Advertisement

அத்தியாயம் 14
தனதறையில் தூக்கம் வராமல் துவண்டுக்கொண்டிருந்தாள் மஞ்சரி. அவள் வாழ்க்கையில் என்னெல்லாமோ! நடந்து முடிந்து விட்டடிருக்க, புதிதாக அதீசனின் வரவு நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்று தெரியவில்லை.
கணவனாக அவனை அவள் மனம் ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொண்டு வாழத்தான் முடியுமா? சாதாரணமான குடும்பமான பாண்டியின் வீடே! அந்த நிலையில் இருக்க, பணக்காரனாக அதீசனின் வீடு எந்த மாதிரி இருக்கும்? மஞ்சரியின் மனம் அதை நினைத்து அச்சம் கொண்டது. 
பெண் பார்க்க வந்து ஊரறிய நிச்சயம் செய்து விட்டு சென்ற சொந்த அத்தை. ஊரைக் கூட்டி சொந்தபந்தங்கள் வாழ்த்த செய்து வைத்த திருமணம் விவாகரத்தில் வந்து நிற்க, தனது குடும்பத்துக்கே! தெரியாமல் திருமணம் செய்து கொண்ட ஒருவனை நம்பி வாழத்தான் முடியுமா? அந்த குடும்பம்தான் தன்னை ஏற்றுக்கொள்ளுமா? அதுவும் விவாகரத்தானவள் என்று அறிந்துக் கொண்டால்? நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
படித்து இருக்கிறாள். நாலு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதால் பாண்டியிடமிருந்து விவாகரத்து வாங்க முடிந்தது. படிக்காத பட்டிக்காடாக இருந்திருந்தால் கணவனே! கண்கண்ட தெய்வம். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று அவன் செய்யும் அநியாயங்களை பொறுத்துக்கொண்டு இருந்திருப்பாள்.
கண்டிப்பாக தன்னால் சாதாரணமான வாழ்க்கையை வாழ முடியும் என்று மஞ்சரிக்கு தோன்றவில்லை.
கண்டதையும் சிந்தித்தவாறு தூங்காமல் புரண்டுக்கொண்டிருந்தவளுக்கு ஸ்டீவ் கத்தியது காதில் விழ மஞ்சரி திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.
கத்தியது ஸ்டீவ் என்பதை புரிந்துக்கொண்டவள் மீண்டும் சத்தம் வருகிறதா என்று பார்க்க சத்தம் வரவில்லை. அதீசனுக்கு என்னவோ! பிரச்சினை என்று மனம் சொல்ல அந்த பதட்டத்தில் இருட்டிலையே! அறையை விட்டு வெளியே! வந்திருக்க, இவர்கள் இருவரும் இருட்டில் மெதுவாக அடியெடுத்து செல்வதைக் கண்டு மின் குமிழை எரிய விடும் பொழுதே! பேச்சியம்மா இரும்புத்தடியை வீசி இருந்தார்.
வழக்கமாக பேச்சியம்மா தூங்கும் பொழுது இரும்புத்தடியை அருகில் வைத்துக்கொண்டு தூங்குபவர்தான். மஞ்சரி விவாகரத்தாகி வந்த பின் முத்துப்பாண்டி பிரச்சினை பண்ணுவான் என்று அறிந்தே! கவனமாக இருக்க, இன்று மஞ்சரிக்கு கல்யாணமானத்தில் முத்துப்பாண்டிதான் வீட்டுக்குள் நுழைந்து விட்டதாக எண்ணி தடியை வீசி இருந்தார்.
ஸ்டீவ் அதை அசால்டாக பிடித்து தடுத்தவன் சுழற்றி நிறுத்த, பேச்சியம்மா வாயை பிளந்தார்.
“போதும் டா சாகசம் பண்ணது” அதீசன் தடுமாற
“தங்கச்சி இவன வாஷ் ரூம் கூட்டிட்டு போமா..” என்ற ஸ்டீவ் அறைக்கு திருப்பினான்.
மஞ்சரியோடு ஜோடி போட்டு போக அது என்ன பார்க்கா? பீச்சா? ஸ்டுபிட்” மனதுக்குள் அதீசன் ஸ்டீவை திட்டியவாறே மஞ்சரியின் பின்னால் நடந்தான்.  
