Advertisement

அத்தியாயம் 2
காலை சூரியனும் தன் வெப்பத்தை குறைவிலாது சென்னையில் பரப்ப கதிராய் மெல்ல மெழுந்த தருணம் அது. அந்த சொகுசு பங்களாலாவில் தனது ஜோகிங்கை முடித்துக்கொண்டு பத்திரிக்கையோடு அமர்ந்து விட்டார் செந்தில்.
அருகே மனைவி மங்கை யோகா செய்துகொண்டிருக்க, வேலையாள் வந்து அவருக்கு பருக கிறீன் டீயை கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்.
ஆஸ்திரேலிய புற்தரை பச்சை கம்பளம் விரித்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வண்ண வண்ண பூச்செடிகளால் நிரம்பி அழகான தோட்டத்தோடு அமைந்திருந்தது செந்திலின் சொகுசு பங்களா.
இரண்டு மாடிகளைக் கொண்ட பங்களாவில் நான்கு படுக்கையறை, இரண்டு வரவேற்பறை, இரண்டு சமையலறை, பூஜையறை என்று சகல வசதிகளையு கொண்டிருப்பதோடு, செந்திலின் ஐந்து கார்களையும் நிறுத்தவென தனியிடம், அதுபோக நீச்சல் குளம் வேறு இளநீல நிறத்தில் கண்ணை கவர்ந்தது.
கணவனும், மனைவியும் காலை உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு உள்ளே சென்று செந்தில் ஆஃபீஸ் செல்ல தயாராகி வர, மங்கை குடும்பத்து பெண்ணாக புடவையில் தயாராகி வர காலை உணவுக்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே! செய்யப்பட்டிருக்க இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவுண்டனர்.
“குட் மோர்னிங் டேட்” படிகளில் தாவி இறங்கியவாறு புன்னகை மாறாது தந்தைக்கு காலை வணக்கத்தை வைத்தாள் அகல்விழி. 
அகல்விழி தொழிலதிபர் செந்தில்குமார் – யாழ்மங்கை தம்பதியர்களின் ஒரே செல்வப்புதல்வி. அலட்டலில்லா அழகு. வயதுக்கேற்ற துறுதுறுப்பு. படிப்பு ஏறாவிட்டாலும் வழமையாக காலேஜுக்கு சமூகமளித்துவிடுவாள். அது அவளது ட்ரீம் பாய் அர்ஜுனைக் காண.
“குட் மோர்னிங் மா. எங்க காலேஜுக்கா?”
தினமும் கேட்கப்படும் கேள்விதான். மகள் காலேஜ் செல்லாது புத்த பையை சுமந்துக்கொண்டு வாக்கிங்கா போவாள்? பார்க்குக்கா போவாள்? சினிமாக்கா போவாள்?  யாழ்மங்கை மனதுக்குள் கவுண்டர் கொடுத்தாலும் வெளியே நொடித்துக்கொண்டு பதில் பேசாது இருந்து விடுவாள். அப்பா, மகளின் பாசப்பிணைப்பு அப்படி.    
இதுவே ஆண் பிள்ளையாக இருந்தால் எடக்கு மடக்காக பதில் சொல்லி இருப்பானோ! அகல்விழி தந்தையை கட்டிக்கொண்டு “எஸ் டேட்” என்றாள்.
செந்தில் இரண்டு அக்காக்களோடு பிறந்தவர். ஆண் குழந்தை வேண்டுமென்று செந்திலின் பெற்றோர்கள் தவம் கிடந்தார்களோ! என்னவோ! இரண்டாவது மகள் கிடைத்து பதினைந்து வருடங்கள் கழித்துதான் செந்தில் பிறந்தார்.
காலப்போக்கில் தந்தையும் இறந்துவிட அன்னை வயதானவர் அக்கா கணவர்கள் செந்திலுக்கு சேர வேண்டிய சொத்தையும் அபகரித்து செந்திலை சொந்த கம்பெனியில் வேலையாள் போல் வைத்துக்கொள்ள எண்ணினார்கள்.
