Advertisement

அத்தியாயம் 16
அதீசன் தனது அறையில் மஞ்சரிக்காக காத்துக்கொண்டு இருந்தான். மஞ்சரி தனது அறைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகுமா? என்று கேட்டவனுக்கு அந்த இரண்டு நாளும் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.
ஒருவாரம் ஊரில் இருந்ததால் கம்பனியில் பார்க்க வேண்டிய வேலைகள் இழுத்துக் கிடக்க எல்லாவற்றையும் முடிக்க வேண்டிய நிலை. அது போக அன்று இரவு  தந்தை அழைத்து மஞ்சரியை அனுப்பி விடும்படி கூற கடுப்பானவன்
“ஓகே டேட்” என்றவன் மேசையின் மீது இருந்த வெள்ளை காகிதத்தில் கையொப்பமிட்டு கொடுத்து “இது நீங்க கம்பனில இருந்து என்ன நீக்குறதாக எழுத்திக்கிட்டாலும் சரி, நான் உங்க மகனே! இல்லனு எழுத்திக்கிட்டாலும் சரி. என்னால என் மஞ்சுவை விட முடியாது. மூணு வருஷம் டேட். த்ரீ இயர்ஸ். அவள தேடி, கண்டு பிடிப்பேனா? அவள பார்க்க மாட்டேனான்னு தவிச்சது எனக்கு மட்டும்தான். தெரியும். எந்த காரணத்துக்காவதும், யாருக்காகவும் அவளை விட மாட்டேன்”
“டேய் அதீ… காண்ட்ராக்ஷன்ல சாதிக்கணும், இத்தாலிக்கு போய் படிச்சிட்டு வந்து நம்ம இந்தியாலையே! பேர் சொல்லுற கம்பனில நம்ம கம்பனியும் ஒண்ணுனு கொண்டுவந்தவன் டா நீ. உன்ன பார்த்து நெறய யான்கஸ்ட் கத்துக்குற போ… கேவலம் ஒரு பெண்ணுக்காக நீ ஒரு செக்கன்ல எல்லாத்தையும் தூக்கி போட்டுட்ட, சாப்பாட்டுக்கு என்ன டா பண்ண போறா?” சங்கரன் கோபமாக கேக்க
புன்னகைத்தவன் “என் மாமனார் ஒன்னும் இல்லாதவர் இல்ல. தோட்டம் தொரவுனு எல்லாம் இருக்குறவருதான். உங்க ஊருதான். நீங்க சின்ன வயசுலயே! ஊற விட்டு வந்ததால ஊரோட அருமை தெரியல. பால் வியாபாரம் வேற பண்ணுறாரு. அடுத்த வேள சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறேனோன்னு யோசிக்கிற நிலமைல அந்த குடும்பம் இல்ல. என் பொண்டாட்டி வேற ஸ்கூல் டீச்சர். என்ன உக்கார வச்சி மூணு வேலையும் சோறு போடுவா” என்றவன் அறையை விட்டு கிளம்ப இறங்கி வர வேண்டிய நிலை சங்கரனுக்கு உருவானது.
“சரி உன் இஷ்டப்படி நீ அந்த கிராமத்துக்காரியோட வாழு, அதுக்காக கம்பனியை விட்டு போகணும்னு அவசியமில்லை. முடிக்க வேண்டிய ப்ரொஜெக்ட் ஏகப்பட்டது இருக்கு” சுவரை வெறித்தவாறு தந்தை பேச
“நான் ஹனிமூன் வேற போகணும். என்னால முடிஞ்சது பண்ணுறேன்” என்றவன் வெளியேறி இருந்தான்.
சங்கரனின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது. வாகை என்னவென்றால் தான்தான் அதீசனின் திருமணத்தை நடத்தியதாக கூறுகிறாள் ஆனாலும் குடும்பம் பிரியக்கூடாது என்று சண்டை போடாமல் இருக்கிறாள். அதீக்கும் தான் இல்லாமல் கம்பனியை கொண்டு செல்ல முடியாது என்று நன்றாக தெரியும் அதனாலயே! இப்படி பேசுகிறான்.
குழந்தைகளை என்றுமே! அதட்டி, மிரட்டி பேசி சங்கரனுக்கு பழக்கமில்லை. தோளுக்கு மேல் வளர்ந்தவனிடமா சத்தம் போட எண்ணுவார்.
