க,
“பெருசா அடியேதும் இல்ல. இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்டார்ஜாகி வீட்டுக்கு போயிடுவான். பணம் போச்சுன்னு வேற போலீஸ்ல கம்பிளைன் கொடுத்திருக்கான்” என்றவாறே அமர்ந்தான் ஸ்டீவ்
“என்ன நம்ம மேல சந்தேகப்படுறானா?” என்று அதீ ஸ்டீவை ஏறிட
“அது எப்படி முடியும்? ஸ்கெட்சு போட்டது நானில்ல. அவன் அப்பன் வந்தாலும் கண்டு பிடிக்க முடியாது. நிலமும் போச்சு, பணமும் போச்சு” என்று ஸ்டீவ் சொல்ல ஹைபை கொடுத்துக்கொண்டவர்கள் சத்தமாக சிரிக்கலாயினர்.
“சரி… சரி… நீ சுரேஷுக்கு போன போடு… அடுத்து இவன் அவதான் நச்சரிப்பான்” என்றான் அதீ.
சுரேஷ் அதீயோடு படித்தவன்தான். கோலா கம்பனி வைத்திருப்பவன். முதலில் பாண்டியை இந்த ஊரை விட்ட துரத்த வேண்டும். என்ன செய்யலாம் என்று சிந்தித்தவனுக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான். அது பேச்சியம்மாள் கொடுத்த நிலபுலன்கள். அதை வைத்துக்கொண்டுதான். இந்த ஊரில் இருந்துகொண்டு அட்டூழியம் செய்துகொண்டிருக்கின்றான். அதை அவனிடமிருந்து பறிக்க வேண்டும். அது இலகுவான காரியனும் கிடையாது. என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்குத்தான் ஸ்டீவ் இந்த ஐடியாவை கொடுத்திருந்தான்.  
கெஞ்சிக் கூத்தாடாத குறையாகத்தான் சுரேஷை ஊருக்கு வரவழைத்திருந்தான். பிஸ்னஸ் செய்பவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் தங்கமாகத் தெரிய, அடுத்தவன் பிரச்சினைக்கு வருவானா?
“பணம் வேணும்னாலும் வாங்கிக்கோடா..” என்ற பின்தான் ரோஷத்தில் கிளம்பி வந்திருந்தான்.
“என்ன  டா.. பணம் அது இதுனு ஓவரா பேசுற” என்று அதீயை திட்டியவன், “இவனெல்லாம் ஒரு ஆளு… இவன நான் நேர்ல வந்து டீல் பண்ணனுமா? என்று பாண்டியை பார்த்து கடிய வேறு செய்தான்”
அவர்களின் திட்டத்தின்படி சுரேஷ் அவனுடைய நம்பத்தகுந்த சிலபேரோடு நிலங்களை சுற்றிப்பார்க்க, ஊருக்குள் வந்திருக்கும் புதிய முகங்களைக் கண்டு என்ன? எது? ஊர் மக்கள் விசாரிக்கலாயினர்.
அவ்வாறுதான் பாண்டிக்கும் இவர்களை பற்றிய செய்தி கிட்டியது. தான்தான் ஊரையே! ஆளும் ராஜா என்ற நினைப்பில் பாண்டி சுரேஷோடு பேச செல்ல,
“வணக்கம், உங்களை பார்த்தா இந்த ஊருல நீங்க மட்டும்தான் படிச்சவரா தெரியிறீங்க” என்று ஆரம்பித்து கோலா கம்பனி பற்றி சொல்லியவன், அவனுடைய நிலங்களை காட்டி யாருடைய நிலம், எவ்வளவு விலைகொடுத்தேனும் வாங்க வேண்டும் என்றான். அதற்கு சுரேஷ் சொன்ன விலையும் மூன்று பங்கு அதிகம்.