ஆனால் செந்தில் படித்து முடித்த கையேடு அன்னையையும் அழைத்துக்கொண்டு தனியாக வந்தவர் தந்தை அவன் பெயரில் போட்டு வைத்திருந்த பணத்தைக் கொண்டு நண்பன் சங்கரனோடு சேர்ந்து கட்டுமான நிறுவனம் ஆரம்பித்தார். இரு நண்பர்களின் பெயரின் முதல் எழுத்தைக்கொண்டு எஸ்,எஸ் கான்ஸ்டக்க்ஷன் கம்பனி என்று பெயரும் இட்டிருந்தனர்.
பணம்…. பணம் இருந்தால்தான் மதிப்பு. பணம் இருந்தால் தான் மரியாதை. பணம் இருந்தால் தான் உறவுகள். பணம் இருந்தால் மட்டும்தான் எல்லாம் எனபதை உணர்ந்து கொண்டார்.
அதற்கு ஏத்தது போல்தான் அக்காளும் ஒட்டி உறவாட காத்துக்கொண்டு இருந்தனர். அன்னை சொல்லிப் பார்த்தும் செந்தில் அவர்களோடு எந்த உறவையும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.
தொழிலை முன்னேற்ற வேண்டும் என்று இருந்து விட்ட செந்திலுக்கு திருமணத்தில் பெரிதாக பிடித்தமும் இருக்கவில்லை. நண்பனின் வற்புறுத்தலின் பெயரில்தான் திருமணமும் செய்துகொண்டார். அதுவும் சாதாரண ஒரு குடும்பத்துப் பெண்ணான மங்கையை. அவருடைய இன்றைய நிலைமைக்கு பணக்கார வீட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிந்த போதும் மங்கையை தேர்ந்தெடுத்தார்.
மங்கைக்கு ஒரு அண்ணண் வசதி ரொம்பவும் குறைவு. செந்திலின் வசதிவாய்ப்பை பார்த்து அவரே ஒதுங்கிக்கொள்ள செந்திலும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. மங்கையோடு அலைபேசி தொடர்பு மட்டும். வீட்டுக்கெல்லாம் வரவும் மாட்டார்.
கல்யாணமாகி அடுத்த வருடமே! அகல்விழி பிறந்திட செந்திலின் உலகம் மகள் மட்டும் என்றாகிப் போனாள். அவளின் ஒவ்வொரு அசைவு முதற்கொண்டு எல்லா சைகையிலும் செந்தில் இருந்தார்.
“உலகத்துல இல்லாத அப்பா பொண்ணு” என்று மங்கை நொடித்தாலும் உள்ளுக்குள் சந்தோசம் மட்டும்தான்.
“சாப்டியாடி” அன்னை யாழ்மங்கை வழிமறிக்க
“அதெல்லாம் காலேஜ்ல போய் சாப்பிடுகிறேன்மா” பதில் சொல்லும் பொழுதே! முகத்தில் அப்படி ஒரு வெக்கம்
அர்ஜுனை நினைத்தாலே! அகல்விழிக்கு பசி, தூக்கம் மறந்து விடும், அது அந்த வயதுக்கே! ஆனா மயக்கம். காலையில் நேரம் சென்று அரக்கப்பரக்க காலேஜுக்கு செல்ல வருபவளுக்கு சாப்பிட நேரமில்லை என்பதை விட சாப்பிட தோன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தாய் அறியாத சூழா? மகளின் கன்னக்கதுப்பை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டு “நல்லா சாப்பிடுவ போ.. இந்தா இதுல சூடா எடுத்து வச்சிருக்கேன். அர்ஜுனோட சேர்ந்து சாப்பிடு” மகளின் மனதை நன்கு அறிந்து வைத்திருந்த அன்னையாகவும் அவள் உடல்நிலையில் கவனத்தை வைத்தும் மறக்காமல் சாப்பாட்டைக் கட்டிக்கொடுத்து விடுவாள் யாழ்மங்கை.   
“மருமகனை இப்போவே! காக்கா புடிக்கிறியா?” குமார் சிரிக்க
“லவ் யு மம்மி” அன்னையின் கன்னத்தில் முத்தமிட்ட அகல்விழி காரில் ஏறி காலேஜை நோக்கி பறந்திருந்தாள்.
