Advertisement

அத்தியாயம் 19
“பயணிகளின் கவனத்திற்கு சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமாரி செல்லும் வண்டி எண் 12633  இன்னும் சற்று நேரத்தில் திருநெல்வேலி சந்திப்பில் முதலாவது பிளாட்போர்மில் வந்தடையும்”  என்று ஒலிபெருக்கியில் ஒலித்த அறிவிப்பைக் கேட்டு தனது பயணப்பையை சுமந்துக்கொண்டு முன்னால் நடக்க ஸ்டீவை இடித்து தள்ளி விட்டு ஒரு இளம் பெண் அவசர அவசரமாக பிளாட்போமை நோக்கி ஓடுவதைக் கண்டவன்
“ஹப்பா நேத்து போக வேண்டிய பயணத்தை இன்னக்கி போறா போல, இந்த மாதிரி அவசரகாரங்களுக்கு மத்தில நாம சிக்கினா சின்னாபின்னமாக வேண்டியதுதான்” என்று புலம்பியவாறே மெதுவாக நடந்து ரயிலுக்காக காத்திருந்தான்.
சொன்ன நேரத்துக்கு ரயில் வந்து நின்றது. “சொன்ன நேரத்துக்கு கொண்டு வந்து நிறுத்துவான். ஆனா வண்டிய கிளப்புவானா? கிளம்பினாலும் சொன்ன நேரத்துக்கு போய் சேருவானா?” ஸ்டீவின் மைண்ட் வாய்ஸ் கேள்வி எழுப்ப அவன் ரயில் பயணத்தை வெறுக்கக் காரணமே! இதுதானே! நோ பங்சுவாலிட்டி.
அலைபேசியில் தான் ஒரு பச்சை தமிழன் என்று நிரூபித்துக்கொண்டு ஸ்டீவும் தான் செல்ல வேண்டிய முதலாம் வகுப்புக்குள் நுழைய அவனை இடித்து விட்டு சென்ற அந்த இளம் பெண் அமர்ந்திருந்தாள். ஒரு நொடி ஜெர்க் ஆனவன் அலைபேசியை அனைத்து விட்டு, அவளைக் கண்டுகொள்ளாது, பயணப்பையை அவளுக்கு எதிர்புறமுள்ள சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டான்.
முன்னாடி அமர்ந்திருந்தவளோ! ஸ்டீவை ஆராய்ச்சி பார்வை பார்க்க,
“என்ன இவ நம்மள குறுகுறுன்னு பாக்குறா?” என்று ஸ்டீவ் நினைத்தவாறு அவளை பதிலுக்கு நன்றாக பார்க்கலானான்.
நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பாக்காவிட்டால் நானும் பாக்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்
உயிரை விடுவேன்…..
“ஒய்.. வெள்ளைக்காரன் மாதிரி வேஷம் போட்ட வெள்ளாடு! கொஞ்சம் இங்க பாரு”
திகைத்த ஸ்டீவ் “என்ன இவ முன்ன பின்ன தெரியாதவன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுறா? கொழுப்புதான்” என்று நினைத்தவாறு “நம்ம ஊருல பிறந்த கருப்பு பன்னி சொல்லு என்ன மேட்டரு” என்றான்.
கோபம் புசுபுசுவென ஏற “ஏய் யாரைப்பார்த்து கருப்பு பன்னினு சொன்ன?” என்று எகிற
சுற்றியும் முற்றியும் பார்த்தவன் “இங்க வேற யாரும் இருக்காங்களா? உன்னைத்தான். பன்னினு சொன்னதுக்கு கோபப்படுறியா? இல்ல கருப்புனு சொன்னதுக்கு கோபப்படுறியா?” என்று விட்டு சத்தமாக சிரிக்கலானான்.
அவள் ஒன்றும் கருப்பு இல்ல. மாநிறம் தான் அவனோடு ஒப்பிடுகையில் நிறம் குறைவு அதைத்தான் கருப்பு என்கின்றான் என்பது அவளுக்கு நன்றாக புரிந்தது. அதை பற்றி வாக்குவாதம் செய்ய அவள் விரும்பவில்லை.   