நிலங்களை விற்பதா? பணமும் அதிகமாக கிடைக்கும்? விற்றால் மஞ்சரியை அடைவது எப்படி என்று இரண்டும் கெட்ட மனநிலையில் இருந்தவனைத்தான். அதீசன் கோலா கம்பனிக்கு எதிராக பேசி தனது விருப்பமின்மையை தெரிவித்திருந்தான். 
“ஏன் டா… நல்லவனே! என்ன கொலை பண்ண எவ்வளவு நாளா திட்டம் போட்டுக்கிட்டு இருக்க? அந்த பக்கம் அவன் கிட்ட நிலத்த வாங்க சொல்லிட்டு, இந்த பக்கம் ஊரு மக்களை உசுப்பேத்தி விடுறியா?” என்று சுரேஷ் அதீசனின் மேல் பாய
“எல்லாம் ஏற்கனவே! திட்டமிட்டதுதான் நண்பா…” என்று சிரித்தவன் அடுத்து இதுதான் நடக்கும் என்றான்.
அதீ கூறியது போல் மீண்டும் சுரேஷை சந்தித்து தன் பிரச்சினையை கூற, “இதெல்லாம் ஒரு பிரச்சினையா? உங்க நிலத்த எனக்கு வித்துட்டு, ஊருல உங்களுக்கு ஏத்தமான நிலத்த வாங்குக” என்று சொல்ல
அந்த வலையில் சிக்கிய பாண்டி இந்த நிலங்களை விற்று ஊரில் வேறு இடத்தில் நிலங்களை வாங்கிக்கொள்ளம் என்று கணக்கிட்டு சுரேஷுக்கு நிலங்களை விற்க தீர்மானித்தான்.
எல்லாம் திட்டப்படி நடந்திருக்க, அவன் வாங்கத்தான் நிலம் உடனே! கிடைக்கவில்லை. அதனால் பணத்தை வங்கியில் போடச் சென்றவனைத்தான். அதீ ஏற்படுத்தி இருந்த ரௌடிகள் தாக்கி இருந்தனர்.
“சுரேஷ எதுக்கு நச்சரிக்க போறான்?”
“கம்பனில 5% பாட்னர்ஷிப் வேற கேட்டிருக்கான். அதுக்காகத்தான்” என்று அதீ சொல்ல
“இது வேறயா? அடுத்து என்ன?”
“கம்பனி ஆரம்பிச்சா தானே! பங்கு… ஏற்கனவே! இருக்குற கம்பனி நஷ்டம் அதனால இப்போதைக்கு பேக்டரி ஆரம்பிக்கிற ஐடியா இல்லனு சொல்லுவான். ஒரு வருஷம் கழிச்சு. நாம அத வாங்கிட்டதா சொல்லுவோம்”
“சொத்து போனா… ஊற விட்டு போவானா?”
“சந்தேகம்தான்… அடுத்த அடிய கொடுக்கணும் அது அவன் கல்குவாரில வெடிக்கணும் அப்போ அவன் அங்க இருப்பான் இல்ல” என்றான் அதீ.
சங்கரன் தேவைப்பட்டால் ஆணி வேர்வரை தோண்டுவேன் என்று கூறியிருக்க, அதீசன் அக்குவேறு, ஆணிவேராக பிரித்து மேய்ந்திருந்தான்.
பாண்டியின் சொந்தபந்தங்கள், யார் யார் என்ன தொழில் செய்கிறார்கள். கல்குவாரியை யார் பொறுப்பில் விட்டு விட்டு இங்கு வந்திருக்கின்றான். இவன் அழைத்தால் யார் யார் எல்லா வேலைகளையும் போட்டு விட்டு இவனுக்காக வருவார்கள் என்பதுவரை தோண்டி துருவி இருந்தான்.
