Advertisement

அத்தியாயம் 15
அதீ வந்துக்கிக்கொண்டு இருப்பதாக தகவல் சொல்லி இருக்க, வாசலையே! பார்த்தவாறு அமர்ந்துக்கொண்டு சங்கரன் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்தார். மனம் அதில் லயிக்கவில்லை. நண்பன் செந்தில் இப்படி அவசரப்பட்டு முடிவெடுப்பான் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. விழியின் திருமணத்தை இப்படி பொருத்தமே! இல்லாத ஒருவனுடன் செய்து வைத்து விட்டானே! அதீசன் இல்லாவிட்டாலும் ஒரே பொண்ணை வசதியான குடும்பத்தில் கட்டிக்கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் சங்கரனுக்கு தோன்ற நிச்சயமாக அனியை இப்படி ஒருவனுக்கு கொடுக்க மாட்டேன் என்ற சபதமே! எடுக்கலானார். எந்த மாதிரியான சூழ்நிலையில் அனியின் திருமணம் யாரோடு நடக்கப் போவது என்று அறியாமல்.
வாசலில் ஒரு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டு அதிலிருந்து ஸ்டீவோடு ஒரு வயதான பாட்டியும் ஒரு நடுத்தர வயது ஜோடியும் இருங்குவதைக் கண்டு யார் இவர்கள் என்று யோசனையாக வெளியே வர அதீசனின் காரும் உள்ளே வந்து நின்றிருக்க, அதிலிருந்து அதீசனும் கூடவே! மஞ்சரியும் இறங்கியதைக் கண்டு என்ன? ஏது? என்று விசாரிக்கும் முன் உள்ளே இருந்து ஓடி வந்த வாகை
“ஐயோ… ஐயோ.. சின்னவன்தான் தெரியாத்தனமா ஒரு பொண்ணு கழுத்துல தாலிய போட்டுடான்னு கவலைல இருந்தா… பெரியவன் ஒரு பொண்ணு கழுத்துல தாலிய கட்டி வீட்டுக்கே! கூட்டிட்டு வந்துட்டானே! இப்போ நான் என்ன பண்ணுவேன். ஐயோ.. இப்போ நான் என்ன பண்ணுவேன்” என்று கத்த வாகையின் சத்தத்தில் சங்கரனும் ஒரு நொடி திகைத்துதான் நின்றார்.
“அதான் கண்ணாலம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டான்ல ஆரத்தியெடுத்து உள்ள கூட்டிட்டு போயி பேசுவெல” என்று பேச்சி பாட்டி சொல்ல
“ஆகா… அம்மாக்கு ஈகுவலா பாட்டி நடிக்கிறாங்க” என்று ஸ்டிவ் அதீசனின் காதைக் கடிக்க
“அடேய் இந்த குடும்பத்துக்கு அம்மா நடிக்கிற விஷயம் தெரியாது டா.. நீ பாட்டிய சமாளி” என்ற அதீசன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
அதீசன் மஞ்சரியின் குடும்பத்தோடு வருவதாக சொன்ன உடனே! வாகை சொன்னதுதான். “மகனே! இங்க பல டிராமா ஓடும் நீ மருமகளோட குடும்பத்தை கவனிச்சிக்க நான் உங்க அப்பாவ சமாளிக்கிறேன்” என்று
“பாட்டி நீங்க வாய தொறந்தா.. உங்க பேத்திய ஊருக்கே! கூட்டிட்டு போக வேண்டியதுதான். அமைதியா இருங்க, அவங்க நடிக்கிறாங்க” என்று ஸ்டீவ் சொல்ல பேச்சி பாட்டி வாயை பிளந்தவாறு அமைதியானார். 
“என்ன இவங்க போன்ல பேசும் போது நல்லா பேசுனாங்க இப்போ இப்படி பண்ணுறாங்க” என்று மிரண்டாள் மஞ்சரி. 
முதல் திருமணத்தின் அனுபவம் அந்த அளவுக்கு இருக்க, சட்டென்று வாகை நடிப்பதை அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் அச்சம் பரவ அன்னையிடம் அடைக்கலமாகி இருந்தாள். அதீசனின் அருகில் இருந்தவள் நொடியில் அன்னையின் அருகில் சென்றது அதீசனின் கவனத்தில் இல்லை.