“அதீ அந்த பொண்ணு மேல இருக்குற மோகம்தான் உன்ன இப்படியெல்லாம் பேச வைக்குது, உன்னால அவ பழக்கவழக்கங்களோட பொருந்த முடியாது. கருத்து வேறுபாடு ஏற்படும் பொழுது நீயே அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்துடுவ” என்று எண்ணலானார் சங்கரனார்.
கம்பனியே! கதி என்று இருந்தவர் வீடு வரவும் இரவானது. வாகையிடம் “இந்த பட்டிக்காட்டுக் கூட்டம் இன்னும் எத்தனை நாள் இங்க தங்க போறாங்க” என்று கேக்க
கணவனை முறைத்தவாறே “நாளைக்கு காலைல தாலிபெருக்கு செஞ்ச பின்னால போறதா சொன்னாங்க” என்றவள் “இவர் சிட்டில பொறந்த மாதிரி பேச்சு. இவர் பொறந்ததும் அந்த பட்டிக்காட்டுலதான்” என்று பொறுமியவாறே தூங்கி இருந்தாள்.
மஞ்சரிக்கென்று ஐந்து பவுனில் தாலி சரடு வாங்கி இருந்தான் அதீசன். வாகைக்கு அது பத்தவில்லை. “அம்மா அவ டீச்சர். இத போடுறதே! பெரிய விஷயம்” என்றவன் அவளுக்கென்று வேறு சில நகைகளையும் வாங்கி வந்து தாலி பெருக்கின் போது பரிசாக கொடுத்து விட்டிருந்தான்.
தாலி பெருக்கும் சிறப்பாக நிறைவடைந்திருந்தது. சங்கரன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. கம்பனியில் வேலை இருக்கு என்று கிளம்பி இருக்க, அதீசனையும் போனுக்கு மேல் போன் போட்டு அழைத்துக் கொண்டிருந்தார்.
“டேட் என் வைப்போட பேமிலி ஊருக்கு போறாங்க அவங்கள அனுப்பிட்டு வரேன்” வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று போனை வைத்திருக்க, வாகைக்கு அழைத்து எரிந்து விழ,
வாகையோ! “நீங்க பண்ணி வச்ச கல்யாணம் தானே!” என்று ஆரம்பிக்கவும் சங்கரன் அலைபேசியை அமர்த்தி இருந்தார்.
அவர்களை ஊருக்கு வழியனுப்பி வைத்து விட்டு மஞ்சரியிடம் விடைபெற்று கம்பனிக்கு வந்தவன் தந்தையின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிப்பதைக் கண்டே! கோபத்தின் அளவையும், காரணமும் புரிய அமைதியாக வேலைகளை பார்கலானான்.
வாகை அழைத்து “நேரங்காலத்தோட வீட்டுக்கு வா சாந்திமுகூர்த்தத்துக்கு ஏற்பாடு செஞ்சி இருக்கேன்” வரேன் என்றவனால் அசையமுடியவில்லை.
கணவனை அழைத்து கண்டமேனிக்கு திட்டவும்தான் சங்கரன் அதீசனை அழைத்துக்கொண்டு வீடு வந்திருந்தார்.
வீட்டுக்கு வந்த அதீசனின் கண்கள் மனைவியை தேடி அலைய “அதீ அண்ணிய உன் கண்ணுல இப்போ காட்ட மாட்டாங்க, நல்ல நேரத்துலதான் காட்டுவாங்க” என்று கிண்டலடிக்க
“எனக்கு பசிக்குது பேபிம்மா” என்று மழுப்பியவன் சாப்பாட்டறைக்கு செல்ல
“அதுக்கு எதுக்கு அண்ணிய தேடுற? பசிச்சா போட்டு சாப்பிட வேண்டியதுதானே!”
