Advertisement

அத்தியாயம் 17
மஞ்சரிக்கு அதிகாலையிலையே! விழிப்பு தட்டியது. அதீசன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க குளித்து விட்டு வரலாம் என்று குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.
துணியை மாற்றிக்கொண்டு ஷவரை திறந்து குளிக்க ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் சென்றிருக்கவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஷவரில் கொட்டிக்கொண்டிருந்த நீரும் நின்றிருந்தது.
அதிர்ச்சியடைந்த மஞ்சரிக்கு முத்துப்பாண்டியின் வீட்டில் நடந்தது போலவே! இங்கும் நடப்பதை கண்டு கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.
பேச்சியம்மாளின் ஆசைக்காகத்தான் முத்துப்பாண்டியை மணந்தாள். முதலிரவுக்காக அறைக்கு சென்றால் முத்துப்பாண்டி அறையில் இல்லை. எங்கு சென்று இருப்பானோ! என்று சிந்தித்தவள் அவன் வரும்வரை சோபாவில் அமர்ந்து காத்திருந்த நிலையே! தூங்கிப் போய் இருந்தாள். 
முத்துப்பாண்டியின் வீட்டில் குளியலறை வெளியே! தான் இருந்தது. பழக்கப்படாத இடம், முத்துப்பாண்டிக்காக காத்திருந்தது என்று நேரம் சென்று தூங்கியவள் எழுந்துகொள்ள காலை எட்டை தொட்டிருக்க, அரக்கப்பரக்க அறையை விட்டு வெளியே வந்தால் “இப்படி வீட்டுக்கு வந்த மருமக சேவல் கூவினத்துக்கு அப்பால கண்ணு முழிச்சா வீடு விளங்கும்” என்று வைஜயந்தி ஆரம்பிக்க,
“மன்னிச்சிக்கோங்க அத்த நாளைல இருந்து அதிகாலையிலையே! எந்திரிக்கிறேன்” என்று அத்தையின் கன்னத்தை தடவி விட்டு குளிக்க சென்று துணியை மாற்றி குழாயை திறந்தால் கொட்டிக்கொண்டு இருந்த தண்ணீர் நின்றது.
“அத்த தண்ணி வரல” என்று மஞ்சரி குளியலறையிலிருந்து குரல் கொடுக்க
“ஏன் மகாராணிக்கு கிணத்துல நீர் இறச்சி குளிக்க முடியாதோ!” என்று அத்தை வைஜயந்தி பேச அங்கு இருந்த ஒரு இளம் பெண் கேலியாக இவளை பார்த்து வேண்டுமென்றே சிரிக்கலானாள்.
“யார் இவள்?” என்று எண்ணினாலும் “கிணறு எங்க இருக்கு அத்த?” என்று பொறுமையாக கேட்டு கிணத்தில் நீர் இறைத்து குளித்து விட்டு வந்தவளுக்கு கையெல்லாம் வலிக்க ஆரம்பித்தது.
கிணறு இருபது அடி ஆழம். குளிக்க நாற்ப்பது வாளித் தண்ணீராவது அள்ள வேண்டி இருந்தது. கைவலியையும் பொறுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றால் அந்த குளியலறையில் குளித்து விட்டு வெளியே வந்து கொண்டு இருந்தான் முத்துப்பாண்டி.
“இப்போ தண்ணீர் வருது போல, கொஞ்சம் நேரம் பொறுத்திருந்தா இங்கயே! குளிச்சிருக்கலாம்” என்று எண்ணியவள் “அத்த காபி” என்று கேக்க
“ஏன் மா… உன்ற அப்பன் தான் பால் விக்கிறவன் அதான் நீ தினமும் காபி சாப்பிட்டு பழகி இருப்ப, நாங்க அப்படியா? வாய கட்டி வயித்த கட்டி காட்டுலையும் மேட்டுலையும் வேல பாக்குறவங்க” என்று வைஜயந்தி மீண்டும் பேச
“என்ன இந்த அத்த விடிஞ்சதிலிருந்து ஒரு மாதிரியா பேசுறாங்க” என்று எண்ணினாள் மஞ்சரி.