“வாங்க” என்று மஞ்சரி அதீசனை அழைத்துக்கொண்டு வெளிக் கதவை திறக்க
“வெளியவா வாஷ்ரூம் இருக்கு?”
“ஆமா” என்றவள் ஸ்விட்சை போட்டு அதோ அங்க போங்க என்று சொல்ல
இருபது அடி தூரத்தில் இருந்த கழிவறையை கண்டு “இந்த இருட்டுல அவ்வளவு தூரம் தனியா போவியா?”
அதீசனின் பெற்றோர்கள் பரம்பரை பணக்காரர்கள். சங்கரனும் சிறு வயதிலையே! ஊரைவிட்டு சென்னைக்கு குடி வந்து விட்டதால் பெற்றோர்கள் இறந்த பின் ஊர் பக்கம் செல்லவில்லை. அதனால் அதீசனுக்கு ஊர் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை எதுவும் சரிவர தெரியவில்லை. கொஞ்சம் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் கேட்டிருக்க,
தங்களது தோட்டத்துக்குள், அதுவும் இருபது அடிக்குள் இருக்கும் கழிவறைக்கு செல்ல துணை தேவையா? என்ன சொல்கிறார். இவருக்கு பயமா? என்று அதீசனின் முகத்தை பார்த்தவள் “வாங்க” என்று அவனை அழைத்து சென்று “இப்போ போங்க” என்றவள் துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்து கொண்டாள். 
அதீசனுக்கு இருந்த அவசரத்தில் மஞ்சரியோடு பேச நேரமில்லை என்று கழிவறைக்கு ஓடியவன் மீண்டு திரும்பி வந்து “அங்க எப்படி போறது” என்று கேக்க
“என்ன?” என்று மஞ்சரி புரியாது கேட்டாள்.  
“வெஸ்டன் டாய்லட் இல்லையா?” என்று அதீசன் கேக்க
“இல்ல” என்று மஞ்சரி சொல்லவும்
“ஐயோ எனக்கு இங்க போய் பழக்கமில்லை, எப்படி போறதுன்னும் தெரியல” தடுமாறியவாறே சொல்ல வேண்டுமென்றே இம்சை பண்ணுவதாக நினைத்து எரிச்சலடைந்தவள்
“டீச்சர் ஆனாலும் ஆனேன் இவனுக்கு டாய்லெட் போறது எப்படினு பாடம் எடுக்க வேண்டிய என் நிலைமையை நெனச்சா ஐயோ கடவுளே!” மானஸீகமாக தலையில் கைவைத்தவள் “யோவ் சின்ன வயசுல ஆத்திர அவசரத்துக்கு காட்டு பக்கம் ஒதுக்கினதே! இல்லையா?”
“இல்லையே!” அதீசன் முட்டியை பிண்ணியவாறு சொல்ல
“ட்ரிப் போகும் போது கூட வண்டிய நிறுத்திய ஒதுங்கள? பொய் சொல்லாத” கோபத்தில் அவனை ஒருமையில் அழைத்து கூட இருவரின் கவனத்தில் இல்லை.
“அட இல்லனு சொல்லுறேன்ல”
“அவனை சந்தேகமாக பார்த்தவள், அவனின் அவசரம் புரிய “முதல்ல உள்ள போங்க” என்றவள் அதீசன் உள்ளே போன பிறகு கதவுக்கு வெளியே இருந்து என்ன பண்ண வேண்டும் என்று சொல்ல
“ஆ சரி சரி.. புரிஞ்சது” போன வேலையை முடித்துக்கொண்டு எதையோ சாதித்த தேஜஸோடு வெளியே! வந்தவன் “ரொம்ப நேரம் உக்காந்து இருந்தா? மூட்டு வலி வந்துதிடுமே! பாட்டி எப்படி..” என்றவாறு தொட்டியில் கை கழுவ 
“காலம் காலமாக பண்ணுறத்துதான் பழகிருச்சு” என்றவாறே சோப்பை எடுத்துக்கொடுத்தாள் மஞ்சரி.
“மஞ்சரி நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அதீசன் சொல்ல
“இப்பொவேவா?”