“இருக்குறது ஒரே ஒரு கல்குவாரி, அத மட்டும் வச்சிக்கிட்டு இந்த ஆட்டம் ஆடுறானே!” ஸ்டீவ் சொல்ல
“ஏன் டா… நீ வேற.. போன போடு டா…”
“யாருக்கு…”
“கல்குவாரிய பாத்துக்கிறது இவன் சித்தப்பா… அந்தாளுக்கு ரெண்டு பொண்ணு. சின்ன பொண்ணுக்கு  கடன் பட்டு சமீபத்துலதான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்க, மாப்பிள யார் தெரியுமா? இன்ஜினியர். சோமா சுந்தரம் கம்பனில ஒர்க் பண்ணுறான்”
“புரிஞ்சிருச்சு… சோமசுந்தரத்துக்கு போன போட்டு இன்ஜினியர வேலைய விட்டு தூக்கினா… “
“பொண்ணு வந்த நேரம் மாப்பிளைக்கு வேலைபோச்சுனு சேர்த்து சொல்ல சொல்லு”
“ஜீசஸ்…  ப்ரோகிவ்மி..” என்றவாறு ஸ்டீவ் அதீ சொன்ன வேலையை செய்யலானான்.
ஒரு இடத்தில் நடக்கும் சிறிய சம்பவம் இன்னொரு இடத்தில் பிரதிபலிப்பதை பட்டர்ப்ளை எபெக்ட் என்பார்கள். அங்கங்கே நடக்கும் சம்பவம் அனைத்தும் பாண்டியின் வாழ்வில் பிரதி பலிக்க ஆரம்பித்தது.
உறவினர் ஒவ்வொருவருக்கும் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட, அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகளை சமாளிக்கவே! நேரமும், பணமும் போதவில்லை. இதில் அவர்கள் பாண்டியை எவ்வாறு கவனிப்பார்கள்.
ஊருக்கு சென்றே! ஆகா வேண்டிய சூழ்நிலை சென்றால் கல்குவாரியிலும் பிரச்சினை. சுற்றுப்புற சூழல் மாசுபடுவதாகா ஊர் மக்கள் பெட்டிஷன் கொடுத்திருந்தனர்.
பத்து வருடங்களுக்கு முன் குவாரியிலிருந்து ஐந்து கிலோமீட்டரில் எந்த வீடுகளும் இருக்கவில்லை. அதை தாண்டித்தான் வீடுகள் ஆரம்பமாகும். ஆரம்பமாகும் இடத்திலிருந்து அரைகிலோமீட்டரில் ஒரு குறுக்குப்பாதை  வண்டியும் அந்த வழியாகத்தான் சென்று கொண்டிருந்தது. வீடுகளும் ஓரிரண்டுதான்.
இன்று ஐந்து கிலோ மீட்டரில் இருந்த குவாரி படிப்படியாக மூன்று கிலோமீட்டருக்கு நெருங்கி, வீடுகள் கட்டப்பட்டதோடு குறுக்குப்பாதைக்கே! ஐம்பது வீடுகள் இருக்க, குழந்தைகள் வேறு பாதையில் விளையாடியவண்ணம்தான் இருக்கின்றனர். சதா தூசியும், வயதானவர்கள் இருமியவாறும்தான் இருக்கின்றனர்.
இதை கவனித்து அதீசன் ஊர் மக்களை தூண்டி விட்டிருந்தான். கோட் கேஸ் என்று அலைந்தால் தீர்ப்பு பாண்டிக்கு சாதகமாக கூட வரலாம். காரணம் பத்து வருடங்களுக்கு முன் ஐந்து கிலோ மீட்டரில் தானே! இருந்தது. பாதையை மட்டும் மாற்றி கொள்வான். ஆனால் கோட் கேஸ் என்று அலைய அதற்கான, நேரமும், பணமும் வேண்டுமே!
இவ்வாறு பாண்டி அறியாமலே! பாண்டியை லாக் செய்யலானான். அதீசன். ஆனாலும் மனம் கேட்கவில்லை.