பற்களை நறநறவென கடித்தவள் “இங்கிலீசுக்காரன் மாதிரி கோட்டு சூட்டு போட்டு யார ஏமாத்த கிளம்பி இருக்க? தோள் கலரும் கண்ணோட கருவிழியும் ஆங்கிலேயர் மாதிரி இருந்தா? முடியையும் கலர் பண்ணிக்குவியா? உன்னயெல்லாம் தெருநாய் கடிக்காம இருக்குதே!” கண்களை விரித்து பொய்யாய் ஆச்சரிப்பட்டாள்.
அவள் கண்ணழகில் கரைந்தவன் தலையை உலுக்கிக் கொண்டு “என்ன சொல்லுறா? இவ?” புரியாது முழித்தவன் “இப்போ எதுக்கு இவ நம்ம கூட மல்லு கட்டுறா? தனியா வேற இருக்கா கத்தி கூச்சல் போட்டா போலீஸ் கேஸ்னு அலைய வேண்டி இருக்குமே!” அவன் மனம் சொல்ல “ஏன் மா உனக்கு நான் போட்டிருக்கிற துணியும் என் தலைமுடியும்தான் பிரச்சினைனா என்னால ஒன்னும் பண்ண முடியாது. நீ நினைக்கிற மாதிரி என் தலைமுடி ஒன்னும் கலர் பண்ணது கிடையாது. இயற்க்கையாவே! தங்க நிறம்தான்” என்றவன் தலையை வளைத்து மண்டையை காட்டி வெள்ளைக்கொடியை பறக்க விட்டான்.
அவன் முடிக்கு கலரடிக்கவில்லை என்று புரிய “உண்மையில் இவன் வெள்ளைக்காரனா? இவ்வளவு அழகாக தமிழ் பேசுறான்?” ஒரு நொடி குழம்பினாள் அக்ஷரா.
ஆம் அவள் அக்ஷரா ஆத்மநாதன். டில்லியில் லா காலேஜில் படிப்பை முடித்துக்கொண்டு சென்னையில் ஜூனியர் லாயராக பிரபல வக்கீல் லதா சுப்ரமணியத்திடம் பணியாற்றுகிறாள்.
சிறு வயதில்லையே! தந்தை அன்னையை ஏமாற்றியது. தந்தை மனம் திருந்தி அன்னையிடம் மன்னிப்பு கேற்க அன்னை மன்னித்து குடும்பத்துக்காக ஏற்றுக்கொண்டிருந்தார். இருந்தாலும் மனதில் வடுவாக இன்னும் அந்த நிகழ்வு ஆறது இருக்க, பெண்களுக்கு எதிராக ஆண்கள் செய்யும் செயல்களை தட்டிக்கேட்க வேண்டும் என்பதற்காக வேண்டியே! லா படித்தவள் அக்ஷரா.
ஒரு கேஸ் விஷயமாக திருநெல்வேலி செல்ல வேண்டியதால் தனியாக பயணிக்க ஸ்டீவை பார்த்த நொடி சந்தேகம் வந்தது. பார்க்க டாம் குரூஸ் மாதிரி இருக்கான். என்ன சென்னை கூவ நதி வாயில் வாட்டர் போல்ஸ்சா வழியிது. ஆம் பச்சை பச்சையாக திட்டியவாறுதான் ட்ரைனுக்குள் வந்தவன் அக்ஷராவைக் கண்டு கப்சிப் என்றானான்.
ஸ்டீவை இன்று இரவு ட்ரைனில் வர சொல்லி டிக்கட் போட்டு விட்டு அதீசன் இன்று காலையில்தான் மஞ்சரியோடு ஊருக்கு கிளம்பி இருந்தான்.
வாகை கூட கல்யாணம்தான் யாருக்கும் தெரியாம நடந்திருச்சு ரிஷப்ஷனாவது வைக்கலாம் என்று சொல்ல
“நோ மாம் ஏற்கனவே! டேட் கோபத்துல இருக்காரு. இந்த நேரத்துல இத பண்ணா இன்னும் டென்சனாவாறு. கூடிய சீக்கிரம் சொந்த பந்தங்களை கூப்பிட்டு உன் மருமகளுக்கு வளைகாப்பு பண்ணிடலாம்” என்று அதீசன் சொல்ல
“டேய் அதீ நான் பாட்டியாக போற நல்ல விசயத்த இப்படி சப்ரைஸா சொல்லுறியே!” என்று துள்ளிக் குதிக்க மஞ்சரி மிரண்டாள்.  