“இப்போவே! பேசினா நான் நிம்மதியா தூங்குவேன்” 
தோட்டத்திலிருந்து மரங்களின் அசைவால் குளிர் காற்றும் வீச “இல்ல ரொம்ப நேரம் வெளிய இருந்தா குளிரால் உடம்புக்கு ஆகாது. காலைல பேசலாம்”
அவள் நினைத்திருந்தால் வீட்டுக்குள் அழைத்து சென்று பேசி இருக்கலாம். இரவில் தனிமையில் சந்தித்து பேசுவது அவள் கணவனையன்றி பிற ஆடவனை அல்லவே! ஒருவித தடு மாற்றம் அவன் அருகில் ஏற்பட காலையில் பேசலாம் என்றாள். 
அதீசனும் பெருமூச்சு விட்டவாறு உள்ளே! வர கதவை சாத்திய மஞ்சரியும் தூங்க சென்றாள்.
சூரியன் தன் கதிர்களை நன்கு பரப்பிய பின்புதான் அதீசனும் ஸ்டீவும் கண்விழித்திருந்தனர். நேற்று போலவே! தண்ணீர் தொட்டியில் குளித்து விட்டு வந்தவர்களுக்கு மஞ்சரி துணி எடுத்துக்கொடுக்க, அதை உடுத்துக்கொண்டு வந்தவர்களுக்கு பொன்னுத்தாயி அப்பமும் பாயாவும் கொடுக்க,
“மஞ்சு கருப்பட்டியையும் கொண்டு வந்து வைல” என்று பேச்சியம்மா சொல்ல அதீசன் உசாராக கருப்பாட்டியோடு அப்பத்தை முழுங்கி இருந்தான். 
பஞ்சு போன்ற பால் சுவையில் இருந்த அப்பம் கருப்பாட்டியோடு அதிசனின் நாக்கில் கரைந்துகொண்டிருக்க, பொன்னுத்தாயி அவனுக்கு கருப்பட்டி அப்பமே! கொண்டு வந்து கொடுக்க, அதிலும் நான்கை சாப்பிட்டவன், ஒருநாளும் இல்லாமல் அதிகமாக சாப்பிட்டு விட்டதாக உணர்ந்தாலும் இன்னும் சாப்பிட நாக்கு சொல்வதை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
“என்ன மாப்ள உமக்கு பாயா பண்ணா ஒரு எலும்பக் கூட கடிக்கல” என்று பேச்சிப் பாட்டிக் கேக்க
“காரம் சாப்பிட்டா அவ்வளவுதான் பாட்டி” என்றவன் ஸ்டீவை பார்க்க எழும்பு மலையை எழுப்பி வைத்திருந்தான். ஒருவாறு சாப்பிட்டு முடித்தவன் மஞ்சரிக்கு கண்ணால் செய்கை செய்ய அவள் புரியாது முழித்தாள். 
“அதான் மஞ்சு மாப்புள கூப்டுறார்ல என்னனு உன்ற அறைக்கு கூட்டிட்டு போயி கேலுல” என்ற பேச்சி பாட்டி வெளியே செல்ல ஸ்டீவும் கை கழுவி விட்டு வாசலுக்கு வந்தான்.
“ரிடிகிவ்ளஸ். வாட் த ஹெல் ஈஸ் திஸ்” என்று ஸ்டீவ் தலையில் கை வைத்து பார்க்க முற்றம் முழுக்க பாயை விரித்து, மிளகு, மிளகாய், வடகம் என்று காய வைத்திருக்க, அதீசனின் பென்ஸ் காரின் மேலும் பொன்னாட்டிலும் தட்டுகள் வைத்திப்பதைக் கண்டுதான் ஸ்டீவின் வாயிலிருந்து சினம் கொண்டு ஆங்கிலம் சீறிப்பாய்ந்திருந்தது.
பேச்சியம்மா வந்து காரின் மேலிருந்த தட்டிலிருந்த மிளகாயை விழாவி விட்டு அடுத்த தட்டை கையில் எடுத்து காய்ந்து விட்டதா என்று பார்க்க,
“பாட்டி… என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க?” என்றவாறு அவருகில் நின்றான் ஸ்டீவ்
“அட தொர தமிழ்ல கூட பேசுவீகளா?” என்று முகவாயில் கைவைக்க,
“தமிழ்ல தானே! பேசினேன். எத்தன கோடி ரூபா காரு இது அதுக்கு மேல போய்”
“சாரி.. டார்லிங்.. சாரி டார்லிங்” மனைவியிடம் மன்னிப்பு கேட்பது போல் காரிடம் பேச
“கார் கூட பேசுமா?” என்று பேச்சியம்மா ஆச்சரிய பட தட்டுக்களை எடுத்து கீழே வைத்தவன் 
“என் டாலிங்க தொட்டீங்க நான் பொல்லாதவனாகிடுவேன். சொல்லிட்டேன் போங்க”
“அடப் போடா… வெள்ளக்கார தொரைனு நினைச்சி ஆக்கிப்போட்டா சீக்கு வந்த பயலா இருக்கான்” என்றவாறு பேச்சியம்மா நகர காரை துடைக்கலானான் ஸ்டீவ்.