செந்தில்குமாரும் அர்ஜுனின் அப்பா சங்கரவர்மாவும் தொழில் தோஸ்த். அதனால் சின்ன வயதிலிருந்தே இவர்களும் பிரெண்ட்ஸ். வீட்டில் இவர்கள் இருவருக்கும் பேசி முடிக்கலாமே! என்ற ஒரு பேச்சு இருக்க அர்ஜுனுக்கு ஒரு அக்கா ஒரு அண்ணா சோ பேச்சு பேச்சாகவே! நிற்கிறது.
“என்னங்க கல்யாண பேச்சையெடுத்து  ஆறு மாசத்துக்கு மேலாகுது” மங்கை சொல்லி முடிக்கவில்லை.
“அதுக்கு இப்போ என்னங்குற? இன்னும் ரெண்டு பேருமே! படிக்கிறாங்க, படிச்சி முடிஞ்சி தொழிலையும் பார்க்கட்டும் அப்பொறம் கல்யாணம் பண்ணிக்கட்டும். அந்த பக்கம் அதீசன், அனன்யா கல்யாணம் நடந்திடும்” என்றுவிட
கணவன் புரியாமல் பேசுகிறாரே! என்று பெண்ணை பெற்ற அன்னையாக “கல்யாணம் நடக்குறப்போ நடக்கட்டும். முதல்ல ஊரைக்கூட்டி நிச்சயதார்த்தமாவது பண்ணனுங்க” மங்கை விடாப்பிடியான குரலில் சொல்ல
அவளை வினோதமாக பார்த்த செந்தில் “என்ன நீ சங்கரன் கொடுத்த வாக்க காப்பாத்த மாட்டான் என்கிறது போல பேசுற? இல்ல அர்ஜுன் தான் விழி கழுத்துல தாலி கட்டாம விட்டுடுவானா? நான் பார்த்து வளர்ந்து புள்ள டி அவன். சின்ன வயசுல இருந்தே! ரெண்டு பேரும் எப்படி பழகுறாங்க, அவங்க ரெண்டு பேரும் சேரணும்னு தானே! இந்த முடிவை எடுத்தோம். அதுவும் அவங்க கிட்ட கேட்டு அவங்க சம்மதம் சொன்ன பிறகுதானே! எடுத்தோம். என்னமோ! நாம எடுத்த முடிவை பசங்க மேல திணிக்கிற மாதிரி பேசுற?” இப்போ நீ சொல்லுறதுதான் சரியில்ல படிப்பு முடியட்டும். அனன்யா கல்யாணம் நடந்தா நிச்சயதார்த்தத்தை பத்தி பேசலாம். அது வரைக்கு. வாய மூடிக்கிட்டு இரு”
செந்திலுக்கு மங்கையின் அச்சம் புரியவில்லை. மணமேடைக்கு வந்தே! பல திருமணங்கள் நின்றிருக்க, வாய்ப் பேச்சாக இருக்கும் இவர்கள் திருமணம் நின்று விடாது என்று என்ன நிச்சயம். மகள் வேறு மனதில் இவ்வளவு ஆசைகளை வளர்த்து வைத்துக்கொண்டு இருக்கின்றாள். நாளை பின்ன இந்த திருமணம் நடக்காது என்று வந்தால் அவள் நிலை. நினைக்கும் பொழுதே! சர்வமும் நடுங்கியது. கணவன் வேறு புரியாது பேசுகிறார். மனம் குழம்பித்தவிக்க, பூஜையறையில் தஞ்சமடைந்தாள் மங்கை.
காரில் பறந்துக்கொண்டிருந்த விழியின் எண்ணங்களில் அர்ஜுன் மட்டும்தான். சின்ன வயதிலிருந்தே! அர்ஜுனை தெரியும், பிடிக்கும். நல்ல நண்பன் கணவனாக அமைந்தால் வாழ்க்கை இனிமைதான். அவனை தினமும் சந்தித்தாலும் ஒவ்வொரு நாளும் புதியநாளாக அவளுக்கு தோன்றுவது காதலால் மட்டும்தான் என்பதை நன்கு உணர்ந்திருந்தாள் விழி.