“ஐயோ மம்மி ஓவராக்ட்டிங் பண்ணாதீங்க, கூடிய சீக்கரமானா ஒரு வருஷமோ! ரெண்டு வருஷமோ! ஆகலாம். அதுக்குள்ள டேட் மனசு மாறுவாரில்ல” என்றான் அதீசன்.
கழுத்தை நொடித்த வாகை “உங்க டேட் மனசு மாறினா என்ன மறாட்டி எனக்கென்ன? நீ சீக்கிரம் நல்ல சேதி சொல்லு மஞ்சுமா” என்று இருவரையும் வழியனுப்பி வைத்திருந்தாள்.
தனக்கு ட்ரைனில் டிக்கட் போட்டதை அறிந்த ஸ்டீவ் அதீசன் தன்னை கழட்டி விட்டு தனது காதலி பென்ஸ் காரைக் கடத்திக் கொண்டு போன கோபத்தில் இருந்தவன் அதீசனை அழைக்க தொடர்பு ஏற்படுத்த படவில்லை. ரயில் வந்து நின்ற பின்தான் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்க, அவனை திட்டியவாறே வந்து அக்ஷராவிடம் மாட்டிக்கொண்டிருந்தான்.
அக்ஷராவும் போட்டிருந்த கோட்டு சூட்டுக்கு, பேசும் கூவ சென்னை பாஷைக்கும் சம்பந்தமே! இல்லை என்று புரிந்துக்கொண்டவள் அவனை தப்பாக கணித்து, எடைபோட்டு, தானாக முடிவு செய்து, அவனோடு தனியாக பயணம் செய்ய வேண்டி இருக்கும், எதற்கும் மிரட்டி வைப்போம் என்று ஆரம்பித்திருக்க, ஸ்டீவும் அவன் கைவரிசையை காட்டி இருந்தான்.
மீண்டும் ஸ்டீவின் அலைபேசி அடிக்க வாகை தான் பேசினாள் “சொல்லுங்கம்மா…” அன்பு வழியும் குரலில் பேசுபவனை ஒருநொடி ஆச்சரியமாக பார்க்க அவளை முறைத்தவன் வாகையோடு செல்லம் கொஞ்சலானான்.
“ரொம்பதான்” என்று எண்ணியவள் தனது அன்னையுடன் அலைபேசியில் உரையாட ஆரம்பிக்க ஒரு வயதான ஜோடி அந்த பெட்டிக்குள் நுழைய கூடவே! ஒரு பெண்ணும் நுழைந்தார்.
“ஸ்டீவையும் அக்ஷராவையும் மாறி மாறி பார்த்தவர் இருவரினதும் உடையை வைத்து இருவரும் கணவன் மனைவி என்று எண்ணி விட்டார் போலும்”
ஆங்கிலத்தில் தனது பெற்றோர்கள் கன்யாகுமரியில் இருக்கும் தனது அண்ணன் வீட்டுக்கு செல்வதாகவும் அன்னைக்கு கொஞ்சம் உடம்பு முடியாமல் இருப்பதாகவும், பார்த்துக்கொள்ளும்படியும் கூறியவர், சீட் மாறி அமர்ந்தால் வயதானவர்களுக்கு ஒன்றாக அமர இலகுவாக இருக்கும் என்று கேட்டுக்கொள்ள ஸ்டீவ் கல் போல் அசையாது இருக்க அக்ஷராதான் இறங்கி வரவேண்டியதாக இருந்தது.
 ஸ்டீவின் பக்கத்தில் போய் அமர்ந்தவள் உசாராக தனது ஹாண்ட் பேகை அவனுக்கும், அவளுக்கும் நடுவில் வைத்திருந்தாள்.
வண்டியும் நகர ஆரம்பிக்க, அந்த முதியவர்களும் ஒருவரையொருவர் கவனிப்பதில் பிசியாகி விட இவர்களை கவனிக்க அவர்களுக்கு நேரமிருக்கவில்லை.