“உக்காருங்க” அதீசனை தனது அறைக்கு அழைத்து சென்ற மஞ்சரி கதிரையை காட்டியவாறு தானும் கட்டிலில் அமர்ந்துக்கொண்டு “என்ன பேசணும் சொல்லுங்க” என்று அவனையே! பாத்திருக்க அவள் விழியழகில் பேச வந்தது கூட மறந்து போனது.
“சொல்ல ஒன்னும் இல்லனா நான் கிளம்புதேன்” என்றவள் எழுந்துக்கொள்ள அவள் கையை பிடித்து கட்டிலில் அமர்த்தியவன் தானும் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.
மஞ்சரிக்கு அவன் அருகாமை அவஸ்தையை தர கொஞ்சம் தள்ளி அமர்ந்தவள் “சீக்கிரம் சொன்னீங்கன்னா? என் சோலிய பார்க்க போய்டுவேன்”  என்று கதவையே! பார்த்தவாறு சொல்ல
மஞ்சரியின் முகத்தை ஏறிட்டான் அதீசன்.  சின்ன கருப்பு சிடிகர் பொட்டு அது கூட  ஒப்பனையில்லா அவள் முகத்துக்கு அழகை கூட்ட, ஒப்பனைகள் செய்து தன்னை அலங்கரித்துக்கொண்டாள் எப்படி இருப்பாள் என்று அவன் என்ன ஓட்டம் செல்ல தலையை உலுக்கிக் கொண்டவன்
“நம்ம கல்யாணம் இப்படி திடிரென்று நடக்கும்னு நான் நினைக்கல” என்று அதீசன் சொல்ல
“நடத்துட்டீங்கனு சொல்லுங்க” என்ற மஞ்சரி அவனை முறைக்கலானாள்.
புன்னகைத்தவன் “உனக்கு என்ன நியாபகம் இருக்கா? ஊட்டில நாம முதன் முதலா சந்திச்சோமே! நீ கூட ஒரு கடைல கொஞ்சம் நேரம் பூக்காரியா வேல பாத்தியே!” என்று சொல்ல
“நானா?” என்ற மஞ்சரிக்கு அந்த சம்பவமே! நியாபகத்தில் இல்லை.
அதீசனும் என்று, எப்பொழுது என்றெல்லாம் சொல்லியதும் அன்று அவள் ஊட்டியில் இருந்ததாகவும், பூக்கடையில் இருந்ததையும் சொன்னவள் அதீசனை நியாபகம் இல்லை என்று கூற “ஓகே” என்று புருவத்தை உயர்த்தி பெருமூச்சு விட்டான்.
“வேறென்ன?” மிகவும் சாதாரணமாக மஞ்சரி கேக்க
“என்ன இவ மனிசன் தன்னோட பீலின்ச இப்படி உருகி உருகி சொல்லி கிட்டு இருக்கேன். கண்டு கொள்ளாம வேறென்னனு கேக்குறா?” கடுப்பானவன் “நான் உன்ன மூணு வருஷமா லவ் பண்ணுறேன்னு சொல்லுறேன். உன்ன தேடிகிட்டு இருந்தேனு சொல்லுறேன் வாராகி”
“அதுக்கு இப்போ என்னனு கேக்குறேன்?. நீங்க என்ன லவ் பண்ணினா? நானும் உங்கள லவ் பண்ணனும்னு எந்த கட்டாயமும் இல்லல?” கையை கட்டிக்கொண்டு கேட்டாள் மஞ்சரி.    
  
“யாப்பா டீச்சரம்மா ரொம்பதான் பண்ணுறா…” அவளை தீர்க்கமாக பார்த்தவன் “நான் உன் புருஷன் டி. என்ன லவ் பண்ணுறத விட்டுட்டு உனக்கு வேற என்ன வேல வேண்டி இருக்கு” என்றவன் அவளை தன் புறம் இழுத்து கன்னத்தில் முத்தம் வைக்க மீசையின் தீண்டலில் கன்னங்கள் சிவப்பேற அதிர்ந்தவள் அதீசனின் டி ஷர்ட்டையே! பற்றி இருந்தாள். 