சங்கரவர்மா பணத்திலையே! பிறந்து வளர்ந்தவர். கஷ்டம் என்பதை கடுகளவேனும் காணாதவர். குடும்பத்தில் ஒரே வாரிசு என்பதால் செல்லப்பிள்ளையும் கூட.
அர்ஜுனின் தந்தை சங்கரவர்மா எவ்வளவுக்கெவ்வளவு சக்ஸஸ்புல் பிஸ்னஸ் மேன் என்று பெயர் எடுத்தாரோ! அதற்கு முழுக்காரணமும் அர்ஜுனின் அன்னை வாகைகொடி. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கின்றாள் என்பது உண்மையாயின் சங்கரனின் வெற்றிக்கு பின்னால் இருப்பது வாகை மட்டுமே! 
பிறப்பிலே பணக்காரர் என்றாலும் அதை இரட்டிப்பாக்க உறுதுணையானது மனைவி என்பது சங்கரனின் வாதம்.
இத்தனைக்கும் வாகை குடும்பத்தலைவிதான். வீட்டுப் பொறுப்பு, வீட்டை பராமரிப்பது மொத்தமும் வாகைதான். சங்கரன் வீட்டுக்கு வந்தால் குழந்தைகளை கூட தொந்தரவாக நினைக்கக் கூடாதென்று சோர்வாக வீடு வரும் கணவனிடம் அனுப்ப மாட்டாள். அனுப்ப குழந்தைகள் விழித்திருப்பதில்லை அது வேறு கதை. கணவன் வீடு வந்தால் கணவனை மட்டும்தான் கவனிப்பாள். குழந்தைகளை கூட வேலையாட்களிடம் ஒப்படைத்து விடுவாள். அவ்வளவு பக்தி. சங்கரனுக்கு வாகை என்றால் உயிர் வாகைக்கு அர்ஜுன் என்றால் உயிர் கடைக்குட்டியல்லவா.
வாகையும் பணக்கார வீட்டுப் பெண்தான். அதனால்தான் என்னமோ! சங்கரனை சரியாக புரிந்துகொள்ளவும், வீட்டையும் கவனித்துக்கொள்ளவும் முடியும் என்பது சங்கரனின் கருத்து.
அர்ஜுனின் அண்ணன் அதீசன் வர்மா ஆறடியில் பார்க்க சினிமா ஹீரோ மாதிரி இருப்பவன் தான். தந்தையோடு சேர்ந்து பிஸினஸை கவனித்துக்கொள்வதில் நேரம் செலவிடுவதால் வேறு எதிலும் நாட்டமில்லை. தந்தையிடமிருக்கும் சொத்தை இரட்டிப்பாக்கினால்தான் தான் ஜெயித்ததாக எண்ணி வேலை செய்கிறான். அர்ஜுனின் பார்வையில் வாழ்க்கையை என்ஜோய் பண்ண தெரியாத ரோபோ.
அக்கா அனன்யா தந்தையின் காசை எவ்வாறு செலவழிப்பது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவாள். காலேஜ் முடித்த கையேடு ஷாப்பிங், சுற்றுலா என்று வாழ்க்கையை என்ஜோய் பண்ணுவதாக சுற்றிக்கொண்டு இருக்கிறாள். என்னதான் அக்கா என்ஜோயின் டைப் என்றாலும் அர்ஜுனுக்கு அக்காவை பிடிக்காது. அதுக்கு காரணம். அவன் செய்யும் அனைத்திலும் தலையிடுவதே! கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார் என்பது போல் தினமும் அவளால் அர்ஜுனுக்கு பஞ்சாயத்து நடக்கும். அதனால் அக்காவும், தம்பியும் சதா முட்டி மோதிக் கொண்டுதான் இருப்பர்.
இன்னக்கி என்ன பஞ்சாயத்துனு தெரியலையே!