இரவு ஏழு மணிக்கே! முதியவர்கள் உணவை முடித்துக்கொண்டிருந்தனர். உண்ணும் பொழுது அக்ஷரா மற்றும் ஸ்டீவை அழைக்க, “இல்ல பாட்டி நான் சாப்பிட லேட் ஆகும் நீங்க சாப்பிடுங்க” என்று அக்ஷரா சொல்ல அதையே! ஸ்டீவும் கூறி இருந்தான்
முதியவர்கள் சாப்பிட்ட உடன் தூங்க ஆயத்தமாக “பாட்டி நாங்க ரெண்டு பேரும் மேல போறோம் நீங்க கீழ தூங்குங்க” என்று அக்ஷரா ஸ்டீவிடம் கேட்காமல் அவனுக்கும் சேர்த்து கூறி இருந்தாள்.
“இல்லமா நாங்க இப்படி கீழ துண்டை விரிச்சி படுகிறோம். இல்லனா இவ விழுந்துடுவா” என்றார் அந்த தாத்தா
“கொஞ்சம் இருங்க தாத்தா” என்ற ஸ்டீவி  ஒரு போர்வையை எடுத்து அதற்க்கு காற்றை நிரப்பி அதை மெத்தையாக்கி அதை விரிப்பாக விரித்து அவர்களுக்கு கொடுக்க “கல்லுக்குள் ஈரம்” என்று பார்த்திருந்தாள் அக்ஷரா.
எட்டு மணிப்போல அக்ஷரா ப்ரெட்டும் ஜாமும் சாப்பிட, ஒன்பது மணி போல வெஜ் புலாவ் சாப்பிட்டான் ஸ்டீவ். அதன் வாசனை அக்ஷராவின் பசியை தூண்ட “பார்க்கத்தான் வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான் பண்ணுறது எல்லாம் பக்கா ரௌடி” என்று முணுமுணுக்க, அவள் மனமோ! “எது அவன் சாப்பிடுறதா?” என்று கேலி செய்தது.
ஸ்டீவ் சாப்பாட்டு விஷயத்தில் கஞ்சத்தனம் பார்க்க மாட்டான். சோறுதான் முக்கியம் என்பது போல்தான் அவன் வேலைகள் இருக்கும். ட்ரைன் ஏறும் முன் சாப்பட்டைதான் வாங்கி வைத்துக்கொண்டான்.
அதிகாலையில் யாரோ வாந்தி எடுக்கும் சத்தத்தில் கண்விழித்த அக்ஷரா ஸ்டீவ் தான் வாந்தி எடுப்பதாக எண்ணினாள். “கண்டதையும் உள்ள தள்ள வேண்டியது. அப்பொறம் ட்ரைன் போற வேகத்துக்கு வெளிய தள்ள வேண்டியது” என்று முணுமுணுப்போடு எழுந்து அமர
பாட்டி வாந்தி எடுத்துக் கொண்டிருக்க, ஸ்டீவ் அவர் முதுகை நீவி விட்டுக்கொண்டிருந்தான். அவன் உடையெல்லாம். வாந்தி எடுத்து வைத்த்திருந்தார் பாட்டி.
அக்ஷரா பதறியடித்துக்கொண்டு பாட்டியின் அருகில் வர “உன்னால பாட்டியா கூட்டிகிட்டு போய் சுத்தம் செய்ய முடியுமா?” என்று ஸ்டீவ் கேக்க அவனை முறைத்தவாறு தாத்தாவோடு பாட்டியை அழைத்துக்கொண்டு சென்றாள்.
அவனால் பண்ண முடியாமல் அவன் கேக்க வில்லை. தாத்தா என்றால் தயங்காமல் பண்ணி இருப்பான். பாட்டிக்கு சங்கடமாகு தோன்றும் என்றுதான் அக்ஷராவை கேட்டிருந்தான். அதையும் அவள் தவறாக புரிந்துக்கொண்டு முறைத்தவாறு சென்றிருந்தாள்.
பாட்டியை சுத்தம் செய்து துணி மாற்றி விட்டு வரும் பொழுது அந்த இடத்தை சுத்தம் செய்து தானும் துணியை மாறி இருந்தான் ஸ்டீவ்.
“என்ன இவன் கொஞ்சம் கூட அருவருப்பில்லாம இதெல்லாம் பண்ணி இருக்கான். ரொம்ப பாசக்கார பயதான் போல” அக்ஷராவின் உதடுகளில் கீற்று புன்னகை மலர்ந்தது.