பொன்னுத்தாயியும் அமைதியான சுபாவம் கொண்டவாளல்ல புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டு குழாயடி சண்டை போடவும் அஞ்ச மாட்டாள். ஆனால் வந்திருப்பது சம்மந்தி வீட்டுக்கு. ஏற்கனவே! ஒருதடவை பெண் வாழாமல் வீடு திரும்பினாள். தான் ஏதாவது பேசப்போய் பிரச்சினை பெரிதாகும் என்று கணவனையும் மருமகனையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன அதீ… கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என்று சங்கரன் அதிர்ச்சியின் உச்சத்துக்கே! சென்று என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று சிந்திக்கும் முன்
“என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டியானு அதிர்ச்சியாகுறீங்க? நீங்க தானே! இவன அனுப்பி வச்சீங்க? விழிய இவன் சின்ன வயசுல இருந்து தங்கச்சியா தான் பாக்குறான்னு தெரிஞ்சும் செந்தில் அண்ணனுக்கு வாக்கு கொடுக்கும் போதே! நெனச்சேன் எதோ திட்டம் போடுறீங்கன்னு” வாகை புதிராக பேச
“என்ன டி சொல்லுற?” சங்கரன் புரியாது கேக்க.
தங்கராசு “சம்மதியம்மா என்ன நடந்ததுன்னு நான் சொல்லுதேன்” என்று என்ட்ரி கொடுக்க
அதீசனை முறைத்த வாகை “மாமனாரை அடக்கு” என்று கண்ணசைக்க “மாமா நீங்க இங்க வாங்க” என்று அதீசன் தங்கராசை இழுத்து தன் அருகில் நிற்க வைத்துக்கொண்டான்.
“இல்ல மாப்புள…”
“அம்மா பேசி முடிக்கட்டும்” என்றவன் வாகைக்கு கண்ணடித்து விட்டு மனைவியை பார்க்க அவளோ! பொன்னுத்தாயியின் கையை பிடித்துக்கொண்டு மிரண்ட பார்வை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு
“டீச்சரம்மா நம்மளதான் மிரட்டுவாங்கபோல” சத்தமில்லாமல் அவளருகில் சென்றவன் அவள் தோளில் கைபோட்டு அணைத்துக்கொண்டான் அதீசன்.
திடுக்கிட்டவள் கணவனை ஏறிட்டு கண்களாளேயே!  “எல்லாம் உன்னால் தான்” என்று குற்றப்பத்திக்கை வாசிக்க
கண்சிமிட்டியவன் அவள் நெத்தியில் முட்டி விட்டு “உன் மாமியார் நடிக்கிக்குறாங்க டி. இல்லனா அப்பா நம்ல ஏத்துக்க மாட்டாரு” என்று சொல்ல வியந்தவாறே வாகையை பார்த்தாள் மஞ்சரி.
“இங்க கலவரமே! நடக்குது. இதுங்க ரெண்டும் ரொமான்ஸ் பண்ணுதுங்க” ஸ்டீவ்  மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான்.
“ஆகா… தெரியத  மாதிரி நடிக்காதீங்க” என்று கணவனின் முகவாயில் இடித்தவள் “எப்படி எப்படி.. மண்டபத்துல உக்காந்து மந்திரம் ஓத வேண்டியவன் எங்கன்னு கேட்டா கொஞ்சம் கூட பதறாம வந்துடுவான்னு சொல்லுறீங்க, அனுப்பி வச்ச உங்களுக்கு தெரியாதா வருவானா? மாட்டானான்னு?” வாகை கையை ஆட்டி ஆட்டி பேச அதீசனால் சிரிப்பை அடக்குவது பெரும் சிரமமாக இருந்தது.
“என்ன டி  பேசுற? என்னைக்காவது உன்ன கேக்காம எந்த முடிவையும் எடுத்திருக்கேனா?” சங்கரன் நொந்தவாறு சொல்ல
“பாவம் டா உங்க டேட்” ஸ்டீவ் சிரிக்க
“கம்முனு கிட” அதீசன் அதட்டும் நேரம் உள்ளே! இருந்து அனி, அர்ஜுன் மாலனி வர வாகையின் சத்தம் கூடியது.