“பத்தல… இன்னும் ஏதாச்சும் செய்யணும்… அவன் நிம்மதி இல்லாம போகணும்” என்று புலம்பியவாறுதான் இருந்தான். இதற்கிடையில் திருவிழாவும் சிறப்பாக நடந்தேறி இருந்தது.
புதுக்கோவில் மாதிரி வர்ணங்களால் கண்ணைக் கவர்ந்த கோவிலைக் காணும் பொழுதெல்லாம் பண்ணையாரும் ஊர் மக்களும் அதீசனை, வாழ்த்திவிட்டும், பாராட்டி விட்டும் செல்ல மஞ்சரிக்கு உள்ளுக்கு பூரித்துப்போனது.
“என்ன டி பொண்டாட்டி முகம் இப்படி ஜொலிக்குது, என்ன விஷயம்” என்று அதீசன் அவளை சீண்டிக்கொண்டே இருக்கலானான். அதற்கு இன்னொரு காரணம் அவர்கள் தங்களது வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைத்திருந்ததும்தான்.
எந்தவகையிலும் பாண்டி மஞ்சரியை நெருங்க விடாமல் பார்த்துக்கொண்டான். தானே! அழைத்து சென்று பாடசாலையில் விட்டும் தானே! அழைத்து வந்தும் கொண்டிரு இருக்க, திடிரென்று சென்னை அல்லது மற்ற பாடசாலைகளின் வேலைகளுக்காக வெளியே செல்ல நேர்ந்தால் என்ன செய்வது? அல்லது பாடசாலையிலிருந்து மஞ்சரி அவசரமாக தன்னிடம் சொல்லாமல் வீட்டுக்கோ! அல்லது வேறு எங்கோ! சென்றால்? என்று சிந்தித்தவன் பாடசாலையின் அருகே! ஒரு மிட்டாய் கடையை நிறுவி இருந்தான். அதில் இரு பெண்கள் அவள் பாதுகாப்புக்காக இருந்தனர். அதனால் யாருக்கும் சந்தேகமும் வரவில்லை.
“எலும்பும் தோலுமா இருந்த இப்போதான் கட்டிப் புடிக்கிற அளவுக்கு கைக்கு பந்தமா இருக்க, இன்ன கொஞ்சம் ஊட்டி விட்டா கும்முனு ஆகிடுவ” என்றவாறே அதீசன் மஞ்சரியை இழுத்து தன் கைவளைவுக்குள் வைத்துக்கொள்ள
“முதல்ல விடுங்க. எப்போ பார்த்தாலும் இதே! நினைப்போடு சுத்திகிட்டு திரியிறீங்க” என்றவள் விலக முட்பட
“ஏன் டி.. என்ன உசுப்பேத்துறதே! நீ தான். கண்ண வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குற, அத அப்படியும் இப்படியும் உருட்டி என்ன வா வானு கூப்டுற, உதட்டை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குற அந்த பக்கம், இந்தப்பக்கம் சுளிக்கிற, அப்பொறம் நான் கைய வச்சிக்கிட்டு சும்மா எப்படி இருக்கிறதாம்”
“அதுக்காக பட்ட பகல்ல நடு வீட்டுலயா அட்டகாசம் பண்ணுவீங்க?”
“அப்போ வா ரூமுக்கு போலாம்” என்று கன்னம் கடிக்க
“அடங்கவே! மாட்டீங்களா..” என்றவள் அவனை விட்டு விலகத்தான் இல்லை.  
“நைட்டுல மட்டும் அப்படியே! நான் சொல்லுறதெல்லாம் கேக்குற, இப்போ மட்டும் என்ன?” என்று சீண்ட
“உங்க கிட்ட பேசினா என் மானம் தான் போகும் ஆள விடுங்க. அப்பாகிட்டயே! போய் முதலிரவுக்கு ஏற்பாடு பண்ண சொன்ன ஆள்தானே! நீங்க” முகம் சிவந்தவாறே கணவனின் தோளில் அடிக்கலானாள் மஞ்சரி.