“பாட்டி சூடா ஏதாச்சும் சாப்பிட்டா தெம்பாவீங்க” தாத்தா வைத்திருந்த பிளாஸ்க்கிலிருந்து சுடுநீரில் ஹார்லிக்ஸ் கலந்து இருவருக்கும் கொடுக்க, பாட்டியும் நன்றியோடு வாங்கிக் கொண்டார்.
தாத்தாவும் அவனுக்கு நன்றி சொல்ல “என்ன தாத்தா? என் தாத்தா பாட்டினா நான் பண்ண மாட்டேனா?” என்றான் சாதாரணமாக. அக்ஷராவின் கண்களுக்கு ஸ்டீவ் புதிய ஒருவனாக தெரியலானான்.
அதன்பின் நால்வரும் தூங்கவில்லை. பாட்டியும் தாத்தாவும் பேசியவாறே வர திருநெல்வேலியில் இவர்கள் இறங்கவேண்டியதாக இருந்ததால் அவர்களிடம் விடைபெற்று தங்களது பயணப் பைகளோடு இறங்கி நடந்து புகையிரதநிலையத்தை விட்டு வெளியே வர அதீசன் அங்கு காரோடு காத்திருந்தான்.
“யாஹூ…” என்று கத்தியவாறு ஸ்டீவ் ஓட “என்னாச்சு இவனுக்கு” என்ற பார்வையை அவன் ஓடிய திசையில் செலுத்திய அக்ஷராவுக்கு கையை கட்டிக்கொண்டு வரவோரையும் செல்வோரையும் வேடிக்கை பார்க்கும் மஞ்சரி கண்ணில் விழ, “இவங்க…” என்று யோசித்தவள் அடையாளம் கண்டுகொண்டு இன்முகமாக அவளருகில் சென்றிருந்தாள்.
“ஐயோ மை டார்லிங்… ஐ மிஸ் யு..” என்று காருக்கு ஸ்டீவ் முத்தம் கொடுப்பதை வினோதமாக பார்த்தவாறு வந்த அக்ஷரா “பார்த்து சார் உங்க டார்லிங் சூடா இருந்தா உங்க உதடு பஞ்சராகும்” என்று சொல்ல அதீசன் சத்தமாக சிரிக்கலானான்.
ஸ்டீவ் அவளை முறைக்கும் நேரம் அவள் மஞ்சரியின் புறம் திரும்பி “நீங்க வாரக மஞ்சரி தானே!” என்று கேக்க
“நீங்க?” என்று மஞ்சரி யோசனைக்குள்ளாக
“ஐம் அட்வாகேட் அக்ஷரா ஆத்மநாதன். அட்வாகேட் லதா சுப்ரமணியத்தோட ஜூனியர்” என்று சொல்ல
“ஓஹ்.. அதான் உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது” என்றாள் மஞ்சரி.
அதீசன் யோசனையாக “யார் இவங்க உனக்கு இவங்கள ஏற்கனவே! தெரியுமா?” என்று மஞ்சரியை ஏறிட மஞ்சரி அவனிடம் எப்படி சொல்வதென்று தயங்கினாள்.
அவளின் தயக்கமும், நெற்றி வட்டில் இருந்த குங்குமமும் அவளுக்கு திருமணமான செய்தியை அக்ஷராவின் கண்கள் உள்வாங்கிக்கொள்ள “ஒரு கேஸ் விஷயமாக இவங்கள நான் சந்திச்சேன் சார். வேற ஒண்ணுமில்ல” என்று புன்னகைக்க
அதீசனுக்கு மனைவி தயங்கியது எதற்காக என்று புரிய சட்டென்று அவனது விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டியவன் “உங்க கார்ட் கிடைக்குமா?” என்று கேட்க அக்ஷராவும் அவளது கார்டை கொடுத்து விட்டு “அவரோட நம்பர் கிடைக்குமா?” என்று ஸ்டீவை ஏறிட்டாள்.