“டேய் நேத்துதான் பார்ட்டினு பணம் வாங்கிட்டு போன இன்னக்கி என்ன டா பார்ட்டி” அதீசன் கையில் கத்தை பணத்தை வைத்துக்கொண்டு கேக்க,
அது போன மாசம் இது இந்த மாசம் என்பது போல் “அதான் அது நேத்துன்னு நீயே சொல்லிட்டியே! கொடு” என்று அர்ஜுன் பணத்தை பறிக்க முயல
பணத்தை பறித்த அனன்யா “எனக்கென்னமோ! இவன் ட்ராக்ஸ் இல்ல வேற ஏதாவது எடுக்குறானோன்னு சந்தேகமா இருக்கு” என்று அர்ஜுனின் கையை இழுத்து தான் அணிந்திருந்த கண்ணாடியை சரி செய்தவாறு நன்றாக பார்த்தவள் ஊசிகள் ஏற்றப்பட்ட தடங்கல் எதுவும் இல்லாததால் அவன் காற்சட்டைக்குள் கையை விட
“அட சீ கைய எடு வளர்ந்த பையன் நானு. என் பாக்கெட்டுல கைய விடுற அறிவில்லை. கண்ட எடத்துல கைப்பட்டுட போகுது. மொதல்ல பணத்தை கொடு” என்று கத்த
கண்ணாடியை சரி செய்தவாறே “கூல் டா தம்பி சின்ன வயசுல உன்ன ட்ரெஸ் இல்லாம எவ்வளவோ! பார்த்துட்டேன். ஆக்சுவலி நீ ட்ரெஸ் இல்லாம தான் வீட்டுக்குள்ள திரிவ. எனக்கு ஒன்னும் வெக்கமா இல்ல. நான் பார்த்தது கூட பரவால்ல. அகல் வேற பல தடவ பார்த்திருக்கா” என்று சத்தமாக சிரிக்க அக்காவை நன்றாக முறைத்த அர்ஜுன் ஓங்கி அவள் தலையில் கொட்டியவன் பணத்தை பிடிங்கிக் கொண்டு செல்ல
“மீ… இந்த அஜ்ஜு என்ன அடிச்சிட்டான்” என்று புகார் வாசித்தவாறு அன்னையை தேடி செல்ல
“வாடி காலையிலையே! ஆரம்பிச்சிட்டீங்களா? நீ அக்காவா? அவன் அண்ணானானே! எனக்கு சந்தேகமா இருக்கு. எப்போ பார்த்தாலும் அவன் கிட்ட அடி வாங்கி கிட்டு நிக்கிற. போ.. போ உள்ள ஏதாச்சும் வேல இருந்தா பாரு” என்று துரத்திய வாகை சாப்பாட்டு மேசையில் காலை உணவுகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“மீ.. நீங்க அவனுக்கே சப்போர்ட் பண்ணுங்க. இருங்க டேடி வரட்டும் கம்பிளைன் பண்ணுறேன்” கண்ணாடியை கழட்டியவள் கண்ணைக் கசக்க
“நீ அழாம போ பேபி மா… இனி நான் அவனுக்கு காசு கொடுக்க மாட்டேன்” என்று அதீசன் சொல்ல
முகம் மலர்ந்தவள் “தேங்க்ஸ் அதீ” என்று சிட்டாக பறந்திருந்தாள்.
அனன்யா ஒரு வளர்ந்த குழந்தை. பணத்திலையே! வளர்ந்ததால் நல்லது, கெட்டது எதுவும் தெரியவில்லை. அர்ஜுனோட தினமும் சண்டை போடுவதும், அதீசன் சமாதனப் படுத்துவதும் அன்றாடம் நடைபெறுவதுதான். அதே அதீசன் மீண்டும் அர்ஜுனுக்கு பணம் கொடுக்கும் பொழுது கொடுக்க மாட்டேன் என்று சொன்னதை கூட மறந்து இருப்பாள். அவள் குடும்பம்தான் அவள் குறுகிய வட்டம் அதனுள்தான் அவள் வாழ்க்கை சக்கரம் சுழன்றுக்கொண்டு இருக்கின்றது.