அவள் முதுகில் அடித்த வாகை “இன்னும் சின்ன குழந்தை மாதிரியே! பேசு. உனக்கு கல்யாணம் ஆனா உன் புருஷன பட்டினிதான் போடுவ போல இருக்கு” என்று சொல்ல
“ஏன் எனக்கு கையில்லாதவனா பார்த்துதான் மாப்பிள்ளையா பார்க்க போறீங்களா? சாப்பிடக்கூட முடியாம நான் ஊட்டி வேற விடணுமா?” அதற்கும் அவள் நக்கல் பண்ண
“ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு கொஞ்சம் கூட இல்ல. போ.. போய் ஏதாச்சும் படம் பாரு”
“படம்னு சொன்னதும்தான் நியாபகம் வந்தது. அதீ ஸ்கூபி டூ அண்ட் க்ரூட் அனிமேஷன் மூவி வந்திருக்கு வாங்கிட்டு வா” என்று அனி சொல்ல அதீசன் சிரித்து விட
“இவ எப்போதான் வளருவாளோ!” என்று தலையில் அடித்துக்கொண்ட வாகை  “அதீ நீ குளிச்சிட்டு ரெடியாகு மஞ்சரியை உன் ரூம்குக்கு அனுப்புறேன்” என்று விட்டு செல்ல அதீசனுக்கு பசியும் பறந்தது. அரக்கப்பரக்க சாப்பிட்டவன் அறைக்கு ஓடி இருந்தான்.
அதீசனின் அறையில் அர்ஜுனைக் கண்டு “நீ இங்க என்னடா பண்ணுற? என்று கேக்க
“அலங்காரம் பண்ண வந்தேன்” என்றதும்
அவனை சந்தேகமாக பார்த்தவன் “உன் சில்லறை புத்திய சில்மிஷமா யோசிச்சு ஏதாவது பண்ணி வச்சிருக்கியா?”
“அப்படி ஒன்னும் பண்ணல, ஆனா நீயே இப்போ ஐடியா கொடுப்ப போல இருக்கு” என்று சொன்னவனை வெளியே தள்ளி தாளிட்டவன் குளித்து விட்டு மஞ்சரிக்காக காத்திருக்கலானான்.
மஞ்சரியை முறையாக பெண் கேட்டு திருமணம் செய்யத்தான் எண்ணி இருந்தான் அதீசன். கிராமத்துக்காரர்கள் என்பதற்காகவே! மறுக்கும் தந்தை அவளுக்கு விவாகரத்து ஆனா விஷயம் மட்டும் அறிந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று புரிய இவ்வாறு தனக்கு திருமணம் நடந்தேறா விட்டால் இந்த ஜென்மத்தில் மஞ்சரி கிடைக்க மாட்டாள் என்று புரிய இப்படி திடிரென்று திருமணம் நடந்து நல்லது என்று எண்ணினான்.
அவன் மனசாட்ச்சியோ! “உன் மனைவி உன்னை ஏற்றுக்கொள்வாளா?” என்று கேக்க முத்துப்பாண்டியின் தோற்றம் கண்ணில் வந்து நின்றது. 
“அவனை கல்யாணம் பண்ண இவ எப்படி சம்மதிச்சா? பாக்க பக்கா ரௌடி மாதிரி இருக்கான்” என்று மூளை சொல்ல
“அவன் கூட எப்படியான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பா?” என்ற கெளுவிதான் அவனுள் எழுந்தது.
இங்கே மஞ்சரியை அலங்கரித்த அனியும் மாலனியும் வாகையின் முன் நிறுத்த
“இங்கபாருமா… இனிமேல் இதுதான் உன் வீடு. என் பையன பாத்துகிற பொறுப்பு மட்டும்தான் உனக்கு. நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தா மட்டும் போதும்” என்று அதீசனின் அறைக்கு அனுப்பி வைக்க, மஞ்சரியின் மனதுக்குள் பல கேள்விகள் எழுந்தது.