“பூஞ்சோலை சின்னையாகு காப்பித்தண்ணி குடு டி… அவன் வேலைக்கு போக வேணாம்” என்று வைஜயந்தி கத்தவும் அந்த பெண் காபியை முத்துபாண்டிக்கு கொடுக்க சென்றாள்.
மஞ்சரிக்கு வினோதமாக இருந்தது. மருமகள் வந்திருக்கிறாள் அவளிடம் கொடுத்து மகனுக்கு கொடுக்க சொல்லாமல் “இந்த அத்த ஏன் இப்படி பண்ணுறாங்க” என்று அவள் யோசிக்கும் வேளை
“இந்தா.. என் அண்ணன் பெத்த பொண்ணே! அங்கன சட்டில பழைய சோறு இருக்கு சாப்பிட்டு சட்டு புட்டுன்னு வேலைய பாருல” என்றாள் வைஜயந்தி.
மஞ்சரி வீட்டுக்கு ஒரே பெண் அதற்காக பொன்னுத்தாயி அவளை செல்லம் கொடுத்து கெடுத்திருக்கவில்லை. சிலநேரம் பழைய சோறு கூட அமிர்தம்தான். பழைய சோறா? அதுவும் வீட்டுக்கு வந்த புது மருமக்களுக்கா?  என்று பெரிதாக எண்ணாமல் பழையதை சாப்பிட்டு என்ன வேளை என்று கேக்க தலையே! சுத்தியது. அன்றிலிருந்து அவள் வாழ்க்கை முற்றாக மாறிப்போனது.
இங்கும் திருமணமாகி வந்த உடன் தண்ணீர் நின்றதும் பழைய சம்பவங்கள் தொடர்வது போல் தோன்ற அங்கேயே! அமர்ந்து அழுது கரைந்துக்கொண்டிருந்தாள் மஞ்சரி.
இது எதுவும் அறியாத அதீசன் ஏசி அணைந்ததில் வேர்வையில் குளித்து கண்விழிக்க, அறை இருட்டாக இருந்தது. அலைபேசியில் மணியை பார்க்க ஐந்து பதினைந்து எனக்காட்டியது.
“பவர் கட் ஆகிருச்சா? ஏன் ஜெனரேட்டர் வேளை செய்யல” என்று சிந்தித்தவாறே அலைபேசியை எடுத்து அதுக்கு பொறுப்பானவரிடம் பேச இரண்டு நிமிடங்களில் சரி செய்து விடுவதாக அவர் கூற அலைபேசியை அனைத்தவன் அறைக்கு செயற்கையாக வெளிச்சம் கொடுக்கும் ஒரு மின் விளக்கை எரிய விட அது இரவு வானை போல் முகட்டுக் கூரையில் அழகாக நட்சத்திரங்களை நீல நிற ஒளியில் மின்ன விட அருகில் தூங்கிக்கொண்டிருந்த மஞ்சரியை காணாது அவள் எங்கு சென்றாள் என்று பார்த்தான்.
குளியலறையில் இருப்பாள் என்று எண்ணியவன் மின்சாரம் இல்லாததால் பயந்து விட்டாளா? என்று கதவை தட்ட எந்த சத்தமும் வரவில்லை. பயந்து போனவன் பலமாக தட்டி அவளை அழைக்க சுயநினைவுக்கு வந்தவள் அழுதவாறே வந்து கதவை திறக்க,
“ஹேய் வாராகி என்ன ஆச்சு டா” என்று கேட்டதும் அவனை கட்டிக்கொண்டு “ஓ..” வென அழுது கரைந்தவள்
“எதுக்கு கரன்ட்ட கட் பண்ணுனீங்க” என்று கேக்க
ஒரு நிமிடம் புரியாது திகைத்தவன் பயத்தில் அப்படி கேட்பதாக நினைத்து “பவர் போயிருச்சு டா.. ஜெனரேட்டர்ல ஏதோ ப்ரோப்ளம் போல இப்போ சரி பண்ணிடுவாங்க” என்றவாறு அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தி இருந்தான்.