“என் கிட்ட இருந்து விலகி இருக்கணும்னு மட்டும் நெனச்சா இப்போ கன்னத்துல கொடுத்ததை உதட்டுல கொடுத்துடுவேன் பாதுக்க” என்றவன் அவள் இதழ் உரச, மின்சாரம் தாக்கியது போல் அவனை விட்டு விலக்கி அறையை விட்டு வெளியேற முற்பட 
“ஒய்.. டீச்சரம்மா.. ஒழுங்கு மரியாதையா புருஷன் கூட குடும்பம் நடத்துற வழிய பாரு” என்று சொல்ல அவன் தீண்டல் குறுகுறுப்பு மூட்டினாலும் மனதை அடக்கியவள் அவன் மீது வெற்றுப் பார்வையை வீசிவிட்டு சென்று விட்டாள்.
மஞ்சரியின் கட்டிலில் தொப்பென்று விழுந்த அதீசன் அவள் தலையணையில் முகம் புதைத்து அவள் வாசனையை நுகர்ந்தவாறே! புன்னகைக்கலானான்.
ஒருவாறு மஞ்சரியின் வீட்டில் தன்னை பொருத்திக் கொட்டிண்டு காலையில் எழுந்து ஸ்டீவோடு தோட்டத்தில் உடற் பயிற்சியை ஆரம்பித்திருந்த அதீசன் இன்று பூஜை என்பதால் பூஜை முடிந்த பின்னால் அன்னையிடம் பேசலாம் என்று எண்ணி இருக்க, பூஜை முடிவதாக சொன்ன நேரத்துக்கு முன்பாகவே! அனி அழைக்கவும் “என்ன பிரச்சினைனு தெரியலையே!” என்றவாறே அலைபேசியை இயக்கி காதில் வைக்க, அனி அர்ஜுன் மாலினியின் கழுத்தில் தாலியை போட்ட விஷயத்தை கூறி முடித்தாள்.
“இது வேறயா? இப்போ என்ன பண்ணுறது” என்று யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு மங்கை அழைக்கவும் “ஆன்டி எதுக்கு அழைக்குறாங்க என்று குழப்பத்திலையே! அழைப்பை ஏற்றிருக்க, மங்கை முதலில் கேட்டது “விழியை திருமணம் செய்ய உனக்கு சம்மதமா?” என்றுதான்
“எனக்குதான் கல்யாணம் ஆகிருச்சே!” மென்று விழுங்கியவன் “என்ன ஆன்டி பேசுறீங்க. விழி எனக்கு தங்கச்சி மாதிரி நான் போய் அவள? என்று இழுக்க…
“நினச்சேன். உங்க அப்பா உன்ன கேக்காம விழி அப்பாகிட்ட நீ விழிய கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டாரு”
“என்ன சொல்லுறீங்க? அம்மாக்கு தெரியுமா?” அதிர்ச்சியில் அதீசன் கேக்க
“உங்க அம்மா என்ன பண்ணுவாங்க?” மங்கை என்ன பேச முயன்றாளோ!
“கொஞ்சம் இருங்க ஆன்டி…” என்றவன் கான்பரன்ஸ் காலில் வாகையை அழைக்க, வாகையும் செந்திலும், சங்கரனும் தப்பான முடிவை எடுத்து விட்டதாக சொல்ல
“இப்போ என்ன பண்ணுறது வாகை?” என்று மங்கை கவலையடைய
“ஆன்டி உங்களுக்கு விழிய அர்ஜூனுக்குத்தான் கட்டிக்கொடுக்கணும்னு ஆசையா?” என்று அதீசன் கேக்க
“எனக்கு இருக்குறது ஒரே பொண்ணு. என் அண்ணன் ரெண்டு பசங்கள பெத்தும் ஒருத்தனுக்கு என் பொண்ண கொடுக்க முடியலையே!னு எனக்கு வருத்தம் இருந்தது. ஆனாலும் விழிக்கு அர்ஜூன்னா உயிர் அவ விருப்பம் முக்கியமில்ல. ஆனா இப்போ அதுவும் இல்லனு ஆகிருச்சு”
“அப்போ உங்க அண்ணன் பையனுக்கே உங்க பொண்ண கட்டி வச்சிடலாம்” அதீசன் சொல்ல 
“அதுக்கு உங்க அப்பாவும், செந்தில் அண்ணாவும் சம்மதிக்கணுமே!” வாகை மகனை கடிய
“நான் சொல்றத செய்ங்க, அப்பாவை நான் சமாளிச்சிக்கிறேன்” என்றவன் மஞ்சரியின் அலைபேசி எண்ணை வாகையிடம் கொடுத்தவன் எதுவாக இருந்தாலும் இந்த எண்ணுக்கு அழைக்கும் படி கூறி விட்டு சங்கரன் அழைத்து விழிக்கும் அவனுக்கும் திருமணம் முடிவாகி இருப்பதை கூறியதும் “நீங்க எல்லா வேலையையும் பாருங்கப்பா… நான் வந்துடுறேன்” என்றவன் அவன் அலைபேசியையும் ஸ்டீவின் அலைபேசியையும் அனைத்து வைத்தான்.