“அப்போ நான் இனிமேல் வேலைக்கு போக முடியாதா? ஊருக்கு போகவே! முடியாதா? இவங்க பையன் என்ன சின்ன பாப்பாவா அவன பாத்துகிறதுக்கு, என் லட்ச்சியம், என் கனவு என்ன ஆகுறது”
“மாலினி அஜ்ஜு ரொம்ப பாவம் நீ கண்டுக்காம விட்டினா அவன் எவ பின்னாடியாவது போயிடுவான் பாத்துக்க. ஏற்கனவே! உங்க காலேஜ் பத்தி நல்ல நல்ல செய்தியா வருது. அப்பொறம் நான் சொல்லலைனு சொல்லாத. புள் மீல்ஸ் தான் சாப்பிட மாட்டான்னு சொன்னான் அப்போ அப்போ காப்பியாவது சாப்பிட கொடுத்து உன் கன்ட்ரோல்ல வச்சிக்க. இல்லனா அஜ்ஜு அந்தரத்துல பறப்பான்” அனி மாலனியை வம்பு செய்தவாறு வர மாலனி முறைக்க முடியாமல் மஞ்சரியை அழைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தாள். மஞ்சரியின் கவனத்தில் இவர்களின் பேச்சு இல்லை.
மஞ்சரியை அதீசனின் அறையில் விட்ட இருவரும் திரும்புகையில் அருஜுனின் அறை திறந்திருக்கவே! “ஏய் மாலு வா அஜ்ஜு என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்” என்று அனி அழைக்க
மாலினி மறுக்க அனி இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
உள்ளே அர்ஜுன் ஒரு ஷோர்ட்டை போட்டுக்கொண்டு ஆடிக்கிண்டிருக்க, “என்ன மாலு அடுத்த வாரம் எக்ஸ்சாம்னு சொன்ன. இவன் என்னடான்னா கல்ச்சருக்கு ப்ராக்டிக்ஸ் பண்ணுறான்”
அர்ஜுன் நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தான். அவனக்கு டான்ஸ் கூட ஆட தெரியுமா? B குரூப் மேடையில் ஏறினால் காதில் ஹெட்டிபொனை மாட்டிக்கொண்டு அலைபேசியை நோண்டுவாளே! தவிர அவர்களை பார்ப்பதில்லை. அதனால் அர்ஜுன் ஆடுவது எங்கே! தெரியப்போகிறது.
ஆடியவாறு திரும்பியவன் இவர்களைக் கண்டு “ஏய் ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணுறீங்க?”
“என்னடா செய்யக் கூடாத எதையோ! செய்தது போல கோபப்படுற? ஒன்னும் சரியில்லையே!” என்ற அனி “மாலு என்னனு கேக்க மாட்டியா?” என்று அவளை கோர்த்து விட திருதிருவென முழிக்கலானாள் அவள்.
“நீ இப்படி இருக்குறதாலதான் இந்த அஜ்ஜு இப்படி இருக்கான். நாளைக்கு ரெண்டு பேரும் காலேஜ் வேற போகணும். என்ன பேசுறதா இருந்தாலும் சீக்கிரம் பேசிட்டு தூங்குங்க” என்று அனி கதவை சாத்தி விட்டு வெளியேறி இருந்தாள். 
“ஐயோ… அனி.. அனி…” என்று மாலனி அழைக்க
“அனி.. அனி  இல்ல. அண்ணி” என்ற அர்ஜுன் “எக்ஸாமுக்கு ரெடியா? என்று கேக்க
தன்னிடமா கேட்டான் என்று அவனை ஆராய்ச்சியாக பார்த்தவள் பதிலுக்காக காத்திருக்கும் முகபாவனையை கொடுத்துக்கொண்டிருப்பவனிடம் தலையை ஆட்டு வைத்திருக்க அர்ஜுனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“வா இப்படி வந்து உக்காரு” என்றவாறே BE   முடிச்சிட்டு ME எங்க பண்ண போற?” என்று கேக்க மாலனி என்ன பதில் சொல்வதென்று யோசிக்கலானாள்.
அவள் கிருஷ்ணாவை திருமணம் செய்வதாக இருந்ததால் அவன் எங்கு செல்கிறானோ! அங்கு தானே! செல்வாள். அர்ஜுனை மணந்தவள் அவன் எங்கு செல்கிறானோ! அவனோடுதானே! செல்ல வேண்டும். அதை சொல்லக் கூட நா எழவில்லை.
“மாலினி உன் நிலைமையை பாத்தியா? பக்கத்துல புருஷன வச்சிக்கிட்டு உரிமையா பேச கூட முடியல”
“என்ன மிஸிஸ் மாலனி வர்மா என் கூட ஆஸ்திரேலியா போக ரெடியா?” என்று அர்ஜுன்! கேக்க, அதற்கும் புரியாத பார்வையைத்தான் வீசினாள் மாலனி.