அவனோ! காரரோடு பேசிக்கொண்டிருக்க, அதீசன் தனது கார்டில் இருக்கும் முதல் எண்ணே! ஸ்டீவுடையது தான் என்றவன் அக்ஷராவிடம் விடைபெற்றுக்கொண்டு ஸ்டீவுக்கு வண்டியை எடுக்குமாறு கூறியவன் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பி இருந்தான்.
“முத்துப்பாண்டிய பத்தி விசாரிக்க சொன்னேனே!” என்று அதீசன் ஆரம்பிக்கும் பொழுது அவனை மிரண்ட பார்வை பார்த்த மஞ்சரியை கண்டுகொள்ளாது ஸ்டீவுடன் பேசலானான் அதீ.
அதீசன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் முத்துப்பாண்டி அடங்குவான் என்று மஞ்சரி நினைத்து அமைதியாக இருந்தாள் என்றால் அதீசன் அவ்வாறு நினைக்கவில்லை. எதிராளியின் பலம், பலவீனம் அறிந்துதான் மோதவேண்டும்.
மஞ்சரியின் குடும்பத்தை பழிவாங்க மட்டும் எண்ணுபவன் குடும்பத்தையையே! கொலை செய்து விட முடியும், ஆனால் அவன் அதை செய்யவில்லை. தங்கராசுவுக்கு தொழிலில் பிரச்சனைகளை உண்டு செய்கிறான். மஞ்சரியின் கேரக்டரை களங்கப்படுத்துகிறான். இவற்றுக்கு பின்னால் இருக்கும் நோக்கம் என்ன? அதுவும் அவன் ஊரைவிட்டு வந்து இங்கு தாங்கிக்கொண்டு.
அவனை பற்றின முழுத்தகவல்களையும் அறிந்த பின்தான் எதுவானாலும் செய்ய முடியும். மஞ்சரிக்கு தெரியாதவைகளைக்கூட டிடெக்டிவ் வைத்து கண்டு பிடிக்கலாம் என்றுதான் ஸ்டீவுக்கு பொறுப்பை கொடுத்திருந்தான்.
மஞ்சரியிடம் மறைக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. அதனால்தான் அவள் முன்னிலையில் பேச்சை ஆரம்பித்தான். அவள் மிரண்ட பார்வையையும் கண்டுகொள்ளவில்லை.
“அவனுக்கு அப்பா சொத்துனு ஒரு கல்குவாரி இருக்கு. அதுல வரும் வருமானம்தான். சொந்தமா வீடு இருக்கு. வீடுன்னு சொல்லுறத விட மினி பங்களானு சொல்லலாம்” ஸ்டீவ் சொல்ல
“தண்ணி. கஞ்சா பொம்பள சகவாசம்” அதீசன் அடுக்கிக்கொண்டு போக
மஞ்சரியை திரும்பிப் பார்த்த ஸ்டீவ் சொல்லலாமா? வேண்டாமா? என்று தயங்க
“குடிப்பான். அளவாத்தான். நிதானம் தவற மாட்டான். வீட்டுலயே! ஒருத்திய வச்சிருக்கான்” என்றாள் மஞ்சரி. அவள் முகம் இறுக்கி இருந்தது.
“ஓஹ்..” என்ற அதீசன் அமைதியானான். மஞ்சரியின் உணர்வுகளை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
ஒரு பெண் காதலித்து திருமணம் புரிந்தாலும் சரி வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி தன் கணவனிடம் எதிர்பார்ப்பது முழுமையான அன்பை மட்டும்தான்.
தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்று கேள்விப்பட்டாலே! பெண்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இதில் முத்துப்பாண்டி மஞ்சரியோடு குடும்பம் நடாத்திக்கொண்டு சொந்த வீட்டிலையே! ஒருத்தியை வைத்திருந்தான் என்றால்? மஞ்சரி என்னவெல்லாம்  தன் கண்கொண்டு பார்க்க நேர்ந்திருக்கும். எந்த அளவுக்கு மனக்கஷ்டத்தை அனுபவித்திருப்பாளோ! என்றுதான் அதீசனின் மனஓட்டம் இருந்தது.