“ஐயோ ரெண்டு பையன பெத்தேனே! ரெண்டு பையனுக்கும் ஒழுங்கா கல்யாணத்த பண்ண முடியலையே! கட்டின புருஷனே! இப்படி எனக்கு துரோகம் பண்ணுவாருனு நெனக்கலையே! இன்னும் என்ன பாத்துகிட்டு நிக்குற அனி… உன் அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான் போ.. போய் ஆரத்தியெடுக்க ஏற்பாடு பண்ணு… மாலனி நீயும் போ..” அதிகாரமாக சொல்ல
“அத்த ஏன் இப்படி பேசுறாங்க” என்றவாறு மாலனியும் அனியோடு உள்ளே! சென்றாள்.
“அதீ… யார் டா.. இந்த பொண்ணு? தகுதி, தாரா தரம் பார்த்து கல்யாணம் பண்ணாம?” தங்கராசு, பேச்சியம்மாள் உடைகளை கண்டு கிராமத்தவர்கள் என்று சங்கரன் பேச ஆரம்பிக்க
“பாத்தியா பாத்தியா? நம்ம தகுதிக்கு உனக்கு பொண்ணு பார்க்க சொன்னேன். நீ விரும்புறத சொன்னா நான் மறுத்துடுவேன்னு உங்கப்பா யாருக்கும் தெரியாம உன்ன அனுப்பி வச்சி இப்படி கல்யாணத்த முடிச்சிட்டாரே” வாகை நெஞ்சை பிடித்துக்கொண்டு கதற
“மம்மி  அழாதீங்க  மம்மி” அர்ஜுனும் அதீசனும் வாகையை நெருங்கி இருக்க,
அதீசனின் தோளில் அடித்தவள் “ஏன் டா உன்ன எப்போலா இருந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லிக்கிட்டு இருக்கேன். லவ் பண்ணுறதா இருந்தா சொல்லி தொலைக்க வேண்டியது தானே! சொல்லி இருந்தா ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி இருக்கலாம்ல” 
“அடுத்த வருஷம் ஆஸ்கார் அவார்டு உனக்குத்தான் மம்மி” என்று அர்ஜுன் சொல்ல
“ஏன் டா உன் கிட்டயும் தாலிய கொடுத்து போட சொன்னது இவர் தானே!” என்று அர்ஜுனிடம் கேக்க சங்கரன் “என்ன டா இது வம்பு” என்று  மனைவியை முறைக்கலானார்.
அனியும் மாலனியும் ஆரத்தியோடு வர “சீக்கிரம் ஆரத்தியெடுத்து உள்ள கூட்டிட்டு போ…” கோபமாக சொல்வது போல் சொல்லி விட்டு சங்கரனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்கு சென்ற வாகை கதவை சாத்தி.
“பொய்யாக சொத்தை பிரிக்க போறேன். அதீய வீட்டை விட்ட அனுப்ப போறேன்னு டிராமா ஒன்னும் போட வேணாம். அப்பாவும் புள்ளையும் எது பண்ணாலும் சேர்ந்துதான் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும். ரெண்டு பேரையும் மன்னிச்சு விட்டுடுறேன். அதீயோட சந்தோசம் தான் நமக்கு முக்கியம். அந்த பொண்ண அவன் விரும்புறான்னா அவ கூடயே! வாழட்டும். நான் குறுக்க வர மாட்டேன்”
“அதீ அந்த பொண்ண விரும்புறான்னு உனக்கெப்படி தெரியும்?” பாயிண்டை பிடித்தார் சங்கரன்
ஆனாலும் வாகையிடம் அவரின் பாயிண்ட் எல்லாம் செல்லா காசுதான். “விரும்பாமதான் திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணி வச்சீங்களா?”
“அடியேய் நான் கல்யாணம் பண்ணி வைக்கல டி”
“நம்பிட்டேன். உங்க கிட்ட சொல்லாம அவன் எதுவும் பண்ணவும் மாட்டான். உங்க பேச்ச மீறவும் மாட்டான். எனக்கு தெரியாதா? அவன் ஆச பட்ட பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டான் இல்ல. சந்தோசமா இருக்கட்டும். திட்டம் போட்டு கொடுத்து உங்க மூள சூடாக்கி இருக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று சங்கரனை அறையிலையே! விட்டு விட்டு வந்தோரை கவனிக்க வாசலுக்கு வந்தாள் வாகை.