“அண்ணா இத்தாலி போய் படிச்சான். நான் ஆஸ்திரேலியா போலாம்னு இருக்கேன். நான் படிக்கிறதுதான் நீயும் படிக்கிற, ரெண்டு பேரும் ஒன்னாவே! போலாமே! அங்க எனக்கு துணையா இருந்த மாறியும் இருக்கும், கூடவே! சமையல்காரியும் கிடைச்சுடும்” என்றதும்
சோபாவிலிருந்து குசனை எடுத்து அர்ஜுனை மொத்தியவள் “நான் உனக்கு சமையல்காரியா? எனக்கு மேகி நூடுல்ஸ்சுக்கு எவ்வளவு தண்ணி வைக்கணும்னு கூட தெரியாது” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல
அவளை நெருங்கி அமர்ந்து அர்ஜுன் “டோன்ட் ஒர்ரி மாலனி எனக்கு கொஞ்சம் சமைக்க தெரியும் நாம அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம். நீ எனக்கு அப்போ அப்போ கிஸ் மட்டும் கொடுத்த போதும்” என்றவன் அவள் இதழ்களில் மெதுவாக முத்தமிட்டு விலக
அர்ஜுனின் பேச்சே மாலனின் உள்ளுக்குள் ஒரு வித சூடு பரவ முத்தமிட்டதில் மேனியில் ஒரு அதிர்வலைப்பாய உறைந்து நின்றாள். 
இப்படியெல்லாம் அவள் உணர்ந்ததே! இல்லை. அவள் படித்ததும் பெண்கள் பாடசாலையில். காலேஜில் சேரும்வரையில் எதை படிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. சேரும் நேரம்தான் தந்தை தனக்கும் க்ரிஷ்ணாவுக்கும் திருமணம் பேசி இருப்பதாக கூறி இருக்க சரியென்றவள் எஞ்சினியரிங் தேர்வு செய்திருந்தாள்.
அவள் வகுப்பிலும் பெண்கள் மூன்று பேர்தான். மற்ற இருவருக்கு மாலனியை பிடிப்பதில்லை. ஒரு காரணம் கோதாண்டம் சம்பளத்து வேலை செய்யும் சாதாரண ஒருவர் அவர் மகள் நமக்கு தோழியா என்ற எண்ணம்தான். மற்றது கிருஷ்ணா அவனுக்குத்தான் மாலனியை பிடிக்காதே! அது போதாதா? அவளை ஒதுக்க.
அர்ஜுனுக்கு உறைந்து நின்றவளை உலுக்க மனமில்லை. கன்னங்களை கையில் ஏந்தியவன் “ஹாய் மாலினி மே ஐ” என்று அனுமதி கேட்டானே தவிர அவள் அனுமதி தரும்வரை காத்திருக்கவில்லை. அவள் இதழ்களில் தேன் பருக ஆரம்பித்திருந்தான். 
இம்முறை மாலனி அதிர்ச்சியடையவில்லை. கற்றுக்கொள்ளும் மாணவியாக ஆழ்ந்து அனுபவிக்கலானாள். அர்ஜுனுக்கு அவளை விடும் எண்ணமும் இல்லை. தன் மனதை உணர்த்திய பிறகுதான் அவளை நெருங்க வேண்டும் என்று எண்ணி இருந்தவனுக்கு தனது அறையில் அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் மாலனியை பார்த்ததும் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த ஆசைகள் எல்லாம் கிளர்த்தெழுந்து அவள் இதழ்களில் கவி எழுதிக்கொண்டிருந்தான்.
பூஜை வேளை கரடியாக அர்ஜுனின் அலைபேசி சினுங்க, அருகில் இசைப்பது கூட வெகு தூரத்தில் இசைப்பது போல் தான் இருவருக்கும் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மீட்டுக்கொண்ட அர்ஜுன் அலைபேசியை எடுத்துக் பார்க்க கோதாண்டம் தான் அழைத்திருந்தார்.