டிடெக்டிவ் கொடுத்த கோப்பு ஸ்டீவிடம் தான் இருக்கிறது அதை ஆராய்ந்தால் மேலும் தகவல் கிடைக்கக் கூடும். இப்பொழுது மஞ்சரி இருக்கும் மனநிலையில் இதை பற்றி பேசினால் அவள் மேலும் காயப்படக் கூடும் அதனால் வீட்டுக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டவன் பாடசாலை கட்டுமானப்பணிகளுக்கான பொருட்கள் வந்து சேர்ந்து விட்டனவா என்று அலைபேசி வழியாக கேட்டு விட்டு ஸ்டீவுக்கு வண்டியை பாடசாலைக்கு விடும்படி கூறினான்.
பத்து பாடசாலைகளுக்குமான வேலைகள் ஒரே நேரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டியதாக இருந்தது. ஒவ்வொரு பாடசாலையை கட்டுவதற்கும் பணியாளர்கள் அந்த ஊரிலிருந்து எடுக்கப்பட்டாலும் மஞ்சரியின் ஊரிலுள்ள பாடசாலையை கட்ட மட்டும் சென்னையில் அவனுடைய கம்பனியில் வேலை பார்க்கும் கைதேர்ந்த தொழிலாளர்களை குடும்பத்தோடு அழைத்து வந்திருந்தான் அதீசன்.
அதற்கு முக்கிய காரணம் கோவிலைக் கட்டும் வேலைகளும் இருந்ததுதான். அவர்களுக்கு அதில் அனுபவம் இருந்ததினால் அதீசன் சொல்லாமலையே! கோவில் வேலைகளை சிறப்பாக செய்து விடுவார்கள்.
அதீசனின் வண்டி பாடசாலைக்குள் நுழையவும் முதல்வர் அமுதவேணி அங்கு நின்றிருப்பதைக் கண்டு மஞ்சரி இறங்கி அவரிடம் சென்றிருந்தாள்.
அதீசனும், ஸ்டீவும் எல்லா பொருட்களும் சரியாக உள்ளனவா என்று பார்த்து விட்டு அவர்கள் இருக்கும் இடம் வர அமுதவேணி அதீசனுக்கு வணக்கம் வைக்க,
பதில் வணக்கம் வைத்தவாறே! “மேடம் மதில் சுவரை கட்டும் போதே! ஸ்கூல் பிள்ட்டிங்கையும் கட்ட ஆரம்பிக்கலாம். ஸ்டூடண்ட்ஸ்ஸ வேற இடத்துல வச்சி பாடம் நடாத்த வசதி இருக்கா?” என்று விசாரிக்க
“அந்த கட்டிடம் எப்போ இடிஞ்சி விழுமோ! என்ற பயத்துல அங்க குழந்தைகளை விட மாட்டோம் மரத்தடிதான் கிளாஸ் ரூம்” என்ற அமுதவேணி பிள்டிங் கட்டி முடிக்க எவ்வளவு நாள் ஆகும் என்றும் கேட்டு தெளிவு படுத்துக்கொண்டார்.
“வீட்டுக்கு போக யோசனை இல்லையா?” என்று ஸ்டீவ் கேக்க
“எதுக்கு?” என்று முறைத்தான் அதீசன்.
“ஒருத்தன் ட்ரைன்ல ட்ராவல் பண்ணி வந்திருக்கேன். குளிக்கணும் சாப்பிடணும், எனக்கு பசிக்குது” என்றான்.
“உனக்கு எப்போ பசிக்கல” என்று அதீ அவனை திட்டும் நேரம் தங்கராசு அவர்களுக்கான உணவை சுமந்தவாறு அந்த இடத்துக்கு வந்து சேர அனைவரும் ஒரு மர நிழலில் அமர்ந்து உன்ன ஆரம்பிக்க ஸ்டீவின் அலைபேசி சிணுங்கியது.
ஏதாவது முக்கியமான மெஸேஜாக இருக்கப் போகிறது என்று அவன் கையை கழுவிக்கொண்டு பார்க்க, “சாப்டியா?” என்று இருக்க,  வாகையை தவிர அவனிடம் முதல் முறையாக வேறொருவர் கேட்டது இதுதான் முதன் முறை. கண்கள் லேசாக கலங்க யார் என்று தெரியாத அந்த நபர் மீது பாசம் வந்தது.
கூடவே! சாப்பிட்டு கொண்டிருப்பதாக பதிலையும் அனுப்பி வைத்திருந்தான் ஸ்டீவ்.

Advertisement