“பின்ன என் வாராகிய சந்திக்கிற இரவு ரொமான்டிக்கா இருக்கணுமா? வேணாமா?” என்றவன் அவளை தூக்கியவாறு அறைக்குள் நுழைந்திருந்தான்.
மஞ்சரியின் பாதுகாப்பு மட்டுமல்ல உணவு பழக்க வழக்கங்களிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருந்தான் அதீசன். முதலில் அவன் செய்தது ஒரு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று அதன்படி செய்ததுதான். ஒரு மாதம் செல்ல மஞ்சரியின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.
எழுமாதங்களாக ஏற்படாத மாற்றம் திருமணமானபின் ஏற்படுவது பொன்னுத்தாயிற்கு பெருத்த ஆச்சரியத்தைக் கொடுத்திருக்க,
“கொண்டவன் கொண்டாடினாதான் உண்டானாலும் பெருமையாம்” “சட்டுபுட்டுனு கொள்ளு பேரப்பசங்கள பெத்துப்போடுங்கடா..” என்றார் பேச்சியம்மாள்.
எல்லாவற்றுக்கும் மனநிலையும்தான் காரணம் என்பதை அதீசன் புரிந்துகொண்டிருந்தான். மஞ்சரியை சந்தோசமாக வைத்திருப்பது எப்படி என்பதை மட்டும் யோசித்துக்கொண்டிருந்தவன் அவள் முகம் பார்த்தே! தங்களது வாழ்க்கையை தொடங்க எண்ணி அனைவரும் வாசலில் அமர்ந்திருக்கும் பொழுது தங்கராசுவிடம் போய்
“மாமா இங்க எங்க பூ வாங்கணும்” என்று கேக்க
மஞ்சரிக்காக வாங்க கேக்குறானா? அல்லது வேறு தேவைக்காக கேக்குறானா? என்று நொடி நேரம் நிதானைத்தவர் வீட்டுப்பெண்கள் அதிகமாக தங்களது தோட்டத்து பூக்களைத்தான் சூடிக்கொள்வார்கள். அப்படியே! தோட்டத்தில் இல்லாத பூ என்றால் பூக்கார அம்மாகிட்ட சொன்னா கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள். அதீசன் கேட்டது வேறு தேவைக்காக என்று முடிவு செய்தவர்.
“மொத்தமா வாங்கோணுமென்றா கோவிலுக்கு பக்கத்துலதான் வாங்கோணும் மாப்ள”
“அப்போ வாங்கிடுங்க, அப்படியே! எனக்கும் மஞ்சரிக்கும் சாந்திமுகூர்த்தத்துக்கு நல்ல நேரமும் பார்த்துடுங்க” என்று சொல்ல
“என்ன இது தனது மகள் இன்னும் வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லையா?” அதிர்ச்சியில் உறைந்தவரை
உலுக்கிய பொன்னுத்தாயி “என்ன மசமசன்னு பாத்துகிட்டு நிக்குறீக போங்க” என்று விரட்ட
“என்ன இது?” என்ற பார்வையை அவர் வீச
“நம்ம பொண்ணு மனச புரிஞ்சிகிட்டு நடத்துகிற மாப்புள கிடைச்சது நினைச்சி சந்தோச படுவியா” என்று விட்டு செல்ல தங்கராசுவுக்கும் கலக்கம் நீங்கி சந்தோசம் பிறந்தது.
திருமணம்தான் நேரம், காலம் பார்க்காமல், பெற்றோர்களின் ஆசிர்வாதம் இல்லாமல் விதி என்ற பெயரில் நடந்தேறி விட்டிருந்தது. திருமணத்தை பார்க்க முடியவில்லை என்று தாலிபெருகின் பொழுது பாதி சடங்குகளை வாகை நிறைவேற்றி இருந்தாள். 