வாகை வருவத்துக்குள் மஞ்சரியின் குடும்பத்தாரியிடம் தந்தையை சமாளிக்கத்தான் அன்னை இவ்வாறு பேசியதாக அதீசன் சொல்லி இருக்க மாலனியும், அனியும் அவர்களுக்கு குடிக்க, கொறிக்க ஏற்பாடும் செய்திருந்தனர்.
வாகை மஞ்சரியை ஏற்றுக்கொண்டதில் குடும்பத்தாருக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனால் மஞ்சரி விவாகரத்தானவள் என்பதை அதீசன் சொல்லி இருக்கவில்லை என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை.
“வாங்க அண்ணி உங்கள அதீயோட ரூமுக்கு கூட்டிட்டு போறேன்” என்று அனி அழைக்க,
“சத்த இருமா” என்ற  பேச்சிப்பாட்டி வாகையிடம் எந்த சடங்கும் செய்யவில்லை என்பதைக் கூறி தாலிபெருக்கு மட்டும் வீட்டுலையே! செஞ்சி ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்துடலாம் வரும் வியாழ கிழமை நல்ல நாள் என்று சொல்ல வாகையும் சரி என்று விட்டாள். 
அனைவரையும் ஓய்வெடுக்க மாலனியும் அனியும் அழைத்து செல்ல “என்னது இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணுனுமா?” என்று அதீசன் அன்னையை கேக்க
“மூணு வருஷமா லவ் பண்ணவனுக்கு ரெண்டு நாள் காத்திருக்க முடியாதா? இதோ இவன் அனிக்கு கல்யாணம் ஆனாதான் சேர்ந்து வாழ்வேன்னு சொல்லுறான். என்ன இருந்தாலும் என் செல்ல புள்ளய போல வருமா” என்று வாகை அர்ஜுனை கட்டிக்கொள்ள
பொறாமையில் பொசுங்கிய அதீசன் “இவன் அவ்வளவு நல்லவனில்லையே!” என்றவாறு வாடா… உன் கிட்ட பேசணும் என்று அர்ஜுனை இழுக்க
“நான் வர மாட்டேன்” என்று அவன் கத்த
“ஸ்டீவ் இவன தூக்குடா..” என்றதும் ஸ்டீவ் அசால்டாக அர்ஜுனை தூக்கிக்கொண்டு காரியாலய அறைக்குள் நுழைந்திருக்க வாகைக்கும் அவர்கள் விளையாடுவதாக எண்ணி வந்தவர்களுக்காக என்ன சமைக்க சொல்லலாம் என்று சிந்தித்தவாறு உள்ளே சென்றாள்.
கதவை சாத்திய அதீசன் அர்ஜுனின் டீ ஷர்ட்டை பிடித்து தூக்கி “டேய் உண்மைய சொல்லு டா வேட்டி அவுந்திருச்சு, தாலிய போட்டுட்டேன்னு கத சொன்ன கொன்னுடுவேன். பிஞ்சுளையே! கனிஞ்சவன் நீ உன்ன பத்தி எனக்கு தெரியாது. ஸ்கூல் போகும் போதே! மூணு முடிச்சி ஏன் போடுறாங்க எதுக்கு போடுறாங்கனு எனக்கே! பாடம் எடுத்தவனாச்சே! அப்பாவியா மூஞ்ச வச்சிக்கிட்டு மம்மியை ஏமாத்தலாம் உன் கூட பொறந்த என்ன ஏமாத்த முடியாது. ஒழுங்கு மரியாதையா உண்மைய சொல்லு” வார்த்தையில் அனல் தெறித்தாலும் சிரித்துக்கொண்டுதான் கேட்டான் அதீசன்.
“சொல்லுறேன் சொல்லுறேன் சொல்லாம எங்க போக போறேன்” என்ற அர்ஜுன் “மாலினி கழுத்துல தாலிய போட ஐடியா கொடுத்ததே! நீதான் ப்ரோ” என்றவன் டீ ஷர்ட்டை உதறி ஸ்டைலாக சோபாவில் அமர்ந்துக்கொள்ள
“என்ன டா கத சொல்லுற?” முழித்தான் அதீசன்.