“என்ன நண்பா அதன் பூஜை முடிஞ்சா உடனே! ஊருக்கு போறதா சொன்னியே! கிளம்பல?” ஸ்டீவ் தேநீர் டம்ளரோடு வர
“போனா எனக்கு இன்னொரு கல்யாணத்த பண்ணி வைப்பாங்க டா” அதீசன் தோட்டத்தில் போட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தான்.
“என்ன டா சொல்லுற?” என்ற ஸ்டீவிடம் அங்கு நடப்பதை சொல்ல
“ஐ.. ஜாலி அப்போ ஒரு வாரம் இங்கதான் இருக்கப் போறோமா?”
“வேற வழி…”
அதீசனும் ஸ்டீவும் மும்முரமாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்க அங்கே வந்த மஞ்சரி அதீசனிடம் அவளின் அலைபேசியைக் கொடுத்து “உங்க போன் என்ன ஆச்சு” எனக் கேக்க
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் “ஹலோ பேபிம்மா சொல்லு டா…” என்று அனியோடு பேச ஆரம்பித்திருந்தான்.
அனியும் அலைபேசி தொடர்பை ஏற்படுத்தி “நான் பேபிம்மா பேசுறேன். அதீ எங்க?” என்று கேக்க
“யாரு இவ? என் புருஷன எதுக்கு கேக்குறா? என்ற கடுப்பில் அதீசனை தேடி வர அதீசனும் “பேபிம்மா” என்று செல்லம் கொஞ்ச கடுப்பில் உச்சத்துக்கே சென்றிருந்தாள் மஞ்சரி.
மஞ்சரியின் கோப முகம் கண்டு ஸ்டீவ் நைசாக நழுவி இருக்க, மஞ்சரியின் கைபிடித்து தன்னருகில் அமர்த்திக்கொண்ட அதீசன் வீட்டில் நடப்பவைகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
போனை அமர்த்தி மஞ்சரியிடம் அலைபேசியை நீட்டவும் “யாரு போன்ல?” என்று மஞ்சரி விசாரிக்க
அதீசனும் பழக்க தோஷத்தில் “பேபிம்மா” என்று சொல்ல
பல்லைக் கடித்தவள் “அவதான் யாருனு கேக்கறேன்” என்று குரலை உயர்த்த
இப்போ எதுக்கு இவ கோப்படுறா?” என்று அதீசன் மஞ்சரியின் முகம் பார்க்க முகத்தை அவனுக்கு காட்டாமல் திருப்பிக்கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்தலானாள்.
“ஓஹ்… டீச்சரம்மாக்கு நான் வேற பொண்ணுகிட்ட பேசுறது பிடிக்கல” குஷியானவன் “தெரிஞ்சிக்கணும்னா நீயே அவ கிட்ட பேசு” என்று சொல்ல
“நானா? நா எதுக்கு பேசணும்” என்று முறிக்கிக்கொள்ள
“வேனானா விடு” என்று அதீசன் சொல்ல மஞ்சரி அனிக்கு அழைத்திருந்தாள்.
அந்தப்பக்கம் “ஹலோ” என்றதும்
“நான் மஞ்சரி பேசுறேன்” என்றாள்.
“யாரு மஞ்சரி…” என்றது பெண் குரல்.