ரிஷப்ஷன் வைப்பதற்கு வாகையிடம் அதீசன் சங்கரன் கோபப்படுவார் என்று ஒரு காரணம் கூறி இருந்தாலும், ரிசப்ஷனுக்கு மஞ்சரியின் சொந்தபந்தங்களையும் அழைக்க வேண்டும், அதேபோல் சங்கரனின் தொழில் சாந்தவர்கள்தான் அதிகமானவர்கள் வருவார்கள்.
கள்ளம்கபடமற்ற ஊர்காரகளை அவர்கள் எப்படியெல்லாம் பேசி சங்கரனின் பிபியை எகிறவைப்பார்கள் என்று அதீசனுக்கு தெரியாதா? அதனால் அவனுக்கும், தந்தைக்கும் நடுவில்தான் விரிசல் உண்டாகும் அதனால்தான் அதை தவிர்த்தான்.
“பாண்டியோட தலை வலியே! பெரும் தலை வலி. இதுவும் வேணுமா?” என்று எண்ணித்தான் வாகையிடம் மஞ்சரிக்கு வளைகாப்பை சிறப்பாக செய்யலாம் என்று சொல்லி இருந்தான். இதோ அதற்கான முயற்சியில் இறங்கி இருந்தான்.
அதீசனின் திட்டப்படி பாண்டியின் வாழ்க்கையில் மாறி மாறி பிரச்சினைகள் உருவாகிக்கொண்டே! இருக்க அவனும் கோவில் கோவிலாக ஏறி இறங்கலானான்.
“எத்தனை நாளைக்குத்தான் இத பண்ணிகிட்டு இருப்ப? நமக்கு என்ன வேற வேல வெட்டி இல்லையா? நிரந்தரமா இதற்கான தீர்வு ஆள எக்சிடன் பண்ணி தூக்கிடலாம்” அக்ஷரா பேசவில்லை என்ற கடுப்பில் ஸ்டீவ் பேச
“அவன் ஒரு சைக்கோ! என் வாராகிய எப்படியெல்லாம் டாச்சர் பண்ணி இருக்கான். அவன சும்மா விடுறதா? அந்த செல்லப்பாவ ஏன் இன்னும் கண்டு பிடிக்க முடியல?”
“அந்தாளு எங்க போனானே! தெரியல. செத்துக்கித்து போய்ட்டானோ! என்னவோ!” என்றான் ஸ்டீவ்
“நீ இப்போ என்ன சொன்ன?” என்ற அதீசன் யோசனைக்குள்ளானான். 
அடுத்து அதீசனிடமிருந்து அலைபேசி அழைப்புகள் அக்ஷராவுக்கு பறந்திருக்க, லதாவிடமும் பேசியவன் தனக்கு தேவையான விவரங்களை பெற்றுக்கொண்டு தனது சந்தேகங்களையும் கூற, அவர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
சரியாக அதீசன் காய் நகர்த்த பூஞ்சோலை மற்றும் செல்லப்பாவை கொலை செய்த குற்றத்துக்காக பாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
இதில் ரொம்பவும் அதிர்ச்சியடைந்து மஞ்சரியின் குடும்பத்தார்தான்.
 “நல்லவேளை அந்த கொலைகாரன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்த, கடவுள் உன்ன காப்பாத்திட்டாரு. உன் நல்ல மனசுக்கு மகராசன் மாதிரி புருஷன் அமைஞ்சிருக்கான்” என்று ஊரு பேச, பாண்டியோடு வாழ சொல்லி எப்படியெல்லாம் பேசிய ஊர் இன்று பாண்டியின் சுரூபம் தெரிந்ததால் எப்படியெல்லாம் மாற்றிப் பேசுகிறது. இதுதான் உலகம். புன்னகை மட்டும் சிந்தினாள் மஞ்சரி.