“அம்மா….. அப்பா எங்க?” சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவாறு அதீசன் கேக்க
“அடுத்த வாரம் அனன்யா பர்த்டே வருதில்ல பார்ட்டி ஏற்பாடு செய்யணும்னு சொன்னாரு அது சம்பந்தமா பி.ஏ. கிட்ட மும்முரமா போன்லதான் பேசிகிட்டு இருக்காரு. நீ சாப்பிடு”
“ஒஹ்… அதான் பேபிமாவ துரத்தினீங்களா? அவ பசி தாங்க மாட்டாளே!” என்ற அதீசன் பிரெட்டை பிளேட்டில் வைத்துக்கொள்ள
“அவளுக்கு சாப்பாடு அறைக்கே! அனுப்பிட்டேன். நீயும் காஞ்சி போன பிரெட்டை சாப்பிடாம நாலு இட்டிலிய உள்ள தள்ளிட்டு போ.. தெம்பா வேல பார்க்க வேணாமா? அப்படியே! கல்யாணம் பண்ணுறது பத்தியும் கொஞ்சம் யோசிடா…” வாகை கெஞ்சலாக சொல்ல
“இந்த ப்ரொஜெக்ட் மட்டும் சக்சஸா முடியட்டும் மா.. யோசிக்கிறேன்”
“போன தடவையும் இப்படித்தான் சொன்ன… இப்போவே! இருபத்தி எட்டு வயசாகுது. இப்போ பொண்ணு பார்த்தாதான் குடும்பத்துக்கு ஏத்தா மாதிரி பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண முடியும். ஒரு வருஷமோ! ரெண்டு வருஷமோ! போனா முப்பது ஆகிடுமே டா..” வாகை கவலையாக சொல்ல
ஆணுக்கு வயதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று அன்னையை ஒரு பார்வை பார்த்தவன் “முதல்ல பேபிமாக்கு பார்த்தா என்ன?” அன்னையின் தொன தொனயிலிருந்து தப்பிக்க தங்கையை கோர்த்து விட
“அவ குழந்தை மாதிரி இருக்கா.. வீட்டோட மாப்புளத்தான் பார்க்கணும்” என்று பெருமூச்சு விட்டாள் வாகை.
“இன்னைக்கும் அஜ்ஜு சாப்பிடாம காலேஜ் போய்ட்டானா? ஆமா… அனி எங்க?” என்றவாறு சங்கரன் வந்தமர
“பேபிமா அவ ரூமலையே! சாப்பிடுறாளாம். அஜ்ஜு என்னைக்கி வீட்டுல சாப்பிட்டான். எப்போதும் காலேஜ் சாப்பாடுதான்”  என்று அதீசன் சொல்ல
“காலேஜ் சாப்பாடில்ல. மங்கை சமைச்சி விழி கைல கொடுத்து விடுறா. மூத்தவனுக்கு கல்யாணம் பண்ண முன்னாடி சின்னவனுக்கு கல்யாணம் பண்ண வேண்டி இருக்குமோ! முருகா?” வாகை அலுத்துக்கொள்வது போல் சொல்ல 
“ஆமா அதீசன் உனக்கும் இப்போ பார்த்தா தான் இன்னும் ஒரு வருஷத்துலயாவது கல்யாணம் பண்ண சரியா இருக்கும். அனன்யாக்கு வேற பார்க்கணும். விழி ஒரே பொண்ணு ரொம்ப நாள் காத்திருக்க சொல்ல முடியாது, கூடாது” என்று சங்கரன் சொல்ல அதீசன் அன்னையை முறைக்கலானான்.
அன்னை குதர்க்கமாக பேசி அவனை தந்தையிடம் கோர்த்துவிடுவதை வேலையாக வைத்திருக்கிறார் என்று அவன் எண்ணம்.
மகனின் முறைப்பைக் கண்டுகொள்ளாது நாலு தராகரிடம் பெண் பார்க்க சொல்லி இருப்பதை கணவனிடம் கூறிய வாகை. “ஜோசியர் வேற இவனுக்கு திடீரென்ருதான் கல்யாணம் நடக்கும்னு சொல்லுறாரு. எவ கழுத்துல தாலிய கட்டி கூட்டிட்டு வருவானோனு எனக்கு பாக்கு பக்குனு அடிக்குது. அதுக்கு பரிகாரமா தங்கத்தால தாலி செஞ்சி அம்மன் கோவில பூஜா செஞ்சி தானம் பண்ண சொல்லுறாரு” மூச்சு விடாமல் பேச
“அப்பா… அந்தாளு காசு பறிக்க ஏதேதோ! சொல்லுறாரு அம்மா எல்லாத்தையும் நம்புறாங்க. நீங்க நம்பாதீங்க ப்பா…” அதீசன் முகம் இறுக்கப் பேச
“அதீசன். இது வாழ்க்கை பிரச்சினை. கல்யாணம் ஒன்னும் விளையாட்டு கிடையாது. புரிஞ்சிக்க” என்று மகனை பார்த்து சொல்லியவர்
மனைவியை பார்த்து “தாலியெல்லாம் எப்படி தானமா கொடுக்குறது?”