குளிரில் நடுங்கியவள் அவன் கைக்குள் பந்தமாக அடங்கியவாறே வந்தாலும் “பொய் சொல்லாதீங்க, கரண்ட் போகும் போது தண்ணியுமா நிக்கும்” அவனை நம்பாத பார்வை பார்த்தவள் அவனை விட்டு விலகத்தான் இல்லை. 
அவள் பேச்சை வைத்தே! எதுவோ! சரியில்லை என்று புரிந்துக்கொண்ட அதீசன் குழந்தைக்கு புரிய வைப்பது போல் பொறுமையாக “டெயிலி மோட்டார் அஞ்சி மணிக்குத்தான் போடுவாங்க இன்னக்கி போடும் போதே கரன்ட்டு போச்சு” அவளுடைய குற்றச்சாட்டுகளுக்கு அவன் பதில் சொல்லிக்கொண்டிருக்க
நீல நிறத்தில் மின்னிய நட்சத்திரங்களைக் கண்டு கண்களை விரித்தவள் “என்ன இது என்று கேக்க”
“நைட் லேம்ப் பிடிச்சிருக்கா?” என்றவன் அவளை நெருங்கி அமர 
“அழகாக இருக்கு” என்றாள் மஞ்சரி  
“ஆமா ரொம்ப அழகா இருக்கு. வானத்துல நிலா மட்டும்தான் இல்லாம இருந்திச்சு நீ வந்ததால அந்த குறையும் போச்சு. மேகம் இல்லாம நிலா இன்னும் அழகா இருக்கு” அவன் இரு பொருள் பட சொல்ல மஞ்சரிக்கு புரியவில்லை.
“உண்மையிலயே! நீங்க கரன்ட்ட ஆப் பண்ணல இல்ல” அதை நீ செய்ததாக இருக்கக் கூடாது என்ற பார்வையை தேக்கி வைத்து மஞ்சரி யாசிக்க,
மின்சாரம் வரவும் ஏசி இயங்கும் சத்தத்தில் அதீசன் “இல்ல டா.. கரண்ட் வந்திருச்சு பாரு. நான் தூங்கி கிட்டுதானே! இருந்தேன். நீ ஈரமா இருக்க, போய் குளிச்சிட்டு வா தண்ணி வருது”
அப்பொழுதுதான் தான் என்ன மாதிரியான துணியை போட்டுக்கொண்டு அவன் முன் இருக்கின்றோம் என்பதை உணர்ந்தவள் அவனை தள்ளி விட்டு குளியலறைக்குள் ஓடி இருந்தாள்.
“டேய் அதீசா உனக்கு நாக்குலத்தான் டா சனி. அவளுக்கு ஏதாவது ஆகிடுமோனு நினைச்சி இப்படி கெடச்ச சான்சை மிஸ் பண்ணிட்டியே!” என்றவன் போர்வைக்குள் புகுந்துகொள்ள மஞ்சரி மின்சாரத்தை துண்டித்தது நீயா என்று கேட்டது கண்ணில் வந்தது.
“அந்த முத்துப்பாண்டி என்ன எல்லாம் கொடும பண்ணினானு தெரியலையே! இரு டா.. என் வாராகிய படுத்தின பாட்டுக்கு முதல்ல உன்ன ஊரை விட்டு ஓட வைக்கிறேன்” கருவிக்கொண்டவன் கண்ணை மூடி மீண்டும் மஞ்சரியின் உடல் மொழியையும், முகத்தையும் கண்ணில் கொண்டுவந்து நிறுத்தி
“சே என்ன நடந்ததுன்னு சொல்லவும் மாட்டேங்குறா? ஆனா கரண்ட் போனதுக்கு நீ தான் காரணமான்னு கேட்டு அதுக்கு நீதான் காரணம்னு சொல்லிடாதேன்னு கண்களாலே கெஞ்ச வேற செய்யுறா, என்னதான் அவ மனசுல நினைக்கிறானு ஒரு எழவும் புரிய மாட்டேங்குது” என்றவன் மீண்டும் ஒரு குட்டித் தூக்கம் போடலானான்.