“கத இல்ல ப்ரோ… நிஜம். உனக்கு கல்யாணம் ஆக மாட்டேங்குது. பாக்குற எல்லா பொண்ணையும் நீ ரிஜெக்ட் பண்ணுறனு மம்மி உன் ஜாதகத்தை எடுத்துக்கிட்டு என் கூடத்தான் ஜோசியரை பக்க போனாரு”
“அதுக்கும் நீ அந்த பொண்ணு கழுத்துல தாலிய போட்டதுக்கும் என்ன டா சம்பந்தம்?” அதீசன் முறைக்க,
“அங்க வச்சி ஜோசியர் ஒரு செம மேட்டர் சொன்னாரு. உன் கல்யாணம் திடிரென்று நடக்குமாம். டீடைலா சொல்லனும்னா நீ அண்ணிய எப்படி கல்யாணம் பண்ணியோ! அப்படி”
“ஜாதகத்தை பாத்து நடக்கப்போறத அப்படியே! சொன்னாரா?” ஸ்டீவ் ஆச்சரியமாக கேக்க
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் “ஏன் நானும் அதையே! பண்ணக் கூடாதுனு நினச்சேன். என்னால மூணு முடிச்செல்லாம் போட முடியாது. என்ன பண்ணுறதுனு மண்டைய பிச்சிகிட்டு இருந்தப்போதான். பொன்தாலி மேட்டர் தெரிய வந்தது. உடனே! காரியத்துல இறங்கிட்டேன்”
“அடப்பாவி. உன்ன போய் அப்பாவி, ரொம்ப நல்லவன்னு மம்மி நம்புறாங்களே!” அதீசன் அதிர்ச்சியடைய
“எவ்ரிதிங் பெயார் இன் லவ் அண்ட் வார் ப்ரோ. இப்போ நான் இத பண்ணலைனா மாலினி எனக்கு கிடைக்க மாட்டா”
“என் டா அந்த பொண்ணுக்குன்னு ஒரு மனசு இருக்கு அத பத்தி யோசிக்க மாட்டியா? நீ பண்ணது தப்பு அஜ்ஜு” அதீசன் தம்பியை கண்டிக்க
 “நீ அண்ணிய கல்யாணம் பண்ணிக்கிட்டியே! அவங்களுக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இருக்கானு கேட்டியா?” “என்னை கண்டிக்கும் தகுதி உனக்கு இருக்கா?” என்றொரு பார்வை பார்த்து வைத்தான்.
மஞ்சரியை அதீசன் இப்படி திருமணம் செய்ய எண்ணி இருக்கவில்லை. அர்ஜுனன் செய்தது போல் அவன் திருமணம் ஒன்றும் திட்டமிட்டு நடந்ததுமில்லை. மஞ்சரி விவாகரத்தானவள். அங்கு நடந்துக்கொண்டிருந்த பிரச்சினை. அதிலிருந்து அவளை வெளிக்கொண்டு வர மேலும் முத்துப்பாண்டி பிரச்சினை பண்ணாமல் இருக்க வேண்டியே அந்த முடிவை எடுத்திருந்தான்.
“என்னோட சூழ்நிலை வேற அஜ்ஜு. நான் உன்ன மாதிரி திட்ட போட்டு மஞ்சரியை கல்யாணம் பண்ணிக்கல. என் சூழ்நிலை அந்த மாதிரி ஆகிருச்சு. ஆனா நீ திட்டம் போட்டு பண்ணி இருக்க, அதுவும் இன்னொருத்தன் கல்யாணம் பண்ண இருந்த பொண்ண. அந்த பொண்ணுக்கு அவன் மேல விருப்பம் இருந்தா என்ன செய்வ?”