“மாப்புள மாலினி போன் எடுக்கல தூங்கிட்டா போல. நாளைக்கு காலேஜ் போறா இல்ல அதான் எடுத்தேன். காலைல எனக்கு போன் பண்ண சொல்லுங்க” என்று அவர் பட படவென பேசிவிட்டு வைத்து விட
அர்ஜுன் சொல்ல வருவதற்குள் தன்னை மீட்டுக்கொண்ட மாலினி அவன் அறையிலிருந்து ஓடாத குறையாக தனதறைக்கு வந்து கதவை சாத்தி இருந்தாள்.
இங்கே! மஞ்சரி அறைக்குள்  நுழைந்ததும் விழுக்கென்று நிமிர்ந்த அதீசன் ஆசிரியை கண்ட மாணவன் போல் எழுந்து நின்று விட்டான்.
பால் கிளாஸை எங்கே வைப்பது என்று மஞ்சரி பார்க்க “அத எனக்குதானே! கொண்டு வந்த கைலயே! கொடுக்கலாமே! வாராகி” எனறவன் கிளாஸை வாங்கும் சாக்கில் அவளின் கையை பிடிக்க அவனை முறைத்தவாறு கையை இழுக்க முயற்சி செய்ய அதீசன் ஒரு கையில் பால் கிளாஸை பிடித்தவன் மறுகையால் அவள் கையை பிடித்து கட்டிலில் அமர்த்தி நிதானமாக பாலை அருந்தியவன் பாதியை சாப்பிட்டு மீதியை அவளிடம் கொடுத்தான்.
“நான் பால் சாப்பிட மாட்டேன்” மஞ்சரி பட்டென்று சொல்ல
“ஓஹ்… எனக்கு இது அதிகம். டின்னரும் ரொம்ப சாப்பிட்டேன். எல்லாம் குடிச்சா வாந்தி வந்திடும்” என்றவன் கிளாஸை மேசை மீது வைக்க மஞ்சரி பால் கிளாஸையே! பாத்திருந்தாள். 
உணவை வீணாக்குவது அவளுக்கு பிடிக்காது. பல மாணவர்கள் சாப்பாடில்லாமல் பாடசாலைக்கு வருவதைக் காணுகிறாள். சில மாணவர்கள் சாப்பாடு கொண்டு வந்தாலும், சாப்பிடாமல் தூக்கிப் போடுவதைக் கண்டு முதல்வர் அமுதவேணியிடம் பேசி இதற்கு ஒரு தீர்வாக ஒரே வகுப்பில் உள்ளவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். யாராவது சாப்பாடு கொண்டு வராவிட்டால் பகிர்ந்து உண்ணுங்கள் என்று வலியுறுத்த ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் சந்தோசத்துக்காகவே! வீட்டில் சமைக்க ஒன்றுமில்லா விட்டாலும் தோட்டத்தில் காய்க்கும் பழங்களையாவது பறித்துக்கொண்டு வர பழகி இருந்தனர் குழந்தைகள். பழங்களும் உணவில் சேர அது போசாக்கான உணவாகவும் மாறி இருக்க அமுதவேணி மஞ்சரியை பாராட்டியும் இருந்தாள்.
பாதி கிளாஸ் பால் தானே! என்று நினைத்து வீசினால் இன்று பாலுக்கு அழும் குழந்தைகளின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வது என்ற எண்ணம்தான் மஞ்சரியின் மனதில். என்ன நினைத்தாளோ! பால் கிளாஸை எடுத்தவள் மடமடவென அருந்தி விட்டு கிளாஸை வைத்து விட்டாள்.
முத்துப்பாண்டியை திருமணம் செய்தபின் நடந்த சம்பவங்களால் அவளால் பால், டி, காபி என்று எதையும் அருந்த தோன்ற வில்லை.உணவுகளும் அப்படித்தான். அவளின் சுவை நரம்பே! மறத்துத்தான் போய் இருந்தது. பொன்னுத்தாயிதான் அதட்டி, உருட்டி உணவூட்டி இருக்க, கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்திருந்தாள்.
இன்று அதீசனின் வரவால் வீணாகும் என்று பால் சாப்பிட்டிருந்தாள். அது கூட அவள் அவனுடன் வாழப்போகும் வாழ்க்கைக்கான நல்ல சகுனம்தான்.