குளித்துக்கொண்டிருந்த மஞ்சரிக்கு தன்னை நினைத்தே! ஆச்சரியமாக இருந்தது. தண்ணியை நிறுத்தியது அதீசன் தான் என்று  மூளை சொன்னாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
“நீ அதை செய்யவில்லை தானே!” என்று அவனிடமே! வேறு கேட்டு தெளிவுபடுத்த முற்படுகிறாள். அவனுடன் சாதாரணமான வாழ்க்கையை வாழத்தான் முடியுமா? என்று மனம் கேட்ட கேள்விக்கு பதிலாக இன்று அவனோடு வாழத்தயாராகி விட்டாளா? இது எப்படி சாத்தியம். புரியவில்லை.
ஊட்டியில் வைத்து அதீசன் உன்னை பார்த்தேன் என்னை நியாபகம் இருக்கா என்று மஞ்சரியிடம் கேட்ட பொழுது இல்லை என்று அடித்துக்கூறினாள். அன்று பாடசாலையில் வைத்து அவனை சந்தித்த பொழுதே! அவனை அவள் அடையாளம் கண்டுகொண்டிருந்தாள்.
ஊட்டியில் அவன் ஒன்றும் அவளை ஆர்வமாக பார்க்கவுமில்லை. ஆசையாக பார்க்கவுமில்லை. சாதாரணமாகத்தான் பார்த்தான். மஞ்சரியும் அப்படித்தான். இருவரின் முகமும் இருவருக்குள்ளும் இடம்பெயர்ந்திருந்தது. பாடசாலைக்கு வந்த பொழுது அதீசன் ஆர்வமாக பார்த்த பொழுது “என்னிடமிருந்து ஒதுங்கி நில்” என்று மஞ்சரி பார்த்தது தான் இப்பொழுது விவாகரத்தானவள் என்பதனாலையே!
அதீசன் மூன்று வருடங்களாக காதலிப்பதாகவும், அவளை தேடியதாகவும் கூறிய பொழுது மஞ்சரிக்கு கோபம்தான் வந்தது. அது அவன் அன்றே வந்திருக்கக் கூடாதா? வந்திருந்தால் அவள் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்தேறி இருக்காது என்ற கோபம் தான்.
முத்துப்பாண்டியின் மேல் எந்த ஈர்ப்பும் இருந்தது இல்லை. திருமணத்தின் பின் ஏற்பட வாய்ப்பும் அவன் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அதீசனின் மேல் திடிரென்று உரிமையும், ஈர்ப்பும் மஞ்சத்தாலி மேஜிக்கல் மட்டும் வந்ததல்ல. அவனை பார்த்த நொடியே பிடித்திருந்தது. சினிமாவில் வருவது போல் அவனுக்கும், என்னை பிடித்திருக்கும், தேடி வருவான் என்று கற்பனை உலகத்தில் அவள் இருக்கவில்லை. வீட்டில் பார்த்த   மாப்பிள்ளையை மணந்தாள். அந்த வாழ்க்கையில் அவள் பட்ட துன்பங்கள் ஏராளம். திரும்ப அப்படியொரு வேதனையை அனுபவிக்க முடியாது. தான் என்ன எதிர்பார்க்கின்றோம் என்று புரியாத குழப்பத்திலையே! குளித்து முடித்து வெளியே! வந்தாள் மஞ்சரி.
அதீசன் தூங்குகிறானா? தூங்குவது போல் நடிக்கிறான் தெரியவில்லை. புடவையை உடுத்திக்கொண்டு கீழே செல்ல வாகை அப்பொழுதுதான் விழித்தெழுந்து வந்தாள்.
“காலையிலையே! எந்திரிச்சிட்டியா? இங்க எல்லாம் ஆறுமணி தாண்டும், வா நாம சாமி கும்பிடலாம்” என்று இருவரும் பூஜையறைக்குள் நுழைந்தனர்.