ஒரு நொடி திகைத்த அர்ஜுன், தலையை உலுக்கிக் கொண்டு “க்ரிஷ்ணாக்கு மாலினி மேல இன்ட்ரெஸ்ட் இல்ல. மாலனியும் அப்பா சொன்னதுக்காக தான் க்ரிஷ்ணாவ கல்யாணம் பண்ண சம்மதிச்சா. அவ மனசுல யாருமில்ல. நச்சுனு நங்கூரமா என்ன இறக்கிடுவேன்” கூலாக சொல்ல
“அந்த பொண்ணுக்கு உண்மை தெரிஞ்சா நீ செத்த டா” அதீசன் வானிங் கொடுக்க
“ஹாஹாஹா” வில்லா சிரிப்பு சிரித்தவன் “டேய் அண்ணா சில விஷயங்கள் என்னால ஓப்பனா சொல்ல முடியாது. எல்லாம் காதல் படுத்துற பாடு. நீயும் லவ் பண்ணுற? நானும் லவ் பண்ணுறேன்? பண்ணுற முறை வேணா வேற மாதிரி இருக்கலாம் ஆனா நோக்கம் ஒண்ணுதான். அவ மனசு…. அத அடைய எண்ண வேணா பண்ணலாம். இல்ல ப்ரோ. மாலினி கண்டிப்பா என்ன புரிஞ்சிப்பா.. ஏதுப்பா.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. நீ என்ன பத்தி ஒர்ரி பண்ணாத. அனிய  சீக்கிரம் பேக் பண்ணுற வழிய பாரு ப்ளீஸ் ண்ணா…” கடைசியாக கெஞ்சியவன் வெளியேறி இருந்தான்.
“என்ன டா இவன் இப்படி பேசிட்டு போறான்?” அதீசன் புரியாது ஸ்டீவை ஏறிட
“எதுக்கும் அவன் மேல ஒரு கண்ணு வச்சிடுறேன் அதீ. டோன்ட் ஒர்ரி” என்ற ஸ்டீவ் அதீசனிடமிருந்து விடைபெற்றிருந்தான்.
சங்கரன் அறையிலையே! அடைந்து கிடந்தார். சமீபத்தில் நடப்பதெல்லாம் அவருக்கு சரியாக படவில்லை. விழிக்கு பொருத்தமே! இல்லாத ஒருவனை திருமணம் செய்து வைத்ததாக நண்பனை மனதால் திட்டிக்கொண்டிருக்க, சொந்த மகனே! சற்றும் பொருத்தமில்லாத காட்டான் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்திருக்கின்றான்.
அவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சுக்கூட தங்களுக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. வீட்டு வேலைக்கு கூட படித்த, நீட்டாக ஆடையணியும் ஆங்கிலம் தெரிந்தவர்களைத்தான் சங்கரன் வேலைக்கு வைத்திருக்கிறார். அப்படி இருக்க தனது மூத்த மகன் வீட்டு வேலைக்கு கூட தான் எடுக்காத ஒருத்தியை மனைவியாக கொண்டு வந்து விட்டதாக அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்தார்.
அறைக்கதவு தட்டுப்படவும்  யார் என்று பார்க்க வேலையாள் உணவு தட்டுகளை சுமந்த டிராலியை தள்ளிக்கொண்டு வர வாகையும் பின்னால் வந்தாள்.
“நான் சேர்வ் பண்ணுறேன். நீங்க போங்க” என்று வேலையாளை அனுப்பியவள் கணவனிடம் திரும்பி “வந்து சாப்புடுங்க, என்னதான் பையனுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணி வச்சாலும் உங்களால அந்த குடும்பத்தோடு ஒண்ணா உக்காந்து சாப்பிட முடியாது” என்றவாறே பரிமாற 
மறுத்து பேசாமல் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தவர் “அதீ சாப்பிட்டு முடிச்சதும் என்ன வந்து ஆபிஸ் ரூம்ல பார்க்க சொல்லு” என்றார் சங்கரன்.
“ஆகா ஓவர் அமைதி என்ன சூறாவளியை கிளப்ப போகுதுனு தெரியலையே! என்றவாறு சாப்பாட்டறைக்கு சென்றாள் வாகை.
இரவு உணவு விருந்து போல்தான் ஏற்பாடு செய்திருந்தாள் வாகை. விதவிதமான உணவு வகைகள் மேசை நிறைய இருப்பதைக் கண்டு பொன்னுத்தாயிக்கு அதீசனை சரிவர கவனிக்கவில்லையோ! என்ற குற்றஉணர்ச்சியாக இருந்தது. 
தங்களது வீடும் பெரிய தோட்டத்தோடு அமைந்த வீடுதான். அதீசனின் வீட்டை பார்க்கும் பொழுது தங்களது தோட்டம் பெரிது. ஆனால் அதீசனின் செல்வச்செழிப்பும், வீட்டை அலங்கரித்து இருக்கும் பொருட்களும் அவள் சினிமாவில் மட்டும்தான் பார்த்திருக்கிறாள்.