மஞ்சரிக்கு கோபம் தலைக்கேற அதீசனை முறைத்தவள் “வாரக மஞ்சரி அதீசன் வர்மா பேசுறேன்” என்றதும் மறுபக்கம் மயான அமைதி.
அதீசனுக்கு சிரிப்பாக இருந்தது “அன்னைக்கி பெயரை மாத்துறேன்னு சொன்னேன். இன்னக்கி இவ வாயலையே! சொல்ல வச்சிட்டேன். சபாஷ் டா… அதீசா” 
“என்ன மூச்சு விடும் சத்தம் மட்டும்தான் கேக்குது?” என்று மஞ்சரி யோசிக்கும் பொழுதே!
கோப மூச்சுக்கலை இழுத்து விட்டவாறு “நான் அதீயோட அம்மா வாகை சங்கரவர்மா பேசுறேன்” என்றதும் மஞ்சரியின் அலைபேசி நழுவியது.
“அம்மாவையா பேபிம்மானு கூப்பிட்டான்..அய்யய்யோ..” என்று அலைபேசியை அதீசனிடம் கொடுத்து விட்டு ஓடிவிட்டாள்.
அனி போன் பேசி முடித்ததும் வாகை அவள் அலைபேசியை கேட்டிருக்க, கொடுத்தவள் சென்றுவிட்டிருக்க, அதீசன் கொடுத்திருந்த எண்ணிலிருந்து அழைக்கவும் அதீசன்தான் அழைக்கிறான் என்று  வாகை பேச மஞ்சரி முழுப் பெயரை சொன்னதும் வாகைக்கு ஓரளவு புரிந்தது. ஆனாலும் இந்த பெண் இப்பொழுது அழைத்து எதுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் என்று யோசிக்கும் பொழுது
“ஹலோ பேபிம்மா அண்ணி கிட்ட என்ன டா சொன்ன…” என்று அதீசன் அனியிடம் பேசுவதாக நினைத்துப் பேச சகலவும் புரிந்தது.
“ஓஹ்… இங்க ஒரு கூட்டு களவாணி இருக்காளா? எங்க அவ? இன்னக்கி இருக்கு அவளுக்கு?” கத்திய வாகை “என்ன டா..அதீ இங்க ஒருத்தன் தாலிய போட்டு கல்யாணம் பண்ணிட்டான். நீ என்னடான்னா தாலி கட்டிட்டியா? என்ன டா நடக்குது. ஐயோ எனக்கு தலையே! சுத்துது”
“மம்மி… டென்ஷன் ஆகாதீங்க… நான் மஞ்சரியோட வந்து சொல்லிக்கலாம்னு இருந்தேன்”
“நல்லா சொன்ன போ…” என்று ஆரம்பித்து சண்டை போட்டு சமாதானமாகி.. அதீசன் மஞ்சரியை சந்தித்தது, காதல் வயப்பட்டது, தேடியது, கல்யாணம் பண்ணது என்று எல்லாவற்றையும் சொல்லி முடிக்க மஞ்சரியின் அலைபேசியும் அணைந்து போய் இருந்தது.
” ஐயோ… ஐயோ… போன்..ஆப் ஆகிருச்சு… மம்மி.. டென்ஷன் ஆவங்க” என்று அதீசன் பதற
“போய் சார்ஜ் போடுங்க பாஸ்” ஸ்டீவ் கத்த
மஞ்சரியை அழைத்தவாறு வீட்டுக்குள் ஓடியவன் சஜரைக் கேட்டு போட்டு மீண்டும் அழைக்க
வாகையோ! கூலாக “சரிடா அதீ எப்படியோ… உனக்கும் விழிக்கும் கல்யாணம் நடக்காம இருந்தா சரி. அர்ஜுன் கல்யாணம் முடிஞ்சா பிறகே! மருமகளை கூட்டிகிட்டு வா, அப்பாவ நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லி அலைபேசியை துண்டித்திருக்க,
தங்கராசுவிடம் அர்ஜுனின் திருமண விஷயத்தை கூறியவன் ஒருவாரம் மாப்பிள்ளை விருந்து உண்டு விட்டு இதோ! இப்பொழுதுதான் மஞ்சரியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டு விட்டான்.
தங்கராசு, பொன்னுத்தாயி, பேச்சியம்மா, ஸ்டீவோடு   ஒரு வண்டியில் வர, மஞ்சரியும் அதீசனும் தனி வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

Advertisement