பூஜையை முடித்துக்கொண்டு இருவரும் வெளியே வரும் பொழுது சங்கரன் ஜோகின் செல்ல தயாராகி வந்து கொண்டிருக்க, “ஆகா நம்மள ஒண்ணா பார்த்தா வேதாளம் முருங்கை மரம் ஏறிடுமே! ஆக்டிங்கை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்” என்று நினைத்த வாகை
“இங்க பாரு மருமகளே! காலைல எந்திரிச்சு சாமி கும்பிடுறது எல்லாம் நல்ல பழக்கம்தான். அதுக்காக நான் சாமி கும்பிடும் போது வராத புரியுதா” என்று சங்கரனை கண்களால் காட்ட மஞ்சரிக்கு வாகை சொல்ல விளைவது புரியவில்லை.
வாகையின் குரலில் அப்பக்கம் திரும்பிய சங்கரன் இருவரையும் கண்டு “காலையிலையே! ஆரம்பிச்சிட்டாளா? நா பேசினா என் தலையிலதான் விடியும்” என்று எண்ணியவர் அவர்களை கண்டு கொள்ளாமல் வெளியேறி இருக்க,
“அப்பாடா எந்த கேள்வியும் கேக்கல” வாகை நிம்மதி பெருமூச்சு விட
“இன்னும் எத்தனை நாளைக்கு நடிக்க போறீங்க? ஒருநாள் இல்ல ஒருநாள் அவருக்கு உண்மை தெரியத்தான்! போகுது?” என்றவாறு மஞ்சரி அறைக்கு செல்ல அதிர்ச்சியடைவது வாகையின் முறையானது.
காலை உணவு மேசையில் அனைவரும் அமர்ந்திருக்க, மாலனியை மட்டும் காணவில்லை.
“இந்த மாலனி எங்க காணல? காலேஜுக்கு வேற டைம் ஆச்சு இல்ல” என்று வாகை கேக்க,
“அது நேத்து நைட்டு மாலனி அஜ்ஜு ரூமுக்கு” என்று அனி ஆரம்பிக்கவும் 
அவள் தலையில் கொட்டிய அர்ஜுன் “கோதாண்டம் அங்கிள் போன் பண்ணி இருந்தாரு. அதான் அப்சடா இருக்கா போல, நான் பாக்குறேன்” என்றவன் மலானியின் அறைக்கு செல்ல அவளே! கதவை பூட்டிக்கொண்டு வெளியே! வந்து கொண்டு இருந்தாள்.
“ஹாய் மாலனி குட் மோர்னிங் சீக்கிரம் வந்து சாப்பிடு. காலேஜ் போக நேரமாகுது” என்று சொன்னவன் கீழே சென்றிருக்க, மாலனிக்குதான் இதயம் படபவென அடித்துக்கொண்டது.
நேற்று நடந்த சம்பவத்தால் அர்ஜுனை எப்படி சந்திப்பது என்ற ஒருவித தயக்கத்தில் இருந்தவள் தோழி கிருஷ்ணாவிடம் பேச இப்படியே இருந்திட முடியாதே! வெளியே போ என்று அர்ஜுன் க்ரிஷ்ணாவாக தைரியம் சொல்ல தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வெளியே வந்திருக்க, அர்ஜுனும் சாதாரணமாக பேசியதில் மனதுக்குள் நிம்மதி பரவ அமைதியாக வந்து உண்ணலானாள்.
அர்ஜுனும் அவள் நிலையை உணர்ந்து சீண்டவில்லை. காலேஜுக்கு சென்று சம்பவம் பண்ண வேண்டி இருந்ததால் அமைதியாக உணவர்ந்தலானான். 
“டேட் ஊருல ஸ்கூல் கட்டுர வேல ஆரம்பிச்சா நான் அங்க போய் அந்த வேலைகளை பார்க்கலாம்னு இருக்கேன்” அமைதியை கலைத்தான் அதீசன்.