அதீசனின் செல்வசெழிப்பு கொஞ்சம் மிரட்டினாலும் வீட்டாரின் அணுகுமுறையில் மஞ்சரி இந்த குடும்பத்தில் பொருந்தி சந்தோசமாக வாழ்வாள் என்று புரிய நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டாள். 
“சம்மந்தி சாப்பிட வரல?” தங்கராசு கேக்க
“அவர் மாத்திரை போடுறதால நேரங்காலத்தோட சாப்பிட்டாரு அண்ணா. வாங்க நாம சாப்பிடலாம்” என்று அனைவரையும் ஒன்றாக அமரவைத்து உணவை பரிமாற மஞ்சரியும் தானாக முன் வந்து பரிமாறலானாள்.
வாகை மறுக்கவில்லை. அவள்தான் மூத்த மருமகள் பொறுப்புக்கள் தானாக அவளிடம் வந்து சேரும். அதை புரிந்துக்கொண்டு செயல்படுகிறாளே! என்று மெச்சுதலான பார்வையோடு மஞ்சரியை பார்த்து புன்னகைத்தாள்.
மாலனிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வாகை பரிமாற தான் தினமும் சாப்பிட்டு இருக்கிறாள். தானும் இந்த வீட்டு மருமகள். இப்படி எல்லாம் தோன்றியதே! இல்லை என்று பாவமாய் வாகையை பார்க்க,
அவள் எண்ண ஓட்டத்தை புரிந்துக்கொண்ட வாகை “நீ இன்னும் படிக்கிற பொண்ணு. அனிய விட சின்ன பொண்ணு. முதல்ல உன் பக்கத்துல இருக்குற உன் புருஷன கவனி அப்பொறம் மத்தவங்கள பார்க்கலாம்” என்று அவள் நாடியை தடவி விட்டு செல்ல அவளும் அர்ஜுனைதான் பார்த்தாள்.
அவள் அருகில் அமர்ந்திருந்தவன் அவளுக்கு பிடித்தவைகளை அவள் தட்டில் நிரப்பி வைத்திருந்தான்.
இவனுக்கு எப்படி நமக்கு பிடிச்சதெல்லாம் தெரியும் என்று யோசித்தவள் அர்ஜுனையே! பாத்திருக்க
“இப்படி அத்தனை பேர் முன்னாடியும் அத்தானை சைட் அடிச்சீனா ஹனிமூனுக்கு கூட்டிட்டு போய்டுவேன் பாத்துக்க” என்று சொல்ல அவனை முறைத்தவள் சாப்பிட ஆரம்பித்தாள். 
அதீசனுக்கு வேகவைத்த மரக்கறிகளை கொடுக்க “வாராகி எனக்கு ரெண்டு இட்லி வை” என்று அவன் சொல்ல அதிசயமாக மகனை பார்த்த வாகை
“ஐயோ இந்த அநியாயத்தை எங்க நான் போய் சொல்வேன். கல்யாணம் பண்ணதும் பச்சோந்தி மாதிரி கலர மாத்திட்டானே! எத்தனை நாளா இட்லி சாப்பிட சொல்லி இருப்பேன். ஆசைக்கு ஒன்னு சாப்பிட்டு இருப்பானா. பொண்டாட்டி வந்ததும் இப்படி அந்தர் பல்டி அடிச்சிட்டானே!” என்ற வாகை வராத கண்ணீரை துடைக்க
“மம்மி… டேடி இங்க இல்ல” என்று அனி சொல்ல
“மாம்.. ஓவரா எக்ட் பண்ணாதீங்க உடம்புக்கு ஆகாது”  என்று அர்ஜுன் சொல்ல
“மஞ்சரி நீ வேடிக்கை பார்க்காம இட்லியை வச்சிட்டு என் பக்கத்துல உக்காந்து சாப்பிடு” என்றான் அதீசன்.
சந்தோசமாக புன்னகைத்த வாகை “சாப்பிட்டுட்டு போய் உங்க டேடிய பேஸ் பண்ணுடா” என்றாள். 
மஞ்சரி எது நடிப்பு எது உண்மை என்று புரிந்துக்கொள்ள முடியாமல் ஒரு நொடி திண்டாடலானாள்.   

Advertisement