உண்மையிலயே! அதீசன் கொலைப்பசியில்தான் வந்திருந்தான். மாமனாரின் வீட்டில் நன்றாக சாப்பிட்டு பழகியதால் கொஞ்சம் அதிகமாகவே! சாப்பிட்டு இருந்தான். பால் சாப்பிட மனமில்லை. மஞ்சரி கொடுத்ததற்காக பாதியை சாப்பிட்டிருந்தான். இந்த சாத்திர சம்பிரதாயமெல்லாம் அவனுக்கு சரிவர தெரியாது.
வேண்டாம் என்ற பாலை மஞ்சரி சாப்பிட்டதும் அதீசனுக்கு அவள் தன்னையே! ஏற்றுக்கொண்ட உணர்வு. 
“வாராகி எங்க வீடு உனக்கு பிடிச்சிருக்கா? உங்க வீடு மாதிரி பசுமையா, காற்றோட்டமா இல்லனு பீல் பண்ணலையே!” அவள் கையை தான் கைக்குள் வைத்துக்கொண்டு கேக்க
அதீசனின் வீடு தோட்டத்தோட அமைந்த வீடுதான். மஞ்சரியின் வீடுபோல் இயற்கையாக அமைந்தது அல்ல, செயற்கையாக அமைக்கப்பட்டது. சகல வசதிகளையும் கொண்ட வீடு. அதை அவளுடைய வீட்டோடு ஒப்பிட்டு அந்த வீட்டுக்கு முன்னால் இந்த வீடு ஒன்றுமே! இல்லை என்பது போல் பேச அவளுக்கு கொஞ்சம் ஆச்சரியம்தான்.
அதீசன் அங்கு தங்காமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் பேசி இருப்பானா? சந்தேகம்தான்.
அதீசனி கையின் சூடு தன் உடல் முழுவதும் தாவுவது போல் ஒரு பிரம்மை மஞ்சரிக்குள் ஏற்பட கையை இழுக்க முற்பட தன் கையோடு கையை கோர்த்துக்கொண்டவன் அவள் விலகி விடாதவாறு மேலும் நெருங்கி அமர்ந்துக்கொண்டு 
“வாராகி உன் பாஸ்ட் லைப் பத்தி நீ என் கிட்ட சொல்லணும்னு நினச்சா சொல்லலாம். இல்ல அத பேச விரும்பாலானா விட்டுடலாம். எனக்கு நீதான் முக்கியம். உன் கூட பேசி என் மனச புரிய வச்சி உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்தான் நினச்சேன். ஆனா இப்படி திடிரென்று நம்ம கல்யாணம் நடந்திருச்சு. உன்னால என்ன ஏத்துக்க கொஞ்சம் டைம் தேவைப்படும்னு புரியுது. மூறு வருஷம் வெயிட் பண்ண என்னால இன்னும் கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுறது ஒன்னும் கஷ்டமில்லை. ஆனாலும் என்ன ரொம்ப நாள் காக்க வைக்காத. உன்ன பக்கத்துல வச்சிக்கிட்டு பிரம்மச்சாரியா இருக்குறதெல்லாம் ரொம்ப கொடும. சோ என் மேல கொஞ்சம் கருணை காட்டி மனசு இறங்கி வாம்மா” என்றவன் அவள் கைக்கு முத்தமிட மஞ்சரிக்கு பல மாற்றங்கள்.
கன்னங்களும் சிவப்பேறி வெக்கம் பிடிங்கித்தின்ன தலையை குனிந்தவாறு இருந்தாள். முத்தமிட்டது அவளுக்கு பிடிக்கவில்லை போலும் அதான் ஒன்றும் பேசமுடியாமல் அமைதியாக இருப்பதாக எண்ணிய அதீசன் “ஒரே ஒரு ஹக் மட்டும் பண்ணிக்கிறேன்” என்றவன் அவளை கட்டிப்பிடித்து நெத்தியில் முத்தமிட்டவன் “குட் நைட்” என்று விட்டு கட்டிலின் மறுபுறம் வந்து தூங்கலானான்.
அதீசனின் அணைப்பும், முத்தமும் மஞ்சரிக்கு இதமாக இருக்க, அந்த அணைப்பு அரவணைப்பாக வாழ்நாள் முழுவதும் வேண்டும் போல் தோன்ற அவனை ஏக்கமாக பார்த்தவாறு தூங்கலானாள்.

Advertisement