“நீ போக வேண்டிய அவசியம் இல்லையே! அதுவும் பத்து ஸ்கூல்ஸ் எல்லாத்தையும் பார்க்கணும். ஒண்ணையே! பார்த்தா எப்படி?” சங்கரன் பொரிய
“நான் அங்க இருந்தே! ஸ்கூல் ப்ரொஜெக்ட்ஸ் பார்க்கலாம்னு இருக்கேன். ஊரு கோவிலையும் கட்டிக்கொடுக்குறேன்னு வாக்கு கொடுத்திருக்கேன். அந்த வேலைகளையும் ஆரம்பிக்கணும்”
மஞ்சரி இங்கு வரும் பொழுதே! அதீசனிடம் எத்தனை நாள் சென்னையில் தங்க போறோம்? ஸ்கூலுக்கு ரொம்ப நாள் லீவு போட முடியாது. குழந்தைகளோட படிப்பு கெட்டிடும் என்று கூறி இருந்தாள்.
அந்த காரணத்தை தந்தையிடம் சொன்னால் தாம்தூம் என்று குதிக்க ஆரம்பிப்பார். அதுபோக முத்துப்பாண்டியை பற்றி திரட்டிய தகவல்களும், அவனை கண்காணிக்க ஏற்பாடு செய்ததில் அவன் அமைதியாக இருக்க மாட்டான் என்று புரிய முதலில் அவனை மஞ்சரியின் ஊரிலிருந்து துரத்த வேண்டும் என்று எண்ணி இருந்த அதீசன் தான் ஊரில் இருப்பது மிகவும் முக்கியம் என்று தீர்மானித்திருந்தான். அதனால் தந்தையிடம் தேவையானவற்றை மட்டும் பகிர்ந்திருந்தான்.
“ஊர் கோவிலா? அத யாரை கேட்டு கட்டிக்கொடுக்கிறதா சொன்ன? காசு என்ன மரத்துலயா காய்க்கிது?” மஞ்சரியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்தான் என்ற கோபத்தை இவ்வாறு காட்ட
பல்லைக் கடித்த அதீசன் “அப்போ நான் தனியா எந்த முடிவும் எடுக்கக் கூடாது உங்க கிட்ட கேட்டுத்தான் எல்லாம் செய்யணும்னு சொல்ல வாரீங்களா?” அதீசனும் கோபமாக கேக்க
“சாப்பிடும் நேரத்துல என்ன வீண் பேச்சு, அமைதியா சாப்பிடுங்க” என்று வாகை அதட்டி இருவரையும் பேசாது அமைதி படுத்த முயற்சித்தாள்.   
இளையவர்களுக்கு இந்த பேச்செல்லாம் புதிது. இப்படி இந்த வீட்டில் இதுவரை அண்ணனும், தந்தையும் பேசியதே! இல்லை. என்ன நடக்கிறது என்று புரியாத குழப்பத்தில் பார்த்திருந்தனர். 
“கொஞ்சம் இருங்க மம்மி. கம்பனில சேர்ந்ததுல இருந்து சம்பளம்னு நான் எதையும் வாங்கினது இல்லை. எவ்வளவு கோடி ரூபா கமபனிக்கு சம்பாதிச்சு கொடுத்திருப்பேன்” என்றான் அதீசன் ஆதங்கமாய்.
“சம்பளமா வங்காள கோடி ரூபா காரு, துணிமணி, வெளிநாட்டு பயணம்” என்று சங்கரன் சொல்லிக்கொண்டே போக ஓங்கி மேசையில் அடித்திருந்தான் அதீசன்.
குடும்பமே! அதிர்ச்சியில் உறைய “சாதாரண மேனேஜருக்கே வண்டி கொடுத்து, பெட்ரோலுக்கு காசும் கொடுக்குறீங்க, உங்க பையன் நான் எனக்கு நான் கேட்டுத்தான் இந்த வண்டிய நீங்க வாங்கி கொடுத்தீங்களா?  நீங்க ஆசைப்பட்டு வாங்கி கொடுத்தது. நான் போடுற ஷூல இருந்து, கட்டுற வாட்ச், எந்த டிரஸ், என்ன படிப்பு படிக்கணும் எங்குற வரைக்கும் உங்க சாய்ஸ் தான். உங்க மேல பாசமும், மரியாதையும் இருக்குறதால என்னோட ஆச, கனவுல எல்லாத்தையும் மூட்ட கட்டி வச்சிட்டு நம்ம கம்பனிக்காக இத்தன வருஷமா உளச்சி கிட்டு இருக்கேன். என்னைக்காவது உங்க கிட்ட என் ஆசைகளை சொல்லி இருக்கேனா? இல்ல அத வாங்கிக்கொடுங்க, இத வாங்கிக்கொடுங்க என்று கேட்டுத்தான் இருக்கேனா?”