“அதுக்கு நாம ஒரு பத்து பேருக்காவது நம்ம செலவுல கல்யாணம் பண்ணி வச்சிடலாம்க. பூஜையும் நடந்த மாதிரி இருக்கும், தாலி தானம் பண்ணா மாதிரியும் இருக்கும்” வாகை பெருமிதமாக சொல்ல
“கோவில் குளம் என்று செலவை இழுத்து வைங்க” அதீசன் அன்னையை கடிய
“நீயே பார்த்து செய். என்னைக்கின்னு கொஞ்சம் முன் கூட்டியே! சொல்லிடு நாங்க எங்களை ப்ரீ பண்ணிக்கிறோம்” என்ற சங்கரன் கைகழுவ எழுந்து செல்ல வாக்கையும் பின்னாடியே! சென்றாள். 
  திருமணம் என்றதும் அதீசனுக்கு அவள் முகம்தான் கண்முன் வந்து சென்றது. பெயர் கூட தெரியாது, யார் அவள் என்று கூட தெரியாது. எங்கே இருக்கிறாள் என்று கூட தெரியாது. அவளுக்கு திருமணம் கூட ஆகி இருக்கும். சில நிமிடங்கள் பார்த்த அவள் முகம் சதா இம்சிப்பது ஏன் என்றும் புரியவில்லை. அவளை மீண்டும் சந்திக்கவும் வழி தெரியவில்லை.
அவளை முதன் முறையாக சந்திந்தித்தது ஊட்டியில் ஒரு ரோட்டிரத்தில் இருந்த பூக்கடையில் மீட்டிங்கு வந்தவன் வண்டியிலிருந்தவாறே அந்த கடையின் அருகில் நிறுத்தி லெவேண்டாரா மலர் போக்கை ஒன்றை கேட்க அவள்தான் எடுத்துக்கொடுத்திருந்தாள். பூக்கடையின் வாசலில் பூக்களின் ராணியாக அன்று மலர்ந்த மலர் போல் இருந்தவளின் முகம் அதீசனின் மனதில் உடனே! ஒட்டிக்கொண்டாலும், அவன் இருந்த பரபரப்பில், காசை கொடுத்து விட்டு வந்து விட்டான்.
எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு தூங்க போகும் நேரம் கண்முன் வந்த அந்த முகத்தை எங்கே பார்த்தேன் என்று சிந்தித்தவன் காலையில் பார்த்த பூக்கடைக்காரி என்று சிரித்துக்கொண்டு மென்னகையினூடாகவே! தூங்கியும் இருந்தான்.
தினம் அவள் முகம் அவன் கண்முன் வர “ஏன் என்னை தொல்லை செய்கிறாய் பெண்ணே!” என்று அவளை தேடிச்சென்றவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி அவள் பூக்கடைக்காரியே! இல்லயாம். அவளும் அன்று பூ வாங்க வந்தவளாம். கடையில் இருந்த பெண் கழிவறைக்கு சென்றதால் கொஞ்ச நேரம் அவள் கடையை பார்த்துக்கொண்டாளாம்.
அவளை எங்கே! என்று அதீசன் தேட? ஊட்டி அவள் சொந்த ஊரா என்று கூட தெரியாது? இருந்தும் தேடி பார்த்து விட்டான் கண்டு பிடிக்க முடியவில்லை. மூன்று வருடங்கள் கடந்து விட்டிருந்தது. இன்னும் அவன் கண்முன் வந்து இம்சித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்.
அலைபேசியடிக்கவே! சிந்தனையிலிருந்து விடுபட்டவன் அதை இயக்கி பேசியவாறு நிறுவனத்துக்கு கிளம்பி இருந்துதான்.

Advertisement