இரவின் தனிமையில் கணவனின் கைவளைவுக்குள் இருந்தவாறே! “எனக்கு தெரியும் என் கிட்ட சொல்லலைனாலும் அவன் ஜெயிலுக்கு போக நீங்கதான் காரணம்னு. ஆனாலும் பூஞ்சோலைய கொலை பண்ணுவான்னு நினைக்கல”
“அவன் ஒரு சைக்கோ வாராகி. எனக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு” என்றவன் அவள் கன்னத்தில் முத்தம் வைக்க,
“ம்ம்… முதல்ல சொல்லுங்க என்னதான் பண்ணீங்க..”
“நான் ஒண்ணுமே! பண்ணலையே!” என்றவன் சிரிக்க,
“சொல்ல போறீங்களா? இல்லையா?” மிரட்டலானாள் மனையாள்.
“ஆக்சுவலி செல்லப்பாவ தேடி கண்டு பிடிச்சி தன் பேத்தியோட சாவுல தனக்கு சந்தேகம் இருக்குனு பொய்யா ஒரு கேஸ் போட்டு பாண்டிக்கு கொடச்சல் கொடுக்கலாம்னு யோசிச்சேன்” என்று அதீ சொல்ல
கணவனை முறைத்தவள் “மேல சொல்லுங்க”
“அந்த செல்லாப்பாவே! ரொம்ப நாளா  ஆளாக் காணோம். அதுவும் பேத்தியோட பொணத்த தூக்க கூட அவர் இல்ல. புதைச்சதும் ஊர்காரங்கதான். என்னதான் பேத்திமேல கோவம் இருந்தாலும், இந்த மாதிரியான சூழ்நிலைல இருக்கமாட்டாரா என்ன? உடனே! லாயரம்மகு போன போட்டு பூஞ்சோலை எப்படி செத்தான்னு கேட்டேன். கிணத்துல குதிச்சுனு சொன்னாங்க. குதிச்சாளா? பாண்டி தள்ளி விட்டானா? என்ற சந்தேகத்த கிளப்பினேன்”
“என்ன சொல்லுறீங்க”
“ஏன் பூஞ்சோலை பாண்டிகிட்ட தன்னை கல்யாணம் பண்ண சொல்லி சண்டை போட்டிருக்க கூடாது. ஏன் பாண்டி பூஞ்சோலைய கிணத்துக்குள்ள தள்ளி விட்டிருக்க கூடாது அத பார்த்து சண்டைக்கு வந்த செல்லப்பாவ கொன்னிருக்க கூடாது. பாடிய மறச்சிட்டு செல்லப்பா மனஉளைச்சல்ல போய்ட்டாருனு கதகட்டிவிட்டிருக்கலாம்ல”
“ஆனா அன்னக்கி பாண்டி ஹாஸ்பிடல்லதானே! இருந்தான்”
“நான் சந்தேகத்த கிளப்பவும் அக்ஷரா இந்த கேச மீண்டும் விசாரிக்க சொல்லி கேஸ் கொடுத்து அன்னக்கி பாண்டி வீட்டுக்கு வந்த ஆதாரத்தையும், செல்லப்பா வீட்டை விட்டு எங்கயும் போகல என்ற ஆதராத்தையும் கண்டு பிடிச்சாங்க, அப்பொறம் செல்லப்பூவோட பாடி.. அப்பொறம் என்ன பாண்டியோட வாக்கு மூலம்”
“ரெண்டு கொலையையும் பண்ணிட்டு அன்னக்கி கோட்டுல வந்து என்னமா நடிச்சான்” மஞ்சரியின் முகம் கோபத்தில் சிவக்க,
“எதுக்கு இப்போ அவன பத்தி பேசுகிட்டு அதான் அவன் சேப்டர் முடிஞ்சிருச்சே! என்ற அதீசன் தனது வேலையில் கவனமானான்.
அதன்பின் வந்த நாட்கள் அவர்களின் வாழ்க்கையில் வசந்தமாகத்தன இருந்தது.

Advertisement