அதீசன் மூத்த பையன் என்பதனால் விளையாட்டு பொருட்களைக் கூட தம்பியும், தங்கையும் அவர்களுக்கு பிடித்ததை எடுத்துக்கொண்ட பின் எஞ்சியத்தைத்தான் எடுத்துக்கொள்வான்.
அவனுக்கு இந்த சைக்கிள்தான் பிடிக்கும் என்று தந்தையிடம் சொன்னால் அது நல்லா இல்லை என்று சங்கரன் வேறு ஒன்றை வாங்கிக் கொடுப்பார். காலேஜ் செல்லும் பொழுது பைக்கும் அப்படித்தான். அவன் ஒன்றை சொல்ல அவர் வேறொன்றைத்தான் வாங்கிக் கொடுத்திருந்தார். அதிலிருந்து அவன் கேட்பதையே! விட்டு விட்டான்.
“பட் லைப் பாட்னர் உங்க சாய்சா இருக்க முடியாது டேடி. உங்களுக்காக நான் இவ்வளவும் பண்ணி இருக்கேன். எனக்காக நீங்க இந்த ஒரு விசயத்த ஏத்துக்க மாட்டேங்களா?” கோபமும் ஆதங்கமும் சேர்ந்து ஒலித்தது அவன் குரலில்
“அதீ” வாகை மகனின் தோளில் கை வைத்திருக்க, மஞ்சரி தானாக கணவனின் கையை பற்றி இருந்தாள்.
வாகை கணவனை முறைத்தவாறு “இப்போ உங்களுக்கு சந்தோசமா? சாப்பிடும் நேரத்துல வீண் பேச்சு வேணாம்னு சொன்னேன். பேசினதுலதான் எனக்கு என் பையன் என்னெல்லாம் கஷ்டப்பட்டிருக்கானு புரியுது”  என்று கணவன் மீது பாய்ந்தவள் மகன் புறம் திரும்பி
“ஏன் டா அதீ. இந்தாளு கம்பனினு நினைச்சி கிட்டு இருக்கியா? எல்லாம் உன் தாத்தா சொத்து டா.. என் அப்பா சொத்தையும் நம்ம கம்பனிலதான் போட்டிருக்கேன். எனக்கும் பங்கு இருக்கு. உங்க டேடி ஓவரா ஆடினா சொத்தை பிரிக்க வேண்டியதுதான்” என்று வாகை மிரட்ட நொந்து விட்டார் சங்கரன்.
“உனக்கு கோவில் கட்ட பணம் வேணும்னா என் கிட்ட கேளு இவர் கிட்ட எதுக்கு கேக்குற?” என்று மகனிடம் சொன்ன வாகை “யோவ் சங்கரா.. இதனை நாளா என் புள்ளய அட்டையா உறிஞ்சிகிட்டு அவனுக்கு பணம் வேற கொடுக்காம இருந்தியா? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். ஒழுங்கு மரியாதையா இத்தனை வருஷமா அவன் பார்த்த வேலைக்கு காச எண்ணி அவன் கைல கொடுக்குற”
“ஏய் என்ன டி ரவ்டி மாதிரி பேசுற” சங்கரன் மிரள
“இப்படியெல்லாம் என்ன பேச வச்சிடாதீங்கன்னு சொல்ல வந்தேன்” என்ற வாகை ஒன்றுமே நடக்காதது போல் சாப்பிட ஆரம்பிக்க அனியும் அர்ஜுனும்
“யம்மா..” என்று முணுமுத்துக்கொண்டனர்.
மஞ்சரி தனது கையை இறுக பற்றி இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் குஷியான அதீசன் “இப்போவும் நீங்க எனக்கு எந்த உரிமையும் இல்லனு பேசிகிட்டு இருந்தீங்கனா நான் கம்பனில இருந்து விலகி என் பொண்டாட்டி கூட ஊருக்கு போய் செட்டில் ஆகிடுவேன்” தந்தையை மிரட்டியவன்
“ஏன் வாராகி உன் அப்பாத்தாக்கு எத்தனை ஏக்கர் வயல் இருக்குனு சொன்ன” என்று கேட்டு கண்ணடிக்க, அவன் குறும்பு புரிய கணவனை முறிக்கலானாள் மஞ்சரி.
   
  அவள் கையை தன் கைக்குள் பொத்திக்கொண்டவன் “நாளைக்கு காலைல ஊருக்கு போலாம் சரியா” என்று சொல்ல அவளும் சந்தோஷமாக புன்னகைத்தாள்.
“அத்த நான் காலேஜ் போயிட்டு வரேன்” என்று மாலனி வாகையிடம் விடை பெற
“பாத்து பத்திரமா போ..” என்று மாலினிக்கு சொன்ன வாகை “அஜ்ஜு… மாலினியை பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வா. இனிமேல் ப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்துறேன்னு வீட்டுக்கு லேட்டா வரக்கூடாது புரியுதா?”
“ஓகே மம்மி” அர்ஜுன் மண்டையை ஆட்டி வாகைக்கு கன்னத்தில் முத்தமிட்டு விடை பெற்று தனது வண்டியை இயக்க
“என்ன இதுலயா போறோம்?” என்று கூச்சலிட்டாள் மாலனி.
“ஆமா நான் தினமும் என் வண்டிலதான் காலேஜ் போவேன்”
“அப்போ நான் எதுல போறதாம். அத்த என்னையும் உன் கூடத்தான் போக சொன்னாங்க”
“பின்னாடி சீட்ல உக்காருமா. பத்திரமா கூட்டிட்டு போறேன்”
“உன் கூட பைக்லயா?”
அர்ஜுனின் நீண்ட நாள் ஆசை மாலனியை தனது வண்டியில் அழைத்து செல்ல வேண்டும் என்பது. அவன் இதுவரை யாரையும் தனது வண்டியில் அழைத்து சென்றதே! இல்லை. அது அவனுக்கும், அவளுக்குமான வண்டி என்பதனால். மாலினி இவ்வாறு கேட்டதும் கடுப்பானவன்
“உன் புருஷன் கூட பைக்ல போகாம உங்கப்பன் சோடாபுட்டி கூடயா போவ?”
“இங்க பாரு அர்ஜுன் எங்க அப்பாவ கண்டபடி பேசாத அப்பொறம் நானும் கண்டபடி பேசிடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரிக்க
“எங்க டேடிய தானே!” என்று அர்ஜுன் சாதாரணமாக கேக்க சங்கரன் இவர்களின் சண்டையை கேட்டவாறு வரவும் சரியாக இருந்தது.
“அவனவனுக்கு அல்வா கிடைச்ச மாதிரி என்ன வச்சி செய்ங்க டா..”
“ஐயோ அங்கிள் நா உங்கள எதுவும் சொல்லல இந்த அர்ஜுன்தான்” மாலினி சங்கடமாக சொல்ல
“போமா போ… காலேஜுக்கு நேரமாச்சு. எனக்கு பொறந்ததுங்களும் சரியில்ல வாச்சதுங்களும் சரியில்ல” என்று தன் குடும்பத்தை திட்டியவாறு காரியாலயத்துக்கு புறப்பட்டார் சங்கரன்.
“அர்ஜுனின் முதுகில் அடித்த மாலினி. உன் வாய் இருக்கே… அங்கிள் என்ன நினைச்சி இருப்பாரு”
“காலேஜுக்கு நேரமாகுது மாலு வண்டில ஏறு. இல்லனா நடந்தே! வா” என்று அர்ஜுன் சொல்ல வண்டியில் ஏறி இருந்தாள் மாலினி.
மாலினி அர்ஜுனின் தோளை  தொட்டதும் வண்டி அர்ஜுனின் கைகளில் சீறிப்பாய்ந்து.

Advertisement